<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 25 2026 14:30:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260826T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="26082026-TRY-05" position.sequence="05" ex-ref="26082026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி    </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">26.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">எங்கு பார்த்தாலும் ஊழல்! மிகப் பெரிய மாற்றம் எனச் சொல்லி</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="110">ஏமாற்றத்தைத்தான் த.வெ.க. அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">சென்னை கிழக்கு மாவட்டத்தில் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup366180_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup359867_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="udhayasirspee_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="udhayasirspee1_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை,ஆக.26 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எங்கு பார்த்தாலும் ஊழல்! மிகப் பெரிய மாற்றம் எனச் சொல்லி ஏமாற்றத்தைத்தான் த.வெ.க. அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது! என்று சென்னை கிழக்கு மாவட்டத்தில் கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கம் சார்­பில், துறை­மு­கம் தொகு­தி­யில், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நினைவு நாளை முன்­னிட்டு, ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருந்த நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்ச்­சி­யில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு, கழக மூத்த முன்­னோ­டி­க­ளுக்கு பொற்­கிழி – அன்னை தயாளு அம்­மாள் தொண்டு நிறு­வ­னத்­தில் பயிற்சி முடித்த மக­ளிர் – மாண­வர்­கள் – விளை­யாட்டு வீரர்­கள் – மாற்­றுத் திற­னா­ளி­கள் – திரு­நர் உள்­ளிட்­டோ­ருக்கு பல்­வேறு நலத்­திட்ட உத­வி­களை வழங்கி, வாழ்த்­திப் பேசி­னார். இதில் ஏரா­ள­மான பொது­மக்­க­ளும் கழக முன்­ன­ணி­யி­ன­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விழா­வில் கலந்­து­கொண்டு, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ர­வை­எ­திர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கம் சார்­பாக, இன்­றைய தினம் பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்ச்­சி­கள். கழக மூத்த முன்­னோ­டி­க­ளுக்கு பொற்­கிழி, கல்­லூரி மாணவ, மாண­வி­க­ளுக்கு கல்வி ஊக்­கத்­தொகை மற்­றும் உப­க­ர­ணங்­கள், மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­க­ளுக்கு திரள்­நிதி மற்­றும் புத்­தாடை, திரு­நங்­கை­க­ளுக்கு புத்­தாடை மற்­றும் சிறப்பு செய்­தல், விளை­யாட்டு குழுக்­க­ளைச் சேர்ந்த விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கு­தல், இவற்­று­டன் சேர்த்து, தையல் படிப்பை முடித்த சகோ­த­ரி­கள் 300 பேருக்கு தையல் இயந்­தி­ரம், மாற்­றுத் திற­னாளி சகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்ச்சி என்று இன்­றைக்கு மட்­டும் இந்த மேடை­யில் 1,500 பேருக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்ச்­சியை அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதில் கலந்­து­கொள்ள வாய்ப்­ப­ளித்த அண்­ணன் சேகர்­பாபு அவர்­க­ளுக்கு முத­லில் என் நன்­றியை, வணக்­கத்தை பய­னா­ளி­கள் உங்­கள் அத்­தனை பேரின் சார்­பா­க­வும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">போரா­ளி­கள் வீழ்­வ­தில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">`போரா­ளி­கள் சாவ­தில்லை, போரா­ளி­கள் வீழ்­வ­தில்லை’ என்ற தலைப்­பில், அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் இந்த நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­துள்­ளார். தொடர்ந்து 10 நிகழ்ச்­சி­கள் 9–வது நிகழ்ச்­சி­யாக இந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்­டுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கலை­ஞ­ரின் நினைவு நாளை முன்­னிட்டு, இந்த 10 நிகழ்ச்­சி­க­ளை­யும் அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்­ளார். கலை­ஞர் தன் வாழ்­நாள் முழு­வ­தும் அனைத்து மக்­க­ளின் எழுச்­சிக்­கா­க­வும், முன்­னேற்­றத்­துக்­கா­க­வும் தன் இறுதி மூச்சி வரை வாழ்ந்­த­வர். இன்று அவர் வழி­யில் மாண­வர்­கள், மக­ளிர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், மூத்த