<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,33,957,1490" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 23 2026 04:03:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260823T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23082026-VLR-05" position.sequence="05" ex-ref="23082026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">23.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சுதந்திரம் பெற்ற 80 ஆண்டுகளில் ஆலயத்தின் சொத்துக்களை மீட்டெடுத்தது எங்கள் ஆட்சி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">திராவிட மாடல் ஆட்சியில் அறநிலையத்துறை வரம் விளையும் துறையாக இருந்தது!</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">எங்களுக்கு இடைவேளை முடிந்து, தொடர் வேலை தொடரும்! இமயம் வரை எங்கள் அறம் படரும்! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடுக்கடுக்கான சாதனைகளைச் சுட்டிக்காட்டி உரை!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">கழக ஆட்சியில் பயன்பெற்ற மக்களின் உள்ளங்களில் – இல்லங்களில் திராவிட மாடல் அரசின் நாயகனைக் காணலாம்!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup862270_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812446_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup862271_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812345_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Sekarbabu_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஆக. 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சுதந்­தி­ரம் பெற்ற 80 ஆண்­டு­க­ளில் ஆல­யத்­தின் சொத்­துக்­களை மீட்­டெ­டுத்த எங்­கள் ஆட்சி, திரா­விட மாடல் ஆட்­சி­யில் அற­நி­லை­யத்­துறை வரம் விளை­யும் துறை­யாக இருந்­தது என்­றும் எங்­க­ளுக்கு இடை­வேளை முடிந்து, தொடர் வேலை தொட­ரும்! இம­யம் வரை எங்­கள் அறம் பட­ரும் என்­றும் சட்­டப்­பே­ர­வை­யில் இந்து சமய அற­நி­லை­யத்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு அடுக்­க­டுக்­கான சாத­னை­க­ளைச் சுட்­டிக்­காட்டி உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­ப்பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்­கை­கள் மீதான விவாத்­தின் போது முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்பாபு பேசி­ய­தா­வது:-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சரித்­திர புகழ்­பெற்ற – சட்­டப்­பே­ரவை தலை­வர் அவர்­களே திண்­டுக்­கல்­லில் பிறந்­தா­லும்–­பூட்டு போடாத திறந்­த­ம­னம் கொண்ட தங்­கள் மாண்­ப­மைக்கு வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தான் பகுத்­த­றி­வா­ள­ராக இருந்த போதும்– இறை நம்­பிக்கை உள்­ள­வர்­க­ளின் – உரி­மைக்­காக போரா­டிய போராளி தந்தை பெரி­யாரை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“மனி­த­நே­யமே அறம், மக்­க­ளின் துயர் துடைப்­பதே அறப்­பணி” என்ற நுண்­ண­றிவு நூல­கம், படிக்க படிக்க தீராத, திரா­விட படிப்­ப­கம்  பேர­றி­ஞர் அண்­ணாவை வணங்­கு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அண்­ணா­வின் இத­யத்தை இர­வல் வாங்கி, அவ­ரி­டமே மீண்­டும் அதை கொடுத்து அவர் அரு­கி­லேயே “ஓய்­வெ­டுக்­கா­மல் உழைத்­த­வர்”  “இதோ ஓய்வு கொண்­டி­ருக்­கி­றார்” என்று வாழும் போதே தன் நினை­விட வாச­கத்தை தந்த தீர்க்­க­த­ரிசி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடற்­காற்றை தான் வாங்கி, எங்­க­ளுக்கு மூச்சு காற்­றாய் வழங்கி