<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,66,608,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 30 2026 03:40:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260830T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="30082026-MDU-06" position.sequence="06" ex-ref="30082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="32">தி.மு.க. மீது கல்லெறியாதீர்! தங்கள் கைகளுக்குக் கட்டுப்போட வேண்டிவரும்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup843041_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ன்­னும் இரண்டு ஆண்­டு­க­ளில் தி.மு.க.வினர் அர­சி­யலை விட்டு வில­கி­வி­டும் நிலை உரு­வா­கும் என்­றும், அண்ணா அறி­வா­ல­யத்தை வெள்ளை அடித்து வாட­கைக்கு விடும் காலம் வரும் என்­றும் அர­சி­யல் விலை­மாது இரு­மல்­கு­மார்­கள் ஆரு­டம் கூறிப் பேசி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இனி­மேல் தி.மு.க. தலை­மை­ய­க­மான அண்ணா அறி­வா­ல­யத்தை வெள்­ளை­ய­டித்து வாட­கைக்­குத் தான் விட வேண்­டும்; அங்கே முர­சொலி அறக்­கட்­ட­ளைக்­குத் தான் சொத்­துக்­கள் அனைத்­தும் உள்­ளன. எனவே, அதைக் கைப்­பற்­று­வ­தற்­குத் தான் போட்டி நடக்­கி­றது. அறக்­கட்­ட­ளையை கைப்­பற்றி விட்டு அறி­வா­ல­யத்தை வாட­கைக்கு விட்டு, விட்டு வேறு வேலை பார்க்­கச் சென்று விடு­வர்” என்று வீடு, மனை, கட்­ட­டப் புரோக்­க­ராக மாறி நிர்­மல் குமார் சங்­கி­க­ளின் சாட்­சி­யா­கப் பேசி­யி­ருக்­கி­றார். இப்­ப­டி­யெல்­லாம் இடைத்­த­ர­கர் வேலை செய்து வரும் பா.ஜ.க.வின் கைக்­கூலி சங்கி அமைச்­சர் நிர்­மல் குமார் உளறி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">*இலட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­க­ளின் நாடி, நரம்­பு­கள், எலும்­பு­கள், சதைச் சுவர் எழுச்­சி­யால், செந்­நீர் சிந்­திய குருதி ஓட்­டத்­தால்; இரத்­தச் சக­தி­யில் குழைத்­துக் குழைத்து கலை­ஞ­ரின் எண்­ணத்­தால், உழைப்­பால் கட்­டப்­பட்­ட­து­தா­னடா..... பேர­றி­ஞர் அண்ணா பெய­ரி­லான உயி­ரோ­வி­யம் அண்ணா அறி­வா­ல­யம்!சமூக நீதிக்­காக தனது தள்­ளாத மூப்பு கொண்டு 95 வய­தி­லும், மூத்­தி­ரச் சட்­டி­யைத் தூக்­கிக் கொண்டு சவ­லைப் பிள்­ளை­யான தமி­ழர்­க­ளைக் காப்­பாற்ற தனது கோடிக்­க­ணக்­கான சொத்­துக்­களை, வரு­மா­னங்­க­ளைத் துறந்து; பரப்­புரை செய்­தும், பட்டி, தொட்­டி­கள் எல்­லாம் பஞ்­சை­க­ளாய், பரா­ரி­க­ளாய்ப் படுத்­துக் கிடந்­த­வர்­க­ளைத் தனது சுய­ம­ரி­யா­தைக் கைத்­த­டி­யால் தட்டி எழுப்­பிய குர­லுக்­குச் சொந்­தக்­கா­ர­ரும்; நாத்­திக எழுச்­சியை உரு­வாக்­கி­யும்; ஆரி­யத்தை எரித்­துத் திரா­வி­டத்தை எழுப்­பி­யும், பகுத்­த­றிவு வெளிச்­சத்­தைப் பரப்­பி­ய­வ­ரு­மான ஈரோட்­டுப் பக­ல­வன் தந்தை பெரி­யா­ரைப் பேசும் முக­வரி தானடா..... இந்த அண்ணா அறி­வா­ல­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அர­சி­ய­லில் அரண்­ம­னைக் கோம­கன்­க­ளி­டம் அடைப்­பட்­டுக் கிடந்த