<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 29 2026 07:53:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260829T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="29082026-CHN-09" position.sequence="09" ex-ref="29082026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">29.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="24">கோவை – திருப்­பூர் மாவட்ட மக்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­யான</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">ஆனை­மலை  நல்­லாறு  திட்­டத்தை  உட­ன­டி­யாக  நிறை­வேற்­றுக! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">சட்­டப் பே­ர­வை­யில் -– உடு­ம­லைப்­பேட்டை மு.ஜெயக்­கு­மார் வலி­யு­றுத்­தல்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup832238_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup832241_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="03072024CHN02_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="03072024CHN021_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="JayakumarMDMK_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="SudharsanamQu_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக.29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் உடு­ம­லைப்­பேட்டை தொகுதி உறுப்­பி­னர் 
மு.ஜெயக்கு­மார் பேசு­கை­யில், கோவை, திருப்­பூர் மாவட்ட மக்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­யான ஆனை மலை நல்­லாறு திட்­டத்தை உட­ன­டி­யாக நிறை­வேற்­றிட 
வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் குடி­நீர், நக­ராட்சி, உயர் கல்­வித்­துறை, செய்­தித் துறை மானி­யக் கோரிக்கை விவா­தத்­தில் உடு­ம­லைப்­பேட்டை மு.ஜெயக்­கு­மார் பேசி­ய­தா­வது:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘வெங்­கொ­டு­மைச் சாக்­காட்­டில் விளை­யா­டும் தோள் எங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெற்­றித் தோள்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கங்­கை­யைப்­போல் 
காவி­ரி­போல் கருத்­துக்­கள் ஊறும் உள்­ளம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­கள் உள்­ளம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெங்­கு­ருதி தனிற்­க­மழ்ந்து வீரஞ்­செய்­கின்ற தமிழ்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­கள் மூச்­சாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­கள் வாழ்­வும் எங்­கள் வள­மும் மங்­காத தமி­ழென்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சங்கே முழங்கு!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“தலை­வ­ணங்­கிப் பழ­காதே; தலை­நி­மிர்ந்து வாழக் கற்­றுக்­கொள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மூட­நம்­பிக்­கையை நம்­பாதே; பகுத்­த­றிவை நம்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சாதி என்ற சுவரை உடைத்து, சமத்­து­வத்தை நிலை­நாட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மனி­தனை மனி­த­னாக மதிப்­பதே உண்­மை­யான சுய­ம­ரி­யாதை!