<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,693" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 01 2026 03:53:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260901T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01092026-VLR-04" position.sequence="04" ex-ref="01092026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="81">செப்டம்பர் மாதம்- இது திராவிட மாதம்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup847386_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ர்­கழி மாத அதி­கா­லை­யில் வைண­வத் திருக்­கோ­யில்­க­ளில் திருப்­பாவை ஒலிப்­பது 
வழக்­கம். சைவத் திருக்­கோ­யில்­க­ளில் திரு­வெம்­பாவை பாடப்­ப­டும். இரண்டு சமய நெறி­க­ளும் போற்­று­கின்ற மாத­மாக மார்­கழி அமை­யும். 
ரம­லான் மாதம் முஸ்­லிம்­க­ளின் நோன்பு மாதம். புனி­த­வெள்­ளி­யும்-­ ஈஸ்­டர் திரு­நா­ளும் வரு­கின்ற மாதத்­தில் கிறிஸ்­த­வர்­கள் சிறப்­புப் பிரார்த்­த­னை­ களை மேற்­கொள்­வார்­கள். அவ­ர­வர் மார்க்­கம் சார்ந்த சிறப்பு மாதங்­கள் இருப்­ப­து­போல, 
திரா­விட இயக்­கத்­திற்­கான சிறப்பு மாத­மாக 
செப்­டம்­பர் மாதம் அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தலை­மு­றை­க­ளின் இலட்­சி­யக் கன­வைத் தனது தொடர்ச்­சி­யான போராட்ட செயல்­பா­டு­க­ளால் நிறை­வேற்­று­கின்ற திரா­விட இயக்­கத்­தின் வர­லாற்­றில் ஓர் ஆண்­டின் 365 நாட்­க­ளுமே முக்­கி­ய­மா­ன­வை­ தான். ஒவ்­வொரு நாளி­லும் ஒரு முக்­கி­ய­மான 
வர­லாற்று நிகழ்வு நிச்­ச­யம் இருக்­கும். எனி­னும், செப்­டம்­பர் என்­ப­தற்­குக் கூடு­தல் சிறப்பு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செப்­டம்­பர் 17- தந்தைபெரி­யார் பிறந்­த­நாள். செப்­டம்­பர் 15- பேர­றி­ஞர் அண்ணா பிறந்­த­நாள். பெரி­யார் பிறந்த செப்­டம்­பர் 17ஆம் நாள்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் பிறந்­தது. இந்த மூன்­றை­யும் இணைத்து முப்­பெ­ரும்­ வி­ழா­வா­கக் கொண்­டா­டும் வழக்­கத்தை முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் உரு­வாக்­கி­னார். இயக்­கத்­தின் கொள்­கை­களை விளக்­கி­டும் வகை­யில் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், பட்­டி­மன்­றம், சொற்­பொ­ழி­வு­கள் என 3 நாட்­கள் திரா­வி­டத் திரு­வி­ழா­வா­கக் கொண்­டா­டும் வழக்­கத்தை முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் முன்­னெ­டுக்க, முப்­பெ­ரும் விழாவை செப்­டம்­பர் மாதத்­தில் கழ­கம் தொடர்ந்து சிறப்­பாகக் கொண்­டாடி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இயக்­கத்­திற்­காக அரும்­பா­டு­பட்ட கழக முன்­னோ­டி­க­ளைப் போற்­றும் வகை­யில் பெரி­யார்-­அண்­ணா-­ க­லை­ஞர்-­ பா­வேந்­தர் பெயர்­க­ளில் 
விரு­து­கள் வழங்­கும் வழக்­கத்­தை­யும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலைஞர் உரு­வாக்­கி­னார். விரு­து­களை வழங்­கிச் சிறப்­பிக்­கும் வழக்­க­மும் தொடர்­வ­து­டன் இன­மா­னப் பேரா­சி­ரி­யர் பெய­ரி­லும், கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் பெய­ரி­லும் மேலும் 
2 விரு­து­க­ளும் இந்­தப் பட்­டி­ய­லில் இணைந்­துள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முப்­பெ­ரும் விழா நடைபெறும் நாள் மட்­டு­மல்ல,செப்­டம்­பர் மாதத்­தின் 30 நாட்­க­ளுமே திரா­விட மாதம்­தான் என்­பதை திரா­விட இயக்­கத்­தால் பயன்­பெற்று, அந்த நன்­றியை மற­வா­த­வர்­கள் இணை­ய­த­ளத்­தில் தொடர்ந்து பதி­விட்டு 
வந்­த­னர். செப்­டம்­பர் மாதத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட திரா­விட இயக்­கத்­தின் முக்­கிய முடி­வு­கள், தலை­வர்­க­ளின் வாழ்­வில் முக்­கிய நிகழ்­வு­கள் உள்­ளிட்­ட­வற்­றை­யும் எடுத்­துக்­காட்­டி­னர். 