குடி­மக்­கள், திரு­நர்­கள், கழக மூத்த முன்­னோ­டி­கள் என்று அனைத்து தரப்­பி­ன­ரும் பயன் பெறு­கின்ற வகை­யில், இந்த நிகழ்ச்சி சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்­ளார். இது­போன்ற நலத்­திட்ட நிகழ்ச்­சி­கள், நூற்­று­க­ணக்­கான நிகழ்ச்­சி­களை அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் ஏற்­பாடு செய்­துள்­ளார்­கள். நானே பல நிகழ்ச்­சி­க­ளில் இதே அரங்­கத்­தில் கலந்­து­கொண்­டுள்­ளேன். அத­னால் நாம் இதை ஏதோ புதி­தாக இன்­றைக்­குக் கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­க­ளோடு மக்­க­ளாக நிற்­கும் இயக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் சொன்­னது போல ஆளுங்­கட்­சி­யாக இருந்­த­போ­தும் கொடுத்­தி­ருக்­கி­றோம், இப்­போது எதிர்க்­கட்­சி­யாக இருக்­கின்­ற­போ­தும் அதை­விட வேக­மா­கச் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். ஏனென்­றால், ஆளுங்­கட்­சி­யாக இருந்­தா­லும் சரி, எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் சரி, எந்த வரி­சை­யில் நின்­றா­லும் சரி, என்­றைக்­குமே மக்­க­ளோடு மக்­க­ளாக நிற்­கக்­கூ­டிய இயக்­கம் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதைத்­தான் கலை­ஞர் அவர்­கள் நமக்­குக் கற்­றுக் கொடுத்­தார். நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் அதைச் சொல்­லித்­தான் நம்மை வளர்த்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">குறிப்­பாக, இன்­றைக்கு ஆளுங்­கட்­சி­யாக இருக்­கின்­ற­வர்­க­ளைப் பற்றி நான் உங்­க­ளி­டம் சொல்­லத் தேவை­யில்லை. எல்­லா­ரும் இன்­றைக்கு நேர­லை­யில் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள், தொலைக்­காட்­சி­யில் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு ஆளுங்­கட்­சி­யாக வந்­தி­ருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் எப்­படி இந்த நிலை­மைக்கு வந்­தார்­கள் என்­பதை நாம் யோசித்­துப்­பா­ரக்க வேண்­டும். தேர்­த­லில் நாம் எதிர்­பார்த்­தது ஒரு பெரிய வெற்றி. மீண்­டும் `திரா­விட மாடல் 2.0 ஆட்சி’ அமை­யும் என்று நம்­பிக்­கை­யோடு இருந்­தோம். ஆனால் என்ன செய்­து­விட்­டோம்? தேர்­த­லில் நமக்கு யார் எதிரி என்று தெரி­யா­மல் போய் சண்டை போட்­டு­விட்­டோம். இன்­றைக்கு எதிரி யார் என்று தெரிந்­து­விட்­டது. மீண்­டும் அந்­தத் தவ­றினை நாம் செய்­ய­மாட்­டோம், செய்­ய­மாட்­டீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­னும் குறிப்­பிட்­டுச் சொன்­னால் இந்த கிழக்கு மாவட்­டத்­தில் மாதம் ஒரு நிகழ்ச்­சிக்கு வந்து நான் கலந்­து­கொண்டு இருக்­கி­றேன். ஆனால், ஒரு சிறிய இடை­வேளை. நான்கு மாதங்­க­ளுக்­குப் பிறகு சென்னை கிழக்கு மாவட்­டத்­திற்கு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கவர்ச்­சி­யால் கிடைத்த வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் நினைத்­துக் கொள்­ள­லாம், நான் அவர் மீது கோப­மாக இருக்­கி­றேன், அத­னால் வர­வில்லை என்­று­கூட அவர் மன­தில் தோன்­றி­யி­ருக்­க­லாம். அது கோபம் இல்லை. அது வருத்­தம். வருத்­தம் மட்­டும் இல்லை, அவர் மீது, இந்த மாவட்­டத்­தின் மீது எனக்கு இருக்­கக்­கூ­டிய ஒரு உரிமை. எத்­த­னையோ கார­ணங்­கள் சொல்­ல­லாம். வெற்றி வாய்ப்பை நாம் இழந்­த­தற்கு எத்­த­னையோ கார­ணங்­களை நாம் தேடிக் கண்­டு­பி­டித்­து­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சினிமா மாயை, கவர்ச்சி, இளம் தலை­மு­றை­யி­னர் சமூக ஊட­கங்­க­ளி­லும் கைபே­சி­யி­லும் முழுக்க முழுக்க ஒரு கவர்ச்­சி­யால் ஈர்க்­கப்­பட்டு திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள், நம் தலை­வ­ரின் திட்­டங்­கள் எல்­லாம், சாத­னை­கள் எல்­லாம் இந்த இளம் தலை­மு­றை­யோடு சென்­ற­டை­ய­வில்லை. அத­னால் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம். இப்­படி எத்­த­னையோ கார­ணங்­க­ளைச் சொல்லி நம்மை நாமே சமா­தா­னப் படுத்­திக்­கொள்­ள­லாம். யார் எவ்­வ­ளவு சொன்­னா­லும், கொளத்­தூர் தொகு­தி­யில் தோல்­வியை, வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோம். கொளத்­தூர் தொகு­தி­யின் தோல்­வியை நம்­மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்­தத் தோல்­வியை தய­வு­செய்து யாரும் மறந்­து­வி­டக் கூடாது. அதை நமக்­கெல்­லாம் ஒரு மிகப்­பெ­ரிய பாட­மாக நாம் நம் மன­தில் எடுத்­துக்­கொள்ள வேண்­டும். அடுத்த தேர்­த­லில் நிச்­ச­யம் அந்­தத் தோல்­வி­க­ளை­யெல்­லாம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யாக மாற்­றிக் காட்ட வேண்­டும். கிழக்கு மாவட்ட