<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,957,1203" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 24 2026 03:36:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260824T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="24082026-CHN-03" position.sequence="03" ex-ref="24082026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முழுமையாகப் பாதிப்பு!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup830260_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="05bw_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொறுப்­பேற்க வேண்­டும். பர­வா­யில்லை, இந்­தக் கைது நட­வ­டிக்­கை­க­ளுக்­கெல்­லாம் பயந்­த­வன் கிடை­யாது, இந்த உத­ய­நிதி என்­பது இந்த அர­சுக்கு இந்­நே­ரம் தெரிந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">மிகப்­பெ­ரிய போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 3-ஆம் தேதி, தஞ்­சை­யில் விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக, அவர்­க­ளின் கோரிக்­கை­களை இந்த அரசு நிறை­வேற்ற வேண்­டும் என்று ஒரு மிகப்­பெ­ரிய போராட்­டத்தை நடத்­தி­னோம். நான் கலந்­து­கொண்டு என் தலை­மை­யில் நடந்­தது. நம் கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள், விவ­சா­யி­கள் சங்­கத்­தைச் சார்ந்­த­வர்­கள் எல்­லாம் வந்து கலந்­து­கொண்­டார்­கள். நான் தலைமை தாங்கி கடை­சி­யா­கப் பேசி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிட்­டத்­தட்ட 22 நிமி­டம் பேசி­யி­ருக்­கி­றேன். காவி­ரி­யில் தண்­ணீர் வர­வில்லை என்று சொன்­னேன். அது­மட்­டும் சொல்­ல­வில்லை, இன்­னும் நிறைய பேசி­யி­ருக்­கி­றேன். டம்மி முத­ல­மைச்­சர் என்­றேன், ஒரு கேடு­கெட்ட அர­சாங்­கம் அமைந்­தி­ருக்­கி­றது. ஒரு வெட்­கங்­கெட்ட முத­ல­மைச்­சர் தமிழ்­நாட்­டுக்கு அமைந்­தி­ருக்­கி­றார் என்று சொன்­னேன். தேர்­தல் வாக்­கு­றுதி கொடுத்­தீர்­களே, அதை­யெல்­லாம் செயல்­ப­டுத்­து­வ­தற்கு உங்­க­ளுக்கு வக்­கில்லை என்று சொன்­னேன். அதற்­கெல்­லாம், அவர்­க­ளுக்கு கோபம் வர­வில்லை. காவி­ரி­யில் தண்ணீர் வர­வில்லை என்று சொன்­ன­தும், கோபம் வந்­து­விட்­டது. அதற்­காக, என்னை இர­வோடு இர­வாக தஞ்­சா­வூ­ரில் இருந்து காவல்­து­றை­யி­னரை அனுப்பி, அதி­கா­லை­யில் என் வீட்­டுக்கு வந்­து­விட்­டார்­கள். என்­னைக் கைது செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">பல்டி அடித்­தார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல்­துறை என்­னைக் கைது செய்து, தஞ்­சா­வூ­ருக்கு அழைத்து வரு­கி­றார்­கள் என்று தெரிந்­த­வு­டன், டெல்­டா­வில் இருக்­கின்ற அனைத்து உடன்­பி­றப்­பு­க­ளும் தஞ்­சை­யில் ஒன்று கூடி­விட்­டீர்­கள். அத­னால், தஞ்­சா­வூர் சென்­றால் நிச்­ச­யம் நம்­மால் சமா­ளிக்க முடி­யாது என்று, காவல்­து­றை­யி­னர் வண்­டியை செங்­கி­பட்டி காவல் நிலை­ 
