<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,1066" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 31 2026 16:38:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260901T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01092026-VLR-06" position.sequence="06" ex-ref="01092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">பரந்தூர் திட்டத்தை கைகழுவிய நிலையில்   </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="54">மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவது இனி சாத்தியமா?</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame848170_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup848089_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Dinakaranbw_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ளர்ந்து வரும் மக்­கள் தொகை, தொழில் முத­லீ­டு­கள் அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்­றுக்கு ஏற்ப போக்­கு­வ­ரத்து வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தும் முக்­கி­யம். இதைக் கருத்­தில் கொண்டு தான். 4,700 ஏக்­க­ரில் பரந்­தூர் விமான நிலைய திட்­டத்தைமுந்­தைய தி.மு.க. அரசு செயல்­ப­டுத்­தி­யது. இதற்கு தேவை­யான பெரும்­பான்மை நிலங்­கள் கைப்­பற்­றப்­பட்டு, இழப்­பீ­டாக ரூ.8,000 கோடி வழங்­கப்­பட்டு விட்­டது. ஆனால், ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, முதல்­வர் விஜய் தலை­மை­யில் த.வெ.க. அரசு பொறுப்­பேற்­ற­தும் பரந்­தூர் விமான நிலையத் திட்­டம் கைவி­டப்­பட்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதனை சட்­டப்­பே­ர­வை­யில் முதல்­வர் விஜய் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறி­வித்து விட்­டார். இதன்­மூ­லம் பரந்­தூர் திட்­டத்­துக்கு நிரந்­தர முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு விட்­டது. இந்­திய தொழில் கூட்­ட­மைப்­பி­னர் முதல்­வர் விஜயை நேரில் சந்­தித்து, பரந்­தூர் விமான நிலைய திட்­டத்தை தொடர்ந்து செயல்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய ஒரு சில வாரங்­க­ளி­லேயே வந்த இந்த அறி­விப்பு தொழில் துறை­யி­னர் மத்­தி­யி­லும், பொது­மக்­கள் மத்­தி­யி­லும் கடும் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்தி விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பரந்­தூர் புதிய விமான நிலை­யத் திட்­டம் கைவி­டப்­பட்­ட­தால் தற்­போ­துள்ள மீனம்­பாக்­கம் விமான நிலை­யத் ­தையே நம்­பி­யி­ருக்க வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது. பரந்­தூர் திட்­டத் ­துக்கு மாற்­றாக, சென்­னை­யின் எதிர்­கா­லப் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கும், பெரு­கி­வ­ரும் பய­ணி­க­ளின் தேவையை ஈடு­செய்­ய­வும், மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்தை ஆண்­டுக்கு 5.5 கோடி பய­ணி­களை கையா­ளும் வகை­யில் விரி­வு­ப­டுத்த தமிழ்­நாடு அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாக தொழில்­துறை அமைச்­சர் கீர்த்­தனா அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், நடை­மு­றை­யில் மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்தை