<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 01 2026 03:55:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260901T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01092026-VLR-05" position.sequence="05" ex-ref="01092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">முதல்வராக ஒழுங்காக முடிவெடுக்கத் தெரியாத விஜய்,   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">மோசடி பொய் பிரச்சாரத்தின் பலனாக பிரதமராக நினைக்கலாமா?</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame847976_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup848001_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M3bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M4bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ந</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">டி­கர் விஜய் ஒரு சில இலட்­சி­யங்­க­ளால் தூண்­டப் ­பட்டு, ஒரு வலு­வான கட்சி அமைப்பை உரு­வாக்கி, தொண்­டர்­க­ளுக்கு அர­சி­யல் பயிற்சி வகுப்­பு­கள் நடத்தி, கொள்கை விளக்க மாநா­டு­கள் நடத்தி, பிரச்­சா­ரம் செய்து, கட்­சிக் கொள்­கை­களை வலி­யு­றுத்தி போராட்­டங்­கள் செய்து, அவை மூலம் மக்­களை அணி­தி­ரட்டி ஆட்­சிக்கு வர­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை. சுருங்­கச் சொன்­னால் அவர் அர­சி­யல்­வா­தி­யாக மாற­வே­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாறாக, அவ­ரது திரைப்­பிம்ப கவர்ச்­சியை பயன்­படுத்தி, அவ­ரைப் பார்க்க வரும் ரசி­கர் கூட்­டத்தை காட்­சிப்­ப­டுத்தி, புஸ்ஸி ஆனந்த்­திற்கு ரசி­கர் மன்­றங்­களை கட்சி அமைப்­பாக மாற்­றும் பணியை அவுட் சோர்­ஸிங் செய்து, ஆதவ் அர்­ஜு­னா­வின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ், ஜெக­தீஷ் நடத்­திய ரூட் நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றின் மூலம் செல் பேசி என்ற செல்­போ­னில் வாட்ஸ் அப், இன்ஸ்­டா­கி­ராம், டெலி­கி­ராம் செய­லி­கள் மூலம் மிகைத் தக­வல்­களை, பிம்­பங்­களை பிரச்­சா­ரம் செய்து ஆட்­சிக்கு வந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">செல்­போன் என்­பது இளம் தலை­மு­றை­யி­ன­ரின் உடல் உறுப்­பாக கடந்த பத்­தாண்­டு­க­ளில் மாறி­யுள்­ளது. அதி­லும் யூடி­யூப், வாட்ஸ் அப், இன்ஸ்­டா­கி­ராம், எக்ஸ், டெலி­கி­ராம் என பல செய­லி­கள் மக்­க­ளின் கவ­னத்தை பெரு­ம­ளவு ஈர்த்து அவர்­கள் சிந்­த­னையை ஆக்­கி­ர­மிக்­கும் ஆற்­ற­லு­டன் விளங்­கு­கி­றது. தன்­னு­டைய செல் போனில் வரும் செய்­தியை, ரீல்ஸ்­களை, தங்­க­ளுக்கு வரும் அந்­த­ரங்க தக­வ­லாக நினைக்­கி­றார்­கள். அவற்றை பகிர்­வ­தில் பெரு­மை­ய­டை­கி­றார்­கள். அது பொய்யா, நிஜமா என்று பகுத்­த­றி­வ­தில் எந்த ஆர்­வ­மும் இருப்­ப­தில்லை. சுவா­ர­சி­ய­மாக இருந்­தால் போதும் என்­று­தான் நினைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பொது­மன்­றத்­தில் ஒவ்­வொரு