கலை­ஞர் ஆட்­சிக்­கா­லத்­தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, திரா­விட நாய­கர் முத்­து­வேல் 
கரு­ணா­நிதி ஸ்டாலின் ஆட்­சி­யில் காலை 
உண­வுத் திட்­டம், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை உள்­ளிட்ட பல திட்­டங்­கள் தொடங்­கப்­பட்­டது செப்­டம்­பர் 15ஆம் நாள்­தான். இன்­னும் பல 
சிறப்­பு­களும் திரா­விட மாத­மான செப்­டம்­ப­ருக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­ந­கர் சென்­னை­யில் திரா­வி­டக் கட்­ட­டக் கலைக்­கு­ரிய முகப்­பு­டன் கோட்டை போலத் 
திக­ழும் தி.மு.க.வின் தலைமை நிலைய அலுவல­க­மான அண்ணா அறி­வா­ல­யம் 1987ஆம் ஆண்டு செப்­டம்­பர் 16ஆம் நாள் 
திறக்­கப்­பட்­டது. 1988ஆம் ஆண்டு செப்­டம்­பர் முப்­பெ­ரும் விழா­வின் போது­தான் இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கும் வகை­யி­லான மகத்­தா­னப் பேர­ணி­யு­டன் தேசிய முன்­னணி தொடக்க விழா நடைபெற்­றது. அதே முப்­பெ­ரும் விழா நேரத்­தில்­தான் அறி­வா­ல­யத்­தில் கலை­ஞர் அரங்­கம் 
திறக்­கப்­பட்­டது. 2003ஆம் ஆண்டு செப்­டம்­பர் 30ஆம் நாளன்று இந்­தி­யா­வின் முன்­னாள் 
குடி­ய­ர­சுத் தலை­வர் கே.ஆர்.நாரா­ய­ணன் 
அவர்­க­ளால் அறி­வா­ல­யத்­தில் திரா­விட இயக்க வர­லாற்­றுக் கண்­காட்­சி­யான கலை­ஞர் 
கரு­வூலம் திறந்து வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கம் ஏறத்­தாழ 115 ஆண்­டு­கால வர­லாற்­றைக் கொண்­டது. அதில் திரா­வி­டர் 
கழ­கம் 81 ஆண்­டு­கால வர­லாற்­றை­யும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் 76 ஆண்­டு­கால வர­லாற்­றை­யும் கொண்­டவை. இவை இரண்­டுக்­கும் அடிப்­ப­டை­யான சுய­ம­ரி­யாதை இயக்­கம் நூற்­றாண்­டைக் கடந்­தி­ருக்­கி­றது. இந்த நெடிய அனு­ப­வத்­தின் 
வர­லாற்றை அடுத்­த­டுத்த தலை­முறைக்கு உணர்த்த வேண்­டிய கடமை உள்­ளது. அந்­தக் கட­மையை நினை­வூட்­டும் மாதம்­தான், திரா­விட மாத­மான 
செப்­டம்­பர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேநீர்க் கடைப் பேச்சு முதல் மாநாட்டு உரை­கள் வரை அனைத்து வகை பரப்­பு­ரை­க­ளை­யும் மேற்­கொண்­டவை திரா­விட இயக்­கங்­கள். திண்­ணைப் பிரச்­சா­ரம், பொதுக்­கூட்­டம், நாட­கம், திரைப்­ப­டம், தொலைக்­காட்சி எனக் காலத்­திற்­கேற்ற வகை­யில் தனது  பரப்­பு­ரை­யின் அணு­கு­மு­றை­யைக் கைக்­கொண்­டன. புத்­தா­யி­ரம் (2000) ஆண்­டுக்­குப் பிறகு