<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,64,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 28 2026 03:52:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260828T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="28082026-MDU-11" position.sequence="11" ex-ref="28082026-MDU-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.102">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">2–ஆவது விமான நிலையம் இனியும் சாத்தியமா?  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="66">பரந்தூரை கைவிட்டதால் பாதகங்கள் என்னென்ன? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">திக்குத் தெரியாமல் தவிக்கும் தொழில்துறைகள்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame827182_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup827294_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup827295_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">மீ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">னம்­பாக்­கத்­தில் தற்­போது இயங்கி வரும் விமான நிலை­யம் தான், தென்­னிந்­தி­யா­வின் முதல் பன்­னாட்டு விமான நிலை­யம். 1930ம் ஆண்டு முதல் இது பயன்­பாட்­டுக்கு வந்­தது. பய­ணி­கள் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு, எதிர்­கால தேவை­களை கருத்­தில் கொண்டு அடுத்­த­டுத்து விரி­வாக்­கப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 1985ல் புதிய உள் நாட்டு முனை­யம், 1989ல் புதிய சர்­வ­தேச முனை­யம் பயன்­பாட்­டுக்­கு­வந்­தன. பின்­னர் அடுத்­த­டுத்து விரி­வாக்­கம், மேம்­பாட்டு பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, 2023 ஏப்­ரல் 8ம் தேதி புதிய டெர்­மி­னல் திறக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பய­ணி­கள் கையா­ளும் திறன் ஆண்­டுக்கு 2.3 கோடி­யில் இருந்து 3 கோடி­யாக உயர்ந்­தது. இதன் 2ம் கட்­டப் பணி­க­ளும் திட்­ட­ மி­டப்­பட்­டன. இருப்­பி­னும் விமான நிலை­யத்தை சுற்­றி­யுள்ள நில அமைப்பு, ஓடு­பா­தை­களை அணு­கும் வழி­யில் திரி­சூ­லம் மலை போன்ற தடை­கள், விமான நிலை­யத்­தின் எதிர்­கால விரி­வாக்­கத்­துக்கு முட்­டுக்­கட்­டை­யாக அமைந்து விட்­டன. இந்த நிலை­யில் தான் 2வது விமான நிலை­யத்­தின் தேவை மிக மிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக மாறி­யது. ஆனால், 2வது விமான நிலை­யத்­துக்­கான தொடக்­கப்­புள்ளி 1999ம் ஆண்­டி­லேயே வைக்­கப்­பட்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் தமிழ்­நாட்­டின் முதல்­வ­ராக இருந்­த­போது ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரில் 2வது விமான நிலை­யம் அமைக்க தீர்­மா­னி க்­கப்­பட்­டது. பின்­னர் 2007ல் அங்கு, சுமார் 4,820 ஏக்­க­ரில் புதிய விமான நிலை­யம் அமைக்க திட்­ட­மி­டப்­பட்­டது. ஆனால் நிலம் கைய­கப்­ப­டுத்­து­த­லில் ஏற்­பட்ட சிக்­கல்­கள் கார­ண­மாக திட்­டத்­துக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டது. இதற்­கி­டை­யில் தான் தற்­போ­தைய சென்னை விமான நிலை­யத்­தையே நவீ­ன­ம­ய­மாக்­கும் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 2வது