<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,840,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 26 2026 21:41:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="27082026-CBE-09" position.sequence="09" ex-ref="27082026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விரிவாக்கத்திற்கு விடிவு காலம் பிறக்குமா?</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">7 கி.மீட்டரில் முடங்கி கிடக்கும் தாராபுரம் நகரம் -–  நீர்த்துப்போன ஊராட்சிகள் இணைப்பு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">பொதுமக்கள் வேதனையுடன் த.வெ.க. அரசு மீது குற்றச்சாட்டு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர், ஆக. 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.கழக ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்ட விரி­வாக்­கத்­திற்கு விடிவு காலம் பிறக்­குமா? 7 கி.மீட்­ட­ரில் முடங்கி கிடக்­கும் தாரா­பு­ரம் நக­ரம், நீர்த்­துப்­போன ஊராட்­சி­கள் இணைப்பு! மக்­கள் வேத­னை­யு­டன் த.வெ.க. ஆட்­சி­யின் மீது குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர் மாவட்­டம், தாரா­பு­ரம் நக­ராட்சி ஆங்­கி­லே­யர் ஆட்­சிக் காலத்­தி­லேயே நக­ராட்­சி­யாக நிர்­வா­கிக்­கப்­பட்டு 30 வார்­டு­க­ளு­டன் 7 கிலோ மீட்­டர் சுற்­ற­ள­வில் இயங்கி வரு­கி­றது. இந்­நி­லை­யில் பெருகி வரும் மக்­கள் தொகைக்கு ஏற்ப நகரை வளர்ச்சி அடைய செய்ய வேண்­டும். தொழில் துறை­யில் முன்­னேற்­ற­ம­டைய செய்ய வேண்­டும் என்­பதை இலக்­கா­க­கொண்டு கழ­கத் தலை­வர், என்­னா­ளும் எங்­கள் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் நடை­பெற்ற கடந்த கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் பல்­வேறு நாடு­க­ளில் இருந்து தொழில் முனை­வோர்­க ளை தன் வசம் ஈர்த்து தாரா­பு­ரம் பகு­தி­க­ளி­லும் தொழில் துவங்­கு­வ­தற்கு தொழில் முனை­வோர்­க ­ளுக்கு பல்­வேறு சலு­கை­களை வழங்கி ஊக்­கு­வித்­தது. இதனை இலக்­காக கொண்டு தாரா­பு­ரம் நக­ராட்­சிக்கு அருகே உள்ள கவுண்­டச்சி புதூர் மற்­றும் நஞ்­சி­யம்­பா­ளை­யம் ஊராட்­சி­களை நக­ராட்­சி­யு­டன் இணைத்து எல்லை விரி­வாக்­கம் செய்­வ­தற்கு கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் அன்­றைய முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க கடந்த 2024 டிசம்­பர் 31ம் தேதி அர­சாணை வெளி­யி­டப்­பட்­டது. அதன்­படி, கவுண்­டச்சி புதூர் மற்­றும் நஞ்­சி­யம்­பா­ளை­யம் ஊராட்­சி­களை நக­ராட்­சி­யு­டன் இணைப்­ப­தற்கு பொது­மக்­க­ளின் கோரிக்­கையை ஏற்று நக­ராட்­சி­யு­டன் ஊராட்­சி­களை இணைப்­ப­தற்கு மாவட்ட ஆட்­சித் தலை­வர் கடந்த ஆண்டு டிசம்­பர் 20ம் தேதி ஒப்­பு­தல் கருத்­துரு வழங்­கி­னார். அதன்­பின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அன்­றைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் முத்­து­வேல்  கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க அர­சாணை