தக­வல் தொழில்­நுட்­பத்­தின் அதி­வேக வளர்ச்­சி­யும் அதன் பர­வ­லும் ஜென்ஸி எனப்­ப­டும் இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு புது உல­கத்தை உரு­வாக்­கிக் காட்­டி­யி­ருக்­கி­றது. அந்த உல­கத்­திற்­குள் பய­ணித்து, ஒரு நூற்­றாண்­டைக் கடந்த திரா­விட இயக்க வர­லாற்­றை­யும் அதன் தாக்­கங்­க­ளை­யும் இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு உணர்த்த வேண்­டிய பணியை மேலும் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டிய 
தரு­ணம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இன்­றைய தலை­மு­றை­யி­னர் எதி­லும் வேக­மாக செயல்­ப­டு­கின்­ற­னர். அந்த வேகத்­தி­லேயே வர­லாற்­றின் பக்­கங்­களை சரி­யா­கக் கவ­னிக்­கா­மல் 
புரட்­டி­வி­டு­கின்­ற­னர். களைப்பு தெரி­யா­மல் அவர்­கள் வேக­மா­கப் பய­ணிக்­கும் வகை­யில் காலத்­தின் சாலை­யில் இரு­பு­ற­மும் நிழல் தரும் மரங்­கள் நிறைந்­தி­ருக்­கின்­றன. தங்­கள் மீது வெயில் படா­மல் இந்த மரங்­களை நட்­டது யார்? நமக்கு நிழல் தரும் வகை­யில் மரங்­களை வளர்த்­தது யார்? 
என்­பதை அவர்­கள் உணர்­வ­தில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிழல் தரும் பாதைக்­குக் கார­ண­மா­ன­வர்­களை மறந்­து­விட்டு, வேறு வகை­யான கவர்ச்­சிப் போதை­களுக்கு ஆட்­பட்­டு­வி­டு­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட தலை­மு­றை­யி­னரை மீட்­டெ­டுக்க வேண்­டிய கட­மை­யும் திரா­விட இயக்­கத்­திற்­குத்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க என்­பது சமு­தாய மறு­ம­லர்ச்­சிக்­கான அர­சி­யல் இயக்­கம். பத­வி­யில் இருந்­தா­லும் 
இல்­லா­விட்­டா­லும் அது தமிழ்ச் சமு­தா­யத்­தின் வளர்ச்­சிக்­குத் தொடர்ந்து பாடு­ப­டும். திரா­விட மாத­மான  செப்­டம்­பர் மாதம் நம்மை நாமே புதுப்­பித்­துக் கொண்டு, நம்­மைச் சுற்­றி­யுள்ள சமு­தா­யத்­தை­யும் சரிப்­ப­டுத்த வேண்­டிய பணி­க­ளைத் தொடங்­கு­வ­தற்கு ஏற்ற மாத­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘ரீல்ஸ்’ உல­கம்­தான் ‘ரியல்’ உல­கம் என்று வாழ்­கிற தலை­மு­றை­யி­ன­ரி­டம், எளி­மை­யான முறை­யில் திரா­விட இயக்­கக் கொள்­கை­க­ளை­யும், அதன் 
சாத­னை­க­ளை­யும், வர­லாற்று நிகழ்­வு­க­ளை­யும் எடுத்­துச் சொல்­ல­வேண்­டிய தேவை அதி­க­மாக 
