<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,63,962,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 27 2026 03:40:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="27082026-CHN-10" position.sequence="10" ex-ref="27082026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup837914_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Dravidamani_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Theerargal2_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை,ஆக.27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப் பேர­வை­யில், பொதுப் பணித்­துறை மானிக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு பேசிய வானூர் தொகுதி கழக உறுப்­பி­னர் கெள­தம் திரா­வி­ட­மணி, “கண்­ட­மங்­க­ளம், தனி வரு­வாய் வட்­ட­மாக அறி­விக்­கப்­பட வேண்­டும்,” என­வும், “சவுக்கு விளைச்­சல் அதி­க­முள்ள வானூ­ரில் டி.என்.பி.எல். ஆலை அமைத்­திட வேண்­டும்!” என­வும் வேண்­டு­கோள் விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப் பேர­வை­யில் அவர் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் மீது பற்­று­கொண்ட எனது பாட்­ட­னார் கே.எஸ். சுப்­பு­ரா­யன் அவர்­கள் திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தில் தன்னை இணைத்­துக் கொண்டு கழ­கப்­பணி ஆற்­றி­னார். 1972 ஆம் ஆண்டு பிறந்த என் தந்­தைக்கு திரா­வி­ட­மணி என பெயர்­சூட்டி திரா­விட இயக்­கத்­தின் மீது தனக்­குள்ள பற்­றினை வெளிப்­ப­டுத்­தி­னார். எனது பாட்­டா­னர் கடந்த 2001 ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் கைதினை கண்­டித்­தும், மெரினா கடற்­க­ரை­யில் இருந்த கண்­ணகி சிலையை அகற்­றி­யதை கண்­டித்­தும் கழ­கத் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் சென்னை மெரினா சீரணி அரங்­கில் நடந்த ஆர்ப்பாட்­டத்­தில் குண்­டர்­க­ளால் தாக்­கப்­பட்டு சென்னை ராயப்­பேட்டை மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றதை அறிந்து முத்­த­மி­ழ­ றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் நேரில் சந்­தித்து தன் தோளில் சாய்த்­துக் கொண்டு ஆறு­தல் தெரி­வித்­தார். அது மட்­டு­மின்றி ஒரு சாதா­ரண தொண்­ட­னின் வலி அறிந்து முர­சொ­லி­யில் “துய­ரத்­தில் ஒரு துளி தேன்” என்று கடி­தம் எழு­திய தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­களை வணங்கி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கல்­லூரி பயி­லும் மாண­வி­க­ளுக்­காக புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம், நான் முதல்­வன் திட்­டம், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம், கலை­ஞர் மக­ளிர் விடி­யல் பய­ணம், பள்ளி மாண­வர்­க­ளுக்கு காலை சிற்­றுண்டி திட்­டம், வெளி நாடு­க­ளில் சென்று படிக்­கும் ஆதி திரா­வி­டர் மாண­வர்­க­ளுக்­கான அம்­பேத்­கர் அய­லக கல்­வித் திட்­டம், முதி­யோர், மாற்­றுத் திற­னா­ளி­ க­ளின் இல்­லத்­திற்கே சென்று ரேஷன் பொருட்­களை வழங்­கும் தாயு­மா­ன­வர் திட்­டம், 2 இலட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் வழங்­கி­யது, தொழில் வளர்ச்­சி­யில் முன்­னணி மாநி­ல­மாக