<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,151,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 25 2026 14:28:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260826T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="26082026-TRY-03" position.sequence="03" ex-ref="26082026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">முக்கியத் திட்டங்களை அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்தும் போக்கைக் கைவிடுவீர்   !</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் கழகம் வெளிநடப்பு! தங்கம் தென்னரசு பேட்டி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup833779_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="ThangamTennara_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Cartton24.8._03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக.26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கும், தொழில் முன்­னேற்­றத்­திற்­கும் அடித்­த­ள­மாக அமை­யும் முக்­கி­யத் திட்­டங்­களை அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­கா­கத் தடுத்து நிறுத்­தும் போக்­கைக் கைவிட வேண்­டும் என முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு நேற்று, அளித்­தப் பேட்­டி­யில் குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு சட்­டப் பேர­வை­யில் முத­ல­மைச்­சர் 110விதி­யின் கீழ் படித்த அறிக்­கை­யில் பரந்­தூர் விமா­ன­ நி­லை­யம் கைவி­டப்­ப­டு­வ­தாக அறி­வித்­தார். இதற்கு விளக்­கம் கேட்­டுப் பேசு­வ­தற்கு சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி துணைத் தலை­வர் கே.என்.நேரு, மற்­றும் கொறடா எ.வ. வேலு ஆகி­யோர் வாய்ப்புக் கேட்­ட­னர். அதற்­குப் பேர­வைத் தலை­வர் அவர்கள் மறுத்­தார். இதை­ய­டுத்து கழக உறுப்­பி­னர்­கள் பேர­வை­யில் இருந்து வெளி­ந­டப்­புச் செய்­த­னர். வெளி­ந­டப்­புக்குப் பின் முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்­டி­ய­ளித்­தார். அப்­போது  அவர் குறிப்­பிட்­ட­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கும், குறிப்­பாக சென்னை மற்­றும் அதன் சுற்­று­
வட்­டா­ரப் பகு­தி­க­ளின் தொழில் வளர்ச்­சிக்­கும் அடித்­த­ள­மா­க­வும், எதிர்­கால பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான முக்­கிய ஆதா­ர­மா­க­வும் அமை­யக்­கூ­டிய பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம் குறித்து விவா­திப்­ப­தற்­காக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்தை பேர­வைத் தலை­வ­ரி­டம் வழங்­கி­யி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய கழ­கக் கொறடா ஏ.