மக்­கள், நிச்­ச­யம் அதைச் செய்து காட்­டு­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மிகப்­பெ­ரிய தேர்­தல் விபத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு அவர்­கள் ஆட்­சி­யைப் பிடித்­தி­ருக்­க­லாம், முத­ல­மைச்­சர் பொறுப்­பில் அமர்ந்­தி­ருக்­க­லாம், அமைச்­சர்­கள் எல்­லாம் அமர்ந்­தி­ருக்­க­லாம். ஆனால், ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால், அவர்­க­ளுக்கே ஆட்­சிக்கு வரு­வோம் என்ற நம்­பிக்கை இல்லை. ஒரு மிகப்­பெ­ரிய விபத்து போல, இந்­தத் தேர்­தல் நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. ஏன், இன்­னும் சொல்­லப்­போ­னால் மக்­கள் முழு­மை­யாக அவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­க­வில்லை. முழு பெரும்­பான்­மை­யோடு அமர்ந்­தி­ருக்­கி­றார்­களா என்று பார்த்­தீர்­கள் என்­றால் அது­வும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு கட்சி ஆட்­சி­யைப் பிடிக்க வேண்­டும் என்­றால், 118 தொகு­தி­க­ளைப் பிடிக்க வேண்­டும். இப்­போது இருக்­கக்­கூ­டிய ஆட்­சி­யா­ளர்­கள் வெறும் 108 தொகு­தி­க­ளில் மட்­டும்­தான் வெற்றி பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தலைவர் போட்ட பிச்சை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­னும் சொல்­லப்­போ­னால், நம்­மு­டைய தலை­வ­ரின் பெய­ரைச் சொல்லி, நம்­மு­டைய உடன் பிறப்­பு­கள் களத்­தில் வேலை பார்த்து வெற்றி பெற்­ற­வர்­க­ளின் தய­வில்­தான் இன்­றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நாம் தைரி­ய­மா­கச் சொல்­ல­லாம், நம்­மு­டைய தய­வில்­தான் இன்­றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. தலை­வ­ரின் தய­வில்­தான் இந்த ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. நம்­மு­டைய தலை­வர் போட்ட பிச்­சை­யில்­தான் இந்த ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வெற்றி வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோம். எத்­தனை சத­வி­கித வாக்கு வித்­தி­யா­சம் தெரி­யுமா? வெறும் 3 சத­வி­கித வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்­தி­ருக்­கி­றோம். எப்­படி ஆட்­சி­யைப் பிடித்­தார்­கள்? ஆட்­சிக்கு வந்­த­தும், தொடர்ந்து என்­னென்ன நடந்­தன என்­பதை தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள். தண்­டனை போல தின­மும் ஆளு­ந­ரைச் சந்­தித்­து­விட்டு வந்து கொண்­டி­ருந்­தார், இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர். இன்­றைக்­குக் கூப்­பி­டு­வீர்­களா, நாளைக்­குக் கூப்­பி­டு­வீர்­களா என்று கேட்­டுக்­கொண்டே இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஏனென்­றால், பெரும்­பான்மை இல்லை. அதன் பிறகு அ.தி.மு.க–வில் இருக்­கக்­கூ­டிய சில தலை­வர்­க­ளுக்கு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குத் தொடர்ந்து சோஃபா சென்­றது. சோஃபா பின்­னா­லேயே முத­ல­மைச்­சர் வால் பிடித்­துக்­கொண்டு சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அ.தி.மு.க தலை­வர்­க­ளுக்கு மட்­டும் இல்லை, நம்­மு­டன் கூட்­டணி வைத்­துக்­கொண்ட, நம்­மு­டன் சேர்ந்து தேர்­த­லில் வெற்­றி­பெற்ற சில கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும் சோஃபா சென்­றது. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால் என்ன சொன்­னார்­கள்? `ஊழலை ஒழிப்­போம், ஒரு மாற்­றத்தை உண்­டாக்­கு­வோம்’ என்று சொல்லி ஆட்­சிக்கு வந்­தார்­கள். ஆனால், இன்­றைக்கு வந்து என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம் தலை­வர் கொண்டு வந்த திட்­டங்­க­ளின் பெயர்­களை மாற்­றிக்­கொண்டு, இருக்­கி­றார்­கள். மாற்­றம் மாற்­றம் என்று சொல்லி, இன்­றைக்கு இந்த ஆட்­சி­யில் பெயர் மாற்­றம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. எங்கு பார்த்­தா­லும் ஊழல். மிகப்­பெ­ரிய மாற்­றம் மாற்­றம் என்று சொல்லி, இன்­றைக்கு மிகப்­பெ­ரிய ஒரு ஏமாற்­றத்தை இந்த அரசு கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு இந்த ஆட்சி எந்த லட்­ச­ணத்­தில் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று நாம் கூட சொல்­ல­வில்லை. அவர்­க­ளு­டன் கூட்­டணி வைத்­தி­ருக்­கக்­கூ­டிய, ஆத­ரவு கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய கம்­யூ­னிஸ்ட் இயக்­கத் தோழர்­கள் குரல் கொடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். இந்த ஆட்­சி­யின் அநி­யா­யத்தை எல்­லாம் பேச ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆளுங்­கட்­சி­யி­னரே