<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,958,925" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 28 2026 03:42:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260828T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="28082026-CHN-04" position.sequence="04" ex-ref="28082026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப் பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் – நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் பேச்சு!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021-ல் தமிழ்­நாட்­டில் நாங்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­கின்­ற­போது சிப்­காட் கிட்­டத்­தட்ட 32,525 ஏக்­க­ரில் 24 சிப்­காட் நிறு­வ­னங்­க­ளோடு நாங்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­றோம். நாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் 12 புதிய மாவட்­டங்­க­ளில் தொழில் பூங்­காக்­கள் உரு­வாக்­கப்­பட்டு, இன்­றைக்கு கிட்­டத்­தட்ட 54 தொழிற்­பூங்­காக்­கள், சிப்­காட் 50,059 ஏக்­க­ரில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது­வும் எங்­க­ளு­டைய ஐந்­தாண்­டு­கால சாதனை, வேறு எங்­குமே நிகழ்த்­த­வில்லை என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் ஆட்­சி­யில்­தான் 2021 ஜூலை 20 ஆம் தேதி முத­லில் Single window portal 2.0 என்ற திட்­டம் துவங்­கப்­பட்­டது. கிட்­டத்­தட்ட 24 துறை­கள் சார்ந்த 100 சேவை­கள் ஒரு தொழில் துவங்க ஒரு நிறு­வ­னம் வரு­கி­றது என்று சொன்­னால், அவர்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்து உத­வி­க­ளை­யும், அனைத்து சேவை­க­ளை­யும், அனைத்து அனு­ம­தி­க­ளை­யும் ஒரே இடத்­தில் பெறக்­கூ­டிய வகை­யில்--­­இன்­றைக்கு நீங்­கள்­கூட 3.0 என்று ஒன்றை துவங்­கப்­போ­வ­தாக சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். அதை digital-ஆக நீங்­கள் போடப்­போ­வ­தாக சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். அதில் ஒன்­றும் மாற்­றுக் கருத்து இல்லை. இருந்­தா­லும் அதை முதன்­மு­த­லில் நாங்­கள் துவங்­கி­ய­தன் கார­ண­மா­கத்­தான் இவ்­வ­ளவு முத­லீ­டு­களை ஈர்க்க முடிந்­தது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஒரே இடத்­தில் அனு­ம­தியை கேட்­ட­வு­ட­னேயே கொடுத்த கார­ணத்­தால்­தான் விரை­வாக அந்த MoU-க்கள் எல்­லாம் இன்­றைக்கு முத­லீ­டு­க­ளாக தமிழ்­நாட்­டில் மாற்­றப்­பட்­டது என்­பதை நான் இங்கே பதி­ய­வைக்க கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அர­சின் புள்ளி விவர துறை­யின்­படி இந்­தி­யா­வில் மற்ற மாநி­லங்­க­ளைக் காட்­டி­லும் தமிழ் நாட்­டில்­தான் வேலைக்­குச் செல்­லும் பெண்­க­ளு­டைய சத­வி­கி­தம் மிக­வும் அதி­கம். தொழில் துறை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் இந்­தி­யா­வி­லேயே manufacturing sector-ல் வேலை பார்க்­கின்ற பெண் தொழி­லா­ளர்­கள் 43 சத­வி­கி­தத்­தி­னர் தமிழ்­நாட்­டில் மட்­டுமே பணி­பு­ரி­கின்­றார்­கள் என்ற