<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 27 2026 03:56:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="27082026-VLR-04" position.sequence="04" ex-ref="27082026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">27.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெயரை நீங்கள் மாற்றினாலும்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">ஒவ்வொரு தாய்மார்களின் நெஞ்சிலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயர் பதிந்திருக்கிறது! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup826206_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup826124_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626360_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="manojcol_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.8">சென்னை, ஆக. 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.8">சட்­டப் பேர­வை­யில் சிறப்புத் திட்­டச் செய­லாக்­கம், இந்து சமய அற­நி­லை­யத் துறை மற்­றும் மின்­துணை மானி­யக் கோரிக்­கை­யில்ஆலங்­கு­ளம் முனை­வர் பால் மனோஜ் பாண்­டி­யன் பேசு­கை­யில் கலை­ஞர் மக­ளிர்உரி­மைத் தொகை பெயரை நீங்­கள் மாற்­றி­னா­லும் ஒவ்­வொரு தாய்­மார்­க­ளின் நெஞ்­சி­லும் எங்­கள் தள­பதி மு.க.ஸ்டாலின் பெயர் பதிந்­தி­ருக்கிறது என்று குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">சட்­டப் பேர­வை­யில் ஆலங்­கு­ளம் முனை­வர் மனோஜ் பாண்­டி­யன் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­களே, எனக்கு அங்­கீ­கா­ரம் கொடுத்து, அடை­யா­ளம் கொடுத்து, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக்கி, இந்த அவை­யில் பேசு­வ­தற்கு வாய்ப்­பி­னைக் கொடுத்த கழ­கத் தலை­வர், திரா­விட மாடல் முத­ல­மைச்­சர், கழ­கத் தலை­வர் அவர்­க­ளுக்கு முதற்­கண் என்­னு­டைய நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய எதிர்­கா­லம், தமி­ழ­கத்­தி­னு­டைய வருங்­கா­லம், எங்­கள் இளைய தலை­வர், எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என்­னு­டைய மன­மார்ந்த நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர், கொறடா, துணைக் கொறடா மற்­றும் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய வணக்­கத்­தி­னைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இன்­றைய தினம், சட்­டம் மற்­றும் திட்­டங்­கள் குறித்து இங்கே பேசு­வ­தற்கு வாய்ப்­புக் கொடுத்த பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">என்­னு­டைய உரை­யைத் துவங்­கு­வ­தற்கு முன்பு, ஏற்­கெ­னவே நிறை­வேற்­றப்­பட்ட சில திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை எடுத்­து­ரைத்து, அதற்­குப் பிறகு நான் மானி­யக் கோரிக்­கை­கள்­மீது ஒரு­சில கருத்­துக்­க­ளைத் தெரி­விக்க விழை­கின்­றேன். என்­னு­டைய ஆலங்­கு­ளம் தொகுதி மக்­க­ளுக்கு, மூன்­றா­வது முறை­யாக என்­னைத் தேர்ந்­தெ­டுத்து இங்கே அனுப்­பிய ஆலங்­கு­ளம் தொகுதி மக்­க­ளுக்கு என்­னு­டைய மன­மார்ந்த நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். அதே­போல, எனக்கு உழைத்த கழ­கத் தோழர்க ளுக்­கும், கூட்­ட­ணிக் கட்சி