அர­சி­யலை, ஏழை, எளிய அன்­றா­டங் காய்ச்­சி­க­ளான ஆல­ம­ரத் தடி­வா­சி­க­ளுக்­கும் கொண்டு வந்து சேர்த்த தென்­னாட்­டுக் காந்தி இந்­நாட்டு இங்­கர்­சால், தமிழ்­நாட்டு பெர்­னாட்ஷா காஞ்­சி­மண் கரு உமிழ்ந்த தமிழ்த்­தா­யின் தவப்­பு­தல்­வன் பேர­றி­ஞர் அண்­ணா­வைப் பேசும் பைந்­த­மி­ழ­ராம் பாம­ரர்­க­ளின் சொர்க்­க­வா­சல் தானடா..... இந்த அண்ணா அறி­வா­ல­யம்! பட்டி, தொட்­டி­கள் எல்­லாம் தனது கால் ரேகை­கள் பதிக்­காத இட­மில்லை; கைப்­ப­டாத இரு வண்­ணக் கொடிக் கம்­பங்­கள் இல்லை; தன் மூச்­சுப்­ப­டாத முக­வ­ரி­யில்லை; நடக்­காத தமி­ழர் வீட்டு நிகழ்ச்­சி­கள் ஏது­மில்லை; சுற்­றிச் சுற்­றிச் சுழன்­றுத் தொண்­ட­னின் ஒரு பைசா, ஓர் உரூ­பாய் என அவன் தரும் தொகை தேடி, மக­ரந்த மலர்­க­ளின் மதுத் தேன் நாடும் தேனீ­யைப் போல­வும்; எண்ணி, எண்ணி நுகர்ந்து உண­வைக் கால்­கள் தேயத் தேயத் தேடும் சிறு எறும்பை போல­வும்; அலைந்து, அலைந்து கொண்டு வந்து சேர்த்­துக் கட்டி அழகு பார்த்து நிற்­கும்; சாமா­னி­யர்­க­ளின் இத­யங்­க­ளில் வீற்­றி­ருக்­கும் சரித்­தி­ரம் படைத்த கலை­ஞ­ரால் எழுப்­பிய பொன் மாளி­கை­தா­னடா..... இந்த அண்ணா அறி­வா­ல­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால், சில கோமா­ளி­கள் அடங்­கிய தற்­கு­றிக் கூட்­டத்­தில் ஒரு­வ­னான ஈனப்­ப­யல் ‘இரு­மல் குமார்” போன்­ற­வர்­கள் அடிக்­கடி தி.மு.க. மீது வசைச் சொற்­களை வீசிக் கொண்­டி­ருக்­கி­றான்­கள். அர­சி­ய­லில் தி.மு.க. என்­பது ஓர் இம­யம். அந்த இம­யத்­தின் மீது மல ஈக்­கள் சில மொய்க்க நினைப்­ப­தால், அது இடம் பெயர்ந்து விழுந்து விடாது. பா.ஜ.க.வின் பக்­கம் தி.மு.க. சென்று விட்­ட­தால் அதன் முழுக் கட்­டுப்­பாட்­டில் இயங்கி வரு­கி­றது என்று, பா.ஜ.க.வில் இருந்து வந்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைக்­கூலி கோமா­ளி­தான் இந்த நிர்­மல் குமார். இன்­றைக்கு த.வெ.க.வில் ஐக்­கி­யம் ஆகி­யுள்ள பா.ஜ.க.வின் கங்­கா­ணி­தான் நினைவு இழந்து தி.மு.க.வைச் சாடி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அண்ணா அறி­வா­ல­யம் ஒரு மாபெ­ரும் மக்­க­ளுக்­கான அர­சி­யல் பாசறை! இங்கே பல அர­சி­யல் வர­லா­று­கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இங்கே தி.மு.க. தலை­வர் கலை­ஞர், அதன் பின்­வந்த மு.க. ஸ்டாலின் ஆகி­யோர் தலை­மை­யில் தீர்­மா­னிக்­கப்­பட்ட பல அர­சி­யல் முடி­வு­க­ளால்­தான் இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. சங்­கி­க­ளுக்­குச் சவக்­குழி வெட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. ஜன­நா­யக இந்­தி­யா­வில் பல குடி­ய­ர­சுத் தலை­வர்­கள், பிர­த­மர்­கள் உரு­வாக்­கப்­ப­டப் பல தீர்­மா­னங்­கள் வடிக்­கப்­பட்டு இருக்­கின்­றன. இந்­தி­யா­வில் உள்ள பல்­வேறு அர­சி­யல் இயக்க தலை­வர்­கள் ஏன்; அய­ல­கத் தலை­வர்­கள் வந்து சென்ற பயிற்­சிப் பாச­றைக்­கான பட்­டறை இடம்­தான் அண்ணா அறி­வா­ல­யம்! இதைப் பற்­றி­யெல்­லாம் தெரி­யா­மல் அடிக்­கடி நினை­வி­ழந்து பேசும் நிர்­மல் குமார்­கள், போதை உண்ட போக்­கி­ரி­கள் போல் உள­றிக்­கொட்டி ஊர் சுற்­றும் பொதி சுமக்­கும் விலங்­காக மாறி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எத்­த­னையோ அர­சி­யல் புய­லில் அசைந்து கொடுக்­காத ஓர் ஆல­ம­ரந்­தான் தி.