<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,957,830" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 27 2026 03:34:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="27082026-CBE-09" position.sequence="09" ex-ref="27082026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="62">கருப்பும் நீலமும்! The Unbroken Bond!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup825071_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="19">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ண்­ணல் அம்­பேத்­க­ருக்­கும் திரா­விட இயக்­கத்­திற்­கு­மான உறவு என்­பது தந்தை பெரி­யார் காலத்­தி­லேயே ஆழ­மாக வேரூன்­றித் தொடங்­கிய ஒரு வர­லாற்­றுத் தொடர்ச்சி. புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் மீதும் அவ­ரது கொள்­கை­கள் மீதும் தந்தை பெரி­யார் எவ்­வித மதிப்பு வைத்­தி­ருந்­தார் என்­பதை ஒரு உதா­ர­ணத்­தின் மூலம் உணர்த்­த­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1936–ஆம் ஆண்டு லாகூ­ரில் நடை­பெ­ற­வி­ருந்த ஜாதி ஒழிப்பு மாநாட்­டிற்­காக அம்­பேத்­கர் தயா­ரித்த தலைமை உரை­யில், மதத்­தை­யும் ஜாதி­யை­யும் மிகக் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்த சில பகு­தி­களை நீக்க வேண்­டும் என்று மாநாட்­டுக் குழு­வி­னர் கோரிக்கை விடுத்­த­னர். ஆனால், தனது கொள்­கை­யில் உறு­தி­யாக இருந்த அம்­பேத்­கர், அந்த உரையை மாற்ற மறுத்து மாநாட்­டையே ரத்து செய்­தார். இந்­தச் செய்­தியை அறிந்த தந்தை பெரி­யார், அந்த உரையை உட­ன­டி­யா­கத் தமிழ்­நாட்­டிற்கு வர­வ­ழைத்து, தனது ‘குடி அரசு’ பதிப்­ப­கம் வாயி­லாக ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்­பில் தமி­ழாக்­கம் செய்து வெளி­யிட்­டார். லட்­சக்­க­ணக்­கான வாச­கர்­க­ளைச் சென்­ற­டைந்த அந்த நூல், தமி­ழ­கத்­தில் ஒரு பெரும் விழிப்­பு­ணர்வை 
ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, அம்­பேத்­கர் நடத்­திய ‘மூக்­நா­யக்’(குர­லற்­ற­வர்­க­ளின் நாய­கன்) இத­ழில் பெரி­யா­ரின் வைக்­கம் போராட்­டத்­தைப் பாராட்­டித் தலை­யங்­கம் எழு­தப்­பட்­ட­தும், 1940–இல் பெரி­யார், ஜின்னா மற்­றும் அம்­பேத்­கர் ஆகிய மூவ­ரும் சந்­தித்­துக் கொண்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நிகழ்­வில் பேர­றி­ஞர் அண்ணா மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கப் விளங்­கி­ய­தும் இரு இயக்­கங்­க­ளுக்­கு­மான நெருக்­க­மான உறவை மெய்ப்­பிக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் தந்தை பெரி­யார் முன்­னெ­டுத்த இந்தித் திணிப்பு எதிர்ப்­புப் போராட்­டத்தை அம்­பேத்­க­ரும் ஜின்­னா­வும் மன­தா­ரப் பாராட்­டி­னார்­கள். 