<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 24 2026 16:13:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260825T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25082026-MDU-05" position.sequence="05" ex-ref="25082026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">சட்டப் பேரவையில் தனி மனிதத் தாக்குதலைத் தொடங்கி வைத்தவர் இன்றைய முதலமைச்சர் என்பது வருத்தத்திற்குரியது!   
தமிழ்நாடு சட்டசபைக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது! ஆளுங்கட்சியினர்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="38"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பினால், எதிர்க்கட்சிகள் அனுமதிக்கக் கூடாது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">‘மின்னம்பலம்’ இணையதள தொலைக்காட்சிக்கு – மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் சிறப்புப் பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="thuklakramesh_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="thuklakramesh1_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்டப் பேரவையில் தனி மனித தாக்குதலை தொடங்கி வைத்தவர் இன்றைய முதலமைச்சர் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். சட்டசபைக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது. ஆளுங்கட்சியினர் மக்கள் பிரச்சினைக்கான விவாதங்களை திசை திருப்பினால், அதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்கக் கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், ‘மின்னம்பலம்’ இணைய தள தொலைக் 
காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மின்­னம்­ப­லம் இணைய தள தொலைக்­காட்­சிக்கு மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் துக்­ளக் ரமேஷ் அளித்த சிறப்பு பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">சட்­டப் பேரவை நிகழ்­வு ­க­ளைப் பார்த்து செய்­தி­க­ளைக் கொடுப்­ப­தில்  கடந்த 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக உங்­க­ளுக்கு  ஒரு அனு­ப­வம் இருக்­கி­றது. இப்­போது இருக்­கின்ற சட்­டப் பேரவை நிகழ்­வு­க­ளைப் பார்க்­கும் போது   உங்­க­ளுக்கு உடனே தோன்­று­வது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆரோக்­கி­ய­மான முறை­யில் விவா­தம் நடை­பெற வேண்­டும் என்று பெரும்­அ­ள­விற்கு  பேர­வைத் தலை­வர் ஜெ.சி.டி.பிர­பா­கர் அக்­கறை செலுத்­து­கி­றார்.  பெரு­ம­ள­வில் நடு­நி­லை­யோடு நடந்து கொள்­கி­றார் என்று கூடக் கூற­லாம்.  ஆனால் அவர்  விரும்­பு­கிற மாதிரி விவா­தங்­கள் ஆரோக்­கி­ய­மாக கொண்டு செல்­லப்­ப­டு­கின்­ற­னவா  என்று கேட்­டால்  பல நேரங்­க­ளில், அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை சீண்­டு­வ­தில் சில அமைச்­சர்­கள் ஆர்­வம் காட்­டு­கி­றார்­கள். அது ஒரு நல்ல போக்கு அல்ல. சபை­யில் அமைதி நில­வு­வ­தற்கு அது உத­வாது. பெரிய அமளி ஏற்­ப­டக் கூடிய, அல்­லது ஏற்­பட்­டி­ருக்­கக்கூடிய தரு­ணங்­க­ளில் ஏற்­ப­டா­த­தற்­குக்  கார­ணம்அந்த பேரவை  நிகழ்ச்­சி­கள் நேரலையில் போய்க்­கொண்டு இருப்­பது