<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 24 2026 16:15:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260825T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25082026-MDU-09" position.sequence="09" ex-ref="25082026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="4">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup823787_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="007copy_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">(அறி­ஞர் அண்ணா அவர்­கள் தொழிற் ­சங்க அமைப்பு – அர­சி­யல் கட்சி ஆகி­ய­வற்றை பொதுப்­பணி 
ஆற்­று­கின்ற அமைப்­பா­கக் கரு­தி­ய­வர். அவ­ரின் தொடக்­கக் ­கால பொதுப்­பணி என்­பது தொழிற்­சங்­கம்­தான். அந்த அமைப்­பு­கள் -­­­­பொ­து­ வா­கப் பொதுத் தொண்டு புரி­கிற அமைப்­பு­கள்  எப்­ப­டி­யான  பலம் பெற்­றுத் திகழ வேண்­டும் என்­பதை ‘ஸ்தாபன ஐக்­கி­யம்’ எனும் கட்­டு­ரை­யிலே தெரி­வித்து இருக்­கி­றார்­கள். அக்­கட்­டு­ரை­யைப் பயன்­க­ருதி வெளி­யி­டு­கி­றோம்-  – ஆசி­ரி­யர்க் குழு­வி­னர்)
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29.5">ஸ்தாபன ஐக்­கி­யம்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஸ்தாப­னம்- அதா­வது அமைப்பு -பல­ரு­டைய எண்­ணங்­க­ளைத் திரட்டி, பல­ரு­டைய சக்­தி­களை ஒருங்கு சேர்த்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் ஒரு பொது இடம் – ஓர் பாசறை. பாச­றை­யிலே, பல­வி­த­மான போர்க்­க­ரு­வி­க­ளும்  வீரர்­க­ளும்  தேவை-  கரு­விக­ளின்  எண்­ணிக்­கை­யும்   வகை­யும் வளர்ந்து கொண்டு இருக்க வேண்­டும்-­­­­பா­ச­றை­யின் உப­யோ­கம் அதி­கப்­பட வேண்­டு­மா­னால் வாள் மட்­டும் போர் குவித்து வைத்­துக்­கொண்டு, கேட­யம் தேடா­மல் இருப்­பதோ, விற்­க­ளைக் குன்­றெ­னக் குவித்­துக்­கொண்டு அம்­பு­கள் இல்­லாம­லிருப்­பதோ, துப்­பாக்­கி­க­ளைக் கிடங்­கு­க­ளில் குவித்து வைத்­துக் கொண்டு, வெடி­ம­ருந்து போடா­ம­       லி­ருந்து விடு­வதோ, இவை யாவும் ஒழுங்­கா­க­வும் தேவைக்­கேற்ற அள­வும் இருந்து, இவை­க­ளைத் திறம்­பட உப­யோ­கிக்­கும் ஆற்­ற­லுள்ள வீரர்­கள் இல்­லா­தி­ருப்­பதோ, வீரர்­கள் இருந்­தும், இவர்­களை நடத்­திச் செல்­லும், படைத்­த­லை­வன் இல்­லா­தி­ருந்­தால், பாசறை இருந்து என்ன பயன்? அழ­கிய சிலை­போல் இருக்­குமே தவிர பயன் தரும் மனி­த­ராக இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஸ்தாப­னம், ஒரு