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என்று தன் வாழ்­நாள் எல்­லாம் சுய­ம­ரி­யா­தைக்­காக வாழ்ந்து, தமி­ழர்­க­ளுக்கு அறி­வூட்­டிய பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­க­ளை­யும், தமி­ழின் பெரு­மை­யைத் தன் நாவால் உல­க­றி­யச் செய்­த­வர்; சாமா­னி­ய­னும் தலை­நி­மிர்ந்து நிற்க வேண்­டும் என்ற சமூ­க­நீ­திக் கனவை அர­சி­ய­லாக்­கி­ய­வர்; அறி­வை­யும், ஜன­நா­ய­கத்­தை­யும் ஆயு­த­மா­கக் கொண்டு ஆட்­சி­யின் வாசலை ஏழை, எளிய மக்­க­ளுக்­கா­கத் திறந்­த­வர்; “கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு” என்ற மூன்­றெ­ழுத்து மந்­தி­ரத்­தால் தன் தம்­பி­மார்­களை வழி­ந­டத்தி, தாய்த் தமிழ்­நாட்­டிற்கு “தமிழ்­நாடு” என்று பெயர் வைத்து, நம்­மை­யெல்­லாம் தலை­நி­மி­ரச் செய்த அறி­வா­சான் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அண்ணா விதைத்த திரா­வி­டச் சிந்­தனை எனும் விதையை ஆட்­சி­யின் வழி­யாக வளர்த்து, ஏழை, எளிய மற்­றும் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் வாழ்­வில் எண்­ணற்ற நலத்­திட்­டங்­க­ளின்­மூ­லம் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர், “வாழும்­போதே வர­லாறு படைத்­தவர்” 
முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏழை, எளிய மக்­க­ளின் வாழ்­வா­தார உயர்வு, பெண்­க­ளுக்­குச் சொத்­து­ரிமை, சமத்­து­வ­பு­ரங்­கள், உழ­வர் சந்­தை­கள், கல்வி, தொழில்­நுட்­பம் என  சமூ­கத்­தின் அனைத்­துத் துறை­க­ளி­லும் புரட்­சி­க­ர­மான 
மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­திய தொலை­நோக்­குப் பார்வை கொண்ட மாபெ­ரும் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞ­ரின் பேனா முனை தீட்­டிய திட்­டங்­க­ ளும், அவர் விதைத்த சமூ­க­நீ­திச் சிந்­த­னை­க­ளும்­தான் இன்­றைய நவீன தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கும், முன்­னேற்­றத்­திற்­கும் வலி­மை­யான அடித்­த­ள­மாக உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­த­லாக தக­வல் தொழில்­நுட்­பத் துறைக்கு தனிக் கொள்­கையை வகுத்து TIDEL Park-களை   உரு­வாக்கி இடுப்­பில் துண்­டைக் கட்­டிக் கொண்டு கும்­பி­டு­கி­ றேன் சாமி என்று இருந்த மக்­களை கெத்­தாக துண்டை தோளில் போட வைத்து, அவர்­க­ளின் குழந்­தை­களை tie அணிந்து TIDEL Park-க்கு அனுப்பி வைத்த ஒப்­பற்ற ஒரே தலை­வர் நவீன தமிழ்­நாட்­டின் சிற்பி முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய ஒன்­றி­யத்­திற்கு வழி­காட்­டி­யாக முதன்­மு­த­லாக விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம், 7 ஆயி­ரம் கோடி ரூபாய் விவ­சா­யக் கடன், கால் நூற்­றாண்­டுக்கு முன்பு 1990, 2000 ஆகிய ஆண்­டு­க­ளி­லேயே மேல் நிலைப் பள்­ளி­க­ளில் கணிப்­பொ­றிக் கல்­வியை அறி­மு­கப்­ப­டுத்­திய கலை­ஞர் அவர்­கள் துயில் கொள்­ளும் திசை நோக்கி வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காலை