மு.க.! இது மழைக்­கா­லத்­தில் பூத்த காளான் அல்ல; அழிந்து கரு­கிப்­போ­வ­தற்கு! இத­னி­டம் எத்­த­னையோ பற­வை­கள் பழம் தின்று பசி­யா­ற­வும், வன விலங்­கு­கள் படுத்­து­றங்கி இளைப்­பாறி நிழல் தேடி­ட­வும் வர­லாம்; போக­லாம். ஆனால் நின்ற இடத்­தில், ஆண்­டாண்­டு­கா­லம் விழு­து­கள் இறங்கி வாழும் ஆல­ம­ரம் எனும் இயக்­கமே தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தக் கட்சி தேர்­த­லுக்­கா­கத் தொடங்­கப்­பட்ட இயக்­கம் அல்ல; ஆயிர ஆயி­ரம் ஆண்டு கால­மாக அடக்கி, ஒடுக்கி, ஒதுக்கி வைக்­கப்­பட்ட, தாழ்த்­தப்­பட்ட பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்­காக சமூ­க­நீதி காக்­கப் போராடி வரும் இயக்­கமே தி.மு.க! இந்­தக் கட்சி வெறும் தேர்­த­லுக்­காக ஆதா­யப் பதவி பெறு­வ­தற்­கா­கத் தொடங்­க­பட்­ட­தல்ல! இம­ய­மான இதனை எந்­தக் கொம்­ப­னா­லும் அழிக்க முடி­யாது! இந்த மாபெ­ரும் இயக்­கத்­தைப் பற்­றிப், பத­விப் பிழைப்­புத் தேடி அலை­யும் மோசடி நபர் அர­சி­யல் வழி­போக்­கன் நிரு­மல்­கு­மார்­கள் போன்­றோர் பேசு­வது மிக, மிக வேடிக்­கை­யா­னது; விந்­தை­யா­ன­தும் கூட!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அண்ணா அறி­வா­ல­யத்­தில் தி.மு.க.வின் தலை­மைக் கழக அலு­வ­ல­கம், திரு­ம­ணம் மற்­றும் கூட்ட நிகழ்ச்­சி­கள் நடத்­தும் ‘கலை­ஞர் அரங்­கம்’, ‘வெற்­றிச் செல்வி அன்­ப­ழ­கன் இல­வ­சக் கண்மருத்­து­வ­மனை’, ‘பேரா­சி­ரி­யர் க. அன்­ப­ழ­கன் ஆய்வு நூல­கம்’, ‘கலை­ஞர் கரு­வூ­லம்’ என இயங்கி வரு­கின்­றன. ‘கலை­ஞர் தொலைக்­காட்சி’ நிரு­வா­கம் தரும் வாட­கைப் பெறப்­ப­டு­கி­றது. இதற்­கான வரவு – செல­வுக் கணக்­கு­கள் சட்­ட­ரீ­தி­யா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன. 1971இல் தொடங்­கப்­பட்ட அண்ணா அறக்­கட்­டளை தலை­வர் கலை­ஞர், பொதுச்­செ­ய­லா­ளர் நாவ­லர் நெடுஞ்­செ­ழி­யன் போன்­றோர் அறங்­கா­வ­லர்­க­ளாக இருந்து அறக்­கட்­டளை இயங்கி வரு­கி­றது. ஏழ்மை நிலை­யில் உள்ள தாழ்த்­தப்­பட்ட பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்­கான கல்வி, மருத்­து­வம் மற்­றும் பொரு­ளா­தார உத­வி­கள் மாதம் மாதம் அறக்­கட்­டைளை மூலம் உதவிசெய்து வரு­கி­றது. மறைந்த தலை­வர் கலை­ஞ­ரின் சொந்த வரு­மா­னத்­தில் சில கோடி­களை அண்ணா அறக்­கட்­ட­ளைக்கு தானம் வழங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சொத்­துக்­களை தனி­ந­பர்­கள் எவ­ரும் உரிமை கொண்­டாட முடி­யாது. அண்ணா அறி­வா­ல­யம் என்­பது அறக்­கட்­ட­ளை­யால் நிரு­வா­கம் செய்­யப்­ப­டு­கி­றது. பல கட்­சி­க­ளில் சென்று கபட நாட­கம் ஆடி விட்டு, தற்­போது, சங்­கி­கள் மூலம் ஊது­கு­ழ­லாகி த.