பாலி­யல் வன்­முறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் எங்கு பார்த்­தா­லும் இன்­றைக்­குச் சட்­டம் ஒழுங்கு எந்த நிலை­மை­யில் இருக்­கி­றது என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். இன்­னும் சொல்­லப்­போ­னால் ஆளுங்­கட்­சி­யின் நிர்­வா­கி­களே இன்­றைக்­குத் தொடர் கொலை, கொள்ளை, பாலி­யல் வன்­மு­றை­யில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள். ஒரு பக்­கம் விவ­சா­யி­கள் மிகப்­பெ­ரிய வேத­னை­யில் மாட்­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த ஆட்சி அமைந்து 105 நாட்­கள் ஆகின்­றது. இந்த 105 நாட்­க­ளில் அதி­க­மா­கப் பாதிக்­கப்­ப­டு­வது யார் என்று பார்த்­தீர்­கள் என்­றால், விவ­சா­யப் பெருங்­குடி மக்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் வாக்­கு­று­தி­யில் என்ன சொன்­னார்­கள்? வாங்­கிய பயிர்க்­க­டன் அனைத்­தை­யும் தள்­ளு­படி செய்­வோம். ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் எல்­லா­வற்­றை­யும் புரட்­டிப் போடு­வோம். முழு பயிர்க்­க­டன் தள்­ளு­படி என்று சொன்­னார்­களா இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு 25–வது நாள் ஓர் அறி­விப்பு, திரைப்­ப­டங்­க­ளுக்கு போஸ்­டர் அடிப்­பது போல 25–வது நாள் ஓர் அறி­விப்பு, 50–வது நாள் ஓர் அறி­விப்பு, 100–வது நாள் ஓர் அறி­விப்பு என்று முத­ல­மைச்­சர் கட்­டம் கட்­ட­மாக அறி­வித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­யைப் பேசி­ய­தற்­காக என்னை கைது செய்­தார்­கள். அரசு செல­வில் தஞ்­சா­வூர் வரை என்னை அழைத்­துச் சென்று `ரோடு ஷோ’ நடத்­திக் காட்­டி­ய­து­தான் இந்த அர­சின் ஒரு சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என்னை மட்­டும் இல்லை, மூத்த உறுப்­பி­னர்­கள், முன்­னாள் அமைச்­சர் பெரு­மக்­க­ளை­யெல்­லாம் தொடர்ந்து கைது செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டும் இல்லை, இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளின் கண்­களை உறுத்­து­வது, இன்­றைக்கு இளம் தலை­மு­றை­யி­னர் நிறைய பேர் நம் தலை­வர் பக்­கம், நம்­மு­டைய கழ­கத்­தின் பக்­கம் ஈர்க்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். Gen–Z தலை­மு­றை­யி­னர் வரு­கி­றார்­கள், தொடர் கூட்­டங்­கள் நடத்­து­கி­றார்­கள். அவர்­கள் மீதும் இலக்கு வைக்­கப்­பட்டு, இந்த ஆட்­சி­யா­ளர்­கள் தொடர்ந்து வழக்­கு­க­ளைப் பதிவு செய்து அவர்­க­ளை­யும் கைது செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">துறை சார்ந்த அமைச்­சர்­கள் பேசு­வ­தில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவற்­றை­யெல்­லாம் எதிர்த்­துத்­தான், இன்­றைக்கு நாம் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கா­கத் தொடர்ந்து போரா­டிக்­கொண்டு இருக்­கி­றோம், குரல் கொடுத்­துக் கொண்டு இருக்­கி­றோம். தமிழ்­நாட்டு மக்­க­ளின் பிரச்­சி­னை­களை நாங்­கள் சட்­ட­மன்­றத்­தில் எழுப்­பிக் கொண்டு இருக்­கி­றோம். ஆனால், அதற்கு முத­ல­மைச்­சர் ஏதா­வது ஒரு கேள்­விக்­குப் பதில் சொல்­கி­றாரா என்று நீங்­கள் யோசித்­துப் பாரக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு அமைச்­ச­ர­வை­யில் கிட்­டத்­தட்ட 30 அமைச்­சர்­கள் இருக்­கி­றார்­கள். ஆனால், இந்த அமைச்­ச­ர­வை­யில் பார்த்­தீர்­கள் என்­றால், வெறும் மூன்று அமைச்­சர்­கள்­தான், எந்த அமைச்­ச­ருக்­குக் கேள்வி கேட்­டா­லும், இந்த மூன்று அமைச்­சர்­கள்­தான் பதில் சொல்­வது வழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் தொடர்ந்து சொல்­லிக்­கொண்டு இருப்­பது, அமைச்­சர்­கள் யார் என்று எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. ஏனென்­றால், ஒவ்­வொரு துறைக்­கும் அந்­தத் துறை சார்ந்த அமைச்­சர் பதில் சொன்­னால்­தான் நமக்­குத் தெரி­யும். சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் யார் என்று தெரி­ய­வில்லை. இதனை நான் சொல்­லும்­போது கிண்­டல் செய்­கி­றேன் என்று சொன்­னார்­கள். இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னரே, அவை­யில் சொல்­கி­றார் நான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று சொன்னா வெளி­யில் நம்ப மாட்­டேன் என்­கி­றார்­கள் என்றே சொல்­கி­றார். இப்­ப­டிப்­பட்ட ஒரு ஆட்சி இன்­றைக்கு நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திசைத்­தி­ருப்­பும் உத்தி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கேள்வி எழுப்­பி­னால் எந்­தத் துறை அமைச்­ச­ரி­ட­மும் அது சம்­பந்­த­மான பதிலே கிடை­யாது. திசைத்­தி­ருப்­பும் உத்­தி­தான், மடை