<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,835" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 24 2026 03:43:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260824T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="24082026-MDU-05" position.sequence="05" ex-ref="24082026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">தலைவரின் முடிவும் –- தொண்டர்களின் மனதும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup360029_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="thalaivarnewf_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="19.5">தே</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ர்­தல்  முடி­வு­க­ளால்    நிலை­கு­லை­யாத இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். இந்­தி­யா­வின் அர­சி­யல் போக்­கைத் தீர்­மா­னிக்­கும் வலிமை கொண்ட தி.மு.க.வின்  தலை­மைச் செயற்­குழு 22–8–2026 அன்று அண்ணா அறி­வா­ல­யத்­தில் கூடி­யது. அதில் கழ­கத் தலை­வர் ஆற்­றிய உரை­யும், நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளும் தி.மு.க.வின் கடைக்­கோ­டித் தொண்­டர்­க­ளின் மன­தில் உள்ள உணர்வை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக அமைந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தலை­வர் எடுத்த முடி­வும் தொண்­டர்­க­ளின் மன­தும் ஒரே அலை­வ­ரி­சை­யில் இருப்­ப­தைத் தலை­மைச் செயற்­குழு உறுதி செய்­துள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தலை­வர் முடிவு–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­மு­றை­க­ளைக் கடந்து 75 ஆண்­டு­கா­ல­மா­கக் கழ­கம் நிலைத்து நிற்­ப­தற்கு கார­ணம் அதன் அமைப்பு பலம்­தான் என்­பதை தனது உரை­யில் எடுத்­துக்­காட்­டிய கழ­கத் தலை­வர், கழ­கத்­தின் அமைப்பு முறை­யில் உரிய சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­றும் தெரி­வித்­தார். கிளைக்­க­ழ­கம் முதல் மாவட்­டக் கழ­கம் வரை கழ­கத்­தின் அமைப்பு முறை­யில் உரிய மாற்­றங்­கள் கொண்டு வரு­வ­தற்­கா­னத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொண்­டர்­கள் மனது–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“இதை..,இதை..இதைத்­தான் எதிர்­பார்த்­தோம்” என்று தமிழ்­நாடு முழு­வ­து­முள்ள தொண்­டர்­கள் இந்த முடி­வு­களை மன­தார வர­வேற்­கி­றார்­கள். தகு­தி­யுள்ள கழ­கத் தொண்­டர்­கள் கட்­சி­யில் பொறுப்­பான பத­வி­க­ளுக்கு வர­வேண்­டும் என்று விரும்­பு­கி­றார்­கள். கழ­கத் தலைமை நிறை­வேற்­றி­யுள்ள அமைப்பு சீர­மைப்பு என்­கிற தீர்­மா­னம் தொண்­டர்­க­ளின் நீண்­ட­கால எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றும் வகை­யில் அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தலை­வர் முடிவு–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­மைச் செயற்­கு­ழு­வில் ஆற்­றிய உரை­யில் கழ­கத் தலை­வர் அவர்­கள், “மாவட்­டச் செய­லா­ளர் ஒரு­வ­ரால் மட்­டுமே கழ­கம் வளர்ந்து விடாது” என்­பதை வெளிப்­ப­டை­யாக எடுத்­துக்­கூறி, கொள்­கை­யில் உறு­தி­யாக செயல்­ப­டக்­கூ­டிய நிர்­வா­கி­கள்­கூட, பல இடங்­க­ளில் தொண்­டர்­களை புறக்­க­ணித்­த­தால் தேர்­த­லில் தி.மு.க தோல்­வியை சந்­திக்க நேரிட்­டது என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொண்­டர்­கள் மனது–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“நாங்க மன­துக்­குள் நினைத்­ததை நீங்க வெளிப்­ப­டையா பேசிட்­டீங்க தலை­வரே” என்­ப­து­தான் தொண்­டர்­க­ளின் குரல். கழ­கத்­தின் அனைத்து மாவட்­டச் செய­லா­ளர்­க­ளும் அப்­படி இருப்­ப­தில்லை என்­பது எந்­த­ளவு உண்­மையோ, அதே அள­வுக்கு, 
