<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,957,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 25 2026 03:40:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260825T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="25082026-CHN-10" position.sequence="10" ex-ref="25082026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">25.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">நிதி அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">த.வெ.க. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே என் மீது வீண் அவதூறு! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup833370_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Anbil_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Marudhu24.8_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="maruthuBW_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக. 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நிதி அமைச்­சர் மரிய வில்­சனை லஞ்ச ஒழிப்­புத் துறை விசா­ரிக்க வேண்­டும் என்­றும் த.வெ.க. அரசு மீதான ஊழல் குற்­றச்­சாட்­டு­களை திசை­தி­ருப்­பவே என் மீது வீண் அவ­தூறு என்­றும் முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டி­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது குறித்து முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் ஆட்­சி­யால் தமிழ்­நாடு 100 % எழுத்­த­றிவு பெற்ற மாநி­ல­மாக மாற உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு பள்­ளிக் கல்­வித் துறை சார்ந்த மானி­யக் கோரிக்கை விவா­தத்தை காலை­யி­லி­ருந்து நாங்­கள் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். அதில் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வித­மாக, “இந்­தத் திட்­டத்தை நாங்­கள் கொண்டு வந்­தோம்; நீங்­கள் கொண்டு வந்­தீர்­கள்” என்று பேசிக்­கொண்­டி­ருப்­பார்­கள். ஆனால், இந்த நவோ­தயா பள்­ளி­கள் நமக்­குத் தேவையா, தேவை­யில்­லையா என்­பது தொடர்­பாக, தற்­போது ஆளு­கின்ற அர­சாங்­கமே நீதி­மன்­றத்­தில் ஓர் அபி­ட­விட் தாக்­கல் செய்­தி­ருக்­கி­றது. அந்த அபி­ட­விட்­டில் நம்­மு­டைய பள்­ளிக் கல்­வித் துறை எவ்­வாறு செயல்­பட்டு வரு­கி­றது, தமிழ்­நாட்­டிற்கு எவ்­வாறு பெருமை தேடித்­தந்­துள்­ளது என்­ப­தை­யெல்­லாம் தெளி­வா­கப் பட்­டி­ய­லிட்­டி­ருக்­கி­றார்­கள். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, திரா­விட மாடல் அர­சாங்­கத்­தின் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் ஏறத்­தாழ 1,922 மாண­வச் செல்­வங்­கள், பிரீ­மி­யம் கல்வி நிறு­வ­னங்­க­ளில்–­ஐ­ஐடி, என்­ஐடி, ஐஐ­எம், நிஃப்ட், நேஷ­னல் லா யுனி­வர்­சிட்டி போன்ற நிறு­வ­னங்­க­ளில்–­சே­ரு­வ­தற்­கான வாய்ப்­பைப் பெற்­றி­ருக்­கி­றார்­கள். அந்­தக் குழந்­தை­க­ளுக்கு JEE, CLAT போன்ற தேர்­வு­கள் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, அதற்­கான கல்வி முறை­யை­யும் நாங்­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே நேரத்­தில், கல்­வித் துறைக்கு சமக்ர சிக்ஷா