<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 26 2026 03:56:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260826T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26082026-VLR-02" position.sequence="02" ex-ref="26082026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#d80000" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">பரந்­தூர் ரத்­துக்­குப் பின் இருக்­கும் சதி­கள்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup821027_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.7">செ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">ன்­னைக்கு அரு­கில் பரந்­தூர் பகு­தி­யில் அமைய இருந்த இரண்­டா­வதுவிமான நிலை­யத் திட்­டத்தை கைவி­டு­வ­தாக முத­ல­மைச்­சர் விஜய் அறி­வித்­தி­ருக்­கி­றார். இது தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை, எதிர்­கா­லத்தை பின் நோக்­கித் தள்­ளும். அனைத்து விதத்­தி­லும் பின்­ன­டை­வையே தரும். இப்­படி ஒரு 
தவ­றான முடிவை அவர்­தான் எடுத்­தாரா? எடுக்க வைக்­கப்­பட்­டாரா? தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைத் தடுக்க நினைக்­கும் எண்­ணம் கொண்­ட­வர்­க­ளின் சதிச்­செ­ய­லுக்கு அவர் பழி­யா­கி­விட்­டார் என்றே சொல்ல வேண்­டும். முத­ல­மைச்­சர் விஜய் எடுத்த மிக­மிக தவ­றான, மோச­மான முடி­வின் கார­ண­மாக தமிழ்­நாடு அடை­யப்­போ­கும் பின்­ன­டைவை நினைத்­தால் வருத்­த­மா­க­வும் வேத­னை­யா­க­வும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">பரந்­தூ­ரில் விமான நிலை­யம் அமைக்­கும் திட்­டத்தை ரத்து செய்து சட்­ட­மன்­றத்­தில் அவர் ஆற்­றிய உரை வலி­மை­யா­ன­தாக இல்லை. சென்னை மீனம்­பாக்­கம் விமான நிலை­யம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­மாம். விரிவுபடுத்­து­ வ­தற்கு மீனம்­பாக்­கம் பக்­கம் இட­மி­ருக்­கி­றதா என்று யாரை­யா­வது 
கேட்­டாரா முத­ல­மைச்­சர் விஜய்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.7">விவ­சாய நிலங்­கள் அதி­கம் பாதிக்­காத வகை­யில் இடம் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு அங்கு புதிய விமான நிலை­யம் அமைக்­கப்­ப­டு­மாம். இதைச் சொல்லி இருப்­ப­தும் விஜய் தான். அது என்ன அதி­கம் பாதிக்­காத வகை­யில்? அப்­படிஎந்த இடத்தை அடை­யா­ளம் கண்டு வைத்­துள்­ளார் விஜய்? எதை எடுத்­தா­லும் தி.மு.க. அரசு மீது பழி­யைப் போட்டு விட்­டால் போதும். அதி­லேயே திருப்திஅடைந்து விடு­கி­றார் விஜய். ‘முந்­தைய அரசு விவ­சா­யி­கள் பாதிக்­கும் வகை­யில்’இத்­திட்­டத்­தைக் கொண்டு வந்­த­தாம். இவ­ரி­டம் என்ன திட்­டம் இருக்­கி­றது? ‘அதி­கம் பாதிக்­காத வகை­யில்’ என்று தான் இவ­ரும் சொல்­கி­றார். அதி­கம் பாதிக்­காத, குறை­வாக பாதிக்­காத என்­ப­தெல்­லாம் ஒரு அள­வு­கோலா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">இது என்ன சாதா­ரண ஒரு கட்­டட ஒப்­பந்­தமா? வேண்­டாம் என்று சொல்லி விட்­டால் நிறுத்­தி­விட? பல்­லாண்டு காலத்­துக்கு தமிழ்­நாட்­டின் அனைத்து வளர்ச்­சிக்­கும் அடித்­த­ள­மாக அமை­யப் போகும் விமா­ன­ நி­லை­யத்தை  உரு­வாக்­கும்  திட்­டம் இது. முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தாக இருந்­தா­லும், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் வரு­வ­தாக இருந்­தா­லும் அதற்கு அள­வு­கோல் விமான நிலை­யம் போன்ற உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள்­தான். பரந்­தூர் ரத்து ஆன­தால்  லட்­சக்­க­ணக்­கான வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கா­மல் போகும். ஏற்­று­மதி, இறக்­கு­மதி நின்று போகும். விமா­ன­ நி­லை­யத்தை மைய­மாக வைத்து உரு­வா­கும் சாலைப் போக்­கு­வ­ரத்து, ரயில் போக்­கு­வ­ரத்து 
ஆகி­யவை ரத்து ஆகும். இது எதைப் பற்­றி­யும் விஜய் கவ­லைப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">கடந்த ஏப்­ரல் மாதம் சென்னை வந்த ஆந்­திர மாநில முத­ல­மைச்­சர் 
சந்­தி­ர­பாபு என்ன சொன்­னார் என்று நினைவு இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.7">‘‘சென்­னை­யில் உள்ள விமான நிலை­யம் மிகப் பழ­மை­யா­னது. ஆனால் அது ஐத­ரா­பாத்,  பெங்­க­ளூரு  விமான  நிலை­யத்­து­டன்  ஒப்­பி­டும்  அள­வுக்கு  இருக்­கி­றதா? ஐத­ரா­பாத்தை நான் மேம்­ப­டுத்­திய பிறகு என்னை கர்­நா­ட­கம் பின்­பற்­றி­யது. தற்­போது அடுத்த ஒரு நவீன விமா­ன­நி­லை­யத்தை அம­ரா­வ­தி­யில் 5 ஆயி­ரம் ஏக்­க­ரில் கட்­டு­கி­றேன். இப்­போது சொல்­லுங்­கள், தமிழ்­நாடு எங்கே இருக்­கி­றது?’’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">என்று கேட்­டார் ஆந்­திர மாநில முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு. 