தான். அது ஓர­ளவு உறுப்­பி­னர்­க­ளின் மன­தில் அது  இருக்­கி­றது. அது ஓர­ளவு கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. சபா­நா­ய­கர் அமைச்­சர்­க­ளு­டைய   பேச்­சையே நீக்­கு­கி­றார். இவ்­வாறு அமைச்­சர்­கள் பேச்சை நீக்­கப்ப­டு­வது குறித்து  முத­ல­மைச்­சர் கவ­னிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் ஒன்­றி­ரண்டு தரு­ணங்­க­ளில் சபை­யில் இருந்­தி­ருக்­கி­றார். அவ்­வாறு நீக்­கம்  செய்­யப்­பட்­ட­போது சபை­யில் இருந்­தி­ருக்­கி­றார்.   ஆனால்   அவர் தெரிந்து கொள்ள வேண்­டும். அவர் அறை­யில் இருந்து  கேட்க முடி­யும், பல அமைச்­சர்­க­ளின் அறை­க­ளுக்கு இந்த  ஸ்பீக்­கர் வசதி இருப்­பதை பார்த்­தி­ருக்­கி­றேன். அங்கே இருந்தே சபை­யின் நட­வ­டிக்­கை­களை கேட்­டுக் கொண்டு இருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமைச்­சர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அறி­வுரை கூற வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அலு­வல் விஷ­ய­மாக மாடிக்கு போவார்­கள். கீழே பேர­வை­யில்  ஒரு அமளி நில­வு ­கி­றது,  இல்லை  தங்­கள் துறை சார்ந்த  விமர்­ச­னங்­கள் வைக்­கப்­ப­டு­கி­றது  என்­றால் உட­ன­டி­யாக  வேக­மாக கீழே இறங்கி வரு­வார்­கள்.  முத­ல­மைச்­சர், மற்ற அமைச்­சர்­கள் கூட இருக்­க­லாம்.   ஆனால், தன்­னு­டைய கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர்­கள், அது­வும் மூத்­த­வர்­கள்   ஒன்­றி­ரண்டு பேர் சபைக் குறிப்­பில் இருந்து  வார்த்­தை­கள் நீக்­கப்­ப­டு­கின்ற அள­விற்கு,  அந்த மாதி­ரி­யான சபைக்­குத் தேவை­யற்ற கருத்­து­களை  பரி­மா­று­கி­றார்­கள், பேசு­கி­றார்­கள்  என்­பது குறித்து  குறைந்­த­பட்­சம்  அறை­யில் அழைத்­தா­வது அறி­வு­ரை­கூற வேண்­டும்.அப்­படி அறி­வுரை கூறு­வ­தா­கத் தெரி­ய­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">என்னை புக­ழா­தீர்­கள் என்று சொல்­கி­றாரே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது கால­தா­ம­த­மா­கச் சொன்­னார். நான் என்ன சொல்­கி­­றேன். இந்த வார்த்­தை­கள் அமைச்­சர் நிர்­மல் குமார்,  கரூர் கம்­பெனி என்று சொல்­கி­றார். பிறகு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரைப் பார்த்து பாத்­ரூ­மில் இருந்­த­வர் என்று சொல்­கி­றார். இது­வெல்­லாம் என்ன மாதி­ரி­யான வார்த்­தை­கள் சபைக்­குத் தேவை­யான வார்த்­தை­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பொதுக்­கூட்­டத்­தில் பேசு­கின்ற மாதிரி  சட்­ட­ச­பை­யில் பேசிக் கொண்டு இருந்­தால் என்ன அர்த்­தம். அதற்­குத்­தான் இவர்­கள் வந்து இருக்­கின்­றார்­களா என்று எனக்­குப் புரி­ய­வில்லை. எனக்கு ஒரு வகை­யில்  எலக்சன் மூடில் இருந்து வெளியே வர­வில்­லையோ என்­று­தான் தோன்­று­கி­றது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வார்த்தை மோதலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொடங்­கி­ய­வர் முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­ச­ரில் தொடங்கி, நான்  சொல்­வ­தற்கு வருத்­தப்­ப­டு­கி­றேன். மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் தன்­னு­டைய   பத­விக்­கு­ரிய வகை­யில்  பேசா­மல், முன்­னாள் முத­ல­மைச் சரை வீண் வம்­புக்கு இழுத்து  சட்ட சபை­யில் அப்­பா­வைக் காணோம் என்று ஆரம்­பித்­தது வார்த்தை மோதல், வார்த்­தைப்­போர்!  