ஊடக வடி­வம் தோன்­றும்­போ­தும் இது நடந்­துள்­ளது. அச்சு ஊட­கம் தோன்­றி­ய­போ­தும் பல பொய்த் தக­வல்­களை எளி­தில் பரப்­பும் சாத­ன­மாக விளங்­கி­யது. காந்­தி­யைக் குறித்தே பல கட்­டுக்­க­தை­கள் வட மாநி­லங்­க­ளில் எழு­தப் பட்­டன. அவ­ருக்கு தெய்­வீக சக்தி இருக்­கி­றது; அவரை இகழ்ந்­த­வர்­க­ளுக்கு விபத்­து­கள் நடந்­தன, அவரை வணங்­கு­ ப­வர்­க­ளுக்கு பல நன்­மை­கள் கிடைத்­தன என்­றெல்­லாம் உள்­ளூர் பத்­தி­ரி­கை­க­ளில் எழு­தப்­பட்­டதை வர­லாற்­றா­சி­ரி­யர் ஷஹித் அமீன் பதிவு செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஹிட்­ல­ரின் அர­சில் பிரச்­சா­ரத்­திற்­குப் பொறுப்­பேற்­ற­வர் ஜோசப் கோய­பல்ஸ். அவர் மிகை­யான தக­வல்­களை, பொய் பிரச்­சா­ரத்தை, மூளைச் சல­வையை செய்­வ­தில் வல்­ல­வ­ராக இருந்­த­தால் “கோய­பல்ஸ் பிரச்­சா­ரம்” என்­பதே ஓரு சொல­வ­டை­யாக மாறி­யது. அதே போன்று இத்­தா­லிய பாசி­சத்தை உரு­வாக்­கிய முசோ­லி­னி­யும் பிம்ப கட்­ட­மைப்­பில் வல்­ல­வர். நவீன மக்­க­ளாட்சி அர­சி­ய­லில் உரு­வான தலை­வர்­கள் பல­ரது ஆளு­மை­யும் பிம்­பங்­க­ளும் அர­சி­யலை வடி­வ­மைப்­ப­தில் முக்­கிய பங்­காற்­று­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆபி­ர­ஹாம் லிங்­கன் முதல் மாசே துங் வரை பல­ரும் தலைமை பிம்­பங்­க­ளாக மக்­க­ளால் கொண்­டா­டப்­பட்­ட­னர். தமிழ்­நாட்­டில் பெரி­யார், அண்ணா, கலை­ஞர் போன்ற தலை­வர்­கள் கொள்கை வகுப்­பால், கோட்­பாட்­டுத் தெளி­வால் தங்­கள் பேச்­சாற்­ற­லால்,  ஆகி­ரு­தி­யால் மக்­கள் மனங்­க­ளில் கோலோச்­சி­ய­வர்­கள்; சிலை ­க­ளா­க­வும், படங்­க­ளா­க­வும் மக்­கள் பரப்­பில் நிலை­ 
பெற்­ற­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது போன்ற தலை­மைப் பிம்ப உரு­வாக்­கத்­திற்­கும், பிரச்­சா­ரத்­திற்­கும், விஜய் பிம்ப உரு­வாக்­கத்­திற்­கும், 
பிரச்­சா­ரத்­திற்­கும் உள்ள முக்­கி­ய­மான வேறு­பாடு என்­ன­வென்­றால் விஜய் திரை­நட்­சத்­திர கதா­நா­யக பிம்­ப­மா­கப் பிரச்­சா­ரம் செய்­யப்­ப­டு­கி­றாரே தவிர அர­சி­யல் தலை
­வ­ராக அல்ல. அர­சி­ய­லில் இது­வரை அவர் எந்த குறிப்­பட்ட தனிச் செயல்­பாட்­டை­யும் செய்­ய­வில்லை. 
கொள்­கையோ, கோட்­பாடோ பேச­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சரி­யா­கச் சொன்­னால், அவ­ரால் அர­சி­யல் சிந்­த­னை­ களை உள்­வாங்கி வெளிப்­ப­டுத்த இய­லு­வ­தில்லை. பிறர் எழு­திக்­கொ­டுக்­கும் உரை­க­ளைப் படிக்­கி­றார். தவ­றான தக­வல்­கள் இருந்­தா­லும் படிக்­கி­றார். கேள்வி கேட்­டால் பதில் சொல்ல இய­லு­வ­தில்லை. எப்­படி திரைப்­பட நடி­க­ராக பிற­ரால் இயக்­கப்­பட்­டாரோ அப்­படி இயக்­கப்­ப­டு­கி­றார். கட்சி துவங்­கிய பிற­கான இரண்­டரை ஆண்­டுக்­கா­லத்­தில் ஒரு­மு­றை­கூட அவ­ரால் ஊட­கங்­க­ளுக்கு நேர்­கா­ணல் வழங்க இய­ல­வில்லை. சட்­ட­மன்­றத்­தில் மெளன பொம்­மை­யாக அமர்ந்­தி­ருக்­கி­றார். அவர் துறை