யத்­துக்­குத் திருப்­பி­விட்­டார்­கள். அது­மட்­ட­மல்­லா­மல், நீதி­மன்­றத்­தில் இந்த அரசு சென்று மன்­னிப்பு கேட்­டது. `நாங்­கள் அவரை கைதெல்­லாம் செய்­ய­வில்லை, விசா­ரித்து விட்­டு­வி­டு­வோம்’ என்று பல்டி அடித்­தார்­கள். நம் வழக்­க­றி­ஞர்­கள் நீதி­மன்­றத்­துக்­குச் சென்று, `கைது செய்­யக் கூடாது’ என்று, அவர்­க­ளின் வாதங்­களை எடுத்­து­ வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதை ஏன் சொல்­கி­றேன் என்­றால், இந்த டெல்டா மண்­ட­லம் என்­றைக்­குமே `திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கோட்டை’ என்­பதை நாம் மீண்­டும் நிரூ­பித்­துள்­ளோம். ஏற்­க­னவே, சட்­ட­மன்­றத் தேர்­த­லில் புரிய வைத்­தீர்­கள். நண்­பர் அன்­பில் மகேஷ் அவர்­கள் பேசும்­போது குறிப்­பிட்­டுப் பேசி­னார். டெல்டா மாவட்­டங்­க­ளில் இருக்­கின்ற சுமார் 30 தொகு­தி­க­ளில், வெறும் 4 தொகு­தி­கள் மட்­டும்­தான் இப்­போது இருக்­கின்ற ஆளுங்­கட்சி வென்­றுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த புதிய அரசு அமைந்­த­தில் இருந்து, கடந்த 105 நாட்­க­ளாக இந்த அர­சால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டது யார் என்று பார்த்­தீர்­கள் என்­றால், விவ­சா­யப்பெருங்­குடி மக்­கள்­தான். அதற்கு ஒரு சிறிய உதா­ர­ணம், இதற்கு முன்பு இருந்த நம் திரா­விட மாடல் அரசு, நம் தலை­வர் அவர்­கள்முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது, கடந்த 5 வரு­டம் மேட்­டூர் அணை­யி­லி­ருந்து, சரி­யாக ஜூன் 12-ஆம் தேதி தண்­ணீர் திறந்­தி­டு­வார். இன்­னும் சொல்­லப்­போ­னால், சில வரு­டம் அந்­தத் தேதிக்கு முன்­பா­கவே தண்­ணீரை நம் தலை­வர் அவர்­கள் திறந்­து­விட்­டுள்­ளார்­கள். ஆனால், இவர்­கள் ஆட்­சிக்கு வந்து, இன்­றைக்கு என்ன நிலைமை. ஜூன் மாதம் முடிந்து, ஜூலை மாதம் முடிந்து, இப்­போது ஆகஸ்ட் மாதம் முடி­யப்­போ­கி­றது. இப்­போ­து­வ­ரைக்­கும் மேட்­டூ­ரி­லி­ருந்து தண்­ணீ­ரைத் திறந்­து­வி­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">தெரிந்­து­கொண்டு பேசுங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவி­ரி­யில் தண்­ணீர் இல்லை. டெல்டா பகு­தி­க­ளில் குறுவை சாகு­படி இப்­போது முழு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான் அந்­தப் போராட்­டத்­தி­லும் சொன்­னேன், மீண்­டும் சட்­ட­மன்­றத்­தி­லும் அதைப் பேசி­னேன். விவ­சா­யி­க­ளுக்­குத் தய­வு­செய்து இந்த அரசு வறட்சி நிவா­ர­ணம் கொடுக்க வேண்­டும். அதற்கு இந்த முத­ல­மைச்­சர் ஏதா­வது பதில் சொன்­னாரா? பதில் சொல்­கி­றேன் என்று சொல்லி, ஏற்­க­னவே சிறப்­புத் தொகுப்பு கொடுத்­து­விட்­டோம் என்று சொன்­னார். பிறகு நான் சொன்­னேன், முத­ல­மைச்­சர் அவர்­களே சிறப்பு தொகுப்­புக்­கும், வறட்சி நிவா­ர­ணத்­துக்­கும் வித்­தி­யா­சம் இருக்­கி­றது. முத­லில் அதை தெரிந்­து­கொண்டு பேசுங்­கள் என்று அவை­யில் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">விவசாயிகளுக்கு கொடுக்க நிதியில்லை