சாத­னையை தமிழ்­நாடு அரசு படைத்­துள்­ளது என்­ப­தை­யும் நான் இங்கே சுட்­டிக்­காட்ட கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழி­லா­ளர் நலன், கட்­டு­மான அனு­மதி, வணிக நுழைவு மற்­றும் நில நிர்­வா­கம் ஆகிய பிரி­வு­க­ளில் சிறப்­பான சீர்த்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்­ட­தற்­காக தமிழ்­நாட்­டிற்கு Top achiever என்ற விருது 2025 ஆம் ஆண்டு வழங்­கப்­பட்­டது. அது­போல, கட­லோர மாநி­லங்­கள் பிரி­வில் தொடர்ச்­சி­யாக மூன்­றா­வது ஆண்­டாக தமிழ்­நாடு Achiever அந்­தஸ்தை பெற்­றது. சென்னை மற்­றும் கோயம்­புத்­தூ­ரில் இந்­தி­யா­வின் முதல் Multi-modal logistics parks அமைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளுக்­காக இந்த அங்­கீ­கா­ரம் தமிழ்­நாடு அர­சிற்கு வழங்­கப்­பட்­டது என்­ப­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். இவை­யெல்­லாம் உங்­க­ளு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­பி­லேயே இருக்­கின்­றன. உலக முத­லீட்டு மன்­றக் கூட்­டத்­தில் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி மாற்­றத்தை வெற்­றி­க­ர­மாக ஊக்­கு­வித்து, பசுமை ஹைட்­ர­ஜனை மின்­சார வாக­னத் துறை­யில் பில்­லி­யன் கணக்­கான முத­லீ­டு­களை ஈர்த்­த­தற்­காக ஐநா சபை ‘சிறந்த முத­லீட்டு ஊக்­கு­விப்பு விருதை’ தமிழ்­நாட்­டிற்கு வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­தின் பொரு­ளா­தார அமைச்­ச­கத்­தால் Asia Oceania பிராந்­தி­யத்­தி­லேயே சிறந்த முத­லீட்டு ஊக்­கு­விப்பு முகமை விருது அன்­றைக்­குத் தமிழ்­நாட்­டிற்கு வழங்­கப்­பட்­டது. இப்­படி எண்­ணற்ற விரு­து­க­ளைப் பெற்று, எங்­கள் ஆட்­சி­யில் தொழில் துறை இந்­தி­யா­வி­லேயே முதல் மாநி­லம் என்ற அந்­தஸ்­தைப் பெற்­றது என்­பதை இங்கே நான் தெரி­வித்­துக்­கொள்­ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, எல்­லாமே உங்­க­ளு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­பி­ லேயே நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கின்­றீர்­கள். இவை­யெல்­லாம் கடந்த ஆட்­சிக் காலத்­தில் இந்த இந்­தத் திட்­டங்­கள் எல்­லாம் வகுக்­கப்­பட்­டன. இந்த இந்த விரு­து­கள் எல்­லாம் வழங்­கப்­பட்­டன. இவ்­வ­ளவு  SIPCOT தொடங்­கப்­பட்­டன. இவ்­வ­ளவு முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டன. இவ்­வ­ளவு பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் கொடுக்­கப்­பட்­டன என்­ப­தை­யெல்­லாம் சொல்லி யிருக்­கின்­றீர்­கள்.  அதை நோக்­கிய உங்­க­ளு­டைய பய­ண­மும், கூடு­த­லாக எதை எதைச் செய்­ய­வேண்டு மென்று குறிப்­பிட்­டுச் சொல்­லா­விட்­டா­லும்­கூட, இதை நோக்­கிய பய­ணம் இருக்­கும் என்று சொன்­னீர்­கள். ஏற்­கெ­னவே, இந்த ஆட்­சிப் பொறுப்­பேற்று கடந்த 13-8-2026 இல் ஒரு ** முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு ஒன்றை கூட்­டி­னீர்­கள். Press-ஐயெல்­லாம் உள்ளே விட­வில்லை. அந்த மாநாட்­டில் 97 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்டு அதில் ரூ.67,452 கோடி முத­லீடு வந்­த­தாக சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, 4-.6.-2026 மற்­றும் 9-.7-.2026 இல் L&amp;T Group மற்­றும் Vikram Solar நிறு­ வ­னங்­கள்­மூ­லம் சுமார் ரூ.33,000 கோடி முத­லீடு வந்­த­தா­க­வும், நீங்­கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றீர்­கள். நான் இங்கே கேட்­ப­தெல்­லாம் 97 நிறு­வ­னங்­
