<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,189,958,1208" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 27 2026 03:59:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="27082026-VLR-08" position.sequence="08" ex-ref="27082026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="21">புதிதாக 10 மாநகராட்சிகள் உருவாக்கம்! 31 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டன!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup369657_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup369656_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு 100 லிட்­டர் என்று சொன்­னால் 5 லிட்­டர், 10 லிட்­டர்­தான் செல­வா­கும்; மீத­முள்ள 90 லிட்­டர் தரைக்­குக் கழி­வா­கத்­தான் போகும். எனவே, அவ்­வ­ளவு கழி­வை­யும் கொண்டு சென்று சுத்­தி­க­ரிப்பு செய்து நெசப்­பாக்­கத்­தில் கொண்டு செல்­கி­றோம் என்று சொன்­னால், 1,000 MLD-க்கு கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் உரு­வாக்­கி­னால்­கூட, இதை­யும் எடுத்­துச் சென்று சுத்­தி­க­ரித்து நிலத்­தடி நீரை பெருக்­கி­னால்­தான் அந்­தத் தண்­ணீர் சரி­யாக வரும். எனவே, அந்த 540 இடங்­க­ளி­லி­ருந்து கொண்டு செல்ல வேண்­டு­மென்று சொன்­னால் குழாய்­கள் பதிக்க வேண்­டும், சாலை­க­ளைத் தோண்ட வேண்­டும், போக்­கு­வ­ரத்து நெரி­சல்­கள் என எல்லா சிர­மங்­க­ளும் இருக்­கின்­றன. எனவே, அதில் மிகப்­பெ­ரிய சவால்­கள் இருக்­கிற கார­ணத்­தி­னால்­தான், தொடர்ந்து அந்­தப் பணி­களை மேற்­கொண்­டி­ருந்­தா­லும், கடை­சி­யாக இறு­தி­யாக செய்ய முடி­ய­வில்லை. எனவே, ஆங்­காங்கு தேங்­கி­யி­ருக்­கிற ஆறு­க­ளை­யெல்­லாம் ஓட்­டேரி நல்லா, விரு­கம்­பாக்­கம், வீராங்­கல் ஓடை போன்ற நீர்­வ­ளத் துறை­யி­லி­ருந்த ஆறு­களை மீட்­டெ­டுத்து, நம் அர­சாங்­கம், மாந­க­ராட்சி எடுத்து அந்த ஆறு­களை தூர்­வா­ரு­கிற நிலை­யை­யும் நாங்­கள் எடுத்­தி­ருக்­கி­றோம் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நக­ராட்­சித் துறை­யின் பணி­களை நான் சொல்ல விரும்­பு­கி­றேன். இதி­லும் எங்­க­ளுக்கு உற்ற துணை­யா­கத் தலை­வர் கலை­ஞர், ஐயா தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, தள­பதி, தம்பி ஐயா இள­வல் உதயா அவர்­கள், இவர்­க­ளோடு எங்­க­ளு­டைய தோழ­மைக் கட்­சி­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும் நான் நினை­வுக் கூர விரும்­பு­கி­றேன். இங்­கி­ருக்­கிற திரு­மதி பிரே­ம­லதா விஜ­ய­காந்த், தேமு­தி­க­வின் தலை­வர், நம்­மு­டைய பேரா­சி­ரி­யர் முனை­வர் எம்.