<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,432,957,1225" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 01 2026 03:46:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260901T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01092026-MDU-07" position.sequence="07" ex-ref="01092026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="58">அடி பிறழாமல் விடை தருக!</lang>
	</hl1>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup837050_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="19">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">.வெ.க. அரசு அமைந்தது முதலாக அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற அசம்பாவிதங்களை கல்வியாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் கண்டித்தோம். பேருந்தில் இடம் பிடிப்பதை போல த.வெ.க. துண்டை தூக்கி எறிந்து வகுப்பறை பெஞ்சுகளில் இடம் பிடித்தார்கள் அக்கட்சியினர்! மாணவர்களுக்கு கல்வியையும் அறத்தையும் கற்றுத்தர வேண்டிய இடங்களில் அரசியல் கூட்டம் போல கோஷம் போட வைத்தார்கள். இவற்றை யெல்லாம் நம்மோடு சேர்ந்து இன்றைய கல்வி அமைச்சரும் கண்டித்தார்! அறிக்கை விடுத்தார்! அடுத்த நாளே அக்கட்சியினர் மீண்டும் பள்ளிகளுக்குள் படையெடுத்தனர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மாதிரியான அட்ராசிட்டிகளும் ஒருவகையான Take diversion-தான் என இப்போது தோன்றுகிறது. ஏனென்றால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மீது ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது. அக்கேள்விகள் தங்கள் மீது பாயக்கூடாது என்பதற்காகத்தான் கால்வாயை நேரடியாக கடலுக்குள் திருப்பி விட்டார்களோ எனும் எண்ணம் மேலோங்குகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்களின் சார்பாக, ஆசிரியர்கள், மாணவர்களின் சார்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடமும், இந்த Take Diversion அரசிடமும் சில கேள்விகளை முன்வைக்கிறோம். அனைத்துக் கேள்விகளுக்கும் அடி பிறழாமல் விடையளிக்க வேண்டியது அவர்களின் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">I.அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 1 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ‘மாணவர்களுக்கு Identity Card வழங்கப்படும்’ என சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்தார். ‘அதில் சாதி விவரங்களும் இருக்கும்’ என்றார். திராவிட இயக்கங்கள் போன்ற முற்போக்கு இயக்கங்களின் எதிர்ப்புக்குப் பிறகு ‘அது அப்படி இல்லை. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது’ என்றார். சரி தவறாகவே புரிந்துகொண்டோம் என வைத்துக்கொள்வோம். மற்ற விவரங்களை ஏன் அடையாள அட்டையில் பதிய வேண்டும். மற்ற விவரங்கள் என்றால் என்னென்ன விவரங்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த முறையைத்தான் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையிலும் வலியுறுத்துகிறார்கள். APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டத்தைNEP-2020 முன்வைக்கிறது. அதாவது ‘ஒரே நாடு ஒரே அடையாள அட்டை’ என்ற அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் செயல்படப்போகிறதா? அரசுப் பள்ளி மாணவர்களின் தகவல்களை ஒன்றிய அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் திட்டத்தை செயல்படுத்தப்போகிறதா? ‘சாதி விவரங்கள் இடம்பெறாது’ என கூறியுள்ள நிலையில் இந்த முறையே பின்பற்றப்படாது எனும் உறுதிமொழியை வழங்க அரசு தயாராக உள்ளதா? அல்லது என்னென்ன விவரங்கள் இடம்பெறும் என்பதை இந்த Transparent அரசு விளக்க வேண்டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 2 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்த தங்கம்மாபட்டியில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு! திருப்பத்தூர் கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீரை மாணவர்கள் அகற்றியுள்ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதை உங்கள் கூட்டணிக் கட்சியின்  மாணிக்க தாகூர் அவர்களும் கண்டித்துள்ளார் (விஜய் சார் பிரதமர் வேட்பாளர் என்றவுடன் கோபப்பட்டு கண்டித்தாரா என்பது விளங்கவில்லை. ஆனால் கண்டித்தது சரிதான்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை மக்களுக்கும் மாண்புமிகு மாணவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 3 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே தெரியும். அவர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெறும். இந்தாண்டு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையை இதுவரை வெளியிடாதது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘கொள்கை விளக்கப் புத்தகத்தில் எழுதியுள்ளோம்.படித்துப்பாருங்கள்’ என மேதாவித்தனமாகப் பேசாமல்,மக்களுக்குச் சொல்லுங்கள் சார். தேர்வாகியுள்ள மாணவர்களை அழைத்து பாராட்டு விழா நடத்தப்படுமா? அல்லது அவர்களையும் உங்கள் கட்சிப் பெயரை சொல்லச் சொல்லி கோஷம் போட வைப்பீர்களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 4 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழில் வெளியான சிறந்த நூல்களை ஆங்கிலம் முதலான அயல் மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியான ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ் இதுவரை 74 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் தற்போதைய நிலை என்ன? கொள்கை புத்தகத்திலும் இதுகுறித்த விளக்கம் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 5 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திராவிட மாடல் அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட மாவட்ட புத்தகத் திருவிழாக் களுக்கான நிதியை அதிகரித்துள்ளீர்கள். நல்லது… அதே நேரத்தில் இலக்கியத் திருவிழாக்கள் பற்றி ஏன் பேச மறுத்துள்ளீர்கள். இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 6 