தனி மனித தூற்­று­தல், தனி மனி­தத் தாக்­கு­தல்.  அதனை தொடங்கி வைத்­த­வர் இன்­றை­யத் முத­ல­மைச்­சர் என்­பதை நான் வருத்­தத்­தோடு பதிவு செய்தே ஆக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் சட்ட சபை­யில் போய் அப்­பா­வைக் காணோம்   என்­பது, பொதுக்­கூட்­டத்­தில் போய் நன்­றாக வைச்சு செய்து விடுங்­கள் என்­பது,  கொளத்­தூ­ரில் கொத்து பரோட்டா போட்­டார்­கள் என்­பது,  அப்­படி கைத்­தட்­டல் வாங்­கு­வது,  முத­ல­மைச்­சரே பேசு­கி­றார் என்­பது என்ன மாதி­ரி­யான வழி முறை காட்­டு­கி­றீர்­கள். உங்­க­ளுக்கு கீழே இருக்­கின்ற அமைச்­சர்­கள் என்ன நினைக்­கி­றார்­கள் என்­றால்  உங்­க­ளோடு போட்டி போட வேண்­டும் என்று   நினைக்­கி­றார்­கள். தி.மு.க.வை வம்­புக்கு இழுக்­கி­றார்­கள். அல்­லது தி.மு.க.வை விமர்­சித்து உங்­க­ளோடு போட்டி போட வேண்­டும்  என்று நினைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­ச­பைக்­கென்று ஒரு மாண்பு இருக்­கி­றது என்­பது தெரி­யுமா? தெரி­யாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் என்ன சொல்­கி­றேன்; சட்­ட­ச­பைக்­கென்று ஒரு மாண்பு இருக்­கி­றது என்­பதை உணர்ந்து முத­லில்  நடந்து கொள்ள வேண்­டி­யது ஆளுங்­கட்சி, ஆளுங்­கட்சி வீண் வம்­புக்­குப் போகு­மா­னால்  நாமும் மக்­க­ளால் நாம் கவ­னிக்­கப்­ப­டு­கி­றோம் என்­பதை  உணர்ந்து வார்த்­தை­களை பயன்­ப­டுத்த வேண்­டி­யது  எதிர்க்­கட்சி. ஆனால் துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக த.வெ.க.வுக்­கும் தி.மு.க.வுக்­கு ­மான  பகை என்­பது சட்­ட­ச­பைக்கு வெளியே இருந்­தது போய், சட்­ட­ச­பைக்கு உள்­ளே­யும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இதை கவ­லை­யோடு கவ­னித்து தடுக்­கிற முயற்­சியை ஜெ.சி.டி.பிர­பா­கர் ஈடு­ப­டு­கி­றார். இது­தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மிரட்­டிக் கொண்டு இருக்­கா­தீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நட­வ­டிக்கை எடுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆகவே முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு 
கூடு­தல் பொறுப்பு இருக்­கி­றது. நீங்­கள் கார­ணமே  இல்­லா­மல் சட்­ட­ச­பை­யில் என்ன செய்­கி­றீர்­கள். மூன்று பைல்­கள் டேபி­ளில் இருக்­கி­றதுஎன்று சொல்­கி­றார். தணிக்கை செய்­யப்­பட்டு எந்­தத் துறை­யில் என்ன முறை­கேடு என்­கிற மாதிரி, இது என்ன ஆகி­றது. நேர­லை­யில் போகி­றது. அன்­றைய தினம் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவை­யில் இல்லை.  