<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="617,66,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 30 2026 00:47:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260830T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="30082026-MDU-05" position.sequence="05" ex-ref="30082026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">சிந்தனையைத் தூண்டிய திராவிட எழுத்துகள்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="44">வெள்ளை மாளிகையில்..!  பேரறிஞர் அண்ணா !</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="AnnaPhotobw2_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Annabw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ம்பி! அமெ­ரிக்­கா­வின் ஆட்சி பீடம் உள்ள இடத்­துக்கு ‘வெள்ளை‘ மாளிகை என்று பெயர் இருக்­கி­றது. ஆனால் அந்த ஆட்­சி­யிலே உள்­ள­வர்­கள் அனை­வ­ரின் நிற­மும் வெள்­ளை­யல்ல. கரு­நி­றம் கொண்­ட­வர்­கள், நீக்ரோ (ஆஃப்­ரோ-­அ­மெ­ரிக்க) மக்­கள். நிறம் கருப்பு, இனம் நீக்ரோ, பூர்­வீ­கம் ஆப்­பி­ரிக்கா கண்­டம். ஆனால் அவர்­கள் அமெ­ரிக்­கர்­கள். சட்­டம் சொல்­லு­கி­றது. ஆபி­ர­காம் லிங்­கன்,  அவர்­க­ளும் 
அமெ­ரிக்­கர்­களே என்று வார்த்­தை­களை வீசி மட்­டு­மல்ல, ஒரு பெரிய பயங்­க­ர­மான 
உள்­நாட்­டுப் போரே நடத்­தி­டக் கூறிட வேண்டி நேரிட்­டது. “சரி” என்­ற­னர். உதடு அசைந்­தது தம்பி..உதடு! உள்­ளம் இருக்­கி­றதே! அதிலே புற்­ற­ரவு புகுந்­து­கொண்­டு­தான் இருக்­கி­றது. சாக­வில்லை. சாக­டிக்­க­வும் முடி­ய­வில்லை.  அத­னைச் சாக­டிக்­கத் துணிந்து கிளம்­பிய கென்­ன­டி­யைக் கொடி­யோர் கொன்று விட்­ட­னர் பத­றப் பதற! பக்­கம் இருந்த அவர் துணை­வி­யார் ஜாக்­கு­லின் துடிக்க..துடிக்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த வெள்ளை மாளி­கை­யில் ஒரு கருப்பு மனி­தரை (ஆஃப்­ரோ-­அ­மெ­ரிக்­கர்), நீக்­ரோவை அதி­ப­ராக அம­ரச் செய்து பார்க்­கி­றார், ‘ மனி­தன்’ (The Man) எனும் 
ஏடு எழு­தி­யுள்ள இர்­விங் வாலாஸ்(Irving Wallace) என்­ப­வர். அந்­தப் புத்­த­கத்­தைப் 
படித்­த­தி­லி­ருந்து எனக்கு ஒரே ஆவல், உன்­னி­டம் கூற­வேண்­டும் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்­கா­வில் முன்பு, நீக்­ரோக்­கள் உயி­ருள்ள ஜீவன்­கள் அல்ல, உரி­மைப் பெற்ற மாந்­தர் என்­றல்ல, வெறும் உடை­மை­கள் என்றே கரு­தப்­பட்டு வந்­தது. 
ஆப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து நீக்­ரோக்­களை வேட்­டை­யா­டிப் பிடித்­துக் கொண்டு வந்து அமெ­ரிக்­கா­வில் விற்­றுப் பொருள் குவித்து வந்­த­னர் கொடி­ய­வர்­கள். இந்­தச் 
சூழ்­நி­லை­யில் வெள்ளை மாளி­கைக்கு ஒரு கரு­நி­றத் தலை­வர் என்­கி­ற­போ­து­தான் வியப்­பு­டன் கூடிய வெட­வெ­டப்பு எடுக்­கி­றது நிற­வெ­றி­யர்­க­ளுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்­கக் குடி­ய­ர­சுத் தலை­வர் தமது பத­விக்­கா­லத்­தில் இறந்­து­ப­டு­வா­ரா­னால், உட­ன­டி­யா­கத் துணைத் தலை­வர், குடி­ய­ரசு தலை­வ­ராக்­கப்­ப­டு­வார். இது அங்கு மரபு.  குடி­அ­ர­சுத் தலை­வ­ரும் இறந்­து­பட்­டால் துணைத்­த­லை­வர். துணைத் தலை­வ­ரும் இறந்­து­பட்­டால்? பாரா­ளு­மன்­றத் தலை­வர். அவ­ரும் இறந்­து­பட்­டால்? 