வ. வேலு மற்­றும் எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் தொடர்ந்து பல நாட்­க­ளாக வலி­யு­றுத்­தி­யும், இந்த விவ­கா­ரத்தை இன்று எடுத்­துக்­கொள்­கி­றோம், நாளை எடுத்­துக்­கொள்­கி­றோம் என்று ஒவ்­வொரு நாளும் தள்­ளிப்­போட்­டுக் கொண்டே இருந்­த­னர். இறு­தி­யாக, திங்­கட்­கி­ழமை அன்று எங்­க­ளு­டைய கவன ஈர்ப்பை சிறப்பு கவன ஈர்ப்­பாக எடுத்­துக்­கொள்­கி­றோம் என்று எங்­க­ளி­டம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, இந்­தச் சிறப்பு கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­தின் மூலம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மட்­டு­மல்­லா­மல், அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளும் பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டத்­தின் அவ­சி­யம் குறித்­தும், தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லப் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் அதன் முக்­கி­யத்­து­வம் குறித்­தும் அர­சின் கவ­னத்­திற்கு எடுத்­து­ரைக்க இந்த வாய்ப்பை எதிர்­பார்த்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் தமிழ்­நாடு மற்ற மாநி­லங்­க­ளு­ட­னும், அண்டை மாநி­லங்­க­ளு­ட­னும் ஒப்­பி­டும்­போது எவ்­வாறு வாய்ப்­பு­களை இழந்து வரு­கி­றது என்­ப­தை­யும், எதிர்­காலத்­தில் அந்த வாய்ப்­பு­களை எவ்­வாறு பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்­ப­தை­யும் இந்த அவை­யில் விரி­வாக எடுத்­து­ரைப்­ப­தற்­கா­கவே இந்­தச் சிறப்பு கவன ஈர்ப்­பில் உரை­யாற்­றத் தயா­ராக இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">குரல்வளையை நெரிக்கும் சூழ்நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அவை கூடி­ய­வு­டன், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் 110விதி­யின் கீழ் பரந்­தூர் விமான நிலை­யம் தொடர்­பாக ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டார். அத­னைத் தொடர்ந்து, விதி­க­ளின்­படி இதற்கு மேல் விவா­திக்க எது­வும் இல்லை என்று கூறி, எதிர்க்­கட்­சி­க­ளின் குரலை ஒலிக்­க­வி­டா­மல் செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் எதிர்­கால வளர்ச்சி, பரந்­தூர் விமான நிலை­யத்­தின் அவ­சி­யம், அத­னைச் செயல்­ப­டுத்­து­வ­தில் நாம் எதிர்­கொள்­ளக்­கூ­டிய சவால்­கள், குறிப்­பாக இந்­தத் திட்­டம் நிறை­வே­றா­விட்­டால் தமிழ்­நாடு எதிர்­கொள்­ளக்­கூ­டிய பொரு­ளா­தா­ரத் தேக்­க­நிலைஆகி­யவை குறித்து எதிர்க்­கட்­சி­கள் தங்­க­ளு­டைய கருத்­து­களை­யும், நியா­யங்­க­ளை­யும் இந்தஅவை­யில் எடுத்­து­ரைப்­ப­தற்­கான வாய்ப்புமுற்­றி­லு­மாக மறுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் மிகமுக்­கி­ய­மான இந்­தப் பிரச்­சி­னை­யில்எதிர்க்­கட்­சி­க­ளின் கருத்­து­க­ளைப் பதிவு செய்­வ­தற்­கான வாய்ப்பை திட்­ட­மிட்டுமறுக்­கும் வகை­யில், 110 விதி­யின் கீழ் அறிக்கை வெளி­யி­டப்­பட்டு, அதற்கு மேல் விவா­தம்இல்லை என பேர­வைத் தலை­வர் இன்றுஅறி­வித்­துள்­ளார். இதன் மூலம், முக்­கி­ய­மான மக்­கள் பிரச்­சி­னை­யில் எதிர்க்­கட்­சி­க­ளின் குரலை நெரிக்­கக்­கூ­டிய ஒரு சூழ்­நி­லையை பேர­வைத் தலை­வர் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் மீண்­டும் எழுந்து 110 விதி­யின் கீழ் வெளி­யி­டப்­பட்ட அறி­விப்­பின்மீது விவா­திக்க நாங்­கள் விரும்­ப­ வில்லை.