வாழ வைக்­கும் வர­லாற்­றுத் தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞரை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">திரா­விட ஆன்­மிக புரட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">துறை­தோ­றும் வளர்ச்சி, திரா­விட ஆன்­மீக புரட்சி, எங்­கள் தன்­மான சுய சக்தி, ஊதி­ய­ணைக்க முடி­யாத உய­ரத்­தில் இருக்­கும் சூரிய சக்தி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தடுக்கி விழும் பிள்­ளைக்­காக, பதறி துடிக்­கும் ஒரு தாயைப் போன்ற அன்பு சக்தி, எங்­களை இயக்­கும் உயிர் சக்தி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­திய வரை­ப­டத்­தில் தமிழ்­நாடு கீழே இருந்­தா­லும் மாநி­லங்­க­ளின் வளர்ச்சி படத்­தில் தமிழ்­நாட்டை உச்­சத்­தில் உட்­கார வைத்து சட்­ட­மன்­றத்­தின் சங்­க­நா­தம் எதிர்க்­கட்­சித் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“இந்த ஸ்டேட்­டின்” “ஸ்டேட்­டஸ் ஐ“ உயர வைத்து – சாதனை படைத்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்கி மகிழ்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்டமன்றத்தின் சங்கநாதம் எதிர்க்கட்சித்தலைவர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வம்­பால் எதிர்ப்­ப­வரை , அன்­பால் வீழ்த்­தும் பண்­பா­ள­ராய்; ராஜ­ராஜ சோழ­னின் மகன், கடா­ரம் வென்ற ராஜேந்­திர சோழ­னாய்; தந்தை இரண்­டாம் பிலிப்­பின், ராணு­வத்­தைக் கொண்டு உலகை வென்ற அலெக்­சாண்­ட­ராய்; பொறுப்பு வழங்­கும் போதெல்­லாம், பொறுத்­துக் கொள்­ளா­த­வர்­கள் கூட புரு­வம் உயர்த்தி போற்­றும் படி உயர்ந்த, சட்­ட­மன்­றத்­தின் சங்­க­நா­தம் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேரவை தலை­வர் அவர்­களே எப்­போ­தெல்­லாம் திரா­விட முன்­னேற்ற கழ­கம் ஆட்­சிக்கு வரு­கி­றதோ அப்­போ­தெல்­லாம் அது ஆன்­மீ­கத்­திற்கு எதி­ரா­னது ஆட்சி என்று  அது கலை­ஞர் ஆட்சி என்­றா­லும் சரி எங்­கள் திரா­விட மாடல் ஆட்சி நாய­கர் ஆட்சி என்­றா­லும்  சரி.. கட்­ட­மைக்க முயல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த கட்டை உடைத்து ஆன்­மீக புரட்சி கண்ட  இரு­பெ­ரும் தலை­வர்­களை மீண்­டும் ஒரு­முறை நினைவு கூறு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேரவை தலை­வர் அவர்­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சமீ­பத்­தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டை கொத்­த­ளத்­தில் முதல்­வர் அவர்­கள் கொடி­யேற்றி உரை நிகழ்த்­தி­னார். அதை நான் திரும்­பிப் பார்க்­கி­றேன்.. திகைத்து நிற்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">2021 ஆகஸ்ட் 15 அன்று இதே கோட்டை கொத்­த­ளத்­தில் எங்­கள் திரா­விட மாட­ல­நா­ய­கன் கொடி­யேற்­றி­னார் . அவ்­வி­ழா­வில் 100 நாட்­க­ளில் சாத­னை­களை பறை சாற்­றி­னார் அதில் ஒரு சாதனை தந்தை பெரி­யார் நெஞ்­சில் வைத்த ஒரு முள் கலை­ஞர் 18 ஆண்­டு­கள் சட்ட போராட்­டம் நடத்தி பெற்ற சட்­டம் தீர்ப்பு அந்த தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் 32 அனைத்து சாதி­யி­ன­ரை­யும் அர்ச்­ச­க­ராக்­கி­னோம் என்று அந்த சுதந்­திர தின கொடி­யேற்­றம் விழா­விலே பெரு­ம­கத்­தோடு பறை­சாற்­றி­னார்ர்ச்­சக ராசி அன்னை தமி­ழுக்கு அர்ச்­சனை  என்று பறை­சாற்­றி­னார். அதை­யும் நான் திரும்­பிப் பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">300 ஆண்டு பழ­மை­யா­னதை 