விமான நிலை­யம் அமை­யும் வரை உட­னடி தேவை­யாக பய­ணி­கள் கையா­ளு­தலை சமா­ளிக்க தற்­கா­லிக முயற்­சி­யா­கவே பார்க்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2008ல் அனு­ம­திக்­கப்­பட்ட நவீ­ன­ம­ய­மாக்­கல் திட்­டம் பய­ணி­கள் திறனை 90 லட்­சத்­தில் இருந்து 2.3 கோடி­யாக உயர்த்த திட்­ட­ மிடப்­பட்­டது. நில அமைப்பு, ஓடு­பாதை அணு­க­லில் சிக்­கல் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் ஒரு குறிப்­பிட்ட அள­வுக்கு மேல் மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்தை மேம்­ப­டுத்த வழியே இல்லை என்­ப­தா­லும், மாநில பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முது­கெ­லும்­பான எதிர்­கால தொழில் வளர்ச்­சிக்கு ஏற்ற போக்­கு­வ­ரத்து இணைப்பை வலுப்­ப­டுத்­த­வும் நோக்­க­ மா­கக் கொண்டு, 2021ல் கிரீன் பீல்டு விமான நிலை­யம் அமைப்­ப­தற்­கான முனைப்பு தொடங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பரந்­தூர், பன்­னூர், படா­ளம், திருப்­போ­ரூர் ஆகிய இடங்­க­ளில் ஒன்றை இறுதி செய்­வது என முடிவு செய்­யப்­பட்­டது. இதில், பரந்­தூர் மற்­றும் பன்­னூர் ஆகிய இரண்டு இடங்­களை முடிவு செய்து, அங்கு இந்­திய விமான நிலை­யங்­கள் ஆணை­யம் ஆய்வு செய்­தது. இதில், முதல் முக்­கிய கார­ணம், சிறந்த போக்­கு­வ­ரத்து இணைப்பு . அதா­வது, சென்­னை-­பெங்­க­ளூரு விரை­வுச்­சாலை மற்­றும் தொழில் வழித்­த­டத்­து­டன் பரந்­தூ­ருக்கு சிறந்த இணைப்பு இருப்­ப­தா­கக் கரு­தப்­பட்­டது. அடுத்த முக்­கிய அம்­சங்­க­ளாக, பன்­னூ­ரு­டன் ஒப்­பி­டும்­போது, பரந்­தூ­ரில் குறை­வான குடும்­பங்­களே இடம்­பெ­யர வேண்­டிய நிலை இருந்­த­தாக மதிப்­பி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிலம் கைய­கப்­ப­டுத்­து­வ­தும் சாத­க­மாக அமைந்­தது. அதா­வது, நிலம் கிடைக்­கும் தன்மை, உரிமை நிலை மற்­றும் கைய­கப்­ப­டுத்­தும் செலவு ஆகி­ய­வற்றை பொருத்­த­வரை பரந்­தூர் சாத­க­மாக இருந்­தது. இது­மட்­டு­மின்றி விமான இயக்­கத்­துக்கு இடை­யூ­றாக இருக்­கும் தடை­கள் பரந்­தூ­ரில் குறை­வாக இருந்­த­தாக மதிப்­பி­டப்­பட்­டது. இறு­தி­யாக, விமான நிலை­யம் அமைப்­ப­தற்­கும் எதிர் ­கா­லத்­தில் விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கும் தேவை­யான தொடர்ச்­சி­யான நிலப்­ப­ரப்பு பரந்­தூ­ரில் கிடைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­த­விர, விமான வழி­காட்டு வச­தி­க­ளுக்­காக கூடு­தல் நிலம் தேவைப்­ப­டா­தது பரந்­தூ­ருக்கு மற்­றொரு முக்­கிய சாதக அம்­ச­மாக இருந்­தது. இந்த முடிவு கடந்த 2022 ஆகஸ்ட்­டில் எடுக்­கப்­பட்­டது. இரண்டு இணை­யான ஓடு­பா­தை­க­ளு­டன், ஆரம்­ப­கட்­ட­மாக ஆண்­டுக்கு சுமார் 2 கோடி பய­ணி­களை கையா­ளும் திறன் கொண்ட விமான நிலை­ய­மாக அது திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த 2021ம் ஆண்டு தமிழ்­நாடு முதல்­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் ஆட்­சிப்­பொ­றுப்­பேற்­ற­தும் கொரோன பர­வல் மிகப்­பெ­ரும் சவா­லாக இருந்­தது. இதில் இருந்து மீண்ட பிற­கு­தான் அடுத்­த­டுத்து முத­லீட்­டா­ளர் மாநா­டு­கள் மூலம் பெரிய அள­வில் முத­லீ­டு­கள் திரட்­டப்­பட்­டன. முக்­கிய தொழில்­துறை ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின. தமிழ்­நாட்டை ஒரு டிரில்­லி­யன் டால­ராக உயர்த்த வேண்­டும் என்ற இலக்­கு­டன் இவற்றை மு.