<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,34,493,674" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 29 2026 07:52:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260829T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="29082026-CHN-07" position.sequence="07" ex-ref="29082026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">29.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">தி.மு.க. அர­சால் புலம் பெயர் தொழி­லா­ளர்­க­ளின் குழந்­தை­க­ளுக்­கா­கத் தொடங்­கப்­பட்ட  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">‘தமிழ் மொழி கற்­போம்’ திட்­டம் தற்­போது செயல்­பாட்­டில் உள்­ளதா?  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">குழந்­தை­க­ளுக்­கான கல்­வியைச் சாத்­தி­யப்­ப­டுத்­துமா அரசு?</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="03072024CHN02_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="03072024CHN021_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக.29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர், என்­னா­லும் எங்­கள் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான கடந்த கால திரா­விட மாடல் அர­சால் புலம் பெயர் தொழி­லா­ளர்­க­ளின் குழந்­தை­ க­ளுக்­கா­கத் தொடங்­கப்­பட்ட தமிழ் மொழி கற்­போம் திட்­டம் தற்­போது செயல்­பாட்­டில் உள்­ளதா? திருப்­பூ­ரில் உள்ள புலம் பெயர் தொழி­லா­ளர்­க­ளின் குழந்­தை­க­ளுக்கு அடிப்­ப­டைக் கல்வி கிடைப்­ப­ தற்­கான திட்­டத்தை அரசு சாத்­தி­யப்­ப­டுத்­துமா? என்ற எதிர்­பார்ப்பு நில­வு­கி­றது. அவர்­கள் கல்வி கற்க வச­தி­யாக ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள் மற்­றும் ஆன்­லைன் வசதி ஏற்­பாடு செய்ய கோரிக்கை எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொழில் நக­ர­மான திருப்­பூ­ரின் பொரு­ளா­தா­ரம், உள்­நாட்டு தொழி­லா­ளர்­கள் மட்­டு­மல்­லாது லட்­சக்­க­ணக்­கான புலம் பெயர் தொழி­லா­ளர்­க­ளின் உழைப்­பி­லேயே இயங்­கு­கி­றது. வட மாநி­லங்­க­ளி­லி­ருந்­தும், தமி­ழ­கத்­தின் பிற மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் வாழ்­வா­தா­ரம் தேடி வரும் தொழி­லா­ளர்­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. ஆனால் இவர்­க­ளது குழந்­தை­ளுக்­கான அடிப்­ப­டைக் கல்வி என்­பது முழு­மை­யாக கிடைக்­கப்­பெ­றாத நிலை நீடிக்­கி­றது. பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த ஏரா­ள­மான தொழி­லா­ளர்­க­ளின் குழந்­தை­கள் இங்­குள்ள அர­சுப் பள்­ளி­க­ளில் இணைந்து கல்வி கற்­றுத்­தான் வரு­கி­றார்­கள். இருப்­பி­னும், அந்த எண்­ணிக்கை முழு­மை­யா­ன­ தாக இல்லை. திருப்­பூ­ரில் உள்ள புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் மற்­றும் அவர்­க­ளின் குழந்­தை­கள் குறித்த முழு­மை­யான தர­வு­கள் மாவட்ட நிர்­வா­கத் 
­தி­டமோ, தொழி­லா­ளர் நலத்­து­றை­யி­டமோ இல்லை என்ற குற்­றச்­சாட்­டும் எழு­கி­றது. எனவே, துறை சார்ந்த அதி­கா­ரி­களை ஒருங்­கி­ணைத்து மாவட்ட முழு­வ­தும் ஆய்வு மேற்­கொண்டு, பள்ளி செல்லா குழந்­தை­ க­ளைக் கண்­ட­றிந்து அவர்­களை அரு­கில் உள்ள அர­சுப் பள்­ளி­க­ளில் சேர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அரசு போர்க்­கால அடிப்­ப­டை­யில் துரி­தப்­ப­டுத்த வேண்­டும். புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் அதி­கம் வசிக்­கக்­கூ­டிய பகு­தி­க­ளில், குழந்­தை­கள் பள்­ளிக்­குச் செல்­வ­தன் நோக்­கம் மற்­றும் கல்வி கற்­ப­தன் அவ­சி­யம் குறித்து அவர்­க­ளி­டம் தொடர் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாவட்ட மற்­றும் அரசு நிர்­வா­கத்­தின் இத்­த­கைய முயற்­சி­க­ளுக்­குத் திருப்­பூ­ரின் தொழில்­து­றை­யி­ன­ரும், தொழிற்­சங்­கத்­தி­ன­ரும் முழு ஒத்­து­ழைப்பு அளிக்க முன்­வர வேண்­டும் என