க­ளு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போட்­டி­ருக்­கி­றோம் என்று சொல்­கி­றீர்­கள். அதில் எத்­தனை நிறு­வ­னங்­கள் புதி­தா­கப் போடப்­பட்­டன? எங்­க­ளு­டைய கணக்­கு­படி இதிலே கிட்­டத்­தட்ட 75, 85 சத­வி­கி­தத்­திற்­கு­மேல் உள்ள நிறு­வ­னங்­கள் ஏற்­கெ­னவே எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­திலே தமிழ்­நாட்­டில் தொழில்­க­ளைத் தொடங்கி அல்­லது எங்­கள் ஆட்­சிக்கு முன்பே தொழி­லைத் தொடங்கி இங்கே முத­லீடு செய்து, தொழில் செய்­ப­வர்­க­ளி­னு­டைய ஒரு expansion ஆக நீங்­கள் எடுத்­துள்­ளீர்­கள். அதை நான் இல்லை என்று சொல்­ல­வில்லை. ஆனால், புதிய தொழிலை, இங்கே கொண்­டு­வந்­த­தா­கக் கிட்­டத்­தட்ட 10 சத­வி­கி­தம் இருக்­கும் என்று நான் நினைக்­கி­றேன்.  அவர்­கள் அதற்கு விளக்­கம் இருந்­தால் பதி­லு­ரை­யில்­கூ­டச் சொல்­ல­லாம். மீதி எல்­லாம் திரா­விட மாடல் ஆட்­சி­யில் நம்­மு­டைய அர­சாங்­கத்­தால் தமிழ்­நாட்­டிற்கு கொண்டு வந்த முத­லீட்­டா­ளர்­க­ளு­டைய நிறு­வ­னங்­க­ளு­டைய expansion ஆகத்­தான் நான் இந்த ரூ.1 இலட்­சம் கோடி முத­லீட்­டைப் பார்க்­கி­றேன். இதில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­க­ளு­டைய தலை­வ­ரும் தொழில் துறை அமைச்­ச­ரும்
பேசி. . . (குறுக்­கீ­டுகள்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் 2021 ஆம் ஆண்­டில் ஆட்­சிப் பொறுப்பை ஏற்­கும்­போது, கொரோனா உச்­சத்­தில் இருந்த நேரம். அந்த நேரத்­தில் ஆட்­சிப் பொறுப்பை ஏற்ற போது­கூட, கிட்­டத்­தட்ட மூன்று மாத காலத்­திலே ரூ.44,36,000 கோடி திட்ட முத­லீட்டை நாங்­கள் கொண்­டு­வந்­தோம். இன்­னும் அதில் ஒப்­பிட்­டுச் சொல்ல வேண்­டு­மென்று சொன்­னால், நீங்­கள் முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை கடந்த 13 ஆம் தேதி போட்­டீர்­கள். ஜூலை மாதம் 31 இல் முதல் காலாண்­டுக்­கான தொழில் முத­லீட்டு, 4 States, நான்கு மாநி­லத்­திலே ஒரு ஒப்­பீடு வெளி­வந்­தது. அதை­யெல்­லாம் நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள். அது ஏற்­கெ­னவே இருந்த காலாண்டு. அதா­வது, சென்ற 2021 இல் இருந்த காலாண்­டிற்­கும், தற்­போது 2026 இல் இருக்­கின்ற முதல் காலாண்­டிற்­கும் இருக்­கக்­கூ­டிய வித்­தி­யா­சம். ஒப்­பீடு. அதில் என்ன கொடுத்­தி­ருக்­கி­றார்­கள் என்­றால், கர்­நா­டக மாநி­லத்­தில் முந்­தைய காலாண்­டை­விட வளர்ச்சி விகி­தம் 232.53 சத­வி­கி­தம் ஜூலை 31, மூன்று மாத காலாண்­டிற்­குள் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. கேரள மாநி­லத்­தில் வளர்ச்சி விகி­தம் 294.94 சத­வி­கி­தம் முந்­தைய காலாண்­டை­விட தொழில் முத­லீட்டு