திட்­டத்­தின் மூலம் வர வேண்­டிய நிதி இன்­னும் முழு­மை­யாக வர­வில்லை. அந்த நிதியை நீங்­கள் வழங்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும் வகை­யில், நம்­மு­டைய சாத­னை­கள் அனைத்­தை­யும் அந்த அபி­ட­விட்­டில் மிக­வும் அழ­கா­கப் பட்­டி­ய­லிட்டு, உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் SLP ஒன்­றை­யும் தாக்­கல் செய்­தி­ருக்­கி­றார்­கள். அதுவே நமக்­கான மிகப்­பெ­ரிய ஓர் அத்­தாட்­சி­யாக நான் பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒரு மாண­வ­ருக்கு ரூ.35 இலட்­சம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த இரண்டு, மூன்று நாட்­க­ளாக நான் குறிப்­பா­கக் கவ­னித்த ஒரு விஷ­யம் இருக்­கி­றது. “அண்­ணல் அம்­பேத்­கர் அய­லக உயர்­கல்வி உத­வித்­திட்­டம்” என்ற திட்­டத்­தின் மூலம், கடந்த காலத்­தில் மட்­டும் ஏறத்­தாழ 385 மாண­வச் செல்­வங்­கள் வெளி­நா­டு­க­ளில் – ம­லே­சியா, லண்­டன் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளில் –­உ­யர்­கல்வி மற்­றும் ஆராய்ச்­சியை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.ஒரு மாண­வச் செல்­வ­ருக்கு ஏறத்­தாழ ரூ.35 லட்­சம் மதிப்­பில் இந்த அர­சாங்­கம் முத­லீடு செய்­கி­றது. இதை வெறும் செலவு என்று கூட சொல்­லக்­கூ­டாது; இது ஒரு முத­லீடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தத் திட்­டத்­தின் மூலம் பய­ன­டைந்து வரும் மாண­வர்­க­ளில் ஒரு­வர்­தான் பார­தி­தா­சன். நீங்­கள் அனை­வ­ரும் சமூக வலைத்­த­ளங்­க­ளில் அவ­ரைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். அவர் மலே­சி­யா­வில் ஆராய்ச்­சிப் படிப்பை மேற்­கொண்டு வரு­கி­றார். அவ­ருக்கு வர வேண்­டிய நிதி சரி­யாக வர­வில்லை என்று அவர் கூறி­யி­ருக்­கி­றார். கடந்த ஆட்­சிக் காலத்­தில்­கூட எங்­க­ளுக்கு முறை­யாக நிதி கிடைத்­தது; தற்­போது இன்­னும் வர­வில்லை. எனவே, அதை விரை­வாக விடு­விக்க வேண்­டும் என்று நம்­மு­டைய அமைச்­சர் அண்­ணன் வன்­னி­ய­ர­சி­டம் அந்த மாண­வர் கோரிக்கை வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­ச­ரும், “நான் சொல்­கி­றேன்; நீங்­கள் தொடர்­பு­கொள்­ளுங்­கள்” என்று கூறி­யி­ருக்­கி­றார். அதற்கு அந்த மாண­வர், “எந்­தெந்த தேதி­க­ளில் உங்­க­ளுக்கு மின்­னஞ்­சல் அனுப்­பி­யி­ருக்­கி­றேன், எந்­தெந்த தேதி­க­ளில் உங்­க­ளைத் தொடர்­பு­கொண்­டி­ருக்­கி­றேன், எந்­தெந்த நேரங்­க­ளில் அம்­பேத்­கர் சர்க்­கில் அமைப்பை சேர்ந்த நண்­பர்­கள் உங்­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றார்­கள்” என்று அனைத்­தை­யும் பட்­டி­ய­லிட்­டுக் காட்­டு­கி­றார். இன்­றைக்கு அதைப் பார்க்­கும்­போது, மீண்­டும் அதே பிரச்­சினை தொடர்­பாக அமைச்­சர், “நாங்­கள் விளக்­கம் கேட்­டி­ருக்­கி­றோம்; இன்­னும் எங்­க­ளுக்கு சரி­யான பதில் வர­வில்லை. அது வந்­தால்­தானே பணத்தை வழங்க முடி­யும்” என்று கூறி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்கு மேலாக, இங்­கி­லாந்­தைப் பொறுத்­த­வரை சில மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. அங்கு, “ஒரு மாநில அர­சின் கல்வி உத­வித்­தொ­கையை எங்­க­ளால் ஏற்க முடி­யாது; இது நாடு–­நாடு