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">கார் வாங்க மட்டும் நிதியுண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று விவ­சா­யி­க­ளுக்கு வறட்சி நிவா­ர­ணம் கொடுக்க அர­சி­டம் நிதி இல்லை என்று சொல்­லி­விட்­டார்­கள். ஆனால் என்ன செய்­தி­ருக்­கி­றார்­கள், ஆளுங்­கட்­சி­யில் இருக்­கின்ற சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கார் வாங்கி கொடுக்க, இந்தஅரசு முடி­வெ­டுத் துள்­ளார்­கள். அதற்கு எங்­கி­ருந்து வந்­தது உங்­க­ளுக்கு நிதி? விவ­சா­யி­க­ளுக்­குத் தேர்­தல் வாக்­கு­று­தி­யில் சொன்­ன­து­மா­திரி, அவர்­க­ளின் கடன்­களை எல்­லாம் தள்­ளு­படி செய்­வ­தற்கு நிதி இல்லை என்று இந்த முத­ல­மைச்­சர் சொல்­லி­விட்­டார். ஆனால், இன்­றைக்கு `ஆளுங்­கட்­சி­யில் இருக்­கின்ற சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எல்­லாம், கார் வாங்கி தரு­கி­றேன்’ என்று முத­ல­மைச்­சர்ஒரு அறி­விப்பை வெளி­யி­டு­கி­றார். ஆனால் நம் தலை­வர் தெளி­வா­கச் சொல்­லி­விட்­டார். நான் அதை சபை­யி­லேயே பதிவு செய்­துள்­ளேன். `திரா­விட முன்­னேற்­றக் கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எங்­கள் யாருக்­கும் இந்த அரசு கொடுக்­கின்ற அந்த வாக­னம் தேவை­யில்லை. முத­லில் நீங்­கள் விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்த்து வையுங்­கள்’ என்று சபை­யில் சொல்­லி­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­கும் சண்­டைக்கு வரு­கி­றார்­கள். நான் என்ன சொன்­னேன். நீங்­கள் வாங்­கிக்­கொள்­ளுங்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், எங்­கள் தலை­வர் இந்த முடிவை எடுத்­துள்­ளார். விவ­சா­யி­கள் பிரச்­சி­னை­யில் முத­லில் கவ­னம் செலுத்­துங்­கள். அதற்கு நிதி இல்லை என்று சொல்­லி­விட்­டீர்­கள். ஆட்­சிக்கு வந்­த­வு­டன் கஜா­னா­வைத் துடைத்து வைத்­து­விட்டு போய்­விட்­டோம் என்று சொல்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">கொடுத்த வாக்குறுதிகள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">எதை­யும் நிறை­வேற்­ற­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் வாக்­கு­றுதி எதை­யும் நிறை­வேற்­ற­வில்லை. மக­ளிர் உரி­மைத்­தொகை 2,500 ரூபாய் கொடுப்­போம் என்று சொன்­னீர்­கள் அதை­யும் கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வரு­டத்­துக்கு 6 கேஸ் சிலிண்­டர் கொடுப்­பேன் என்று சொன்­னீர்­கள் அதை­யும் கொடுக்­க­வில்லை. வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு மாதம் 4,000 வழங்­கு­வ­தா­கக் கூறி­யி­ருந்­தீர்­கள், அதை­யும் வழங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொடுத்த வாக்­கு­று­தி­கள் எதை­யும் நிறை­வேற்­றா­மல், இன்று சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கார் வாங்­கித் தரு­வ­தாக சொல்­வதை, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஏற்­றுக்­கொள்­ளாது; எங்­க­ளுக்கு அது வேண்­டாம் என்று கூறி­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று சட்­ட­மன்­றத்­தில் நடப்­ப­வற்றை நீங்­கள் அனை­வ­ரும் தொலைக்­காட்­சி­யில் நேர­லை­யில் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றீர்­கள். இந்த ஆளுங்­கட்­சி­யி­னர் இன்று ஒவ்­வொரு நாளும் என்­னென்ன கூத்­து­ க­ளெல்­லாம் செய்­கி­றார்­கள் என்­பதை