சில குறிப்­பிட்ட கொள்­கை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு கட்­டப்­ப­டு­கி­றது. ஸ்தாப­னம் கொள்­கை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு கட்­டப்­ப­டு­கின்­ற­போது, அந்த ஸ்தாப­னம் ஆற்­றல் பெறு­ வ­தைப் பொறுத்தே இருக்­கி­றது. கொள்­கை­கள் ஏற்­ப­டு­வதே, உள்ளகுறை­க­ளைத்   தீர்த்­து­வைப்­ப­தற்­கேற்ப,நிலை­மை­களை மாற்றி அமைப்­ப­தற்கோ,  புதி­ய­தோர்  நல­னைக் காண்­ப­தற்­கோ­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தங்­கள் நிலை மோச­மா­கிற நேரத்­திலே தங்­கள் உழைப்­பின் விளை­வாக ஏற்­பட்ட வாழ்க்கை வச­தி­க­ளில் துளி­யும் தங்­க­ளுக்­குக் கிடைக்­கா­தது ­அவர்­கள் மன­திலே ஓர் அணைக்­க­மு­டி­யாத தீயை உண்­டாக்­கிற்று. சேக­ரித்த தேனை இழந்து விடும் வண்­டு­க­ளா­கத் தமது வாழ்க்கை இருப்­பதை அறிந்­த­னர். மனம் நொந்­த­னர். குறை­க­ளைப் பற்றி ஒரு­
வருக்­கொ­ரு­வர் பேசி­னர். ஒவ்­வொரு நாளும் பேசி­னர். கூடி கூடிப் 
பேசி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">குறை­களை உணர்ந்து, அவை­க­ளுக்­குக் கார­ணம் யாவை என்­பது பற்­றிய விவா­தத்­தில் ஈடு­பட்டு, உண்­மைக் கார­ணத்­தைக் கண்­டு­பி­டித்து, பிறகு அவை­க­ளைப் போக்­கிக் கொள்ள, தனித்­த­னி­யாக முயற் 
­சித்­துப் பார்த்து, முடி­யாது போன பிறகு, தொழி­லா­ளர்­கள் ஓர் ஸ்தாபன ரீதி­யா­கத் தமது குறை­களை எடுத்­துக் கூறித்­தான் பரி­கா­ரம் தேட­வேண்­டும் என்ற முடி­வுக்கு வந்­த­னர். தங்­க­ளின் வாழ்க்கை முறை­யும் தொழில் முறை­யும் தங்­க­ளுக்­குள்ள வாழ்க்கை வச­திக் குறை­வு­க­ளும், எல்­லாத் தொழி­லா­ள­ருக்­கும்  ஒரே வித­மா­ன­தாக இருக்­கக் கண்டு, அனை­வ­ருக்­கும் உள்­ளது ஒரே வகை வியாதி என்று தெரி­வ­தால், அனை­வ­ரும் ஒரே வகை மருந்து தேட வேண்­டும் என்ற முடிவு செய்து, ஸ்தாப­னங்­களை ஏற்­ப­டுத்­தி­னர். இந்­தப் பொதுத்­தன்மை கெடா­தி­ருக்க மட்­டும் ஸ்தாப­னம் அவ­சி­ய­மா­னது என்­பது மட்­டு­மல்ல, பய­னுள்­ளதுமாகும். எனவே, ஸ்தாபன ஐக்­கி­யம் இந்­தப் பொது ­உ­ணர்ச்சி கெடா­த­படி பாது­காத்­துக் கொண்­டால்­தான் முடி­யும். கந்­தன், முரு­க­னுக்­கும் சேர்த்­துத்­தான் நியா­யம் கோரு­கி­றான் முத்­தன் மூவ­ருக்­கும் சேர்த்தே நீதி கேட்­கி­றான். ஒவ்­வொ­ரு­வ­ரும் மற்ற யாவ­ருக்­கும் சேர்த்தே நீதி நியா­யம் கேட்­கி­றார்­கள். ஸ்தாபனத்­தின் முக்­கிய இலட்­ச­ணம் இதைப் பொறுத்தே இருக்­கி­றது. ஸ்தாப­னத்­தின் மூலம் அதைச் சேர்ந்­த­வர் அனை­வ­ருக்­கும் நலன் கிடைக்­கி­றது