<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,958,1109" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 27 2026 15:15:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260828T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="28082026-TRY-03" position.sequence="03" ex-ref="28082026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">த.வெ.க. அரசின் இரட்டை வேடம்! தீர்மானத்தினால் எந்தப் பயனும் இல்லை!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="41"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="82">‘டெட்’ தேர்வு   : கழக ஆட்சியிலேயே நடவடிக்கை எடுத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="49">பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் பாதுகாப்பு குறித்து கடிதம் எழுதினார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாடு முழு­வ­தும் செயல்­பட்டு வரும் அனைத்து வகை பள்­ளி­க­ளி­லும், இடை­நிலை மற்­றும் பட்­ட­தாரி ஆசி­ரி­யர் பணி­யி­டங்­க­ளில் நிய­ம­னங்­கள் மேற்­கொள்ள, கடந்த 2010ம் ஆண்டு ஆசி­ரி­யர் தகு­தித்­தேர்வு (டெட்) கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. தொடர்ந்து, தற்­போது பணி­யி­லி­ருக்­கும் ஆசி­ரி­யர்­க­ளும், தகு­தித் தேர்­வில் தேர்ச்சி பெற வேண்­டும் என உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இது­தொ­டர்­பான சீராய்வு மனு­வின் மீதான தீர்ப்­பில், பணி­யில் உள்ள ஆசி­ரி­யர்­கள், வரும் 2028ம் ஆண்­டுக்­குள் ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வில் தேர்ச்சி பெற வேண்­டும் என ஆணை­யி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்தை பொறுத்­த­வரை, கடந்த 2010ம் ஆண்­டிற்கு முன்பு பணி நிய­ம­னம் பெற்ற 3 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள், தற்ே­பாது அரசு பள்­ளி ­க­ளில் பணி புரிந்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளுக்­காக ஆண்­டு­தோ­றும் சிறப்பு 
தகு­தித்­தேர்வு நடத்­தப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டது. தொடர்ந்து கடந்த மாதம் 
தகு­தித்­தேர்வு நடத்­தப்­பட்­டது. இத­னி­டையே, தகு­தித்­தேர்­வில் தேர்ச்சி பெறு­வ­தற்­கான மதிப்­பெண்ணை குறைப்­பது தொடர்­பாக, வழக்கு தொட­ரப்­பட்­ட­தால், முடி­வு­கள் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் பேசிய அமைச்­சர், ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வி­லி­ருந்து விலக்கு அளிப்­ப­தற்­கான தனி தீர்­மா­னத்தை கொண்டு வந்­தார். 
இதற்­கான உரிய நட­வ­டிக்­கை­கள் 
மேற்­கொள்ள ஒன்­றிய அரசை வலி­யு­றுத்தி தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. இத­னி­டையே, தகு­தித்­தேர்வு விவ­கா­ரத்­தில், த.வெ.