1929–இல் பம்­பா­யில் நடை­பெற்ற சுய­ம­ரி­யாதை மாநாட்­டில் அம்­பேத்­கர் பங்­கேற்­ற­தும், 1930–இல் தமி­ழக மாநாட்­டிற்­குப் பெரி­யார் அவ­ருக்கு அழைப்பு விடுத்­த­தும் இவர்­க­ளின் பரஸ்­பர நன்­ம­திப்­பிற்­குச் சான்­றா­கும். “பெரி­யா­ரைப் பின்­பற்றி வழி­ந­டங்­கள்” என்று அம்­பேத்­க­ரும், “அம்­பேத்­க­ரைப் பின்­பற்­றிச் செல்­லுங்­கள்” என்று பெரி­யா­ரும் தத்­த­மது தொண்­டர்­க­ளுக்கு மாறி மாறி அறி­வுரை கூறும் அள­விற்கு இரு­வ­ருக்­கும் இடையே Ideological Wave இருந்­தது என்­பதை பல நிகழ்­வு­க­ளின் மூலம் சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பெரி­யா­ருக்­குப் பின் வந்த முத்­த­மி­ழ­றி­ ஞர் கலை­ஞர் அவர்­கள், அம்­பேத்­க­ரின் புக­ழைத் தமிழ்­நாடு எங்­கும் நிலை­நாட்­டும் வகை­யில் பல்­வேறு ஆக்­க­பூர்­வ­மான பணி­க­ளைச் செய்­தார். 1972–லேயே அம்­பேத்­கர் பெய­ரில் அரசு கல்­லூ­ரியை நிறு­விய கலை­ஞர், 1989–இல் சென்னை சட்­டக்­கல்­லூ­ரிக்கு அம்­பேத்­கர் பெய­ரைச் சூட்­டி­னார். மேலும், வட ஆற்­காடு மாவட்­டத்­திற்கு ‘அம்­பேத்­கர் மாவட்­டம்’ எனப் பெய­ரிட்டு, இந்­தி­யா­வி­லேயே ஒரு மாவட்­டத்­திற்கு அம்­பேத்­க­ரின் பெய­ரைச் சூட்­டிய முதல் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை மாற்­றிக் காட்­டி­னார். அது­மட்­டு­மல்­லா­மல் இந்­திய ஒன்­றி­யத்­தில் உள்ள அனைத்து மாநி­லங்­க­ளி­லும் அம்­பேத்­கர் மாவட்­டம் உரு­வாக வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­ய­வ­ரும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் மராத்­வாடா பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அம்­பேத்­கர் பெய­ரைச் சூட்ட வேண்­டும் என்று தி.மு.க. பொதுக்­கு­ழு­வில் தீர்­மா­னம் நிறை­வேற்றி, அதனை அன்­றைய மராட்­டிய முதல்­வர் சரத்­ப­வார் அவர்­க­ளுக்கு கலை­ஞர் அனுப்பி வைத்­தார். அங்கு அந்த முயற்சி தாம­த­மா­ன­போது, தமிழ்­நாட்­டில் தனி­யாக ஒரு சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்கி அதற்கு அம்­பேத்­கர் பெய­ரைச் சூட்ட வேண்­டும் எனக் கரு­தி­னார் கலை­ஞர். கழ­கம் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் 1997–இல் அம்­பேத்­கர் சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கி­ய­போது, அதற்­கான இடத்­தே­டல் ஒரு சவா­லாக இருந்­தது. புதிய கட்­டி­டம் கட்ட கால­தா­ம­த­மா­கும் என்­ப­தால், முத­ல­மைச்­ச­ரா­கத் தான் குடி­பு­கு­வ­தற்­கா­கச் சகல வச­தி­க­ளு­டன் தயார் செய்­யப்­பட்­டி­ருந்த ‘பூம்­பொ­ழில்’ இல்­லத்­தையே அம்­பேத்­கர் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­காக ஒதுக்­கீடு செய்து கலை­ஞர் உத்­த­ர­விட்­டார். இது அம்­பேத்­க­ரின் மீதும் கல்­வி­யின் மீதும் அவர் கொண்­டி­ருந்த அளப்­ப­ரிய மரி­யா­தை­யின் வெளிப்­பாடு. 1998–ஆம் ஆண்டு முதல் தமிழ்­நாடு அர­சின் சார்­பில் ‘அண்­ணல் அம்­பேத்­கர் விருது’ வழங்­கும் முறை­யை­யும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அம்­பேத்­கர் தனது ‘ஒரு விசா­வுக்­கா­கக் காத்­தி­ருத்­தல்’ என்ற நூலில், தனது சிறு­வ­ய­தில் சந்­தித்த தீண்­டா­மைக் கொடு­மை­களை விவ­ரித்­தி­ருப்­பார். மாசூ­ரி­லி­ருந்து கோரே­கா­னுக்­குத் தனது உடன்­பி­றந்­த­ வர்­க­ளு­டன் மாட்டு