வளர்ச்சி அதி­க­ரித்­தி­ ருக்­கி­றது. இவை­யெல்­லாம் நம் State-ல் தேர்­தல் நடக்­கும்­போது தேர்­தல் நடந்த மாநி­லங்­கள். மேற்கு வங்­கத்­தில் முந்­தைய காலாண்­டை­விட வளர்ச்சி விகி­தம் 199.58 சத­வி­கி­தம் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. ஆனால், நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் நம்­மு­டைய அமைச்­சர் அவர்­கள் கேட்­ட­தைப் போல அந்த மூன்று மாத காலத்­திலே ஜூலை 31 வரை நீங்­கள் பார்த்­தீர்­க­ளென்று சொன்­னால், தமிழ்­நாட்­டில் முந்­தைய காலாண்­டை­விட 74.48 சத­வி­கி­தம் சரிந்­துள்­ளது. சுமார் 200, 300 சத­வி­கி­தம் மற்ற மூன்று மாநி­லங்­க­ளில் உயர்ந்­தி­ருக்­கி­றது. தமிழ்­நாட்­டில் சரிந்­தி­ருக்­கி­றது. அதை யாரும் மறுக்க முடி­யாது. உங்­க­ளு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­பில் எங்­க­ளு­டைய. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(குறுக்­கீ­டு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்த பத்­தி­ரிகை என்­ப­தையோ அல்­லது பத்­தி­ரிகை செய்­தி­யையோ நான் குறிப்­பி­ட­வில்லை. சாதா­ர­ண­மாக உறுப்­பி­னர் அண்­ணன் அவர்­கள் தெரி­வித்­த­து­போன்று, எங்­க­ளுக்கு ஏதே­னும் தக­வல் கிடைத்­தால் அவற்றை அமைச்­சர்­க­ளி­டம்­தான் கேட்­ட­றிய முடி­யும். அவர்­க­ளி­டம்­தான் அர­சாங்­கம் இருக்­கி­றது; அமைச்­சர் அவர்­க­ளின் பதி­லுரை சாயங்­கா­லம் இருக்­கி­றது. எனவே, நான் தெரி­வித்த இந்த ஒப்­பீடு குறித்து அவர்­கள் ஆய்வு செய்து, பதி­லு­ரை­யின்­போது நீங்­கள் சொன்­னது தவறு என்று சொல்­வ­தற்கு அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கி­றது. நான் ஒன்­றும் குற்­றச்­சாட்டே சொல்­ல­வில்லை. குற்­றச்­சாட்­டாக ஏதும் சொல்­ல­வில்லை. (குறுக்­கீ­டு­)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழில் துறை அமைச்­சர் அவர்­கள், நாங்­கள் ஆட்­சிக்கு வந்து 3 மாதங்­கள் மட்­டும்­தான் ஆகின்­றன; அதற்­குள்­ளா­கவே இவ்­வ­ளவு குற்­றச்­சாட்டு சொல்­கி­றார்­கள் என்று சொன்­னார்­கள். குற்­றச்­சாட்­டாக சொல்­ல­வில்லை. நீங்­கள் ஆட்­சிக்கு வந்து 3 மாதங்­கள் மட்­டும்­தான் ஆகின்­றன; அது உங்­கள் கொள்கை விளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தைப் பார்த்­தாலே தெரி­கி­றது. அதில் எது­வுமே இல்லை. Long Term திட்­டங்­கள் ஏதும் இல்லை. ஆனால் நீங்­கள் அதில் அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள்; 2036 ஆம் ஆண்­டில் நாங்­கள் 1.5 trillion US Dollar பொரு­ளா­தார மாநி­ல­மாக மாற்­று­வோம் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் மாற்­றி­னால், நாங்­கள் வர­வேற்­போம். ஆனால், எங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில், எங்­கள் தலை­வர் அவர்­கள் 2021 ஆம் ஆண்­டில் ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­த­பொ­ழுது, 2030 ஆம் ஆண்­டில் 1 trillion US Dollar பொரு­ளா­தா­ர­மாக இலக்கை நாங்­கள் உயர்த்­து­வோம் என்ற உத்­த­ர­வா­தத்­தைக் கொடுத்­தார்­கள். அதை