சார்ந்த விவ­கா­ரம். இந்­திய அர­சின் ஒப்­பு­தல் தேவை” என்று கூறு­கி­றார்­கள். எனவே, இதற்­காக ஏதே­னும் முயற்­சி­களை இந்த அரசு எடுத்­தி­ருக்­கி­றதா என்­பதை நான் தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் டெல்லி செல்­லும்­போ­தும், இங்கே ஒன்­றிய அர­சின் உய­ர­தி­கா­ரி­கள் அல்­லது அமைச்­சர்­கள் வரும்­போ­தும், அவர்­க­ளி­டம் இந்­தக் கோரிக்­கையை வைத்­தி­ருக்­கி­றார்­களா என்­ப­தை­யும் தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தொடர்ந்து நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சாங்­க­மும், நம்­மு­டைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் பல்­வேறு சாத­னை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றார்­கள். அந்­தச் சாத­னை­களை இன்று நம்­மு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பட்­டி­ய­லிட்டு பேசி­யது உள்­ள­ப­டியே எங்­க­ளுக்கு பெரு­மை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவை ஏதோ திமு­க­வைச் சேர்ந்த குழந்­தை­க­ளுக்­காக மட்­டும் கொண்­டு­வ­ரப்­பட்ட திட்­டங்­கள் கிடை­யாது. இதில் பயன்­பெற்­ற­வர்­கள் அனைத்து இயக்­கங்­க­ளை­யும் சார்ந்­த­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். ஏன், இதே சட்­ட­மன்­றத்­தில் அமர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய புதி­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பிள்­ளை­கள்­கூட இந்­தத் திட்­டங்­க­ளில் பயன்­பெற்­றி­ருக்­க­லாம். அந்த அள­விற்கு அனை­வ­ருக்­கும் பொது­வான திட்­டங்­க­ளா­கவே இவை செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பள்­ளிக் கல்­விக்­கான நிதி ஒதுக்­கீடு குறைவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, பள்­ளிக் கல்­வித் துறைக்­கான இன்­றைய நிதி ஒதுக்­கீடு, கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் சற்­றுக் குறை­வா­கவே இருக்­கி­றது. அதை இன்­னும் அதி­க­ரிக்க வேண்­டும். ஏனென்­றால் பள்­ளிக் கல்­வித் துறை என்­பது சாதா­ர­ண­மான துறை கிடை­யாது. பல்­வேறு துறை­கள் இருக்­கின்­றன என்று நான் பல­முறை பேசி­யி­ருக்­கி­றேன். ஆனால் பள்­ளிக் கல்­வித் துறை­யு­டன் தமிழ் வளர்ச்­சித் துறை­யும் இணைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது; DIPR–ம் அத­னு­டன் தொடர்­பு­டைய பொறுப்­பு­களை வகிக்­கி­றது. இது மிகப்­பெ­ரிய பணிச்­சுமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த அமைச்­சர் இதை­யெல்­லாம் எவ்­வாறு கையா­ளு­கி­றார் என்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை. ஆனால் பள்­ளிக் கல்­வித் துறைக்கு தனி­யாக முழு­மை­யான கவ­னம் செலுத்­தக்­கூ­டிய ஒரு அமைச்­சர் இருந்­தால்­தான், அதில் இருக்­கக்­கூ­டிய சாதக, பாதக அம்­சங்­க­ளைக் கண்­ட­றிந்து, அவற்­றைச் சீர்­ப­டுத்த முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­தில் சேலத்­தில் ஒரு பள்­ளி­யில் வட­மா­நி­லத்­தைச் சேர்ந்த ஆசி­ரி­யர் ஒரு­வர் பணி­ய­மர்த்­தப்­பட்ட விவ­கா­ரம் மிகப்­பெ­ரிய பிரச்­சி­னை­யா­கி­யுள்­ளது. நான் தொடர்ந்து ஒரு விஷ­யத்­தைச் சொல்லி வரு­கி­றேன். இந்த நூறு நாட்­க­ளில் எல்­லா­வற்­றை­யும் உட­ன­டி­யாக