வெளி­யி­டப்­பட்­டது. இதன் அடிப்­ப­டை­யில் தாரா­பு­ரம் நக­ராட்­சி­யா­னது 110 ஆண்­டு­கள் கடந்து பழ­மை­யான நக­ராட்­சி­யா­க­வும் இதில் மக்­கள் தொகை 1 லட்­சத்­திற்­கும் அதி­க­மான எண்­ணிக்கை உயர்ந்து கொண்டே உள்­ளது. ஆனால், கடந்த 110 ஆண்­டு­க­ளாக 7 கிலோ­மீட்­டர் சுற்­ற­ளவு மட்­டுமே உள்ள நக­ராட்­சி­யின் பரப்­ப­ள­வில் ஒரு அங்­கு­லம் அளவு கூட விரிவு மற்­றும் அபி­வி­ருத்தி அடை­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1916ம் ஆண்டு ஏப்­ரல் 13ம் தேதி 20 ஆயி­ரம் பேரை மக்­கள் தொகை­யாக கொண்டு 7 கிலோ­மீட்­டர் பரப்­ப­ள­வில் நிர்­வா­கம் நடத்த துவங்­கிய தாரா­பு­ரம் நக­ராட்சி, 1984ம் ஆண் டில் 42 ஆயி­ரம் பேர் மக்­கள் தொகை­யு­டன் முதல் நிலை நக­ராட்­சி­யாக அறி­விக்­கப்­பட்­டது. இதன் பின் 2023ம் ஆண்டு அதே 7 கிலோ மீட்­டர் சுற்­ற­ள­வு­டன் | லட்­சம் பேருக்கு அதிகமான மக்­கள் தொகையை கொண்ட அதே நக­ராட்சி தேர்வு நிலை நக­ராட்­சி­யாக தரம் உயர்த்­தப்­பட்­டது. 1916 தொடங்கி 1984 வரை 7 கிலோ மீட்­டர் சுற்­ற­ளவு தான் 2023ல் ஒரு லட்­சம் பேராக மக்­கள் தொகை­யில் உயர்ந்­தும் இன்­னும் அதை 7 கிலோ­மீட்­டர் சுற்­ற­ன­வில் தான் நக­ரின் பரப்­ப­ளவு நிலை கொண்­டுள்­ளது. நக­ராட்­சியை சுற்­றி­லும் உள்ள கவுண்­டச்சி புதூர் ஊராட்சி பகு­தி­யில் மட்­டும் வீட்டு மனை­க­ளுக்­கான 1500 லே வுட்­டு­கள் அமைக்­கப்­பட்டு டிடி­சிபி அப்­ரூ­வல் அனு­மதி வழங்­கப்­பட்­டது. ஆனால், இந்த இடம் முழு­வ­தும் ஊராட்­சி­யின் கட்­டுப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கி­றது. இதே­போல், நஞ்­சி­யம்­பா­ளை­யம் ஊராட்­சி­யி­லும் நக­ராட்சி பகு­தி­யில் இருந்த அனைத்து அரசு அலு­வ­ல­கங்­க­ளும் புதி­தாக கட்­டப்­பட்டு அப்­ப­கு­தி­யில் பல்­வேறு லே அவுட்­டு­கள் பிரிக்­கப்­பட்டு வீட்டு மனை­க­ளாக விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளன. இத­னால், பழ­மை­யான தாரா­பு­ரம் நக­ராட்சி மக்­கள் தொகை­யில் மட்­டும் புரட்­சியை ஏற்­ப­டுத்தி, வளர்ச்­சி­யில் வீழ்ச்­சியை சந்­தித்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­த­விர, கவுண்­டச்­சி­பு­தூர் ஊராட்சி மற்­றும் நஞ்­சி­யம்­பா­ளை­யம் ஊராட்சி பகு­தி­யில் குடி­யி­ருக்­கும் 10,000க்கும் அதி­க­மான பொது­மக்­கள் தற்­போது அங்கு குடி­பெ­யர்ந்­தி­ ருக்­கும் 2,000க்கும் மேற்­பட்ட பொது­மக்­க­ளும் உப­யோ­கித்து வீசி எரி­யும் அனைத்து குப்­பை­க­ளும், கழி­வு­க­ளும், தாரா­பு­ரம் நக­ராட்சி பகு­தி­யி­லேயே சாலை­யோ­ரங்­க­ளில் மலை போல குவித்து வைக்­கப்­பட்டு விடு­ கின்­றன. இத­னால் மதுரை, பழனி போன்ற ஆன்­மீக தலங்­க­ளுக்கு செல்­லும் பக்­தர்­க­ளும், கேரள மாநி­லத்­தில் இருந்து திருச்சி வரை பொள்­ளாச்சி சாலை வழி­யாக வந்து செல்­லும் சுற்­று­லா­ப­ய­ணி­க­ளும் குப்பை கழி­வு­க­ளின் துர்­நாற்­றத்­தால் முகம் சுளித்­த­வாறு கடந்து செல்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஊராட்சி பகு­தி­யில் உள்ள பெரும்­பான்­மை­யோர் தாரா­பு­ரம் நக­ராட்சி பகு­திக்கு வந்து