சார்ந்த கேள்­வி­க­ளுக்­குக் கூட பதி­ல­ளிப்­ப­தில்லை. பேசி­னால் தவ­றா­கத்­தான் பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில் தொகுதி மறு­வ­ரையறையே கூடாது என்று தீர்­மா­னம் போட்­டு­விட்டு, அமித்ஷா எதி­ரில் படிக்­கும்­போது நியா­ய­மாக தொகுதி மறு­வரையறை செய்­ய­வேண்­டும் என்று மாற்­றிப் படிக்­கி­றார். தான் வகிக்­கும் முதல்­வர் பத­விக்கு அரு­கதை உள்­ள­வர் என்­றால் இப்­படி முன்­னுக்­குப் பின் முர­ணாக ஒரு வார இடை­வெ­ளி­யில் பேசு­வாரா என்­பதை யாரும் உரத்­துக் கேட்­ப­தில்லை. இதற்­கெல்­லாம் கார­ணம் அவ­ருக்கு சுய­சிந்­தனை 
என்­பதே சாத்­தி­ய­மில்­லையோ என்­று­தான் கருத 
வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">முடி­வெ­டுக்­கும் ஆற்­றல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதி­கா­ரம் இருந்­தால் யாரும் எந்த முடி­வும் எடுத்­தேன் கவிழ்த்­தேன் என எடுத்­து­வி­ட­லாம். அது வெறும் எதேச்­ச­தி­கா­ரம். உண்­மை­யான முடி­வெ­டுக்­கும் ஆற்­றல் என்­பது பல்­வேறு கோணங்­களை அலசி சிந்­தித்து, சீர்­தூக்­கிப் பார்த்து முடி­வெ­டுப்­ப­து­தான். அப்­படி எடுக்­கும் முடி­வு­களை சட்­ட­மன்­றத்­தி­லும், பொது­மன்­றத்­தி­லும் விளக்­கிப் பேசு­வ­து­தான் தலை­மைப் பண்பு. அத்­த­கைய தலை­மைப் பண்பு இல்­லா­த­வர்­கள் முதல்­வர் பதவி வகிக்க அரு­கதை அற்­ற­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் அரசு பத­வி­யேற்­ற­பின் எடுத்­துள்ள மிக முக்­கி­ய­மான முடிவு பரந்­தூ­ரில் புதிய விமான நிலை­யம் அமைக்­கும் திட்­டத்தை கைவிட்­ட­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் நாம் முக்­கி­ய­மாக ஒரு அர­சி­யல் தத்­துவ அடிப்­ப­டையை கருத்­தில் கொள்ள வேண்­டும். அரசு என்­பது நிலை­யா­னது; தொடர்ச்­சி­யா­னது. அது சட்­டத்­தின் ஆட்சி. மக்­கள் பிர­தி­நி­தி­க­ளில் பெரும்­பான்மை கொண்ட கட்­சி­கள் அர­சாங்­கத்தை அமைக்­க­லாம்; ஆட்சி செய்­ய­லாம். அவை எடுக்­கும் முடி­வு­கள், அர­சா­ணை­க­ளாக மாறிய பின் அர­சின் முடி­வு­கள். ஆட்சி மாற்­றம் நடந்­த­பின் முந்­தைய முடிவை மாற்ற விரும்­பி­னால், அது அரசு தன் முடிவை மாற்­றிக்­கொள்­வ­தா­கத்­தான் பொருள். அப்­படி செய்­யும்­போது அது எங்­கள் கட்­சி­யின் முடிவு என்று மட்­டும் சொல்ல முடி­யாது. ஒரு அர­சின் முடி­வாக ஏன் எடுக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு தகுந்த விளக்­கம் அளிக்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடி­கர் விஜய் பரந்­தூர் பிரச்­சி­னை­யில் சட்­ட­மன்­றத்­திலோ, பொது­மன்­றத்­திலோ எந்த விவா­த­மும் நிகழ்த்­தா­மல் தான் தோன்­றித்­த­ன­மாக முடிவு செய்­துள்­ளார். அதனை புரிந்­து­ கொள்ள ஒரு சில கேள்­வி­களை எழுப்பி அர­சின் தரப்­பில் கூறப்­பட்­ட­வற்றை தொகுத்­துப் பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முதல் கேள்வி சென்­னைக்கு ஒரு புதிய விமான நிலை­யம் தேவையா