பாரா­ளு­மன்ற மேல­வைத் தலை­வர். இப்­படி ஒரு மரபு பற்றி ஆசி­ரி­யர் குறிப்­பிட்­டுக் கொண்டு, தமது கற்­ப­னை­யைக் கட்­டி­யி­ருக்­கி­றார். அப்­படி ஒரு சூழ்­நி­லையை 
‘மனி­தன்’ என்ற ஏடு உரு­வாக்­கிக் காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திடீ­ரென்று அமெ­ரிக்­கக் குடி­ய­ர­சின் துணைத்­த­லை­வர் இறந்­து­வி­டு­கி­றார். 
குடி­ய­ர­சுத் தலை­வர், நண்­பர் இறந்­த­தால் ஏற்­பட்ட துக்­கத்­தைத் துடைத்­துக் கொள்­ள­வும் நேர­மின்றி, ஐரோப்­பா­வில் பிரான்ஸ் நாட்­டில் ஓர் ஊரில், சோவி­யத் அதி­ப­ரைச் 
சந்­தித்து ஆப்­பி­ரிக்­கப் பிரச்­சினை பற்­றிப் பேச­வேண்டி ஏற்­பட்­டு­வி­டு­கி­றது. அந்த மாநாட்­டுக்­குச் சென்­றி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்­கத் தலை­ந­க­ரில், மற்ற அமைச்­சர்­கள், உய­ர­தி­கா­ரி­கள் இருக்­கின்­ற­னர். அவர்­க­ளு­டன் மாநாட்டு இடை­வே­ளை­யில் தொலை­பேசி மூலம் பேசு­கி­றார் 
குடி­ய­ர­சுத் தலை­வர். தொலை­பேசி நின்­று­வி­டு­கி­றது. ஏதோ இயந்­தி­ரக் கோளாறு? பதை­ப­தைக்­கி­றார்­கள் பாதி­யிலே பேச்சு நின்­று­விட்­டதே என்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அய்யோ” என்று அவர்­கள் அல­றும்­ப­டி­யான செய்தி வரு­கி­றது தொலை­பேசி மூலம்! நம்­ப­மு­டி­ய­வில்லை.. அதிர்ச்சி.. குழப்­பம்.. கலக்­கம். தொலை­பேசி தெரி­விக்­கி­றது, குடி­ய­ர­சுத் தலை­வர் திடீ­ரென இறந்­து­விட்­டார்! மாநாடு நடைபெற்­றுக் கொண்­டி­ருந்­த­போது, மாளி­கை­யின் மேற்­ப­குதி இடிந்து விழுந்­து­விட்­டது. அந்த இடத்­தி­லேயே குடி­ய­ர­சுத் தலை­வர் இறந்து  போனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குடி­ய­ர­சுத் துணைத்­த­லை­வரோ ஏற்­க­னவே மறைந்­து­போ­னார். தலை­வரோ பிரான்­சிலே பிண­மா­கிக் கிடக்­கி­றார். எத்­தனை சோகத்­தைத் தாங்­கிக் கொள்ள 
முடி­யும். தத்­த­ளித்­த­னர். அந்த தத்­த­ளிப்­புக்கு இடை­யி­லேயே ‘மரபு’ குறிப்­பி­டு­கி­ற­படி, பாரா­ளு­மன்­றத் தலை­வர் குடி­ய­ர­சுத் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்க வேண்­டுமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கூப்­பி­டுக அவரை! என்­றார் ஓர் அமைச்­சர். “அவர் எங்கே இங்கே இருக்­கி­றார்? அவ­ரு­மல்­லவா, மாநாட்­டில் கலந்­து­கொள்ள குடி­யர­சுத் தலை­வ­ரு­டன் சென்­றி­ருக்­கி­றார்” என்று விவ­ர­ம­ளிக்­கி­றார் வேறொ­ரு­வர். மீண்­டும் பர­ப­ரப்பு. பதைப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொலை­பேசி வேலை செய்­கி­றது. அடி­பட்­ட­வர்­க­ளில் அவ­ரும் ஒரு­வர். ஆனால் உயிர் போக­வில்லை. மருத்­து­வ­ம­னை­யில் கிடத்­தப்­பட்­டி­ருக்­கி­றார் என்று செய்தி கிடைக்­கி­றது. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தைரி­யத்­தைத் தரு­வித்­துக் கொண்­டி­ருக்­கும்­போதே அவர்­கள் அனை­வ­ரை­யும் அடித்­துக் கீழே தள்­ளி­வி­டத்­தக்க தாக்­கு­தலை நடத்­திற்று தொலை­பேசி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அவ­ரும் இறந்­து­விட்­டார் மருத்­து­வ­ம­னை­யில்” என்ற செய்­தி­யைத் தெரி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குடி­ய­ர­சுத் தலை­வர், துணைத்­த­லை­வர், பாரா­ளு­மன்­றத் தலை­வர் மூவ­ரு­மல்­லவா மறைந்­த­னர். இனி, குடி­ய­ர­சுத் தலை­வ­ராக வேண்­டி­ய­வர் பாரா­ளு­மன்ற 