ஏற்­க­னவே, 55விதி­யின் கீழ் பரந்­தூர் விமான நிலை­யம் தொடர்­பாக கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்தை நாங்­கள் அளித்­தி­ருக்­கி­றோம். அத­னைச் சிறப்பு கவன ஈர்ப்­பாக எடுத்­துக்­கொள்­வ­தாக நீங்­கள் பல­முறை உறு­தி­ய­ளித்­தி­ருந்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­படி இருக்­கும்­போது, இன்று 110விதி­யின் கீழ் ஓர் அறிக்­கையை வெளி­யிட்டு, அதன் மீது விவா­தத்­திற்கு வாய்ப்­பில்லை என்று கூறி, நாங்­கள் ஏற்­க­னவே அளித்­தி­ருந்த கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­தின் மீதான விவா­தத்தை திட்­ட ­மிட்டு தவிர்த்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, 55 விதி­யின் கீழ் நாங்­கள் அளித்­துள்ள கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்தை அவை­யில் எடுத்­துக்­கொண்டு விவா­திக்க உரிய வாய்ப்பை வழங்க வேண்­டும்என்று நம்­மு­டைய எதிர்க்­கட்­சித் துணைத்தலை­வ­ரும், நம்­மு­டைய கழ­கக் கொறடா ஏ.வ.வேலு­வும் வலி­யு­றுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னைத் தொடர்ந்து பல­முறை வலி­யு­றுத்­தி­யும், இந்த அரசு எங்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளுக்­குச் செவி­சாய்க்­காத நிலை­யில், எதிர்க்­கட்­சி­க­ளின் அடிப்­படை ஜன­நா­யக உரி­மையை மறுத்து, அவர்­க­ளின் குரலை ஒடுக்கி, முக்­கி­ய­மான கருத்­து­களை அவை­யில் பதிவு செய்­வ­தற்­கான வாய்ப்­பை­யும் மறுத்­துள்ள பேர­வைத் தலை­வ­ரின் நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்து, நாங்­கள் இன்று முழு­மை­யாக வெளி­ந­டப்பு செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பொருளாதார உயர்நிலைக்கு அவசியமான திட்டம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­க­ளு­டைய குரலை அவைக்­குள் பதிவு செய்­யும் வாய்ப்பு மறுக்­கப்­பட்­டா­லும், இந்த விவ­கா­ரத்­தில் உள்ள உண்மைநிலை­மை­க­ளை­யும், தமிழ்­நாட்­டின் எதிர்­கால வளர்ச்­சி­யைப் பாதிக்­கக்­கூ­டிய அம்­சங்­க­ளை­யும் மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­வது எங்­க­ளு­டைய ஜன­நா­ய­கக் கடமை என்று கரு­து­கி­றோம். அத­னால்­தான், வெளி­ந­டப்பு செய்த பின்­ன­ரும் இந்த உண்­மை­களை உங்­க­ளி­டம் எடுத்­து­ரைக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் அனை­வ­ரும் அறிந்­த­வ­கை­யில், ஒரு விமான நிலை­யம் என்­பது ஒரு நக­ரத்­தின் போக்­கு­வ­ரத்­துத் தேவையை 
மட்­டுமே பூர்த்தி செய்­யும் கட்­ட­மைப்பு அல்ல; அது அந்­தப் பகு­தி­யின் பொரு­ளா­தார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்­றும் எதிர்­கால முன்­னேற்­றத்­திற்­கான முக்­கிய அடித்­த­ளம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வரை சென்­னை­யில் அமைந்­துள்ள விமான நிலை­யம் மாநி­லத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும், தொழில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கும், உல­க­ளா­விய வர்த்­த­கத் தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­து­ வ­தற்­கும் மிக முக்­கி­ய­மா­ன­தாக இருந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சுதந்­தி­ரத்­திற்­குப் பிற­கான கால­கட்­டத்­தில், சென்னை விமான நிலை­யம் நாட்­டின் முக்­கி­ய­மான மற்­றும் சிறப்­பான விமான நிலை­யங்­க­ளில் ஒன்­றா­கத் திகழ்ந்­தது. ஆனால், காலப்­போக்­கில் விமா­னப் போக்­கு­வ­ரத்­தின் தேவை மற்­றும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை பெரு­ம­ள­வில் அதி­க­ரித்த நிலை­யில், தற்­போ­தைய விமான நிலை­யத்­தின் திறன் மற்­றும் கட்­ட­மைப்பு போது­மா­ன­தாக இல்­லாத சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால்­தான், சென்­னை­யின் எதிர்­கால வளர்ச்­சி­யை­யும், தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார மற்­றும் தொழில் வளர்ச்­சி­யை­யும் கருத்­தில் கொண்டு, புதிய விமான நிலை­யத்­தின் அவ­சி­யத்தை நாம் தீவி­ர­மா­கப் பார்க்க வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் உள்ள முக்­கி­ய­மான விமான நிலை­யங்­க­ளின் செயல்­பா­டு­களைஒப்­பிட்­டுப் பார்க்­கும்­போது, ஒரு காலத்­தில் சென்னை விமான நிலை­யம் முன்­ன­ணி­யில் இருந்­தது. குறிப்­பாக, 2008ஆம் ஆண்­டில் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்துஅடிப்­ப­டை­யில் சென்னை விமான நிலை­யம் இந்­திய அள­வில் மூன்­றா­வது இடத்­தில் இருந்­தது. அப்­போது பெங்­க­ளூரு விமான நிலை­யம் ஐந்­தா­வது இடத்­தில்­தான் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், கடந்த ஆண்­டு­க­ளில் நிலைமை முற்­றி­லும் தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. இன்று, பெங்­க­ளூரு விமான நிலை­யம் சுமார் 4.5 கோடி பய­ணி­களைக் கையா­ளும் அள­வுக்கு வளர்ந்து, இந்­தி­யா­வின் மூன்­றா­வது பெரிய விமான நிலை­ய­மாக முன்­னே­றி­யுள்­ளது. அதே நேரத்­தில், சுமார் 2.3 கோடி பய­ணி­கள் போக்­கு­வ­ரத்­து­டன் சென்னை விமான நிலை­யம் ஐந்­தா­வது இடத்­திற்­குப் பின்­தங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு காலத்­தில் நம்­மை­விட பின்­தங்­கி­ யி­ருந்த பெங்­க­ளூரு இன்று நம்மை முந்­திச் சென்­றி­ருக்­கி­றது. இது வெறும் விமா­னப் போக்­கு­வ­ரத்து குறித்த புள்­ளி­வி­வ­ரம் அல்ல; தமிழ்­நாட்­டின் எதிர்­கால தொழில் மற்­றும் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் நாம் இழந்து கொண்­டி­ருக்­கும் வாய்ப்­பு­க­ளுக்­கான ஓர் எச்­ச­ரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, விமான சரக்கு போக்­கு­வ­ரத்­தும் மிக முக்­கி­ய­மா­ன­தா­கும். ஒரு மாநி­லத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் சரக்­கு­களை விரை­வா­க­வும், அதிக அள­வி­லும் கையா­ளக்­கூ­டிய விமான நிலை­யக் கட்­ட­மைப்பு முக்­கி­யப் பங்கு வகிக்­கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த வகை­யில், பெங்­க­ளூரு விமானநிலை­யம் இன்று ஏறத்­தாழ 5.5 லட்­சம் டன் அள­வி­லான சரக்­கு­க­ளைக் கையா­ளும் திற­னு­டன் வேக­மாக முன்­னே­றி­ யுள்­ளது. குறிப்­பாக, ஐரோப்­பிய நாடு­க­ளு­ட­னான வர்த்­த­கத் தொடர்­பு­களை வலுப்­ப­டுத்தி, சர்­வ­தேச சரக்கு போக்­கு­வ­ரத்­தில் வலு­வான இணைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விமான நிலை­யம் என்­பது பய­ணி­களின் வருகை, புறப்­பாடு மட்­டு­மல்ல; அது தொழில், வர்த்­த­கம், ஏற்­று­மதி, முத­லீடு என ஒரு மாநி­லத்­தின் பொரு­ளா­தார இயக்­கத்­தையே தீர்­மா­னிக்­கும் முக்­கி­யக் கட்­ட­மைப்பு. அந்த வகை­யில், சரக்கு போக்­கு­வ­ரத்­தி­லும் தமிழ்­நாடு தனதுமுன்­னேற்­றத்தை தக்­க­வைத்­துக்­கொள்ளவேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் மிகப்பெரிய