எச். ஜவா­ஹி­ருல்லா அவர்­கள், SDPI-யின்  முபா­ரக்,   தமி­முன் அன்­சாரி போன்ற தலை­வர்­கள் எங்­க­ளோடு உறு­து­ணை­யாக இருந்து தேர்­த­லில் பணி­யாற்­றி­ய­வர்­கள்; அவர்­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் என்­னு­டைய நன்­றி­யை­யும், வணக்­கத்­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ரூ.1.25 லட்­சம் கோடி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நக­ராட்­சித் துறை­யில் பணி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் பொது­வாக, நக­ராட்­சித் துறை­யில் என்­னென்ன பணி­கள் செய்­தோம் என்று சொன்­னால் எல்­லாம் தெரிந்­த­து­தான். எங்­க­ளி­டம் இருந்த அதி­கா­ரி­கள்­தான் முழு­மை­யாக இன்­றைக்­கும் நக­ராட்­சித் துறை­யில் இருந்து பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். குடி­நீர் வச­தி­கள், மழை­நீர் வடி­கால் வச­தி­கள், கழி­வு­நீர் அகற்­று­தல், கழி­வறை வச­தி­கள், தார் சிமென்ட் சாலை­கள் அமைத்­தல், புதிய பேருந்து நிலை­யங்­கள், தெரு விளக்­கு­கள், பூங்­காக்­கள் மற்­றும் விளை­யாட்டு மைதா­னங்­கள், பொது சுகா­தா­ரம், சந்­தை­கள் அமைத்­தல், அறி­வு­சார் மையங்­கள், நூல­கங்­கள் அமைத்­தல், பள்­ளி­கள் பரா­ம­ரித்­தல், நீர்­நி­லை­க­ளைத் தூர்­வாரி கரை­களை பலப்­ப­டுத்­து­தல், biominingமூலம் தேக்க திடக்­க­ழி­வு­களை அகற்­று­தல், திடக்­க­ழிவு மற்­றும் திர­வக் கழிவு மேலாண்மை, குப்­பை­யி­லி­ருந்து எரி­வாயு தயா­ரித்­தல், தூய்­மைப் பணி­யா­ளர்­களை தொழில்­மு­னை­வோர்­க­ளாக மாற்றி அவர்­க­ளுக்கு அனைத்­துப் பாது­காப்­பும் வழங்­கு­தல், புதிய நவீன எரி­வாயு தகன மேடை அமைத்­தல் போன்ற இந்­தப் பணி­க­ளைத்­தான், கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் 1 ¼ இலட்­சம் கோடி செல­வில் செய்­தி­ருக்­கி­றோம். எங்­க­ளு­டைய ஐந்­தாண்­டு­க­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம் என்­ப­தைச் சொல்­கி­றோம். 10 மாந­க­ராட்­சி­கள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டன, ஏற்­கெ­னவே இருந்த 31 நக­ராட்­சி­கள் தரம் உயர்த்­தப்­பட்­டன. 7 பேரூ­ராட்­சி­கள் நக­ராட்­சி­க­ளா­க­வும், 22 ஊராட்­சி­கள் மற்­றும் 6 பேரூ­ராட்­சி­கள் சேர்ந்து 6 நக­ராட்­சி­க­ளா­க­வும் தரம் உயர்த்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">புதி­தாக 107 பேருந்து 
நிலை­யப் பணி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">29 ஊராட்­சி­கள், 25 பேரூ­ராட்­சி­கள் தர­மு­யர்த்­தப்­பட்­டன. ஆக, சென்­னை­யை­யும் சேர்த்து 25 மாந­க­ராட்­சி­கள், 137 நக­ராட்­சி­கள், 487 பேரூ­ராட்­சி­கள் இருந்­தன. 19,054 கி.மீ. சாலைப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 380 குடி­நீர்ப் பணி­கள் முடிக்­கப்­பட்டு, மேலும், 1,220 பணி­கள் நடை­பெற்று வந்­தன. 2,713 கி.மீ. நீளத்­திற்கு மழை­நீர் வடி­கால் பணி­கள் முடிக்­கப்­பட்­டன. இதில், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் மட்­டும் 1,431 கி.மீ. ஆகும். 870 கி.