உண­வுத் திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உடு­ம­லைப்­பேட்­டைக்கு அரு­கில் பூல­வாடி என்­னும் சிறிய கிரா­மத்­தில் பிறந்து, அர­சி­யல் சுவடு அறி­யாத ஏழை விவ­சா­யக் குடும்­பத்­தில், மின்­சார வாரி­யத்­தின் கடை­நிலை ஊழி­ய­ரின் மக­னா­கப் பிறந்து கல்­லூ­ரி­யில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த என்னை, இந்த எளி­ய­வனை நம்பி, எட்­டுத் தொகு­தி­க­ளைக் கொண்ட ஒருங்­கி­ணைந்த திருப்­பூர் மாவட்­டத்­தின் இளை­ஞர் அணி அமைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றிட வாய்ப்­ப­ளித்து, இன்று தமி­ழ­கத்தை வடி­வ­மைத்த பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் போன்ற மாபெ­ரும் தலை­வர்­கள் இருந்த இந்த அவை­யில் சாதா­ரண எளிய தொண்­ட­னான நான்--.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு எத்­த­னையோ பேர் அங்கே சொன்­னீர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சாதா­ரண எளிய தொண்­ட­னாக இருக்­கக் கார­ண­மாக இருந்த திரா­விட மாடல் ஆட்­சி­யின்­மூ­லம் மக­ளிர் விடி­யல் பய­ணம், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, புது­மைப் பெண், நான் முதல்­வன், தமிழ்ப் புதல்­வன், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், இல்­லம் தேடிக் கல்வி போன்ற மகத்­தான திட்­டங்­க­ளைத் தந்து, ஏழை­யெ­ளிய மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­து­வ­தையே ஆட்­சி­யின் முதன்மை நோக்­க­மா­கக் கொண்டு, ‘மக்­க­ளுக்­காக ஆட்சி, மக்­க­ளின் நல­னுக்­கா­கவே ஒவ்­வொரு திட்­ட­மும்’ என்ற பாதை­யில் அய­ராது உழைத்து, இந்­தி­யா­வில் யாரும் செய்­தி­டாத வகை­யில், இரட்டை இலக்­கப் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­குத் தமிழ்­நாட்டை உயர்த்தி, நம்­மை­யெல்­லாம் வழி­ந­டத்­தும், இந்­தி­யா­வி­லேயே முதன் முறை­யாக பள்­ளிக் குழந்­தை­க­ளுக்கு காலை உண­வுத் திட்­டம் தந்து, ஏழைப் பிள்­ளை­க­ளின் பசி­யாற்­றிய திரா­விட மாடல் நாய­கர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த எளி­ய­வ­னுக்­காக உடு­ம­லைப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் இரண்டு இடங்­க­ளில் பரப்­புரை செய்த, இள­மைத் துடிப்­பில் உதித்த செங்­க­திர், இனத்­தின் உரிமை காக்­கும் மாவீ­ரன், அஞ்சா நெஞ்­சு­டன் களத்­தில் நிற்­கும் தலை­வன், அநீ­திக்கு எதி­ராய் முழங்­கும் அக்­னிக் குரல், பெரி­யார் விதைத்த பகுத்­த­றிவு நெருப்பு, அண்ணா காட்­டிய சமத்­துவ வெளிச்­சம், கலை­ஞர் வடி­வ­மைத்த நவீன தமி­ழ­கத்­தைக் கைப்­பி­டித்து முன்­னெ­டுக்­கும் இளைய தலை­வன், வெற்றி வரி­னும் தலைக்­க­னம் அடை­யாது, வீழ்ச்சி வரி­னும் பின்­வாங்­கித் தள­ராது, தமி­ழர் நலமே எனது நெஞ்­சின் மொழி, தொண்­ட­ரின் பலமே எனது பயண வழி என்று வீராதி வீர­னாய் உலா வரும், தமிழ்­நாட்­டின் விடி­ய­லா­கும் இளைய நம்­பிக்கை, எதிர்ப்­பு­கள் எத்­தனை வரி­னும் அஞ்­சாது, எரி­ம­லை­யாய் எழுந்து நிற்­கும் எங்­க­ளின் ‘ஒரே தல’, எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனக்கு ஆலோ­சனை கூறி என்னை வழி­ந­டத்­தும் கழ­கத் துணைப் பொதுச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் மு.