என்ற கேள்வி. ஆமாம், தேவை என்­று­தான் சொல்­கி­றார் விஜய். அப்­ப­டி­யா­னால் பரந்­தூ­ரில் அதை அமைக்­கா­விட்­டால் எங்கே அமைப்­பீர்­கள் என்­றால், இனி­மேல் மாற்று இட த்தைத் தேர்வு செய்­கி­றோம் என்­கி­றார். ஏற்­க­னவே பத்­தாண்­டு­க­ளாக பல இடங்­களை பரி­சீ­லித்து முயற்­சித்து இறு­தி­யில் இந்த இடம்­தான் சாத்­தி­ய­மா­னது என்று முந்­தைய அர­சாங்­கம் கூறு­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது மீண்­டும் வேறு இடம் தேடு­வோம் என்­பதை சரி­யான நிலைப்­பா­டாக ஏற்க முடி­ய­வில்லை. அப்­படி ஒரு இடத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தி­விட்டு அறி­வித்­தி­ருந்­தால்­கூட விவா­திக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போ­துள்ள மீனம்­பாக்­கம் விமான நிலை­யத் ­தையே விரி­வாக்­கம் செய்­தால் போதுமா என்று கேட்­டால், போதாது என்­கி­றார். ஆனால் ஐந்­தா­வது முனை­யம் அமைப்­போம்; அது அடுத்த பத்­தாண்­டு­க­ளுக்­குத் தேவை­யான போக்­கு­வ­ரத்து தேவை­களை கவ­னித்­துக் கொள்­ளும் என்று சொல்­கி­றார். அப்­படி ஐந்­தா­வது முனை­யம் அமைப்­ப­தற்­கான திட்­ட­வ­டி­வம், சாத்­தி­யப்­பாட்டு அறிக்கை (feasibility report) எது­வும் அர­சின் கைவ­சம் உள்­ளதா என்­றால் அது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­ப­டி­யா­னால் எந்த மாற்று ஏற்­பா­டும் திட்­ட­வட்­ட­ மாக இல்­லா­மல் ஏற்­க­னவே துவங்­கப்­பட்ட திட்­டம் கைவி­டப் படு­கி­றது என்று பொருள். அப்­படி அவ­ச­ர­மாக திட்­டத்­தைக் கைவி­டு­வ­தற்­கான கார­ணம் என்ன என்­பது அடுத்த கேள்வி. அதற்கு விஜய் கூறும் பதில் பரந்­தூர் பகு­தி­யில் உள்ள ஏக­னா­பு­ரம் கிரா­மத்து விவ­சா­யி­ கள் திட்­டத்­திற்கு எதி­ரா­கப் போரா­டி­னார்­கள். அதற்கு அவர் பத­விக்கு வரு­வ­தற்கு முன்­னால் ஆத­ரவு தெரி­வித்­தார் என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் அடங்­கி­யுள்ள முக்­கி­ய­மான கேள்வி என்­ன­வென்­றால், விவ­சாய நிலங்­களை கைய­கப்­ப­டுத்­து­வதே தவறு என விஜய் கொள்கை முடிவு எடுக்­கி­றாரா என்­ப­து­தான். ஏனெ­னில் வேறு எங்கு விமான நிலை­யம் வந்­தா­லும், அல்­லது தொழிற்­சா­லை­களோ, அரசு அலு­வ­ல­கங்­களோ, குடி­யி­ருப்­பு­களோ உரு­வா­னா­லும் விவ­சாய நிலங்­களை கைய­கப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கும். ஏக­னா­பு­ரம் விவ­சா­யி­கள் கோரிக்கை போல அங்­குள்­ள­வர்­க­ளும் கோரி­னால், அரசு அந்­தத் திட்­டங் ­க­ளை­யும் கைவி­டுமா என்று கூற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விவ­சா­யி­க­ளுக்­குப் போது­மான இழப்­பீடு தரு­வது, வாழ்­வா­தா­ரங்­களை உரு­வாக்­கு­வது, வேலை வாய்ப்பு என பல அம்­சங்­க­ளில் கவ­னம் செலுத்தி சிறப்­பா­கச் செய்­ய­லாம். ஆனால் விவ­சாய நிலங்­கள் அப்­ப­டியே தொடர வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை எடுக்க முடி­யுமா என்­பது கேள்வி. ஒரு­வேளை அடுத்த தலை­மு­றை­யில் அவர்­களே நிலங்­களை விற்­று­விட்டு வேறு தொழில்­க­ளுக்­குச் செல்ல மாட்­டார்­கள் என்­ப­தற்­கும் எந்த உத்­தி­ர­வா­த­மும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை ஒட்­டிய மற்­றொரு கேள்வி, ஏற்­க­னவே தி.