தலை­வர்  சொன்­னது போல செயல்­ப­டக்­கூ­டிய மாவட்­ட–­ ஒன்­றி­ய–­ ந­க­ர–­ பே­ரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் தொண்­டர்­கள் தொடர்ந்து சுட்­டிக்­காட்டி வரு­கி­றார்­கள். தங்­க­ளின் மனதை வெளிப்­ப­டுத்­திய தலை­வ­ரின் உரை­யைத் தொடர்ந்து நிறை ­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளில், மாவட்­டச் செய­லா­ள­ராக 3 முறை மட்­டுமே இருக்க முடி­யும். ஒன்­றி­ய–­ந­க­ர–­பே­ரூர்–­கி­ளைக் கழ­கச் செய­லா­ளர்­க­ளாக 2 முறை மட்­டுமே இருக்க முடி­யும் என்­பது நிறை­வேற்­றப் 
பட்­டி­ருப்­ப­து­டன் வயது வரம்­பும் அந்­தத் தீர்­மா­னங்­க­ளில் குறிப்­பிட்­டி­ருப்­பது தொண்­டர்­க­ளி­டம் பெரும் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தலை­வர் உரை–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“படைக்கு இளை­யோர் வரும்­போது, அவர்­களை மூத்­தோர் வர­வேற்று வழி­ந­டத்­து­வ­து­தான் படைக்கு அடை­யா­ளம்” என்ற முத்­தி­ரைச் சொற்­றொ­டரை தலை­வர் தனது உரை­யில் பதிவு செய்­தார். தி.மு.க என்­பதே இளை­ஞர்­க­ளால் தொடங்­கப்­பட்ட இயக்­கம். காலந்­தோ­றும் இளைய இரத்­தம் பாய்­கின்ற இயக்­கம். அத­னால்­தான், கழ­கம் தொடங்­கப்­பட்டு 30 ஆண்­டு­கள் கடந்த நிலை­யில், 1980ஆம் ஆண்டு இளை­ஞ­ரணி தொடங்­கப்­பட்­டது. அதனை வழி­ந­டத்­தி­ய­வர் நம் கழ­கத் தலை­வர். அத­னால்­தான், 75 ஆண்­டு­கால இயக்­கத்­துக்கு இளம் இரத்­தம் பாய்ச்­சும் வகை­யில் கழக நிர்­வா­கி­க­ளின் பத­விக் காலத்­திற்கு வயது வரம்பைநிர்­ண­யித்­துத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொண்­டர்­கள் மனது–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தில் ஆர்­வ­மா­கப் பணி­யாற்­றும் இளை­ஞர்­க­ளுக்கு  இளை­ஞ­ரணி உள்­ளிட்ட கழ­கத்­தின் சார்பு அணி­க­ளில் பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைப்­பது  போல, முதன்­மைக் கழ­கத்­தின் அமைப்­பு­க­ளி­லும் இளை­ஞர்­க­ளுக்­கு­ரிய அள­வில் வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்­பதே தொண்­டர்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கும். அதற்­கேற்ப வயது வரம்பு நிர்­ண­யிக்­கப் 
பட்­டி­ருப்­ப­து­டன், வட்­டம், பகுதி, நக­ரம், ஒன்­றி­யம் ஆகி­ய­வற்­றில் வாக்­கா­ளர் எண்­ணிக்­கைக்­கேற்ப செய்­யப்­ப­ட­வுள்ள மாற்­றங்­கள் இளை­ஞர்­க­ளுக்கு வாய்ப்­பு­களை அளிக்­கும் என்­ப­தால் தங்­கள் உணர்­வைப் புரிந்து தலை­வர் செயல்­பட்­டி­ருப்­பதை சமூக வலைத்­த­ளங்­க­ளில் இளை­ஞர்­கள் வெளிப்­டை­யா­கவே பதி­விட்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தலை­வர் உரை–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ஒவ்­வொரு தொகு­தியா பார்த்து குறை­க­ளைக் கண்­டு­பி­டிச்சு ஆள மாத்­து­றத விட, முழு­மை­யான ஒரு சுய­ப­ரி­சோ­தனைவேணும்னு நான் முடி­வெ­டுத்­தேன்.  இதெல்­லாம் கடு­மை­யா­ன­தா­தான் இருக்­கும். சில­ருக்கு கசப்­பா­ன­தா­க­வும் இருக்­கும். கசப்­பு­தான் உடம்­புக்கு நன்மை செய்­யும்” என்று தலை­மைச் செயற்­கு­ழு­வில் தலை­வர் உரை­யாற்­றி­னார். கழ­கத்­திற்­குக் கசப்பு மருந்து தேவைப்­ப­டும் காலம் இது என்­ப­தைத் தொண்­டர்­க­ளின் உணர்­வி­லி­ருந்து உணர்ந்த தலை­வ­ரின் சொற்­கள் இவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொண்­டர்­கள் மனது–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தின் அடி முதல் நுனி வரை உரி­ய­ள­வில் மாற்­றங்­கள் தேவை என்­ப­து­தான் தொண்­டர்­க­ளின் மனது. சமூக நீதி இயக்­க­மான திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் இளை­ஞர்­கள், பெண்­கள், சிறு­பான்­மை­யி­னர், பட்­டி­யல் இனத்­த­வர், பழங்­கு­டி­யி­னர்  உள்­ளிட்ட அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் கழ­கப் பொறுப்­பு­க­ளில் உரிய பிர­தி­நி­தித் து­வம் வேண்­டும் என்­பதே தொண்­டர்­க­ளின் குர­லா­கும். அந்­தக் குர­லைத் தலை­மைச் செயற்­கு­ழு­வில் கழ­கத் தலை­வர் அவர்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு,  