<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,410,609,823" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 30 2026 00:47:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260830T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="30082026-MDU-05" position.sequence="05" ex-ref="30082026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">குடந்தை, கரூரில் இருந்து நேபாளம் சென்ற 40 பேரின் குடும்பத்தினர் கண்ணீர்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">பத்திரமாக மீட்டுக் கொண்டு வரக் கோரிக்கை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">தஞ்சை, ஆக.30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">தஞ்சை மாவட்­டம் கும்­ப­கோ­ணம் அடுத்த நாகேஸ்­வ­ரன் தெற்கு வீதி­யில் செயல்­ப­டும் சூப்­பர் யாத்ரா ஏஜென்சி மூலம் நேபா­ளத்­துக்கு 57 பேர் ஆன்­மீக சுற்­றுலா சென்­ற­னர். முன்­தி­னம் நேபா­ளம் நாட்­டின் ரசுவா மாவட்­டத்­தில் போதே­கோஷி ஆற்­றில் ஏற்­பட்ட திடீர் வெள்­ளப்­பெ­ருக்­கில் 3 பஸ்­க­ளில் சென்ற 57 பேர் சிக்­கி­னர். இதில் ஒரு பஸ்­சின் டிரை­வர் சாமர்த்­தி­யத்­தால் 20 பேர் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">இதை­தொ­டர்ந்து 2 பஸ்­க­ளு­டன் மாய­மான மயி­லா­டு­துறை ஓய்­வு­பெற்ற நீதி­பதி சிவ­ஞா­னம்(63), மூர்த்தி(65), பத்­மினி(61), கட­லூர் மாவட்­டம் புவ­ன­கிரி திரி­பு­ர­சுந்­தரி (67), பள்­ளிப்­படை முரு­கா­னந்­தம்(69), தர்­ம­புரி புஷ்பா (54), கிருஷ்­ண­கிரி மாவட்­டம் ஒசூரை சேர்ந்த பிரே­மா­வாணி (45), புஷ்­ப­ராணி(59), நெல்­லூர் திம்­ம­ரா­ய­சாமி(46), மம்தா(39), மயி­லா­டு­துறை மாவட்­டம் கழுக்­கா­ணி­முட்­டம் புஷ்­ப­லதா(60), நல்­லூர் ராஜேஷ்­வரி(57), கூறை­நாடு வெங்­கட்­ரா­மன்(50), நாமக்­கல் வசந்­த­பு­ரம் கிருஷ்­ண­ வேணி(65), புதுச்­சேரி மாநி­லம் காம­ராஜ் நகர் ஆனந்­த­சுந்­தரி(58), பெட்­டி­யார்­பா­ளை­யம் வைஷ்­ணவி(50), கீதா(68), தஞ்சை மாவட்­டம் களி­மேடு அன்­ப­ழகி(67), ராஜப்­பன் நகர் சித்ரா(61), வ.உ.சி நகர் சிவ­யோ­கம்(65), பூக்­கா­ர­லா­யம் இள­வ­ரசி(70), கிருஷ்­ணா­பு­ரம் தங்­க­மதி(49), கும்­ப­கோ­ணம் சத்­யம் நகர் ராம்­கு­மார்(60), இவ­ரது மனைவி கீதா(56), சுவா­மி­மலை வடக்­கு­வீதி ராஜ்­கு­மார்(62), இவ­ரது மனைவி ஜெயந்தி(54), செட்­டி­மண்­ட­பம் ரமேஷ்(68), புது­மணி வடக்கு தெரு திரு­ம­லை­ ரா­ஜன்(54), இவ­ரது மனைவி தையல்­நா­யகி(54), கர்­ண­கொல்லை அக்­ர­ஹா­ரம் சாய்­நாத்(70), இவ­ரது மனைவி ஜெய­லட்­சுமி(64), இவர்­க­ளது மகள் கேதா­ர­க­வுரி(32), காளி­முத்து நகர் சையது உமர் பாரூக்(29), திரு­வண்­ணா ­மலை கண்­ணம்­மாள்(67), திரு­வா­ரூர் மாவட்­டம் திருக்­கண்­ண­மங்கை கலைச்­செல்வி(66), மன்­னார்­குடி வடு­வூர் பால­சுப்­பி­ர­ம­ணி­யன்(58) ஆகிய 36 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">இது­வரை மீட்­கப்­பட்ட கட­லூர் மாவட்­டம் சிதம்­ப­ரத்தை சேர்ந்த தியா­க­ரா­ஜன் (49), கிரு­பா­கரி(49), பழ­னி­யப்­பன்(69), கலை­மதி(67), முத்­துக்­கு­ம­ரே­சன்(56), மைதிலி (49), நெய்­வேலி டவுன்­ஷிப் திரு­மா­வ­ள­வன்(62), சென்னை மணப்­பாக்­கம் சத்யா (58), வேளச்­சேரி நாவு­க­பீர்­தாஸ்(55), வேளச்­சேரி விஜய புவ­னேஸ்­வரி(55), பெசன்ட் நகர் சாந்தி(47), மாறன்(57), கர்­நா­டக மாநி­லம் பெங்­க­ளூ­ருவை சேர்ந்த கன­க­சபை(68), ராதை(64), கிருஷ்­ண­கிரி மாவட்­டம் ஒசூரை சேர்ந்த ரகு­நா­தன்(56), மயி­லா­டு­து­றையை சேர்ந்த