ஆவ­ணப்­ப­டுத்­தி­யுள்­ளோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு நம்­மு­டைய முதல்­வர் கோட்டை கொத்­த­ளத்­தில் கொடி­யேற்­றம் போது துறை­யி­னு­டைய அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும் ஆவ­ணப்­ப­டுத்தி டிஜிட்­ட­லைஸ் பண்­ணு­கி­றோம் என்று அறி­விப்பு செய்­தார். இதை ஏற்­க­னவே தமிழ் நிலம் படு­கையை உரு­வாக்கி மூன்­றரை லட்­சம் ஏக்­கர் நிலங்­களை ஏற்­க­னவே ஆவ­ணப்­ப­டுத்தி துறை­யி­னு­டைய நான்கு கோடி பக்­கங்­களை நூறாண்­டு­கள் 200 ஆண்­டு­கள், முன்­னூறு ஆண்­டு­கள் ஆகிய பக்­கங்­களை ஆவ­ணப்­ப­டுத்தி பாது­காத்த ஆட்சி திரா­விட மாடல் ஆட்சி என்­பதை இங்கே நான் பதிவு செய்ய கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேரவை தலை­வர் அவர்­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அண்­மை­யில் 16 ஆம் தேதி நீதி­ய­ர­சர் ஜெயச்­சந்­தி­ரன் அவ­ரு­டைய பெஞ்­சிலே ஒரு அரு­மை­யான தீர்ப்பு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதே மாமன்­றத்­தில் 2021 ஆம் ஆண்டு ஆட்சி கட்­டி­லில் ஏறி­ய­வு­டன் முதல்­வர் அவ­ரு­டைய சீரிய சிந்­த­னை­யில் உதித்த திட்­டம் தான் அறம் காக்­கும் துறை­யில் 10 கல்­லூ­ரி­கள் தொடங்க முடி­வெ­டுத்­தோம். அந்த 10 கல்­லூ­ரி­க­ளில் நான்கு கல்­லூ­ரி­களை வாடகை கட்­டி­டத்­தில் துவக்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கல்­லூரி தொடங்­கு­வதே தவறு என்று நீதி­மன்­றத்­திற்கு சென்­றார்­கள் சிங்­கிள் பெஞ்ச் நீதி­மன்­றத்­தில் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது, இரண்டு நீதி­ப­தி­கள் கொண்ட அமர்­வில் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது, உச்ச நீதி­மன்­றத்­திற்கு சென்­றார்­கள் அங்­கும் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தள்­ளு­படி தள்­ளு­படி தள்­ளு­ப­டிக்கு பின்­னால் மீண்­டும் அது முறை­யாக கடை­பி­டிக்­க­வில்லை என்று மீண்­டும் சிங்­கிள் பெஞ்­சுக்கு சென்­றார்­கள். அதன் முது ஜெயச்­சந்­தி­ரன் நீதி­ய­ர­சர் அவ­ரு­டைய தீர்ப்பு 16 ம் தேதி அண்­மை­யில் கிடைக்­கப்­பெற்­றது.  அத் தீர்ப்­பில் உறு­தி­யாக சொன்­னார் இந்த கல்­லூ­ரி­கள் தொடங்­கி­யது நியா­ய­மா­னது முறை­யா­னது என்று அது அன்­றைய தமி­ழக முதல்­வ­ரு­டைய கருத்­துக்கு வலு சேர்த்து இருக்­கி­றது இன்­றைக்கு நீதி­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அறி­வித்த ஆறு கல்­லூ­ரி­கள் கட்­டப்­ப­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் இங்கு கேட்க விரும்­பு­வ­தெல்­லாம் 10 கல்­லூ­ரி­க­ளில் இரண்டு கல்­லூ­ரி­கள் கட்டி முடிக்­கப்­பட்டு விட்­டன திருச்­செந்­தூர் கோவில் சார்­பி­லும் அர்த்­த­நா­ரீஸ்­வ­ரர் கோயில் சார்­பி­லும் கட்ட வேண்­டிய கல்­லூரி கட்­ட­டங்­கள்  கட்­டப்­ப­டுமா ?அப்­போது அப்­போது அறி­வித்த ஆறு கல்­லூ­ரி­கள் கடை­யம், லால்­குடி, வேலூர் மாவட்­டங்­க­ளில் கட்­டப்­ப­டும் என்று அறி­வித்த அந்த ஆறு கல்­லூ­ரி­க­ளும் இந்த ஆட்­சி­யிலே கட்­டப்­ப­டுமா? மேலும் அந்த தீர்ப்­பிலே நீதி அர­சர் ஒன்றை குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார் திருக்­கோ­யில் சார்­பில் நிதி இருந்­தால் கல்­லூ­ரி­கள் கட்­ட­லாம் இல்லை என்­கின்ற போது பிரத்­யோ­க­மாக அரசு அதற்கு உதவி செய்ய முன் வர வேண்­டும் என்று வர­லாற்று சிறப்­பு­மிக்க தீர்ப்பு அது எங்­கள்முதல்­வ­ரின்  10 கல்­லூ­ரி­களா கனவை நிறை­வேற்­றுங்­கள் என்று இந்த அரசை கேட்­டுக்­கொள்­கி­றேன்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தங்க முத­லீட்டு திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருக்­கோ­யி­லின் ஆன்­மீக வளர்ச்­சிக்கு எப்­படி எல்­லாம் வரு­மா­னத்தை ஈட்­டி­னோம் என்று கடந்த கால காலங்­க­ளிலே என்­ப­தற்கு