க.ஸ்டாலின் அரசு முன்­னெ­டுத்­தது. 1 டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தார மாநி­ல­மாக உயர்த்­து­வ­தற்­கான முக்­கிய திட்­டம் இது என பாராட்­டுப்­பெற்ற முயற்சி தான் இந்த பரந்­தூர் விமான நிலைய திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், திட்­டம் அறி­விக்­கப்­பட்­ட­து­டன் சிக்­கல்­கள் முடி­வுக்கு வர­வில்லை. மாறாக, நிலம் கைய­கப்­ப­டுத்­து­வ­தில் சிக்­கல்­கள் நீடித்­தன. விமான நிலை­யத்­துக்­குத் தேவை­யான மொத்த நிலப்­ப­ரப்பு 4,700 ஏக்­கர் என நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இதில் 2,800 ஏக்­கர் தனி­யார் நில­மும், 1,972 ஏக்­கர் அரசு நில­மும் அடங்­கும். இதில் முதல் கட்­ட­மாக 2,800 ஏக்­கர் நிலத்தை தனி­யா­ரி­டம் இருந்து கைய­கப்­ப­டுத்­து­வது என முடிவு செய்­யப்­பட்­டது. கடை­சி­யாக வெளி­யான தக­வல்­க­ளின்­படி, தனி­யா­ரி­டம் இருந்து சுமார் 1,700 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கன­வுத் திட்­டம் நிறை­வே­று­வது கைக்­கெட்­டும் தூரம் தான் என தொழில்­து­றை­யி­னர் எதிர்­பார்த்­தி­ருந்த நிலை­யில் தான் இந்த திட்­டத்தை கைவி­டு­வ­தாக முதல்­வர் விஜய் தலை­மை­யி­லான தற்­போ­தைய தவெக அரசு அறி­வித்­துள்­ளது. இது, மாநி­லத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யை­யும், வேலை வாய்ப்­பை­யும் எதிர்­பார்த்­தி­ருந்த மக்­கள் மத்­தி­யி­லும், தொழில் வளத்­துக்­கான அற்­பு­த­மான போக்­கு­வ­ரத்து இணைப்­புச் சூழல் விரை­வில் நன­வா­கப்­போ­கி­றது என்ற தொழில்­து­றை­யி­ன­ருக்­கும் பேரி­டி­யாக இறங்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. அரசு பொறுப்­பேற்ற பிறகு, தமிழ்­நாட்டை ஒன்­றரை டிரில்­லி­யன் பொரு­ளா­தார மாநி­ல­மாக்க வேண்­டும் என இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இது முந்­தைய ஆட்­சி­யில் நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை விட அரை டிரில்­லி­யன் அதி­கம். ஆனால், இதற்­கான மிக முக்­கிய திட்­ட­மான பரந்­தூர் விமான நிலைய திட்­டம் கைவி­டப்­பட்ட நிலை­யில், அரசு மீண்­டும் ஒரு புதிய இடத்­தைத் தேட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­கர் தொடர்ச்­சி­யான நிலம், குறைந்த அள­வி­லான குடி­யி­ருப்­பு­கள், விவ­சாய நிலங்­கள் மற்­றும் நீர்­நி­லை­க­ளுக்கு குறைந்த பாதிப்பு, விமான இயக்­கத்­துக்கு ஏற்ற நில அமைப்பு, சாலை மற்­றும் ரயில் இணைப்பு என பல்­வேறு அம்­சங்­க­ளை­யும் ஒரே நேரத்­தில் பூர்த்தி செய்­யக்­கூ­டிய இடத்­தைத் தேர்வு செய்­வது எளி­தான காரி­யம் அல்ல. இத­னால், புதிய இடம் தேர்வு செய்­யப்­பட்­டா­லும் உட­ன­டி­யாக விமான நிலை­யம் கட்­டப்­ப­டப்­போ­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இடத் தேர்வு, தொழில்­நுட்ப ஆய்வு, சுற்­றுச்­சூ­ழல் நடை­மு­றை­கள், நிலம் கைய­கப்­ப­டுத்­து­தல், பல்­வேறு ஒப்­பு­தல்­கள் என மீண்­டும் பல கட்­டங்­களை கடக்க வேண்­டி­யி­ருக்­கும். இதன் கார­ண­மாக, சென்­னை­யின் நீண்­ட­கால விமா­னப் போக்­கு­வ­ரத்து தேவைக்­கான தீர்வு மேலும் தாம­த­மா­கும் அபா­யம் உள்­ளது. இந்த