<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,62,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 27 2026 03:48:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="27082026-MDU-10" position.sequence="10" ex-ref="27082026-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">கூட்டணிக் கட்சிகளோடு த.வெ.க.வின் கள்ள ஆட்டமும் – தேசிய அரசியலில் போடும் வேஷமும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame835754_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Manshyaputhira_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்டமன்றத்தில் தினமும் நாடகம் போடுவது யார் என்பதில் நான்கு அமைச்சர்களுக்கு இடையே சுழற்சி முறையில் ஒரு ஏற்பாடு இருக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஆதவ் அர்ஜுனா முறை வந்தபோது, த.வெ.க. சார்பில் நாடகம் போட கையில் திரைக்கதை (Script) எதுவும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, காங்கிரஸ் உறுப்பினருக்கும் த.வெ.க. உறுப்பினருக்கும் இடையிலான ஒரு விவாதத்தில் சம்பந்தமே இல்லாமல் இடையே புகுந்து ‘நடித்துக் காட்டிய’ காட்சியைக் கண்டோம். ஆனால், இதுவும் ஒருவகையில் த.வெ.க.வின் நாடகமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்கிரஸ் உறுப்பினரும் அமைச்சருமான விஸ்வநாதன் தி.மு.க.விற்கு எதிரான சில கருத்துகளைக் கூறியபோது, தி.மு.க. உறுப்பினர் கோவி. செழியன், “மேலூர் தொகுதியில் தி.மு.க. தொண்டர்களால் வெற்றி பெற்று, இன்று அமைச்சராகி உள்ளீர்கள். கருப்பு–சிவப்பு வேட்டி கட்டிய தொண்டனின் உழைப்பே அதற்குப் பின்னணியில் உள்ளது” என்றார். இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர் அமைச்சர் விஸ்வநாதன். ஆனால், ஆதவ் அர்ஜுனா வழக்கம் போல ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு, தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எப்படியெல்லாம் தி.மு.க.விற்கு உதவின என்று அளந்துவிட ஆரம்பித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்தக் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதம் எவ்வளவு சிறியது என்பது தி.மு.க.விற்கும் தெரியும்; அதன் முன்னாள் கூட்டணிக் கட்சிகளுக்கும் தெரியும். காங்கிரஸின் வாக்கு சதவீதம் தெரிந்தும், அதன் தகுதிக்கு மீறி தி.மு.க. இடங்களை ஒதுக்கியதற்குக் காரணம், தேசிய அளவில் மதச்சார்பற்ற ஒரு கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே! அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் அவற்றின் வாக்கு வங்கியைப் பற்றிக் கவலைப்படாமல், தி.மு.க. அதிக இடங்களை ஒதுக்கித் தந்தது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் 28 இடங்களைப் பெற்றும் காங்கிரஸ் களத்தில் எந்த வேலையும் செய்யவில்லை. ராகுல் காந்தி கடைசியில் ஒப்புக்கு ஒன்றிரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு, கூட்டணியின் வெற்றிக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கூட்டணியின் வெற்றிக்குத் தன் கட்சித் தொண்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். தி.மு.க. தலைவரும் இளைஞரணிச் செயலாளரும் இந்தக் கட்சிகளின் வெற்றிக்காகக் களத்தில் நின்று தமிழ்நாடு முழுக்கப் பரப்புரை செய்தார்கள். த.வெ.க. அமைச்சரவையில் இருக்கும் வி.சி.க.வின் வன்னியரசு தினமும் தி.மு.க.விற்கு எதிராகப் பேசுகிறார். ஆனால், இவரது வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலின் எத்தகைய உணர்ச்சிமிக்கப் பரப்புரையை மேற்கொண்டார் என்பது மனசாட்சியுள்ளவர்களுக்குத் தெரியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், தேர்தலுக்குப் பின் தன் பக்கம் ஆசை காட்டி இழுத்துக்கொண்ட அன்றைய தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய் என்ன சொன்னார் தெரியுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அண்ணா அறிவாலயம் பக்கம் நிழலுக்கு ஒதுங்கினால் கூட தி.மு.க.வினர் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். தி.மு.