நண்­பர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யி­னைத் தெரி­வித்து, ஆலங்­கு­ளம் தொகு­தி­யில் கடந்த முறை திரா­விட மாடல் ஆட்­சி­யில் கொடுக்­கப்­பட்ட திட்­டங்­கள் இன்­னும் நிறை­வேற்­றப்­ப­டாத ஒரு சூழ்­நி­லை­யில் ஒரு­சில திட்­டங்­களை எடுத்­து­ரைக்க விரும்புகின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">காசி­வித்­தான் கால்­வாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">திட்­டத்தை நிறை­வேற்­றுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­க­ளு­டைய துறை­யில், கடந்த முறை நீர்­வ­ளத் துறை அமைச்­ச­ராக இருந்த அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­கள் கொடுத்­தி­ருக்­கின்ற, மக்­க­ளு­டைய நீண்ட நாள் கோரிக்­கை­யாக, 50 ஆண்­டுக்­கால கோரிக்­கை­யாக இருந்த, காசி­வித்­தான் கால்­வாய்க்கு 18 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, நில எடுப்பு இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. அதனை விரைந்து முடித்து, அந்­தத் திட்­டத்தை நிறை­வேற்றி, ஆலங்­கு­ளம் தொகுதி மக்­க­ளுக்கு, குறிப்­பாக ஆலங்­கு­ளம் ஒன்­றி­யத்­தில் உள்ள மக்­க­ளுக்கு, அங்கே உள்ள விவ­சா­யப் பெரு­மக்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும் வகை­யில் அதனை நிறை வேற்­றித் தர வேண்­டு­மென்று கேட்­டுக்  கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">நான் நேற்று முன்­தி­னம் பேசி­ய­தைப் போல, ஆலங்­கு­ளம் தொகு­தி­யில் உள்ள கடை­யம் பகு­தி­யில் வன விலங்­கு­க­ளால் விவ­சா­யி­கள் பெரி­தும் இன்­ன­லுக்கு உள்ளா கின்­றார்­கள். குறிப்­பாக, வட­மலை சமுத்­தி­ரத்­தில் கரடி தாக்கி ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். ஆனால் அங்கு அவ­ரு­டைய குடும்­பத்­திற்கு நஷ்ட ஈடு கொடுக்­கப்­ப­ட­வில்லை. அதே­போன்று, காட்டு யானை­க­ளால் விவ­சா­யி­க­ளுக்கு மிகப் பெரிய பாதிப்பு; காட்­டுப் பன்­றி­க­ளா­லும் விவ­சா­யி­ க­ளுக்கு மிகப் பெரிய பாதிப்பு. காட்­டுப் பன்­றி­க­ளைச் சுடு­வ­தற்கு கேரள மாநி­லத்­தில் அர­சாணை வெளி­யிட்­ட­தைப்­போல, நம்­மு­டைய அரசு, காட்­டுப் பன்­றி­க­ளைச் சுடு­வ­தற்கு அதே­போன்று அர­சா­ணையை வெளி­யி­டுமா? என்­பதை நான் அறிய விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">கடந்த முறை கடை­யம் தாலு­காவை, தனி தாலு­கா­வாக அறி­விப்­ப­தற்கு பிரே­ரணை அனுப்­பப்­பட்டு – அங்கு அதி­க­மான மக்­கள் தொகை உண்டு, அதி­க­மான பஞ்­சா­யத்­து­கள் உண்டு. ஆகவே, கடை­யம் தாலு­கா­வி­னு­டையபிரே­ரணை அர­சுக்கு வந்­தி­ருக்­கின்­றது. கடை­யம் தாலு­காவை, தனி தாலு­கா­வாக அறி­விக்க வேண்­டு­மென்ற அந்த பிரே­ர­ணை­மீது உத்­த­ரவு களை பிறப்­பிக்க வேண்­டு­மென்று கேட்­டுக் கொள்­கின்­றேன். நம்­மு­டைய அண்­ணன் சேகர்­பாபு அவர்­கள் தெரி­வித்­த­தைப் போல, இந்து சம­யம் மற்­றும் அற­நி­லை­யங்­கள் துறை­யின் மூல­மாக 10 கல்­லூ­ரி­கள் கொடுக்­கப் பட்­ட­தில், என்­னு­டைய தொகு­தி­யைச் சார்ந்த கடை­யம் பகு­தி­யும் ஒன்று. திரா­விட மாடல் மாண்­பு­மிகு முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள், என்­னு­டைய ஆலங்­கு­ளம் தொகுதி யில் உள்ள கடை­யம் பகு­திக்கு அற­நி­லை­யத் துறை கல்­லூரி