<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,958,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 24 2026 16:14:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260825T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25082026-MDU-07" position.sequence="07" ex-ref="25082026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">‘கார்’கால சட்டமன்றக் கூட்டத் தொடரை நேரலையில் காட்சிப்படுத்துவது அவசியமா?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup364586_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="M5bw_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M4bw_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.3">கா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ர்­கா­லம் என்­றால் மழைக்­கா­லம். ஆனால் இந்­தக் கட்­டு­ரை­யின் தலைப்­பில் உள்ள ‘கார்’­­கா­லம், சட்ட மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கார் வழங்­கும் காலத்­தைக் குறிக்­கி­றது. முதல்­வர் விஜய் பிற கட்­சி­க­ளு­டன் எந்த ஆலோ­ச­னை­யும் செய்­யா­மல், சட்­ட­மன்­றத்­தில் விவா­திக்­கா­மல், தான் தோன்­றித்­த­ன­மாக அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பயன்­பாட்­டிற்­கும் ஒரு கார் வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அரசு நிர்­வா­கி­கள் அல்ல. மக்­க­ளு­டைய தேவை­களை கவ­னிக்க வேண்­டி­யது மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யி­லான நிர்­வா­க­மும், உள்­ளூ­ராட்சி அமைப்­பு­க­ளும்­தான். சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தொகுதி மக்­களை சந்­திக்க வேண்­டு­மென்­றால் அவர்­கள் சொந்­தப் பொறுப்­பில்­தான் செல்ல வேண்­டும். அவர்­க­ளுக்கு அரசு நிர்­வா­கப் பொறுப்பு எது­வும் கிடை­யாது. அவ­ராக மேற்­கொள்­ளும் பய­ணச்­செ­ல­வு­களை அவர்­தான் செய்­து­கொள்ள வேண்­டும் அல்­லது அவர் சார்ந்­துள்ள கட்சி செய்து தர­வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும், தொகுதி மக்­க­ளுக்­கும் பால­மாக செயல்­ப­டு­ப­வர்­கள் கட்சி நிர்­வா­கி­கள்­தான். அவர்­க­ளெல்­லாம் பொது­நல ஊழி­யர்­கள்­தான். அவர்­கள்­தான் மக்­க­ளின் தேவை­களை, குறை­களை சட்­ட­மன்­றத்­தின் மூலம் அர­சின் கவ­னத்­திற்­குக் கொண்டு செல்­ல­வேண்­டும் என்­றால் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் தெரி­விப்­பார்­கள். அவர்­கள்­தான் மாவட்ட, உள்­ளூ­ராட்சி நிர்­வா­கங்­க­ளுக்­கும் மக்­க­ளுக்­கும் இடை­யி­லும் பால­மாக செயல்­ப­டு­
வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் முக்­கி­ய­மான பணி சட்­டங்­கள் இயற்­று­வது, அர­சின் வரவு செலவு கணக்­கும், அரசு திட்­டங்­கள், செயல்­பா­டு­கள் ஆகி­ய­வற்றை விவா­திப்­பது, தொகுதி சார்ந்த வளர்ச்­சித் திட்­டங்­களை மேற்­கொள்ள வலி­யு­றுத்­து­வது, மக்­கள் சந்­திக்­கும் பொதுப்­பி­ரச்­சி­னை­களை அர­சின் கவ­னத்­திற்­குக் கொண்டு செல்­வது ஆகி­ய­வை­தான். தொகுதி நிர்­வா­கம் அவர்­கள் பொறுப்­பல்ல. உதா­ர­ண­மாக ஒரு பகு­தி­யில் சாலை­கள் சரி­யில்லை, கால்­வாய் தூர்­வார­ வில்லை என்­றால் அவர்­கள் துறை அதி­கா­ரி­கள் அல்­லது அமைச்­சர்­கள் கவ­னத்­திற்கு எடுத்­துச் செல்­ல­லாம். ஆனால் அவற்றை செய்து முடிப்­பது அவர்­கள் பொறுப்­பல்ல. மக்­கள் தொடர்­பு­டைய அரசு அதி­கா­ரி­க­ளையோ, அமைச்­சர்­க­ளையோ நேர­டி­யாக அணுக வேண்­டும், கேள்வி கேட்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் (legislative), அரசு நிர்­வா­கத்­திற்­கும் (executive) வேறு­பாடு தெரி­யா­மல் போகக் கார­ணம் தேர்­தல்­க­ளில் பிர­தி­நி­தி­க­ளுக்­குத்­தான் மக்­கள் வாக்­க­ளிக்­கி­றார்­கள் என்­ப­து­தான். பெரும்­பான்மை பெறும் கட்­சி­யி­லி­ருந்து அமைச்­சர்­க­ளாக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­ப­வர்­கள்­தான் நிர்­வா­கத்­திற்கு தலைமை தாங்­கு­வார்­களே தவிர, அனைத்து சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் நிர்­வா­கத்­தின் அங்­கங்­கள் கிடை­யாது. இந்த வித்­தி­யா­சத்தை உள்­வாங்­கா­மல் நாங்­கள் இன்­னா­ருக்கு வாக்­க­ளித்­தோம் அவர்­கள் எங்­க­ளுக்கு சாலை அமைத்­துத் தர­வில்லை என்று கூறு­வது பழக்­க­மா­கி­விட்­டது. அத­னால் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களே அரசு நிர்­வா­கத்­தில் பங்­கேற்­பது போன்ற மன­ம­யக்­கம் ஏற்­ப­டு­கி­றது. இது மக்­க­ளாட்­சிக்கு நன்மை பயப்­பது அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கார­ணம் மக்­கள் தங்­க­ளு­டைய குடி­யு­ரி­மையை புரிந்­து­கொள்ள வேண்­டும். அப்­ப­டிச் செய்­யும்­போது அவர்­கள் குடி­மைச் சமூக அமைப்­பு­களை ஏற்­ப­டுத்த வேண்­டும். ஒவ்­வொரு தெரு­வி­லும் குடி­யி­ருப்­போர் நலச் சங்­கங்­களை ஏற்­ப­டுத்­த­லாம். நுகர்­வோர் சங்­கங்­களை ஏற்­ப­டுத்­த­லாம். தொழில்­கள் சார்ந்த சங்­கங்­களை ஏற்­ப­டுத்­த­லாம். இந்த சங்­கங்­கள் அரசு அதி­கா­ரி­க­ளி­டம் நேர­டி­யா­கச் சென்று தங்­கள் பிரச்­சி­னை­களை, தேவை­க­ளைக் கூற வேண்­டும். அவர்­கள் சரி­யான தீர்­வைத் தர­வில்லை என்­றால் அர­சி­யல் கட்­சி­க­ளி­டம், மக்­கள் பிர­தி­நி­தி­க­ளி­டம் முறை­யி­ட­லாம். சிவில் சமூ­கம் என்ற குடி­மைச் சமூ­க­மாக அவர்­கள் நேர­டி­யாக அரசு நிர்­வா­கத்­தி­டம் உரை­யா­டு­வது மிக, மிக அவ­சி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நமது மக்­க­ளாட்­சி­யின் மிகப்­பெ­ரிய பல­வீ­னமே குடி­மைச் சமூக அமைப்­பு­கள் தோன்­றா­த­தும், எல்லா பிரச்­சி­னை­க­ளுக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளையே சார்ந்து இருப்­ப­தும்­தான். இத­னால்­தான் ஊழல் அதி­க­ரிக்­கி­றது. அதி­கா­ரி­கள் குடி­மக்­களை மதிப்­ப­தில்லை. தாங்­கள் தேர்ந்­தெ­டுத்த பிர­தி­நி­தி­யின் கட்சி ஆட்சி அமைக்­க­வில்­லை­யென்­றால் தங்­கள் வாக்கு வீணா­கி­விட்­ட­தாக