மேல­வைத் தலை­வர் என்­றார் ஒரு­வர். அவர் யார்? என்ற நினைப்­பு­மற்ற நிலை­யில் சோகத்­து­டன், “ஆம்” என்­ற­னர் மற்­றை­யோர். தம்பி.. அந்த மேல­வைத் தலை­வர்­தான் டக்­ளஸ் டில்­மன் என்ற நீக்ரோ. செனட் சபை­யின் தலை­வர் டக்­ளஸ் டில்­மன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மரபு இருக்­கி­றதே? தலை­வர், துணைத்­த­லை­வர், பாரா­ளு­மன்­றத் தலை­வர் 
ஆகி­யோர் இறந்­து­ப­டின், செனட் சபைத் தலை­வரே குடி­ய­ர­சுத் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யைத் தீட்டி, ஒரு நீக்­ரோ­வைக் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆக்­கிக் காட்­டி­யுள்­ளார் ஆசி­ரி­யர் பார்த்­த­னையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மர­பின்­படி உயர்­நீ­தி­மன்­றத் தலை­வர் வரு­கி­றார். பத­விப் பிர­மா­ணம் செய்து வைக்­கப்­ப­டு­கி­றது.“அமெ­ரிக்க நாட்­டுக்கு அமைந்­துள்ள அர­சி­யல் சட்­டத்­திட்­டத்­தை­யும் ஒழுங்­கை­யும் காப்­பாற்­றி­யும் அதற்­குக் கட்­டுப்­பட்­டும் நான் ஆட்சி நடத்தி 
வரு­வேன்“ என்று உறு­தி­மொழி கூறு­கி­றார் டில்­மன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அமெ­ரிக்க குடி­ய­ர­சுத் தலை­வரே.. வாழ்க! கர்த்­தர் தங்­களை- அமெ­ரிக்­கக் 
குடி­ய­ர­சுத் தலை­வ­ராக அம­ரும் முதல் நீக்­ரோ­வைக் காத்­தி­டு­வா­ராக!” என்று 
உயர்­நீ­தி­பதி கூறு­கி­றார். சூழ நிற்­கி­றார்­கள் வெள்ளை இனத்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘வெள்ளை மாளி­கை­யில்’ என்ற நூலில் பேர­றி­ஞர் அண்ணா இதனை 
அழ­காக விவ­ரித்து, இந்­தி­யா­வில் நில­வும் தீண்­டா­மையை, தில்­லைக் கோவில் தீட்­சி­தர்­கள் செயல்­பா­டு­கள் வரை சுட்­டிக்­காட்டி எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இர்­விங் வாலாஸ் கற்­ப­னை­யில் எழு­திய மனி­தன் என்ற புதி­னத்­தின் உட்­கருத்து, பின்­னா­ளில் உண்­மை­யாக நடந்­தே­றி­யது. கறுப்­பி­னத்­த­வர் ஒரு­வர் நேர­டி­யா­கவே அமெ­ரிக்க மக்­க­ளால் குடிய­ர­சுத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.  அப்­போது அண்ணா இல்லை. அவர் உரு­வாக்­கிய தி.மு.கழ­கம் வலு­வாக இருக்கிறது. அத­னைக் கட்­டிக்­காத்த கலை­ஞ­ரும் இருந்­தார். அமெரிக்­கா­வின் முதல் ஆஃப்­ரோ-­அ­மெ­ரிக்க குடி­ய­ர­சுத் தலை­வ­ரா­னார் பராக் ஒபாமா. அவரை நேரில் சந்­தித்து உரை­யா­டி­னார் திரா­விட இயக்கச் சிந்­த­னை­யா­ள­ரான முன்னாள் ஒன்­றிய அமைச்­சர் முர­சொலி மாறன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>