க. அரசு இரட்டை நிலைப்­பாடு எடுத்­துள்­ள­தாக, ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் கடும் அதி­ருப்தி ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் இப்­பி­ரச்­சினை குறித்து கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்த பொழுதே இது­கு­றித்து பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இல­வச மற்­றும் கட்­டாய கல்வி உரி­மைச் சட்­டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்­றும் தேசிய ஆசி­ரி­யர் கல்­விக் குழும சட்­டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A-ல் உரிய திருத்­தங்­கள் மேற்­கொண்டு, ஆசி­ரி­யர்­க­ளைப் பாது­காப்­ப­து­டன், குழந்­தை­க­ளின் கல்­வி­யும் பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­பதை உறு­தி­செய்­திட வேண்­டு­மென வலி­யு­றுத்தி இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கடி­தம் எழுதி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நாடு முழு­வ­தும் இலட்­சக்­க­ணக்­கான ஆசி­ரி­யர்­களை, குறிப்­பாக தமிழ்­நாட்­டில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான ஆசி­ரி­யர்­களை பாதிக்­கும் அவ­ச­ர­மான மற்­றும் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு  இந்­தி­யப் பிர­த­மர்  நரேந்­திர மோடி அவர்­க­ளின் ஆத­ர­வைக் கோரி இன்று 
(25-.11.-2025) கடி­தம் எழு­தி­யுள்ள  முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள், இல­வச மற்­றும் கட்­டாய கல்வி உரி­மைச் சட்­டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்­றும் தேசிய ஆசி­ரி­யர் கல்­விக் குழும சட்­டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A-ல் உரிய திருத்­தங்­கள் மேற்­கொண்டு, ஆசி­ரி­யர்­க­ளைப் பாது­காப்­ப­து­டன், பதவி உயர்­வு­க­ளுக்கு தகுதி உடை­ய­வர்­க­ளாக இருப்­ப­தை­யும், குழந்­தை­க­ளின் கல்­வி­யும் பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­ப­தை­யும் உறு­தி­செய்­திட வேண்­டு­மென வலி­யு­றுத்­திக் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13"> முத­ல­மைச்­சர் அவர்­கள் எழு­தி­யுள்ள கடி­தத்­தில் சிவில் மேல்­மு­றை­யீடு எண் 1405/2025, 1385/2025 மற்­றும் 1386/2025 மற்­றும் பிற வழக்­கு­க­ளில் 01.09.2025 அன்று உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் வழங்­கப்­பட்ட சமீ­பத்­திய தீர்ப்­பில், ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வில் (TET) தேர்ச்சி பெறாத பணி­யில் உள்ள அனைத்து ஆசி­ரி­யர்­க­ளும், அப்­ப­ணி­யில் தொடர இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் TET தகு­தி­யைப் பெற வேண்­டும் என்­றும், மேலும், ஐந்து ஆண்­டு­க­ளுக்­கும் குறை­வான பணிக்­கா­லம் உள்ள ஆசி­ரி­யர்­கள் பணி­யைத் தொடர அனு­ம­திக்­கப்­பட்­டா­லும், TET தகுதி பெறா­விட்­டால் பதவி உயர்­வுக்­குத் தகு­தி­யற்­ற­வர்­­களாக இருப்­பார்­கள் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­றும் தனது 
கடி­தத்­தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். தேசிய ஆசி­ரி­யர் கல்­விக் குழு­ம­மா­னது (National Council for Teacher Education - NCTE), 23-8-2010-க்கு முன்பு நிய­மிக்­கப்­பட்ட ஆசி­ரி­யர்­க­ளுக்கு, ஆசி­ரி­யர் தகு­தித் தேர்வு (TET) போன்ற புதிய தகு­தித் தேவை­க­ளி­லி­ருந்து ஆரம்­பத்­தில் விலக்கு அளித்­தி­ருந்­தது என்­றும் இருப்­பி­னும், கல்வி உரி­மைச் சட்­டத்­தில் (RTE) உச்ச நீதி­மன்­றத்­தால் வழங்­கப்­பட்­டுள்ள தற்­போ­தைய இந்­தத் தீர்ப்­புரை, ஆசி­ரி­யர்­க­ளுக்கு முன்பு வழங்­கப்­பட்ட விலக்­கினை மீறி, TET கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்­துள்ள அவர், இதன் விளை­வாக, இந்த