மு.க. ஆட்­சி­யில் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட 1800 ஏக்­கர் நிலத்தை அரசு என்ன செய்­யப் போகி­றது என்­ப­தா­கும். அதற்கு அந்த நிலத்தை வேறு தொழில்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­து­வோம் என த.வெ.க. அமைச்­சர் கூறு­கி­றார். முத­லில் சட்ட ரீதி­யாக அப்­படி செய்ய முடி­யுமா என்­பது                                                ஒரு கேள்வி. இரண்­டா­வது கேள்வி அப்­ப­டிச் செய்­தால் நாளா­வட்­டத்­தில் நீர்­நி­லை­க­ளும், சுற்­றுச் சூழ­லும் பாதிக்­கப்­ப­டாதா, பிற விவ­சாய நிலங்­க­ளும் பாதிக்­கப்­ப­டாதா என்ற கேள்வி. இந்த அம்­சத்­தி­லும் விஜய்க்கு எந்த 
சிந்­த­னைத் தெளி­வும் இல்­லை­யென்­பது வெளிப்­ப­டை­ யா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்து சூழ­லி­யல் கார­ணங்­கள். அர­சின் கைவ­ச­மி­ருக்­கும் நிலப்­ப­கு­தி­ யில் பெரு­ம­ளவு நீர்­நி­லை­கள் உள்­ளன என்­பது பிரச்­சினை. ஒன்று, அத­னால் விமான நிலை­யத்­திற்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு. இரண்டு, அந்த நீர்­நி­லை­கள் நீர்­ப்பி­டிப்­புப் பகு­தி­க­ளாக இருப்­ப­தால், அவை இல்­லா­மல் மழை வரும்­போது வெள்­ளப்­பெ­ருக்கு பிற குடி­யி­ருப்­புப் பகு­தி­களை பாதிக்­கும் என்ற சாத்­தி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த சிக்­கல்­களை எப்­படி எதிர்­கொள்­வது என்­ப­தைக் குறித்து ஆராய ஓய்­வு­பெற்ற அதி­காரி மச்­சேந்­தி­ர­நா­தன் அவர்­கள் தலை­மை­யில் குழு அமைக்­கப்­பட்­டது. அந்­தக் குழு­வின் அறிக்­கையை தி.மு.க. அரசு வெளி­யி­ட­வில்லை என்று குற்­றம் சாட்­டப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த அறிக்கை பரந்­தூர் திட்­டம் நல்­ல­தல்ல என்று கூறி­யி­ருந்­தால் அதை இப்­போது விஜய் அரசு வெளி­யி­ட­லாமே? அந்த அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் திட்­டத்­தைக் கைவி­டு­கி­றோம் என்று கூற­லாமே? அப்­படி ஒரு­வேளை அந்த அறிக்கை திட்ட த்தை கைவி­டும்­படி கூற­வில்லை என்­றால், இந்த அரசு வேறொரு குழுவை அமைத்து சூழ­லி­யல் பாதிப்­பு­களை ஆரா­ய­லாமே? அல்­லது ஒன்­றிய சூழ­லி­யல் அமைச்­ச­கத்­தி­டம் கருத்து கேட்­க­லாமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">குறைந்­த­பட்­சம் அரசு திட்­டத்தை எத­னால் கைவிட நினைக்­கி­றது என்று ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்­பித்து, அதனை சட்­ட­மன்­றத்­தில் விவா­தித்­தி­ருக்­க­ லாமே? அதற்­குத்­தானே சட்­ட­மன்­றம் இருக்­கி­றது? அவ்­வாறு செய்­யா­மல் எடுத்­தேன்கவிழ்த்­தேன் என்று 110 விதி­யின் கீழ் 