நோக்­கித்­தான் எங்­கள் ஆட்­சி­யின் பய­ணம் சென்­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) தொழில் துறை­யில் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாட்டை முதன்மை மாநி­ல­மாக மாற்ற முடிந்­தது. தற்­போது நாங்­கள் ஆட்­சி­யைத் தொடர்ந்­தி­ருந்­தால், 2030 ஆம் ஆண்­டில் அந்த சாத­னையை நாங்­கள் ஈட்­டி­யி­ருப்­போம்; 1 trillion US Dollar பொரு­ளா­தார இலக்­கைக் கொண்­டு­வந்­தி­ருப்­போம். (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நாங்­கள் ஆலோ­ச­னை­கள் சொல்­ல­லாம்; அறி­வு­ரை­களை சொல்­ல­லாம்; கருத்­து­க­ளைச் சொல்­ல­லாம். ஆனால், அவர்­களை வாழ்த்த முடி­யாது. என்ன இருக்­கி­றதோ அதை­தான் நாங்­கள் சொல்ல முடி­யும். அது­தான் எதிர்க்­கட்­சி­யின் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், நீங்­கள் 1.5 trillion US Dollar செய்­வோம் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். தற்­போது எங்­கள் ஆட்சி அமைந்து, எங்­கள் தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்து, ஏற்­கெ­னவே தொழில் துறை அமைச்­ச­ராக  டி.ஆர்.பி. ராஜா அவர்­கள் தற்­போது தொழில் துறை அமைச்­ச­ராக இருந்­தி­ருந்­தால், 2036 ஆம் ஆண்­டில் 2 trillion US Dollar பொரு­ளா­தார வளர்ச்­சி­யைக் கொண்டு வந்­தி­ருப்­போம் என்ற உத்­த­ர­வா­தத்தை நான் தரு­கின்­றேன். நீங்­கள் நன்­றாக உழை­யுங்­கள்; நாங்­கள் யாரும் உங்­க­ளுக்கு எதி­ராக இல்லை; நன்­றாக உழை­யுங்­கள்; கடு­மை­யாக உழைத்­தால்­தான் தொழில் துறை­யில் முன்­னேற்­றத்­தைக் கொண்­டு­வர முடி­யும்; அப்­படி எங்­கள் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும், தொழில் துறை அமைச்­ச­ரும் முத­லீட்­டா­ளர்­களை சந்­தித்து, கடு­மை­யாக உழைத்த கார­ணத்­தி­னால்­தான், இந்த உய­ரத்தை, உச்­சத்தை எட்­டி­யி­ருக்­கின்­றோம். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது). எனவே அதைப்­போன்று நீங்­க­ளும் உழை­யுங்­கள். முடிந்­தால் ஓர­ள­விற்கு, எங்­க­ளது இலக்­கில் ஒரு பாதி­யை­யா­வது எட்­டு­வ­தற்கு நீங்­கள் முயற்சி செய்­வீர்­க­ளா­னால், அதனை நாங்­கள் வர­வேற்­கக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றோம். (மணி­ய­டிக்­கப் பெற்­றது)  அமைச்­சர் அவர்­கள், முத­லீட்­டா­ளர்­கள் அனை­வ­ரும் அவை நட­வ­டிக்­கை­க­ளைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள், தவ­றாக நினைக்க மாட்­டார்­களா, தவ­றாக சிந்­திக்க மாட்­டார்­களா, இப்­படி எல்­லாம் பேசு­கி­றீர்­களே என்று குறிப்­பிட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்­றை­ய­தி­னம் முத­ல­மைச்­சர் அவர்­கள் விதி 110-ன்கீழ் ஒரு அறி­விப்பை வெளி­யிட்­டார்­கள். பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டத்தை இந்த அரசு, . . .