அதா­வது அந்­தக் கூற்று சொல்­லப்­ப­டு­கின்ற சம­யத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சார்­பில் இன்­றைக்கு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கக் கூடிய  உத­ய­நிதி அவர்­கள் எழுந்து இப்­படி எல்­லாம் மிரட்­டிக் கொண்டு இருக்­கா­தீர்­கள், கையில் இருந்­தால் நட­வ­டிக்கை எடுங்­கள், சட்­டப்­பூர்­வ­மாக சந்­திப்­ப­தற்கு  நாங்­கள் தயா­ராக இருக்­கி­றோம் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனக்கு  அந்­தக் கேள்வி, இன்­றைக்கு உத­ய­நிதி எழுப்­பி­னார். நான் நேற்­றைக்கு கேட்­டேன், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் பேரவை மிரட்­டு­வ­தற்­கான இட­மில்லை. நீங்­கள் மிரட்­டு­வ­தற்­காக தலை­வ­ரல்ல. நீங்­கள் அர­ச­மைப்பு சட்­டப்­படி ஒரு முக்­கி­ய­மான பொறுப்­பில் இருக்­கி­றீர்­கள்.இந்த மாநி­லத்­தின் முத­ல­மைச்­சர், இந்த மாநி­லத்­தின் போலீஸ் உங்­கள் கையில் இருக்­கி­றது. நீங்­கள் சட்­டப்­பூர்­வ­மாக முறை­கேடு என்று தெரிந்­த­வு­டன்    அதனை ஊறப்­போட்­டுக் கொண்டு இருக்­கி­றீர்­கள். அப்­படி என்­றால் என்ன அர­சி­யல் செய்­கி­றீர்­களா? என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">அப்­ப­டித்­தான் அந்­தப் பைலை எப்போ நான் ஓபன் செய்­ய­ணுமோ அப்­போது ஓபன் செய்­வேன் என்­கி­றாரே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­தான் எனக்­குப் புரி­ய­வில்லை. இதே­மா­திரி இடைத் தேர்­தல் வரு­கி­றது அல்­லவா  என்­கி­றார். அதற்­கும் இதற்­கும் என்ன சம்­பந்­தம். எனக்­குப் புரி­ய­வில்லை. ஒரு வேளை அந்த ஊழல் சம்­பந்­தப்­பட்ட மாஜிக்­கள்  இரண்டு மூன்று  பேர் உங்­கள் கட்­சி­யில் வந்து இணைந்­தி­ருக்­கி­றார்­களே,  அவர்­க­ளு­டைய கோப்பு அதில் இருக்­கி­றதா என்ற சந்­தே­கம் எனக்கு வரு­கி­றது. யாரு­டைய  கோப்பு. அது தி.மு.க.வினு­டைய கோப்பா, அ.தி.மு.க.வினு­டைய கோப்பா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">கடந்த ஆட்­சி­யிலே செயல்­பட்ட  மூன்று துறை­க­ளு­டைய கோப்­பு­கள் என் மேஜை மீது இருக்­கி­றது.  அப்­படி என்­றால் தி.மு.க. பைல்ஸ் தான் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. பைல்ஸ் தான் அண்­ணா­மலை வெளி­யிட்­டார். நீங்­கள் வெளி­யி­டுங்க. வெளி­யி­டக் கூடாது, அண்­ணா­ம­லை­யா­வது  எதிர்க்­கட்­சி­யாக இருந்­தார், மத்­திய அமைப்­பில் கொடுத்து இருக்க வேண்­டி­ய­து­தானே அப்­படி என்ற கேள்­வி­யை­யெல்­லாம் எதிர்­கொண்­டார். ஒரு இரண்டு  விச­யங்­கள் ஒன்­றிய அர­சுக்கு போய் இருக்­கி­றது என்று அவர் சொன்­னார்.  ஆனால்  இவர் நட­வ­டிக்கை எடுக்­கக் கூடிய இடத்­தில் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எதற்­காக நான் சொல்­கி­றேன்  என்­றால், நீங்­கள் நட­வ­டிக்கை எடுத்­துட்­டுப் போங்க, சட்­ட­ச­பை­யில்  எதற்­குப் பேசு­கி­றீர்­கள். ஆகவே லாவ­ணிய அர­சி­யல் என்று இதைத்­தான் சொல்­வார்­கள்.  நீங்­கள் ஒன்று சொல்­வது, பதி­லுக்கு அவர்­கள்  ஒன்று சொல்­வது இது­தான் போயிட்டு இருக்­கி­றது. வெளி­யில் என்­ன­வென்­றா­லும் செய்து கொள்­ளுங்­கள். வெளியேஅவர்­அ­வர் வகிக்­கின்ற பத­விக்கு பொருத்­த­மாக பேசு­வ­தா­கவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கண்­ணி­ய­மற்­றுப் பேசு­வதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் தவிர்ப்­பது நல்­லது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது முத­ல­மைச்­ச­ரா­கட்­டும், அல்­லது எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கட்­டும் எனக்­குத் தெரிந்து மு.க.