மாற்­றி­விட முடி­யுமா என்று கேட்­டால், சில நேரங்­க­ளில் “நேரம் இல்லை” என்று சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இந்த நூறு நாட்­க­ளுக்கு முன்­பாக, கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்­சி­யில் நாங்­கள் ஒரு ப்ளூபி­ரிண்ட் போட்­டுக் கொடுத்­தி­ருக்­கி­றோம். எங்­கெங்கு பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டன, அவற்றை எவ்­வாறு தீர்க்க வேண்­டும், அதற்­கேற்ப எவ்­வாறு திட்­டங்­க­ளைத் தீட்ட வேண்­டும், குறிப்­பாக வெளி­யாட்­கள் உள்ளே வராத வகை­யில் எவ்­வாறு அர­சாணை பிறப்­பிக்க வேண்­டும் என்­ப­து­வரை, அன்­றைய நம்­மு­டைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின்­படி செய்து வைத்­தி­ருக்­கி­றோம். “நூறு நாட்­கள்­தானே ஆகி­றது” என்ற கார­ணத்தை நீங்­கள் கூற முடி­யாது. கடந்த ஐந்து ஆண்டு காலத்­தில் நீங்­களே, “நல்ல நல்ல திட்­டங்­களை கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்; அவர்­கள் கொண்டு வந்த திட்­டங்­கள் எது­வும் நிறுத்­தப்­ப­டா­மல் தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­ப­டும்” என்று கூறி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­டி­யென்­றால், அந்­தத் திட்­டங்­க­ளைச் சரி­யாக செயல்­ப­டுத்­து­வ­தற்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­க­ளை­யும் நீங்­கள் தொடர்ந்து மேற்­கொள்ள வேண்­டும். சில நேரங்­க­ளில் எங்­க­ளுக்­கும் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­ட­போது, அதை எவ்­வாறு எதிர்­கொண்­டோம், அதற்­கேற்ப எவ்­வாறு அர­சா­ணை­க­ளைப் பிறப்­பித்து பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­தோம் என்­ப­தை­யும் நாங்­கள் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாடல் பள்­ளியை கொண்டு
 வந்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­க­ளு­டைய தலை­வர் கொண்டு வந்த திட்­டங்­களை நீங்­கள் தொடர்ந்து முறை­யா­கப் பின்­பற்­றி­னாலே போதும். அதன் மூலம் நம்­மு­டைய பிள்­ளை­கள் இன்­னும் பல சாத­னை­களை நிச்­ச­ய­மா­கப் படைப்­பார்­கள். இப்­போது நம்­மு­டைய திரு­வெ­றும்­பூர் தொகு­தி­யில், துவாக்­கு­டி­யில் ஒரு மாடல் பள்­ளியை கொண்டு வந்­தி­ருக்­கி­றோம். அந்த மாடல் பள்­ளி­யில் 74 குழந்­தை­கள் மருத்­து­வப் படிப்­பில் சேரு­வ­தற்­குத் திட்­ட­மிட்டு படித்து வரு­கி­றார்­கள். இன்று வந்­துள்ள செய்­தி­யை­யும் சேர்த்து, 37 குழந்­தை­க­ளுக்கு மருத்­து­வப் படிப்­பில் இடம் கிடைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் சொல்­வது, இது ஒரு மாவட்­டத்­தில் மட்­டும் நடக்­கக்­கூ­டிய விஷ­ய­மாக இருக்­கக்­கூ­டாது. எல்லா மாவட்­டங்­க­ளி­லும், ஒன்­றிய அள­வி­லும் இது­போன்ற பள்­ளி­களை உரு­வாக்க வேண்­டும். அன்­றைக்கே இது­போன்ற பள்­ளி­களை ஒவ்­வொரு சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் பார்த்து, ஆய்வு செய்து, ஒவ்­வொரு விஷ­யத்­தை­யும் கவ­ன­மா­கச் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, இது­போன்ற கல்வி நிறு­வ­னங்­கள் மற்­றும் திட்­டங்­க­ளுக்கு இந்த அர­சாங்­கம் இன்­னும் அதி­க­மான கவ­னம் செலுத்த