இடைக்­கா­லத்­தில், தற்­போ­தைய சென்னை விமான நிலை­யத்­தின் மீதான அழுத்­தம் அதி­க­ரிக்­க­லாம். அத­னால்­தான், பரந்­தூர் திட்­டம் கைவி­டப்­பட்ட உட­னேயே தற்­போ­தைய விமான நிலை­யத்தை மேலும் விரி­வு­ப­டுத்­தும் திட்­டத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கிடைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதிய முனை­யம், பய­ணி­கள் கையா­ளும் வச­தி­கள் மற்­றும் விமான நிலை­யத்­தைச் சுற்­றி­யுள்ள போக்­கு­வ­ரத்து வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தன் மூலம் தற்­போ­தைய விமான நிலை­யத்­தின் திறனை அதி­க­ரிக்க அரசு முயற்சி செய்ய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால், தற்­போ­தைய விமான நிலைய விரி­வாக்­கம் என்­பது 2-வது விமான நிலை­யத்­துக்கு நிரந்­தர மாற்­றாக இருக்­குமா என்­ப­தும் முக்­கி­ய­மான கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­கெ­னவே பல கட்­டங்­க­ளாக விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டுள்ள மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தில், நில அமைப்பு மற்­றும் விமான ஓடு­பா­தை­க­ளின் அணு­கு­மு­றைப் பாதை­யில் உள்ள தடை­கள் உள்­ளிட்ட கார­ணி­கள் எதிர்­கால விரி­வாக்­கத்­துக்கு கட்­டுப்­பா­டு­களை உரு­வாக்­கு­கின்­றன. எனவே, தற்­போ­தைய விமான நிலை­யத்தை எவ்­வ­ளவு தூரம் விரி­வு­ப­டுத்த முடி­யும் என்­ப­தற்­கும் ஒரு வரம்பு உள்­ளது. எனவே, 2வது விமான நிலைய திட்­டம் என்­பது காலத்­தின் கட்­டா­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெரும்­பான்மை நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு முதல் கட்ட நட­வ­டிக்­கை­கள் ஏறக்­கு­றைய முடி­யும் தரு­வா­யில் உள்ள இந்த திட்­டத்தை புறக்­க­ணிப்­பது, தமிழ்­நாட்­டிற்கு வர வேண்­டிய முத­லீ­டு­க­ளை­யும் வேலை வாய்ப்­பு­க­ளை­யும் வளத்­தை­யும் தடுப்­ப­தற்கு சமம் என்­கின்­ற­னர் தொழில் துறை­யி­னர். மேலும், பரந்­தூ ­ருக்­கான போக்­கு­வ­ரத்து உள்­கட்­ட­மைப்­பு­களை புறந்­தள்­ளி­விட்டு ஓசூ­ரில் விமான நிலை­யம் அமைப்­ப­தாக அமைச்­சர் கீர்த்­தனா கூறி­யி­ருப்­பது பற்றி தெரி­வித்த தொழில் துறை­ யி­னர், சென்­னை­தான் தொழில்­துறை மையம் சென்னை என்­பதை அரசு 
ஏன் உண­ர­வில்லை என கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஐத­ரா­பாத்­துக்கு நிக­ராக இருந்­தி­ருக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பரந்­தூர் விமான நிலை­யம் திட்­ட­மி­டப்­பட்ட பரந்­தூர் விமான நிலை­யம், நிலப்­ப­ரப்­பில் ஹைத­ரா­பாத் ஷம்­ஷா­பாத் விமான நிலை­யத்­துக்கு நிக­ரா­ன­தாக இருந்­தது. ஷம்­ஷா­பாத் விமான நிலை­யத்­தைச் சுற்றி உரு­வான விமா­ன­ந­க­ரம் போல, பரந்­தூ­ரும் சென்­னை­காஞ்­சி­பு­ரம் தொழில் மண்­ட­லத்­தின் புதிய பொரு­ளா­தார மைய­மாக உரு­வா­கும் வாய்ப்­பைக் கொண்­டி­ருந்­தது. ஷம்­ஷா­பாத் தொடங்கி 7 ஆண்டு கழித்­து­தான் 1 கோடி பய­ணி­களை தாண்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2024-–25-ல் சுமார் 2.9 கோடி பய­ணி­களை கையாண்­டுள்­ளது. இத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் பரந்­தூர் திட்­டம் எதிர்­கால பய­ணி­கள் தேவைக்கு ஏற்ப வடி­வ­மைக்­கப்­பட்­ட­தால், மிகத் தொலை நோக்­குப் பார்வை கொண்ட திட்­ட­மாக புக­ழப்­பட்­டது. இத்­திட்­டம் நிறுத்­தப் ­பட்­டது குறித்து விமான பய­ணி­கள் சங்­கத்­தி­னர் கூறு­கை­யில், தி.மு.க., அதி­முக ஆகிய 2 