வெ.க.வில் ஐக்­கி­ய­மா­கி­யுள்ள தறு­தலை நிர்­மல் குமார்­கள் கூறு­வது போல; எந்­தத் தனி­ந­ப­ரும் உரிமை ஏதும் கொண்­டாட முடி­யா­த­தும், முற்­றி­லும் சட்­ட­ரீ­தி­யா­ன­து­மா­ன­து­தான் “அண்ணா அறி­வா­ல­யம்”! இது தி.மு.க. அறக்­கட்­டளை (DMK Charitable Trust) – இன் கீழ்ச் சட்ட அடிப்­ப­டை­யில் பதிவு செய்­யப்­பட்ட ஒரு தனி­யார், தன்­னாட்சி பெற்ற அமைப்­பிற்­குச் சொந்­த­மான சொத்­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“கடந்த ஆட்­சி­யில் இலஞ்­சம் இல்­லா­மல் ஒரு சான்­றி­தழ் வாங்க முடிந்­ததா? பிறப்பு முதல் இறப்பு வரை அரசு அலு­வ­ல­கங்­க­ளில் பணம் இல்­லா­மல் ஒரு கையெ­ழுத்­து­பெற முடிந்­ததா? இன்று அந்த சூழ்­நிலை இல்லை” என்று யோக்­கிய சிகா­மணி நிர்­மல் குமார் மதுரை திருப்­ப­ரங்­குன்­றத்­தில் பேசி­யி­ருக்­கி­றார். இவ­ரு­டைய சட்­டத் துறை­யில்­தான் அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னத்­தில் ஊழல் முறை­கே­டு­கள் நடந்­துள்­ளன என்­றும், அமைச்­சர் தலை­யீட்­டில் ரூ. 30 இலட்­சத்­துக்கு மேல் இலஞ்­சம் கேட்­கி­றார்­கள் என்­றும் கூறி, எம். ஞான­சௌந்­தரி என்ற த.வெ.க.வைச் சேர்ந்த ஒரு பெண் வழக்­க­றி­ஞர் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குப் போட்டுஇருக்­கி­றார். அவ­ரைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­னார்­களேஒழிய, அவர்­கள் நடத்­திய இலஞ்ச வேட்­டை­யைப் பற்றி இது­வரை வாய் திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதைப்­போல தென்­த­மி­ழ­கப் பகு­தி­யில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒரு­வர் அதற்­காக வசூல் வேட்­டை­யை­யும் நடத்தி இருக்­கி­றார். உயர்­நீ­தி­மன்ற மூத்த வழக்­க­றி­ஞர் இரா­ஜா­ரா­மன் என்­ப­வர் அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில் இலஞ்­சம் வாங்­கி­ய­தற்­கான ஆதா­ரங்­கள் உள்­ளன. நான் உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குப் போட்டு நிரூ­பிப்­பேன் என்று சொல்லி இருக்­கி­றார். இதைப் பற்­றிப் பல­முறை எழு­தி­யும், சொல்­லி­யும், இந்த ஊழல், முறை­கே­டு­கள் பற்றி முத­லில் பதில் தர முன் வர­வில்லை இரு­மல் குமார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சான்­றி­தழ் பற்றி வீர­வ­ச­னம் பேசும் நிர்­மல் குமார்; அவர் சட்­டத்­திற்­கான எல்.எல்.பி. பட்­டம் பெற்­ற­வர் எனக் கூறித் தேர்­தல் ஆணைய வேட்பு மனு­வில்  கூறி­யுள்­ளார். அவர் பெற்ற எல்.எல்.பி. சட்­டக் கல்­விச் சான்­றி­தழ் முத­லில் உண்­மை­யா­னது தானா? எல்.எல்.பி. சட்­டப்­ப­டிப்பு முழு நேரக் கல்வி படித்­தாரா? அந்­தச் சான்­றி­தழ் உண்­மை­யா­ன­து­தானா? இலண்­டன், வளை­குடா போன்ற வெளி­நா­டு­க­ளில் வேலை செய்து கொண்டே, எப்­படி இவர் இந்­தி­யா­வில் பெங்­க­ளூ­ரில் எல்.எல்.