வேண்­டும். இன்­றைக்கு எவ்­வ­ளவு முத­லீ­டு­கள் வந்­தா­லும், எவ்­வ­ளவு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­னோம் என்று சொன்­னா­லும், பள்­ளிக் கல்­வித் துறை­யில் தொடக்­கக் கல்­வி­யி­லி­ருந்து பன்­னி­ரண்­டாம் வகுப்பு வரை­யி­லான அடித்­த­ளம் சரி­யாக இருந்­தால்­தான் அந்­தக் குழந்­தை­கள் அடுத்­த­தா­கக் கல்­லூ­ரிக்­குச் செல்ல முடி­யும்; அதன் மூலம் நல்ல வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் பெற முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று நிதி­ய­மைச்­சர் உயர்­கல்வி சம்­பந்­த­மாக அவர் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போது, அதற்­குச் சம்­பந்­தமே இல்­லா­மல் திடீ­ரென்று இடை­யில், “இதற்கு நானே சாட்சி; இந்த எவி­டன்ஸ், அந்த எவி­டன்ஸ்” என்று கூறு­கி­றார். அவர் ஒன்­றும் பொதுக்­கூட்­டத்­தில் பேச­வில்லை. அவர் நின்று பேசிய இடம் சட்­ட­மன்­றம். சட்­ட­மன்­றத்­தில் யார் நின்று என்ன வார்த்தை பேசி­னா­லும், அதற்கு அவர்­கள் பொறுப்­பேற்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ரூ.50 கோடி மான­நஷ்ட வழக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­திற்கு வெளியே பேசு­வ­தற்­கும், சட்­ட­மன்­றத்­தில் நின்று பேசு­வ­தற்­கும் சட்­ட­ரீ­தி­யாக வேறு­பா­டு­கள் இருக்­கின்­றன. எனவே, “கொடுத்­தேன், கொடுத்­தேன்” என்று ஆதா­ர­மில்­லா­மல் கூறு­வது மிகப்­பெ­ரிய தவறு. குறிப்­பாக, இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு ஒரு­வ­ரால் என்­மீது அவ­தூ­றான குற்­றச்­சாட்டு வைக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யில் ஒரு அலு­வ­ல­கத்தை வைத்து இவர்­கள் இதை­யெல்­லாம் செய்­தி­ருக்­கி­றார்­கள் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. அதற்­காக நான் அவர்­மீது ரூ.50 கோடி மான­நஷ்ட வழக்கு தொடர்ந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த டிசம்­பர் மாதம், முறை­யா­கப் பள்­ளி­கள் நடத்­தப்­ப­ட­வில்லை என்­பது தொடர்­பாக உள்­ளூர் கல்வி அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­த­போது, உட­ன­டி­யாக அந்த நபர்­மீது வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும் என்று நான் வலி­யு­றுத்­தி­னேன். “அவ­ரு­டைய பின்­னணி இப்­ப­டிப்­பட்­டது” என்று அதி­கா­ரி­கள் கூறி­ய­போ­தும், “அவர் யாராக இருந்­தா­லும் பர­வா­யில்லை; முறை­யான அனு­மதி இல்­லா­மல் பள்ளி நடத்­தப்­பட்­டி­ருந்­தால் உட­ன­டி­யாக வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும்” என்று கூறி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அவ­தூ­றான குற்­றச்­சாட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் அனு­மதி இல்­லா­மல் பள்ளி நடத்­தி­யது மட்­டு­மல்­லா­மல், சில இடங்­க­ளில் போலி­யா­கக் கையெ­ழுத்­திட்­டி­ருப்­ப­தும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக, கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் பள்ளி தொடங்­கு­வ­தா­கக் கையெ­ழுத்­திட்டு, பல்­லா­வ­ரத்­தில் பள்­ளியை நடத்தி வந்­த­தா­க­வும் தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. இது­தொ­டர்­பாக அவ­ருக்கு