க. கூட்டணி என்பது கல்லாப்பெட்டி கூட்டணி” என்றார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆதவ் அர்ஜுனா ஒருபடி மேலே போய் வி.சி.க. பற்றிப் பேசிய கருத்து இது: “திருமாவளவன் அவர்களே, நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய கட்சி இங்கு மாறி ரொம்ப நாளாகிவிட்டது. நீங்களும், 20 பேருமே மட்டுமே கட்சியில் இருக்கிறீர்கள்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த ஆதவ் அர்ஜுனாதான் இப்போது சட்டமன்றத்தில் அன்றைய தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ‘யானை, குதிரை’ என்று அளந்துவிடுகிறார். ஏன் இந்த பசப்பு நாடகம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த சில நாட்களாகத் த.வெ.க. கூட்டணிக் கட்சிகளுக்கும் த.வெ.க.விற்கும் இடையே கடும் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இடதுசாரிகளைக் கணக்கெடுக்க அனுப்பப்பட்ட சுற்றறிக்கை, இடதுசாரி மாணவர் போராட்டங்களைக் கண்காணித்து ஒடுக்க அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஆகியன கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்ற அளவுக்கு அக்கட்சிகளுக்குள் விவாதங்கள் எழுந்துள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்ததாக, ‘விஜய்தான் அடுத்த பிரதமர்’ எனத் த.வெ.க.வினர் ஆரம்பித்திருக்கும் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியை நெளிய வைத்திருக்கிறது. த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என வரிசையாக இந்தக் கருத்தை வழிமொழிய ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு எம்.பி. கூட இல்லாத த.வெ.க.வின் தலைவர் எப்படிப் பிரதமராவார் என்றோ, அல்லது அப்படியே 40 எம்.பி.க்கள் அடுத்த தேர்தலில் வென்றாலும் அது எப்படிச் சாத்தியம் என்றோ இந்தக் கற்பனைக் கோட்டையைக் கட்டுபவர்களுக்குக் கவலை இல்லை. 2014ல் ஜெயலலிதா தானே பிரதமர் வேட்பாளர் என முழங்கிய அதே ‘ ஸ்க்ரிப்ட்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், 2019–இல் காங்கிரஸே சொல்வதற்கு முன்பே ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என அறிவித்த மகத்தான தலைவருக்குத் துரோகம் செய்த ராகுல் காந்திக்கும் காங்கிரஸிற்கும் இது தேவையான ஒன்றுதான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் பிரதமராக வேண்டும் என்ற இந்தப் பிரச்சாரத்தால் வெகுண்டெழுந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “த.வெ.க.வினர் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே உள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, காங்கிரஸ் மட்டும் முதல் ஆளாக ஆதரவு கொடுக்காமல் இருந்திருந்தால், அமித் ஷா த.வெ.க.வின் கதையை முடித்திருப்பார்” என்றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்வாறு கூட்டணிக் கட்சிகளுக்கும் தங்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கொதிநிலையைத் தணிக்கத்தான், தி.மு.க.வை இழுத்து, கூட்டணிக் கட்சிகளுக்காக ஆதவ் அர்ஜுனா குரல் கொடுக்கும் போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் பிரதமர் வேட்பாளாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்நாட்டைத் தாண்டிப் புதுச்சேரியில் கூட வெற்றி பெற முடியாத த.வெ.க.வினர், தாங்கள் தமிழ்நாட்டில் செய்த உருட்டுகளையும் புரட்டுகளையும் இன்று வடஇந்தியாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெறவே இல்லாத சம்பவங்களையெல்லாம் நடந்ததாகக் கட்டுக்கதைகளாகப் பரப்பி வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•	“தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நபர்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் உடனடியாகத் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•	“தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி நோயாளி உயிரிழந்தால், அந்த மருத்துவமனைக்கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது அரசே ஏற்கும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•	“தமிழ்நாட்டில் பசுவதைத் தடையை அமல்படுத்தக் கோரி விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•	“பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துப் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகவும் ஆக்ரோஷமாகவும் விஜய் மிரட்டினார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•	“தமிழ்நாட்டில் உள்ள மசூதி இமாம்களுக்கு அரசுப் பொதுப் பணத்திலிருந்து மாதாந்திரச் சம்பளம் வழங்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">— இப்படி எண்ணற்ற பொய்கள் வடஇந்திய ஊடகங்களில் சமூக வலைத்தள செல்வாக்காளர்கள் (Social Media Influencers) மூலம் பரப்பப்படுகின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘இந்தியா டுடே’ (India Today) போன்ற முன்னணி ஊடகங்களின் உண்மைச் சரிபார்ப்பு (Fact Check) ஆய்வில், பல வடஇந்திய ஐடி (IT) கணக்குகள் ஒரே மாதிரியான வசனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சிறுபடங்களைப் (Thumbnails) பயன்படுத்தி இத்தகைய பொய் செய்திகளைப் பரப்புவது அம்பலமாகியுள்ளது. வடஇந்திய ஆங்கில, இந்தி ஊடகங்களும் தொடர்ந்து த.வெ.க.விற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘கோடி மீடியா’ என அழைக்கப்படும் வடஇந்திய பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் இதை ஏன் செய்கின்றன? மேலும், வடஇந்தியாவில் பா.ஜ.க.வின் சமூக வலைத்தளக் கட்டமைப்பு மிக வலிமையானது; அவை மோடிக்கு எதிராக விஜய் என்ற ஒரு பிம்பம் வளர்வதை விரும்பாதே! அப்படியெனில், என்ன பின்னணியில் இது நடக்கிறது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க.வின் அரசியல் வெற்றிகள் என்பது எதிர்த்துருவங்களை உருவாக்குவதன் மூலமே நிகழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டை ஒரு எதிர்த் துருவமாக நிறுத்தியே பா.ஜ.க.வடமாநிலங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டது. அதில் சிலவற்றை நினைவுகூர்வோம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1.	ஒடிஷா பிரச்சாரம்: ஒடிஷா மாநிலத் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “ஜெகன்னாதர் ஆலயக் கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த ஒடிஷா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இதைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டுபோனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?” என்றார். ஒடிஷாவில் ஆளுங்கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளத்தில் சக்திவாய்ந்த நபராகவும், முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. கார்த்திகேயன் பாண்டியனைக் குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் அவ்வாறு பேசினார். இது தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2.	சனாதன விவாதம்: தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமூக நீதி சார்ந்து சனாதனம் குறித்துப் பேசிய பேச்சு திரிக்கப்பட்டு, இந்து மதத்திற்கு எதிரான பேச்சாக வடஇந்திய ஊடகங்களில் பரப்பப்பட்டது; வழக்குகள் தொடுக்கப்பட்டன. பா.ஜ.க. இதனைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3.	போலித் தகவல்கள்: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வடஇந்தியாவில் போலி காணொளிகள் பரப்பப்பட்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதேபோன்ற ஒரு எதிர்நிலையைத் தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கவே ‘விஜய்’ என்ற போலி பிம்பம் வடநாட்டில் ஊதிப்பெருக்கப்படுவதைப் பா.ஜ.க. ரசிக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது ‘விஜய்’ என்ற போலி பிம்பத்தைக் கிறிஸ்தவ மத பிம்பமாக வடநாட்டில் சித்தரித்து, அதற்கு எதிராக இந்துத்துவா வாக்கு வங்கியை திரட்டக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளைப் பலவீனப்படுத்த விஜய்யின் சினிமா பிம்பம் பா.ஜ.க.விற்குப் பயன்பட்டது போல, வடஇந்தியாவில் பா.ஜ.க.விற்கு வலிமை சேர்க்க விஜய்யின் கிறிஸ்தவ மத பிம்பம் பயன்படும். அதற்காகத்தான் விஜய் அங்கு முன்னிலைப்படுத்தப்படுவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெகுவிரைவில் இந்தக் காட்சிகள் அரங்கேறும்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>