பெ. சாமி­நா­தன் அவர்­க­ளுக்­கும், மக்­கள் மன­தில் இடம் பெற்­றி­ருக்­கும் மண்­ட­லப் பொறுப்­பா­ளர்­கள் அண்­ணன் அர. சக்­க­ர­பாணி அவர்­க­ளுக்­கும், செந்­தில்­பா­லாஜி அவர்­க­ளுக்­கும், அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி அவர்­க­ளுக்­கும், மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர், பொள்­ளாச்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வ­ர­சாமி அவர்­க­ளுக்­கும், அன்­ப­கம் கலை அவர்­க­ளுக்­கும், அன்­ப­கம் செந்­தில் Sir அவர்­க­ளுக்­கும், தொகு­திப் பொறுப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றிய சகோ­த­ரர் இன்பா ரகு அவர்­க­ளுக்­கும், ஈரோடு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிர­காஷ் அவர்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரவு பகல் பாராது உழைத்து, என்னை வெற்றி பெறச் செய்த உடு­மலை சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர் களுக்­கும், மாவட்­டக் கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், எந்­தப் பிர­தி­ப­ல­னும் எதிர்­பா­ரா­மல் கழ­கத்­திற்­காக உழைக்­கும் தியாக மற­வர்­க­ளான திரா­விட முன்­னேற்­றக் கழக உடன்­பி­றப்­பு­க­ளுக்­கும், கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், எனக்கு வாக்­க­ளித்த உடு­ம­லைப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகுதி மக்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உடு­மலை நாரா­யண கவி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பிறந்த மண்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உடு­மலை என்­கிற உன்­னத மண்­ணில் இலக்­கி­யத்­தில் முத்­திரை பதித்து, சிந்­த­னை­யில் சிக­ரம் தொட்ட பகுத்­த­றி­வுக் கவி­ரா­யர் எனப் போற்­றப்­ப­டும் உடு­மலை – நாரா­ய­ண­கவி பிறந்த மண்­ணில் பிறந்­த­வன் என்­ப­தி­லும், உடு­ம­லை­யின் பொக்­கி­ஷம், உழைப்­பின் திரு­வு­ரு­வம், சிறு­பான்மை மக்­க­ளின் மூச்­சா­கச் செயல்­பட்­ட­வர், திரா­வி­டத்­தின் திர­ளாக வாழ்ந்த எஸ்.ஜே.சாதிக்­பாட்சா அவர்­க­ளும், உடு­மலை தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பணி­யாற்றி, தொகு­தி­ யின் வளர்ச்­சிக்கு அடித்­த­ள­மிட்ட செல்­வ­ராஜ் ஆகி­யோ­ரும் வாழ்ந்த மண்­ணில் வாழ்­ப­வன் என்­ப­தில் பெருமை கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேற்­குத் தொடர்ச்சி மலை­யின் அணி­க­ல­னாய், மழை­யால் மண் தழுவி அசைந்து வளம் கொழிக்­கும், மேற்கே ஆனை மலை, கிழக்கே பழனி மலை, தெற்கே திரு­மூர்த்தி மலை, வடக்கே செஞ்­சேரி மலை ஆகிய இவற்­றுக்­கி­டை­யில் அமைந்­தி­ருக்­கும் அம­ரா­வதி மண்­ணி­லி­ருந்து, “ஏங்க, ஏனுங்க” என்று தமி­ழுக்கே பெருமை சேர்க்­கும் கொங்­குத் தமி­ழில் பேசி, வாழை­யோடு, விண்­முட்­டும் கமு­கும், தேன் சொட்­டும் கரும்­பும், உயிர் கொடுக்­கும் நெல்­லும் வளர்க்­கும் உழ­வர்­க­ளா­க­வும், விவ­சா­யத் தொழி­லா­ளர்­க­ளா­க­வும் வேளாண்மை