சம்­பந்­தப்­பட்ட நோட்­டீஸ் அனுப்­பப்­பட்டு, விசா­ர­ணை­யும் நடை­பெற்று வரு­கி­றது. இதன் அடிப்­ப­டை­யில்­தான் அவர் பேசி­யி­ருக்­கி­றாரா என்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை. ஆனால், ஒரு அமைச்­ச­ரின் நம்­ப­கத்­தன்­மையை பாதிக்­கும் வகை­யில் இத்­த­கைய அவ­தூ­றான குற்­றச்­சாட்­டு­களை வைப்­பது மிக­வும் தவ­றா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் கூறிய குற்­றச்­சாட்­டுக்கு உரிய ஆதா­ரங்­களை வழங்க வேண்­டும். ஒரு அமைச்­ச­ராக இருந்து “நானே சாட்சி” என்று கூறு­வது மிக­வும் தவ­றா­னது. எனவே, இது­கு­றித்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­பதே என்­னு­டைய கோரிக்கை. அவர் “நானே சாட்சி” என்று கூறி­யி­ருப்­ப­தால், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் அவரை உட­ன­டி­யாக அழைத்து விசா­ரிக்க வேண்­டும் என்­ப­து­தான் என்­னு­டைய முதல் கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சித் தலை­வர் சொல்­வ­து­போல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விவா­தத்தை திசை திருப்­பு­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் பேசும்­போது ஒவ்­வொன்­றா­கப் பேசிக்­கொண்டே இருக்­கி­றார். சட்­ட­மன்­றத்­தில் விவா­தம் நடை­பெ­றும்­போது, எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அடிக்­கடி சொல்­வ­து­போல, விவா­தத்தை எவ்­வாறு திசை­தி­ருப்­பு­வது என்­ப­தி­லேயே அவர்­கள் கவ­னம் செலுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உதா­ர­ண­மாக, ஆளுங்­கட்­சி­யைச் சார்ந்த ஒரு வழக்­க­றி­ஞர், ரூ.100 கோடி வரை முறை­கேடு நடந்­தி­ருக்­கி­றது என்று குற்­றச்­சாட்டு கூறு­கி­றார். அந்­தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்த வழக்­க­றி­ஞர் பின்­னர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டி­ ருக்­கி­றார். அதே­போல், ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மீது பாலி­யல் குற்­றச்­சாட்டு வரு­கி­றது. ஒரு ஒப்­பந்­த­தா­ரர், சம்­பந்­தப்­பட்ட அமைச்­சரை தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு மிரட்­டு­கி­றார். மிரட்­டி­ய­வர் அப்­ப­டியே இருக்­கி­றார்; ஆனால் யார் மிரட்­டப்­பட்ட்­வர் , அவர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­கி­றார். இவ்­வாறு ஒவ்­வொன்­றாக நிகழ்­வு­கள் நடை­பெ­றும்­போது, கடந்த இரண்டு நாட்­க­ளாக அவர்­க­ளு­டைய ஆளுங்­கட்­சிக் கூட்­ட­ணிக்­குள் என்­னென்னநடக்­கி­றது என்­பதை நீங்­களே பார்த்­தி­ருக்க முடி­யும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாண­வர்­கள் மீது காவல்­துறை அரா­ஜ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் தேர்­வுக்கு எதி­ரா­கப் போரா­டிய மாண­வச் செல்­வங்­கள் மீது எந்த அள­விற்கு காவல்­து­றை­யின் மூலம் அடக்­கு­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டது என்­ப­தை­யும் நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள். இட­து­சாரி இயக்­கங்­கள் போன்ற அமைப்­பு­கள் போரா­டா­மல் இருப்­ப­தற்­காக ஒரு சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. அத­னால்­தான் இட­து­சாரி