<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,958,1196" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 27 2026 03:40:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="27082026-CHN-07" position.sequence="07" ex-ref="27082026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="33">தமிழ்நாட்டில் – அத்தியாவசிய பொருட்களான </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">காய்கறி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வு! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="40">பொதுமக்கள் கடும் அதிர்ச்சி – கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் த.வெ.க. அரசு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup838110_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Photo2c_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஆக.27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளின் விலை தாறு­மா­றாக உயர்ந்து வரும் நிலை­யில், காய்­கறி, அரிசி, சர்க்­கரை, பருப்பு, எண்­ணெய் விலை கிடு­கி­டு­வென உயர்ந்து இல்­லத்­த­ர­சி­களை அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மத்­திய கிழக்கு நாடு­க­ளில் ஏற்­பட்ட போர் உள்­ளிட்ட கார­ணங் களால் கடந்த சில மாதங்­க­ளாக சிலிண்­டர் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் டீக்­க­டை­கள் ஓட்­டல் களில் உண­வு­க­ளின் விலை உயர்வு மக்­களை வாட்டி வதைத்து வந்­தது. கடை­க­ளில் சாப்­பிட முடி­யாத அள­வுக்கு ஏற்­பட்ட விலை உயர்வு மக்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது இதி­லி­ருந்தே மக்­கள் மீள முடி­யாத நிலை­யில், தற்­போது தமிழ்­நாட்­டில் விலை­வாசி உயர்வு என்­பது பேசும் பொரு­ளாக மாறி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விலை­வாசி உயர்வு -– மக்­கள் அதிர்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் தற்­போது த.வெ.க. அரசு பொறுப்­பேற்று ஆட்சி நடை பெற்று கொண்­டி­ருக்­கி­றது இந்த சூழ்­நி­லை­யில்­தான் தற்­போது விலை­வாசி உயர்வு என்­பது பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. எங்கு திரும்­பி­னா­லும் மக்­கள் விலை­வாசி உயர்வு குறித்து புலம்­பிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். கடந்த 3 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தள்­ளு­வண்­டிக் கடை­க­ளில் ஒரு இட்­லி­யின் விலை ரூ.7 ஆக இருந்­தது. இப்­போது அது ரூ.10. டீயின் விலை ரூ.10 ஆக இருந்­தது. இப்­போது ரூ.12. சென்­னை–­தி­ரு­நெல்­வேலி தனி­யார் பேருந்து கட்­ட­ணம் ரூ.700 ஆக இருந்­தது. இப்­போது ரூ.1500 என தாறுமா றாக உயர்ந்து வரு­வது மக்­கள் மத்­தி­யில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதா­வது, பெட்­ரோல், டீசல், காஸ் சிலிண்­டர். சமை­யல் எண்­ணெய், காய்­க­றி­கள் மற்­றும் உண­வுப் பொருட்­க­ளின் விலை என அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளின் இந்த கடு­மை­யான விலை உயர்வு என்­பது மக்­களை பெரி­தும் பாதித்து வரு­கி­றது. விலை­வாசி உயர்வு வெவ்­வேறு கார­ணங்­க­ளால் ஏற்­ப­டு­வ­துண்டு. பயிர்­வி­ளைச்­சல் பாதிக்­கப்­ப­டும் போது அந்­தக் குறிப்­பிட்ட