மக்­கள் நினைக்­கி­றார்­கள். தங்­க­ளுக்­கும் அர­சுக்­கு­மான தொடர்பு அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வம் மட்­டும்­தான் என்று நினைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உண்­மை­யில் சொல்­லப்­போ­னால் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளூர் நிர்­வா­கத்­தில் நேர­டி­யா­கத் தலை­யி­டக்­கூ­டாது. சம்­பந்­தப்­பட்ட துறை அமைச்­சர்­கள் மூல­மா­கத்­தான் அணுக வேண்­டும். அது­தான் அதி­கா­ரப் பகிர்வு (separation of powers). இந்த அர­சி­யல் அடிப்­ப­டை­கள் எல்­லாம் குழும்­பிப் போயி­ருப்­ப­தன் விளை­வு­தான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கெல்­லாம் அரசே கார் வாங்­கிக் கொடுக்­கும் அபத்­தம். இது சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை அரசு நிர்­வா­கத்­தின் 
பகு­தி­யாக மாற்­றி­வி­டு­கி­றது. அதி­கா­ரப் பகிர்வு என்ற தத்­து­வத்­தையே பாழாக்­கி­வி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நல்­ல­வே­ளை­யாக எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கார்­களை பெற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள் என்று அறி­வித்­தார். அதைத் தொடர்ந்து த.வெ.க. அமைச்­ச­ரும் தங்­கள் கட்­சி­யி­லும் ஏற்­க­னவே கார் வைத்­துள்ள உறுப்­பி­னர்­கள் பெற்­றுக் கொள்ள மாட்­டார்­கள் என்று அறி­வித்­தார். சி.பி.ஐ. கட்­சி­யும் தங்­கள் உறுப்­பி­னர்­க­ளுக்கு கார் தேவை­யில்லை என்று கூறி­விட்­டது. இந்த நிலை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே வேறு­பா­டு­களை விதைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">த.வெ.க. அர­சின் முதிர்ச்­சி­யற்ற செயல்­பா­டு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">த.வெ.க. அர­சின் முதிர்ச்­சி­யற்ற செயல்­பா­டு­க­ளுக்கு ஒரு உதா­ர­ணம்­தான் இந்­தக் கார் வழங்­கும் பிரச்­சினை. இதில் முதல்­வர் ஏதோ பேர­ர­சர் போல­வும். அவர் குறு­நில மன்­னர்­க­ளுக்­குப் பரிசு வழங்­கு­வது போல­வும் தோற்­றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது அரு­வ­ருக்­கத் தக்­கது. இவ்­வ­கை­யான காட்­சி­கள் அரங்­கேற நேரலை ஒலி­ப­ரப்­பும் ஒரு கார­ணமோ என்ற ஐயம் ஏற்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">சட்­ட­மன்­ற­மும், பொது­மன்­ற­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மக்­க­ளாட்­சி­யில் சட்­ட­மன்­றக் கூட்­டங்­கள் ரக­சி­ய­மா­னவை அல்ல. அவற்­றி­லுள்ள பார்­வை­யா­ளர் மாடங்­க­ளி­லி­ருந்து ஊட­கத் துறை­யி­னர் அவை நிகழ்ச்­சி­களை பார்­வை­யி­ட­லாம். பொது­மக்­க­ளும் கூட அதற்­கு­ரிய அனு­மதி பெற்று அங்கே அமர்ந்து பார்க்­க­லாம். ஆனால் அதே சம­யம், சட்­ட­மன்­றம் பொது­மன்­ற­மும் அல்ல. அதில் தனக்கு கருத்­துச் சுதந்­தி­ரம் இருக்­கி­றது என்று தொடர்­பற்ற செய்­தி­களை எந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் பேச