பி. சட்­டப் படிப்பு படித்­தி­ருக்க முடி­யும்? என்று பல­ரும் பொது­வெ­ளி­யி­லும், சமூக வலை­த­ளங்­க­ளி­லும் கேள்வி எழுப்பி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இது பற்றி நாம் ஏற்­கெ­னவே எழு­திக் கேள்வி எழுப்­பி­யுள்­ளோம். உங்­க­ளு­டைய சட்­டப் படிப்­பிற்­கான கல்­விச் சான்­றி­தழ் உண்­மையா? இல்­லையா?அதனை ஆதா­ரங்­க­ளோடு பொது­வெ­ளி­யில் நிரூ­பிக்க வேண்­டும் என்று எழுதி ஊட­கங்­க­ளில் சொல்லி இருக்­கி­றோமே; இது­வரை அதை நிரூ­பிக்க பொது­வெ­ளி­யில் வராத நிர்­மல் குமார் தி.மு.க.வையும், கட்­சித் தலை­வர்­க­ளை­யும் வம்பு இழுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அண்ணா அறி­வா­ல­யத்­திற்­குச் சிக்­கல்­க­ளைத் தொடர்ந்து அர­சி­யல் கட்­சி­கள் சில அவ்­வப்­போது உரு­வாக்கி வந்த வர­லாறு உண்டு. தி.மு.க.வில் 1978 முதல் 1996 வரை தொடர்ந்து 18 ஆண்­டு­கள் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக இருந்­த­வர் கோபால்­சாமி. அந்த வை. கோபால்­சா­மி­தான் பின்­னா­ளில் வைகோ ஆனார். அவர் கழ­கத்­திற்கு எதி­ராக துரோ­கம் செய்து பிர­பா­க­ரனை பார்ப்­ப­தாக கூறித் தலை­மைக்­குத் தெரி­யப்­ப­டுத்­தா­மல் இலங்­கைப் பய­ணம் செய்­தது; பொது­வெ­ளி­யில் பேசக்­கூ­டாத வார்த்­தை­க­ளைக் கழ­கத்­தைப் புழுதி வாரித் தூற்­றிப் பேசி­யது; கழ­கத்­திற்கு எதி­ரா­கப் பிளவு ஏற்­ப­டுத்த எண்ணி உள்­ளடி வேலை செய்­தது என்­பன போன்ற இராஜ துரோ­கக் கார­ணங்­க­ளால் கலை­ஞர் தலை­மை­யி­லான கழ­கம் அவ­ரி­டம் கேள்­வி­கள் சில எழுப்­பி­யி­ருந்­தது. மேலும், கலை­ஞ­ரின் உயி­ருக்­குப் பாது­காப்­பற்ற சூழ் நி­லையை உரு­வாக்கி வரு­கி­றார் வை. கோபால்­சாமி என்று அன்­றைய முத­ல­மைச்­ச­ராக இருந்த அ.தி.மு.க. தலைவி ஜெய­ல­லிதா அவர்­க­ளால் கலை­ஞ­ருக்­குப் பாது­காப்பு வழங்­கி­யும், ஒன்­றிய அரசு உள்­துறை அனுப்­பிய கடி­தத்­தையே கலை­ஞ­ருக்கு அனுப்பி வைத்­தும் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில்­தான் 1993 ஆம் ஆண்டு தி.மு.க. 
விலி­ருந்து வெளி­யே­று­வ­தற்­கான கார­ணங்­க­ளைத் தோற்­று­வித்­துக் கொண்டே இருந்த வை. கோபால்­சாமி எனும் வைகோ கழ­கத்தை விட்­டுப் பிரிந்­தார். அவ­ரின் ஆத­ர­வா­ளர்­க­ளைத் திரட்டி ம.தி.மு.க. என கட்­சியை உரு­வாக்­கி­னார். இது கழ­கத் தொண்­டர்­கள் மத்­தி­யில் பெரும் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டது. அப்­போது வீர வச­னம் பேசிய வை. கோபால்­சாமி “அண்ணா அறி­வா­ல­யம் என்­பது தொண்­டர்­க­ளின் வியர்­வை­யி­லும், உழைப்­பி­லும் உரு­வா­னது. அது தனி நபர் குடும்­பச் சொத்து அல்ல; உண்­மை­யான திரா­விட இயக்­கத் தொண்­டர்­கள் எங்­க­ளு­டன் இருப்­ப­தால், அண்ணா அறி­வா­ல­யத்­தைக் கைப்­பற்­று­வோம்” என்று வளர்த்த கடா மார்­பில் பாய்­வது போல் வெறி பிடித்­துக் கத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால், எந்த வை. கோபால்­சாமி “அண்ணா அறி­வா­ல­யத்­தைக் கைப்­பற்­று­வோம்” என்று கூறி­னாரோ, அந்­தக் வைகோ தி.மு.க.