பயி­ருக்­கான விலை உய­ரும். அதன் உற்­பத்தி அதி­க­ரிக்­கும்­போது. விலை தானா­கவே குறைந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், இது­போன்ற கார­ணங்­க­ளால் ஏற்­ப­டு­கின்ற சில விலை உயர்வு நிரந்­த­ர­மாக மாறி­வி­டும். உதா­ர­ணத்­திற்கு கடை­க­ளில் நாம் அருந்­தும் டீயை குறிப்­பி­ட­லாம். டீ தூள், சர்க்­கரை, பால் விலை உய­ரும் போது டீ விலையை உயர்த்­து­வார்­கள். ஆனால் மீண்­டும் அந்த பொருட்­க­ளின் விலை குறைந்­தா­லும் டீயின் விலை குறை­யாது. இது தான் நம் நாட்­டின் நிலை. அந்த வகை­யில் தற்­போது வேக­மாக உயர்த்­தப்­பட்டு வரும் காய்­கறி, அரிசி, சர்க்­கரை, பருப்பு, எண்­ணெய் விலை உயர்­வா­னது தமி­ழக மக்­கள் மத்­தி­யில் இடி­யாய் இறங்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எவ்­வித நட­வ­டிக்­கை­யும் 
எடுக்­காத த.வெ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை கட்­டுப்­ப­டுத்த கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று தமி­ழக அர­சி­யல் தலை­வர்­கள் குரல் எழுப்பி வரு­கின்­ற­னர். ஆனால் இவ்­வ­ளவு மோச­மான நில­மைக்கு தள்­ளப்­பட்­டுள்ள சூழ்­நி­லை­யி­லும் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளின் விலை உயர்வை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்தோ, அல்­லது அதற்­கான மாற்று ஏற்­பா­டு­கள் குறித்தோ த.வெ.க. அரசு எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் இருப்­பது தமி­ழக மக்­கள் மத்­தி­யில் கடும் ஆட்­சி­யா­ளர்­கள் மீது கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">குறிப்­பாக தமிழ்­நாட்­டில் கடந்த சில வாரங்­க­ளா­கவே பல்­வேறு சமை­யல் பொருட்­க­ளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரு­கி­றது. முத­லில் அரிசி விலை கணி­ச­மாக உயர்ந்த நிலை­யில், பிறகு சர்க்­கரை – விலை 
உயர்ந்­தது. அதைத்­தொ­டர்ந்து இப்­போது சமை­ய­லுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாக இருக்­கும் வெங்­கா­யத்­தின் விலை­யும் தொடர்ந்து உயர்ந்து வரு­கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அத்­தி­யா­வ­சிய தேவை­யாக உள்ள சர்க்­க­ரை­யின் விலை வழக்­க­மாக ஒரு கிலோ ரூ.40 முதல் அதிக பட்­ச­மாக ரூ.45 வரை விற்­ப­னை­யாகி வந்­தது. ஆனால், தற்­போது கடந்த 20 நாட்­க­ளில் பல மடங்கு விலை உயர்ந்து, கிலோ­வுக்கு ரூ.25 வரை அதி­க­ரித்­துள்­ளது. தற்­போது ஒரு­கிலோ சர்க்­கரை ரூ.70 முதல் ரூ.80 வரை விற் பனை செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வெங்­காய தட்­டுப்­பாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சர்க்­கரை விலை உயர்­வால் பொது­மக்­கள் மற்­றும் டீக்­கடை நடத்­து­வோர் மிக­வும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஏற்­க­னவே சிலிண்­டர் விலை உயர்வு, பால் விலை உயர்வு ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்டு வரும் தாங்­கள், தற்­போது சக்­கரை விலை உயர்­வால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் வேதனை தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது ஒரு­பு­றம் இருக்க, மறு­பு­றம் மீண்­டும் வெங்­காய தட்­டுப்­பாடு இல்­லத்­த­ர­சி­களை வாட்டி வதைக்க தொடங்­கி­யுள்­ளது. இந்­தி­யா­வில் பரு­வ­மழை