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத்தமிழறிஞர் கலைஞர் மொழி பெயர்ப்புத் திட்டம் தொடருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 7 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘திராவிடக்களஞ்சியம்’ திட்டத்தின் மூலம் கழக ஆட்சியில் மொத்தம் 7 தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்தஏழு தொகுப்புகளும் மொத்தம் 4,740 பக்கங்களைக் கொண்டது. மீதம் உள்ள 7 தொகுப்புகள் இந்த ஆட்சியில் வெளியிடப் படுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 8</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">: PM Shri பள்ளி திட்டம் குறித்த நிலைப்பாடு தான் என்ன? ‘முதலமைச்சரிடம் இத்திட்டம் குறித்து விவாதித்துள்ளோம்’ என்றும் ‘அதிகாரிகளுடன் ஆலோசித்து இத்திட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் விளக்கங்கள் ஊடகங்களில் வந்தது. இந்த விளக்கம் வந்த இரண்டொரு நாளில் ABVP நிர்வாகிகள் சட்டமன்றத்திற்கு வந்தார்கள். ‘PM Shri திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்’ என்றும் ABVP அமைப்பினர் பேட்டியளித்தனர். ஆக மொத்தம் இத்திட்டம் மீது என்னதான் ஆலோசனை நடக்கிறது? தமிழ்நாட்டிற்குள் PM Shri பள்ளி வரப்போகிறதா? இல்லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 9 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான நிதி ரூ.5,109 கோடி நிலுவையில் உள்ளது’ என கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியுள்ளீர்கள். ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். அதற்காக உங்களுடன் சேர்ந்து நாங்களும் குரல் கொடுக்கிறோம். ஆனால் இதுகுறித்து ஏன் சார் சட்டமன்றத்தில் விவரிக்காமல் தவிர்த்தீர்கள்? மாணவர்களின் நலன் சார்ந்த விஷயம் அல்லவா இது? கல்வி வளர்ச்சி சார்ந்தது அல்லவா? துறை சாராத கேள்விகளுக்கெல்லாம் எழுந்து பேசும் அமைச்சர் ராஜ்மோகன் ஏன் இதுகுறித்து இதுவரையிலும் பேசவில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">கேள்வி 10 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆசிரியர் தகுதித் தேர்வு தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல் நாள் ‘ஆசிரியர் தகுதித் தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என ஏன் கம்பீரமாக உச்சநீதிமன்றத்தில் வாதாடி உள்ளீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? என ஆசிரியர்கள் கேட்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த 10 கேள்விகளையும் ஆசிரியப் பெருமக்களின், மாணவர்களின் கேள்விகளாக நினைத்து அவசியம் பதில் அளிக்கவும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">II. ‘எல்லாருக்கும் தெரியும்! ஆனால் உங்களுக்குத் தெரியாத சில தகவல்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூன் 4:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செங்கல்பட்டு மாவட்டம், வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆலப்பாக்கம் த.வெ.க. ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் த.வெ.க.வினர் பரிசுப் பொருட்களை வழங்கி பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அரசியல் பிரச்சாரம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூன் 17:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆரணியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் இரண்டு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூன் 18:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்து த.வெ.க.வினர் முதலமைச்சர் படத்தை மாட்டி இடையூறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூன் 18:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், உத்­தி­ர­மே­ரூர் ஒன்­றி­யம், தள­வ­ராம்­பூண்டி ஊராட்­சி­யில் வினோபா நகர் பகு­தி­யில் ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப்­பள்ளி செயல்­பட்டு வரு­கி­றது. இங்கு காலை 11 மணி­ய­ள­வில் த.வெ.க. கட்­சி­யின் ஒன்­றிய செய­லா­ளர் ராஜேஷ் உள்­ளிட்ட 10க்கும் மேற்­பட்டோர் மாணவ, மாண­வி­கள் பாடம் படித்­துக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென வகுப்பறைக்குள் நுழைந்து செல்­போன்­க­ளு­டன் ரீல்ஸ் எடுத்­த­னர். மேலும் கையில் வைத்­தி­ருந்த படத்­தைக் காட்டி இவர் யார் என்று தெரி­கி­றதா என்று மாணவ, மாண­வி­க­ளுக்குப் பாடம் எடுக்­கத் தொடங்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூன் 24:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காஞ்சிபுரம் ஜே.ஜே.நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாடவேளை நடந்துகொண்டிருந்த போதே மாணவர்களை 
த.வெ.க.வினர் நடத்திய நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூலை 3:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு. எளிய பின்னணியில் இருந்து வந்த மாணவியரிடம் மேட்டிமைத் தனத்தோடு அவர் நடந்துகொண்ட விதம், நாடு முழுவதும் கண்டனத்தை பெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூலை 7:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருத்தணி அருகே அரசுப்பள்ளிக்குள் நுழைந்து முதலமைச்சர் படத்தை மாட்டிவிட்டு,   
த.வெ.க.வினர் ரீல்ஸ் எடுத்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜூலை16:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவரால் கத்திக்குத்து. பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதிய ரீதியான குழு மோதலில் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஆகஸ்ட் 14 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் தனுஷ், ஆகஸ்ட் 12 அன்று சக மாணவர்களின் கஞ்சா பயன்பாட்டை ஆசிரியருக்குத் தெரியப்படுத்தியதால்  ஆகஸ்ட் 14, 2026 அன்று மாலையில் சக மாணவர்களால் பேருந்து நிலையம் அருகில் வைத்துத் தாக்கிப் படுகொலை. ஆனால் ‘சீனியாரிட்டி’ தொடர்பான முன்விரோத மோதலில் பிளஸ் 1 மாணவர் மற்றும் கூட்டாளிகள் அடித்துக் கொலை என வழக்குப்பதிவு.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>