இனி­மேல் முழு­மை­யாக விரி­வு­ப­டுத்­து­வது சாத்­தி­யமா என்­றால், அது பெரும் கேள்­விக்­கு­றியே என தொழில்­து­றை­யி­ன­ரும், இந்த துறை சார்ந்த நிபு­ணர்­க­ளும் தெரி­விக்­கின்­ற­னர். கைவி­டப்­பட்ட இணை ஓடு­தள திட்­டம் (Parallel Runway) மற்­றும் நக­ர­ம­ய­மாக்­கல்: சுமார் 20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு, விமான நிலை­யத்­தின் நெரி­ச­லைக் குறைக்­க­ வும், திறனை அதி­க­ரிக்­க­வும் ‘இணை ஓடு­த­ளம்’ அமைக்­கும் திட்­டத்தை இந்­திய விமான நிலைய ஆணை­யம் (ஏஏஐ) முன்­வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அப்­போது ஸ்ரீபெ­ரும்­பு­ தூ­ரில் 2வது விமான நிலை­யம் ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டி­ருந்­த­தால் இந்த திட்­டம் கிடப்­பில் போடப்­பட்­டது. சென்­னைக்கு 2வது விமான நிலை­யம் அமைக்க முத­லில் ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரில் தான் திட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. 1999ம் ஆண்­டில் இந்ததிட்­டம் வகுக்­கப்­பட்டு, 2007ம் ஆண்­டில்அங்கு 4,000 ஏக்­கர் பரப்­ப­ள­வில் விமான நிலை­யம் அமைக்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது. ஆனால், அர­சி­டம் 800 ஏக்­கர் மட்­டுமே இருந்­தது. மீதி நிலத்தைகைய­கப்­ப­டுத்­து­வ­தில் சிக்­கல் மற்­றும் நில மதிப்பு உயர்­வால் பொரு­ளா­தார ரீதி­யாக அர­சுக்­குச் சாத்­தி­ய­மற்­ற­தாக மாறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்ரீபெ­ரும்­பு­தூரை நம்பி மீனம் 
­பாக்கம் விமான நிலை­யத்தை விரி­வு­ ப­டுத்­து­வது கைவி­டப்­பட்டு ஏறக்­கு­றைய 20 ஆண்­டு­கள் ஆகி விட்­டன. அதற்­குள் விமான நிலை­யத்தை சுற்­றி­யுள்ள கொளப்­பாக்­கம், மணப்­பாக்­கம், மற்­றும் கெரு­கம்­பாக்­கம் ஆகிய பகு­தி­கள் அப­ரி­மி­த­மான நக­ர­ம­ய­மாக்­க­லைச் சந்­தித்­து­விட்­டன. ஆயி­ரக்­க­ணக்­கான குடி­யி­ருப்­பு­க­ளும், அடுக்­கு­மா­டிக் கட்­ட­டங்­க­ளும் இந்­தப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­து­ விட்­ட­தால், இன்று அங்கு நிலம் கைய­கப்­ப­டுத்­து­வது என்­பது சாத்­தி­ய­மற்ற ஒன்­றா­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், விமான நிலை­யத்­தின் 2வது ஓடு­த­ளத்­தின் அணுகு பாதை­யில் உள்ள பல தடை­கள் இன்­று­வரை முழு­மை­யாக அகற்­றப்­ப­ட­வில்லை என அதி­கா­ரி­கள் சுட்­டிக்­காட்­டு­ கின்­ற­னர். பெரிய விமா­னங்­களை கையாள வச­தி­யில்லை: விமா­னங்­கள் அளவை பொறுத்து கோட் இ (Code E), கோட் எஃப் (Code F) என வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சென்னை விமான நிலை­யம் தற்­போது ‘கோட் இ’ (போயிங் 777, ஏர்­பஸ் 330) வகை விமா­னங்­க­ளைக் கையா­ளும் தரத்­தி­லேயே உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவற்­றின் இறக்கை நீளம் 52 மீட்­டர் முதல் 65 மீட்­டர் வரை. இவற்­றில் 200 பய­ணி­கள் முதல் 400 பேர் வரை செல்­ல­லாம். கோட் எஃப் வகை விமா­னங்­க­ளின் இறக்கை நீளம் 65 மீட்­டர் முதல் 80 மீட்­டர் வரை. இவை 500க்கும் மேற்­பட்ட பய­ணி­களை ஏற்­றிச் செல்­லக் கூடி­யவை. இந்த கோட் எஃப் வகை விமா­னங்­களை இயக்­கு­வ­தற்­குத் தேவை­யான முழு­மை­யான கட்­ட­மைப்பு இங்கு இல்லை. இது­போல், அன்­டோ­னோவ் ஏஎன்-124 அல்­லது போயிங் 747 - 800 போன்ற மிகப் பெரிய விமா­னங்­களை தரையி­றக்க நிரந்­தர பய­ணி­கள் போர்­டிங் பிரிட்ஜ் வச­தி­க­ளும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை விமான நிலை­யத்தை ‘கோட் எஃப்’ தரத்­திற்கு உயர்த்த அரசு வலி­யு­றுத்­தி­னா­லும், இடப்­பற்­றாக்­குறை கார­ண­மாக இது பயன்­பாட்­டுக்கு வரு­வது மிக­வும் சவா­லா­னது என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நிலப்­ப­ரப்பு மற்­றும் 