மீ. நீளத்­திற்கு ஜெர்­மன் வங்கி நிதி­யு­த­வி­யு­டன் செயல்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டன. 42 பாதாள சாக்­க­டைப் பணி­கள் முடிக்­கப்­பட்டு, 51 பணி­கள் நடை­பெற்று வந்­தன. திடக்­க­ழி­வி­லி­ருந்து 1,020 உரம் தயா­ரிக்­கும் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 5 மாந­க­ராட்­சி­க­ளில், குப்­பை­க­ளி­லி­ருந்து எரி­வாயு தயா­ரிக்­கும் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. 7 இலட்­சத்து 10 ஆயி­ரம் தெரு விளக்­கு­கள் எல்.இ.டி. விளக்­கு­க­ளாக மாற்­றப்­பட்­டன. புதி­தாக 69,500 எல்.இ.டி. விளக்­கு­க­ளும், 45,700 பழைய தெரு விளக்­கு­கள் புதிய எல்.இ.டி. விளக்­கு­க­ளாக மாற்­ற­வும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன. 107 பேருந்து நிலை­யங்­கள் புதி­தாக அபி­வி­ருத்­திப் பணி­கள்­மூ­லம் அமைக்­கப்­பட்­டன. 110 பேருந்து நிலை­யப் பணி­கள் நடை­பெற்று வந்­தன. புதி­தாக 153 சந்­தை­கள் கட்டி முடிக்­கப்­பட்­டன. 77 சந்­தைப் பணி­கள் நடை­பெற்று வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">92 அறி­வு­சார் மையங்­க­ளும், 44 நூல­கங்­க­ளும் கட்டி முடிக்­கப்­பட்­டன. 1,145 நீர்­நி­லை­கள் தூர்­வா­ரப்­பட்டு, கரை­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டன. 920 பூங்­காக்­கள் புதி­தா­க­வும், மேம்­பா­டும் செய்­யப்­பட்­டன. 230 நவீன எரி­வாயு தகன மேடை­கள் அமைக்­கப்­பட்­டன. Biomining மூலம் திடக்­க­ழி­வு­களை அகற்றி, 1,290 ஏக்­கர் நிலங்­கள் மீட்­டெ­டுக்­கப்­பட்­டன. நகர்ப்­புற ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள், சமு­தா­யக் கூடங்­கள் அமைக்­கப்­பட்­டன. பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் சிங்­கா­ரச் சென்னை திட்­டத்­தின்­கீழ் 1,048 பணி­கள் முடிக்­கப்­பட்­டன. இணை­ய­வ­ழி­மூ­லம் சுய அறி­விப்பு கட்­டட திட்ட அனு­மதி வழங்­கும் திட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">Victoria Public Hall புத்­து­யி­ரூட்­டப்­பட்டு, பொது மக்­க­ளின் பயன்­பாட்­டிற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சிக்கு புதி­தாக மன்ற கூட்ட அரங்கு கட்­ட­டம் கட்­டும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பெரு­ந­க­ரப் பகு­தி­க­ளில் அதி­க­ரித்­து­வ­ரும் போக்­கு­வ­ரத்­துத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும்­வ­கை­யில், திற­மை­யான போக்­கு­வ­ரத்து அமைப்­பாக ITMS உரு­வாக்­கப்­பட்­டது. விரு­கம்­பாக்­கம், ஓட்­டேரி நல்லா மற்­றும் வீராங்­கால் ஓடை கால்­வாய்­களை, நீர்­வ­ளத் துறை­யி­ட­மி­ருந்து பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சிக்கு பெறப்­பட்டு, கரை­க­ளின் தடுப்­புச் சுவரை உயர்த்­த­வும், குப்­பை­கள் தேங்­கா­மல் இருக்க பாது­காப்பு வேலி­கள் அமைக்­க­வும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நிலத்­தடி நீர்மட்டத்தை உயர்த்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மழை­நீர் சேக­ரிப்பு கட்­ட­மைப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சிப் பகு­தி­க­ளில் நிலத்­தடி நீர்­மட்­டத்தை உயர்த்த பூங்­காக்­கள் மற்­றும் பொது இடங்­க­ளில் மழை­நீர் சேக­ரிப்­புக் கட்­ட­மைப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டன. அனைத்­துப் பாலங்­க­ளி­லும் அழ­கு­ப­டுத்­தும் பணி­கள் தொடங்­கப்­பட்டு, நடை­பெற்று 
வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தனி­யார் பள்­ளி­க­ளு­டன் போட்­டி­யி­டும் வ­கை­யில், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் சில பள்­ளி­கள் ஸ்மார்ட் வகுப்­ப­றை­க­ளு­டன் மேம்­ப­டுத்­தப்­பட்­டன. இத­னால், பெரும்­பா­லான மாண­வர்­கள் பலன்­பெற்று வந்­த­னர். போட்­டித் தேர்­வு­க­ளுக்கு தயா­ரா­கும் மாண­வர்­க­ளுக்கு முதல்­வர் படிப்­ப­கங்­கள் அமைக்­கப்­பட்­டன. நீலக்­கொடி கடற்­கரை திட்­டத்­தின்­மூ­லம் மெரினா கடற்­கரை தர­மு­யர்த்­தப்­பட்­டது. அம்மா உண­வ­கங்­கள் அனைத்­தும் முழு­மை­யா­கப் பரா­ம­ரிக்­கப்­பட்டு, செயல்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன. தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்­கான முத­ல­மைச்­ச­ரின் உண­வுத் திட்­டம் என்ற திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. பள்ளி மாண­வர்­க­ளுக்­கான முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. மெரினா கடற்­கரை நீச்­சல் குளம் பாது­காக்­கப்­பட்டு, பொது மக்­கள் பயன்­பாட்­டிற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கான கடற்­கரை அணு­கு­பாதை அமைக்­கப்­பட்­டது. சென்­னைப் பெரு­ந­கரை அழ­கு­ப­டுத்தி, குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ரும் பாது­காப்­பாக நடை­பா­தை­க­ளைப் பயன்­ப­டுத்த வாக­னம்­சாரா போக்­கு­வ­ரத்­துத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. விலங்­கு­கள் இனப்­பெ­ருக்­கக் கட்­டுப்­பாடு மையங்­கள், நகர்ப்­புற சென்­னை­யில் புதி­தாக 3 இடங்­க­ளில் அமைக்­கப்­பட்­டன. சென்­னை­யில் புதி­தாக 13 பாலங்­கள் கட்டி முடிக்­கப்­பட்­டன. 12 பாலங்­கள் கட்­டும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சிப் பகு­தி­யில். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சிப் பகு­தி­யில் தனி­யார் பங்­க­ளிப்­பு­டன் புதி­தாக கழிப்­ப­றை­கள் கட்­டப்­பட்­டன. மேலும், புதி­தாக மண்­டல அலு­வ­ல­கங்­கள், பாதாள சாக்­க­டைத் திட்­டப் பணி­கள், அலு­வ­ல­கக் கட்­ட­டங்­கள் போன்ற எண்­ணற்ற பணி­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டன. தமிழ்­நாட்­டில் நகர்ப்­புற உள்­ளாட்­சிக்­கென்று தனித்­த­னி­யாக இருந்த சுமார் 25 சட்­டங்­கள், அவற்­றின்­கீழ் இயற்­றப்­பட்ட விதி­கள் ஆகி­ய­வற்றை ஒருங்­கி­ணைத்து, 1998-ல் புதி­தாக நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­கள் சட்­டம் இயற்­றப்­பட்­டது. நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் நிர்­வா­கத்தை ஒரு குடை­யின்­கீழ் கொண்டு வரு­வ­தற்­காக உயர்­நோக்­கு­டன் கொண்டு