அறி­விக்க வேண்­டிய தேவை எங்­கி­ருந்து வரு­கி­றது? எவ்­வ­ளவு பொறுப்­பற்ற செய்கை இது? மாநில பொரு­ளா­தார வளர்ச்­சி­யின் உயிர்­நா­டி­யான பிரச்­சி­னை­யில் இப்­ப­டியா முடி­வெ­டுப்­பது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அர­சி­யல் எதிர்ப்பு என்ற அள­வில் தி.மு.க. கட்­சி­யி­னர் பரந்­தூர் பகு­தி­யில் நிலங்­களை வாங்­கி­யுள்­ளார்­கள். அதன் மதிப்பை அதி­க­ரிக்­கத்­தான் பரந்­தூர் விமான நிலை­யம் வேண்­டு­மென வலி­யு­றுத்­து­வ­தாக த.வெ.க. அமைச்­சர்­கள் கூறு­கி­றார்­கள். ஆனால் விஜய் அவ­ரது ஆந்­திர மாநில தொடர்­பு­க­ளுக்கு உத­வும் பொருட்­டு­தான் இந்த விமான நிலைய திட்­டத்தை கைவி­டு­கி­றார், தமிழ்­நாட்­டின் நல­னுக்­குத் துரோ­கம் செய்­கி­றார் என்று பிறர் கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடி­கர் விஜ­யால் இவ்­வ­ளவு முக்­கி­ய­மான பிரச்­சி­னை­ யில் கூட தன்­னு­டைய நிலைப்­பாட்டை விரி­வாக விளக்க முடி­வ­தில்லை. தி.மு.க. சார்­பில் தங்­கம் தென்­ன­ரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகி­யோர் மிகச்­சி­றப்­பாக, தெளி­வாக ஏன் பரந்­தூர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது, எத­னால் அந்­தப் புதிய விமான நிலை­யம் தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சிக்கு, பொரு­ளா­தார முன்­னேற்­றத் ­திற்கு இன்­றி­ய­மை­யா­தது என்­பதை விளக்­கு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. கட்­சி­யி­னர் கூறும் வாதங்­க­ளுக்கு விஜ­யால் பதில் அளிக்க இய­லாது என்­ப­தால், பிற த.வெ.க. அமைச்­சர்­கள் அவ­தூ­று­க­ளைப் பேசி திசை­தி­ருப்­பு­கி­றார்­கள். விஜ­யின் தவ­றான முடி­வால் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி பாதிக்­கப்­ப­டும் என்ற அச்­சத்தை பல்­வேறு தரப்­பி­ன­ரும் வெளிப்­ப­டுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் விஜ­யின் ஆத­ரவு தளம் அவ­ரது திரைப்­பிம்ப கவர்ச்­சி­யால் உரு­வா­னது என்­ப­தால் இந்த விவா­தங்­க ­ளெல்­லாம் அவ­ரு­டைய வெகு­மக்­கள் ஆத­ர­வைக் குறைக்­காது என்று த.வெ.க. கட்­சி­யும், விஜய் அர­சுக்கு ஆத­ரவு அளிக்­கும் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட கட்­சி­க­ளும் நினைக்­கின்­றன. அதே கார­ணத்­தி­னால்­தான் இப்­போது விஜய் அடுத்து பிர­த­ம­ரா­வ­தற்­கான பிர­ச்சா­ரத்­தில் இறங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">வர­லாறு காணாத மோசடி – பொய் பிரச்­சா­ரம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்டு தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் த.வெ.