புவி­யி­யல் சவால்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த கால நிகழ்­வு­களை வைத்­துப் பார்க்­கும்­போது, மீனம்­பாக்­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தில் உள்ள இயற்கை மற்­றும் புவி­யி­யல் தடை­கள் அதி­கம் என்றே கூற­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வின் பிற முக்­கிய நக­ரங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், மீனம்­பாக்­கம் மிகக் குறைந்த பரப்­ப­ள­வி­லேயே அதா­வது சுமார் 1,317 ஏக்­க­ரில் உள்­ளது. மேலும், இங்­குள்ள ஓடு­த­ளங்­கள் ஒன்றை ஒன்று குறுக்­கி­டும் (Intersecting runways) வகை­யில் அமைந்­துள்­ள­தால், ஒரே நேரத்­தில் 2 ஓடு­த­ளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­து­வது எளி­தல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மேலும், இது அடை­யாறு ஆற்­றின் வெள்­ளப் படு­கை­யில் அமைந்­துள்­ளது. 2015ம் ஆண்டு ஏற்­பட்ட பெரு­வெள்­ளத்­தின் போது ஓடு­த­ளங்­கள் மற்­றும் முனை­யங்­க­ளில் தண்­ணீர் புகுந்து, விமான நிலை­யம் ஒரு வாரம் முழு­மை­யாக முடங்­கி­யதை மறக்க முடி­யாது. இதை மேலும் விரி­வு­ப­டுத்­து­வது என்­பது இயற்கை நீர்­நி­லை­களை அழித்து, வெள்ள அபா­யத்தை இன்­னும் அதி­க­ரிக்­கும் என­வும் அஞ்­சப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நெரி­சல் மிகுந்த ஜிஎஸ்டி சாலை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்­னை­யின் முக்­கிய நுழைவா­யி­ லாக உள்ள ஜிஎஸ்டி சாலை, வாக­னப் பெருக்­கம் கார­ண­மாக கடும் நெரி­சலை சந்­தித்து வரு­கி­றது. இத­னால் விமான நிலை­யத்­துக்கு செல்­லும் பலர் விமா­னத்தை தவற விட்டு விடு­கின்­ற­னர். இந்த சூழ்­நி­லை­யில், விமான நிலை­யத்தை விரி­வாக்­கம் செய்­தா­லும் கூட பயன்­பாட்­ட­ள­வில் சாத்­தி­ய­மற்­ற­தா­கி­வி­டும் என பொது­மக்­க­ளும், தொழில் துறை­யி­ன­ரும் கருத்து தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த 2024-–25 வெளி­யி­டப்­பட்ட புள்­ளி­வி­வ­ரத்­தின்­படி சென்னை விமான நிலை­யத்­தில் 3.79 லட்­சம் டன் சரக்­கு­கள் கையா­ளப்­பட்­டுள்­ளன. அதா­வது மொத்த திற­னில் இது 35 சத­வீ­தம் மட்­டுமே. எனி­னும், ஜிஎஸ்டி சாலை நெரி­சல் மற்­றும் விமான நிலை­யத்­தில் இட­வ­சதி இல்­லா­த­தால் இவற்றை முழு­மை­யாக பயன்­ப­டுத்த இய­லாது என கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தைச் சுற்­றி­யுள்ள அப­ரி­மி­த­மான நக­ர­ம­ய­மாக்­கல், கொளப்­பாக்­கம் மற்­றும் மணப்­பாக்­கம் பகு­தி­க­ளில் நிலத்தை கைய­கப்­ப­டுத்­து­வ­தில் உள்ள நடை­மு­றைச் சிக்­கல்­கள், அடை­யாறு ஆற்­றின் வெள்ள அபா­யம் மற்­றும் இடப்­பற்­றாக்­குறை ஆகி­யவை இதனை மேலும் விரி­வு­ப­டுத்­து­ வதை கிட்­டத்­தட்ட