செய்­யும் மூத்­த­குடி மக்­க­ளின் எளிய மக்­க­ளின் பிர­தி­நி­தி­யாக, இங்கு வந்து நிற்­ப­தில் பெரு உவகை கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உடு­ம­லைப்­பேட்டை சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் வளர்ச்­சிக்கு கீழ்க்­கா­ணும் திட்­டங்­களை நிறை­ வேற்­றித் தர வேண்­டு­கி­றேன்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை, திருப்­பூர் மாவட்ட மக்­க­ளின் நீண்ட காலக் கோரிக்­கை­யான ஆனை­ ம­லை -­நல்­லாறு திட்­டத்தை உட­ன­டி­யாக நிறை­வேற்றி, மக்­க­ளின் நீண்­ட­
கா­லக் கோரிக்­கையை நிறை ­வேற்ற வேண்­டு­கி­றேன். அதே­போல், பரம்­பிக்­கு­ளம்-­ஆ­ழி­யாறு பாச­னத் திட்­டத்­தின்-Parambikulam-Aliyar Project (PAP) கால்­வாய்­கள் மற்­றும் உள்­கட்­ட­மைப்­பு­க­ளைப் புதுப்­பிக்க ரூ.4,500 கோடி மதிப்­பீட்­டில் விரி­வான திட்ட அறிக்கை (DPR) 
தயா­ரிக்­கப்­பட்டு, அர­சின் பரி­சீ­ல­னை­யில் உள்­ளது. அதை உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்­டும். அமைச்­சர் அவர்­கள், இந்­தக் கோரிக்கை வரு­கி­ற­போது, அதனை concrete தள­மாக அமைப்­ப­தற்கு DPR கொடுத்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­னார்­கள். அமைச்­சர் அவர்­கள் திருப்­பூ­ருக்கு வந்­த­போது ஒரு பேட்டி கொடுத்­தி­ருந்­தார்­கள். அப்­போது pipeline அமைப்­ப­தா­கச் சொல்­லி­யி­ருக்­கின்­றார்­கள். இது விவ­சா­யி­க­ளி­டம் ஒரு மிகப்பெ­ரிய சந்­தே­கத்தை எழுப்­பி­யி­ருக்­கி­றது. எனவே, நீங்­கள் அதனை concrete ஆக அமைக்­கி­றீர்­களா அல்­லது pipeline ஆக அமைக்­கி­றீர்­களா என்­பதை அரசு தெளி­வு­ப­டுத்த 
வேண்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், PAP கால்­வாய்  பாச­னம் நடை­பெ­றும் பகு­தி­க­ளில், இப்­பொ­ழுது கடு­மை­யான வறட்சி நிலவி வரு­கி­றது. இத­னால் ஆடு, மாடு உள்­ளிட்ட கால்­ந­டை­க­ளுக்­குக்­கூட போதிய நீர் கிடைக்­கா­மல் விவ­சா­யி­கள் கடு­மை­யாக சிர­மப்­ப­டு­கின்­ற­னர். எனவே, PAP, பரம்­பிக்­கு­ளம்-­ஆ­ழி­யாறு திட்­டத்­தில் நீர் இருப்­பைக் கருத்­தில்­கொண்டு, இரண்­டாம் மண்­டல பாச­னத்­திற்கு உட­ன­டி­யாக இரண்டு சுற்­று­கள் தண்­ணீர் திறந்­து­விட வேண்­டும். மேலும், மானி­யக் கோரிக்­கை­யில் பி.ஏ.பி. கால்­வாய்­க­ளைத் தூர்­வா­ரு­வ­தற்­காக அறி­விக்­கப்­பட்ட ரூ.14.98 கோடி நிதியை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும். ஏனென்­றால், தற்­போது தண்­ணீர் மிக­வும் குறை­வாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது இந்த கால­கட்­டத்­தில் பார்த்­தீர்­க­ளென்­றால், 5 சுற்­று­கள் தண்­ணீர் திறந்­து­ வி­டு­கிற அள­விற்கு மழை பெய்­தி­ருந்­தால் இருந்­தி­ருக்­கும். ஆனால், இப்­போது 2 சுற்­று­கள் தண்­ணீர் திறந்­து­ வி­டு­வதே கஷ்­ட­மாக இருக்­கி­றது. அந்த 2 சுற்­று­கள் தண்­ணீர் திறந்­து­வி­டு­கி­றீர்­கள் என்­றா­லுமே எல்லா வாய்க்­கால்­க­ளும் மண்­மூடி கிடக்­கி­றது. கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் 10 கோடி ரூபாய் கொடுத்­தார்­கள். இப்­போது