ஆசி­ரி­யர்­கள் இப்­போது இரண்டு ஆண்­டு­ க­ளுக்­குள் TET தேர்ச்சி பெற வேண்­டும்; இல்­லா­வி­டில், அவர்­க­ளின் வேலை பறிக்­கப்­ப­டும் என்ற நிலை பெருத்த நிரு­வாக சிர­மத்­தை­யும், ஆசி­ரி­யர்­க­ளுக்கு தனிப்­பட்ட சிர­மத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் என்று வருத்­தத்­தோடு தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பணி நிபந்­த­னை­க­ளில் இத்­தகையமாற்­றம் மற்­றும் நிய­ம­னத்­திற்­குப் பின் பதவி உயர்­வுக்­கான அவர்­­களின் நியா­ய­மான எதிர்­பார்ப்­பில் இடை­யூறு என்­பது, ஆசி­ரி­யர்­க­ளின் உரி­மை­களை மீறு­வ­தாக அமைந்­துள்­ளது என்­றும், இது ஆசி­ரி­யர்­­களின் நிய­ம­னத்­தின்­போது, நடை­ 
மு­றை­யில் இருந்த சட்­டப்­பூர்வ விதி­க­ளின்­கீழ் முழு­மை­யாக தகுதி பெற்று, முறை­யாக நிய­மிக்­கப்­பட்ட ஆசி­ரி­யர்­க­ளில் பெரும்­பான்­மை­யோரை நேர­டி­யாக பாதிப்­ப­தாக  முத­ல­மைச்­சர் அவர்­கள் தனதுகடி­தத்­தில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அந்த வகை­யில் தமிழ்­நாட்­டில் மட்­டும் ஏறத்­தாழ நான்கு இலட்­சம் ஆசி­ரி­யர்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­துள்ள  முத­ல­மைச்­சர் அவர்­கள் நிய­ம­னம் செய்­யப்­பட்ட நேரத்­தில் அவர்­கள் அனை­வ­ரும் நிர்­ணயிக்­கப்­ பட்ட அனைத்து கல்வி மற்­றும் தொழில்­முறை தகு­தி­க­ளை­யும் பூர்த்தி செய்­த­வர்­கள் என்­றும், சட்­டப்­ப­டி­யான மற்­றும் முறை­யான செயல்­மு­றை­கள் மூலம் தேர்வு செய்­யப்­பட்­ட­வர்­கள் என்­றும், அதோடு 2011-ல் TET அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே பணி­யில் சேர்ந்­த­வர்­கள் அவர்­கள் என்­றும் தனது கடி­தத்­தில் கோடிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இந்த ஆசி­ரி­யர்­க­ளுக்கு TET-ஐ முந்­தைய தேதி­யிட்டு அமல்­ப­டுத்­து­வது என்­பது, அவர்­கள் பணி­யில் தொடர்­வ­தற்­கும் மற்­றும் பதவி உயர்­வு­க­ளுக்­கான தகு­திக்­கும் நீண்ட கால­மாக நிலை­நி­றுத்­தப்­பட்ட பணி உரி­மை­க­ளில் குறிப்­பி­டத்­தக்க இடை­யூறை உரு­வாக்­கு­கி­றது என்று தெரி­வித்­துள்ள  முத­ல­மைச்­சர் அவர்­கள், இது மாநி­லத்­தில் நிர்­வா­க­ரீ­தி­யாக சாத்­தி­ய­மற்ற ஒரு நிலையை 
உரு­வாக்­கு­கி­றது என்­றும், பள்­ளிக் கல்வி அமைப்­பின் செயல்­பாட்­டைச் சீர்­கு­லைக்­கும் வகை­யில் கடு­மை­யான அபா­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது என்­றும் கவ­லை­ப­டத் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முந்­தைய தேதி­யிட்டு இதனை அமல்­ப­டுத்­து­வது என்­பது, பெரிய அள­வி­லான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பது நாடு முழு­வ­தும் கண்­கூ­டா­கத் தெரி­யும் என்­றும் ஆட்­சேர்ப்பு சுழற்­சி­கள், தகு­தி­யான ஆசி­ரி­யர்­கள் கிடைக்­கும் தன்மை மற்­றும் கிரா­மப்­புற மற்­றும் தொலை­தூ­ரப் 
பகு­தி­க­ளில் பணி நிலைமை ஆகி­ய­ 
வற்­றின் அடிப்­ப­டை­யில், எந்த 
மாநி­லத்­தி­லும் இவ்­வ­ளவு பெரிய எண்­ணிக்­கை ­யி­லான ஆசி­ரி­யர்­களை மாற்­று­வது சாத்­தி­ய­மற்­றது என்­றும் தனது கடி­தத்­தில் முத­ல­மைச்­சர் 
அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மேலும், ஆசி­ரி­யர்­கள் நிய­ம­னம் நிய­ம­னம் செய்­யப்­பட்டு பல ஆண்­டு­ க­ளுக்­குப் பிறகு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட தகு­தி­யைக் கார­ண­மா­கக் கொண்டு மட்­டும், நீண்ட கால­மாக பணி­பு­ரிந்து வரும் அனு­ப­வம் பெற்ற ஆசி­ரி­யர்­­களுக்கு பதவி உயர்­விற்­கான வாய்ப்­பு­களை மறுப்­பது 
என்­பது, பெருத்த அள­வி­லான சிர­மத்­தை­யும், தேக்க நிலை­யை­யும் ஏற்­­படுத்­து­வ­தாக கவ­லை­யோடு குறிப்­பிட்­டுள்ள  முத­ல­மைச்­சர் அவர்­கள், RTE சட்­டத்­தின் பிரிவு 23-ல் தெரி­விக்­கப்­பட்­டுள்ள குறிப்­பு­ரை­கள் கார­ண­மாக, நாடு முழு­வ­தும் இலட்­சக்­­கணக்­கான ஆசி­ரி­யர்­கள் இவ்­வாறுபாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும், இந்­தக் குறிப்­பு­ரையி­னால் ஏற்­ப­டும் பாதிப்பு என்­பது, பிரி­வுக் கூறு 21-A-ன்கீழ் 
அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான கல்வி 
உரி­மைக்­கும் நேரடி தாக்­கங்­களை 
ஏற்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மேற்­கூ­றி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு, இல­வச மற்­றும் கட்­டா­யக் கல்வி உரி­மைச் சட்­டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்­றும் தேசிய ஆசி­ரி­யர் கல்­விக் குழும 
சட்­டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A ஆகி­ய­வற்­றில் உரிய திருத்­தங்­களை மேற்­கொள்­ளத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க ஒன்­றிய கல்வி அமைச்­ச­கத்­திற்கு அறி­வு­றுத்­தி­டு­மாறு  இந்­தி­யப் பிர­த­மர்  நரேந்­திர மோடி அவர்­­களைக் கேட்­டுக் கொண்­டுள்ள  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள், அப்­போ­து­தான் 23.08.2010 அன்று பணி­யில் இருந்த ஆசி­ரி­யர்­கள் 
பாது­காக்­கப்­ப­டு­வ­து­டன், பதவி உயர்­வு­க­ளுக்கு தகுதி உடை­ய­வர்­க­ளாக இருப்­ப­தை­யும், குழந்­தை­க­ளின் 
கல்­வி­யும் பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­­பதை­யும் உறு­தி­செய்­திட இய­லும் என்று தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தில் கடந்த 2012ம் ஆண்டு முதல், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தகு­தித்­தேர்வு நடத்­தப்­பட்டு வரு­கி­றது. நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி, கடந்த 2010க்கு 
முன்­பாக பணி­யில் சேர்ந்த அனை­ வ­ரும், தகு­தித்­தேர்­வில் தேர்ச்சி பெற வேண்­டும். சட்­ட­மன்­றத்­தில் பேசிய அமைச்­சர், தமி­ழக பள்­ளி­க­ளில் 23.08.2010க்கு முன்­பாக நிய­மிக்­கப்­ பட்ட ஆசி­ரி­யர்­க­ளுக்கு, தகு­தித் தேர்­வி­ லி­ருந்து நிரந்­தர விலக்கு அளிப்­ப­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் என தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், தமி­ழ­கத்­தில் கடந்த 2011ம் ஆண்டு சுமார் 8 ஆயி­ரத்­திற்­கும் 
மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள், சீனி­யா­ரிட்டி அடிப்­ப­டை­யில் நிய­மிக்­கப்­பட்டு, தற்­போது அர­சுப் பள்­ளி­க­ளில் பணி புரிந்து வரு­கின்­ற­னர். அமைச்­ச­ரின் அறி­விப்­புப்­படி பார்த்­தால், இந்த 8 ஆயி­ரம் ஆசி­ரி­யர்­கள் கட்­டா­யம் தேர்வு எழு­தி­யாக வேண்­டுமா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இது­கு­றித்­தும் தெளி­வான விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று ஆசி­ரி­யர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>