தாம­தம், சில முதன்மை உற்­பத்­திப் பகு­தி­க­ளில் குறைந்த மழைப்­பொ­ழிவு கார­ண­மாக வெங் காயச் சாகு­படி கடு­மை­யா­கப் பாதிக் கப்­பட்­டுள்­ளது. அதன் விளை­வாகடெல்லி, தமி­ழ­கம், கேரளா, அசாம் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் வெங்­கா­யத்­தின் சில்­லறை விலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை கோயம்­பேடு மார்க்­கெட்­டுக்கு இன்று 45 லாரி­க­ளில் மட்­டுமே வெங்­கா­யம் விற்­ப­னைக்கு வந்­துள்­ளது. கடந்த 10 நாட்­க­ளுக்கு முன்பு மொத்த விற்­ப­னை­யில் ஒரு கிலோ ரூ.35–க்கு விற்­கப்­பட்ட நாசிக் வெங் காயம், தற்­போது கிலோ­வுக்கு ரூ.20 வரை அதி­க­ரித்து ஒரு கிலோ ரூ55–க்கு விற்­கப்­ப­டு­கி­றது. வெளி­மார்க்­கெட்­டில் உள்ள காய்­கறி கடை­க­ளில் வெங்­கா­யத்­தின் விலை ஒரு கிலோ ரூ.70 வரை விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல் சின்ன வெங்­கா­யம் விலை­யும் ஏறு­மு­கத்­தி­லேயே இருந்து வரு­கி­றது. மொத்த விற்­ப­னை­யில் ரகத்தைபொறுத்து ஒரு கிலோ ரூ.80 வரை­யி­லும், வெளி­மார்க்­கெட்­டில் உள்ள கடை­க­ளில் ஒரு கிலோ சின்ன வெங்­கா­யம் ரூ.110 வரை­யி­லும் விற்­பனை ஆகி வரு­கி­றது. தின­சரி சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டும் பெரிய வெங்­கா­யம் மற்­றும் சின்ன வெங்­கா­யம் விலை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வதுஇல்­லத்­த­ர­சி­க­ளி­டையே கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">காய்­க­றி­கள் விலை – 
இல்­லத்­த­ர­சி­கள் கவலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மட்­டு­மல்ல மற்ற காய்­க­றி­க­ளின் விலை­யும் தாறு­மா­றாக உயர்ந்து வரு­வ­தால் மக்­கள் புலம்­பத் தொடங்­கி­யுள்­ள­னர். நாட்டு தக்­காளி ரூ.20 முதல் ரூ.25 வரை, நவீன் தக்­காளி ரூ.40, உருளை கிழங்கு ரூ.15 – ரூ.35, கேரட் ரூ.50 ரூ.70, பீன்ஸ் ரூ.60 – ரூ.80, பீட்­ரூட் ரூ.50 – ரூ.60, முட்­டை­கோஸ் ரூ.20–ரூ.25, வெண்­டைக்­காய் மற்­றும் வரி கத்­தி­ரிக்­காய் ரூ.25 –ரூ.30, நாட்டு கத்­தி­ரிக்­காய் ரூ.30 – ரூ.40, பாகற்­காய் ரூ.40 – ரூ.50, புட­லங்­காய் ரூ.20ரூ.30, சுரக்­காய் ரூ.15– ரூ.25, முருங்­கைக்­காய் ரூ.25 ரூ.30, சேனைக்­கி­ழங்கு ரூ.30 –ரூ.40, பச்­ச­மி­ள­காய் ரூ.50 – ரூ.60, இஞ்சி ரூ.90– ரூ.180, பூண்டு ரூ.130– ரூ.240 என காய்­க­றி­கள் விலை விண்­ணைத் தொடும் அள­வுக்கு உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அரிசி, மளிகைப் பொருட்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த சில வாரங்­க­ளா­கவே அரிசி, மளி­கை­பொ­ருட்­க­ளின் விலை திடீ­ரென அதி­க­ரித்து, பல்­வேறு தரப்­பு­க­ளில் இருந்து குரல்­கள் எழுந்து வரு­கின்­றன. குறிப்­பாக கடந்த சில வாரங்­க­ளாக அரிசி மற்­றும் மளி­கைப் பொருட்­க­ளின் விலை கிலோ­வுக்கு ரூ. 