உரு­வாக்­கி­யது, பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் நாட்­டி­லேயே இரண்­டா­வது பெரிய மாநி­ல­மாக நிலை நிறுத்­தி­யது போன்ற பல்­வேறு திட்­டங்­களை செயல்­ப­டுத்தி இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மாக உரு­வாக்கி நல்­லாட்சி தந்த திரா­விட மாடல் நாய­கர் ஏழை எளிய மக்­க­ளின் நெஞ்­சத்­திலே அப்­பா­வாய் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் மாண்­பு­மிகு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் விழுப்­பு­ரம் மாவட்­டம், வானூர் தொகு­தி­யில் உள்ள சிறிய கிரா­ம­மான கீழ்­கூத்­தப்­பா க்­கத்­தைச் சேர்ந்த எளி­ய­வ­னா­கிய என்னை கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த உள்­ளாட்சி தேர்­த­லில் மாவட்ட குழு உறுப்­பி­ன­ராக வாய்ப்­ப­ளித்து பின்­னர் இந்த சட்­ட­மன்ற தேர்­த­லி­லும் வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் வேட்­பா­ள­ராக வாய்ப்­ப­ளித்து கடந்த 25 ஆண்டு காலத்­திற்கு பிறகு மீண்­டும் திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் கோட்­டை­யாக மாற்­றிக் காட்­டிய எங்­கள் கழ­கத் தலை­வர் மாண்­பு­மிகு முத்­து­வேல் கரு­ணா­நிதி அவர்­களை வணங்கி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் துணை முதல்­வர், இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்டு துறை அமைச்­சர் எண்­ணற்ற இளை­ஞர்­களை விளை­யாட்­டுத் துறை­யில் ஊக்­கு­வித்து தேசிய மற்­றும் சர்­வ­தேச அள­வில் வெற்றி பெற்ற 100க்கு மேற்­பட்ட விளை­யாட்டு வீரர், வீராங்­க­னை­களை அரசு ஊழி­ய­ராக நிய­மித்து இளை­ஞர்­க­ளின் வழி­காட்­டி­யாய் விளங்­கிய, இளை­ஞர்­க­ளின் எழுச்சி நாய­கர், மாண்­பு­மிகு எதிர்­கட்­சித் தலை­வர் அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளை­யும் வணங்கி, எனது வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்த முன்­னாள் அமைச்­சர் எம்.ஆர்.கே.பன்­னீர் செல்­வம் அவர்­க­ளுக்­கும், விழுப்­பு­ரம் மத்­திய மாவட்ட கழக பொறுப்­பா­ள­ரும், விழுப்­பு­ரம் சட்­ட­மன்ற தொகுதி உறுப்­பி­னர் எங்­கள் குடும்­பத் தலை­வர் டாக்­டர். இரா. இலட்­சு­ம­ணன் அவர்­க­ளுக்­கும், கழ­கத்­தின் வெற்­றிக்­காக அய­ராது உழைத்த வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யைச் சேர்ந்த ஒன்­றிய, நகர கழக செய­லா­ளர்­கள், கிளைக் கழக செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், மாவட்ட மாநில அணி நிர்­வா­கி­கள், அனைத்து சார்பு அணி நிர்­வா­கி­கள், உள்­ளாட்சி பிர­தி­நி­தி­க­ளுக்­கும், கழக உடன் பிறப்­பு­க­ளுக்­கும், தோழமை கட்­சி­யைச் சேர்ந்த தலை­வர்­க­ளுக்­கும், தோழர்­க­ளுக்­கும், விவ­சா­யத்தை பின்­ன­ணி­யாக கொண்ட குடும்­பத்­தைச் சேர்ந்த எளி­ய­வ­னான என்னை வானூர் தொகுதி மக்­க­ளின் குர­லா­க­வும், அவர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை பூர்த்தி செய்­ப­வ­னா­க­வும், என்னை சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுத்து வெற்றி பெறச் செய்த வானூர் தொகுதி மக்­க­ளுக்­கும், எனது குடும்­பத்­தி­ன­ருக்­கும் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனக்கு பேசு­வ­தற்கு வாய்ப்­ப­ளித்த எதிர்க் கட்சி தலை­வ­ருக்­கும், எதிர்க் கட்சி