மாற்­றும் உத்­தி­யைத்­தான் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு சட்­ட­மன்­றத்­தில் என்ன நடந்­தது என்­ப­தைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் செந்­தில் பாலாஜி அவர்­கள் மின்­வெட்­டுப் பிரச்­சி­னை­யைப் பற்­றிப் பேசிக்­கொண்டு இருக்­கி­றார். மின்­சா­ரக் கட்­ட­ணம் அதி­க­மாக வந்­துள்­ளது என்று ஒரு குற்­றச்­சாட்டை வைக்­கி­றார். ஆனால், அதற்­குப் பதில் சொல்­லத் துப்­பில்­லாத ஒரு அமைச்­சர் எழுந்து, வேண்­டு­மென்றே அதை மடை­மாற்­றம் செய்ய, நம்­மைச் சீண்­டு­வது போல சில வார்த்­தை­கள் பேசு­கி­றார். அதற்­குத்­தான் எழுந்து எழுந்து நாங்­கள் பதில் சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றோம். அது­தான் இன்­றைக்­குத் தலைப்­புச் செய்­தி­க­ளாக வந்து கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உண்­மை­யாக என்ன தலைப்­புச் செய்தி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வந்­தி­ருக்க வேண்­டும்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தி.மு.க. குரல் கொடுத்­தது, மக்­கள் பிரச்­சி­னை­யான மின்­வெட்­டுப் பிரச்­சினை சம்­பந்­த­மாக தி.மு.க குரல் கொடுத்­தது, சட்­ட­மன்­றத்­தில் பேசி­யது, இந்த அரசு என்ன பதில் சொன்­னார்­கள் என்­ப­து­தான் தலைப்­புச் செய்­தி­க­ளில் வந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் அன்று என்ன தலைப்­புச் செய்தி வந்­தது? ‘உத­ய­நி­தி­யும் அமைச்­ச­ரும் மோதல்’. இது வந்­தி­ருக்க வேண்­டுமா? இதனை யோசித்­துப் பாருங்­கள். இந்த அரசு அமைந்­த­தில் இருந்து முதல் நாளில் இருந்து முழுக்க முழுக்க திசை­தி­ருப்­பும் உத்­தி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான்­தான் பேர­வைத் தலை­வ­ரி­ட­மும் சொன்­னேன். நாங்­கள் ஒரு கேள்வி கேட்­டால், நாங்­களே வியக்­கும் வகை­யில், எங்­க­ளைத் திருப்­பிக் கேள்வி கேட்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வெளி­யில் பார்க்­கின்ற மக்­க­ளுக்கு யார் ஆளுங்­கட்சி, யார் எதிர்க்­கட்சி என்­பது என்­ன­வென்றே புரி­ய­வில்லை. பொது­வாக, எதிர்க்­கட்­சி­கள் கேள்வி கேட்­பார்­கள், ஆளுங்­கட்சி அதற்­கான பதி­லைக் சொல்­வார்­கள். ஆனால், இங்கே அவை­யில் எங்­க­ளைப் பார்த்து ஆளுங்­கட்சி கேள்வி கேட்­கி­றார்­கள், நாங்­கள் பதில் சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றோம். கேள்வி கேட்­டால்­கூட பர­வா­யில்லை, பதில் சொல்­லி­வி­ட­லாம். பாட்டு பாடி­னால், நாங்­கள் என்ன செய்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சபா­நா­ய­க­ருக்­கும் தெரி­ய­வில்லை. ஏனென்­றால், அவ­ரும் பாட்டு பாடு­கி­றார். எங்­க­ளுக்கே சந்­தே­கம் வந்­து­வி­டு­கி­றது. நாங்­கள் சட்­ட­மன்­றத்­திற்­குத்­தான் வந்து இருக்­கி­றோமா, இல்லை `சூப்­பர் சிங்­கர்’ நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இப்­படி ஒரு கேடு­கெட்ட ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பொது­வாக ஒரு அரசு நடக்­கும்­போது, எதிர்க்­கட்­சி­கள் வேக­மா­கப் பேசு­வார்­கள், நிறைய குற்­றச்­சாட்­டு­கள் வைப்­பார்­கள். அப்­போது பேர­வைத் தலை­வர் எதிர்க்­கட்­சி­கள் பேசு­வதை அவைக்­கு­றிப்­பில் இருந்து தொடர்ந்து நீக்­கு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆளுங்­கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­கள் பதில் சொல்­வார்­கள், வேண்­டு­கோள் விடுப்­பார்­கள். `பேர­வைத் தலை­வர் அவர்­களே, தவ­றான வார்த்­தை­யைப் பயன்­ப­டுத்­து­கி­றார், அவைக்­கு­றிப்­பில் இருந்து நீக்­குங்­கள் என்று கோரு­வார்­கள். ஆனால், இந்த அர­சில் என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது? இந்­தச் சட்ட சபை­யில் என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது? தய­வு­செய்து கூர்ந்து கவ­னி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சட்­ட­சபை வர­லாற்­றி­லேயே முதல்­மு­றை­யாக, எதிர்க்­கட்­சி­யி­னர் நாங்­கள் பேசு­வதை விட, ஆளுங்­கட்­சி­யி­னர் பேசு­வதை, அமைச்­சர்­கள் பேசு­வதை, ஆளுங்­கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பேசு­வதை சபா­நா­ய­கர் அவைக்­கு­றிப்­பில் இருந்து தொடர்ந்து நீக்­கிக் கொண்டே இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மில்லை, பொது­வாக நீக்­கும் போது என்ன சொல்­வார்­கள்? இப்­போது நாங்­கள் பேசும்­போது சபா­நா­ய­கர் நீக்­கி­விட்­டார் என்­றால் நாங்­கள் கேட்­போம், நான் என்ன தவ­றா­கச் சொல்­லி­விட்­டேன்? அது ஒன்­றும் மர­புக்கு மாறான வார்த்தை கிடை­யாது, தய­வு­செய்து பரி­சீ­லி­யுங்­கள் என்று