ஒரே ஒரு உதா­ர­ணம் கேட்­பா­ரற்று மூட்டை மூட்­டை­யாக கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்த தங்­கங்­கள் யாரும் கேட்­பா­ரற்று கிடந்­தது அந்த தங்­கங்­களை மூன்று நீதி­ய­ர­சர் கொண்ட குழு அமைத்து மூன்று மண்­ட­லங்­க­ளாக பிரித்து அந்த தங்­கத்­தி­னு­டைய பல­மாற்று பொன்­னி­னங்­கள் எந்­தெந்த தெய்­வத்­திற்கு காணிக்­கை­யாக வந்­ததோ அந்த தெய்­வத்­திற்கு பயன்­ப­டுத்த முடி­யாத தங்­கங்­களை நீதி அர­சர்­களை வைத்து முழு­மை­யாக அதை வீடியோ பதிவு செய்து அந்த தங்­கத்தை பிரித்து அந்த தங்­கத்தை இங்­குள்ள பாரத ஸ்டேட் பாங்­கி­யின் சார்­பாக ஒன்­றிய அர­சுக்கு சொந்­த­மான மும்­பை­யில் இருக்­கின்ற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தங்க உருக்­கா­லைக்கு அனுப்­பப்­பட்டு கொண்டு போகின்ற தங்­கத்­தின் அளவு எவ்­வ­ளவு? உருக்­கிய பிறகு தங்­கத்­தின் அளவு எவ்­வ­ளவு?என்ற சான்­றி­த­ழோடு இது­வரை திருக்­கோ­யி­லுக்கு சேர்த்த தங்­கத்­தின் அளவு 1111கிலோ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த தங்­கத்­தி­னால் வரு­கிற ஆண்டு வரு­வாய் ரூபாய் இரு­பது கோடி. இப்­படி ஆட்சி அதி­கா­ரத்­தில் இருக்­கும் போது இறை­வ­னுக்கு சொத்து சேர்த்து அந்த சொத்­தின் வாயி­லாக இறை­வ­னுக்கு திருப்­பணி செய்த ஒரு அரசு உண்டு என்­றால் அது­தான் திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் திரா­விட ஆன்­மீக மாடல் அரசு தான் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேரவை தலை­வர் அவர்­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த சபை­யில் பல நேரங்­க­ளில் காணோம் காணோம் என்ற வார்த்­தையை கேள்­விப்­பட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நான்  சொல்­லிக் கொள்­வேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சூரி­யனை வானத்­தில் காண­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சந்­தி­ரனை நட்­சத்­தி­ரங்­கள் நடு­வில் காண­லாம் பிர­க­லா­தன் சொன்­னான் ஆண்­ட­வனை எங்கே காண்பி என்­றால் தூணி­லும் இருப்­பான் துரும்­பி­லும் இருப்­பான் என்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த வகை­யிலே திரா­விட மாடல் ஆட்­சி­யிலே ஆன்­மீக மக்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட நன்­மை­கள்  உரு பசி ஓவா பிணி போக்­கு­கின்ற அன்­ன­தான திட்­ட­மாக இருந்­தா­லும் சரி, கட்­ட­ண­மில்­லாத இல­வச திரு­ம­ண­மாக இருந்­தா­லும் சரி, அது விளக்கு பூஜை என்­றா­லும் சரி, மருத்­து­வ­ம­னை­கள் என்­றா­லும் சரி, எங்­கெல்­லாம் லட்­சுக்­கான லட்­சக்­க­ணக்­கான மக்­கள் பயன்­பட்­டார்­களோ அங்­கெல்­லாம் எங்­கள் உயி­ரி­னும் மேலான திரா­வி­டர் மாடல் ஆட்­சி­யி­னு­டைய நாய­கனை காண­லாம் காண­லாம் காண­லாம் என்று பதிவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">4 ஆயி­ரம் கோயில்­க­ளுக்கு  மேல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">குட­மு­ழுக்கு நடத்­தி­யுள்­ளோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேரவை தலை­வர் அவர்­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த ஆட்சி ஏற்­பட்­ட­வு­டன் நிதி­நிலை அறிக்­கை­யில் பக்­கம் 123 குறிப்­பிட்­டூள்­ளீர்­கள் குறிப்­பாக சொல்ல வேண்­டு­மென்­றால் திரா­விட மாடல் ஆட்சி ஏற்­பட்ட பிறகு இது­வரை 4641 கோயி­லுக்கு குட­மு­ழுக்கு தேர்­த­லுக்கு முன் நடத்­தி­னோம் நீங்­கள் நீங்­கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்ற புள்ளி விவ­ரத்­தில் 281 கோவி­லுக்கு குட­மு­ழுக்கு நடத்­தப் போகி­றோம் என்று  அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள் ஒட்டு மொத்­த­மாக பார்த்­தால் 4939 கோவில்­க­ளுக்கு திரா­விட மாடல் ஆட்­சி­யா­ளர்­கள் விதைக்­கப்­பட்ட விதை­யி­லி­ருந்து தான்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு மர­மாக வளர்ந்து குட­மு­ழுக்கு  தந்­தி­ருக்­கி­றது என்­பதைபதிவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதி­லும் ஒரு பின்­ன­டைவு நாங்­கள் ஆட்சி செய்த ஐந்­தாண்டு காலத்­தில்  4930  கோவில்­கள் என்­றால் நீங்­கள் ஐந்­தாண்­டு­க­ளில் மூவா­யி­ரம் என்று அறி­வித்துஇருக்­கி­றீர்­கள் இந்த 3000த்தையும் கணக்­கிட்டு பார்த்­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட மாடல் ஆட்­சி­யில் 1436 கோவில்­க­ளுக்கு நாங்­கள் எஸ் எஸ் பி வழங்கி இருக்­கின்­றோம் நீங்­கள் குறிப்­பிட்டுஇருக்­கின்ற இந்த 3000 கோயில்­கள் அதிலே வரு­கி­றதா இல்லை அது இல்­லா­மல் தனி­யாக எடுக்­கும் கோவில்­களா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் லாவணி பாட விரும்­ப­வில்லை நீங்­கள் அறி­வித்த அறி­விப்­பில் தெளி­வாக சொல்லி இருக்­கி­றீர்­கள் ஐந்­தாண்­டில் 3000 கோயில்­க­ளில் திருப்­பணி செய்­வோம் என்று அதை தான் சுட்டி காட்­டி­னோம் நீங்­கள் ரத்து செய்த பணி­கள்எல்­லாம் மக்­கள் நல பணி­கள் தான் அதைப்­பற்றி எங்­க­ளுக்கு கவலை இல்லை மக்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">19,000 கோயில்­க­ளுக்கு விளக்கு ஏற்றி வைத்­த­வர் எங்­கள் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த ஆட்­சி­யில் ஒரு ஆட்சி நிறை­வு­றும் போது நடை­பெற்ற பணி­க­ளுக்கு அடுத்த ஆட்­சி­யில் நிலவி இருந்­தால் அடுத்த ஆட்­சி­யில் தரு­வது தான் ஒரு ஆட்­சி­யின் திற­மை­யான ஆட்­சிக்கு அடை­யா­ளம் எங்­க­ளைப் பொறுத்­த­வரை  என்­னு­டைய ஆட்­சி­யில் திரா­விட மாடல் நாய­கர் மீது வைத்த நம்­பிக்­கை­யில் 2000 கோடி 3000 அள­வுக்கு உப­ய­தா­ரர் நிதி மாத்­தி­ரம் எங்­கள் ஆட்­சி­யின் நம்­பிக்கை வைத்து அளித்த நிதி அந்த நிதி.அதே­போல் திருக்­கோ­யி­லு­டைய நிதி­யா­தா­ரத்தை பெருக்­கி­யது எப்­படி என்­ப­தற்கு உதா­ர­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நிலு­வை­யில் இருந்த 570 கோடி ரூபாயை வாடகை நிலுவை பாக்கி திருக்­கோ­வி­லுக்கு கொண்டு வந்து சேர்ந்த பெருமை திரா­விட மாடல் ஆட்­சிக்கு உண்டு அன்­ன­தான திட்­டத்­திற்கு சுமார் 300 கோடி அள­வுக்கு பொது­மக்­கள் பங்­க­ளிப்பை கொண்டு வந்த சேர்த்த ஆட்சி இந்த ஆட்சி கடந்த காலங்­க­ளில் செய்­யப்­பட்ட பணி­க­ளுக்கு நிலு­வைத் தொகையை வழங்க வேண்­டிய பொறுப்பு உங்­கள் திற­மை­யால் செய்­யுங்­கள் நிலு­வைத் தொகையை  விரைந்து அளி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெரிய பெரிய கோவில்­க­ளில் தீபங்­கள் ஆயி­ரம் தெரி­யும் ஆனால் ஒரு கால பூஜை திட்­டத்­தில் வரு­கின்ற கோயில்­கள் தமி­ழ­கத்­தில் நிறைய உண்டு மறைந்த அம்­மை­யார் அவர்­கள் ஆட்­சிக் காலத்­தில் 25 ஆயி­ரம் ரூபாய் வைப்பு நிதி திட்­டம் தொடங்­கி­னார்­கள் பிறகு அதி­முக ஆட்சி நடை­பெ­றும் போது அதை ஒரு லட்­ச­மாக ரூபா­யாக ஆக்­கி­னார்­கள். எங்­கள் ஆட்சி வந்த பிறகு ஒரு லட்­சத்தை ஒன்­றரை ஆக்­கி­னோம் பிறகு இரண்­டாக்­கி­னோம் இரண்டை இரண்­டரை ஆக்­கி­னோம் அதோடு நிற்­க­வில்லை 12974 திருக்­கோ­யில்­க­ளாக இருந்த இந்த திருக்­கோ­யில் பட்­டி­யலை 19000 ஆக்­கி­னோம் ஒரு வேளை நித்­தி­ய­கால பூஜை கூட நடை பெறாத இருந்த கோவில்­க­ளில் ஒரு விளக்கு கூட எரிய வைக்க முடி­யாத இருந்த திருக்­கோ­வில்­க­ளின் 19000  கோயில்­க­ளில் விளக்கு ஏற்றி வைத்த பெரு­மைக்கு