துணைத் தலை­வ­ருக்­கும், கொறடா, துணை கொறடா மற்­றும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் எனது வணக்­கத்தை தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் 1 இலட்­சம் எக்­க­ரில் சவுக்கு சாகு­படி செய்­யப்­ப­டு­கி­றது. குறிப்­பாக வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் மட்­டும் சுமார் 60 ஆயி­ரம் எக்­கர் பரப்­ப­ள­வில் சவுக்கு சாகு­படி செய்­யப்­பட்டு வரு­கி­றது. கடந்­தாண்டு பெஞ்­சல் புய­லால் பாதிக்­கப்­பட்ட சவுக்கை விவ­சா­யி­ க­ளுக்கு வர­லாற்­றி­லேயே முதன் முறை­யாக முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் ஹெக்­டர் ஒன்­றுக்கு இழப்­பீ­டாக ரூ.20 ஆயி­ரம் வழங்­கப்­பட்­டது. விவ­சா­யி­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­யான தமிழ்­நாடு செய்­தித் தாள் மற்­றும் காகித நிறு­வ­னம் (TNPL)–ஐ வானூர் தொகு­தி­யில் தொடங்­கி­னால் சவுக்கை பயி­ரி­டும் விவ­சா­யி­க­ளுக்கு பய­னுள்­ள­தாக இருக்­கும் மற்­றும் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பும் கிடைக்­கும் என்­பதை பேரவை தலை­வர் வாயி­லாக தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற தொகுதி திருச்­சிற்­றம்­ப­லம் கூட்­டு­ரோட்­டில் வானூர் அரசு கலை அறி­வி­யல் கல்­லூரி உள்­ளது. இதில் தற்­போது இளங்­கலை பட்­டப் படிப்­பு­கள் இயங்கி வரு­கி­றது. கூடு­த­லாக மாண­வர்­கள் பயன் பெறும் வகை­யில் முது­கலை பட்­டப் படிப்­பும் தொடங்­கிட வேண்­டும் என்று பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் அரசு பாலி­டெக்­னிக் கல்­லூ­ரி­யும், அரசு செவி­லி­யர் (நர்­சிங்) கல்­லூ­ரி­யும் தொடங்­கிட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற இராம்­பாக்­கம் அரசு மேல்­நிலை பள்­ளி­யில் 1000–க்கு மேற்­பட்ட மாண­வர்­கள் பயின்று வரு­கின்­றார்­கள். மாண­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில் அவர்­க­ளுக்கு தங்­கும் விடுதி ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டு­மாறு பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற தொகுதி சித்­த­லம்­பட்டு கிரா­மத்­தில் பெண்­கள் மேல்­நி­லைப் பள்ளி ஒன்று உரு­வாக்­கித் தந்­திட வேண்­டும். மேலும் வானூர் தொகு­தி­யில் சமூக நீதி பள்­ளி­கள் அதி­க­ள­வில் இயங்கி வரு­கி­றது. இந்த பள்­ளி­களை புன­ர­மைப்பு செய்து, கூடு­த­லாக வகுப்­ப­றை­கள், ஆய்­வுக் கூடங்­கள், கழிப்­பிட வசதி மற்­றும் சுற்று மதில் சுவர் (Compound Wall) அமைத்­திட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் உள்ள இளை­ஞர்­களை விளை­யாட்­டில் ஊக்­கு­விக்­கும் வகை­யி­லும், போதை பழக்­கத்­திற்கு செல்­லாத வகை­யி­லும் வானூர் தொகு­தி­யில் ஒரு விளை­யாட்டு மைதா­னம் அமைத்­திட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் தொகு­தி­யில் உள்ள கோட்­டக்­குப்­பம் நக­ராட்­சி­யில் சுமார் 25 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட மக்­கள் வசித்து வரு­கின்­ற­னர். இந்த பகு­தி­யில் தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கான சுற்­றுலா பய­ணி­கள் வந்து செல்­கின்­ற­னர். மேலும் இந்த பகு­தி­யில் நூற்­றுக்­க­ணக்­கான தொழில் நிறு­வ­னங்­க­ளும், வணிக