கட்­சி­க­ளின் ஆட்­சி­யாக இருந்­தி­ருந்­தால் இப்­ப­டி­யொரு முடிவை எடுத்­தி­ருக்க மாட்­டார்­கள் என அங்­க­லாய்த்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">காத்­தி­ருக்­கும் சவால்­கள் தொழில் 
கூட்­ட­மைப்பு கருத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய தொழில் கூட்­ட­மைப்பு சார்­பில் 
தெரி­விக்­கப்­பட்ட கருத்­தில், சென்­னைக்கு மாற்று விமான நிலை­யம் அவ­சி­யம் என்­றும், அடுத்த 2 முதல் 3 ஆண்­டு­க­ளுக்­குள் புதிய விமான நிலை­யம் உரு­வாக்­கப்­ப­டா­விட்­டால் வர்த்­த­கம் மற்­றும் பயண நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­ப­ட­லாம். தமி­ழக அரசு புதிய தொழில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக பல்­வேறு நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரும் நிலை­யில், போது­மான விமான நிலைய 
உள்­கட்­ட­மைப்பு இல்­லா­விட்­டால் முத­லீட்­டா­ ளர்­கள் ஆந்­திரா, கர்­நா­டகா, தெலங்­கானா போன்ற அண்டை மாநி­லங்­களை தேர்வு செய்­யக்­கூ­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னால் புதிய தொழிற்­சா­லை­கள் மட்­டு­மின்றி, அத­னு­டன் உரு­வா­கும் வேலை­வாய்ப்­பு­கள், துணைத் தொழில்­கள், ஏற்­று­மதி மற்­றும் மாநில வரு­வாய் ஆகி­ய­வற்­றி­லும் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும். செங்­கல்­பட்டு, திண்­டி­வ­னம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் விவ­சாய நிலங்­கள் அதி­கம் உள்­ள­தால் மீண்­டும் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் பிரச்னை ஏற்­பட வாய்ப்­புள்­ளது. பெங்­க­ளூரு மற்­றும் ஆந்­திரா நெடுஞ்­சாலை பகு­தி­க­ளி­லும் தொழிற்­சா­லை­கள், குடி­யி­ருப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ள­தால் பெரிய அள­வில் நிலம் கிடைப்­பது எளி­தா­ன­தாக இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்று விமான நிலை­யம் எங்கு அமை­யும், எப்­போது பணி­கள் தொடங்­கும், எப்­போது பயன்­பாட்­டுக்கு வரும் என்­ப­தற்­கான காலக்­கெ­டுவை உட­ன­டி­யாக அரசு அறி­விக்க வேண்­டும். இல்­லை­யெ­னில், தமி­ழ­கத்­துக்கு வர வேண்­டிய முத­லீ­டு­கள் அண்டை மாநி­லங்­க­ளுக்கு சென்று, தொழில் வளர்ச்­சி­யும் வேலை­வாய்ப்­பு­க­ளும் பாதிக்­கப்­ப­டும் நிலை உரு­வா­கும்,’ என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கால் நூற்­றாண்டு பய­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதி­க­ரித்து வரும் மக்­கள் தொகை மற்­றும் விமான நிலை­யத்­தில் எதிர்­கால பய­ணி­கள் எண்­ணிக்கை, தொழில் வளர்ச்சி என பல்­வேறு அம்­சங்­க­ளை­க­ருத்­தில் கொண்டு சென்­னைக்கு 2வது விமான நிலை­யம் அமைப்­ப­தற்­கான முனைப்பு, இன்று நேற்­றல்ல, கால் நூற்­றாண்­டாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. இதன் முக்­கிய மைல்­கற்­கள் வரு­மாறு: 1999 - 2021: சென்­னை­யின் 2வது விமான நிலை­யத்­துக்­கான இடத்­தைத் தேர்வு செய்ய தமி­ழக அரசு பல்­வேறு இடங்­களை ஆய்வு செய்­தது. ஸ்ரீபெ­ரும்­பு­தூர், பட்­டூர், படா­ளம், திருப்­போ­ரூர் உள்­ளிட்ட இடங்­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆகஸ்ட் 2022: சென்­னை­யின் புதிய விமான நிலை­யத்­துக்­கான முன்­னு­ரி­மைத் தள­மாக பரந்­தூர் தேர்வு செய்­யப்­பட்­டது. 