என்­பது விளக்­க­மா­னால்­தான், ஸ்தாப­னத்திலே ஐக்கிய உணர்ச்சி இருக்க முடி­யும் கந்­த­னுக்­குத் தெரி­யா­மல் முரு­க­னும், முரு­கன் அறி­யா­வண்­ணம் முத்­த­னும், தனித் தனியே நட­வ­டிக்­கையை எடுத்­தால், ஸ்தாப­னம் உடைந்து விடும். பொதுத் தன்­மை­தான் ஸ்தாப­னத்­துக்கு அரண்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இந்­தப் பொதுத்­தன்மை பல­மாக இருக்­க­ வேண்­டு­மா­னால், ஸ்தாப­னம், மிக­மிக நியா­ய­மான கொள்­கை­க­ளின் மீது கட்­டப் பட­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">குடும்­பம் முதற்­கொண்டு கோலோச்­சும் சர்க்­கார் வரை­யிலே, ஸ்தாப­னங்­கள் தான் - ஒரு­வ­கைப் பொதுத் தன்­மை பொ­து­வான பணி­கள்-­­­­ அ­னை­வ­ரை­யும் கட்­டுப்­ப­டுத்­தும் பொது­வான பொறுப்­பு­கள், பலன்­கள் இவை­க­ளில் உண்டு. இதிலே எது கெடி­னும், ஸ்தாப­னத்­தின் ஐக்­கி­யம் நிச்­ச­ய­மா­கக் கெட்டு வரும்- அண்­ணன் அறி­யா­த­படி தம்பி செல­வி­டும் பத்து ரூபாய்- அண்­ணன் – தம்பி என்ற பாசத்­தால், சில நாட்­க­ளுக்கு குடும்­பத்தை எவ்­வி­தத்­தி­லும் பாதிக்­கா­ம­லி­ருக்­கும். -ஆனால் சில காலத்­துக்­குத்­தான் -­­­­எப்­போ­து­மல்ல. தம்­பி­யின் பழக்­கமே அண்­ணன்  அறி­யா­ வண்­ணம் தன்­ன­லத்­துக்­காக நடந்து கொள்­வது என்­றா­கி­விட்­டால், குடும்­பக் கட்­டுப்­பாட்டை நிலை நிறுத்த, எத்­தனை வித­மான பந்­தம் பாசம் பேசி­யும், பழைய கதை­க­ளைச் சொல்­லி­ யும், இரா­ம­னை­யும் இலட்­சு­ம­ண­னை­யும் துணைக்கு அழைத்­தும் முடி­யா­த­தாகி­ விடும்-­­­. குடும்­பம் பிள­வு­றும்; பிரி­யும்-­­­­அண்­ணன் தம்­பிக்­குள்­ளாக ஒரு குடும்­பத்­தி­லேயே இந்த நிலை என்­றால், ஒரு ஸ்தாப­னத்­தில் தலை­வ­ருக்­கும் துணைத்­தலை­ வருக்­கும் ஸ்தாப­னத்­தில் மற்ற ஐக்­கிய உறுப்­பி­ன­ருக்­கு­மி­டையே, கடைசி வரை­யில் பாசம் ஒன்றை மட்­டும் கொண்டு, அன்பு உண்­டாக்கி ஸ்தாப­னத்தை உடை­யா­த­படி பார்த்­துக் கொள்ள முடி­யாது. அமைப்­பு­க­ளின் ஒற்­றுமை அத­னைச் சார்ந்­த­வர் அனை­வ­ரும் ஒரே நோக்­கம் கொண்டு, ஒரே வகை­யான குறிப்­பிட்ட கொள்­கைக்­கா­கப் பாடு­ப­டு­ப­வர் என்­ப­தைத்­தான் பொறுத்­தி­ருக்­கி­றது. இந்த ஒற்­று­மை­யும், போலி­யா­ன­தாக இருக்­கக் கூடாது. இருப்­பின் மிக மிகச் சாதா­ர­ணச் சங்­க­ட­மும் ஸ்தாப­னத்­துக்­குப் பெரி­ய­தோர் இடை­யூ­றா­கி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஸ்தாப­னம் ஏற்­ப­டச் செய்­வ­தற்­குக் கொள்­கை­கள் தேவை என்­பது, கட்­ட­டம் கட்­டு­வ­தற்கு