வண்­டி­யில் சென்­ற­போது, அவர்­கள் தாழ்த்­தப்­பட்­ட­வர்­கள் என்று தெரிந்­த­தும் வண்­டிக்­கா­ரன் அவர்­களை இறக்­கி­விட்­ட­தும், பின்­னர் இரட்­டிப்பு வாடகை கொடுத்து அவர்­களே வண்­டியை ஓட்­டிச் சென்ற துய­ர­மான நிகழ்­வை­யும் அந்­நூ­லில் விவ­ரித்­தி­ருப்­பார் புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் அவர்­கள். இந்­நி­கழ்வு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் எனும் மிகப்­பெ­ரிய கலை­ஞன் மன­தில் மிகப்­பெ­ரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத­னால்­தான் தனது ‘ஒரே இரத்­தம்’ திரைப்­ப­டத்­தில் அக்­கொ­டு­மையை ஒரு வலி­மை­யான காட்­சி­யா­கச் சித்­த­ரித்­தி­ருந்­தார். வண்­டி­யில் பய­ணம் செய்­யும் ஆதி­தி­ரா­வி­டர் மாண­வ­ராக கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நடித்­தி­ருப்­பார். ஆதிக்க சாதி­யி­ன­ரால் அவர் கீழே தள்­ளி­வி­டப்­ப­டு­வார். அப்­போது திரா­விட இயக்­கத்­தின் கொள்கை பிடிப்­பால் உரு­வான ‘கருப்­புச் சட்டை’ தொண்­டர் ஒரு­வர், தீண்­டா­மைக் கொடு­மை­யால் பாதிக்­கப்­பட்ட அந்த மாண­வ­னைக் காப்­பாற்­று­வது போல அக்­காட்­சியை எழு­தி­யி­ருப்­பார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இவர்­க­ளின் வழி­யில் வந்த திரா­விட மாடல் அர­சின் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் 2022 ஏப்­ரல் மாதம் விதி எண்:110இன் கீழ் திரா­விட மாடல் அர­சில் அம்­பேத்­கர் பெய­ரில் செயல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள திட்­டங்­கள் குறித்து அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார். ‘அம்­பேத்­க­ரின் பிறந்­த­நா­ளான ஏப்­ரல் 14–ம் தேதி சமத்­துவ நாளாகக் கொண்­டா­டப்­ப­டும். அம்­பேத்­க­ரின் பிறந்த நாளன்று தமிழ்­நாடு முழு­வ­தும் சமத்­துவ நாள் உறு­தி­மொழி ஏற்­கப்­ப­டும். அம்­பேத்­க­ரின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நூல்­கள் தமி­ழில் மொழி­பெ­யர்க்­கப்­ப­டும். அம்­பேத்­க­ரின் முழு உருவ வெண்­கல சிலை அம்­பேத்­கர் மணி­மண்­ட­பத்­தில் நிறு­வப்­ப­டும்.’ போன்ற அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார். இவை அனைத்­தை­யுமே செய்­து­காட்­டி­ய­வர்­தான் கழ­கத் தலை­வர்  அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­குடி இன இளை­ஞர்­க­ளைத் தொழில் முனை­வோ­ராக்­கும் நோக்­கத்­து­டன் கழ­கத் தலை­வர் அவர்­கள் தொடங்­கிய திட்­டம்­தான் ‘அண்­ணல் அம்­பேத்­கர் தொழில் முன்­னோ­டி­கள் 
திட்­டம்’. இத்­திட்­டத்­தின் மூலம் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தொழில் முத­லா­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளார்­கள். நமது ஆட்­சி­யில் 2025–26இல் இத்­திட்­டத்­திற்­காக ரூ.170 கோடி நிதி ஒதுக்­கி­னோம். ஆனால் இந்த அரசு இந்­தாண்­டிற்­கான நிதி­யாக ரூ.165 கோடி­யைத்­தான் ஒதுக்­கி­யுள்­ளது. ஆனால் அம்­பேத்­கர் அவர்­களை கொள்கை தலை­வர் என்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘அண்­ணல் அம்­பேத்­கர் அய­லக