முன்னேற்றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தச் சூழ்­நி­லை­யில்­தான் தமிழ்­நாட்­டி­லும், குறிப்­பாக சென்­னை­யி­லும், நமக்குஒரு கிரீன் ஃபீல்ட் ஏர்­போர்ட் (Greenfield Airport) வர வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. இந்த கிரீன் ஃபீல்ட் ஏர்­போர்ட் அமைந்­தால்­தான் சென்­னை­யி­னு­டைய தொழில் வளர்ச்சி இன்­னும் பன்­ம­டங்கு வளர்ச்­சி­ய­டை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏனென்­றால், சென்­னை­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளில் இன்று ஏரா­ள­மான தொழிற்­சா­லை­கள் அமைந்­துள்­ளன. குறிப்­பாக, ஸ்ரீபெ­ரும்­பு­தூர் பகு­தி­யில் அமைந்­துள்ள தொழிற்­சா­லை­கள் இதற்கு மிகச் சிறந்த எடுத்­துக்­காட்டு. இன்று எலக்ட்­ரா­னிக்ஸ் ஏற்­று­ம­தி­யில் தமிழ்­நாடு மிகப்­பெ­ரிய முன்­னேற்­றத் தைப் பெற்று, முத­லி­டத்­தில் இருக்­கி­றது என்­றால், அதற்கு ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரில் உரு­வா­கி­யுள்ள தொழில் வளர்ச்­சி­யும், அங்கு அமைந்­துள்ள ஏரா­ள­மான எலக்ட்­ரா­னிக்ஸ் தொழிற்­சா­லை­க­ளும் முக்­கிய கார­ண­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த நிறு­வ­னங்­கள் ஸ்ரீபெ­ரும்­பு­தூர் உள்­ளிட்ட பகு­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து தொழிற்­சா­லை­களை அமைத்­த­தற்கு முக்­கிய கார­ணங்­க­ளில் ஒன்று, எதிர்­கா­லத்­தில் இந்­தப் பகு­தி­யில் ஒரு மிகப்­பெ­ரிய கிரீன் ஃபீல்ட் விமான நிலை­யம் உரு­வா­கும் என்ற நம்­பிக்­கை­யும்­தான். அந்த எதிர்­பார்ப்­பின் அடிப்­ப­டை­யி­லேயே பல்­வேறு தொழில் நிறு­வ­னங்­கள் அப்­ப­கு­தி­யில் முத­லீடு செய்து தங்­க­ளது தொழிற்­சா­லை­களை அமைத்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் கருத்­தில் கொண்­டு­தான், அப்­போ­தைய முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் தமிழ்­நாட்­டி­னு­டைய பொரு­ளா­தா­ரத்தை 2030ஆம் ஆண்­டுக்­குள் ஒரு டிரில்­லி­யன்அமெ­ரிக்க டாலர் 
(1 Trillion USD) அள­விற்கு உயர்த்த வேண்­டும் என்று ஒரு மிகப்­பெ­ரிய இலக்கை நிர்­ண­யித்­தார்­கள். அந்த இலக்கை அடை­வ­தற்கு மிக முக்­கி­ய­ மான அடித்­த­ள­மா­க­வும், ஆதா­ர­மா­க­வும் இருக்­கக்­கூ­டிய இந்த விமான நிலை­யத்தை அமைக்­கும் பணி­க­ளை­யும் அன்­றைக்கே நாம் தொடங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு விமான நிலை­யத்தை அமைப்­ப­தற்­கான இடத்­தைத் தேர்வு செய்­கி­ற­போது, பல முக்­கி­ய­மான கார­ணி­களை நாம் கருத்­தில் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. முத­லில், விமான நிலை­யம் அமைப்­ப­தற்­குத் தேவை­யான அள­விற்கு போது­மான நிலப்­ப­ரப்பு இருக்­கி­றதா என்­ப­தைப் பார்க்க வேண்­டும். அதே­போல, அந்­தப் பகு­தி­யில் வசிக்­கக்­கூ­டிய மக்­கள் எந்த அள­விற்கு குறை­வாக பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­ப­தும் மிக முக்­கி­ய­மான கார­ணி­யா­கும். அதா­வது, குடி­யி­ருப்­பு­கள் மற்­றும் மக்­கள் வசிக்­கும் பகு­தி­கள் குறைந்த அள­வி­லேயே இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்­த­தாக, டெக்­னிக்­கல் ஃபீசி­பி­லிட்டி என்­ப­தும் மிக முக்­கி­யம். நாம் தேர்வு செய்­யக்­கூ­டிய