2023-–2025: நில அள­வீடு, தொழில்­நுட்ப ஆய்­வு­கள், சுற்­றுச்­சூ­ழல் தாக்க மதிப்­பீடு உள்­ளிட்ட பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அரசு நிலம் 1,972 கோடி போக, தனி­யார் நிலம் மட்­டும் ஏறக்­கு­றைய 1,700 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆகஸ்ட் 24, 2026: சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் விவ­சா­யப் பாதிப்­பு­க­ளைக் கருத்­தில் கொண்டு பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம் கைவி­டப்­ப­டு­வ­தாக முத­ல­மைச்­சர் விஜய் சட்­டப்­பே­ர­வை­யில் விதி 110ன் கீழ் அறி­வித்­தார். இதன் மூலம் கால் நூற்­றாண்டு முனைப்­புக்கு கிடைத்த பலன் முழுமை பெறும் நிலை­யில் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மறு­ப­டி­யும் மொதல்ல இருந்தா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விமான நிலை­யம் போன்று மிகப்­பெ­ரிய திட்­டங்­கள் செயல்­பாட்­டுக்கு வரு­வது அவ்­வ­ளவு சுல­பம் அல்ல. பரந்­தூர் போன்று எந்த பிரச்­னை­யும் இல்­லாத இடத்தை தேர்வு செய்ய வேண்­டும். அதற்­கான நிலப்­ப­ரப்பு இருக்­க­வேண்­டும். சுற்­றுச்­சூ­ழல் அனு­மதி கிடைக்க வேண்­டும். எல்­லா­வற்­றுக்­கும் மேலாக இந்­திய விமான நிலை­யங்­கள் ஆணை­யம் அதனை ஆய்வு செய்து உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மெட்ரோ ரயில், எக்ஸ்­பி­ரஸ் சாலை என பல்­வேறு உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் கருத்­தில் கொள்ள வேண்­டும். அப்­படி இணைப்­புச்­சாலை, போக்­கு­வ­ரத்து வச­தி­கள் இல்­லா­விட்­டால் புதி­தாக அவற்றை உரு­வாக்க வேண்­டும். வெண்­ணிலா கபடி குழு படத்­தில் சூரி­யின் பரோட்டா காமெடி காட்சி போல, ‘மறு­ப­டி­யும் மொதல்ல இருந்தா’ என இந்த திட்­டம் மாறி­னால், மறு­ப­டி­யும் ஐந்­தாண்­டு­கள் அல்ல இன்­னொரு கால் நூற்­றாண்டு காத்­தி­ருக்க வேண்­டிய அவ­லம் நேர­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போது, போக்­கு­வ­ரத்து உட்­கட்­ட­மைப்பு இல்­லாத கார­ணத்­துக்­கா­கவே தமி­ழ­கம் முத­லீ­டு­க­ளில் புறக்­க­ணிக்­கப்­பட்­டால், நாட்­டி­லேயே மிக­வும் பின்­தங்­கிய மாநி­ல­மாக மாறும் அபா­ய­மும் உள்­ளது. எனவே, பரந்­தூரை கைவிட்­ட­தன் மிகப்­பெ­ரிய பாதிப்பு, ஒரு விமான நிலை­யத் திட்­டம் ரத்து செய்­யப்­பட்­டது என்­ப­தைக் காட்­டி­லும், சென்­னை­யின் நீண்­ட­கால விமா­னப் போக்­கு­வ­ரத்து திட்­டம் மீண்­டும் ஒரு புதிய இடத்­தி­லி­ருந்து தொடங்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருப்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கட­லில் கரைந்த பெருங்­கா­யம் மக்­கள் வரிப்­ப­ணம் ரூ.8,000 கோடி அம்போ!