உயர்­கல்­வித் திட்­டத்­தின்’ கீழ், இது­வரை மொத்­தம் ரூ.160 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, உல­க­ள­வில் புகழ்­பெற்ற கல்வி நிறு­வ­னங்­க­ளில் சேர்க்கை பெற்று 385 மாண­வர்­கள் பய­ன­டைந்­துள்­ள­னர். இந்­தாண்டு நிதித்­துறை அமைச்­சர் பேசும் போது ‘முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­விற்கு இத்­திட்­டத்­திற்­காக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது’ என்­றார். ஆனால் அயல் நாட்­டிற்கு படிக்­கச் சென்­றுள்ள மாண­வர்­கள் அர­சின் நிதி கிடைக்­கா­மல் தவித்து வரு­கி­றார்­கள் என்­ப­து­தான் உண்மை. மாண­வர்­க­ளின் சார்­பாக கழக உறுப்­பி­னர்­கள் சட்­டப்­பே­ர­வை­யில் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு மாண­வர்­களை மன­தில் நிறுத்தி பதில் தரா­மல், அர­சி­யல் ரீதி­யாக பதில் தந்து மாண­வர்­களை மேலும் சிர­மத்­திற்கு உள்­ளாக்­கி­யுள்­ளது ஆளும் Take Diversion அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே போல 110 விதி­யின் கீழ் அறி­வித்த வகை­யில் இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக அம்­பேத்­கர் பிறந்­த­நாளை ‘சமத்­துவ நாள்’ என அறி­வித்து நடை­மு­றை­ப­டுத்­தி­ய­வர் கழ­கத் தலை­வர் அவர்­கள். சமத்­துவ நாள் உறு­தி­மொ­ழியை தமிழ்­நாடு முழு­வ­தும் ஏற்­க­வைத்­த­வர் கழ­கத் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2022 அக்­டோ­ப­ரில் சென்­னை­யில் உள்ள அம்­பேத்­கர் மணி­மண்­ட­பத்­தில் அம்­பேத்­கர் சிலையை திறந்­து­வைத்­தார் கழ­கத் தலை­வர் அவர்­கள். அச்­சி­லை­யினை வழங்­கி­ய­வர் வி.சி.க. தலை­வர்  தொல்.திரு­மா­வ­ள­வன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அம்­பேத்­கர் அவர்­க­ளின் எழுத்­துக்­க­ளை­யும், பேச்­சு­க­ளை­யும் தொகுத்து நூலாக வெளி­யி­டும் முயற்­சியை கழத் தலை­வர் அவர்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யில் தொடங்­கி­னார். அதன்­படி 3 கட்­டங்­க­ளாக அம்­பேத்­கர் அவர்­க­ளின் எழுத்து தொகுப்­பு­களை கழ­கத் தலை­வர் அவர்­கள் வெளி­யிட்­டுள்­ளார். எளிய மக்­க­ளுக்­கும் எளி­தாகப் புரி­யும் வகை­யில் தமி­ழில் மொழி­பெ­யர்த்து இது­வரை 73 தொகு­தி­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எளிய மக்­க­ளுக்­கும் இந்­நூல்­கள் சென்­ற­டை­யும் நோக்­கில் மிகக் குறைந்த விலை­யில் வெளி­யி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தக் கொள்கை உற­வை­யும் தலை­வர்­க­ளுக்­கி­டை­யே­யான மதிப்­பை­யும் உணர்ந்­து­கொள்­ளாத தவி­டு­பொ­டி­கள் ஏதேதோ உள­றிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். பாசிச எண்­ணத்­து­டன் நடந்­து­கொள்­ளும் அவர்­க­ளுக்கு கருப்­பும் நீல­மும் நிச்­ச­ய­மாக பதில் சொல்­லும். சமத்­து­வம் வெல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தந்தை பெரி­யார் வாழ்க! புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் வாழ்க!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>