மற்­றும் பொது­வு­டைமை இயக்­கங்­க­ளைச் சேர்ந்த தலை­வர்­கள், “இந்த அர­சாங்­கத்தை நடத்­து­வது யார்? எங்­க­ளு­டைய தய­வில்­தான் இந்த அர­சாங்­கம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது” என்று கேள்வி எழுப்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“இந்த அர­சாங்­கத்தை தலை­மைச் செய­லா­ளர் நடத்­து­கி­றாரா அல்­லது அர­சாங்­கமே நடத்­து­கி­றதா என்­பதுஎங்­க­ளுக்­குத் தெரிய வேண்­டும்” என்­றும் அவர்­கள் கேட்­கி­றார்­கள். அடுத்­த­தாக, “எங்­க­ளு­டைய தலை­வர்­தான் பிர­த­மர்” என்று அவர்­கள் பேசு­கி­றார்­கள். அதே கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய காங்­கி­ரஸ் பேரி­யக்­கத்­தைச் சேர்ந்த மாநி­லத் தலை­வர் அண்­ணன் மாணிக்­கம் தாகூர் அவர்­கள், “இது ரசி­கர் மன்ற மனப்­பான்­மை­யில் பேசு­வது போல் இருக்­கி­றது” என்று கூறி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அவர்­கள் கூட்­ட­ணிக்­குள் சல­ச­லப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அவர்­க­ளு­டைய கூட்­ட­ணிக்­குள் ஒரு சல­ச­லப்பு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும்­போது, அந்த விவா­தத்தை எவ்­வாறு திசை­தி­ருப்­ப­லாம் என்­ப­தைத்­தான் அவர்­கள் பார்க்­கி­றார்­கள். அவர்­கள் நினைத்த படி இப்­போது என்­னி­டம் அந்த கேள்வி எழுப்­பப்­ப­டு­கி­றது. இப்­படி ஊட­கத்­தில் எது­வர வேண்­டும் என அந்­தத் தளத்தை அவர்­களே உரு­வாக்­கித் தரு­கி­றார்­கள். நாமும் அதை மறந்து, அதையே கையில் எடுத்­துக்­கொண்டு தலைப்­பிட்டு விவா­தம் நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு முறை­யும் பள்­ளிக் கல்­வித் துறை சார்ந்த மானி­யக் கோரிக்­கையை நாங்­கள் முன்­வைக்­கும் போது, அடுத்­த­தாக என்ன மாதி­ரி­யான திட்­டங்­களை கொண்டு வரப்­போ­கி­றோம், நம்­மு­டைய குழந்­தை­களை எவ்­வாறு முன்­னேற்­றப் போகி­றோம் என்­ப­தை­யெல்­லாம் விளக்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு அவர்­கள் STEM குறித்து பேசி­னார்­கள். அடுத்­த­தாக STEM–ல் STEAM வந்­தி­ருக்­கி­றது; அதில் கலை சார்ந்த கல்­வி­யும் இணைக்­கப்­ப­டு­கி­றது. இன்று பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் கூறி­ய­து­போல, கணக்­குப் பாடத்­தைக்­கூட கதை வடி­வில் குழந்­தை­க­ளுக்­குக் கற்­பிக்­கப் போகி­றோம். இவ்­வாறு பல்­வேறு புதிய திட்­டங்­களை கொண்டு வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநி­லக் கல்­விக் கொள்­கையை கொண்டு வந்து, அதில் எதிர்­கா­லத்­திற்­கான ரோட்­மேப்­பை­யும் கொடுக்க இருக்­கி­றோம். ஆனால், இவர்­கள் இப்­போது கூறு­கின்ற அடுத்­த­டுத்த திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பே இல்லை என்­ப­து­போல் பேசு­வது சரி­யல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்­வொன்­றை­யும் பார்த்­துப் பார்த்து திட்­ட­மிட்டு செயல்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கும்­போது, அதற்­குச் சம்­பந்­தமே இல்­லா­மல் ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைப்­பது தேவை­யற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு கல்­லூ­ரியை நடத்­தக்­கூ­டிய