க. இன்ஸ்­டா­கி­ராம் இன்ஃ­பு­ளு­யன்­ஸர்­களை, வாட்ஸ் அப் குழுக்­களை பயன்­ப­டுத்­தி­யது போலவே இப்­போது வட மாநி­லங்­க­ளில், வட கிழக்கு மாநி­லங்­க­ளில் விஜய் குறித்­தும், அவர் ஆட்­சி­யின் சாத­னை­கள் குறித்­தும் அப்­பட்­ட­மான, கேவ­ல­மான பொய்ப் பிரச்­சா­ரம் யாராலோ செய்­யப்­ப­டு­கி­றது. விஜய் பாகிஸ்­தான் சென்று இம்­ரான் கானை சந்­தித்­தார் என்­ப­தி­லி­ருந்து, பாலி­யல் குற்­ற­வா­ளி­களை என்­கெ­ளண்­டர் செய்து கொன்­று­வி­டு­கி­றார், தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பல­னின்றி நோயாளி இறந்­து­போ­னால் கட்­ட­ணமே செலுத்த வேண்­டாம் என்று கூறி­விட்­டார் என்­றெல்­லாம் பல்­வேறு கட்­டுக்­க­தை­கள் பிரச்­சா­ரம் செய்­யப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த மோசடி பிரச்­சா­ரம் குறித்து பல வாரங்­க­ளா­கவே இந்­தியா டுடே ஆங்­கில சானல், புதிய தலை­முறை தமிழ் சானல் உள்­ளிட்ட பல தொலைக்­காட்சி ஊட­கங்­க­ளி­லும், ஆனந்த விக­டன் பத்­தி­ரி­கை­யி­லும், பல்­வேறு யூடி­யூப் சானல்­க­ளி­லும் விரி­வா­கப் பதிவு செய்­யப்­பட்டு வரு­கின்­றது. பல்­வேறு மாநி­லங்­க­ளி­லுள்ள வலை­த­ளப் பதி­வா­ளர்­கள் தாங்­க­ளா­கவே கற்­பனை செய்து இவ்­வி­த­மான செய்­தி­க­ளைப் பரப்­பு­கி­றார்­கள் என்­பது சாத்­தி­ய­மற்­றது. நிச்­ச­யம் யாரோ சிலர் இந்த மோசடி பிர­ச்சா­ரத்தை ஒருங்­கி­ணைக்­கி­றார்­கள் என்­று­தான் கருத முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதனை விஜய் ஆத­ர­வா­ளர்­கள், த.வெ.க. கட்­சி­யி­னர்­தான் செய்­கி­றார்­கள் என்­பதை இன்­னும் யாரும் ஆராய்ந்து நிரூ­பிக்­க­வில்லை. ஆனால் விஜய் இந்த 
அரு­வ­ருப்­பான செயல்­பாடு குறித்து இது­வரை எந்­தக் கண்­ட­ன­மும் தெரி­விக்­க­வில்லை. த.வெ.க. கட்­சி­யி­ன­ரும் எந்­தப் புகா­ரை­யும் சைபர் கிரைம் துறை­யி­டம் கொடுக்­க­வில்லை. குறைந்­த­பட்­சம் எங்­க­ளுக்­கும் இந்­தப் பிரச்­சா­ரங்­க­ளுக்­கும் தொடர்­பில்லை என்ற அறிக்கை கூட வெளி­யி­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு மாறாக எங்­கள் தலை­வர் புகழ் வட­மா­நி­லங்­க­ளி­லும் பர­விக்­கொண்­டி­ருக்­கி­றது என த.வெ.க. அமைச்­சர்­கள் பெரு­மை­யா­கக் கூறு­கி­றார்­கள். அவர் பிர­த­ம­ராக வேண்­டும் என்­றும், ஆகி­வி­டு­வார் என்­றும் கூறத் தொடங்­கி­யுள்­ளார்­கள். சட்­ட­மன்­றத்­தி­லேயே கூறு­ 
கி­றார்­கள். இதை ஏதோ தலை­வரை மகிழ்­விக்­கப் பேசு­கி­றார்­கள் என்று கரு­தி­விட முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கார­ணம், இந்­தியா டுடே- சி வோட்­டர் நிகழ்த்­திய தேசத்­தின் மன நிலை, Mood of the Nation என்ற கருத்­துக் கணிப்­பில் மோடி, ராகுல் காந்­திக்­குப் பிறகு மூன்­றா­வது அதிக ஆத­ர­வைப் பெற்ற பிர­த­மர் வேட்­பா­ள­ராக விஜய் குறிப்­பி­டப் படு­கி­றார். நாடு முழு­வ­தும் 9% பேர் விஜய் பிர­த­மர் பத­விக்கு உகந்­த­வர் என்று கூறி­யுள்­ள­னர். இதில் 18% பேர் வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டு­கி­றது. இவர்­க­ளெல்­லாம் தமிழ்­நாட்டு வாக்­கா­ளர்­க­ளைப் போல அவர் திரைப்­ப­டங்­க­ளுக்கு ரசி­கர்­கள் என்று கூற முடி­யாது. செல்­போன் மோசடி பிரச்­சா­ரத்­தி­னால்­தான் அவர் பெய­ரைக் குறிப்­பி­டு­கி­றார்­கள் என்று கருத வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தமிழ் தொலைக்­காட்சி விவா­தங்­க­ளில் த.