ஒன்­றைக் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இன்று உயர் நீதி­மன்­றத்­தி­னு­டைய தீர்ப்­பும் சாத­க­மாக வந்­தி­ருக்­கின்ற இந்த சூழ்­நி­லை­யில், இந்து சம­யம் மற்­றும் அற­நி­லை­யங்­கள் துறை­யின் சார்­பில், அந்த கல்­லூ­ரித் திட்­டம் நிறை­வேற்­றப்­பட்டு, கடை­யம் பகு­திக்கு கொடுக்­கப்­ப­டுமா? என்­பதை அறிய விரும்பு கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">மருத்­து­வ­ம­னை­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">மருத்­துவ உப­க­ர­ணங்­கள் தேவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">கடை­யம் ஆரம்ப சுகா­தார நிலை­யம், நெட்­டூர் ஆரம்ப சுகா­தார நிலை­யம் மற்­றும் ஆலங்­கு­ளம் தாலுகா மருத்­து­வ­ம­னை­க­ளில் மருத்­துவ உப­க­ர­ணங்­கள் இல்லை. ஆகவே, இந்த ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளி­லும், மருத்­துவ மனை­க­ளி­லும் கட்­ட­டங்­கள் முழு­மை­யாக கட்­டப்­பட்டு, உப­க­ர­ணங்­கள் கொடுக்­கப்­ப­டுமா? என்­ப­தை­யும் அறிய விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இங்கு சட்­டத் துறை­யைப் பொறுத்த வரை­யில், நான் இங்கு தெரி­விக்க கட­மைப் ப்படு­வது, என்­னு­டைய திரா­விட மாடல் மாண்­பு­மிகு முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள், தமி­ழ­கத்­தில் ஆதி திரா­விட பெரு­மக்­கள் வசிக்­கின்ற இடங்­க­ளில் எல்­லாம் ‘Colony’ என்­கின்ற ஒரு சொல் இருந்­தது, அந்த சொல்லை நீக்கி அர­சாணை பிறப்­பித்­தது, திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) நம்­மு­டைய திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய ஆட்­சி­யில், உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரி­யும், நம்­மு­டைய பெண்­கள் சுய­மாக வாழ வேண்­டும், அவர்­கள் உழைப்­பிற்­காக, அவர்­கள் தங்­கள் குடும்­பத்தை நடத்­து­வ­தற்­காக அவர்­க­ளுக்கு உரி­மைத் தொகை கொடுக்­க­வேண்­டு­மென்று சொல்லி, ‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்’ மூல­மாக 1,000 ரூபாயை நம்­மு­டைய திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">மக­ளிர் உரிமைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">தொகை திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">ஆனால், நான் மானி­யக் கோரிக்­கை­யைப் பார்த்­தேன், சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை­யி­னு­டைய மானி­யக் கோரிக்­கை­யில், பக்­கம் 63-ல் மக­ளிர் உரி­மைத் திட்­டம் என்று சொல்லி, அவ­ரு­டைய பெயரை விட்டு விட்­டார்­கள். ஆனால்,அந்த திட்­டத்­திற்கு மட்­டும் இந்த அரசு நிதியை கூட்டி இருக்­கின்­றது. ஏற்­கெ­னவே உள்ள நிதி ரூ.13 ஆயி­ரத்து 807 கோடி­யி­லி­ருந்து 14 ஆயி­ரத்து 413 கோடி ரூபாய் கூட்­டி­யி­ருக்­கின்­றது. அந்­தத் திட்­டத்தை நம்­மு­டைய திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­த­தற்கு கார­ணம், மக­ளி­ருக்கு அவர் உத­வித் தொகை யாக கொடுக்­க­வில்லை, அவர்­க­ளுக்கு அவர்­கள் தியா­கத்­திற்­காக உரி­மைத் தொகை­யாக கொடுத்­தார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த உரி­மைத் தொகையை கொடுத்­தி­ருக்­கின்ற அந்த திட்­டத்­திற்கு நீங்­கள் பெயரை மாற்­ற­லாம். ஆனால், ஒவ்­வொரு தாய்­மார்­க­ளு­டைய நெஞ்­சி­லும் எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர், திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய பெயர் நெஞ்­சத்­தில் இருக்­கின்­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை மூல­மாக 