அதற்­கு­ரிய சாமான்­கள் தேவை என்­பது போன்­றது. கட்­ட­டம் அமைக்­கும் கடி­ன­மான காரி­யத்­துக்கு, அதற்­கான திறமை வாய்ந்த வேலைக்­கா­ரர் தேவைப்­ப­டு­வது போலச் சில குறிப்பிட்ட கொள்­கை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஒரு ஸ்தாப­னத்தை அமைக்க, திற­மை­யும் உறு­தி­யும் கொண்ட அமைப்­பா­ளர் தேவை. அந்த அமைப்­பா­ள­ருக்­குத் தாம் எந்­தக் கொள்­கை­களை அடிப்­ப­டை­யா­கக் கொள்­வது என்று கண்­ட­றி­யும் திற­னும். கட்­ட­டக் கட்­டுக்­கோப்பு முறை­யிலே ஸ்தாப­னம் இருக்­க­வேண்­டும் என்ற நோக்­க­மும் நிச்­சய­ மாகத் தேவை, வலி­வுள்ள இரும்பு கர்­டர்­க­ளும், வகை வகை­யான மரச்­சா­மான்­க­ளும், உயர் தர­மான சிமிட்டி­யும். அழ­கான பித்­த­ளைக் குமிழ்­க­ளும், அரைத்­தெ­டுத்த சுண்­ணாம்­புக் குழையலும் தேவை. ஆனால் இவை­களை எங்­கெங்கு எந்­தெந்த அளவில், எந்­தெந்த முறை­யில் உப­யோ­கித்­தால். கட்­ட­டத்­தின் கட்­டுக்­கோப்பு சிறந்த முறை­யி­லும் இருக்­கும் என்­பதை அறிந்து அமைக்­கும் அமைப்­பா­ளர்­கள் தேவை.- அவர்­க­ளால்­தான் கட்­டுக்­கோப்பு கெடா­த­படி பார்த்­துக்­கொள்­ளும் திறம் இருக்க வேண்­டும்-­­­­. அக்­க­றை­யும் இருக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">பெரி­ய­தோர் மாளி­கை­யில், ஒரு சிறிய ஜன்­னல் அவ்­வ­ளவு முக்­கி­ய­ மானதல்­ல-­­­­ அந்த ஜன்­னல் இல்­லா­மற் போனா­லும், மாளிகை இருக்­கத்­தான் செய்­யும், அடிப்­ப­டை­யும் குறுக்­குச் சுவ­ரும். மேல் அமைப்­புச் சரி­யாக இருக்குமட்­டும், ஜன்­னல் இருந்­தா­லும் எடு­பட்­டா­லும், கெட்­டா­லும், மாளி­கைக்கு ஒரு சேத­மு­மில்லை, ஆனா­லும் மாளி­கை­யிலே அக்­க­றை­யுள்­ள­வர்­கள். அந்­தச் சிறு ஜன்­ன­லைக் கூடத்­தான் கவ­னித்­துக்­கொள்­வார்­கள் கெடா­த­படி ஜன்­னலை மட்­டு­மல்ல. அதன் கம்­பி
­க­ளிலே ஒன்று கெட்­டா­லும், கவ­லைப்­ப­டு­வர், ஏனெ­னில் ஜன்­ன­லின் கம்பி கெட்டு, பிறகு அது எடு­பட்டு, அதன் பல­னாக ஜன்­னல் கெட்­டுக் கள்­ளனோ காற்று மழையோ உள்ளே புகுந்து அதன் விளை­வாக மாளி­கைக்கு நஷ்­ட­மும் கஷ்­ட­மும் ஏற்­பட்டு விடக் கூடுமே என்ற யூகம்; மாளி­கைக்­கா­ர­ருக்கு இருக்­கும். எனவே அவர் ஜன்­ன­லின் கம்பி, மாளி­கை­யின் அடிப்­படை அல்ல என்ற போதி­லும், அத­னை­யும்­தான், அக்­க­றை­யு­டன் கவ­னித்­துக் கொள்­வர்; ஸ்தாப­னங்­க­ளி­லும் இது­போ­லத்­தான், தொழிற் ஸ்தாப­னங்­க­ளின் ஐக்­கி­ய­மும் பல­மும் கெடா­தி­ருக்க வேண்டு