பேச அனு­ம­திக்­கப்­பட்ட நிர்­வா­கி­கள் சிறப்­பாக எடுத்­து­ரைத்­த­னர். தொண்­டர்­க­ளின் மனதை தலை­மைக்கு மட்­டு­மின்றி, தலை­மைச் செயற்­கு­ழு­வுக்­கும் தன் பாணி­யில் தலை­வர் எடுத்­து­ரைத்­தது தொண்­டர்­க­ளுக்­குப் பெரும் நம்­பிக்­கைளை உண்­டாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தலை­வர் முடிவு–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தின் அமைப்பு முறை­யில் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் மாற்­றங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நிர்­வா­கி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­தப்­ப­தற்கு கட்­சித் தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்­றும், தேர்­தலை நடத்­து­வ­தற்­கேற்ப புதிய உறுப்­பி­னர்­களை நேர்­மை­யான முறை­யில், உண்­மை­யான எண்­ணிக்­கை­யில் சேர்க்க வேண்­டும் 
என்­றும் தலை­வர் தனது உரை­யில் தெரி­வித்­தார். உட்­கட்சி ஜன­நா­ய­கத்­தில் இந்­தி­யா­வுக்கே முன்­னோ­டி­யா­கத் திக­ழும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய 
தலை­வ­ரின் அறி­விப்­பும், அதற்­கேற்ற தீர்­மா­னங்­க­ளும் தேசிய அள­வில் கவ­னம் பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொண்­டர்­கள் மனது–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தின் உறுப்­பி­னர் என்­ப­தற்கு ஆதா­ர­மான உறுப்­பி­னர் அட்­டை­யைப் பெறு­வதே வாழ்­நாள் இலட்­சி­யம் என நினைக்­கும் கழ­கத் தொண்­டர்­க­ளுக்கு, தலை­வ­ரின் இந்த அறி­விப்பு பெரும் உற்­சா­கத்­தை­யும் ஊக்­கத்­தை­யும் அளித்­துள்­ளது. நியா­ய­மான உறுப்­பி­னர்­க­ளு­டன், நேர்­மை­யான உள்­கட்­சித் தேர்­த­லைக் கழ­கத் தலை­வர் அவர்­கள் முன்­னெ­டுத்­தி­ருப்­பது தொண்­டர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யைப் பெருக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தலை­வர் முடிவு–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“எதிர்க்­கட்­சி­க­ளைப் பார்த்தா மலர்ற முகம் , நம்ம கட்­சிக்­கா­ரங்­க­ளைப் பார்த்தா மலர்­றது இல்லை. எதிர்க்­கட்­சிக்­கா­ரர்­க­ளைப் பார்த்தா வணங்­குற கை, நம்ம கட்­சிக்­கா­ரங்­க­ளைப் பார்த்தா வணங்­கு­ற­தில்லை” என்று செயற்­கு­ழு­வில் கழ­கத் தலை­வர் பேசி­ய­போது, அரங்­கம் முழு­வ­தும் எழுந்த கைத்­தட்­டல் அடங்க சில நிமி­டங்­க­ளா­யின. தலை­வ­ரின் சொற்­க­ளுக்கு வலிமை சேர்க்­கும் வகை­யில், செயற்­கு­ழு­வில் பேசு­கின்ற வாய்ப்­புப் பெற்­ற­வர்­க­ளும் இதையே வலி­யு­றுத்­தி­னர். குறிப்­பாக சட்­ட­மன்ற நிகழ்­வு­களை சுட்­டிக்­காட்­டிப் பேசி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொண்­டர்­கள் மனது–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தொண்­டர்­க­ளைப் போலவே ஒவ்­வொரு நாளும் சட்­ட­மன்ற நிகழ்­வு­களை நேர­லை­யில் முழு­மை­யா­கக் கவ­னிக்­கி­றார் கழ­கத் தலை­வர். அத­னால் தலை­மைச் செயற்­கு­ழு­வில் அவை தொடர்­பான கருத்­து­க­ளைத் தலை­வர் முழு­மை­யாக அனு­ம­தித்­தார். கழ­கப் பொதுச்­செ­ய­லா­ளர் துரை­மு­ரு­கன் அவர்­கள் தனது நிறை­வு­ரை­யில், தொண்­டர்­க­ளின் மன­தைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் சட்­ட­மன்ற நிகழ்­வு­கள் குறித்து தனது அனு­ப­வங்­களை உரை­யாக வழங்­கி­னார். கழ­கத்­தின் அனைத்­துத் தரப்­பி­ன­ரி­ட­மும் இது பெரும் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. முன்­னாள் முதல்­வ­ரும்–­க­ழக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஓ.பி.எஸ். அவர்­கள் சொன்­னது போல, கழ­கத் தலை­வ­ரின் தலை­மைச் செயற்­குழு உரை­யைக் கிளைக் கழ­கங்­கள் வரை தொடர்ந்து ஒளி­ப­ரப்ப வேண்­டும் 
என்­பதே தொண்­டர்­க­ளின் மன­நிலை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>