நிறு­வ­னங்­க­ளும், தங்­கும் விடு­தி­க­ளும் இயங்கி வரு­கி­றது. இந்த பகுதி மக்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­யான துணை மின் நிலை­யம் ஒன்று அமைத்­திட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் உள்ள உலக புகழ்­பெற்ற கல்­மர பூங்கா மற்­றும் திரு­வக்­கரை வக்­கி­ர­கா­ளி­யம்­மன் கோவில் உள்­ளது. இந்த பகு­தியை சுற்­றி­லும் பல்­வேறு தொழில் நிறு­வ­னங்­கள் உள்­ளது. இந்த பகு­தி­யில் உள்ள துணை மின் நிலை­யத்­தினை 110 கே.வி துணை மின் நிலை­ய­மாக தரம் உயர்த்­தித் தரு­மாறு பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் உள்ள திருச்­சிற்­றம்­ப­லம் கூட்­டு­ரோடு மற்­றும் அதனை சுற்­றி­யுள்ள கிரா­மங்­க­ளில் சுமார் 40 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட மக்­கள் வசித்து வரு­கின்­ற­னர். திருச்­சிற்­றம்­ப­லம் கூட்­டு­ரோட்­டில் மாநி­லத்­தில் முதல் முறை­யாக முன்­னாள் முதல்­வர் மாண்­பு­மிகு தள­ப­தி­யார் அவர்­க­ளால் நியோ டைடில் பார்க் தொடங்­கப்­பட்டு அதில் தற்­போது 500–க்கு மேற்­பட்ட இளை­ஞர்­கள் பணி பரிந்து வரு­கின்­ற­னர். இந்த திருச்­சிற்­றம்­ப­லம் கூட்­டு­ரோடு அதனை சுற்­றி­யுள்ள பெண்­கள், கர்­பி­னித் தாய்­மார்­கள், குழந்­தை­கள் பயன்­பெ­றும் வகை­யில் அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யம் ஏற்­ப­டுத்­தித் தர பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் தொகு­திக்­குட்­பட்ட புளிச்­சப்­பள்­ளம் வரு­வாய் கிரா­மத்­தைச் சேர்ந்த பாப்­பாஞ்­சா­வடி புதூர், இரும்பை வரு­வாய் கிரா­மத்­தில் சுமார் 300–க்கு மேற்­பட்ட குடும்­பங்­கள் 30 ஆண்­டு­க­ளுக்கு மேலாக வீட்டு மனை பட்டா இல்­லா­மல் வசித்து வரு­கின்­ற­னர். இத­னால் இந்த மக்­கள் அடிப்­படை தேவை­கள் பூர்த்தி செய்ய இய­லாத நிலை உள்­ளது. எனவே இந்த பகு­தி­யில் வாழும் குடும்­பங்­க­ளுக்கு போர்க்­கால அடிப்­ப­டை­யில் அரசு மூலம் இல­வச வீட்டு மனை பட்டா வழங்­கிட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">விருந்­தி­னர் ஆய்வு மாளிகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் உள்ள இரும்பை கிரா­மத்­தில் சர்­வ­தேச நக­ரா­மன ஆரோ­வில் நக­ரம் உள்­ளது. மேலும் அதன் அரு­கில் பொம்­மை­யார்­பா­ளை­யம், கோட்­டக்­குப்­பம் பகு­தி­கள் அழ­கிய கடற்­கரை பகு­தி­கள் ஆகும். இந்த பகு­தி­க­ளில் நாள்­தோ­றும் ஏரா­ள­மான சுற்­றுலா பய­ணி­கள் வந்து செல்­லும் மிக முக்­கி­ய­மான சுற்­றுலா பகு­தி­யாக விளங்கி வரு­கின்­றது. எனவே இந்த பகு­தி­யில் அரசு அலு­வ­லர்­கள் ஆய்வு பணிக்­காக வந்து செல்­வ­தற்கு விருந்­தி­னர் ஆய்வு மாளிகை பொதுப் பணி துறை வாயி­லாக அமைத்­திட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­கள் தங்­கள் விளை பொருட்­களை இடைத் தர­கர்­கள் யாரு­மின்றி நேர­டி­யாக சந்­தை­யில் விற்­பனை செய்ய உழ­வர் சந்தை என்ற சிறப்­பான திட்­டத்­தினை முத்­த­மி­ழ­றி­ ஞர் கலை­ஞர் அவர்­கள் உரு­வாக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற தொகு­தி­யா­னது கிரா­மப்­பு­ றங்­கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு விவ­சா­யம் முக்­கி­ய­மான தொழி­லாக விளங்­கு­கி­றது. விவ­சா­யி­கள் அதி­கம் வாழும் வானூர் தொகு­தி­யின் மையப் பகு­தி­க­ளான