ஸ்டாலின் அவர்­கள் கண்­ணி­ய­மற்ற முறை­யில் பேசி­யது கிடை­யாது.  பொது­வெ­ளி­யில், குறிப்­பாக சட்­ட­மன்­றத்­தில்.  நீங்­கள் மறை­மு­க­மா­கப் பேசு­வது வேறு  நேரி­டை­யா­கப் புண்­ப­டுத்­து­கின்ற வகை­யில் ஒரு கட்­சியை சீண்­டு­கின்ற வகை­யில் பேசு­வது என்­பது  வேறு. அதனை  முத­ல­மைச்­சர் அவர்­கள் இனி­மே­லா­வது தவிர்ப்­பது. கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­சர்­கள் குறிப்­பாக ஆதவ் அர்­ஜூனா, நிர்­மல் குமார் போன்­ற­வர்­க­ளுக்கு  அறி­வு­ரை­யைக் கூற வேண்­டும் என்று  ஒரு ஊட­க­வி­ய­ளா­ல­ராக, சட்­ட­ச­பையை நீண்ட காலம்  பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­வன் என்­கிற முறை­யில் கண்­ணி­ய­மான விவா­தங்­களை எல்­லாம் பார்த்­த­வன்   என்­கிற முறை­யில் அவ­ரு­டைய கவ­னத்­திற்கு நான் கொண்டு வர விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இந்த இடத்­தில், அமைச்­சர்­கள் பேசு­வ­தை­யும், தி.மு.க.வை சீண்­டு ­வ­தை­யும் முதல்­வர் விஜய் அவர்­கள் ரசிக்­கி­றாரா, நீங்­கள் கட்­டுப் படுத்­த­வேண்­டும் என்று சொல்­கி­றீர்­கள்.  ஆனால் அவர் ரசிக்­கி­றாரா, இத­னையே ஊக்­கு­விக்­க­கிற மாதிரி இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக்ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ரசிக்­கி­றார். அவர் இருந்­தால் ரசிக்­கி­றார்.  அவர்­கள் பதி­லுக்கு கத்­து­கி­றார்­கள்.  பதி­லுக்கு எழுந்து ஒரு பதிலை சொல்­கி­றார்­கள்.இவர்­கள் சொல்­வ­தும் நீக்­கப்­ப­டு­கி­றது.  அவர்­கள் சொல்­வ­தும் நீக்­கப்­ப­டு­கி­றது.  இன்­றைக்குஎதிர்க்­கட்­சித் தலை­வர் எழுந்து கேட்­டார்.  நீங்­கள் அவைக் குறிப்­பில் இருந்து நீக்­கப்­ப­டு­கி­றது என்று சொல்­கி­றீர்­கள்,  அது 900 கோடி ரூபாய் விவ­கா­ர­மா­கட்­டும்,  பாத் ரூம்  விவ­கா­ர­மா­கட்­டும், கரூர் கம்­பெனி  ஆகட்­டும்,  இல்லை, இவர்­க­ளைப் பற்றி அவர்­கள் செய்த விமர்­ச­னம் ஆகட்­டும், அவற்றை சபை­யில் பேர­வைத் தலை­வர் அந்த நிமி­டம் நீக்கி விடு­கி­றார். லைவில் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் பார்க்­கி­றார்­கள், என்ன செய்­வீர்­கள். அவர்­கள் நினை­வுக் குறிப்­பில் இருந்து அழிப்­பீர்­களா,  இது என்ன அபத்­த­மாக இருக்­கி­றது என்று அவர் கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆரோக்­கி­ய­மான விவா­தம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நடை­பெற வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதை எப்­படி, இன்­றைக்கு அதைத்­தான் எதிர்க்­கட்­சித் தலை­வர் கேட்­டார். இன்­றைக்குஅவர்­கள் இஸ்­டத்­திற்கு பேசி­வி­டு­வார்­கள்,  நீங்­கள்  சபைக் குறிப்­பில் இருந்து நீக்­கு­கி­றேன் என்­பீர்­கள். பேப்­ப­ரில் போடா­மல் இருப்­பார்­கள், பேப்­ப­ரில் அவைக் குறிப்­பில் இருந்து நீக்­கப்­பட்­டதை போடக்­கூ­டாது. டி.வி.யில்  ஓடி­வி­டுதே.  முக்­கால்­வாசி டி.வி. நேர­லை­யில் இருக்­கி­றார்­களே.  