உள்­ளது. ஒரு நிமி­டத்­தில் ஒரு செய்­தியை சொல்­லும் குறுங்­கா­ணொ­லி­கள், சமூக வலைத­ளங்­கள் வாயி­லான உரை­யா­டல்­கள், நூல­கங்­க­ளில் சந்­திப்­பு­கள், வாசிப்பு இயக்­கங்­கள், வீக் எண்ட் எனப்­படும் வார இறுதி நாட்­க­ளுக்­கான செயல்­திட்­டங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு வகை­யி­லான பணி­களை இந்த திரா­விட மாதத்­தில் தொடங்க வேண்­டி­யது கட்­டா­ய­மா­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளம் தலை­மு­றை­யி­னர் விரும்­பு­கிற வடி­வங்­க­ளில், அவர்­க­ளைச் சென்று சேரக்­கூ­டிய இன்ஸ்­டா­கி­ராம், யூ-டி­யூப், ஷேர்­ஷாட் உள்­ளிட்ட தளங்­களில், அவர்­க­ளுக்­குப் புரி­யக் கூடிய சொற்­க­ளில் திரா­விட இயக்க வர­லாற்­றை­யும் சாத­னை­க­ளை­யும் வெளிப்­ப­டுத்த வேண்­டும். அவர்­களை ஈர்க்க வேண்­டும். எதை­யும் எளி­தில் புரிந்­து­ கொள்­ளக்­கூ­டி­ய­வர்­க­ளா­க-­ ஒ­ளி­வு­ம­றை­வின்­றிப் பேசக்­கூ­டி­ய­வர்­க­ளாக உள்ள இளந்­த­லை­மு­றை­யி­ன­ரி­டம் உண்மை வர­லாற்­றைச் சொல்­லிப் புரி­ய­வைத்­தால், திரா­வி­டத்தை நோக்­கிய அவர்­க­ளின் தேடல் கூடும். அப்­போது அவர்­க­ளி­டையே மொழிப்­பற்று, சமூக நீதி, மாநில உரிமை உள்­ளிட்ட இலட்­சி­யங்­களை விளக்­கிட முடி­யும். கவர்ச்­சியை நம்­பிய போலி­யான மாற்­றம் தகர்ந்து, புரட்­சி­கர மாற்­றம் நிக­ழும். திரா­விட மாத­மான செப்­டம்­பர் மாதத்தை அந்த உண்­மை­யான மாற்­றத்­திற்­கா­னத் தொடக்­க­மா­கக் கொண்டு, ஆர்­வ­முள்ள அனை­வ­ரை­யும் ஒருங்­கி­ணைத்து புதிய பய­ணத்­தைத் தொடங்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பொய்­க­ளைப் பரப்பி அதன் மீது பதவி நாற்­காலி போட்டு உட்­கார்ந்து சுகம் காணும் கூட்­டத்­திற்கு மாற்­றாக, உண்­மை­யைக் கொண்டு 
வலு­வான அடித்­த­ளத்­தைக் கட்ட வேண்­டி­ய­வர்­களாக திரா­விட இயக்­கத்­த­வர்­கள் இருக்­கி­றார்­கள். கடு­மை­யான அந்­தப் பணி­யைக் களத்­தில் செய்ய வேண்­டிய பொறுப்பு தி.மு.க.வின் தோள்­களில் சுமத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. பெரி­யார்-­அண்­ணா-­க­லை­ஞர் வகுத்த பாதை­யில் கழ­கத் தலை­வர் 
திரா­விட நாய­கர் வழி­காட்­டு­த­லில், கழ­கத்­தின் இளம்­த­லை­வர்-­ -– எதிர்க்­கட்­சித் தலை­வர் துணை­யுடன் பய­ணிப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இலட்­சி­யம் உயர்­வா­னது. அதை அடை­வ­தற்­கா­னப் பாதை நெடி­யது. கொள்கை உறு­தி­யு­டன் பய­ணம் தொட­ரட்­டும். வெல்­லட்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>