திருச்­சிற்­றம்­ப­லம் கூட்­டு­ரோடு, கிளி­ய­னூர், கண்­ட­மங்­க­லம் பகு­தி­க­ளில் புதி­ய­தாக உழ­வர் சந்­தை­கள் அமைத்­திட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சார்பு நீதி­மன்­றம் அமைக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் நீதி­மன்­றம் கடந்த 1991 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 31 ஆம் தேதி முதல் சிவில் மற்­றும் கிரி­மி­னல் நீதி­மன்­ற­மாக செயல்­பட்டு வந்­தது. தற்­பொ­ழுது சிவில் நீதி­மன்­றம் தனி­யா­க­வும், கிரி­மி­னல் நீதி­மன்­றம் தனி­யா­க­வும் செயல்­பட்டு வரு­கின்­றது. பொது மக்­கள் 30 கி.மீ தொலை­வில் உள்ள திண்­டி­வ­னம் சார்பு நீதி­மன்­றம் செல்ல வேண்டி உள்­ளது. இத­னால் வழக்­கா­டி­கள் மற்­றும் வழக்­க­றி­ஞர்­கள் மிகுந்த சிர­மத்­திற்கு உள்­ளா­கின்­ற­னர். எனவே பொது மக்­க­ளின் சிர­மத்தை போக்­கி­டும் வகை­யில் வானூ­ரில் சார்பு நீதி­மன்­றம் அமைக்­க­வும் அதற்­குண்­டான நிதி ஒதுக்­கி­ட­வும் பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் தொகு­திக்­குட்­பட்ட கண்­ட­மங்­க­லம் ஊராட்சி ஒன்­றி­யத்­தில் 46 ஊராட்­சி­கள் விழுப்­பு­ரம் மற்­றும் விக்­கி­ர­வாண்டி தாலு­கா­வில் உள்­ளது. இத­னால் பொது மக்­கள் பெரி­தும் சிர­மத்­திற்­குள்­ளா­கின்­ற­ னர். எனவே கண்­ட­மங்­க­லத்தை  தலை­மை­யா­கக் கொண்டு தனி தாலுக்கா அமைக்க (வரு­வாய் வட்­டம்) பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட பெண்ணைஆற்­றி­லி­ருந்து குட்­டி­யாங்­குப்­பம் வாய்­கா­லில் தண்­ணீர் வர இராம்­பாக்­கத்­தில் தடுப்­பணை கட்­டித் தரவேண்­டு­மாறு பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சொர்­ணா­வூர் அணைக்­கட்டு உடைந்­துள்­ளது. அதனை சரி செய்து தரு­மாறு பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் தொகுதி பெரி­ய­பாபு சமுத்­தி­ரம் வழி­யாக செல்­லும் பம்பை ஆற்­றில் தடுப்­பணை கட்­டித் தர பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சாலை அமைத்துத் தாரீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் தொகுதி பள்­ளி­நே­ளி­ய­லூர் முதல் கட­லூர் செல்­லும் சாலையை இரு வழி சாலை­யாக தரம் உயர்த்­தித் தர பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கண்­ட­மங்­க­லத்­தில் இருந்து நவ­மால் மரு­தூர் வழி­யாக கட­லூர் சாலையை இணைக்­கும் சாலை­யாக தரம் உயர்த்­தித் தரு­வ­தற்கு பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வக்­கரை முதல் திரு­மங்­க­லம் செல்­லும் சாலை­யினை இரு­வழி சாலை­யாக தரம் உயர்த்­தித் தரு­வ­தற்கு பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிரம்­ம­தே­சம் முதல் ரங்­க­நா­த­பு­ரம் செல்­லும் சாலையை தரம் உயர்த்­தித் தரு­மா­றும், கிளா­பாக்­கம் முதல் மயி­லம் வரை செல்­லும் சாலையை தரம் உயர்த்­தித் தரு­மா­றும், கீழ்­புத்­துப் பட்­டி­லி­ருந்து ஒழிந்­தி­யாம்­பட்டு செல்­லும் சாலையை தரம் உயர்த்­தித் தரு­மா­றும் பேரவை தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் தொகு­திக்­குட்­பட்ட கிழக்கு கடற்­கரை சாலை­யில் கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் தமி­ழுக்கு அமு­தென்று பாடிய புரட்­சிக் கவி­ஞர் பார­தி­தா­சன் அவர்­க­ளுக்கு