கல்­வி­யா­ளர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர். பெற்­றோர்­க­ளி­டையே பணி நிலை­யற்ற தன்மை கார­ண­மாக அவர்­கள் அடிக்­கடி இடம் மாறு­வ­தும் தொடர் கல்­விக்­குப் பெரும் சவா­லாக அமை­கி­றது. இத­னால் பல குழந்­தை­கள் பள்­ளிக்­குச் செல்­லா­மல் வீடு­க­ளி­லேயே முடங்­கும் நிலை ஏற்­ப­டு­கி­றது. இதற்­குத் தீர்­வாக, கடந்த 2023ம் ஆண்டு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர், என்­னா­லும் எங்­கள் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் நடை­பெற்ற திரா­விட மாடல் அர­சால் புலம் பெயர் தொழி­லா­ளர்­க­ளின் குழந்­தை­க­ளுக்­கா­கத் தொடங்­கப்­பட்ட “தமிழ் மொழி கற்­போம் திட்­டம்” தற்­போது செயல்­பாட்­டில் உள்­ளதா? என்ற சந்­தே­க­மும் ஏற்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்­தந்த மாநில மொழி ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு தமி­ழைக் கற்­றுத்­த­ரும் வகை­யில் கொண்­டு­வ­ரப்­பட்ட இத்­திட்­டத்­தின் செயல் பாடு­களை அரசு மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும். தற்­போ­துள்ள தக­வல் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யில், மொழி சார்ந்த ஆசி­ரி­யர்­கள் நேர­டி­யாக இல்­லா­விட்­டா­லும் கூட ஏஐ (செயற்கை நுண்­ண­றிவு) தொழில்­நுட்­பம் மூல­மா­கப் பள்­ளி­க­ளில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ் வகுப்­ப­றை­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆரம்ப கட்­டத்­தில் புலம்­பெ­யர் மாண­வர்­க­ளின் தாய்­மொ­ழி­யி­லேயே பாடங்­களை ஏஐ மூலம் கற்­பித்து, அவர்­க­ளின் பள்ளி வரு­கையை உறுதி செய்­ய­லாம். அதன்­பி­றகு தமிழ் உள்­ளிட்ட மொழி­க­ளைக் கற்­றுத் தரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யும். இது அவர்­க­ளின் கல்வி அறிவை மேம்­ப­டுத்­து­வது மட்­டு­மன்றி, நல் பழக்க வழக்­கங்­க­ளை­யும், பண்­பாட்­டை­யும் அவர்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வச­தி­யாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது குறித்து திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் சங்க இணைச் செய­லா­ளர் குமார் துரை­சாமி கூறு கையில், “கல்வி என்­பது ஒவ்­வொரு குழந்­தை­யின் அடிப்­படைஉரிமை. அதை உறுதி செய்ய வேண்­டி­யது சமூ­கத்­தின் கடமை. இன்று புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் இல்­லா­மல் தொழில்­கள் இயங்க முடி­யாது என்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஆனால், இங்கு குடும்­ப­மாக வசித்து வரும் தொழி­லா­ளர்­க­ளின் பிள்­ளை­கள், பெற்­றோர் வேலைக்­குச் சென்­று­வி­டும் நிலை­யில் பள்­ளிக்­குச் செல்­லா­மல் வீடு­க­ளி­லேயே முடங்­கு­வது கவ­லை­ய­ளிக்­கி­றது. இது இந்த குழந்­தை­ க­ளின் எதிர்­கா­லத்­தைப் பாதிப்­ப­தோடு, பல்­வேறு சமூக சிக்­கல்­க­ளுக்­கும் வழி­வ­குக்­கும். மொழித்­தடை, முக­வரி சான்­றி­தழ் இல்­லாமை ஆகி­யவை பள்­ளிச் சேர்க்­கைக்கு முக்­கி­யத் தடை­க­ளாக உள்­ளன. அர­சும், நிறு­வ­னங்­க­ளும் இணைந்து ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள் மற்­றும் ஆன்­லைன் வச­தி­கள் மூலம் அவர்­க­ளின் தாய்­மொ­ழி­யி­லும், தமி­ழக பாடத்­திட்­டத்­தி­லும் கல்வி கற்க ஏற்­பாடு செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளின் குழந்­தை­க­ளுக்­குக் கல்வி வச­தியை உறுதி செய்­யக்­கோரி ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் சங்­கம் சார்­பி­லும் ஒன்­றிய, மாநில அர­சு­க­ளுக்­குக்கோரிக்­கை­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 19க்கும் மேற்­பட்ட மாநி­லங்­களை சேர்ந்த தொழி­லா­ளர்­கள் பணி­பு­ரி­கின்ற திருப்­பூர், கோவை மாவட்­டங்­க­ளில் அவர்­க­ளின் குழந்­தை­க­ளுக்­
கான கல்­வியை உறுதி செய்ய அரசு, மாவட்ட நிர்­வா­கம் முன்­வர வேண்­டும். அதற்கு தொழில்­து­றை­யி­னர் முழு ஒத்­து­ழைப்பு வழங்க தயா­ராக உள்­ளோம்” என தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>