வரப்­பட்ட அச்­சட்­டம், புதிய திட்­டங்­க­ளு­டன், புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட விதி­க­ளு­டன், தமிழ்­நாடு நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்பு விதி­கள், 2023, 13-.4-.2023 முதல் நடை­மு­றைக்­குக் கொண்டு வரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">81 கூட்­டுக் குடி­நீர்த் திட்­டங்­கள், 52 retrofitting திட்­டங்­கள் முடிக்­கப்­பட்­டன. மேலும், 15 கூட்­டுக் குடி­நீர்த் திட்­டங்­கள் நடை­பெற்­றும் வந்­தன. இத­னால், கூடு­த­லாக 2.39 இலட்­சம் மக்­க­ளுக்கு, 1,175 எம்.எல்.டி. பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் வழங்­கப்­பட்­டன. ஒகே­னக்­கல் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம்-2 தொடங்­கு­வ­தற்­காக அனைத்து பணி­க­ளும் முடிக்­கப்­பட்டு வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை குடி­நீர் வடி­கால் 
வாரி­யப்­ ­பணி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை குடி­நீர் வடி­கால் வாரி­யம். இப்­படி தொடர்ந்து வடி­கால் வாரி­யம் மூல­மா­க­வும், சென்னை பெரு­ந­கர குடி­நீர் வழங்­கல் மூல­மா­க­வும் பல்­வேறு பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று ஏற்­கெ­னவே சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. இப்­போ­து­கூட உள்­ளாட்சி முடிய இருக்­கி­றது. இன்­னும் 4, 5 மாதங்­க­ளில் ஜன­வரி வந்­தால் நக­ராட்­சி­யி­னு­டைய பத­விக் காலம் முடிய இருக்­கி­றது. புதிய தேர்­தல் அறி­விப்­பு­கள் வர இருக்­கின்­றன. நாங்­கள் இருக்­கும்­போதே உச்ச நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வின் கார­ண­மா­கத்­தான் communal rotation-ஐ சரி­செய்து, மீண்­டும் இருக்­கிற வார்­டு­களை அதி­கப்­ப­டுத்தி, மக்­கள்­தொ­கையை ஒரே சீராக வைத்து தேர்­தலை நடத்த வேண்­டும் என்று எங்­க­ளு­டைய  முத­ல­மைச்­சர் அவர்­கள் பணி­களை முடித்­தி­ருந்­தா­லும், உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பின் கார­ண­மாக உட­ன­டி­யா­கத் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. இப்­போது சென்­னை­யிலே 200 வார்­டு­கள் இருக்­கின்­றன என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஒரு வார்­டிலே 15 ஆயி­ரம் வாக்­கு­கள் இருக்­கின்­றன. ஒரு வார்­டிலே 40 ஆயி­ரம் வாக்­கு­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போன்று, 50 சத­வி­கித இட ஒதுக்­கீடு என்று வரு­கி­ற­போது, 10 வார்­டு­கள் ஒரு இடத்­தில் இருக்­கு­மா­னால், 9 வார்­டு­கள் பெண்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்டு, ஒரே ஒரு வார்­டு­தான் ஆண்­க­ளுக்­காக ஒதுக்­கப்­ப­டும் சூழல் வரு­கி­றது. இதை­யெல்­லாம் சீர­மைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தோ­டு­தான் சென்­னையை 300 வட்­டங்­க­ளா­க­வும், மதுரை, திருச்சி, கோவை போன்ற வார்­டு­களை அதி­கப்­ப­டுத்தி, அதற்­கான