சொல்­வோம். ஆனால் இப்­போது இருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­கள் எல்­லாம் என்ன செய்­கி­றார்­கள்? பேசிக்­கொண்டே இருக்­கி­றார்­கள், பொய்க் குற்­றச்­சாட்­டு­களை என் மீது வைக்­கி­றார்­கள், வைத்­து­விட்டு, பேர­வைத் தலை­வ­ரி­டம், அவர்­களே `நீக்­கி­வி­டுங்­கள், நீக்­கி­வி­டுங்­கள்’ என்று, சொல்­லி­வி­டு­கி­றார்­கள் இப்­ப­டிப்­பட்ட ஒரு கேடு­கெட்ட ஆட்­சியை இது­வ­ரைக்­கும் தமிழ்­நாடு பார்த்­ததே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தலை­வர் நேரலை கொடுத்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதில் நம்­மி­டம் சவால் வேறு விடு­கி­றார்­கள். `பார்த்­தீர்­களா, நாங்­கள்­தான் முதன்­மு­த­லில் நேரலை கொடுத்­தோம்’ என்று பேசு­கி­றார்­கள். நான் சொன்­னேன், முதன்­மு­த­லாக சட்­டப்­பே­ரவை நிகழ்ச்­சியை நேர­லை­யில் கொடுத்­ததே எங்­க­ளு­டைய தலை­வர், நம்­மு­டைய அரசு, திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு. 2021–ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­த­வு­டனே நம் தலை­வர் நேரலை கொடுத்­தார். கேள்வி நேரம் ஒவ்­வொரு நாளும் ஒன்­றரை மணி நேரம், 10 கேள்­வி­கள், ஒவ்­வொரு அமைச்­ச­ரும் இரண்டு மூன்று கேள்­வி­கள், துணைக் கேள்­வி­கள் கேட்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், இன்­றைக்கு இந்த ஆட்சி அமைந்து இத்­தனை நாள் ஆகி­விட்­டது. கிட்­டத்­தட்ட நான்கு மாதங்­கள் ஆகப்­போ­கின்­றது, இது­வ­ரைக்­கும் கேள்வி நேரத்­தையே எடுப்­ப­தற்­குத் துப்­பில்­லாத ஒரு அரசு இன்­றைக்கு நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நாங்­கள் நேர­லையை நிறுத்த வேண்­டும் என்று சொல்­லவே இல்லை. நேரலை ஒளி­ப­ரப்­பிற்கு எதி­ராக நாங்­கள் பேசவே இல்லை. கொடுங்­கள், தய­வு­செய்து கொடுங்­கள். ஆனால், உங்­க­ளு­டைய அமைச்­சர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­துங்­கள். உங்­கள் அமைச்­சர் சொல்­கின்ற வார்த்­தையை, சொல்­கின்ற குற்­றச்­சாட்­டு­க­ளைப் சபா­நா­ய­கர் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும். ஏனென்­றால் இஷ்­டத்­திற்­குப் பேசி­வி­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எதற்கு எடுத்­தா­லும் நம்­மைக் குறை சொல்­வது. நாம் ஏதா­வது ஒரு கேள்வி கேட்­டால் அவர்­கள் உடனே என்ன தெரி­யுமா சொல்­கி­றார்­கள்? தி.மு.க ஆட்­சி­யில் இது நடக்­க­வில்­லையா? எங்­கள் ஆட்­சி­யின் மீது குறை இருக்­கி­றது என்­று­தானே மாற்­றம் என்று சொல்­லிக் கொண்டு, மக்­கள் உங்­களை அமர வைத்­தி­ருக்­கி­றார்­கள்? அதற்­குப் பதில் சொல்­லுங்­கள் என்­றால், அதை மடை­மாற்ற வேண்­டி­யது. இத­னைத் தொடர்ந்து இந்த அரசு செய்து கொண்­டி­ருக்­கி­றது. அது­மட்­டு­மில்லை, இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு, ஆனால் இது மூன்று மாத­மா­கச் சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். ஃபைல் தயா­ராக இருக்­கி­றது, திறந்­து­வி­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு முத­ல­மைச்­சரே சொல்­கி­றார், மூன்று ஃபைல் தயா­ராக இருக்­கின்­றன, என் மேசைக்கே வந்­து­விட்­டன, மேசை­யின் மேலேயே வைத்­தி­ருக்­கி­றேன், அதைத் திறக்க வைத்­து­வி­டா­தீர்­கள் என்று. திறங்­கள், யார் உங்­களை நிறுத்­தி­யது? அதா­வது மிரட்­டு­கி­றா­ராம். அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சோஃபா கொடுத்­தார் அல்­லவா, அது­போல ஃபைல் என்று மறை­மு­கச் சொல் வைத்து நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர்­களை, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை மிரட்ட முயற்­சிக்­கி­றா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வாயைத் திறக்­க­வில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வெள்­ளிக்­கி­ழமை அன்று நான் போயி­ருந்­தேன். அவர் அன்று பேசும்­போது நான் அவை­யில் இல்லை. அடுத்த நாள் நான் சென்­றி­ருந்­தேன், அவர் அவைக்கு வர­வில்லை. அதன் பிறகு அடுத்த நாள் நான் காலை­யில் சென்­று­விட்­டேன். நம் அமைச்­சர்­கள் எல்­லாம் பேசுங்­கள். நான் சொன்­னேன் ஃபைல் விஷ­யம் என்று ஒன்று சொல்லி இருக்­கி­றாரே முத­ல­மைச்­சர், அதைப்­பற்­றிப் பேச வேண்­டும் என்­ற­வு­டனே, நான் சொன்­னேன் அவர் வரட்­டும். அவரை வைத்­துக்­கொண்டே கேட்­போம், அவர்­தானே சொன்­னார் என்று முத­ல­மைச்­சர் வந்­த­வு­டனே எழுந்து கேட்­டேன். இது­வ­ரைக்­கும் வாயைத் திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தைரி­யம் இருந்­தால் திறந்து பாருங்­கள் ஃபைலை. இந்த மிரட்­டல்­க­ளுக்­கெல்­லாம் நாங்­கள் பயப்­பட மாட்­டோம். ஏன் திறக்க மறுக்­கி­றீர்­கள்? ஜோசி­யக்­கா­ரர் சொன்­னால்­தான் திறப்­பீர்­களா? என்று கேட்­டேன். அதை­யும் நீக்­கி­விட்­டார்­கள். ஜோசி­யக்­கா­ரர் என்­பதை நீக்­கு­கி­றோம். ஏங்க, ஜோசி­யக்­கா­ரர் அப்­பா­யின்­மென்டை நீக்­கி­னீர்­கள், ஜோசி­யக்­கா­ரர் என்­கிற வார்த்­தை­யை­யும் இப்­போது நீக்­கி­விட்­டீர்­கள். பர­வா­யில்லை. ஆனால், தய­வு­செய்து முத­ல­மைச்­ச­ரி­டம் வேண்­டு­கோள், அந்த மூன்று கோப்­பு­க­ளை­யும் சீக்­கி­ர­மா­கத் திறந்து பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த மிரட்­டு­கின்ற வேலை­யை­யெல்­லாம் தி.