சொந்­தக்­கா­ரர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் அந்த 19000 கோயில்­க­ளுக்­கும் மின்­சா­ரத்தை இல­வ­ச­மாக வழங்­கி­னார் அதோடு நிற்­க­வில்லை அந்த 19000 கோயில்­க­ளில் இருக்­கின்ற அர்ச்­ச­கர்­க­ளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்­கில் செலுத்­தி­னார் 2025–26 ஆண்டு ஆயி­ரத்தை ஆயி­ரத்து 500 ஆக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதோடு சேர்த்து அந்த திருக்­கோ­வி­லுக்கு பூஜை தட்டு, ஆரத்தி தட்டு என்று 19000 கோயி­லுக்கு 9 கோடி ரூபாய் செல­வில் பூஜை பொருட்­கள் வழங்­கிய ஆட்சி இந்த ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த திரா­விட மாடல் ஆட்சி அதோடு நிறுத்­த­வில்லை அந்த ஒரு கால பூஜை திட்­டத்­தில் இருக்­கின்ற அர்ச்­ச­கர்­க­ளுக்கு, கோயி­லுக்கு யார் வரு­வார்­கள் என்று ஏக்­கத்­தோடு இருக்­கின்ற அர்ச்­ச­கர்­க­ளுக்கு அவ­ரு­டைய பிள்­ளை­க­ளு­டைய படிப்பு செல­வுக்கு உயர் படிப்பு படிப்­ப­வர்­க­ளுக்கு கிட்­டத்­தட்ட 2000 பேர்­க­ளுக்கு 10000 என்று ஒரு கால பூஜை­யில் இருக்­கின்ற அர்ச்­ச­கர்­க­ளின் 
பிள்­ளை­க­ளுக்கு கல்வி உதவி வழங்கி கல்வி கண் திறந்­த­வர் எங்­கள் திரா­விட மாட­லாட்­சி­யி­னு­டைய நாய­கர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">10 ஆயி­ரம் கோயில்­க­ளுக்கு 
திருக்­கு­ட­மு­ழுக்கு நடத்­தி­னோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு கால பூஜை கோயில்­க­ளை­யும் எடுத்­துக் கொண்­டோம்  ஆதி­தி­ரா­வி­டர் பழங்­கு­டி­யி­னர் வசிக்­கின்ற பகு­தி­யிலே இருக்­கின்ற திருக்­கோ­யில்­க­ளின் நிலை   என்­ன­வென்று எங்­க­ளோடு கலந்­தாய்வு செய்­தார்  எங்­கள் முதல்­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த ஆய்­விலே அந்த திருக்­கோ­வி­லுக்கு திருப்­ப­ணிக்­காக எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கீடு செய்­தீர்­கள் என்று கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு லட்­சம் என்­றோம் ஒரு லட்­சத்­தில் எண்ண முடி­யும் திருப்­ப­ணிக்கு என்று ஒன்றை ஒன்­றரை ஆக்­கி­னார் இரண்டை இரண்­டரை ஆக்­கி­னார். எத்­தனை கோயில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு நடத்­தி­னோம் தெரி­யுமா? சொல்­லு­வார்­கள்  ரத்­த­மின்றி யுத்­தம் செய்து சுதந்­தி­ரம் பெற்­றது ஒரு வழி என்­பார்­கள் ஆர­வா­ரம் ஆர்ப்­பாட்­டம் இல்­லா­மல் பெற்­றது ஒரு­வழி என்­பார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆர­வா­ரம் ஆர்ப்­பாட்­டம் இல்­லா­மல் பத்­தா­யி­ரம் கோயில்­க­ளுக்கு திருக்­கு­ட­மு­ழுக்கு தந்­த­வர் திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய நாய­கர் என்­பதை இந்த நேரத்­தில் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன். உங்­க­ளு­டைய அறி­விப்­பில் கூட அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள் இந்த அறி­விப்­பில் கூட 106 அறி­விப்பு அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். அந்த 106 அறி­விப்­பு­களை எத்­தனை ஆண்­டு­க­ளில் நீங்­கள் நிறைவு செய்து காட்ட போகி­றீர்­கள் என்று பார்க்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேரவை தலை­வர் அவர்­களே ஆயி­ர­மாண்டு கோயில்­கள்  நம்­மு­டைய மன்­னர்­கள் விட்­டுச் சென்ற பொக்­கி­ஷம். அந்த திருக்­கோ­யில் இந்த ஆட்சி வந்த பிறகு திருப்­பணி க்காக 352 கோவில்­களை வகைப்­ப­டுத்­தி­னோம். 