ஒரு­வர், கேபி­டே­ஷன் கட்­ட­ணம் என்­றால் என்ன என்­பதை அறிந்­தி­ருக்க வேண்­டும். அவரே நடத்­தக்­கூ­டிய கல்­லூ­ரி­யில் ஏழை மாண­வர்­க­ளி­டம் கேபி­டே­ஷன் கட்­ட­ணம் வசூ­லித்து கல்­லூரி நடத்­து­ப­வர், எங்­கள் மீது இது­போன்ற குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­து­தான் எனக்கு வேத­னை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்­கொள்­வ­தற்­கும் நாங்­கள் தயார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் எதைச் சொன்­னா­லும்; அதை எதிர்த்து நிற்­ப­தற்­கும், எதிர்­கொள்­வ­தற்­கும் நாங்­கள் தயா­ராக இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நம்­மு­டைய தமிழ்­நாடு முன்­னாள் முத­ல­மைச்­சர் எங்­க­ளின் தலை­வர் அவர்­கள் தன்­னு­டைய இரு கண்­க­ளா­கப் பார்த்த இரண்டு துறை­கள் என்­றால், ஒன்று பள்­ளிக் கல்­வித் துறை; மற்­றொன்று மருத்­து­வத் துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் கொண்டு வந்த திட்­டங்­க­ளைப் பின்­பற்­றக்­கூ­டிய அள­விற்கு, ஒன்­றிய அரசே நம்­மைப் பாராட்­டும் வகை­யில் நம்­மு­டைய செயல்­பா­டு­கள் இருந்­தி­ருக்­கின்­றன. நான் ஏற்­க­னவே பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றேன். சமக்ர சிக்ஷா திட்­டத்­தில் 20 குறிக்­கோள்­கள் இருக்­கின்­றன. அந்த 20 குறிக்­கோள்­க­ளில் 19 குறிக்­கோள்­க­ளில் தமிழ்­நாடு முத­லி­டத்­தில் இருக்­கி­றது. 20–க்கு 20 என்ற அள­வில் கேரளா இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் எழு­திக்­கொள்­ளுங்­கள். இன்­னும் ஆறு முதல் பன்­னி­ரண்டு மாதங்­க­ளுக்­குள் 100 சத­வீத எழுத்­த­றிவு பெற்ற மாநி­ல­மாக தமிழ்­நாடு மாறப்­போ­கி­றது. நம்­மு­டைய அர­சாங்­கம் தொடர்ந்து இருந்­தி­ருந்­தால், அதற்­கான சான்­றி­தழை நவம்­ப­ரி­லேயே பெற்­றி­ருப்­போம். தற்­போது அது ஜன­வரி அல்­லது பிப்­ர­வ­ரி­யில் கிடைக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">100 சத­வி­கி­தம் கல்வி அறிவு பெற்ற 
மாநி­ல­மாக மாறும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­படி நாம் கேர­ளாவை 100 சத­வீத எழுத்­த­றிவு பெற்ற மாநி­லம் என்று சொல்­கி­றோமோ, அதே­போல் 100 சத­வீத எழுத்­த­றிவு பெற்ற மாநி­ல­மாக தமிழ்­நா­டும் மாறும். அதற்­குக் கார­ணம் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளு­டைய ஆட்­சி­யா­கத்­தான் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய அமைச்­சர் மரியா வில்­சன் அவர்­கள் பேசிய அந்­தப் பேச்சு எப்­படி அனு­ம­திக்­கப்­பட்­டது என்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை. அவை முன்­ன­வர் அது தொடர்­பாக ஏன் எது­வும் பேச­வில்லை என்­ப­தும் தெரி­ய­வில்லை. நம்­மு­டைய சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் அதை எவ்­வாறு அனு­ம­தித்­தார் என்­ப­தும் தெரி­ய­வில்லை. அது ஏன் இன்­னும் அவைக் குறிப்­பி­லி­ருந்து நீக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தும் தெரி­ய­வில்லை. எனவே, அவர் உரிய விளக்­கத்­தைக் கேட்டு, உண்­மையை மக்­க­ளி­டம் எடுத்­துச் செல்ல வேண்­டிய மிகப்­பெ­ரிய பொறுப்பு சட்­டப்­பே­ர­வைத் தலை­வ­ருக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>