மு.க.கார­னி­டம் வைத்­துக்­கொள்­ளா­தீர்­கள், இதற்­கெல்­லாம் நாங்­கள் பயப்­பட மாட்­டோம் என்று சொல்­லி­விட்டு வந்­தேன். இது நடந்­தது சென்ற வெள்­ளிக்­கி­ழமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கிட்­டத்­தட்ட 72 மணி நேரம் ஆகி­விட்­டது. நான் கூட இந்த முத­ல­மைச்­ச­ருக்­குக் கொஞ்­ச­மா­வது சூடு, சொரணை இருக்­கும் என்று நினைத்­துக்­கொண்டு இன்­றைக்­குச் சபைக்­குச் சென்­று­விட்­டேன். எங்­கள் இல்­லத்­தில் ஒரு குடும்­பத் திரு­ம­ணம் முடித்­து­விட்டு 10 மணிக்­கெல்­லாம் சட்­ட­மன்­றத்­திற்­குச் சென்­று­விட்­டேன். இன்­றைக்கு முத­ல­மைச்­சர் இந்­தக் கோப்­பைப் பற்றி வாய் திறப்­பார், இல்லை திறந்து பார்த்­தேன், ஏதா­வது சொல்­வார் என்று பார்த்­தால் வாயையே திறக்­க­வில்லை. ஏனென்­றால், அவர்­க­ளுக்­குத் தெரி­யும், தி.மு.க மீது எந்­தக் குற்­றச்­சாட்­டை­யும் வைக்க முடி­யாது. பொய்க் குற்­றச்­சாட்­டு­களை மட்­டும்­தான் வைக்க முடி­யுமே தவிர, எதை­யும் நிரூ­பிக்க முடி­யாது, நம் தலை­வர் மீது எந்­தக் குற்­ற­மும் சுமத்த முடி­யாது. பூச்­சாண்டி காட்­டு­கி­றார்­கள், அது­வும் நம்­மி­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் இங்கே உங்­க­ளைப் பார்த்­துக் கேட்­கி­றேன். இப்­போது இருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­கள், இரண்டு மூன்று அமைச்­சர்­க­ளைத் தவிர, உங்­க­ளுக்கு யாரா­வது அமைச்­சர்­க­ளின் பெயர் தெரி­யுமா? போகின்ற இடத்­தில் எல்­லாம் பட்­டப்­பெ­யர் வைத்­துத்­தான் கூப்­பி­டு­கி­றார்­கள். பட்­டப்­பெ­யர் சொன்­னால்­தான் இன்­றைக்கு எல்­லோ­ருக்­கும் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பிளாக் டிக்­கெட் விற்ற அமைச்­சர், லாட்­டரி சீட்டு அமைச்­சர், முறுக்கு அமைச்­சர், திருட்டு வி.சி.டி விற்­கின்ற அமைச்­சர், உருட்­டுக்­கட்டை அமைச்­சர், சங்கி அமைச்­சர், இப்­போது அவர் பிர­ப­ல­மா­கி­விட்­டார். பவு­டர் அமைச்­சர், கழிப்­பறை அமைச்­சர், அதற்கு மேல் சொல்ல முடி­யாது, இதை­யெல்­லாம் அவைக்­கு­றிப்­பில் இருந்து நீக்­கி­வி­டு­வார்­கள். யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று தெரி­ய­வில்லை, யார் அமைச்­சர் என்று தெரி­ய­வில்லை, யார் எந்­தத் தொகு­தி­யில் நின்று வெற்­றி­பெற்­றார் என்று அவர்­க­ளுக்கே தெரி­ய­வில்லை. தவ­றான தொகு­திக்­குச் சென்று நன்றி சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கார் வாங்க பணம் எப்­படி வந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எங்­க­ளுக்கு மட்­டும் இல்லை, அங்கே அமர்ந்­தி­ருக்­கி­றாரே முத­ல­மைச்­சர், சத்­தி­ய­மாக அவ­ருக்­கும் தெரி­யாது. வாய்ப்பே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் யார் என்­றும் தெரி­யாது, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரின் பெய­ரும் தெரி­யாது. இந்த லட்­ச­ணத்­தில் எல்லா சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அர­சுப் பணத்­தில், மக்­க­ளின் வரிப்­ப­ணத்­தில் கார் வாங்­கித் தரப்­போ­கி­றா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், நம்­மு­டைய தலை­வர் தெளி­வாக ஒரு முடிவு எடுத்­தார். ஆட்­சிக்கு வந்­த­வு­டனே முதல் நாள் பத­விப் பிர­மா­ணம் எடுத்­துக்­கொள்­ளும்­போதே என்ன சொன்­னீர்­கள்? தி.மு.