சாத்­தி­ய­மற்­ற­தாக்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தற்­போ­துள்ள இடத்­திற்­குள் சில தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளைச் செய்ய முடி­யுமே தவிர, சென்­னை­யின் எதிர்­கா­லப் பன்­னாட்­டுப் போக்­கு­வ­ரத்­துத் தேவையை மீன ம்­பாக்­கத்­தால் மட்­டுமே முழு­மை­ யா­கப் பூர்த்தி செய்ய முடி­யாது. எனவே, பரந்­தூர் திட்­டத்தை கைவிட்­டி­ருக்­கக்­கூ­டாது. அத்­த­கைய இடத்­தில் ஒரு புதிய விமான நிலை­யத்தை உரு­வாக்­கு­வதே சென்­னைக்­கான ஒரே நீண்­ட­கா­லத் தீர்வு என தொழில்­து­றை­யி­ன­ரும் பல்­வேறு துறை நிபு­ணர்­க­ளும் தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மீனம்­பாக்­கம் விமான நிலை­யம் சில தக­வல்­கள்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை விமான நிலை­யம் 1930ல் செயல்­பட தொடங்­கி­யது. இது தென்­னிந்­தி­யா­வின் முத­லா­வது விமான நிலை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பய­ணி­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தால் உள்­ளூர் பய­ணி­கள் விமா­னங்­கள் 1985 முதல் திரி­சூ­லத்­தில் இருந்து இயக்­கப்­பட்­டன. 1989ல் சர்­வ­தேச விமான நிலைய முனை­யம் அமைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் சென்னை விமான நிலை­யம் மட்­டுமே நதி பாலத்­தின் மீது (அடை­யாறு) உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரண்டு ஓடு­த­ளங்­கள் உள்­ளன. முதன்மை ஓடு­த­ளம் 13,123 அடி (4,000 மீட்­டர்). அதன் குறுக்கே செல்­லும் 2வது ஓடு­த­ளம் 12,007 அடி (3,660 மீட்­டர்).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கட்­ட­மைப்­புக்கு இட­மில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நவீன சரக்கு போக்­கு­வ­ரத்­திற்கு பிரம்­மாண்­ட­மான குளிர்­ப­த­னக் கிடங்­கு­கள், ஆன்­லைன் வணிக நிறு­வ­ னங்­க­ளின் பார்­சல்­களை பிரிக்­கும் மையங்­கள் போன்­றவை தேவை. ஆனால் மீனம்­பாக் ­கத்­தைச் சுற்றி நெரி­ச­லான ஜிஎஸ்டி சாலை அடை­யாறு ஆறு மற்­றும் மக்­கள் நெருக்­கடி மிகுந்த குடி­யி­ருப்­பு­கள் உள்­ள­தால், சரக்கு முனை­யத்தை விரி­வு­ ப­டுத்த ஒரு அடி நிலம் கூட இல்லை. ஒரு பெரிய சரக்கு முனை­யம் அமைந்­தால், தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கான கன­ரக லாரி­கள் வந்து செல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நக­ரின் மையத்­தில், பர­ப­ரப்­பான ஜி.எஸ்.டி சாலை­யில் இவ்­வ­ளவு லாரி­கள் வந்து செல்­வது நக­ரின் போக்­கு­வ­ரத்தை முற்­றி­லு ­மாக முடக்­கி­ வி­டும். பெரிய விமான நிலை­யங்­க­ளுக்கு விமா­னங்­­களைப் பழு­து­பார்க்­கும் மற்­றும் பரா­ம­ரிப்­ப­தற்­கான இட­மும் மீன ம்­பாக்­கத்­தில் இல்லை என துறை நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். எனவே, எதிர்­கால சரக்கு மற்­றும் வர்த்­த­கத் தேவை­க­ளைக் கருத்­தில் கொண்­டால்,மீனம்­பாக்­கத் ­தில் இடப்­பற்­றாக்­குறை என்­பது தீர்க்க முடி­யாத ஒரு மிகப்­பெ­ரிய தடை என்­பதே அவர்­க­ளின் கருத்­தாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சர்­வ­தேச நாடு­க­ளுக்கு நேரடி போக்­கு­வ­ரத்து கன­வா­கி­வி­டும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">போயிங் 747 - 800 போன்ற மிகப் பெரிய விமா­னங்­களை தறை­யி­றக்க சென்னை விமான