அடிப்­படை வச­தி­க­ளை­யும் செய்­வ­தற்­காக ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன. நாங்­கள் முந்­தைய அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இருந்­த­போது, ஒன்­றிய அர­சி­லி­ருந்து மொத்­த­மாக ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி அதற்­கா­கத் தந்­தார்­கள். எப்­ப­டி­யென்­றால், கிரா­மங்­களை நக­ரத்­தோடு இணைத்து, நக­ரத்­தில் இருக்­கிற அனைத்து வச­தி­க­ளை­யும் கிரா­மங்­க­ளுக்­குக் கொண்டு செல்ல  வேண்­டும் என்­ப­தற்­காக ஆயி­ரம் கோடி ரூபாய் தரப்­பட்­டது. 12 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட ஊராட்­சி­கள் இருக்­கின்­றன. 380 ஒன்­றி­யங்­கள் இருக்­கின்­றன. கிட்­டத்­தட்ட38 மாவட்ட ஊராட்­சி­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊராட்­சி­க­ளைப் பொறுத்­த­வரை 1,500 வாக்­கு­கள் இருந்த ஊராட்­சி­கள் எல்­லாம் இன்­றைக்கு 5 ஆயி­ரம் வாக்­கு­கள்,  6 ஆயி­ரம் வாக்­கு­கள் என்று வந்­து­விட்­டது. சில இடங்­க­ளில் 40 ஆயி­ரம் வாக்­கு­கள் கொண்ட ஊராட்­சி­கள் எல்­லாம் இருக்­கின்­றன. இதை­யெல்­லாம் பகிர்ந்து, பிரித்து, இரண்டு தேர்­தல்­க­ளுக்­கும் ஏது­வாக, ஒவ்­வொரு இடத்­தி­லும் ஊராட்­சி­க­ளை­யும் பிரிக்க வேண்­டும்; ஒன்­றி­யத்­தை­யும் அதி­கப்­ப­டுத்த வேண்­டும் என்ற நிலை இருக்­கின்ற கார­ணத்­தால் இந்­தப் பணி­க­ளைச் செய்து முடித்­தால் ஊராட்­சி­க­ளின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 20 ஆயி­ர­மா­க­வும், ஒன்­றி­யங்­க­ளின் எண்­ணிக்கை 500 முதல் 600 வரை­யி­லும் உய­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பணி­களை சீர­மைக்க குழு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது, அனைத்து பொது­மக்­க­ளும் நக­ராட்­சித் தலை­வர்­க­ளாக, ஒன்­றி­யத் தலை­வர்­க­ளாக, ஊராட்­சித் தலை­வர்­க­ளாக பொறுப்­பேற்று மக்­கள் பயன்­பாட்­டிற்கு ஏது­வாக பணி­யாற்ற வழி­வ­குக்­கும். எனவே, இந்­தப்  பணி­க­ளைச் சீர­மைப்­ப­தற்­காக அன்­றைய ஊரக வளர்ச்சி மற்­றும் ஊராட்­சித் துறைச் செய­லா­ளர் மதிப்­பிற்­கு­ரிய  ககன்­தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்­க­ளின் தலை­மை­யின்­கீழ் ஒரு குழு அமைக்­கப்­பட்­டது. அவ­ரது தலை­மை­யின்­கீழ், நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறைச் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றிய  தா. கார்த்­தி­கே­யன், இ.ஆ.ப., உள்­ளிட்ட உயர் அதி­கா­ரி­கள் அடங்­கிய குழு அமைக்­கப்­பட்டு, பல­முறை பேச்­சு­வார்த்­தை­கள் நடத்­தப்­பட்­டன. இருப்­பி­னும், சில கார­ணங்­க­ளால் இப்­ப­ணி­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே, மீண்­டும் அந்­தக் கமிட்­டிக்கு நீங்­கள் புத்­து­யிர் தந்து, உள்­ளாட்­சி­க­ளிலே அனைத்து பிர­தி­நி­தி­க­ளும் கலந்து கொண்டு, தேர்ந்­தெ­டுக்­கக்­கூ­டிய அள­விற்கு இந்­தச் சட்­டத்தை உரு­வாக்கி, அதனை அனைத்து