மணி­மே­கலை(65), ரத்­ன­கு­மார்(65), பூங்­கு­ழலி(62), திருச்­சியை சேர்ந்த வள்­ளி­நா­யகி(62), சிவ­ரஞ்­சனி(46), கற்­ப­கம்(62) ஆகிய 21 பேரை பாது­காப்­பு­டன் ஹெலி­காப்­டர் மூலம் காத்­மாண்­டு­வுக்கு அழைத்து வர­வுள்­ள­னர். பின்­னர் அங்­கி­ருந்து விமா­னம் மூலம் தமி­ழ­கத்­துக்கு அழைத்து வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">இது­கு­றித்து கும்­ப­கோ­ணம் சூப்­பர் யாத்ரா ஏஜென்சி உரி­மை­யா­ளர் சையது சாதிக் கூறு­கை­யில், ‘‘மாய­மான 36 பேரின் குடும்­பத்­தி­னர் மற்­றும் உற­வி­னர்­கள் எங்­க­ளது அலு­வ­ல­கத்­துக்கு வந்து விசா­ரித்து செல்­கின்­ற­னர். சிலர் போனில் தொடர்பு கொள்­கின்­ற­னர்’’ என்­றார். ஆன்­மிக பய­ணம் மேற்­கொண்ட சுவா­மி­ ம­லையை சேர்ந்த ராஜ்­கு­மார், ஜெயந்தி தம்­ப­தி­ய­ரின் மகன்­கள் மணி­கண்­டன், கோவிந்­த­ராஜ் ஆகி­யோர் கூறி­ய­தா­வது: எங்­கள் பெற்­றோர் ராஜ்­கு­மார், ஜெயந்தி ஆகி­யோர் சூப்­பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கடந்த 23ம் தேதி கும்­ப­கோ­ ணத்­தில் இருந்து ஆதி கைலா­சுக்கு சென்­ற­னர். 23, 24, 25ம் தேதி­க­ளில் எங்­க­ளி­டம் பேசி­னார்­கள். 26ம் தேதி காலை­யில் அவர்­கள் சென்ற இடத்­தில் வெள்­ளப்­பெ­ருக்கு என கேள்­விப்­பட்­டோம். அதை பார்த்­த­தில் இருந்து எங்­க­ளது குடும்­பமே மன உளைச்­ச­லில் உள்­ளது. இது­வரை 21 பேரை மீட்­டுள்­ள­னர். அவர்­களை போன்று எங்­க­ளது பெற்­றோர் மற்­றும் மாய­மா­ன­வர்­களை மீட்டு கொண்டு வர அரசு விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">கரூ­ரில் இருந்து ஆன்­மீக சுற்­று­லா­வுக்கு ஒரே குழு­வாக நேபா­ளத்­துக்கு சென்ற கரூர் வடக்கு காந்தி கிரா­மம் ஹவு­சிங் போர்டை சேர்ந்த அன்­ப­ரசு, கரூர் கேவிபி நகர் பெரி­யார் நகரை சேர்ந்த தன­லட்­சுமி(60), கரூர் காம­ரா­ஜ­பு­ரம் வடக்கு தெருவை சேர்ந்த கற்­ப­கம்(55), கரூர் அரு­ணா­ச­லம் 3வது தெருவை சேர்ந்த தமி­ழ­ரசி அசோ­கன் ஆகிய 4 பேரும் மாய­மா­கி­யுள்­ள­னர். இவர்­க­ளின் செல்­போன் எண்ணை உற­வி­னர்­க­ளால் தொடர்புகொள்ள முடி­ய­வில்லை. இது­கு­றித்து கற்­ப­கத்­தின் கண­வர் பெரி­ய­சாமி கூறு­கை­யில், எனது மனைவி கற்­ப­கம் கடந்த 14ம் தேதி கயி­லாய யாத்­தி­ரைக்கு புறப்­பட்டு சென்­றார். நேற்று முன்­தி­னம் காலை அவரை தொடர்பு கொண்டு பேசி­ய­போது நாங்­கள் தற்­போது சீன நாட்­டின் எல்­லை­யில் இமி­கி­ரே­ஷன் பணி­க­ளுக்­காக காத்­தி­ருக்­கி­றோம் என்­ற­னர். அதன்­பின்­னர் அவரை தொடர்பு கொள்ள முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">அவரை தேடு­வ­தற்­காக எங்­க­ளது குடும்­பத்­தி­னர் சிலரை அனுப்பி வைத்­துள்­ளேன் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.3">நேபா­ளத்­துக்கு சென்ற கரூர் வடக்கு காந்தி கிரா­மம் ஹவு­சிங் போர்டு பகு­தியை சேர்ந்த அன்­ப­ரசு புலி­யூர் காளி­பா­ளை­யம் பகு­தி­யில் உள்ளஅரசு தொடக்­கப்­பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றி வரு­கி­றார். இது­கு­றித்து அவ­ரது மகள் கூறு­கை­யில், நான் எனது தந்­தை­யி­டம் தின­மும்காலை­யில் எங்கு இருக்­கி­றார் என்று லொகே­ஷன் பகி­ரு­மாறு கூறு­வேன். அதன்­படி நேற்று முன்­தி­னம் காலை அவரை தொடர்பு கொண்டு பேசி­ய­போது சீன நாட்­டின் எல்லை பகு­தி­யில் காத்­தி­ருப்­ப­தாக கூறி­னார். அதன்­பி­றகு எனது தந்­தையை தொடர்பு கொள்ள முடி­ய­வில்லை. இத­னால் எங்­க­ளது குடும்­பத்­தி­னர் பதற்­றத்­து­டன் இருந்து வரு­கி­றோம் என்­றார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>