விடம் கூட்­டணி உடன்­பாடு கண்டு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பெற்­றார். அதைப் போல அவ­ரும் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர், அவ­ரது மகன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எனப் பல்­வேறு பத­வி­கள் பெற்­றுப் பூவோ­டும், பொட்­டோ­டும் மஞ்­சள் குங்­கு­மத்­தோ­டும் அல்­லவா அர­சி­யல் மண­வாழ்க்கை வாழ்ந்து வரு­கி­றார்­கள்? அவர்­கள் கடந்த காலத்­தில் நால்­வர் கூட்­டணி அமைத்து காணா­மல் போன அர­சி­ய­லில் தி.மு.க.வால் மீண்­டும் விலா­சம் பெற்­றுச் சொர்க்­க­பு­ரி­யில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் அறி­யா­ம­லேயே நேரில் வந்து, அன்று இருந்த தி.மு.க. தலை­வர் கலை­ஞ­ரைப் பார்த்­த­தும், தற்­போது மு.க ஸ்டாலி­னைப் பார்த்­தும் தந்­தை­யும், மக­னும் வாழ்த்து கூறி பொன்­னாடை போர்த்­தி­ய­தும் சரித்­தி­ரம் பதி­வுச் செய்து வைத்­துள்­ளதை எவ­ரும் மறந்­து­விட 
முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அது மட்­டு­மல்ல; 2024 இல் பா.ஜ.க. தலை­வ­ராக இருந்த கே. அண்­ணா­மலை, சென்னை அண்­ணாப் பல்­க­லைக்­க­ழக மாணவி ஒரு­வ­ரின் பாலி­யல் தொல்­லைக்கு ஆளாக்­கப்­பட்ட அத்­து­மீ­றல்­கள் கண்­டித்து நீதி கேட்டு போராட்­டம் நடத்­து­கி­றேன் என்று கூறித் “தமிழ்­நாடு அர­சின் காவல்­துறை நிர்­வா­கச் சீர்­கேட்டை கண்­டிக்­கி­றேன்” என்ற பெய­ரில், நடு­வீ­தி­யில் மேடை­யில் நின்று கொண்டு சாட்­டை­யால் தன்­னைத்­தானே ஆறு முறை அடித்­துக் கொண்ட நாட­கம் நடந்­தது. அது மட்­டு­மல்ல; ‘தி.மு.க. ஆட்­சியை தமி­ழ­கத்­தில் இருந்து அகற்­றும் வரை நான் செருப்பு அணிய மாட்­டேன்’ என்று தனது கால­ணி­களை கழற்றி சப­தம் போட்டு வாய்ச்­ச­வு­டால் சட்­டம் பேசி­னார். ஆயி­னும், கொஞ்ச நாள்­க­ளிலே என்ன நடந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அவர் சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பா.ஜ.க. தோற்­ற­வு­டன், ஏப்­ரல் 2025 ல் தமி­ழக பா.ஜ.க.வின் புதிய தலை­வ­ராக நைனார் நாகேந்­தி­ரன் பொறுப்­பேற்­றார். அவ­ரது அன்­புக் கட்­டளை (?) யை ஏற்று அண்­ணா­மலை மீண்­டும் செருப்பு அணிந்த நாட­கம் நன்­றா­கவே நடந்­தது என்­பது குறிப்­பி­டத் தகுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அந்த கே. அண்­ணா­மலை பா.ஜ.க. தமிழ் மாநி­லத் தலை­வ­ராக இருந்த போது, “தி.மு.க.வின் ஊழல்­க­ளை­யும் மக்­கள் விரோத கொள்­கை­க­ளை­யும் வேரோடு ஒழிப்­பேன்; தி.மு.க.வின் அதி­கார மைய­மா­கத் திக­ழும் அண்ணா அறி­வா­ல­யத்­தின் ஒவ்­வொரு செங்­க­லை­யும் உரு­வும் வரை நான் ஓய­மாட்­டேன்” என்று வானம் இடி­மு­ழங்க ஓங்­கா­ர­மிட்­டுப் பேசி­னார். அப்­ப­டிப் பேசிய புண்­ணி­ய­வான் உத்­த­ம­புத்­தி­ரர் அண்­ணா­மலை கதி என்ன ஆனது? பாஜ­க­வின் செல்­லாக் காசாகி, தூக்கி எறி­யப்­பட்­டார். தானே பா.ஜ.க கட்­சி­யில் இருந்து வில­கு­வ­தா­கக் கூறிக் கழைக்­கூத்து நாட­கம் நடத்தி, இப்­போது தனிக்­கட்சி ஒன்­றைத் தொடங்கி நடத்தி வரு­கி­றார். அந்த அர­சி­யல் இயக்­கத்­தின் பெயர் (We The Leaders) “நாங்­கள் தலை­வர்­கள்” என்­ப­தா­கும். புத்­த­னுக்கு ஞானோ­த­யம் ஆல­ம­ரத்­த­டி­யில் பிறந்­தது போல, அண்­ணா­ம­லைக்கு மோடி, அமித்­ஷாக்­க­ளி­டம் ஞானம் பிறந்து, “அர­சி­யல் தலை­வ­ருக்­கான பயிற்சி மற்­றும் வழி­காட்­டு­தலை வழங்­கு­வ­தற்­காக ஏ.