ஒருத்­தரை ஒருத்­தர் திட்­டிக் கொள்­கி­றார்­கள். இதனை ஜாலி­யா­கப் பார்க்­க­லாம் என்று பார்க்­கி­றார்­கள். இதற்கு நடு­வில் பாட்டு பாடிக் கொள்­கி­றார்­கள். அத­னால் தான் எதிர்க்­கட்­சித் தலை­வர் நக்­க­லாக சொன்­னார். என்ன சூப்­பர் சிங்­கரா என்று கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தப் போக்கை கைவிட்டு, ஆரோக்­கி­ய­மான விவா­தம் நடை­பெ­று­வ­தற்கு மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆளுங்­கட்சி எம்.எல்.ஏ.க்களுக்­கும், அமைச்­சர்­க­ளுக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் தன்­னு­டைய உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அறி­வுரை கூறி­னால்­தான் மக்­கள் வரிப்­ப­ணம் வீணா­கா­மல் சட்­ட­மன்­றம் பய­னுள்ள வகை­யில் நடை­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­கள் வரிப்­ப­ணம் வீணா­கு­வ­தற்கு என்ன செய்­ய­வேண்­டுமோ அதனை யெல்­லாம் செய்து கொண்டு இருக்­கி­றார்­கள்.  எம்.எல்.ஏ.க்களுக்கு கார் கொடுக்­கி­றேன் என்று இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு அனோன்ஸ்­மெண்ட் வந்­தது.  திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­த­லை­வர், எங்­கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தேவை இல்லை என்று அவர் முடி­வெ­டுத்து இருக்­கி­றார்.  அன்­றைக்கே யாருக்கு கார் இல்­லையோ அவர்­க­ளுக்கு மட்­டும்­தான் கொடுக்க வேண்­டும்  என்ற நிலைப்­பாட்டை எடுத்­த­வர் டாக்­டர் அன்­பு­மணி ராம­தாஸ். கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் இந்த அறி­விப்­புக்கு எதிர்ப்பை தெரி­விக்­கா­தது எனக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு வேண்­டாம் என்று சொல்லி இருக்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு இல்லை. அன்­றைக்கு உடனே எதிர்ப்பை தெரி­வித்து இருக்க வேண்­டும். ஏனென்­றால், முந்­தைய காலங்­க­ளில் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் சம்­ப­ளம் உயர்­வுக்கே எதிர்ப்பு தெரி­விப்­பார்­கள், எம்.எல்.ஏ.க்களு­டைய சம்­ப­ளம் ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் உயர்த்­திக் கொண்டே வந்­தி­ருக்­கி­றது.  இன்­றைக்கு ஒரு லட்­சத்து ஐந்­தா­யி­ரம் ரூபாய் வந்­தி­ருக்­கி­றது. இன்­றைக்கு அடி­ச­ன­லாக  புதி­ய­தாக ஒரு லட்­சத்­துக்கு மேல் புதிய செலவு . பெட்­ரோல் செலவு, உத­வி­யா­ளர் செலவு,  பய­ணப்­ப­டி­கள் , உத­வி­யா­ளர்க்கு 25 ஆயி­ரம் ரூபாய் என்று ஏற்றி இருக்­கி­றார்.   உத­வி­யா­ளர் இருக்க வேண்­டும். ஏனென்­றால் எம்.எல்.ஏ. போய் டைப் அடித்து வர முடி­யாது, எம்.எல்.ஏ.போய்  எல்லா வேலை­யும் பார்த்­துக் கொண்டு இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முன்­யோ­சனை இல்­லாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எம்.எல்.ஏ. ஆபிஸ் வைத்து இருக்­கி­றார்­கள். எம்.எல்.ஏ. அலு­வ­ல­கம்  வைத்து இருக்­கி­றார்­கள். அவரே போய் ஆபிஸை துடைத்­துக் கொண்டு எல்­லாம் இருப்­பாரா?  அதற்­கென்று ஒரு பணி­யா­ளர் தேவை, அதனை ஏற்­றுக் கொள்ள முடி­யும். ஆனால்,  முக்­கால் வாசி எம்.எல்.ஏ.க்களுக்கு சொந்­த­மாக கார் இருக்­கி­றது.  எண்­பது, தொண்­ணூறு எம்.எல்.ஏ.க் 