முடி­யாது. சட்­ட­மன்ற விதி­முறை­ களின்­படி அவைத் தலை­வர் அனு­மதி பெற்­றுத்­தான் எதை­யும் பேச முடி­யும். முறை­யின்றி எதை­யும் பேசி­னால் அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதென்ன அவைக்­கு­றிப்பு? ஒவ்­வொரு நாளும் சட்­ட­மன்­றத்­தில் என்­ன­வெல்­லாம் பேசப்­ப­டு­கின்­றது என்­ப­தைத் தொகுத்து ஆவ­ணப்­ப­டுத்தி வைப்­பார்­கள். அந்த ஆவ­ணங்­க­ளில் அவைக் குறிப்­பி­லி­ருந்து நீக்­கப்­பட்­டவை இடம் பெறாது. அப்­படி நீக்­கப்­பட்ட பேச்­சுக்­களை செவி­ம­டுத்த ஊட­கத் துறை­யி­னர் அவற்றை பிர­சு­ரிக்­கவோ, வெளிப்­ப­டுத்­தவோ கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அன்­றாட வாழ்­வி­ய­லி­லேயே ஒரு­வர் கண்­ணி­யக் குறை­வான சொற்­க­ளைப் பேசி­னால் ஆங்­கி­லத்­தில் அவற்றை ‘அன்­பார்­லி­மெண்­டரி வேர்ட்ஸ்” என்று கூறு­வது வழக்­கம். அதா­வது மக்­க­ள­வை­யில் பேசக்­கூ­டாது வார்த்­தை­கள். அந்த வகை­யில் பொது­மன்ற நாக­ரீ­கத்தை வரை­ய­றுப்­பது அவை நாக­ரீ­கம். அப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில் ஒரு­வர் தரக்­கு­றை­வான வார்த்­தையை அவை­யில் பேசி­னால் அது அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கப்­ப­டும். அந்த நிகழ்ச்சி­ யைக் குறித்து எழு­தும் பத்­தி­ரி­கை­யா­ள­ரும். உறுப்­பி­னர் கோபத்­தில் தகாத வார்த்தை பேசி­னார் என்­று­தான் கூற­வேண்­டுமே தவிர, அதே வார்த்­தையை எழு­தக்­கூ­டாது. அது­தான் சட்­ட­மன்­றத்­திற்­கும், பொது­மன்­றத்­திற்­கு­மான தடுப்­புச் சுவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">சட்­ட­மன்­றத்­தையே பொது­மன்­ற­மாக்­கும் நேரலை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சட்­ட­மன்ற நிகழ்­வு­களை நேர­லை­யில் தொலைக்­காட்­சி­க­ளில் ஒளி­ப­ரப்­பி­னால் உறுப்­பி­னர்­கள் மக்­கள் பார்க்­கி­றார்­கள் என்ற கார­ணத்­தால் கண்­ணி­ய­மாக நடந்து கொள்­வார்­கள் என்று கூறப்­ப­டு­கி­றது. இது 
முற்­றி­லும் தவ­றான எண்­ண­மா­கும். ஏனெ­னில் ஒரு உறுப்­பி­னர் கட்­டுப்­பா­டின்றி உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­தி­னால் அதனை மக்­கள் நேர­டி­யா­கப் பார்த்து 
விடு­வார்­கள், அதன்­பி­றகு அவைத்­த­லை­வர் அதனை குறிப்­பி­லி­ருந்து நீக்­கி­னால் ஒன்­றும் பிரச்­சினை ­யில்லை என்று நினைக்க எல்லா வாய்ப்­பு­க­ளும் 
உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">முதல்­வர் விஜயே ஒரு சைகை செய்ய அனு­மதி உண்டா என்று கேட்­டு­விட்டு செய்கை செய்து காட்­டி­னார். இதனை எப்­படி அவைக்­கு­றிப்­பில் பதிவு செய்­வது? விஜ­யின் நோக்­கம் நேர­லை­யில் அதனை மக்­கள் பார்ப்­ப­து­தான். அது பிறகு காணொ­லித் துண்­டாக இன்ஸ்­டா­கி­ராம் உள்­ளிட்ட சமூக ஊட­கங்­க­ளில் பர­வும். அதுதனக்­குப் புகழ் சேர்க்­கும் என்று நினைக் ­கிறார். அறி­வார்ந்த கருத்­துப் பரி­மாற்­றத்­திற்­கான அவையை அவர் அறிந்த தொழி­லான திரைப்­ப­டப் படப்­பி­டிப்­பாக மாற்­று­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">மக்­க­ளின் மனோ­நி­லை­யும் சுவா­ர­சி­யத்தை நாடு­வது. பொது­வாக திரைப்­ப­டம் என்று எடுத்­துக்­கொண்­டாலே கருத்­தா­ழ­மிக்க, நுட்­ப­மான வாழ்­வி­யி­யல் பரி­மா­ணங்­களை பதிவு செய்­யும் படங்­கள் பெரி­தாக வெற்­றி­பெ­றாது.  