<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 25 2026 03:49:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260825T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="25082026-TRY-02" position.sequence="02" ex-ref="25082026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#ff00ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">‘ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி’</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup821027_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">ரா­விட முன்­னேற்­றக்  கழ­கத்தை  வளப்­ப­டுத்­த­வும்,  நலப்­ப­டுத்­த­வும், உறு­திப்­ப­டுத்­த­வும் உணர்­வுப்­ப­டுத்­த­வும் புதிய மறு­சீ­ர­மைப்பை கழ­கத் தலை­வர் திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆகஸ்ட் 22 அன்று நடை­பெற்ற கழ­கத்­தின் தலை­மைச் செயற்­கு­ழு­வில் 
அறி­வித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">‘நிலைக்­கண்­ணா­டி­யில் அடிக்­கடி பார்ப்­ப­தைப் போல அகக்­கண்­ணா­டி­யில்  அடிக்­கடி பாருங்­கள்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">என்­பார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அப்­படி அகக்­கண்­ணா­டி­யில் பார்க்­கும் பட­ல­மா­கத்­தான் தலை­வர் 
அவர்­க­ளின் உரை அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">“திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தொடங்­கப்­பட்டு 75 ஆண்­டு­கள் கடந்த பிற­கும்,  கழ­கம் வலி­மை­யோடு  இருப்­ப­தற்­கான  கார­ணம், நம் 
அமைப்­பு­ முறைதான்.  தலை­வர் கலை­ஞ­ரின் வரி­களை நீங்க 
மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள். ‘இந்த கரு­ணா­நி­தி­யின் வாழ்வு முடிந்­தா­லும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வாழ்வு முடி­யாது! அதனை, அதன் அமைப்­பு­முறை காப்­பாற்­றும்!’ என்­றார். இது­தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் குறிப்­பிட்­டது. அப்­ப­டிப்­பட்ட அந்த அமைப்பு முறை­யின் வலி­மை­யால்­தான், நாம் நிற்­கி­றோம்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">என்று தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் குறிப்­பிட்­டார்­கள். இந்த அமைப்பு முறை­யின் பலத்­தில்­தான் கழ­கம் இயங்­கு­கி­றது. அதனை மேலும் மேலும் வலி­மைப்­ப­டுத்­தவே 
தலை­வர் நினைக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">கிளைக்­க­ழ­கச் செய­லா­ளர்­கள், வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் 
அதி­க­பட்ச வயது 45 என்­றும்,  மாந­க­ர–­ந­க­ர–­பே­ரூர்–வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளின் அதி­க­பட்ச வயது 50 என்­றும், பேரூர்க் கழ­கச் 
செய­லா­ள­ர்களின் அதி­க­பட்ச வயது 60 என­வும்,  பகு­திக் கழ­கச் 
செய­லா­ளர்­க­ளின் அதி­க­பட்ச வயது 60 என­வும், நக­ரக் கழ­கச் 
செய­லா­ளர்களின் அதி­க­பட்ச வயது 60 என­வும்,  ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ள­ர்களின் அதி­க­பட்ச வயது 60 என­வும் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது. 
ஒரு­வர் அதி­க­பட்­சம் இரண்டு முறை மட்­டுமே அப்­பொ­றுப்பை வகிக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">வரு­வாய் மாவட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு ஒரு கழக மாவட்­டம் என்ற வகை­யில் மறு­சீ­ர­மைப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இனி 110 மாவட்­டங்­க­ளாக கழக அமைப்பு இயங்­கும்.  மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரின் அதி­க­பட்ச வயது 70 என நிர்­ண­யிக்­கப்படு­கி­றது. ஒரு­வர் அதி­க­பட்­சம் மூன்று முறை மட்­டுமே அப்­பொ­றுப்பை வகிக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">புதிய புதிய உடன்­பி­றப்­பு­கள் பொறுப்­பு­க­ளுக்கு வர வேண்­டும், பொறுப்­பு­க­ளுக்கு வரு­கி­ற­வர்­கள் புத்­து­ணர்­வு­டன் செயல்­பட 
வேண்­டும், ‘நமக்­கும் ஒரு வாய்ப்பு வரும்’ என்று தொண்­டர்­கள் கரு­திச் செயல்­பட வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் இந்த மாறு­தல்­களை 
தலை­வர் அவர்­கள் செய்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">காலங்­கள் தோறும் கழ­கம் தன்னைப் புதுப்­பித்­துக் கொண்டே 