பி.ஜே. அப்­துல் கலாம் நெறி­மு­றை­கள் மற்­றும் அர­சி­யல் மையம்” என்ற அமைப்­பை­யும் அவர் உரு­வாக்கி உள்­ள­தாக செய்­தி­கள் வந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான அ.தி.மு.க. ஆட்சி 2011 இல் வந்­த­தும், வரா­த­து­மாக நள்­ளி­ர­வில் கலை­ஞர் கைது, தி.மு.க. முன்­னணி தலை­வர்­க­ளுக்கு எதி­ராக நில மோசடி வழக்­கு­கள்,என உண்­மைக்கு மாறான பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள்சுமத்­திக் கைது செய்­யப்­பட்­ட­னர்.   சென்­னை­யில் மாந­க­ராட்சி மேய­ரா­க சைதை துரை­சாமி என்­ப­வர் பொறுப்­பேற்று இருந்­தார். அவர் தொடக்க காலத்­தில் ஈரோடு, கோபி­செட்­டிப்­பா­ளை­யம், மொடச்­சூர் கிரா­மப் பகு­தி­யில் இருந்து வந்து சென்­னை­யில் பொரி–­க­டலை வியா­பா­ரி­யி­டத்­தில் பொட்­ட­லம் மடிக்­கும் பைய­னாக வேலைக்­குச் சேர்ந்து பணி­யாற்றி வந்­த­தாக ஏடு­கள் எழுதி செய்­தி­கள் வெளி­யிட்­டன. அவர் இன்று மாட மாளி­கை­க­ளுக்­குச் சொந்­தக்­கா­ர­ரா­கப் பல கோடிச் சொத்­துக்­க­ளுக்கு அதி­ப­தி­யாக விளங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார். அவர் மற்­றும் அவர் மகன் வீடு, அலு­வ­ல­கங்­க­ளில் ஒன்­றிய அர­சின் சோத­னை­கள் நடை­பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அவ்­வா­றான தூய அர­சி­ய­லுக்­குச் சொந்­தக்­கா­ர­ரான அவர்; சென்னை மாந­கர் மேய­ராக இருந்­த­போது, “அண்ணா சாலை­யில் உள்ள அண்ணா அறி­வா­ல­யம் கட்­ட­டப் பயன்­பாட்­டில் முறை­கே­டு­கள் நடந்­துள்­ளன” என உண்­மைக்கு மாறான பொய்ச் செய்­தி­களை கூறிச் சட்ட ரீதி­யான நெருக்­க­டி­கள் அவ­ரால் கொடுக்­கப்­பட்­டன. அண்ணா அறி­வா­ல­யம், சென்னை மாந­க­ராட்­சி­யின் பொதுப் பயன்­பாட்­டு­கள் (OSR – Open Space Reservation) நில­வி­தி­க­ளுக்­குப் புறம்­பா­கக் கட்­டப்­பட்­டுள்­ளது என்­றும், அங்­குள்ள வணி­க­வ­ளா­கக் கட்­ட­டம், கலை­ஞர் அரங்­கம் விதி­மீ­ற­லில் உள்­ளன என்­றும் கூறி, அதற்­குச் சீல் வைக்க அல்­லது மாந­க­ராட்சி வசம் எடுக்க சட்­ட­ரீ­தி­யான நோட்­டீ­சு­களை மற்­றும் ஆய்­வு­களை முடுக்கி விட்­டார் சைதை துரை­சாமி. ஆனால், கலை­ஞ­ரின் அறி­வு­ரை­க­ளி­னால், தி.மு.க. சார்­பில் இந்த விவ­கா­ரத்தைஎதிர்த்து, நீதி­மன்­றத்­தைக் கழ­கம் நாடி­யது. தேவை­யான அனைத்து நில ஆவ­ணங்­க­ளும், உரிய அனு­ம­தி­க­ளும் முறை­யா­கப் பெறப்­பட்­டுள்­ளன என்­ப­தைக் குறித்து நீதி­மன்­றத்­தில் நிரூ­பிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஜெய­ல­லிதா பின்­ன­ணி­யில் சைதை துரை­சா­மி­கள் வீசிய துருப்­பி­டித்த குற்­றச்­சாட்டு அம்­பு­கள் அனைத்­தும் கழக இம­ய­ம­லை­யின் மீது மோதிச் சுக்கு நூறாக உடைந்து விழுந்­தன. போதிய சட்­டப்­பூர்வ ஆதா­ரங்­கள் இல்­லா­த­தால், நீதி­மன்­றம் மாந­க­ராட்சி நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தடை விதித்­தது. இதன் மூலம் அண்ணா அறி­வா­ல­யத்­திற்­குச் சட்­டச் சிக்­கல் ஏற்­ப­டுத்த முயன்ற அ.