க. கஜா­னா­வைத் துடைத்து வைத்­து­விட்­டுச் சென்­று­விட்­டார்­கள், அர­சி­டம் பணமே கிடை­யாது என்று இந்த முத­ல­மைச்­சர் சொன்­னாரா இல்­லையா? இப்­போது எங்­கி­ருந்து கார் வாங்­கு­வ­தற்­குப் பணம் வந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விவ­சா­யி­க­ளின் கட­னைத் தள்­ளு­படி செய்­வேன், 100 சத­வி­கி­தம் தள்­ளு­படி செய்­வேன் என்று சொன்­னீர்­களா இல்­லையா? இன்­றைக்கு நிதி இல்லை என்று சொல்லி அந்­தத் திட்­டத்­தை­யும் உங்­க­ளால் செய்ய முடி­ய­வில்லை. ஆனால், இன்­றைக்கு எங்­கி­ருந்து கார் வாங்­கித் தரு­வ­தற்­குப் பணம் வந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய தலை­வர் சொன்­னார், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எங்­க­ளுக்கு இந்த அரசு வாங்­கித் தரு­கின்ற அந்த கார் தேவை­யில்லை என்­று­தான் சொன்­னோம். அதற்கு உடனே ஒரு அமைச்­சர் எழுந்து கத்­து­கி­றார், அது எப்­படி நீங்­கள் கார் வேண்­டாம் என்று சொல்­ல­லாம்? ஐயா, எங்­க­ளுக்­குத் தர­வேண்­டிய கார்­தான் வேண்­டாம் என்று சொன்­னோம், நீங்­கள் வாங்­கிக்­கொள்­ளுங்­கள் என்று சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எதற்­கெ­டுத்­தா­லும் தொகுதி மறு­வ­ரை­யறை என்று இன்­றைக்கு நமக்கு பாடம் எடுக்­கி­றார்­கள். இந்­தத் தொகுதி மறு­வ­ரை­ய­றையை எதிர்த்து, இந்­தி­யா­வி­லேயே குரல் கொடுத்த முதல் இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், குரல் கொடுத்­த­வர் நம்­மு­டைய தலை­வர். எப்­போது? 2024–ஆம் ஆண்டு தீர்­மா­னம் நிறை­வேற்றி இருக்­கி­றோம். சென்ற ஆண்டு சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்றி இருக்­கி­றோம். நம்­மு­டைய தலை­வர் அந்த வரை­வுச் சட்­டத் திருத்­தத்­தைத் தெரு­வில் இறங்கி அதைக் கொளுத்­திப் போட்­டார், அந்த வரை­வுச் சட்­டத் திருத்­தத்தை எரித்து எதிர்ப்பு தெரி­வித்­தோம். நாம் எதிர்ப்பு தெரி­வித்த கார­ணத்­தி­னால்­தான் ஏப்­ரல் மாதம் அந்­தத் திட்­டத்­தையே பா.ஜ.க கைவிட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தொகுதி மறு­வ­ரை­யறை சட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தொகுதி மறு­வ­ரை­யறை வரை­வுச் சட்­டத் திருத்­தத்தை, நம்­மு­டைய தலை­வ­ரும் நானும் அதை எரித்­தோம். இன்­றைக்கு நமக்கு இந்த அரசு பாடம் எடுத்­துக்­கொண்டு இருக்­கி­றது. இந்த அர­சுக்கு ஒரு சரி­யான பாடத்­தைக் கற்­றுக் கொடுக்க வேண்­டிய நேரத்­தில் நிச்­ச­யம் கற்­றுக்­கொ­டுப்­பீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய தலை­வர் தமிழ்­நாட்டை வளர்­கின்ற மாநி­லங்­க­ளில் முதல் இடத்­திற்­குக் கொண்டு வந்து வைத்­தார். 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யு­டன் நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் தமிழ்­நாட்­டைக் கொண்டு வந்து நிறுத்­தி­னார். இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டின் வளர்ச்சி மிகப்­பெ­ரிய ஒரு பாதா­ளத்­துக்­குச் சென்­று­கொண்டு இருக்­கி­றது. எனவே, இதற்­கெல்­லாம் ஒரு சரி­யான விடி­வுக்­கா­லம் நிச்­ச­யம் வெகு விரை­வில் பிறக்­கும் என்று கூறிக்­கொண்டு வாய்ப்­ப­ளித்த அண்­ணன் சேகர்­பாபு அவர்­க­ளுக்கு மீண்­டும் எனது நன்­றி­யைத் தெரி­வித்து, தமிழ்­நாட்­டைக் காப்­பாற்ற வேண்­டிய, பாது­காக்க வேண்­டிய பொறுப்பு எங்­க­ளுக்கு மட்­டு­மில்லை, இங்கு வந்­தி­ருக்­கின்ற உங்­கள் அத்­த­னைப்­பே­ருக்­கும் சேர்ந்து இருக்­கி­றது என்­ப­தைத் தெரி­வித்து, நலத்­திட்ட உத­வி­க­ளைப் பெற்ற அத்­த­னைப்­பே­ருக்­கும் மீண்­டும் எனது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொண்டு, வாய்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கலை­ஞர் புகழ் ஓங்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கழ­கத்­தின் விளை­யாட்டு மேம்­பாட்டு அணிச் செய­லா­ள­ரு­மான தயா­நிதி மாறன், சென்னை மாந­கர மேயர் பிரியா ராஜன், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தாய­கம் கவி, ஜோசப் சாமு­வேல், ரவிச்­சந்­தி­ரன், மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் ஏகப்­பன், புனி­த­வதி, ஜி.எம்.தேவன், ஆஷாத், மாநில நிர்­வா­கி­கள் தமி­ழன் பிர­சன்னா, ஷேக் அப்­துல்லா, வழக்­க­றி­ஞர் சந்­துரு, செயற்­குழு உறுப்­பி­னர்­கள் விஜ­ய­கு­மார், மகேஷ்­கு­மார், பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் ராஜ­சே­கர், முரளி, ஐ.சி.எஃப்.முரளி, வாசு, கூ.பி.ஜெயின், டி.எஸ்.பி.இரா­ஜ­கோ­பால், நாக­ராஜ், சுதா­கர், தமிழ்­வேந்­தன், சாமிக்­கண்ணு, இப்­ரா­ஹிம் கனி, கலைச்­செல்வி, போஸ், மாந­க­ராட்சி நிலைக்­கு­ழுத் தலை­வர் மருத்­து­வர் சாந்­த­கு­மாரி, மண்­ட­லக்­கு­ழுத் தலை­வர்­கள் பி.கே.மூர்த்தி, சரிதா மகேஷ்­கு­மார், ஸ்ரீரா­முலு, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் `வான­வில்’ விஜய், துணை அமைப்­பா­ளர்­கள் வினோத், ஜெக­தீஷ், பால­மு­ரு­கன், தன­சே­கர், சங்­கர் நானா, ராக்கி உசைன், வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் சதீஷ்­கு­மார், பிர­பா­கர், மாமன்ற உறுப்­பி­னர்­கள் ராஜேஷ் ஜெயின், பரி­ம­ளம், மருத்­து­வர் பூர்­ணிமா உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­
கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>