ஒரு சில வாரங்­க­ளா­வது ஓடி தயா­ரிப்­புக்­கான செலவை ஈட்ட முடிந்­தால் அதுவே பெரிய வெற்றி. ஆனால் மலி­வான வன்­மு­றைக் காட்­சி­கள், கிளர்ச்­சி­யூட்­டும் நட­னங்­கள், வெறித்­த­ன­மான கோபா­வே­சக் கூச்­சல்­கள் ஆகி­யவை நிரம்­பிய படங்­கள்­தான் மிகப்­பெ­ரிய வசூ­லைக் கொடுக்­கும். அவ்­வ­கை­யான மாஸ் கேளிக்­கைப் படங்­க­ளில் கதா­நா­ய­கர்­க­ளாக நடிப்­ப­வர்­க­ளைத்­தான் மக்­கள் விரும்­பு­வார்­கள். அத்­த­கைய திரை­பிம்ப கவர்ச்­சியை பயன்­ப­டுத்தி ஆட்­சிக்கு வந்­த­வர்­தான் விஜய் என்­பதை மறந்­து­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">எனவே, மக்­கள் நேர­லை­யில் சட்­ட­மன்ற நிகழ்­வு­க­ளைப் பார்க்­கும்­போ­தும் உறுப்­பி­னர்­கள் ஒரு­வரை ஒரு­வர் வார்த்­தை­க­ளால் தாக்­கிக் கொள்­வதை, எதிர்க்­கட்­சி­யும், ஆளும் கட்­சி­யும் மாறி மாறி கூச்­ச­லிடு­ வதை­யெல்­லாம்­தான் ரசிப்­பார்­கள். அதை­வி­டுத்து, விவ­சா­யத்தை எப்­படி மேம்­ப­டுத்­த­லாம் என்று விவா­தித்­தால் சேனலை மாற்­றி­வி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நேர­லையை பார்த்­த­வர்­கள் பலர் ஏன் எதிர்க்­கட்­சி­யி­னர் ஆவே­ச­மாக தாக்­கு­தல் தொடுக்­க­வில்லை என்­றெல்­லாம் கருத்­துக் கூறு­வ­தைக் கேட்க முடிந்­தது. நாக­ரீ­க­மாக நடந்து கொண்­டால் அது பணிந்து போவ­தாக நினைத்­து­விட வாய்ப்பு இருக்­கி­றது. அத­னால் ஏதா­வது ஒரு கார­ணத்­திற்­காக பொங்கி எழ­வேண்­டிய நிர்ப்­பந்­தம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏற்­பட்­டு­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">நல்ல பெர்ஃ­பார்­மன்ஸ் கொடுக்­கும் கவலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">பொது­வா­கவே களப்­ப­ணி­யா­ளர்­கள் ஒன்­றினை கவ­னிக்­க­லாம். கிரா­மத்­திலோ, நக­ரத்­திலோ ஒரு­வ­ரி­டம் தக­வல்­க­ளைக் கேட்­கி­றோம் என்­றால் அவர் இயல்­பாக நம்­மு­டன் பேசு­வார். நாம் ஒரு ஒலிப்­ப­தி­வுக் கரு­வி­யைக் காட்டி, நீங்­கள் கூறு­வதை பதிவு செய்து­ கொள்­ளட்­டுமா என்று அனு­மதி கேட்­டு­விட்­டால் அதன் பிறகு அவர் பேச்­சின் தொனியே மாறி­வி­டும். தான் என்ன பேசு­கி­றோம் என்­ப­தைக் குறித்து கூடு­தல் தன்­னு­ணர்வு வந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதுவே, காமி­ரா­வில் காட்­சி­யா­கப் பதிவு செய்­கி­றோம் என்­றால் ஒரு சில­ருக்கு பேசவே வராது. ஒரு சிலர் சிறி­தும் இயல்­பற்ற முறை­யில் நாட­கீ­ய­மாக பேசத் துவங்கி விடு­வார்­கள். காமி­ரா­வில் பதிவு செய்­கி­றார்­கள் என்­றால் நாம் நல்ல பர்ஃ­பார்­மன்ஸ் கொடுக்க வேண்­டுமே என்ற கவலை வந்­து­வி­டும், அது இயல்­பான