20 முதல் ரூ.30 வரை கிடு­கி­டு­வென உயர்ந்­தி­ருப்­பது பொது­மக்­கள் மத்தியில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உற்­பத்தி குறைவு, பிற மாநி­லங்­க­ளில் இருந்து வரத்து பாதிப்பு மற்­றும் பதுக்­கல் போன்ற கார­ணங்­க­ளால் நடுத்­த­ரக் குடும்­பங்­க­ளின் மாதாந்­தி­ரச் செலவு கடு­மை­யா­கப் பாதிக்­கப்பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ரூ.1,400க்கு விற்­ப­னை­யான 25 கிலோ மூட்டை அரிசி இன்று ரூ.1,700 முதல் ரூ.1,800 வரை விற்­ப­னை­யாகிறது. அடுத்­த­டுத்த வாரங்­க­ளில் இது மேலும் அதி­க­ரிக்­கும் என அரிசி வணி­கர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். ஒவ்­வொரு ஆண்­டும் பரு­வத்­துக்கு ஏற்ப விலை­யில் ஏற்ற இறக்­கம் இருக்­கும் என்­றா­லும் தற்­போது உள்ள அள­வுக்­கான விலை உயர்வு இருந்­த­தில்லை என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எண்­ணெய் – சர்க்­கரை விலை உயர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போன்று, எண்­ணெய் விலை ஜூலை மாதத்­தில் 5% முதல் 6% வரை உயர்ந்­துள்­ளது. சென்னை யில் இதன் சில்­லறை விற்­பனை விலை தோரா­ய­மாக ஒரு லிட்­டர் ரூ.140 முதல் ரூ.175 வரை உள்­ளது. பாமா­யில் 1 லிட்­ட­ருக்கு தோரா­ய­மாக ரூ.90 முதல் ரூ.140 வரை­யி­லும் பிராண்­டு­க­ளுக்கு ஏற்ப விற்­கப்­ப­டு­கி­றது. அரிசி விலை உயர்ந்த நிலை­யில் தற்­போது எண்­ணெய் மற்­றும் மளிகை பொருட்­க­ளின் விலை உயர்ந்­துள்ள தால், பொது மக்­கள் அதிர்ச்­சி­யில் உறைந்­துள்­ள­னர். மேலும், அடுத்­த­டுத்த பண்­டி­கை­கள் நெருங்கி வரும் சூழ­லில், அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை, குறிப்­பாக சர்க்­க­ரை­யின் விலை 50% வரை­யி­லும், அரி­சி­யின் விலை 40% வரை­யி­லும், எண்­ணெ­யின் விலை 60% வரை­யி­லும் உயர்ந்­தி­ருப்­ப­தால் ஏழை எளிய மற்­றும் நடுத்­தர மக்­க­ளின் அன்­றா­டச் செல­வு­கள் அதி­க­ரித்­து ள்­ள­தோடு, அவர்­க­ளின் பண்­டி­கைக் காலக் கொண்­டாட்­டங்­க­ளை­யும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே, த.வெ.க. அரசு அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை உயர்­வைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்­குத் தேவை­யான ஆக்­கப் பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­வ­தோடு, விலை குறை­யும் வரை நியா­ய­வி­லைக்­க­டை­க­ளில் வழங்­கப்­ப­டும் அரிசி, பருப்பு, சர்க்­கரை, எண்­ணெய் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் அளவை தேவைக்­கேற்ப உயர்த்தி வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று தமிழ கம் முழு­வ­தும் மக்­க­ளின் குரல் ஓங்கி ஒலிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­காத முதல்வர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விலை­வாசி உயர்­வால் பாதிக்­கப்­பட்ட குடும்ப தலை­வர்­கள் கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் தற்­போது விலை வாசி உயர்வு என்­பது மக்­கள் மேல் விழுந்த இடி­யாக பார்க்­கி­றோம். காய்­க­றி­கள், அரிசி, எண்­ணெய், பருப்பு, சர்க்­கரை என ஒட்டு மொத்த அத் தியா­வ­சிய பொருட்­க­ளின் விலை உயர்ந்­துள்­ளது. இத­னு­டைய பாதிப்பு இல்­லத்­த­ர­சி­க­ளுக்­குத் தான் தெரி­யும். குறிப்­பாக கடந்த சில வாரங்­க­ளாக அரிசி மற்­றும் மளி­கைப் பொருட்­க­ளின் விலை கிலோ­வுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கிடு­கி­டு­வென உயர்ந்­தி­ருப்­பது பொது­மக்­கள் மத்­தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. த.வெ.க. அரசு இது­வரை எந்த வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் தூங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>