352 திருக்­கோ­வி­லுக்கு சரித்­தி­ரத்­தில் இல்­லாத அள­வுக்கு 2022–23100 கோடி 23–24 லவ் 100 கோடி 24–25 ல் 100 கோடி 25–26 ல் 125 கோடி என்று 425 கோடியை அரசு நிதி­யாக தந்து 135  கோடி உப­ய­தா­ரர் நிதி­யா­கப் பெற்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">560 கோடி­யில் 352 கோயில்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருப்­ப­ணிக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு சுமார் 90 கோயில்­கள் ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு மேலான திருக்­கோ­வில்­க­ளுக்கு குட­மு­ழுக்­கு­களை கண்­டோம். ஆகை­யால் தான் நம்­மு­டைய கோவி செழி­யன் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தொகு­தி­யில் இருக்­கின்ற ஆபத் சகா­யேஸ்­வ­ரர் கோவில் தான் யுனெஸ்கோ விருது பெற்ற  திருக்­கோ­வில் என்­பதை இந்த சபை­யில் பதிவு செய்ய  கட­மைப்­பட்டு இருக்­கின்­றேன் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர்­கள் சொல்­வார்­கள் நாங்­கள் கூட திருப்­ப­ணிக்கு 217 கோவில்­க­ளுக்கு வகைப்­ப­டுத்தி இருக்­கின்­றோம் என்று என்­னு­டைய கேள்வி நாங்­கள் ஏற்­க­னவே எடுத்­துக் கொண்ட 352 கோவில்­கள் இதற்­குள் அடங்­கு­கி­றதா? இதை தவிர்த்து நீங்­கள் 217 திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு தர இருக்­கி­றீர்­களா என்­பதை தங்­கள் பதில் உரை  வாயி­லாக அறிய விரும்­பு­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேரவை தலை­வர் அவர்­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடல் உள்­ள­வரை –கார் உள்­ள­வரை– அருவி உள்­ள­வரை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆறு உள்­ள­வரை – திருக்­குள நாய­கன், எங்­கள் தலை­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெயரை எப்­போ­தும் சொல்­லும்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">திருக்­கு­ளங்­கள் மேம்­பாட்­டுப் பணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள் திரா­விட மாடல் நான்கு திருக்­கு­ளங்­களை புதி­தாக கட்­டி­னோம் அதோடு நிறுத்­த­வில்லை 143 கோடி ரூபாய் செல­வில் 272 திருக்­கோ­வில் திருக்­கு­ளங்­களை மேம்­ப­டுத்­து­கின்ற பணி­களை எடுத்­துக் கொண்­டோம்.அதில் 109 திருக்­கு­ளங்­கள் மேம்­பாட்டு பணி­கள் முடி­வுற்­றி­ருக்­கின்­றன. மீத­முள்ள 163 திருக்­கு­ளங்கள் பணி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன உங்­க­ளது கொள்கை விளக்க குறிப்­பிலே குறிப்­பிட்ட இருக்­கி­றீர்­கள் இந்த ஆண்டு 250 திருக்­கு­ளங்­கள் சீர­மைக்க போகி­றோம் என்று குறிப்­பிட்டு இருக்­கி­றீர்­கள். என்­னு­டைய கேள்வி நாங்­கள் தொடங்­கிய அந்த 163 திருக் கோயில்­க­ளில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற திருக்­கு­ள­ங்­களை சேர்த்தா அல்­லது அதை தவிர்த்து புதி­தாக 250 திருக்­கு­ளங்­களா?என்­பதை பதில் உரை­யிலே நீங்­கள் விளக்க வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சொத்­துக்­கள் மீட்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆல­யத்­தி­னு­டைய சொத்­துக்­களை மீட்­டெ­டுத்த ஆட்சி எங்­க­ளு­டைய ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்த பிறகு இந்த எண்­பது ஆண்­டு­க­ளில் திருக்­கோ­யில் சொத்­துக்­களை மீட்ட ஒரு ஆட்சி உண்டு என்­றால் அது திரா­விட மாடலா ஆட்­சி­யாக தான் இருக்­கும் 8450 கோடி ரூபாய் மதிப்­பி­லான சுமார் 8,147 ஏக்­கர் நிலங்­களை மீட்­டெ­டுத்து இருக்­கின்­றோம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பத்­தி­ர­மாக சொத்­துக்­களை மீட்ட ஆட்சி எங்­கள் ஆட்சி மீட்ட சொத்­துக்­களை பத்­தி­ரப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கின்ற ஆட்சி இந்த ஆட்­சி­யாக இருந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வாழும் வள்­ள­லார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பசிப்­பிணி அறி­யா­மல் வாழ வேண்­டும் என்று சொன்­ன­வர் ,அன்பே வாழ­வைக்­கும், ஆசை தாழ வைக்­கும் என்ற குர­லுக்கு ஏற்ப வள்­ள­லா­ருக்கு உலக அள­வில் சர்­வ­தேச மையத்தை தமி­ழக முதல்­வர் எங்­கள் உயி­ரி­னும் மேலான அன்பு தலை­வர் கொண்டு வந்­தார் .