மானால், ஜன்­னல் கம்­பி­யை­யும் ஜாக்­கி­ர­தை­யு­டன் கவ­னிக்­கும் மாளி­கைக்­கா­ரர்­போல், ஸ்தாப­னத்­தின் சகல உறுப்­பி­ன­ரை­யும் கவ­னித்து, கட்­டுக்­கோப்பு கெடா­த­படி பார்த்­துக்­கொள்ள வேண்­டும். இந்த முறை­யைக் கவ­னி­யா­த­தால், தொழி­லா­ளர் ஸ்தாப­னங்­க­ளிலே, ஒற்­று­மைக் குறைவு ஏற்­பட்டு சித­றி­விட்ட துண்டு. பெரிய மரங்­களை மாளிகை மண்­ட­பத்­துக்­குத் தூண்களாக அமைத்து விட்­டால் மட்­டும் ­போ­தாது மிக மிகச் சாதா­ரண செல், மரத்­திலே சிறு துளை­க­ளிலே புகுந்து கொள்­ளா­த­ப­டி­யும் பார்த்­து­க்கொள்ள வேண்­டும்-­­­­செல் அரிக்க ஆரம்­பித்­தால் செம்­ம­ர­மும்­சரி; எம்­ம­ர­மும்­சரி, கெடும் -­­­அத­னு­டன் ஸ்தாப­ன­மும் கெடும், தாங்­கும் சக்தி தாக்­கும் சக்தி இரண்­டும் ஒரு சேர ஒரு ஸ்தாப­னத்­துக்­குத் தேவை. அதற்­கேற்ற வகை­யிலே அந்த அமைப்பு இருக்க வேண்­டும். இருக்­க­வேண்­டு­மா­னால், இரு­வகை சக்­தி­க­ளை­யும் திரட்­ட­வும், திரட்­டி­யதை உப­யோ­கிக்­க­வும், ஏற்ற தகுதி படைத்­த­ வர்­கள் ஸ்தாப­னத்­தில் இருக்­க­
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஒரு­வர் இருப்­பது மற்­ற­வ­ருக்கு வலிவு என்ற எண்­ணம் குன்­றாது. குறை­யாது இருக்க வேண்­டும். அந்த எண்­ணத்­தா­லேயே ஸ்தாப­னத்­தின்  ஐக்­கி­யத்­தைக் குன்­றா­மல் காப்­பாற்ற முடி­யும். கொள்­கை­கள், நிலைமைகளால் மாற்­ற­ம­டை­யும்­போது, ஸ்தாபன ஐக்­கி­யத்­துக்கு ஆபத்து நேரி­டக்­கூ­டும். அது­போ­லவே ஸ்தாப­னத்­தில் நடை­மு­றை­யில், யார் எதைச் செய்­வது, எது எப்­ப­டிச் செய்­யப்­பட வேண்­டும், என்ற பிரச்­சி­னை­கள் கிளம்பி, அதன் பய­னாக ஸ்தாபன ஐக்­கி­யம் கெடு­வ­துண்டு. ஆனால், அடிப்­படை பல­மாக இருந்­தால் மாளிகை கெடா­ 
தி­ருப்­பது போலக் கொள்கை பல­மி­ருந்­தால் ஸ்தாப­னம் கெடாது. ஆனால் அதற்­காக ஸ்தாப­னத்­தின் ஐக்­கி­யம் கெட்­டு­வி­டத்­தக்க நிலை­மைகள் ஏற்­ப­டும்­போது, அக்­க­றை­யற்று இருந்­து­வி­ட­வும் கூடாது. தொழி­லா­ளர் ஸ்தாப­னம், மனக்­கு­றை­யின்­மீதும், அத­னால் இயற்­கை­யாக ஏற்­ப­டக்­கூ­டிய ஆத்­தி­ரத்­தின்­­மீதும், ஏற்­பட்டு விடு­வது உண்டு. இவை சரி­யான அடிப்­படை அல்ல, வாழ்­வ­தற்கு உழைக்­கி­ றோம், ஆனால் வாழ்வு இல்லை. உழைக்­காது வாழ்­கி­றார்­கள், அந்த வாழ்­வுக்­குத் தங்­குத் தடை இல்லை. வாழ்­வோம் அனை­வ­ரும்­வாழ உழைப் ­போம்- ஒரு­வர் உழைப்­பின் மீது மற்­றொ­ரு­வ­ரின்-­­­­ வாழ்வு அமைக்­கப்­ப­டும் அநீ­தியை ஒழிப் போம்-­­­­ என்ற அடிப்­ப­டை­க­ளின் மீது கட்­டப்­பட்­டுள்ள தொழில் ஸ்தாப­னங்­கள் அந்த