இரத்து செய்­தி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­தார்­கள். இதைப் பார்த்துமுத­லீட்­டா­ளர்­கள் தவ­று­த­லாக நினைப்­பார்­களா, நினைக்க மாட்­டார்­களா? அது­தான். இன்­றைக்கு முத­லீட்­டா­ளர்­களை ஈர்ப்­ப­தி­லேயே பரந்­தூர் விமான நிலை­யம்­தான் மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) நாங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­போது, கிட்­டத்­தட்ட 2000 ஏக்­கர் நிலத்­திற்­கு­மேல் எடுக்­கப்­பட்­டு­விட்­டது. (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, ஏற்­கெ­னவே விதி எண் 55-ன்கீழ் பேர­வைத் தலை­வர் அவர்­க­ளி­டம் கொடுத்­தி­ருக்­கி­றேன். ஏனென்­றால், சுரங்­கத் துறை. சுரங்­கத்­தைத் தோண்­டி­னால், தோண்­டத் தோண்டு வந்­து­கொண்­டே­தான் இருக்­கும். அத­னால், அதற்­குள் போக நான் விரும்­ப­வில்லை. Mines-ஐ பொருத்­த­வரை, என்­னு­டைய மாவட்­டத்­தில் அணுக் கனி­மச் சுரங்­கம், அமைச்­சர் அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளி­டம்­தான் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன். அணுக் கனி­மச் சுரங்­கம் அமைப்­ப­தற்­கான கால அவ­கா­சத்தை இந்த அர­சாங்­கம் ஓராண்­டுக் காலம் நீட்­டித்­துக் கொடுத்­த­த­னால், அந்­தப் பகு­தி­யில் மிகப்­பெ­ரிய ஒரு கொந்­த­ளிப்பு, பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அவர்­க­ளெல்­லாம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளை­யும், தங்­க­ளை­யும் வந்து பார்த்­தார்­கள். ஏற்­கெ­னவே கொடுக்­கப்­பட்ட கால அவ­கா­சம் என்­பது 10-.6-.2026-லேயே முடிந்­து­விட்­டது. நீங்­கள் ஆட்­சிக்கு வந்த புதிது. அத­னால், அதைத் தவ­று­த­லா­கக் கூட நீங்­கள் விட்­டி­ருக்­க­லாம். எப்படி விட்டீர்கள் என்று (குறுக்கீடு) ராண்­டுக் கால அவ­கா­சத்தை நீட்­டித்­துக் கொடுத்­து ­விட்­டீர்­கள். இன்­னும் ஓராண்­டுக் காலம் இருக்­கி­றது. எல்லா அனு­ம­தி­யை­யும் நாங்­கள் நிறுத்தி வைத்­தி­ருந்­தோம். எனவே, அந்­தத் திட்­டம், அந்த அர­சாணை இரத்து செய்­யப்­ப­டுமா அல்­லது சுற்­றுச்­சூ­ழல் அனு­ம­தியை அந்­தக் குறிப்­பிட்ட காலத்­திற்கு, ஓராண்­டுக்கு வழங்­கா­மல் நிறுத்தி வைத்து, தானா­கவே அந்த அனு­மதி காலா­வ­தி­யா­வ­தற்கு நீங்­கள் உத­வி­யாக இருப்­பீர்­களா என்­பதை அமைச்­சர் அவர்­கள் பதி­லு­ரை­யில் சொல்ல வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நம்­மு­டைய EB Minister அவர்­கள் ஒரு கருத்­தைச் சொன்­னார்­கள். இலஞ்­சத்தை எதிர்த்து முத­ல­மைச்­சர் அவர்­கள் சாட்­டை­யைக் சுழற்­றி­யி­ருக்­கி­றார். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு நேரம் பேசு­வ­தற்கு எனக்கு வாய்ப்­ப­ளித்து அதன்­மூ­ல­மாக, பல்­வேறு கருத்­து­களை, பல்­வேறு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மூல­மாக, பல்­வேறு அமைச்­சர்­கள் மூல­மாக, இந்த நாட்டு மக்­கள் அறி­வ­தற்கு வாய்ப்­பினை வழங்­கிய உங்­க­ளுக்கு என்­னு­டைய பணி­வான நன்­றி­யைச் சொல்லி, எனது தொகுதி சம்­பந்­த­மாக சில கோரிக்­கை­கள் இருக்­கி­றது, அதை உங்­க­ளி­டத்­தில் கொடுத்­து­வி­டு­கின்­றேன். அவைக் குறிப்­பில் சேர்த்­துக்­கொள்­ளும்­படி அன்­போடு கேட்­டுக்­கொண்டு நிறைவு செய்­கின்­றேன். நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக உறுப்­பி­னர் எஸ். ஆஸ்­டின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>