அத­னு­டைய பிபிடி யை இந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் சபா­நா­ய­கர் அவ­ரு­டைய உத்­த­ர­வின் அடிப்­ப­டை­யில் வழங்­கு­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வள்­ள­லா­ருக்கு சர்­வ­தேச மையம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பாருங்­கள் அது எவ்­வ­ளவுஅரு­மை­யாக இருக்­கி­றது என்று அதை நிறை­வேற்ற நீதி­மன்­றத்­தின் நெடிய படிக்­கட்­டு­க­ளில் நாங்­கள் வாதித்­துக் கொண்­டி­ருந்­தோம், நீங்­கள் ஆட்சி பொறுப்பை ஏற்­ற­வு­டன் அந்த வழக்­கிலே திரும்ப பெற்று இருக்­கி­றீர்­கள்?எந்த வகை­யில் நியா­யம் யார் வள்­ள­லார்? அவர் தமி­ழ­கத்­திற்கு மாத்­தி­ரம் சொந்­த­மல்ல தன்­மீது போடப்­பட்ட வழக்­குக்­காக நீதி­மன்­றத்­திற்கு சென்ற சென்ற அவ­ரைப் பார்த்­த­வு­டன் வழக்கு போட்­ட­வர் நெடுஞ்­சா­னாக காலில் விழுந்து வணங்­கு­கி­றார் அதைப் பார்த்த நீதி­பதி அந்த வழக்கை தள்­ளு­படி செய்­கி­றார். இப்­ப­டிப்­பட்ட  
வள்­ள­லா­ருக்கு  சர்­வ­தேச மையத்தை நீங்­கள் கொண்டு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நூற்­றாண்­டு­கள் பல­கண்ட தமிழ்­நாட்­டில் அழிக்க முடி­யாத பெயர்­கள் ஆயி­ரம் இருக்­க­லாம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பகுத்­த­றிவு என்­றாலே , தந்தை பெரி­யார் பெயர் இருக்­கும் தமிழ்­நாடு என்­றாலே, அறி­ஞர் அண்ணா பெயர் இருக்­கும், எங்­கெல்­லாம் தமி­ழுக்கு  முடி­சூட்­டப்­ப­டு­கி­றதோ அங்­கெல்­லாம்
60 ஆண்டு கால அர­சி­யல் சரித்­தி­ரத்தை தன் ஆட்­காட்டி விர­ல­சை­வில் வைத்­தி­ருந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பெயர் இருக்­கும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இந்­தப் பெயர்­கள் என்­றும் இருக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பள்­ளிக்கு வரும் குழந்­தை­க­ளின், காலை பசி­யா­றும் ஒவ்­வொரு அரி­சி­யி­லும் திரா­விட மாட­லின் நாய­கர் திரு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்ற பெயர் இருக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதோ, அடுத்த தலை­மு­றையை நோக்கி, 80  ஆண்டு இயக்­கத்­தின்  கொள்கை முழங்­கும் ஓசை­யில் எல்­லாம், எங்­கள் இளந்­த­லை­வர் உத­ய­நிதி என்­னும் பெயர் இருக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யிலே 
அற­நி­லையத்துறை என்­பது வரம் விளை­யும் துறை­யா­கவே இருந்­தது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அன்பை வளர்ப்­பதே ஆன்­மீ­கம் என்­றார் டாக்­டர் ஏ.பி.ஜெ.அப்­துல்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அறத்­தைப் பின்­பற்­று­வதே ஆன்­மீ­கம் என்­றார் மகாத்மா..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த இரண்­டை­யும் ஒரு­சேர நடத்­திக்­ காட்­டி­ய­வர்எங்­கள் தலை­வர் – திரா­விட மாடல் அர­சர் 
திரு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளுக்கு இந்த இடை­வேளை முடிந்து!! தொடர்­வேலை தொட­ரும்!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இம­யம் வரை­யில் எங்­கள் அறம் பட­ரும்!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு பி.கே.சேகர்­பாபு பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>