இடங்­க­ளில் விமான நிலை­யத்தை அமைப்­ப­தற்கு எந்­த­வி­த­மான தொழில்­நுட்­பத் தடை­க­ளும், சாத்­தி­ய­மின்­மை­க­ளும் இருக்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, எல்­லா­வற்­றை­யும் நாம் கருத்­தில் எடுத்­துப் பார்க்­கி­ற­போது, சென்­னை­யி­னு­டைய புவி­யி­யல் அமைப்பு நமக்கு நன்­றா­கத் தெரி­யும். சென்­னை­யின் கிழக்­குப் பகுதி முழு­வ­தும் வங்­கக்­க­ட­லாக இருக்­கி­றது. அத­னால், கிழக்­குப் பகு­தி­யில் எந்­த­வி­த­மான வளர்ச்­சிப் பணி­க­ளை­யும் மேற்­கொண்டு விரி­வு­ப­டுத்­து­ வ­தற்­கான வாய்ப்பு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, வட­ப­கு­தி­யைப் பார்த்­தீர்­கள் என்­றால், வட­சென்­னை­யி­லி­ருந்து தொடங்கி எண்­ணூர் வரை­யி­லும் தொடர்ச்­சி­யாக ஏரா­ள­மான தொழிற்­சா­லை­கள் அமைந்­தி­ருக்­கின்­றன. அந்­தத் தொழிற்­சா­லை­க­ளை­யும் தாண்­டிச் சென்­றால், பழ­வேற்­காடு என்­கிற புலிக்­காட் ஏரி அமைந்­தி­ருக்­கி­றது. அது மிக முக்­கி­ய­ மான சூழ­லி­யல் அமைப்­பாக இருக்­கி­றது. அதற்­கும் அடுத்து பார்த்­தால் ஆந்­திர மாநி­லத்­தின் எல்லை வந்­து­வி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, கிழக்­குப் பகு­தி­யி­லும் நம்­மால் விரி­வு­ப­டுத்த முடி­யாது; வட­ப­கு­தி­யி­லும் நமக்கு அதற்­கான வாய்ப்பு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தென்­ப­கு­தி­யி­லும் பல்­வேறு இடங்­களை நாம் ஆய்வு செய்­தோம். பரந்­தூர் விமான நிலை­யத்­தைத் தேர்வு செய்­வ­தற்கு முன்­பாக, பல இடங்­க­ளில் தொழில்­நுட்ப ரீதி­யாக விரி­வான ஆய்­வு­களை மேற்­கொண்­டோம். ஏனென்­றால், ஒரு விமான நிலை­யத்­திற்­கான இடத்­தைத் தேர்வு செய்­வது என்­பது நம்­மு­டைய முடிவு மட்­டு­மல்ல; Airports Authority of India (AAI) உள்­ளிட்ட ஒன்­றிய அர­சின் சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்­தும் தேவை­யான அனு­ம­தியை பெற வேண்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னை­யின் தென்­ப­கு­தி­யைப் பார்த்­தால், தாம்­ப­ரத்­தில் நம்­மு­டைய விமா­னப்­ப­டை­யின் ஏர் ஸ்டேஷன் அமைந்­தி­ருக்­கி­றது. அதற்­கென தனி­யான ஏர் ஸ்பேஸ் உள்­ளது. அதைத் தாண்டி தெற்­குப் பகு­தி­யில் சென்­ற­போது, திருப்­போ­ரூர் உள்­ளிட்ட பகு­தி­க­ளை­யும் ஆய்வு செய்­தோம். ஆனால், அங்­கும் விமான நிலை­யம் அமைப்­ப­தற்­கான சாத்­தி­யம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்­கும் மேலும் தெற்­குப் பகு­தி­யில் சென்­றால், படா­ளம் பகு­தி­யில் கல்­பாக்­கம் அணு­மின் நிலை­யம் அமைந்­தி­ருக்­கி­றது. அதே­போல, மற்­றொரு பகு­தி­யில் மிக முக்­கி­ய­மான சூழ­லி­யல் அமைப்­பான வேடந்­தாங்­கல் பற­வை­கள் சர­ணா­ல­ய­மும் உள்­ளது. எனவே, தென்­ப­கு­தி­யி­லும் விமான நிலை­யத்தை அமைப்­ப­தற் கான சாத்­தி­ய­மான இடத்­தைத் தேர்வு செய்­வது மிக­வும் சவா­லா­ன­தாக 
இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">காரணிகளை ஆராய்ந்த பிறகே இடம் தேர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆகவே, சென்­னை­யில் புதிய விமான நிலை­யம் அமைப்­ப­தற்­கான சாத்­தி­ய­மான இடம் மேற்கு பகு­தி­யில்­தான் அமை­கி­றது. மேற்கு பகு­தி­யி­லும், நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­தைப் போல, நிலம் எந்த அள­விற்கு கிடைக்­கி­றது, நிலத்­தின் விலை, எத்­தனை பேர் தங்­கள் இருப்­பி­டங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டும் சூழ்­நிலை உரு­வா­கும், அப்­ப­கு­தி­யில் மிக உயர் மின்­ன­ழுத்த மின் பாதை­கள் போன்ற தொழில்­நுட்­பப் பிரச்சி­னை­கள் ஏதே­னும் உள்­ள­னவா, இரண்டு ரன்­வேக்­கள் அமைப்­ப­தற்­கான போது­மான வாய்ப்­பு­கள் உள்­ள­னவா என்­ப­தை­யெல்­லாம் மிக விரி­வா­க­வும், தொழில்­நுட்ப ரீதி­யா­க­வும் ஆய்வு செய்­தோம். இந்த அனைத்து கார­ணி­க­ளை­யும் முழு­மை­யா­கப் பரி­சீ­லித்த பிற­கு­தான், பரந்­தூர் விமான நிலை­யத்­திற்­கான இட­மா­கத் தேர்வு செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது அவர்­கள் என்ன சொல்­கிறார்­கள் என்­றால், பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டத்தை கைவி­டு­வ­தாக இன்று அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம் குறித்து, ஒன்­றிய அர­சின் அமைச்­ச­ரி­டம் நம்­மு­டைய மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் வில்­சன் கேள்வி எழுப்­பி­ய­போது, இது­வரைஎங்­க­ளுக்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எந்­த­வி­த­மான கோரிக்­கை­யும் வர­வில்லை என்று தெரி­வித்­தி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது ஒரு­பு­ற­மி­ருக்க, இந்­தத் திட்­டத்தை கைவிட்­டி­ருப்­ப­தாக முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருக்­கி­றார்.அர­சாங்­கம் ஒரு கொள்கை முடிவை எடுத்­தி­ருக்­கி­றது. ஆனால், இந்­தத் திட்­டத்­தின் மூல­மாக வரக்­கூ­டிய மிகப்­பெ­ரிய தொழில் வாய்ப்­பு­கள் இன்­றைக்கு மறுக்­கப்­பட்­டி­ருக் 
கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் ஏற்­க­னவே சொன்­ன­தைப் போல, இந்­தத் திட்­டம் அந்­தப் பகு­தி­யில் வரு­வ­தன் மூலம் ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும், சென்­னை­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் மிகப்­பெரிய அள­வில் தொழில் வளர்ச்சி 
ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு உரு­வா­கும். இப்­போது நீங்­கள் என்ன செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­றால், நிலம் கைய­கப்­ப­டுத்­தும் பணிக்­குச் சென்­றி­ருக்­கி­றீர்­கள். ஒரு குறிப்­பிட்ட நோக்­கத்­திற்­காக நிலத்தை கைய­கப்­ப­டுத்­து­கி­றீர்­கள் என்­றால், அந்த நோக்­கத்­திற்­கா­கத்­தான் அந்த நிலத்­தைப் பயன்­ப­டுத்த முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தப் பரந்­தூர் பகு­தி­யில்­கூட பார்த்­தீர்­கள் என்­றால், ஏறத்­தாழ 5,746 ஏக்­கர் நிலத்தை நாம் கைய­கப்­ப­டுத்­து­வ­தாக இருந்­தோம். இதில் ஏறத்­தாழ 90 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான நிலங்­கள் ஏற்­க­னவேகைய­கப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டன. இந்த இடத்­தைத் தேர்வு செய்து, அங்­குள்ள மக்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது, அப்­போது பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக இருந்த எ.