களுக்கு சொந்­தக் கார் இருக்­கி­றது. அத்­தனை பேருக்­கும் கார் என்ற அறி­விப்பை எப்­படி கொஞ்­சம் கூட  முன் யோசனை இல்­லா­மல் முத­ல­மைச்­சர் வெளி­யிட்­டார் என்று நான் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு ஆதவ் அர்­ஜூனா எழுந்­தி­ருச்சு, தி.மு.க. காரர்­கள் சொன்ன உடனே உசா­ராகி நாங்­க­ளும் எல்­லோ­ரும் வாங்­கிக் கொள்ள மாட்­டோம்,  எங்­க­ளில் எல்­லோ­ருக்­கும்  கேட்­க­வில்லை. யார் யாருக்கு கார் இல்­லையோ அவர்­க­ளுக்­குத்­தான். முத­ல­மைச்­சர் அறி­விப்­பின் போதே என்ன, குறைந்த பட்­சம் அதி­கா­ரி­க­ளா­வது ஒழுங்­காக,  இந்த முடிவை எடுத்து,  ஒழுங்­காக டைப் செய்து கொடுத்து இருக்க வேண்­டும்.  கார் இல்­லாத எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தரப்­ப­டும், அப்­படி என்று சொல்லி  இருந்­தால்,  அந்த அறி­விப்பு இத்­தனை சர்ச்­சை­களை தோற்­று­வித்து 
இருக்­காது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. அர­சின் அந்த நகர்வு என்­பதே  ஒரு விஷ­யத்தை வெளி­யிலே விடு­வது,  அதற்கு என்ன சர்ச்­சை­களோ, கருத்­து­களோ வந்­த­தற்­குப் பிறகு இவர்­கள் அத­னை­யொட்டி ஒரு முடிவு எடுப்­பது என்று இருக்­கி­றதா,  இந்த ஆட்சி அமைந்த உட­னேயே இப்­ப­டித்­தான் ஒவ்­வொரு முடி­வு­க­ளும் இப்­ப­டியே நகர்­கி­றது.  அந்த வகை­யில் தான் இத­னை­யும் பார்க்­கி­றதா, வெளி­யில் விட்டு விடு­கி­றார்­கள். பிரச்­சினை ஆன உட­னேயே  மாற்­றிக் கொள்­கி­றார்­களா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">டெல்லி பிர­தி­நிதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்டை சேர்ந்­த­வரா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு முடி­வான, ஆரோக்­கி­மான விவா­தம்   கலந்­தா­லோ­சனை நடை­பெ­ற­வில்­லையோ என்­று­தான் நினைக்­கத் தோன்­று­கி­றது.  முத­ல­மைச்­சர் அல்­லது முத­ல­மைச்­சர்  பக்­கத்­தில் இருக்­கிற ஒன்­றி­ரண்டு பேர் இவர்­க­ளு­டைய விருப்­பங்­கள் அல்­லது அறி­வு­ரை­கள் விவா­திக்­கப்­ப­டா­மல் திணிக்­கப்­ப­டு­கின்­ற­னவா  என்ற கேள்வி எழு­கி­றது.  நீங்­கள் சொல்­வது எனக்­குப் புரி­கி­றது. சில நிய­ம­னங்­கள் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய பிறகு திரும்­பப்­பெ­றப்­ப­டு­கின்­றன. சில நிய­ம­னங்­கள் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய பிறகு திரும்­பப்­பெ­றப் பட­வில்லை.  முத­ல­மைச்­ச­ருக்கு வேண்டிய­வர்­க­ளுக்­கெல்­லாம் பதவி கொடுக்­கப்­ப­டு­கி­றது.  நீங்­கள் என்ன மாற்று இதில். கட்­சிக்­கா­ரர்­க­ளுக்­குப் பதவி கொடுப்­பது, அல்­லது வேண்­டி­ய­வர்­க­ளுக்­குப் பதவி கொடுப்­பது தி.மு.க.வில் செய்­தார்­கள், அ.தி.மு.க.வில் செய்­தார்­கள்  என்று விமர்­ச­னம் செய்­தார்­கள். இப்­போது அதையே தான் த.வெ.க.வும் செய்­கி­றார்­கள் என்று நான் கேட்­கி­றேன். ஜோசி­ய­ருக்கு பதவி கொடுத்­தார்­கள்.  படத் தயா­ரிப்­பா­ளர் அவர் இந்த மாநி­லத்­தைச் சேர்ந்­த­வரே அல்ல,  அவ­ருக்கு தமி­ழக அர­சி­னு­டைய டெல்லி பிர­தி­நிதி. தமிழ்­நாட்­டி­னு­டைய முக்­கி­ய­மான கோரிக்­கை­கள்  என்ன என்­பதை தெரிந்து கொண்டு அங்கே இருக்­கக் கூடிய அமைச்­சர்­க­ளி­டம் தொடர்பு கொண்டு  அதனை ப்பாலோப் பண்­ணு­கின்ற வேலை என்ற முக்­கி­ய­மான வேலை டெல்லி பிர­தி­நி­தி­யின் வேலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதில் முத­ல­மைச்­சர் யாரை வேண்­டு­மா­னா­லும் நிய­மிக்­க­லாம் என்ற போக்­கு­தான் அதில் வெளிப்­பட்­டதே தவிர,  உரி­ய­வரை, சிந்­தித்து உரி­ய­வ­ருக்கு அந்த வாய்ப்பை அளிப்­போம் என்று சிந்­தித்த மாதிரி தெரி­ய­வில்லை. அதே மாதிரி ரூட்டு ஜெக­தீஷ், முத­ல­மைச்­ச ­ரு­டன் சுற்­றிக் கொண்டு இருந்­தி­ருப்­பார். முத­ல­மைச்­ச­ருக்கு வேண்­டி­ய­வர்.  