தி.மு.க.வின் சர்­வா­தி­கார முயற்­சி­கள் அனைத்­தும் முழுத் தோல்­வி­யில் முடிந்­தன. தி.மு.க. என்­பது ஒரு வெடி மருந்­துக் கிடங்கு. அதில் தேவை­யற்ற முறை­யில் எதி­ரி­கள் தீக்­குச்­சி­கள் உர­சிப் போடும் விளை­யாட்­டால், எவன் கார­ணக் கர்த்­தா­வாக இருக்­கி­றானோ, அவனே அதில் அழிந்து போன­தா­கத்­தான் வர­லாறு கூறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. எனும் கோட்டை மீது கல்­லெ­றி­ப­வன் தன் கைகள் காய­ப­டுத்­திக்­கொண்டு கட்­டுப்­போட்­டு­தான் அலைய வேண்­டும் என்­பதை எச்­ச­ரிக்கை செய்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“முன்­னாள் முதல்­வர்­கள் எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா தீய சக்­தி­யான தி.மு.க.வை ஒழித்து விட வேண்­டும் என்று கூறி, அதற்­காக எம்.ஜி.ஆர். தனிக்­கட்சி தொடங்­கி­னார். ஆனால், தி.மு.க.வையே த.வெ.க. தலை­வர் விஜய் ஒழித்து கட்டி விட்­டார்.” இப்­படி கூறி­யி­ருக்­கி­றார் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைக்­கூலி, கங்­கா­ணி­யான நிர்­மல் குமார். தி.மு.க.வை ஒழித்­துக் கட்டி விட்­டாரா ஜோசப் விஜய்? தி.மு.க. கூட்­டணி 73 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது; அதில் 59 இடங்­க­ளில் தி.மு.க. பெற்­றது. அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளான காங் – 5, வி.சி. 2, இ.கம்யூ – 2, இடது கம்யூ – 2, இந்­திய முஸ்­லிம் லீக் – 2. (தேமு­திக – 1) எனக் கூட்­ட­ணிக் கட்­சி­கள் 14 இடங்­க­ளில் வெற்றி பெற்­றன. தேமு­திக வைத்­த­விர மற்ற 13 எம்.எல்.ஏக்­கள் ஆத­ர­வோடு ஜோசப் விஜய்ஆட்­சி­யில் இருக்­கி­றார் என்­பதை மறந்து பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மாக மந்­தி­ரி­கள் பேசி வரு­கி­றார்­கள். ஆட்சி அமைக்க போது­மான இடங்­க­ளைத் தர­வில்லை ஜோசப் விஜய். ஆனால், சிறு­பான்மை எண்­ணிக்கை 107 இடங்­கள் மட்­டுமே பெற்ற த.வெ.க. ஆட்சி அமைப்­ப­தற்கு திமு­க­வில் கூட்­ட­ணிக் கட்­சி­கள் தான் உதவி புரிந்­தி­ருக்­கின்­றன.  திமு­க­வின் கூட்­ட­ணிக் கட்­சி­யின் தயவு, தாட்­சண்ய துணை­யோடு ஆட்சி நடத்­தும் ஜோசப் விஜய் திமு­கவை முடித்து விட்­டா­ராம்!...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“உசுப்­பேற்­று­ப­வர்­கள்‘உம்’ என்­றும், கடுப்­பேற்­று­ப­வர்­கள் ‘கம்’ என்­றும் இருந்­தால்; வாழ்க்கை ‘ஜம்’ என்று இருக்­கும்” எனச் சிறீ சாய்­ராம் பொறி­யி­யல் கல்­லூரி வளா­கத்­தில் நடை­பெற்ற ‘சர்க்­கார்’ திரைப்­ப­டத்­தின் இசை வெளி­யீட்டு விழா­வில் (02–10–18)  நடி­க­ராக இருந்த ஜோசப் விஜய் பேசி­யதை நிலை­நாட்­டும் விதத்­தில்; தற்­பொ­ழுது அர­சி­ய­லில் மெய்ப்­பித்­துக் காட்டி வரு­கி­றார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>