இத்­த­கைய நிலை­மை­யில் மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்தை வைத்­துக் கொண்டு, பரந்­தூர் விமா­ன­நி­லை­யத்­தை­யும் ரத்து செய்து விட்­டார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.7">3 ஆவது இடத்­தில் இருந்த சென்னை விமா­ன­நி­லை­யம், 5 ஆவது இடத்­துக்குபோய்­விட்­டது. 5 ஆவது இடத்­தில் இருந்த பெங்­க­ளூரு விமா­ன­ நி­லை­யம் 
3 ஆவது இடத்­துக்கு வந்­து­விட்­டது. இது­தான் இன்­றைய நிலைமை ஆகும். இதை­யெல்­லாம் முத­ல­மைச்­சர் விஜய் அறி­வாரா எனத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.7">விமா­ன­ நி­லை­யம் அமைப்­பது என்­பது ஏதோ பேருந்து நிழற்­குடை அமைப்­பது அல்ல. சென்­னைக்கு இரண்­டா­வது விமா­ன­நி­லை­யம் வேண்­டும் என்று 2007 ஆம்ஆண்டு அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் போட்டு முடி­வெ­டுக்­கப்­பட்­டது. அத­னைத் தான் சிதைத்­தி­ருக்­கி­றார் விஜய். எதை­யும் உரு­வாக்­கத் தெரி­யா­த­வர்­கள், இது போன்ற அழிவு வேலை­களை நன்­றா­கச் செய்­வார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">5,746 ஏக்­க­ரில் 27,400 கோடி மதிப்­பீட்­டில் அமை­யப் போகும் திட்­டம் இது. பரந்­தூர் விமான நிலை­யம் வேண்­டாம் என்­றால் மாற்று இடத்தை தேர்வு செய்து விட்­டுச் சொல்ல வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">பெங்­க­ளூ­ரும், ஐத­ரா­பாத்­தும் சென்­னையை முந்­திச் சென்று விட்­டன. இந்­தச் சூழ­லில் பரந்­தூ­ரை­யும் ரத்து செய்­வது சென்­னை­யை­யும், தமிழ்­நாட்­டை­யும் முடக்­கும் திட்­டம் ஆகும். அயல் மாநி­லத்­த­வர்­களை தன்­னைச் சுற்றி வைத்­துக் கொண்ட விஜய் அவர்­க­ளின் சதிச் செயல்­க­ளுக்கு சம்­ம­தம் தெரி­வித்­தது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">கடந்த ஐந்­தாண்டு கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாடு அனைத்து துறை­க­ளி­லும் முன்­னே­றி­யது. இந்­தி­யா­வில் இரண்­டா­வது பொரு­ளா­தார மாநி­ல­மாக ஆனது. பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் நம்மை நோக்கி வந்­தார்­கள். வேலை வாய்ப்­பு­கள் அதி­கம் ஆனது. இதன் மூல­மாக ஒன்­றிய அர­சின் அனைத்து வளர்ச்­சிக் குறி­யீட்­டி­லும் முன்­னுக்கு வந்­தது தமிழ்­நாடு. 
‘எல்­லார்க்­கும் எல்­லாம்’ என்­பதே திரா­விட மாட­லின் நோக்­கம் என்று சொல்லி வளர்த்­தார் அன்­றைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். இது இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லத்­த­வர்­கள் கண்ணை உறுத்­தி­யது. தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை பொறுக்க முடி­யா­மல் வெம்­பி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">நடை­பெற்று முடிந்த தேர்­த­லில் பெரும்­பான்மை கிடைக்­காத நிலை­யி­லும், சில கட்­சி­க­ளுக்கு அமைச்­சர் பதவி கொடுத்­தும், குதிரை பேரம் நடத்­தி­யும் ஆட்சி அமைத்­துள்­ளார் விஜய். தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை பொறுத்­துக் கொள்ள முடி­யா­த­வர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யைக் கொடுத்­துள்­ளது. தொலை­நோக்­குப் பார்­வை­யும், முன்­பின் சிந்­த­னை­யு­மற்ற முத­ல­மைச்­சர் விஜய் எடுக்­கும் தன்­னிச்­சை­யான, முதிர்ச்­சி­யற்ற முடி­வு­க­ளும் தமிழ்­நாட்­டின் 
எதி­ரி­க­ளுக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­கி­றது. அத்­த­கைய முடி­வு­க­ளில் ஒன்று தான் பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம் ரத்து ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.7">‘ஆந்­தி­ரா­வுக்கு உத­வும் விஜய்’ என்று  சமூக வலை தளங்­க­ளில் மிகச் சரி­யாக விமர்­சித்து வரு­கி­றார்­கள். ‘பரந்­தூர் விமா­ன­ நி­லை­யத் திட்­டம் கை வி­டப்­பட்­டது தமிழ்­நாட்­டின் வளர்ச்சி மீது நடத்­தப்­பட்ட சர்­ஜிக்­கல் ஸ்டிரைக்’ என்­றும் குற்­றம் சாட்டி வரு­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.7">தான் எடுத்­தது தவ­றான முடிவு என்று ஒரு காலத்­தில் வருத்­தப்­ப­டு­வார் விஜய். அப்­போது வருத்­தப்­பட்டு என்ன பயன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>