அவ­ருக்கு ஒரு­சி­றப்பு உத­வி­யா­ளர்ன்னு போட்டு, பத்து நாளா அந்த ஆர்­டரை வெளியே விடா­மல், அதனை வெளியே விட்­ட­போது பார்த்­தால் அந்த ஆர்­டர் பத்து நாள் முன்பே போடப்­பட்டு இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இது மாற்­றம் அல்ல;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஏமாற்­றம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த மாதிரி ரக­சி­யத்தை ஏன் பேணி காக்க வேண்டி இருக்கு. இதில் ரக­சி­யம் என்ன இருக்கு.  தேர்­த­லில் தோற்­ற­வ­ருக்கு நகர மேம்­பாட்டு வாரி­யப் பதவி, தொகுதி பொறுப்­பா­ள­ராக இருந்­த­வ­ருக்கு வீட்­டு­வ­சதி வாரி­யத் தலை­வர் பதவி, கட்சி பேச்­சா­ள­ருக்கு பாட­நூல் தலை­வர் பதவி,  நாங்­கள் மாற்­றத்­தைக் கொடுத்து இருக்­கி­றோம் என்று சொல்­லிக் கொள்­ளா­தீர்­கள்.  இது­மாற்­றம் அல்ல ஏமாற்­றம் என்று தான் மக்­கள் பார்ப்­பார்­கள். அதி­ருப்தி வர மாதி­ரி­யான சில விஷ­யங்­களை செய்ய ஆரம்­பித்து இருக்­கி­றார்­கள். சொத்­து­வ­ரியை திடீர்ன்னு பல மடங்கு உயர்வு,  ஒரே இர­வில். மக்­கள்­மேல் அதி­ரடி தாக்­கு­தல் மாதிரி. பிறகு அதனை வாபஸ் வாங்­கு­வது.  குறைந்த பட்­சம் மாந­க­ராட்சி மேயர், துணை­மே­யர் அவர்­க­ளுக்கு அறி­விக்­கப்­ப­டா­மல், நிலைக்­குழு  கூட்­டப்­ப­டா­மல் திடீர் என்று அதி­ர­டி­யாக மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் சொத்­துக்­களை மறு மதிப்­பீடு செய்­தோம். அதன் அடிப்­ப­டை­யில் இந்த உயர்வு செய்­யப்­பட்­டது. இப்­போ­தைக்கு விலக்­கிக் கொள்­ளப்­ப­டு­கி­றது என்று கூறி­னார். இப்­படி ஒவ்­வொன்­றாக அறி­விப்­பார்­கள், பிறகு திரும்­பப் பெறு­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.5">இவை­யெல்­லாம் திசை திருப்­பு­கிற மாதிரி இருக்­கி­றதா? இவ்­வ­ளவு பெரிய பிரச்­சினை மக்­க­ளு­டைய பிரச்­சினை இவை­யெல்­லாம் வெளி­யில் விவா­திக்­கப்ப­டா­மல், வெளியே பேசப்­ப­டா­மல் வேறு வித­மாக இன்­றைக்கு சட்­டப்­பே­ர­வை­யில் தி.மு.க.வை சீண்­டு­வது வரு­கி­றது,   முன் வரி­சை­யில் நடிகை உட்­கார்ந்து இருக்­காங்க என்­பது வருது, இந்த மாதி­ரி­தான் வெளி­யில் விவா­திக்­கப்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த விவா­தங்­கள் திசை திருப்­பப்­ப­டு­கி­றதா என்­பது வேறு விஷ­யம்.  எதிர்க்­கட்­சி­கள் அதனை திசை திருப்­பு­வ­தற்கு அனு­ம­திக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் துக்­ளக் ரமேஷ் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மின்னம்பலம் இணையதள தொலைக்காட்சியில், மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், தொலைக்காட்சியின்இணை ஆசிரியர்  திருமதி கலைச் செல்வி சரவணனுக்கு சிறப்புப் பேட்டியளித்த காட்சி!</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>