நீங்­கள் நேர­லை­யில் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். முன்­பெல்­லாம் அவை­யில் பேசு­வார்­கள், கேள்வி கேட்­பார்­கள், அதற்­குப் பதி­லும் சொல்­வார்­கள். கேள்வி கேட்­டால் பதில் சொல்­ல­லாம், பாட்டு பாடி­னால், நான் எப்­ப­டிப் பாட்­டுப் பாட முடி­யும்? இப்­படி ஒரு கேடு­கெட்ட ஆட்சி இன்று நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் மக்­கள் பிரச்­சினை, விவ­சா­யி­கள் பிரச்­சினை, சட்­டம் ஒழுங்கு பிரச்­சினை இதைப் பற்­றி­யெல்­லாம் பேச­லாம் என்று நாங்­க­ளெல்­லாம் குறிப்­பு­க­ளெல்­லாம் எடுத்­துக்­கொண்டு போகி­றோம். ஆனால், நாங்­கள் கேட்­கக்­கூ­டிய எந்­தக் கேள்­விக்­கும் முத­ல­மைச்­சர் எழுந்து பதில் சொல்­வது கிடை­யாது. நீங்­கள் பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றீர்­கள், தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு மூன்று அமைச்­சர்­கள் மட்­டுமே இருக்­கி­றார்­கள். அனைத்­துக் கேள்­வி­க­ளுக்­கும் அந்த மூன்று அமைச்­சர்­கள்­தான் எழுந்து பதில் சொல்­கி­றார்­கள். அது­வும் நாங்­கள் கேட்­கக்­கூ­டிய கேள்­விக்­கான பதில் கிடை­யாது. அனைத்­தை­யும் திசை திருப்­பு­வது போலத்­தான் இருக்­கி­றது. திசை திருப்­பும் உத்­தி­கள் (Diversion tactics), அவ்­வ­ள­வு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">அவர்களுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">ரீல்ஸ் கிடைத்தால் போதும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­திற்கு, அன்று செந்­தில் பாலாஜி அவர்­கள் மின்­சா­ரத் துறை­யில் மானி­யக்கோரிக்­கை­யில் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார். அவர் என்ன கேட்­கி­றார்? மின்­சா­ரக் கட்­ட­ணம் இந்த மூன்று மாதங்­க­ளில் அதி­க­மா­கி­விட்­டது. அள­வீட்­டைச் சரி­யாக எடுக்­க­மாட்­டேன் என்­கி­றார்­கள் என்­ப­து­தான் அவர் கேட்ட கேள்வி. ஆனால், சம்­பந்­தப்­பட்ட துறை­யின் அமைச்­சர் அதற்­குப் பதில் சொல்ல வக்­கில்­லா­மல், அந்­தப் பிரச்­சி­னை­யைத் திசை திருப்­பு­வது போலஒரு பதி­லைக் கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடர்ந்து இந்த அரசு இதைச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்­சர் பெரு­மக்­க­ளும் ஆளுங்­கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் மக்­கள் பிரச்­சி­னை­யைப் பேசு­வ­தற்கு வர­வில்லை. அவர்­க­ளுக்­குத் தேவை­யா­ன­தெல்­லாம் அன்று ஒரு நான்கு ரீல்ஸ் கிடைத்­தால் போதும். இவர்­கள் சர்க்­கார் நடத்­து­கி­றார்­களா அல்­லது சர்க்­கஸ் கம்­பெனி நடத்­து­கி­றார்­களா என்று கேட்­கும் அள­வுக்­குத்­தான் இன்று அர­சின் செயல்­பா­டு­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதையே சற்­றுப் பின்­னோக்கி பாருங்­கள். கடந்த 5 ஆண்­டு­க­ளாக நம்­மு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள், இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மாக நம் தமிழ்­நாட்­டைக் கொண்­டு­வந்­தார். 