தமிழ்­நாடு அரசு சார்­பாக ரூ.3.50 கோடி செல­வில் மணி மண்­ட­பம் கட்­டு­மான பணி தொடங்­கப்­பட்­டது. புரட்­சிக் கவி­ஞ­ரின் மணி மண்­ட­பத்தை விரைந்து முடித்­திட பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விழுப்­பு­ரம் மாவட்­டத்­திற்கு விளை­யாட்டு வீரர்­கள் தங்­கும் விடுதி (Sports Youth Hostel) ஒன்று அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கடன் தள்­ளு­படி எப்­போது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆதி திரா­விட மக்­கள் மற்­றும் என்­னைப் போன்ற இளை­ஞர்­கள் தொழில் தொடங்கி வாழ்­வில் முன்­னேற முன்­னாள் முத­ல­மைச்­சர் தமி­ழி­னத் தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டது தாட்கோ நிறு­வ­னம். தாட்கோ மூலம் தொழில் தொடங்க வழங்­கப்­பட்ட கடன் முழு­வ­தும் தள்­ளு­படி செய்­யப்­ப­டும் என்று தங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­வித்­தீர்­கள். ஆனால் இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் தாட்கோ கடன் தள்­ளு­படி குறித்த எந்த அறி­விப்­பும் இல்லை. தாட்கோ கடன்­கள் எப்­பொ­ழுது தள்­ளு­படி செய்­யப்­ப­டும் என்­பதை பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முதல்­வர் அவர்­கள் தஞ்­சா­வூர் மாவட்­டம் செங்­கிப்­பட்­டி­யில் நடந்த தேர்­தல் பரப்­பு­ரை­யில் இரண்டு ஏக்­கர் நிலம் உள்ள விவ­சா­யி­கள் மற்­றும் நில­மற்ற குடும்­பத்­தி­ னர் மற்­றும் ஒன்­றிய, மாநில அரசு ஊழி­யர் இல்­லாத குடும்­பத்­தில் உள்ள மாண­வர்­க­ளின் பொறி­யி­யல், மருத்­து­வம் உள்­ளிட்ட தொழிற்­கல்வி முதல் அனைத்து படிப்­பு­க­ளுக்­கான முழு செல­வை­யும் அரசே ஏற்­கும் என்று அறி­வித்­தார். ஆனால் இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் அது பற்­றிய எந்த ஒரு அறி­விப்­பும் இல்லை. இந்த திட்­டம் எப்­போது செயல்­ப­டுத்­தப்­ப­டும் என்­பதை பேர­வைத் தலை­வர் வாயி­லாக அறிய விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வானூர் தொகுதி பெரும்­பா­லும் புதுச்­சேரி மாநி­லத்­தை­யொட்டி உள்ள பகுதி ஆகும். எனது சட்­ட­மன்­றத்­திற்­குட்­பட்ட பெரும்­பா­லான கரு­வுற்ற தாய்­மார்­கள் மகப்­பேறு அவ­சர காலத்­தில் புதுச்­சே­ரி­யில் உள்ள ஜிப்­மர் மருத்­து­வ­மனை மற்­றும் அரசு மகப்­பேறு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு குழந்­தை­கள் பிறக்­கி ன்­றது. முதல்­வர் அவர்­கள் அறி­வித்த தாய்­மா­மன் தங்க மோதிர திட்­டத்­தில் தமிழ்­நாட்­டைச் சார்ந்த புதுச்­சே­ரி­யில் பிறக்­கும் குழந்­தை­ க­ளுக்­கும் வழங்க வேண்­டும் என்­பதை பேர­வைத் தலை­வர் வாயி­லாக கேட்­டுக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு தொழில்­ம­ய­மான ஒரு மாநி­லம். சரி­பா­திக்­கும் அதி­க­மான மக்­கள் நக­ரங்­க­ளிலே வாழ்­கி­றார்­கள். அத­னால் சாலை­கள் கட்­ட­மைப்­புக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டிய தேவை தமிழ்­நாட்­டிற்கு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்­த­வ­கை­யில் எங்­க­ளு­டைய கடந்த 5 ஆண்­டு­க­ளில் எங்­க­ளு­டைய திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் அவர்­கள் முத­ல­மைச்­சர் சாலை மேம்­பாட்­டுத் திட்­டத்­தில் 692 கி.