இந்­தத் திட்­டத்­தைப் பற்றி தெரி­வித் 
திருக்­கின்­றேன். ஆனால், நீங்­கள் இப்­பொ­ழுது உங்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் 2,500 ரூபாய் என்று சொன்­னா­லும், அதைக் கொடுப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இருந்­தா­லும், நீங்­கள் ‘தாய்­மா­மன் சீர்’ என்று சொல்லி ஒரு திட்­டத்தை அறி­வித்து இருக்­கின்­றீர்­கள். நான் அது சம்­பந்­த­மாக ஒரு­சில கருத்­து­களை தெரி­விக்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்­தத் தாய்­மா­மன் சீர் என்று சொல்லி, அந்­தத் திட்­டத்­தைக் கொடுப்­ப­தற்கு அத­னைக் கொள்­மு­தல் செய்­யும் இயக்­க­மாக Tamil Nadu Medical Services Corporation Limited என்று அவர்­கள் மூல­மா­கத்­தான் அந்த tender கோரப்­பட்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்­தத் தமிழ்­நாடு மருத்­துவ சேவைக் கழ­கம் என்­பது Companies Act-ல் பதிவு செய்­யப்­பட்ட ஒரு கழ­கம். Companies Act-ல் பதிவு செய்­யப்­பட்ட அந்­தக் கழ­கம், அத­னு­டைய நோக்­கம் என்­பது மருத்­துவ உப­க­ர­ணங்­க­ளைக் கொள்­மு­தல் செய்­வது, மருந்­து­களை வாங்­கு­வது, அதே­போன்று மருத்­துவ சேவைக்­கான கட்­ட­டங்­க­ளைக் கட்­டு­வது என்ற அந்த அடிப்­ப­டை­யில் உள்ள ஒரு கழ­கம், மருத்­துவ சேவைக் கழ­கம். Tamil Nadu Medical Services Corporation Limited அவர்­கள் மூல­மாக கோரப்­பட்ட இந்த tender-ல் gold, தங்­கம் என்­பது வகைப்­ப­டுத்­தப்­பட்­டது, Medical equipment என்று சொல்லி. Equipment, அது ஓர் உப­க­ர­ண­மாக equipment என்ற அடிப்­ப­டை­யில், அந்த tender கோரப்­பட்­டது. அந்த Tamil Nadu Medical Services Corporation Limited-ன் நோக்­கத்தை மீறி­யது என்­பதை இங்கே நான் தெரி­விக்க கட­மைப்­பட்டி ருக்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்­தத் தங்­கத்தை மக்­க­ளுக்­குக் கொடுப்­ப­தில் தவறு இல்லை. மக்­க­ளுக்கு நன்மை பயக்க வேண்­டும் என்­ப­து­தான் எங்­க­ளு­டைய திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் நோக்­கம். அவர்­க­ளுக்கு வீட்­டிற்கு நல்ல நன்­மை­கள் கிடைத்­தால், அது­தான் எங்­க­ளு­டைய எண்­ணம். அதை வர­வேற்­கின்­றோம். ஆனால், மருத்­துவ உப­க­ர­ணங்­கள் வாங்­கும் ஒரு கழ­கம், எப்­படி tender-ல் அவர்­கள் முறைப்­ப­டுத்தி, அதை வகைப்­ப­டுத்தி, அதை சீர்த்­தூக்கி அதனை அங்கு tender கோரு­கின்ற அந்த நபர்­க­ளு­டை­யத் தகு­தியை எப்­படி தீர்­மா­னிக்க முடி­யும். இதை நான் உங்­க­ளுக்கு, அர­சாங்­கம் இதற்கு பதில் சொல்ல வேண்­டும் என்று 
கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இது சம்­பந்­த­மாக ஓர் உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பே இருக்­கின்­றது. அந்த உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பில், மருத்­துவ சேவை கழ­கத்­தி­னு­டைய நோக்­கத்­தைத் தவிர வேறு எது­வும் செய்­யக் கூடாது என்­ப­தும் இருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">சமீ­பத்­தில் பேச்­சு­ரிமை, பேச்­சு­ரிமை எவ்­வ­ளவு முக்­கி­யம் என்­பதை நாம் அனைவரும் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். உண்­மை ­யி­லேயே அவை­யில் இருக்­கும்.பொழுது அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்­கும் பாது­காப்பு இருக்­கின்­றது. நியா­ய­மான முறை­யில் பாது­காக்­கின்­றீர்­கள். ஆனால்,வெளியே சென்­றால் எங்­க­ளுக்கு உங்­க­ளு­டைய பாது­காப்பு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">பாது­காப்பு வழங்க வேண்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">3 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கைது செய்­யப்­பட்­டார்­கள். நான் அத­னு­டைய உள் விகா­ரங்­க­ளுக்­குச் செல்ல விரும்­ப­வில்லை. ஆனால் உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பு, சமீ­பத்­தில் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றத் தீர்ப்­பில் தெலங்­கானா மாநி­லத்­தி­லி­ருந்து, ஒரு தீர்ப்­பில், உச்ச நீதி மன்­றத்­திற்­குச் செல்­கின்­றது. அந்த மாநில உயர் நீதி­மன்­றம் கொடுத்­தி­ருக்­கின்ற ஒரு சில சரத்து களைத் தெரி­விக்­க­லாம் என்று எண்ணு கின்­றேன். அர­சி­யல் கார­ணத்­திற்­காக, political speech கொடுக்­கும்­பொ­ழுது அதனை, அதற்­காக வழக்குப் பதிவு செய்ய வேண்­டும் என்று சொன்­னால், அதற்கு முன்­னால் ஒரு preliminary enquiry, ஒரு ஆரம்­பக்­கட்ட விசா­ரணை நடத்த வேண்­டும். ஒரு Public Prosecutor, அரசு வழக்­க­றி­ஞர் அவர்­க­ளி­டம் opinion வாங்க வேண்­டும். அது­போன்று அவர்­கள் பொது அமைதிக்­குக் குந்­த­கம் விளை­வித்­தால் மட்­டும் அவர்­க­ளின் பேச்­சுக்கு கைது செய்­யப்­பட வேண்­டும் என்று சொல்லி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">‘Protection of political speech: The police shall not mechanically register cases concerning harsh, offensive or critical political speech. Only when the speech amounts to incitement to violence or poses an imminent threat to public order.’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">ஆனால், எங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒரு­போ­தும்,--எங்­க­ளு­டை­யத் தலை­வர் MISA-வைப் பார்த்­த­வர். எங்­க­ளு­டைய இளை­யத் தலை­வர் எந்­தக் கைதிற்­கும் அஞ்­சா­மல் சிறைக்­குச் சென்­ற­வர். அதைப்­பற்றி நான்சொல்­ல­வில்லை. ஆனால், ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ருக்கு பாது­காப்பு வேண்­டும் என்று சொன்­னால், இந்த உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பு, தெலங்­கானா தீர்ப்பு இதை உறு­திப்­ப­டுத்தி யிருக்­கி­றது, உச்ச நீதி­மன்­றம். இதனை நம்­மு­டைய மாநி­லத்­தில் நம்­மு­டைய அரசு நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக எந்­தக் கைது­க­ளும் இருக்­கக் கூடாது. பேச்­சு­ரிமை முழு­மை­யாக இருக்க வேண்­டும். ஆக­வே­தான் நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். இந்­தத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் எதிர்­கா­லத்­தில் பேர­வைத் தலை­வர் அவர்­க­ளும், இதை cognizance எடுத்து, நீங்­க­ளும் இதை notice எடுத்து, இதற்­கான தகுந்த பாது­காப்­பு­களை வழங்க வேண்­டும் என்று தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">மாண்­பமை உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் நாங்­கள் பின்­பற்­று­வோம் என்று சொல்­ல­வில்லை. இருந்­தா­லும் பர­வா­யில்லை. பேர­வைத் தலை­வர் அவர்­களே, நம்­மு­டைய சக உறுப்­பி­னர், இது அவை உரிமை சம்­பந்­த­மாக பேர­வைத் தலை­வர் அவர்­கள் ஏற்­கெ­னவே சபை­யில் பேசி­யது. நம்­மு­டைய சக உறுப்­பி­னர் G.V. மார்க்­கண்­டே­யன் அவர்­கள் பேசிய ஒரு பேச்சு, சபை­யின் வெளி­யில் இருந்­தா­லும், அது­சம்­பந்­த­மாக ஒரு வழக்கு இருக்­கி­றது. நான் அதற்­குள் செல்ல விரும்­ப­வில்லை. அது­சம்­பந்­த­மாக ஒரு வழக்கு, அக்­டோ­பர் மாதத்­தில், மாண்­பமை உச்ச நீதி­மன்­றத்­தில் constitutional bench முன்­னி­லை­யில் தனி நப­ரு­டைய பேச்­சு­ரிமை, அவை­யி­னு­டைய உரிமை, அனைத்­தை­யும் அவர்­கள் சேர்த்து இந்து N. Ravi அவர்­கள் தொடர்ந்­தி­ருக்­கிற வழக்­கில் தீர்­மா­னிக்­கப்­போ­கி­றார்­கள் என்­பதை யும் தங்­க­ளு­டைய கவ­னத்­திற்கு எடுத்­துச் சொல்லி, நான் பேர­வைத் தலை­வர் அவர்­க­ளு­டைய பெயரை நான் ஒரு மாண்­பமை உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பில் பார்த்­தேன். ஒரு தீர்ப்­பில், இதே­போன்று நம்­மு­டைய சட்­ட­மன்­றத்­தில் அழ­கா­புரி மோகன்­ராஜ் அவர்­க­ளு­டைய வழக்­கில் தாங்­கள் அந்த உரி­மைக்­குழு உறுப்­பி­ன­ராக இருந்­ததை தீர்ப்­பில் குறிப்­பிட்­டி­ருந்­த­தைப் பார்த்­தேன். ஆகை­யால்­தான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். தாங்­கள் உறுப்­பி­ன­ராக இருந்த அந்த உரி­மைக் குழு­வின் முடி­வினை மாண்­பமை உச்ச நீதி­மன்­றம் ரத்து செய்­தி­ருக்­கின்­றது. ஆகவே, இந்த 7 நீதி­ப­தி­கள் கொண்ட constitutional bench, அவர்­கள் தீர்­மா­னிப்­ப­தை­யும் நாம் எதிர்­கொண்டு பார்க்க வேண்­டும். அதனை தங்­க­ளு­டைய கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­கி­றேன் என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்த மானி­யக் கோரிக்­கை­யைப் பார்த்­த­போது, கடந்த காலத்­தில் எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் நிறை­வேற்­றிய ஒரு திட்­டம்-­நான் முதன்­மு­த­லில் அப்­போது சட்­ட­மன்­றத்­தில் பேசி­ய­பொ­ழு­து­கூட, அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்து கழ­கத் தலை­வர் அவர்­கள் பேசி­யது ஒன்று. ‘நான் ஆளுங்­கட்சி வரி­சைக்­கும் முத­ல­மைச்­சர், எதிர்­கட்சி வரி­சைக்­கும் முத­ல­மைச்­சர், 234 தொகு­தி­க­ளுக்­கும் நான் முத­ல­மைச்­சர்’ என்று சொல்லி, உங்­கள் தொகு­தி­யில் முத­ல­மைச்­சர் என்­கிற ஒரு திட்­டத்­தைக் கொண்டு வந்து, 10 கோரிக்­கை­களை நிறை­வேற்றி தந்த பெருமை எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­க­ளைச் சாரும். ஆனால், இந்த முறை அந்­தத் திட்­டத்­தைப் பார்த்­தேன். அந்­தத் திட்­டத்­திற்­காக மட்­டும் கடந்த 5 ஆண்­டு­க­ளில் கழ­கத் தலை­வர் அவர்­கள் நிறை­வேற்­றிய பணி­கள் 1,408. அதற்­காக ஒதுக்­கிய பணம் 15,466 கோடி ரூபாய். பேர­வைத் தலை­வர் அவர்­களே, அத்­தனை கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டது. அதில் ஆளுங்­கட்சி, எதிர்­கட்சி என்று பார்க்­க­வில்லை. ஆனால், உங்­கள் தொகு­தி­யில் முத­ல­மைச்­சர் என்று