வ. வேலு தலை­மை­யில், முன்­னாள் அமைச்­சர் அன்­ப­ர­சன் அவர்­க­ளும் ஒரு குழு­வாக அமைக்­கப்­பட்டு, பல­முறை அங்­குள்ள விவ­சா­யி­ க­ளி­டம் நேர­டி­யா­கப் பேசி, இந்­தத் திட்­டத்­தின் அவ­சி­யத்தை நாங்­கள் எடுத்­துச் சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தப் பேச்­சு­வார்த்­தை­க­ளின் அடிப்­ப­டை­யில், அங்கே இருக்­கக்­கூ­டிய பல­ரும் – ஒரு கிரா­மத்­தைத் தவிர பெரும்­பாலா­ன­வர்­க­ளும் இந்­தத் திட்­டத்­திற்கு ஒப்­புக்­கொண்டு, தங்­க­ளுக்­கான இழப்­பீட்­டுத் தொகை­யை­யும் பெற்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது, இந்­தத் திட்­டம் வேண்­டாம் என்று நீங்­கள் சொல்­லி­விட்­டால், நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டத்­தின்­படி, எந்த நோக்­கத்­திற்­காக நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டதோ, அந்த நோக்­கத்­திற்­கா­கத்­தான் அதை பயன்­ப­டுத்த முடி­யும். அப்­ப­டி­யி­ருக்க, இப்­போது இந்­தத் திட்­டத்­தைக் கைவிட்­டு­விட்­ட­தாக நீங்­கள் சொன்­னால், ஏற்­க­னவே கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட அந்த நிலங்­களை என்ன செய்­யப் போகி­றீர்­கள்? ஏற்­க­னவே இழப்­பீடு பெற்­றி­ருக்­கக்­கூ­டிய மக்­க­ளுக்கு உங்­க­ளு­டைய பதில் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">புதிய இடங்கள் எப்படி இருக்கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சரி, இங்கே விமான நிலை­யம் வர­வில்லை என்­றால், வேறு ஏதே­னும் திட்­டத்தை வைத்­தி­ருக்­கி­றீர்­களா? அப்­ப­டி­யா­னால், அந்­தத் திட்­டம்வரும்­போது அங்கேஇருக்­கக்­கூ­டிய நீரி­யல் சூழ்­நி­லை­கள் மற்­றும் சூழ­லி­யல் பிரச்­ச­னை­கள் தீர்ந்­து­வி­டுமா? அங்கே இருக்­கக்­கூ­டிய விவ­சா­யி­க­ளின் பிரச்­ச­னை­கள் தீர்ந்­து­வி­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு நீங்­கள், இந்த இடத்­தி­லி­ருந்து வேறு ஒரு இடத்­தைப் பார்ப்­போம்; அது குறித்து ஆய்வு நடத்­து­வோம் என்று சொல்­கி­றீர்­கள். அந்­தப் புதிய இடம் எப்­போது பார்க்­கப்­ப­டும்? அங்கே இருக்­கக்­கூ­டிய எத்­தனை பேர் வெளி­யேற்­றப்­ப­டும் சூழ்­நிலை உரு­வா­கும்? அங்கே என்னமாதி­ரி­யான உள்­கட்­ட­மைப்பு இருக்­கி­றது?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே பரந்­தூ­ரில் விமான நிலை­யம் வரப்­போ­கி­றது என்ற அடிப்­ப­டை­யில்­தான், அங்கே மெட்ரோ திட்­டத்­தை­யும் நாம் திட்­ட­மிட்­டி­ருந்­தோம். அதே­போல, பெங்­க­ளூ­ரு–­­சென்னை இடை­யி­லான புதிய நான்கு வழிச்­சா­லை­யும் தற்­போது அமைக்­கப்­பட்டு வரு­கி­றது. அதன் வழித்­த­டத் திட்­டத்­தி­லும் பரந்­தூர் இடம்­பெற்­றி­ருந்­தது. இத்­தனை திட்­டங்­களை உடைத்து இனி நீங்­கள் தேர்வு செய்­யப்­போ­கும் புதிய இடங்­கள் எப்­படி இருக்­கும்? அந்த இடத்­தில் எந்த வகை­யில் இந்த உள்­கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கப் போகி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் ஏற்­க­னவே சொன்­ன­தைப் போல, சென்­னை­யைச் சுற்­றி­யுள்ள பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இது­போன்ற பல்­வேறு பிரச்­ச­னை­கள் உங்­க­ளுக்கு இருக்­கின்­றன. ஆகவே, அதை­யெல்­லாம் நீங்­கள் எவ்­வாறு எதிர்­கொள்­ளப் போகி­றீர்­கள் என்­பதை நான் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>