அதற்கு 14.98 கோடி ரூபாய் நீங்­கள் கொடுப்­ப­தாக, உங்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் தண்­ணீ­ரைத் திறந்­து­விட்­டா­லும், வாய்க்­கா­லைத் தூர்­வா­ரா­மல் அந்த தண்­ணீர் கடை­மடை வரை­யி­லும் வந்து சேராது. அத­னால் 14.98 கோடி ரூபாயை உட­ன­டி­யாக விடு­வித்து போர்க்­கால அடிப்­ப­டை­யில், கால்­வாய்­க­ளைத் தூர்­வாரி சீர­மைக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பயிர்க்­ க­டன்­களை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முழு­மை­யாக தள்­ளு­படி செய்க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போது கொங்கு மண்­ட­லப் பகு­தி­க­ளில், எனக்­குப் பக்­கத்­தில் இருக்­கிற வைத்­தி­லிங்­கம் அண்­ணன் அவர்­கள்­கூட, 400 அடிக்­குக்­கீழ் தண்­ணீர் போய்­விட்­டது என்று சொன்­னார்­கள். ஆனால், இப்­போது எங்­கள் area-வில் எல்­லாம் கொங்கு மண்­ட­லத்­தைப் பொறுத்­த­வரை 2,000 அடிக்­குக்­கீழ் தண்­ணீர் சென்­று­விட்­டது. ஆழ்­து­ளைக் கிணறு ஒன்று அமைத்து, borewell ஒன்று அமைத்து செய்ய வேண்­டு­மென்­றால், ரூ.20 இலட்­சம் வரை ஒரு விவ­சா­யிக்கு தேவைப்­ப­டு­கி­றது. எனவே, கடும் வறட்சி நில­வக்­கூ­டிய இந்த நேரத்­தி­லா­வது, நீங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் அறி­வித்­த­து­போல், முழு­மை­யாக பயிர்க் கடன்­களைதள்­ளு­படி செய்ய வேண்­டு­மென்று தங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல் 60,120 விவ­சா­யி­கள் tatkal மின் இணைப்­பு­கள் வேண்டி விண்­ணப்­பித் ­துள்­ளார்­கள். சுமார் 1,500 கோடி ரூபாய் அதற்கு பணம் கட்­டி­யி­ருக்­கி­றார்­கள். இப்­போது 5 ஏக்­கர் இருக்­கி­றது என்­றால் ஒரு borewell இருக்­கி­றது என்­றால், ஒரு நாளைக்கு ஓடி­யது என்­றால் அது 1,000 லிட்­டர், 2,000 லிட்­டர் ஓடு­வ­தற்­குத்­தான் இருக்­கும். ஏனென்­றால், 2,000 அடிக்­கும்­கீழ் தற்­போது தண்­ணீர் சென்­று­விட்­டது. அத­னால், tatkal மின் இணைப்­புத் திட்­டத்தை உட­ன­டி­யாக, அதற்கு முன்­னு­ரிமை கொடுத்து, tatkal மின் இணைப்­புத் திட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்­டு­கி­றேன். அதே­போல், ‘பிள்­ளை­யைப் பெத்தா 
கண்­ணீரு, தென்­னையை வளர்த்தா இள­நீரு’ என்று எங்­கள் area-வில் ஒரு பழ­மொழி உண்டு. ஏனென்­றால், தென்னை விவ­சா­யி­ கள் உள்ள area. ஆனால், இன்­றைக்கு இருக்­கிற சூழ்­நிலை அவ்­வாறு கிடை­யாது. இன்­றைக்கு கடு­மை­யான தண்­ணீர் தட்­டுப்­பா­ டும் இருப்­ப­த­னால் விவ­சா­யி­கள் லாரி­கள் மூலம் தண்­ணீர் கொண்­டு­வந்து, தென்னை மரங்­க­ளைக் காப்­பாற்­றும் சூழல் நிலவி வரு­கி­றது. எனவே, கடும் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள தென்னை மரங்­கள், நீங்­கள் அங்கு வந்து பார்த்­தீர்­க­ளென்­றால் தெரி­யும். பல இடங்­க­ளில்தென்னை மரங்­கள் எல்­லாம் காய்ந்து தொங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது, விழுந்­து­விட்­டது. கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளின் தென்னை மரங்­க­ளுக்கு உறு­தி­யாக வறட்சி நிவா­ர­ண­மும், இழப்­பீ­டும் வழங்க வேண்­டு­மென்று கேட்­டுக் 
கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உடு­ம­லைத் தொகு­திக்­குட்­பட்ட கோமங்­க­லம் புதூ­ரில் NHAI மூலம் ஒரு tollgate அமைத்­தி­ருக்­கி­றார்­கள். ஒரு மாதத்­திற்கு முன்­பு­தான் திறந்­தி­ருக்­கி­றார்­கள். இந்த tollgate-ல் உடு­ம­லை-­பொள்­ளாச்சி செல்­லக்­கூ­டிய வாக­னங்­கள், NHAI அமைத்த slip road-ல் 2.5. கி.மீ. மட்­டும்­தான் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். இதற்­காக NHAI ஒரு வழிப்­பா­தைக்கு 155 ரூபா­யும், return வரும்­போது 80 ரூபா­யும் என்று மொத்­த­மாக 235 ரூபாய் வசூ­லிக்­கி­றார்­கள். இது­சம்­பந்­த­மாக பொள்­ளாச்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், நானும் Collector அவர்­க­ளைச் சென்று சந்­தித்­தோம். அந்த Collector எங்­க­ளி­டம் எது­வும் இல்லை, NHAI-ல்தான் பேச வேண்­டு­மென்று சொன்­னார். துறை அமைச்­சர் அவர்­கள், ஒன்­றி­யத்­தில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ருக்கு ஒரு அழுத்­தம் தந்து, உடு­ம­லை-­பொள்­ளாச்சி செல்­லக்­கூ­டிய வாக­னங்­க­ளுக்கு முழு வரி­வி­லக்கு, tollgate விலக்கு அளிக்க வேண்­டும். இல்­லை­யென்­றால் அந்த tollgate-ஐ அங்­கி­ருந்து ஒரு 2 கி.மீ. தள்ளி அமைத்­தீர்­கள் என்­றால் இந்­தப் பிரச்­சினை தீர்ந்­து­வி­டும். எனவே, இதை­யும் நீங்­கள் பரி­சீ­லிக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேற்கு மண்­ட­லத்­தைப் பொறுத்­த­வரை, கொங்கு மண்­ட­லத்­தைப் பொறுத்­த­வரை, rekla பந்­த­யம் என்­பது. காலங்­கா­ல­மாக நடந்து கொண்­டி­ருப்­ப­து­தான். ஆனால், நேற்று பொள்­ளாச்சி பகு­தி­யில், rekla பந்­த­யம் நடக்­கி­ற­போது, அதி­கா­லை­யில் 500 காவ­லர்­கள் சென்று, rekla பந்­த­யம் 
நடத்­தக்­கூ­டாது என்று சொல்லி, தடுத்து நிறுத்­தி­ விட்­டார்­கள். இதைப்­போல எப்­போ­துமே ஒரு தலை­வ­ரோட பெய­ரிலோ, கட்­சித் தலை­வ­ரோட பெய­ரிலோ அல்­லது பொது, கிரா­மங்­க­ளில் நடக்­கக்­கூ­டிய அந்த rekla பந்­த­யத்தை இவ்­வாறு 500 காவ­லர்­க­ளைக் கொண்டு தடை செய்­தது அந்­தப் பகு­தி­யில் மிகுந்த பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இதற்கு தங்­க­ளு­டைய கருத்து என்ன என்­ப­தை­யும் விளக்க வேண்­டு­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உடு­மலை–-பல்­ல­டம் சாலையை
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நான்கு வழிச்­சா­லை­யாக ஆக்­குக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல் இன்­னொன்று, பொள்­ளாச்­சித் தொகுதி, பொள்­ளாச்சி தெற்கு, பொள்­ளாச்சி வடக்கு, ஆனை­மலை, கிணத்­துக்­க­டவு ஆகிய ஊராட்சி ஒன்­றி­யங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு, புதிய கூட்­டுக் குடி­நீர்த் திட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்­டும். பெரி­ய­கோட்டை, குருஞ்­சேரி, பெதப்­பம்­பட்டி மற்­றும் குடி­மங்­க­லம் ஒன்­றி­யத்­தில் உள்ள ஊராட்­சி­களை உள்­ள­டக்கி புதிய கூட்­டுக் குடி­நீர்த் திட்­டத்தை செயல்­ப­டுத்­தித் தர வேண்­டும். உடு­மலை -– பல்­ல­டம் இரு­வ­ழிச் சாலையை நான்கு வழிச்­சா­லை­யா­கத் தரம் உயர்த்­தித் தர வேண்­டும். உடு­ம­லை­யில் அரசு engineering college ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொள்­ளாச்சி தெற்கு ஒன்­றி­யத்­தில் விவ­சாய பொருட்­கள், தென்­னைப் பொருட்­கள், கால்­ந­டை­கள் மொத்த வணிக பயன்­பாட்­டிற்கு சந்தைவளா­கம்அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குடி­மங்­க­லம் பகு­தி­யில் பட்­டுப்­பூச்சி பதப்­ப­டுத்­தப்­ப­டும் ஆலை, பட்டு வளர்ச்­சித் துறை சார்­பாக அமைத்­துத் தர வேண்­டும் என்றுகேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளாக, பள்­ளிக் கல்­வித் துறை­யில் மட்­டும் இரண்­டே­யி­ரண்டு விஷ­யங்­கள்  கொரோனா பெருந்­தொற்­றுக் காலத்­தில் ஏற்­பட்ட கற்­றல் இடை­
வெ­ளியை ஈடு­கட்ட உல­கமே திண­றி­ய­ போது, இந்­தி­யா­விற்கு வழி­காட்­டி­யாக உரு­வெ­டுத்­த­து­தான் இல்­லம் தேடி கல்­வித் திட்­டம் ரூ.704.76 கோடி செல­வில் தன்­னார்­வ­லர்­க­ளைக் கொண்டு மாண­வர்­க­ளின் குடி­யி­ருப்­பு­க­ளுக்கே சென்று கற்­றல் கல்வி வழங்கி, இலட்­சக்­க­ணக்­கான குழந்­தை­க­ளின் கல்­வி­யைப் பாது­காத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், நக­ராட்சி நிர்­வா­கத் துறை­யில், உடு­ம­லைப்­பேட்­டைக்கு பக்­கத்­தி­லி­ருக்­கக்­கூ­டிய கிரா­மங்­க­ ளான கணக்­கம்­பா­ளை­யம், போடிப்­பட்டி, கண்­ண­ம­நா­யக்­க­னூர், சின்­ன­வீ­ரம்­பட்டி ஊராட்­சி­களை உடு­மலை நக­ராட்­சி­யோடு இணைக்க வேண்­டும் என்று கூறி பள்­ளி­கள், அர­சுக் கல்­லூ­ரி­கள், தமி­ழ­கப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் காலி­யாக இருக்­கும் ஆசி­ரி­யர் பணி­யி­டங்­களை உட­ன­டி­யாக நிரப்ப வேண்­டும் என்­றும், அரசு கல்­லூ­ரி­க­ளில் பணி­யாற்­றும் கௌரவ விரி­வு­ரை­ யா­ளர்­க­ளுக்கு UGC நிர்­வ­கித்­துள்ள ரூ.57,000. அந்­தச் சம்­ப­ளத்தை நிர்­ண­யிக்க வேண்­டும் என்று கூறி, அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழ­கம் உள்­ளிட்ட அரசு உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 15 ஆண்­டு­க­ளுக்கு மேல் பணி­பு­ரிந்து வரு­ப­வர்­கள், முனை­வர் பட்­டம் பெற்று அர­சின் பல்­க­லைக்­க­ழ­கத் தகு­தித் தேர்­வில் TRB, தேர்ச்சி அடைந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு தமிழ்­நாடு அர­சாணை நிலை எண் 2406 தேதி 31-.10.-1981—ன் படி முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் ஆசி­ரி­யர் பணி வழங்க இந்த அரசு முன்­வ­ருமா என அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், அரசு ஊழி­யர்­க­ளும், ஆசி­ரி­யர்­க­ளும், அந்­தப் பழைய ஓய்­வூ­திய திட்­டம், திரா­விட மாடல் ஆட்­சி­யில் கொண்டுவந்­தது. அதற்கு அரசு ஓர் உரிய விளக்­கத்­தைக் கொடுத்து அவர்­க­ளு­டைய  சந்­தே­கங்­க­ளைத் தீர்த்து வைக்­கும்­படி கேட்டு, இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­ பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு உடு­ம­லைப்­பேட்டை மு.ஜெயக்­கு­மார் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>