அவர்­கள் உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அத­னால் களப்­ப­ணி­யா­ளர் உண்­மை­யி­லேயே அவர் நேர்­கா­ணல் செய்­ப­வர் மனம் விட்டு பேசிக் கேட்க வேண்­டும் என்­றால்எந்­தப் பதிவு செய்­யும் கரு­வி­யை­யும் பயன்­ப­டுத்­தக் கூடாது. அப்­போ­து­தான் உண்மை சொல்­வார்­கள் என்­ப­தல்ல; அப்­போ­து­தான் உண்­மையோ, பொய்யோ அது இயல்­பாக வெளிப்­ப­டும். அனு­ப­வம் உண்­மை­யின் தடங்­களை, பொய்­யின் சாயை­களை பிரித்­த­றிய சொல்­லித் தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சட்­ட­மன்ற கூட்­டத் தொடர் முழு­வ­தை­யும் நேர­லை­யில் காட்­டு­வது என்­பது உறுப்­பி­னர்­க­ளி­டையே பெர்ஃ­பார்­மன்ஸ் எப்­படி கொடுக்­கி­றோம் என்ற கவ­லையை அதி­க­ரித்­து­வி­டும். அது இயல்­பான கருத்­துப் பரி­மாற்­றம் நடப்­ப­தற்கு மிகப்­பெ­ரிய தடை­யாக மாறும் வாய்ப்­பி­ருக்­கி­றது. இப்­படி சட்­ட­மன்­றத்தை பொது­மன்­றக் காட்­சி­யாக மாற்­று­வ­தில் பெரிய பய­னே­தும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">நேர­லையா? காட்­சித் தொகுப்பா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உண்­மை­யில் முழு­மை­யான நேரலை என்­பது சாத்­தி­ய­மில்லை. ஒட்­டு­மொத்த சட்­ட­மன்­ற­மும் காட்­சிப்­பு­லத்­தில் இருப்­பது போலக் காட்­டி­னால் எந்த உறுப்­பி­ன­ரை­யும் அரு­கா­மை­யில் காட்ட முடி­யாது. அப்­போது யார் என்ன பேசு­கி­றார்­கள் என்­பதே சரி­யா­கப் புரி­யாது. அத­னால் பல்­வேறு காமி­ராக்­களை வைத்து, யார் பேசு­கி­றார்­களோ அவர்­கள் தெளி­வா­கத் தெரி­யும்­படி காட்ட வேண்­டும். அப்­படி செய்­யும்­போது அவ­ருக்கு எதி­ரில் இருப்­ப­வர் என்ன செய்­கி­றார் என்­ப­தைக் காட்ட முடி­யாது. பேசு­ப­வ­ரது முக­பா­வம் எதி­ரில் இருப்­ப­வர் உடல்­மொ­ழி­யால் தீர்­மா­னிக்­கப் பட­லாம். அது காட்­சிப் படுத்­தப்­ப­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மேலும் ஆளும் கட்­சி­யி­னர் அதி­கம் காட்­டப் 
படு­கி­றார்­களா, எதிர்க்­கட்­சி­யி­னர் அதி­கம் காட்­டப் படு­கி­றார்­களா என்­பது போன்ற கேள்­வி­க­ளும் எழத்­தான் செய்­யும். நேரலை என்­பது உண்­மை­யில் ஒரு சில­ரால் முடிவு செய்­யப்­ப­டும் படத்­தொ­குப்பு என­லாம். உதா­ர­ண­மாக முதல்­வர் அவை­யில் இல்­லை­யென்­பதை காட்­டு­வதை காமி­ராக் கோணங்­க­ளால் தவிர்க்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வ­கை­யான காட்­சிப்­ப­டுத்­தல் தேர்­வு­களை மேற்­கொள்­ப­வர்­கள் அவைத்­த­லை­வர், ஆளும் கட்­சி­யி­னர் கூறும்­ப­டியே செய்­வார்­கள் என்­பது இயல்பு. அத­னால் காலப்­போக்­கில் அது எதிர்க்­கட்­சி­யி­ன­ரின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளா­கும். நீங்­கள் ஏன் அதைக் காட்­ட­வில்லை, இதைக்­காட்­ட­வில்லை என்ற கேள்­வி­கள் அதி­க­ரிக்­கும். காமி­ரா­வின் காட்­சிப்­பு­லத்­திற்கு வெளியே ஆளும் கட்­சி­யி­னர் முதல்­வர் சைகை 
செய்­தது போல ஏதா­வது செய்கை செய்­ய­லாம். 