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது ஒரு­பு­றம் இருக்க, கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட 1,700 ஏக்­கர் நிலத்­தின் கதி என்ன? என்­ப­து­தான் முதல் கேள்­வி­யாக உள்­ளது. விமான நிலை­யம் அமைப்­ப­தற்­காக ஒரு குறிப்­பிட்ட நோக்­கத்­துக்­காக கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட நிலத்தை, திட்­டம் கைவி­டப்­பட்ட பிறகு வேறு பயன்­பாட்­டுக்கு மாற்ற முடி­யுமா என்­பது சட்­ட­ரீ­தி­யாக ஆராய வேண்­டிய விஷ­ய­மா­கி­யுள்­ளது. அந்த நிலத்தை வேறு தொழில் அல்­லது அரசு திட்­டத்­துக்­குப் பயன்­ப­டுத்­தி­னால், ஏற்­கெ­னவே நிலம் வழங்­கி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து எதிர்ப்­பும் சட்ட நட­வ­டிக்­கை­க­ளும் வர வாய்ப்பு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும் நில உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்ட இழப்­பீடு, வீடு­கள் மற்­றும் மாற்று குடி­யி­ருப்பு வச­தி­கள் தொடர்­பான விவ­கா­ரங்­க­ளும் அடங்­கி­யுள்­ளன. இந்த திட்­டத்­துக்­கென கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட இடங்­க­ளுக்கு, சந்தை மதிப்பை விட இரண்­டே­கால் மடங்கு அதி­க­மாக பணம் வழங்­கப்­பட்­டுள்­ளத. இதன்­படி, கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட 1,700 ஏக்­கர் நிலத்­துக்கு ரூ.8,000 கோடியை அரசு வழங்­கி­யுள்­ள­தாக அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திட்­டம் ரத்து செய்­யப்­பட்­ட­தால் நிலம் மற்­றும் இழப்­பீடு தொடர்­பான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டா­ய­மும் அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அர­சி­யல்­வா­தி­கள் தங்­கள் சொந்த பணம் என்­றால் வீணாக விட­மாட்­டார்­கள். மக்­கள் வரிப்­ப­ணம் என்று வரும்­போது வீணாக்கி விட்டு பிளாஸ்ட் விடு­வதா என்று பொது­மக்­கள் வேதனை தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">உற்­சா­கத்­தில் ஆந்­திரா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னை­யின் 2-து விமான நிலை­ய­மாக பரந்­தூர் உரு­வா­கி­யி­ருந்­தால், சென்னை- காஞ்­சி­பு­ரம் தொழில் வளை­யத்­தின் விமான, சரக்கு மற்­றும் தள­வாட இணைப்பு மேலும் வலுப்­பெ­றும் வாய்ப்பு இருந்­தது. குறிப்­பாக ஆந்­திர எல்­லைக்கு அரு­கி­லுள்ள ஸ்ரீசிட்­டியை கருத்­தில் கொண்­டால் சென்­னை­யில் இருந்து பரந்­தூர் 63.6 கி.மீ தொலை­வி­லும், ஸ்ரீசிட்டி சுமார் 71.5 கி.மீ தொலை­வி­லும் உள்­ளது. பரந்­தூ­ரில் இருந்து ஸ்ரீசிட்டி 88.5 கி.மீ. 
பரந்­தூர் கைவி­டப்­பட்­ட­தால் அது ஆந்­திரா மாநி­லத்­துக்கு சாத­க­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், ஸ்ரீபெ­ரும்­பு­தூர் முதல் கர்­நா­டக மாநி­லம் ஹோஸ்­கோடே வரை­யி­லான 258 கி.மீ நீள பெங்­க­ளூரு எக்ஸ்­பி­ரஸ் சாலை தமிழ்­நாட்­டின் பரந்­தூர் விமான நிலைய திட்­டத்­து­டன் இணைக்­கும் வகை­யில் உள்­ளது. மாறாக ஆந்­தி­ரா­வில் 9 விமான நிலை­யங்­கள் அமைக்­கப்­பட உள்­ளன. இவற்­றில் பல மாநில எல்­லை­யில் அதா­வது தமிழ்­நாடு, கர்­நா­டகா, ஒடிசா அரு­கில் அமைந்­துள்­ளன. இத­னால் தமிழ்­நாடு உட்­பட இந்த மாநி­லங்­க­ளின் முத­லீ­டு­க­ளை­யும், பய­ணி­கள் மூல­மான வரு­வா­யும் ஆந்­தி­ரா­வுக்கு செல்­லும் அபா­யம் உள்­ளது. எனவே, பரந்­தூர் திட்­டத்தை கைவி­டும் முதல்­வர் விஜய் அர­சின் முடிவு ஆந்­தி­ரா­வுக்கு பெரும் உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என தக­வல்­கள்தெரி­விக்­கின்­றன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>