மீ. நீள­முள்ள நான்கு வழித்­த­டச் சாலை­கள், 2,089 கி.மீ. நீள­முள்ள இரு வழித்­த­டச் சாலை­கள் அமைத்­துக்­கொ­டுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒருங்­கி­ணைந்த சாலை உட்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டத்­தில் 11,250 கி.மீ. சாலைப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 1,057பாலம் மற்­றும் சிறு பாலப் பணி­கள் முடிக்­கப்­பட்­டுள்­ளன. 2,071 இடங்­க­ளில் சாலைப் பாது­காப்­புப் பணி­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.6,123.32 கி.மீ. ஊராட்சி மற்­றும் ஊராட்சி ஒன்­றி­யச் சாலை­கள் தரம் உயர்த்­தப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோயம்­பேடு காளி­யம்­மன் கோவில் தெரு சந்­திப்பு மேம்­பா­லம், வேளச்­சேரி விஜ­ய­ந­கர் சந்­திப்பு மேம்­பா­லம், மேட­வாக்­கம் சாலை சந்­திப்புமேம்­பா­லம், மதுரை வளை­யச்­சாலை சந்­திப்பு மேம்­பா­லம், சென்னை இந்­திரா நகர் &amp; டைடல் பார்க் ‘U’ வடிவ மேம்­பா­லங்­கள், கோயம்­புத்­தூர் உக்­க­டம்–­­ஆத்­துப்­பா­லம் மேம்­பா­லப் பணி­கள், கோயம்­புத்­தூர் அவி­நாசி சாலை உயர்­மட்­டச் சாலை, மது­ரை–­­தொப்­பூர் சாலை அப்­பல்லோ சந்­திப்பு மேம்­பா­லம் என முக்­கிய மேம்­பா­லங்­கள் கட்­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ரை­யில் கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம், கிண்டி கலை­ஞர் பன்­னோக்கு உயர்­சி­றப்பு மருத்­து­வ­மனை, மது­ரை­யில் ஜல்­லிக்­கட்டு அரங்­கம், கீழடி அருங்­காட்­சி­ய­கம், 11 புதிய அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­கள், 71 அரசு தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­களை (ITI) நவீ­ன­ம­ய­மாக்­கல் என பொதுப்­ப­ணித்­துறை சார்­பில் எண்­ணற்ற சாத­னைத்­திட்­டங்­களை தமிழ்­நாட்­டுக்கு தந்­த­வர் எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல, 15.11.2023 அன்று தமிழ்­நாடு மாநி­லத் துறை­மு­கங்­கள் மேம்­பாட்­டுக் கொள்கை – 2023 வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. நாகப்­பட்­டி­னம் முதல் இலங்கை காங்­கே­சன்­துறை வரை­யி­லான பட­குச் சேவை தொடக்­கம், விவே­கா­னந்­தர் பாறை மற்­றும் திரு­வள்­ளு­ வர் சிலையை இணைக்­கும் கடல்­சார் கண்­ணா­டிப் பாலம் கட்டி முடிக்­கப் பட்­டுள்­ளது. இப்­படி எண்­ணற்ற சாத­னை­களை பொதுப்­ப­ணித்­துறை, நெடுஞ்­சா­லைத்­துறை, சிறு துறை­மு­கங்­கள் சார்­பாக எங்­கள் ஆட்­சிக்­கா­லத்­தில் திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்­கள் ஆட்­சிக்கு வரும்­போது முந்­தைய அ.தி.மு.க. அரசு விட்­டுச்­சென்ற திட்­டங்­க­ளை­யும் தொடர்ந்து முன்­னெ­டுத்­துச் செயல்­ப­டுத்­தி­னார் எங்­கள் தலை­வர். ஆனால் இந்த புதிய அரசு அமைந்த பிறகு எங்­கள் ஆட்­சிக்­கால திட்­டங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­கள் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன, தொய்­வ­டைந்­து­விட்­டன என்­றெல்­லாம் செய்­தி­கள் வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">டெண்­டரை ரத்து செய்­துள்ள த.வெ.க. அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, சென்னை – செய்­யாறு தொழில்­வ­ழிச்­சா­லையை இணைக்­கும் வகை­யில் 43 கிலோ­மீட்­ட­ருக்கு 4 வழிச்­சாலை அமைப்­ப­தற்­காக கடந்த மார்ச் மாதம் கோரப்­பட்ட டெண்­டரை தமிழ்­நாடு மாநில நெடுஞ்­சா­லை­கள் ஆணை­யம் ரத்து செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­ப­கு­தி­யில் சமீ­பக் கால­மாக தொழில் வளர்ச்சி அதி­க­ரித்து வரு­கி­றது. சிப்­காட் தொழிற்­பேட்­டை­யில் ஏரா­ள­மான தொழிற்­சா­லை­கள் செயல்­பட்டு வரும் நிலை­யில், சென்னை – செய்­யாறு இடை­யே­யான போக்­கு­வ­ரத்து வச­தியை மேம்­ப­டுத்தி, கன­ரக வாகங்­கள் செல்­லும் வகை­யில் செய்­யாறு சிப்­காட் தொழில்­வ­ழிச்­சா­லை­யின் ஒரு பகு­தி­யாக இத்­திட்­டம் அப்­போது முன்­மொ­ழி­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மீண்­டும் 4 வழிச்­சாலை பணி­களை இந்த அரசு தொடங்­குமா.?இல்லை முழு­மை­யாக கைவி­டப்­பட்­டுள்­ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அண்ணா சாலை­யில் சைதாப்­பேட்டை முதல் தேனாம்­பேட்டை வரை­யி­லான உயர்­மட்ட பாலம் அமைக்­கும் பணி­க­ளின் நிலைஎன்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ர­வா­யல் – துறை­மு­கம் வரை­யி­லான உயர்­மட்ட பறக்­கும் சாலை திட்­டத்­தின் நிலை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­படி பல திட்­டங்­க­ ளின் நிலை குறித்து கேள்­வி­கள் எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெடுஞ்­சா­லைத்­துறை மற்­றும் சிறு துறை­மு­கங்­கள் மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக் கானடெண்­டர்­க­ளில், குறிப்­பிட்ட சில பெரிய நிறு­வ­னங்­கள் (Corporate Contractors) மட்­டுமே பங்­கேற்­கும் வகை­யில் Turnover Criteria மற்­றும் அனு­ப­வத் தகு­தி­கள் திடீ­ரென மாற்­றப்­பட்­ட­தா­கப் புகார் எழுந்­தி­ருக்­கி­றது. எதற்­காக இந்த புதிய விதி­கள்புகுத்­தப்­பட் டன? இந்த விதி­முறை மாற்­றங்­க­ளால் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த சிறு மற்­றும் நடுத்­தர ஒப்­பந்­த­தா­ரர்­கள் டெண்­டர் கோர முடி­யா­மல் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் இறுதி செய்­யப்­பட்ட 2,339 அரசு டெண்­டர்­களை தவெக அரசு ஒட்­டு­மொத்­த­மாக ரத்து செய்­தி­ருக்­கி­றது என ஊட­கங்­க­ளில் செய்தி வெளி­யா­கி­யி­ருக்­கி­றது. தவ­று­கள் நடந்­தி­ருந்­தால் அரசு நட­வ­டிக்கை எடுப்­ப­தில் எந்தஆட்­சே­ப­ணை­யும் இல்லை. பணி­கள் முடிக்­கப்­பட்டு அது தர­மில்லை எனில் பணத்தை நிறுத்தி வைக்க முடி­யும். பணி­களை தரத்தை அரசு சோதனை செய்ய முடி­யும். இப்­படி வாய்ப்­பு­கள் எல்­லாம் இருந்­தும் அதை செய்­யா­மல் டெண்­டார்­களை ரத்து செய்­வ­தால் அடிப்­படை வச­தி­களை மேற்­கொள்ள முடி­யா­மல்அது மக்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­பதை இந்த உணர்ந்து இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் உள்­கட்­ட­மைப்பு வளர்ச்­சி­யில் நீண்டகால நோக்­கில் இவை பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். எனவே முடக்கி வைக்­கப்­பட்­டுள்ள திட்­டங்­களை மிக விரை­வாக பணி­களை தொடங்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனக்கு வாய்ப்­ப­ளித்த சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக உறுப்­பி­னர் கெள­தம் திரா­வி­ட­மணி பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>