வந்­துள்­ளது. இத்­த­கைய புதுப்­பிப்பு என்­பது ஆட்­சி­யில் இருந்­த­போ­தும் நடந்­துள்­ளது. எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போ­தும்  நடந்­துள்­ளது. தேர்­தல் முடி­வு­க­ளுக்­கும் இதற்­கும் தொடர்பு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">கழ­கத்­துக்குத் தடை என்­கிற அள­வுக்கு எல்­லாம் பேர­றி­ஞர் அண்ணா காலத்­தில் சிக்­கல்­கள் ஏற்­பட்­டது. அப்­போ­தும் அண்ணா அவர்­கள், கழ­கத்­தைக் கட்­டிக்காக்­கும், வலி­மைப்­ப­டுத்­தும் முடி­வு­க­ளைத்­தான் எடுத்­தார்­கள். அமைப்பு பல­மாக இருந்­தால் 
கொள்­கை­யைக் காப்­பாற்ற­லாம் என்­பதே அண்­ணா­வும் கலை­ஞ­ரும் 
போட்­டுத் தந்த பாதை ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்­காக 
உரு­வான இயக்­கம் அல்ல. கழ­கம் தொடங்­கிய போது தேர்­த­லில் நிற்­கும் எண்­ணமே இல்லை. தமிழ்ச் சமு­தா­யத்­தின் விடி­ய­லுக்­காக உரு­வான 
விடு­தலை இயக்­கம். சமூக சீர்­தி­ருத்­தக் கோட்­பா­டு­களை நடை­மு­றைப் ப­டுத்த அதி­கா­ரம் தேவை என்ற அவ­சி­யத்தை உணர்ந்து தேர்­த­லில் நின்று 
சட்­ட­மன்­றத்­தைக் கைப்­பற்­றிய இயக்­கம். எனவே தேர்­தல் வெற்றி, 
தோல்­வி­க­ளுக்­காக எந்த முடி­வும் இது­வரை எடுக்­கப்­பட்­டது இல்லை. எந்த முடி­வும் கொள்­கையை வென்­றெ­டுக்க உரு­வாக்­கப்­ப­டுமே தவிர, 
தேர்­தலை மன­தில் வைத்து அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">இயக்­கம் என்ற ஒன்று இருந்­தால் தான் கொள்­கையை வெற்றி பெற வைக்க முடி­யும். அந்த இயக்­கத்தை வலி­மைப்­ப­டுத்த தொண்­டர்­க­ளின் சிந்­த­னைக்கு தலைமை முக்­கி­யத்­து­வம் தரும். அதுவே செயற்­குழு, பொதுக்­குழு ஆகும். இப்­போது தலை­வர் உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கும்  மறு­சீ­ர­மைப்­புத்  திட்­ட­மும்  தொண்­டர்­க­ளின் எண்­ணத்­தில் இருந்­தவை தான். 38 குழுக்­கள் தமிழ்­நாடு முழு­வ­தும் சென்று உடன்­பி­றப்­பு­க­ளின் கருத்­துக்­க­ளைப் பெற்று கொடுத்த தக­வல்­களை முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு தலை­மை­யி­லான குழு  தொகுத்து வழங்கி 
இருக்­கி­றது. அவர்­கள் கொடுத்த ஆலோ­ச­னை­களைத் தான் சீர­மைப்­புத்  திட்­ட­மாக  வடித்­தெ­டுத்து வழங்­கப்பட்­டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">உறுப்­பி­னர் சேர்க்கை – கட்­சித் தேர்­தல் – புதிய பொறுப்­பா­ளர்­கள் பொறுப்பு ஏற்­பது என கழ­கம் பர­ப­ரப்­பாக இருக்­கி­றது. இது­தான் பல ஆண்­டு­க­ளாக உடன்­பி­றப்­பு­கள் அனை­வ­ரும் எதிர்­பார்த்­துக் 
காத்­தி­ருந்த மாற்­றம் ஆகும். அத­னைத்­தான் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் செய்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">“ஒரு மலை­யைப் பிளந்து கற்­க­ளாக்­கு­கி­றோம். அவற்­றில் ஒரு கல்­லில் விக்­கி­ர­கம் உரு­வாக்­கு­கி­றோம். மற்ற கற்­கள் மண்­ட­பங்­கள் ஆகின்­றன. கோபு­ர­மா­கின்­றன. மதில் சுவ­ரா­கின்­றது. எல்­லாக் கற்­க­ளும் விக்­கி­ர­கங்­கள் ஆகி­விட முடி­யாது. அப்­படி ஆகி­விட்­டால் பிறகு கோயில் இருக்க 
முடி­யாது. விக்­கி­ர­க­மா­யி­ருக்­கிற கல்­லும்; தானும் மற்ற கற்­க­ளைப் போலத்­தான் மலை­யி­லி­ருந்து வந்­தோம் என்­பதை மறந்து விடக்­கூ­டாது. கோயில் இருப்­ப­தால்­தான் விக்­கி­ர­கத்­துக்கு அபி­ஷே­கம் – ஆரா­தனை 
எல்­லாம்! இல்­லை­யேல், அது எந்த மரத்­த­டியோ? அல்­லது படித்­து­றையோ? ஒரு அமைப்­பில் எல்லா பொறுப்­பி­லும் இருப்­போர் உணர்ந்­து­கொள்ள 
வேண்­டிய உண்மை இது!”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">என்­றார் தலை­வர் கலை­ஞர். அத்­த­கைய உணர்ச்­சி­யைத் தான் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஊட்டி 
வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">“ஒவ்­வொரு தொண்­ட­னும் ஒரு நிர்­வா­கி­யாகச் செயல்­ப­டும் போது­தான்  இயக்­கம் வள­ரும்; இயக்­கம் வாழும்!”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.8">என்று ஆணை­யிட்­டுள்­ளார் 
தலை­வர் மு.க.ஸ்டாலின். அத்­த­கைய காலம் உரு­வாக இருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் திருப்­பணி என்­றென்­றும் 
தொட­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>