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யோடு இந்­தி­யா­வில் வள­ரும் மாநி­லங்­க­ளில் முதன்மை மாநி­ல­மா­கத் தமிழ்­நாடு இருந்­தது. இன்று அதைக்­கொண்டு போய் பாதா­ளத்­தில் தள்­ளி­விட்­டார்­கள். இன்­றைக்கு இந்த அர­சாங்­கம் ஒரு டம்மி அர­சாங்­க­மாக, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைப் பின்­னோக்கி இழுத்­துக்­கொண்டு போய்க்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் நடக்­கும் எந்­தப் பிரச்­சி­னை­யைப் பற்­றி­யும் இன்று இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­ச­ருக்­குக் கவலை கிடை­யாது. இவற்­றை­யெல்­லாம் இன்று மக்­கள் பார்த்து, இப்­போ­து­தான் உண­ரத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள். எனவே, விரை­வில் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளின் ஆண­வத்­திற்­கும் கோமா­ளித்­த­னத்­திற்­கும் மக்­கள் ஒரு சரி­யான பாடத்­தைப் புகட்­டு­வார்­கள் என்று கூறி, உங்­கள் அனை­வ­ரின் சார்­பாக மண­மக்­களை மீண்­டும் வாழ்த்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மண­மக்­க­ளுக்கு ஒரு வேண்­டு­கோள்: மண­மக்­கள் இரு­வ­ருமே நன்கு படித்­த­வர்­கள், அதிக அறி­வுரை வழங்­கத் தேவை­யில்லை. எம்.பி.ஏ (MBA) படித்­தி­ருக்­கி­றார்­கள், அவர்­க­ளுக்கு ஒரே­யொரு வேண்­டு­கோள் மட்­டும் வைக்­கி­றேன். அவர்­க­ளுக்­குப் பிறக்­கக்­கூ­டிய குழந்தை, அது ஆண் குழந்­தை­யாக இருந்­தா­லும் சரி, பெண் குழந்­தை­யாக இருந்­தா­லும் சரி, அவர்­க­ளுக்கு ஒரு அழ­கான தமிழ்ப் பெயரை அவர்­கள் சூட்ட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன். மண­மக்­க­ளுக்கு மீண்­டும் ஒரு­முறை உங்­கள் அனை­வ­ரின் சார்­பாக என் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15">பங்­கேற்­ற­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் துரை சந்­தி­ர­சே­க­ரன், பழ­னி­வேல், முன்­னாள் அமைச்­சர்­கள் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி, டி.ஆர்.பி.ராஜா, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அண்­ணா­துரை, பேரா­வூ­ரணி அசோக்­கு­மார், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முர­சொலி, ஏனாதி பால­சுப்­பி­ர­ம­ணி­யம், டி.கே.ஜி.நீல­மே­கம், தஞ்­சா­வூர் மாந­க­ரச் செய­லா­ளர் சண்.இரா­ம­நா­தன், இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர் இளை­ய­ராஜா, மருத்­து­வர் அஞ்­சு­கம்பூபதி, பழஞ்­சூர் செல்­வம், ஜெயப்­பி­ர­காஷ், கார்த்­தி­கே­யன் வேலு­சாமி, சுப.சேகர், ரமேஷ், பொன்.சத்­தி­ய­மூர்த்தி, மைக்­கே­லம்­மாள், எஸ்.கே.செந்­தில்­கு­மார், நக­ரக் கழ­கச் செய­லா­ளர் செந்­தில்­கு­மார், ரூஸ்­வெல்ட், அப்­துல் மஜீத், கௌசல்யா, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் முகில் வேந்­தன், அழ­கிரி, வீர­மணி, மருத்­து­வர் சந்­தி­ர­சே­கர், அர­விந்த் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்து 
கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழக இளைஞர் அணிச் செயலாளர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கழகத் தோழர் கே.வெங்கேடஷின் புதல்வர் ராம்பிரசாத் – நந்தினி (எ)  கற்பகவள்ளி ஆகியோரின் மணவிழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>