இடங்­க­ளி­லும்  விரி­வாக்­கம் செய்ய வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். இந்­தத் துறை என்­பது மக்­க­ளுக்­காக நிச்­ச­ய­மாக, எங்­கள் ஐந்­தாண்டு காலத்­தில் மிக மன நிறை­வோடு பணி­யாற்­றி­யி­ருக்­கி­றோம். தள­பதி அவர்­கள் பார்த்த துறை. அதை எங்­க­ளி­டம் தந்­த­போது, அவர் சொன்­ன­ப­டியே, நாங்­கள் செய்­தி­ருக்­கி­றோம் என்ற மன­நி­றை­வோடு இருக்­கி­றது. இவ்­வ­ளவு பணி­கள் நடந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கூடு­தல் நிதி ஒதுக்க வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2011 ஆம் ஆண்டு கணக்­கீட்­டின்­படி 41 சத­வி­கி­தம்­தான் நக­ரத்­தில் இருக்­கின்ற பொது­மக்­கள். இப்­போது மக்­கள்­தொகை கணக்­கீட்­டின்­படி 60 சத­வி­கி­தத்­திற்கு நக­ரத்­திற்கு வந்­து­விட்­டது. இந்­தி­யா­வி­லேயே நூற்­றுக்­கும் மேற்­பட்ட பெரிய நக­ரங்­கள் இருப்­பது நம்­மு­டைய தமிழ்­நாட்­டில்­தான். நக­ரங்­கள் இருக்­கி­ற­போது 60 சத­வி­கி­தம் மக்­க­ளுக்­குத் தேவை­யான திட்­டங்­களை உண்­டாக்க வேண்­டும். Floating population-தினந்­தோ­றும் 10 சத­வி­கி­தம் மக்­கள் நக­ரத்­திற்கு வந்து செல்­கி­றார்­கள். மொத்­தம் 70 சத­வி­கி­தம் மக்­கள் நக­ரத்­தில் வரு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு குடிக்க தண்­ணீர் தர வேண்­டும்; நடக்க சாலை தர வேண்­டும்; போக்­கு­வ­ரத்து வசதி செய்து தர வேண்­டும்; அவர்­க­ளுக்கு பொழு­து­போக்­காக அமர்­வ­தற்கு இடம் தர வேண்­டும்; இவ்­வ­ள­வும் செய்­கின்ற ஒரு துறை­யாக இந்­தத் துறை இருக்க வேண்­டும். அதற்­கான நிதியை இன்­னும் அதி­க­மாக,இப்­போது 29 ஆயி­ரம் கோடி ரூபாய் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். எனவே, இன்­னும் அதி­க­மாக தேவைப்­ப­டு­கிற ஒரு துறை­யாக இந்­தத் துறை இருக்­கி­றது. எனவே, இந்­தத் துறை­யில் தொடர்ந்து மக்­கள் பயன்­பட வேண்­டும் என்று சொன்­னால், இன்­றைக்கு 60 சத­வி­கி­தம் மக்­கள் நக­ரத்­தில்­தான் இருக்­கி­றார்­கள். ஒரு ஆட்­சிக்கு அல்­லது-- வெளி­யூர்­க­ளி­லி­ருந்து வரு­கி­றார்­கள் என்று சொன்­னால், முத­லிலே தென்­ப­டு­வது நக­ரங்­கள்­தான். அந்த நக­ரத்­தில் இருக்­கிற வச­தி­தான். அதை வைத்­துத்­தான் நாட்­டையே அவர்­கள் பார்ப்­பார்­கள். என­வே­தான், அப்­ப­டிப்­பட்ட நல்ல நக­ராட்­சித் தலை­வ­ராக, நம்­மு­டைய மேயர் தள­பதி தலை­வர் அவர்­கள், உள்­ளாட்­சித் துறை அமைச்­சர், துணை முத­ல­மைச்­சர், முத­ல­மைச்­ச­ராக இருந்து வழி­ந­டத்­திய துறை­யிலே நாங்­கள் பணி­யாற்ற எங்­களை அனு­ம­தித்­தது எனக்கு பெரிய நன்றி. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அவரை இந்த நேரத்­திலே நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். இந்த வாய்ப்­புக்கு நன்றி தெரி­வித்து அமை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் கே.என். நேரு பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>