நக­ராட்­சி­யின் குடி­நீர் இணைப்­பு­க­ளில் இருந்து குடி­நீரை எடுத்­துச் செல்­கின்­ற­னர். அம­ரா­வதி அணை­யில் இருந்­தும் தண்­ணீர் திறந்து விடப்­ப­டா­த­தால் அம­ரா­வதி ஆறு முழு­வ­தும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வறட்­சி­யான பாலை­வ­னம் போல காட்­சி­ய­ளிக்க துவங்­கி­விட்­டது. இத­னால், அம­ரா­வ­தியை நம்பி உள்ள 147 கிரா­மங்­க­ளும் இதன் தொடர்ச்­சி­யாக உள்ள 25 கூட்டு குடி­நீர் திட்­டங்­க­ ளும் செயல்­ப­டா­மல் கடு­மை­யான தண்­ணீர் பஞ்­சம் நிலவி வரு­கி­றது. மேலும், இன்­றைய சூழ்­நி­லை­யில் வரை அதனை நிர்­வா­கம் செய்ய ஆணை­யா­ளர் நக­ராட்­சியை பொருத்த முதல் கடை­நிலை பணி­யா­ளர்­கள் வரை யாருமே நிய­மிக்­கப் ப­டா­த­தால் 22 காலி­யி­டங்­க­ளு­டன் நக­ராட்சி நிர்­வா­கம் செயல் பட­மு­டி­யா­மல் ஸ்தம்­பித்து நின்று உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னால், நக­ரில் உள்ள ஒரு லட்­சம் பேரில் அன்­றாட தேவை­கள் கேள்­விக் குறி­யாகி வரு­கின்­றன. ஒன்­றிய, மாநில அர­சு­க­ளால் கொண்டு வரு­கிற திட்­டங்­களை செயல்­ப­டுத்­த­வும் நக­ராட்­சி­யில் போதிய இட வசதி இல்­லா­த­தால் புதிய திட்­டங்­களை மேற்­கொள்­வ­தில் சிர­மம் ஏற்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாரா­பு­ரம் நக­ராட்சி பொரு­ளா­தார வளர்ச்சி இன்றி செயல்­பட்டு வரு­வ­தால் அதன் பொரு­ளா­தா­ரத்தை வளர்ச்சி அடைய செய்­யும் வகை­யில் மேற்­படி 2 ஊராட்­சி­க­ளின் நக­ராட்­சியை ஒட்டி உள்ள பகு­தி­க­ளை­யா­வது நக­ராட்­சி­யு­டன் இணைக்க வேண்­டும். மாறி­வ­ரும் கால சூழ்­நி­லைக்கு ஏற்ப நகரை விரி­வாக்­கம் செய்ய வேண்­டும். இதில், அதி­க­மான தொழில் வளங்­களை புகுத்த வேண்­டும் அர­சி­யல் கட்­சி­கள் இடையே வாக்கு சத­வீ­தம் பாதிக்­கப்­ப­டும் என்ற எண்­ணத்தை கைவிட்டு நக­ரின் வளர்ச்­சியை மட்­டுமே குறி க்­கோ­ளா­கக் கொண்டு இனி வரும் அர­சி­யல் கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நக­ரின் வளர்ச்­சிக்கு இளை­ஞர்­க­ளின் வேலை­வாய்ப்­புக்கு, தொகுதி மக்­க­ளின் அடிப்­படை தேவை­களை நிறை­வேற்றி தரு­வ­தற்கு முன்­னு­ரிமை வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதி­தாக பொறுப்பு ஏற்­றுள்ள தமிழ்­நாடு அரசு பொது­மக்­கள் பல வரு­டங்­க­ளாக விடுத்து வரும் கோரிக்­கை­களை நிறை வேற்­றும் வகை­யில் தாரா­பு­ரம் நக­ராட்­சி­யு­டன் அருகே 2 ஊராட்­சி­க­ளின் சில பகு­தி­க­ளை­யும் இணைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த ஆட்­சி­யின் போது அன்­றைய தமிழ் நாடு அர­சின் நக­ர­ம­ய­மாக்­கல் திட்­டத்­தின் கீழ் அர­சா­ணையை திருப்­பூர் மாவட்ட ஆட்­சி­யர் பின் பற்றி மேற்­கு­றிப்­பிட்ட ஊராட்சி பகு­தி­களை தாரா­பு­ரம் நக­ராட்­சி­யு­டன் இணைத்­திட கடந்த ஆட்­சி­யில் பிறப்­பித்த அர­சாணை செயல்­ப­டுத்த இன்­றைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் உறுதி செய்ய வேண்­டும். இதற்­கான வெளிப்­ப­டை­யான அறி­விப்பை  வெளி­யிட வேண்­டும் என தாரா­பு­ரம் தொகுதி மக்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>