உன்­ன­த­மான இலட்­சி­யம் ஈடே­ற­வேண்­டும் என்ற பெரு நோக்­கத்தை உறு­து­ணை­யா­கக்­கொண்டு ஸ்தாப­னத் ­தின் நடை­முறை வேலை­யில், உறுப்­பி­னர்­க­ளுக்­குள் உள்­ளக் கொதிப்போ, கசப்போ ஏற்­ப­டாத வகை­யி­லும், இன்­னார் செய்­கிற காரி­யம், இன்­னா­ருக்­குச் சரி என்­று­ப­ட­வில்லை என்ற நிலை ஏற்­ப­டா­த­வ­கை­யி­லும், ஸ்தாப­னத்­தின் வேலை­ க­ளில் அவ­ர­வர்­க­ளுக்கு அவ­ர­வர் ஆற்­ற­லுக்­கேற்ற, ஆனால் ஸ்தாப னத்­தின் மூலக் கொள்­கைக்கு ஊறு நேரி­டாத முறை­யில், பணி உண்டு என்ற முறை­யில், ஸ்தாப­னத்தை நடத்­திச் சென்­றால், ஸ்தாபன ஐக்­கி­யம் கெடாது. பல­னும் நிச்­ச­யம் விளை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஸ்தாப­னத்­தின் பலம் வள­ரும்­போது ஏற்­ப­டும் அல்­லல் அதி­கம். ஸ்தாப­னம் வள­ரும்­போது இருக்­கும் ஸ்தாப­னம் ஐக்­கி­யம், ஸ்தாப­னம் நன்­றாக வளர்ந்த பிறகு ஓர­ளவு ஆபத்­துக்­குள் சிக்கி விடக்­கூ­டும்- வளர்ந்­துள்ள பலத்­தைக்­கொண்டு செய்­வது? எவ்­வி­தம் அதைச் செய்­வது? யாரைக்­கொண்டு செய்­வது? எப்­போது செய்­வது ? என்ற பிரச்­சி ­னை­கள், ஸ்தாப­னத்­தின் பலம் வளர்ந்த பிறகு ஏற்­ப­டும். ஐக்­கி­யத்­துக்கு ஆபத்து அத­னால் வரக்­கூ­டும், அந்த நெருக்­க­டி­யான நேரத்­தி­லெல்­லாம், ஸ்தாப­னத்­தின் மூலக் கருத்­துக்கே முத­லி­டம் தரப் பட­வேண்­டும்;அப்­போ­து­தான் ஸ்தாப­னம் சிதை­யா­ம­லி­ருக்­கும் ஸ்தாபன ஐக்­கி­யம் ஒரு­முறை பாடு­பட்­டுச் சாதித்­து­விட்டு அதைக்­கண்டு சந்­தோ­ஷப்­பட்­டுக்­கொண்டு இனிக் ­க­வ­லை­யில்லை என்று இருந்­து­வி­டக் ­கூடிய ஒரு சம்­ப­வ­மல்­ல-­­­­ எப்­போ­தும் விழிப்­போடுஇருந்­து­கொண்டு அவ்­வப்­போது பழுது பார்த்­துக் கொண்டு எந்­தச் 
சம­யத்­தி­லும் மூலக்­க­ருத்து­ கெடா­த­ப­டி­யும் கவ­னித்­துக்­கொண்டு இருந்­தால் மட்­டுமே காப்­பாற்­றக்­கூ­டிய, ஓர் அற்­பு­த­மான ஜீவ­சக்தி, ஸ்தாப­னத்­தின் 
பல­மும் பய­னும். அந்த ஐக்­கி­யத்­தை -­­­­ஒற்­றுமை  உணர்ச்­சி­யைப்  பொறுத்தே இருக்­கி­றது. வீணை உயர் தர­மா­ன­து­தான், வித்­து­வா­னும் தேர்ந்­த­வர்­தான். ஆனால் ஒரு நரம்பு மட்­டும் ஓரி­டத்­தில் தளர்ந்து இருக்­கி­றது என்­றால், வீணை­யின் நாத­முங் கெடும்; வித்­து­வா­னின் இசை­யும் பாழ்­ப­டும். ஸ்தாப­னத்­தின் ஐக்­கி­யம் சங்­கீ­தத்­துக்கு உள்ள சுருதி மானத்­தைப் போன்­ற­து.-­­­­மிக மிக ஜாக்­கி­ர­தை­யா­கக் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விஷ­யம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>