அத­னால் கோப­ம­டை­யும் எதிர்க்­கட்­சி­யி­னரை மட்­டும் காட்­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">எப்­ப­டிப் பகி­ர­லாம்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சட்­ட­மன்ற நிகழ்­வு­களை காணொ­லிக் காட்­சி­யாக பொது­மன்­றத்­தில் பகிர வேண்­டும் என்­றால் அதற்கு நேரலை சிறந்த வழி­யல்ல. மாறாக, அன்­றைய நிகழ்ச்­சி­கள் முடிந்த பிறகு, மக்­க­ளுக்கு உண்­மை­யி­லேயே பய­ன­ளிக்­கக் கூடிய கருத்­துப் பரி­மாற்­றங்­களை மட்­டும் தொகுத்து சட்­ட­மன்ற வலைத்­த­ளத்­தில் டைம் கோடு­டன் பகி­ர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அவைக்­கு­றிப்பு ஆவ­ணங்­க­ளில் பதி­னோரு மணி இரு­பத்­தி­ரெண்டு நிமிட த்தில் கல்­வித் துறை அமைச்­சர் ஆசி­ரி­யப் பணி நிய­ம­னம் குறித்­துப் பேசி­னார் எனக் காண்­ப­வர், காணொ­லித் தொகுப்­பில் அந்த நேரத்­திற்­குச் சென்­றால் அவர் கூறு­வ­தைக் காணொ­லி­யா­கக் காண வகை செய்­ய­லாம். ஊட­கங்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான தரு­ணங்­களை எடுத்து தங்­கள் நிகழ்ச்சி ­களில் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வி­தம் செய்­யும்­போது அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கும் பொருள் இருக்­கும். அவை நாக­ரீ­கத்­திற்­குப் பொருந்­தா­மல் பேசி­னால், சைகை செய்­தால் அது காணொ­லித் தொகுப்­பில் இடம் பெறாது என்ற நிலை நேர­லை­யில் மக்­க­ளுக்­காக பெர்ஃ­பார்­மென்ஸ் காட்­டும் மனோ­வி­ய­லைத் தவிர்க்­கும் என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இறு­தி­யாக ஒன்றைக் கவ­னிக்க வேண்­டும். ஆளும் கட்சி, எதிர்க்­கட்சி என்­ப­தைக் கடந்து கண்­ணி­ய­மற்ற நடத்தை, தவ­றான உச்­ச­ரிப்பு, தனி நபர் தாக்­கு­தல்­கள் ஆகி­யவை பொது­மன்­றத்­தில் பகி­ரப்­ப­டு­வது மாநி­லத்­தின் 
நல­னுக்கு உகந்­த­தல்ல. ஒரு அயல்­நாட்டு முத­லீட்­டா­ளரே பார்க்­கி­றார் என்­றால், அவர் மனம் மாறி இந்த மாநி­லத்­தின் சட்­ட­மன்­றமே இப்­ப­டித்­தான் நடை­பெ­றும் என்­றால் சட்­டம் ஒழுங்கு எவ்­வ­ளவு மோச­மாக இருக்­கும் என்று நினைத்து ­விடக் கூடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">முக்­கி­ய­மாக முதல்­வர் பெரும்­பா­லும் முக்­கி­ய­மான தரு­ணங்­க­ளில் மெள­ன­மாக அமர்ந்­தி­ருப்­பதை பல­ரும் சாத­க­மா­ன­தா­கப் பார்க்க மாட்­டார்­கள். ஒரு திற­மை­யற்ற நிர்­வாகி என்ற மனப்­ப­தி­வையே அவர் விட்­டேத்­தி­யாக அமர்ந்­தி­ருக்­கும் கோலம் உரு­வாக்­கு­கி­றது. அது மாநி­லத்­திற்கு எந்த வகை­யி­லும் நல்­ல­தல்ல. எனவே, அவ­ருக்கு தக்க பேச்­சாற்­றல், அதற்­கான மன ஓர்மை உரு­வா­கும் வரை த.வெ.க. அரசு நேர­லையை ஒத்­திப்­போ­டு­வதே நல்­லது. நிரந்­தி­ர­மாக கைவிட்­டா­லும் இழப்­பொன்­று­மில்லை. இளம் வய­தி­னர் தவ­றான தமிழ் உச்­ச­ரிப்பை பழ­கும் ஆபத்­தா­வது குறை­யும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>