வெ.க.-வை ஆத­ரித்து பேசு­ப­வர்­கள், யாரோ விஜய்க்கு ஆத­ர­வா­கப் பொய் செய்­தி­களை பரப்­பி­னால், அத­னால் அவ­ருக்கு ஆத­ரவு உரு­வா­கு­மென்­றால் அவர் ஏன் அதைப்­பற்றி கவ­லைப்­பட வேண்­டும் என்று கேட்­கி­றார்­கள். அவ­ருக்கு அது நல்­ல­து­தானே என்று கூறு­கி­றார்­கள். எந்த அளவு அர­சி­யல் அறம் என்­பது பாழ்­பட்­டுப் போயுள்­ளது என்­ப­தற்­கான சான்­றா­கவே இது போன்ற பேச்­சுக்­கள் அமைந்­துள்­ளன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி யோசிப்­போம். ஒரு­வேளை விஜய்க்கு எதி­ராக இதே­போல பொய் பிரச்­சா­ரம் நடக்­கி­றது என்று வைத்­துக்­கொள்­வோம். விஜய் ஆட்­சி­யில் குழந்­தை­கள் பட்­டி­னி­யால் சாகின்­றன, பயிர்­கள் நாச­மாகி விவ­சா­யி­கள் தற்­கொலை செய்­து­கொள்­கி­றார்­கள், பெண்­க­ளெல்­லாம் பட்­டப் பக­லி­லேயே தாக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­றெல்­லாம் பொய்ச் செய்­தி­களை பரப்­பி­னார்­கள் என்று வைத்­துக்­கொள்­வோம். அப்­போது உடனே த.வெ.க. புகார் கொடுக்­காதா? அந்த செய்­தி­க­ளைப் பரப்­பு­ப­வர்­களை கண்­டு­பித்து கைது செய்­யாதா? தமிழ்­நாட்­டி­லேயே அரசை விமர்­சித்து செய்தி போடு­ப­வர்­களை கைது செய்­தார்­களே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­ப­டி­யா­னால், தன்­னைப் புகழ்ந்து எவ்­வ­ளவு மோச­டி­யான பொய் செய்­தியை பரப்­பி­னா­லும், கட்­டுக் கதை­களை உரு­வாக்­கி­னா­லும் அர­சி­யல் ஆதா­யம் கருதி அதனை விஜய் கண்­டிக்க மாட்­டார், நட­வ­டிக்கை எடுக்க மாட்­டார் என்­று­தானே பொருள்? அப்­ப­டி­யா­னால் அவ­ரு­டைய மறை­முக ஒப்­பு­த­லு­டன் தான் இந்த பிரச்­சா­ரங்­கள் நடக்­கின்­றன என்­று­தானே பிறர் கரு­து­வார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடி­கர் விஜய் ஆட்­சிக்கு வந்த நூறு நாட்­க­ளி­லேயே தமிழ்­நாட்­டில் ஏகப்­பட்ட பிரச்­சி­னை­கள். குற்­றச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. விலை­வாசி அதி­க­ரிக்­கின்­றது. தொழில் முத­லீ­டு­கள் வரத்து கடு­மை­யா­கக் குறைந்­துள்­ளது. அவர் எடுத்­துள்ள ஒரே முக்­கி­ய­மான முடி­வான பரந்­தூர் விமான நிலை­யத் திட்ட த்தை கைவி­டும் முடிவை முற்­றி­லும் பொறுப்­பற்ற முறை­யில் எடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எந்­தப் பிரச்­சி­னை­யி­லும் தன் நிலைப்­பாட்டை, 
அர­சின் நிலைப்­பாட்டை விளக்­கிப் பேசும் ஆற்­றலோ, தலை­மைப் பண்போ அவ­ருக்கு அறவே இல்லை. இந்த நிலை­யில் அவர் பிர­த­ம­ராக வேண்­டும் என்று அமைச்­சர்­கள் பேசு­வ­தும், மோசடி பிரச்­சா­ரத்­தி­ னால் அவ­ருக்கு வட மாநி­லங்­க­ளில் ஆத­ரவு 
இருப்­ப­தா­கக் கருத்­துக் கணிப்பு கூறு­வ­தும் தமிழ்­நாட்டை, அதா­வது அதன் பகுத்­த­றி­வுப் பண்­பாட்­டில் பெருமை கொள்­ப­வர்­களை, வெட்­கித் தலை­கு­னிய வைக்­கி­றது என்­றால் மிகை­யா­காது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>