சொல்லி, அனைத்­துத் தொகு­தி­க­ளுக்­கும் அந்­தத் திட்­டத்­தைக் கொடுத்­தார். Car-ஐ கொடுப்­ப­வர்­கள் அனைத்­துத் தொகு­தி­க­ளுக்­கும் திட்­டம் கொடுத்­தால், கண்­டிப்­பாக நாங்­கள் வர­வேற்­போம் என்­பதை இங்கே நான் தெரி­விக்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">போட்­டித் தேர்வு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">ஊக்­கத் தொகை தொட­ருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">கடந்த காலத்­தில், ஒரு திட்­டம்-­க­ழ­கத் தலை­வர் அவர்­க­ளால் கொண்டு வரப்­பட்ட ஒரு முக்­கி­ய­மான திட்­டம், நான் முதல்­வன் திட்­டம். அந்­தத் திட்­டத்­தின் மூல­மாக திறன் பயிற்சிகொடுக்­கப்­பட்டு, ஏரா­ள­மா­ன­வர்­கள் தங்­க­ளு­டைய கல்­லூரி படிப்­பாக இருந்­தா­லும், அவர்­கள் போட்­டித் தேர்­வு­க­ளில் கலந்து கொண்­டா­லும், அவர்­கள் அதனை பயன்­ப­டுத்தி னார்­கள். இப்­படி பயன்­ப­டுத்­தி­ய­போது, அத­னால் தேர்ச்சி பெற்­ற­வர்­கள் எண்­ணிக்கை ஏரா­ளம், ஏரா­ளம். 40 இலட்­சம் பேர் அத­னால் பயன் பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அவர்­க­ளு­டைய கல்­லூரி கனவு திட்­டத்­தின் மூலம் பள்ளி மாண­வர்­க­ளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்­டு­மென்று ஒரு திட்­டம் இருந்­த­து-­கல்­லூரி கனவு திட்­டம். அதைக் காண­வில்லை. அதே­போன்று, நான் முதல்­வன் திட்­டத்­தின் மூல­மாக போட்­டித் தேர்வு ஊக்­கத் தொகை­கள் தொட­ருமா என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இங்கே சிறப்பு திட்ட செய­லாக்­கத் துறை யிலுள்ள அந்த திட்­டத்­தை­தான் தெரி­வித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். கடந்த ஆண்டு UPSC தேர்­வில் மட்­டும் தேர்ச்சி பெற்று இந்­திய அள­வில் இரண்­டா­மி­டத்­தைப் பெற்­ற­வர் ராஜேஸ்­வரி சுவே அவர்­கள். 18-ஆம் இடத்­தைப் பிடித்­த­வர் சுருதி. இந்த இரு­வ­ரும் பயன்­பெற்ற திட்­டம் நான் முதல்­வன் திட்­டம். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஒன்­றிய அரசு நடத்­தும் போட்­டித் தேர்­வு­க­ளில் தமிழ்­நாட்டு மாண­வர்­கள் அதி­க­ள­வில் பங்­கேற்று, வெற்றி பெற்று உய­ரிய பத­வி­க­ளில் அமர வேண்­டு­மென்­று­தான் அந்­தத் திட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த நான் முதல்­வன் திட்­டம் தொடர்­கின்­றதா? அதே­போன்று மேலும், நான் முதல்­வன் திட்­டத்­தின்­கீழ் செயல்­பட்ட SSC, RRB, banking exams உள்­ளிட்ட அனைத்து தேர்­வு­க­ளுக்­கும் பயிற்சி கொடுக்­கும் அந்த திட்­ட­மும் தொடர்­கின்­றதா என்­ப­தை­யும் கேட்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">தமி­ழ­கத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">இரட்டை இலக்க வளர்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">பெயர் மாற்­றி­னா­லும் அந்­தத் திட்­டத்­தின் 
மூல­மாக பய­னா­ளி­க­ளுக்கு நன்மை பயத்­தால் அதில் எங்­க­ளுக்கு மகிழ்ச்சி என்று தெரி­வித்து, மாண­வர்­கள் பயன்­பெ­றும் வகை­யில் காலை உண­வுத் திட்­டம், அதே­போன்று மாண­வர்­கள் உயர்­கல்வி பெறும் அள­விற்கு தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம், தமி­ழ­கத்­தின் வளர்ச்சி இரட்டை இலக்­கில் 11.19 சத­வி­கி­தத்தை கொண்­டு­வந்த பெருமை எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வ­ருக்கு உண்டு என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">நான் கேட்­டுக்­கொள்­வது எல்­லாம் நீங்­கள் ஒரு கிராம் தங்­கம் கொடுக்­கின்­றீர்­கள் என்று சொன்­னீர்­களே, அந்­தத் தங்­கத்தை கொடுப்­ப­தற்கு நீங்­கள் சொன்­னீர்­கள். நம்­மு­டைய கல்­வித் துறை அமைச்­சர் அவர்­கள் எல்­லாம் மக்­க­ளு­டைய பணம் என்று தெரி­வித்­தார். நீங்­கள் ஒதுக்­கி­யி­ருப்­பது எத்­தனை கோடி என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். அத்­தனை கோடியை கொள்­மு­தல் செய்­யும் இயக்­க­மாக தமிழ்­நாடு மருத்­துவ சேவை கழ­கம் இருக்க முடி­யுமா? அது சமூக நலத் துறை­மூ­லம்­தான் செயல்­ப­டுத்­தப்­பட வேண்­டும். அதனை வகைப்­ப­டுத்தி, முறைப்­ப­டுத்த வேண்­டு­மென்று சொன்­னால், இங்கே நம்­மு­டைய மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் அவர்­கள் இருக்­கின்­றார். அதை procurement என்று சொன்­னால் அதற்கு தகுதி, அதனை வகைப்­ப­டுத்த, அத­னு­டைய அனைத்து நுணுக்­கங்­க­ளை­யும் தெரிந்த ஒரு இயக்­கம்­தான் அதை செய்­ய­மு­டி­யும். அதை கண்­டிப்­பாக நீங்­கள் equipment என்ற classification என்ற அடிப்­ப­டை­யில் தங்­கத்தை கொண்­டு­வர முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">Medical equipment என்ன, தங்­கம் என்ன. தங்­கம் என்­பது medical equipment-ஆ நீங்­கள் சிந்­திக்க வேண்­டும். தங்­கம் என்­பது ஒரு medical equipment என்று வகைப்­ப­டுத்தி, அதனை தமி­ழக மருத்­துவ சேவை கழ­கம் கொள்­மு­தல் செய்­ய­மு­டி­யுமா என்­பதை சிந்­தித்து, ஆராய்ந்து அதனை உச்ச நீதி­மன்ற தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் செயல்­ப­டுத்த முடி­யுமா? அதை நீங்­கள் செயல்­ப­டுத்­தி­னீர்­கள் என்று சொன்­னால், மருந்­து­கள் வாங்­கும் அந்­தத் தொகைக்கு என்ன செய்­வீர்­கள்? மக்­க­ளுக்கு மருந்து கிடைக்க வேண்­டு­மென்று சொன்­னால் என்ன செய்­வீர்­கள் என்­ப­தை­யும் தெரி­விக்க கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அமைச்­சர் அவர்­கள் சொன்­ன­தைப் பொறுத்­த­வ­ரை­யில்நீங்­கள் எப்­படி நடை­மு­றைப் படுத்­து­வீர்­கள் என்று சொல்­ல­வில்லை. எப்­படி procurement செய்­யப் போகி­றீர்­கள். அவர்­க­ளு­டைய Tamil Nadu Medical Services Corporation-னுடைய object-ஐ பார்க்­கும்­பொ­ழுது ஒன்­று­தான், to buy or otherwise acquire all kinds of, varieties of generic and patent medicines, drugs என்­று­தான் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இப்­ப­டித்­தான் கொள்­மு­தல் செய்­ய­மு­டி­யும். நீங்­கள் medicines, drugs-ஐதான் வாங்­க­மு­டி­யும். உங்­க­ளுக்கு தங்­கம் வாங்­கு­வ­தற்கு அதற்கு சட்­ட­ரீ­தி­யான நம்­மு­டைய சட்­டத் துறை. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">basic objects-ஐ amend செய்­ய­மு­டி­யாது. அது­தான் சட்­டம். எனவே, பேர­வைத் தலை­வர் அவர்­கள் எனக்கு இந்த வாய்ப்­பி­னைக் கொடுத்­தற்­கும், கழ­கத் தலை­வர் அவர்க ளுக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த நன்ற.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இவ்­வாறு முனை­வர் பால் மனோஜ் 
பாண்­டி­யன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>