நிலை­யத்­தில் வசதி இல்­லா­த­தால், இந்த விமா­னங்­கள் இயக்­கப்­ப­டும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு செல்ல பெங்­க­ளூரு கெம்பே கவுடா,மும்பை சிஎஸ்­எம்டி,டெல்லி இந்­திரா காந்தி விமான நிலை­யம், ஐத­ரா­பாத் ராஜீவ் காந்தி விமான நிலை­யம் ஆகிய சர்­வ­தேச விமான நிலைய முனை­யங்­க­ளுக்கு சென்­று­தான்­மாற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், மாறி மாறி செல்­வ­தால் காத்­தி­ருப்பு நேர­மும் பயண நேர­மும் அதி­க­ரிக்­கும். இடைப்­பட்ட விமான நிலை­யங்­க­ளில் 2 முதல் 4 மணி நேரம் வரை வீணா­கக் காத்­தி­ருக்க வேண்­டும். நேர­டிப் பய­ணம் இல்­லா­த­தால் சுற்­றிச் செல்ல நேரி­டும்; இத­னால் 1 முதல் 2 மணி நேரப் பயண நேரம் கூடு­த­லாக ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் விமா­னம் சற்று தாம­த­மா­னா­லும் இணைப்பு விமா­னத்தை தவ­ற­விட்­டால் 12 முதல் 24 மணி நேரம் வரை காத்­தி­ருக்க நேரி­டும். இது­த­விர லக்­கேஜ் மற்­றும் சுங்­கச்­சோ­தனை போன்ற நடை­மு­றை­க­ளா­லும் தாம­த­மா­கும். சில இடங்­க­ளில் கடைசி நேரத்­தில் சென்று சேர்ந்­தால் இணைப்பு விமா­னத்தை பிடிக்க ஓட வேண்­டி­யி­ருக்­கும் என பய­ணி­கள் கூறு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பெரிய விமா­னங்­க­ளுக்கு சிக்­கல் ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஏ380 போன்ற (கோட் எப்) பிரம்­மாண்ட விமா­னங்­க­ளுக்கு ஓடு­த­ளத்­தின் நீளம் 4,000 மீட்­ட­ராக இருந்­தா­லும், ஓடு­த­ளத்­தின் அக­லம் 60 மீட்­ட­ராக இருக்க வேண்­டும். சென்னை விமான நிலை­யம் கோட் இ தரத்­தி­லான 45 மீட்­டர் அக­லத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது. மேலும், விமா­னங்­கள் தரை­யி­றங்­கிய பின் முனை­யத்­திற்­குச் செல்­லும் வழித்­த­டங்­க­ளில் அந்­தப் பெரிய இறக்­கை­கள் இடித்­துக்­கொள்­ளா­மல் திரும்­பு­வ­தற்­குப் போது­மான இடை­வெளி சென்­னை­யில் இல்லை என்­பதே முக்­கி­யச் சிக்­க­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு பாதிப்பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெரிய விமா­னங்­களை சென்னை விமான நிலை­யத்­தில் இருந்து இயக்க முடி­யா­த­தால் பெங்­க­ளூரு போன்ற அண்டை மாநில விமான நிலை­யங்­கள் மூலம் தான் அனுப்­ப­நே­ரி­டும். இத­னால், பொருட்­கள் அனுப்ப தாம­தம், கூடு­தல் செலவு ஏற்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">முக்­கி­யக் கார­ணம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை அருகே ஸ்ரீபெ­ரும்­பு­தூர் மற்­றும் சுற்­றுப்­ப­கு­தி­க­ளில் பாக்ஸ்­கான் ஐபோன் தயா­ரிக்­கி­றது. கடந்த ஆண்டு மார்ச் மட்­டும் 15 லட்­சம் ஐபோன்­கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன. மின்­னணு பொருட்­க­ளின் மைய­மாக சென்னை மாறி வரு­வ­தால், போது­மான விமான சரக்­குப்­போக்­கு­வ­ரத்து வசதி இல்­லா­தது நிறு­வ­னங்­க­ளுக்­கும் நுகர்­வோ­ருக்­கும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.இத­னா­லேயே நிறு­வ­னங்­கள் இடம் பெய­ரும் அபா­யம் உள்­ளது என்­கின்­ற­னர் தொழில் துறை­யி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மெட்ரோ இணைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை விமான நிலை­யத்­துக்கு விம்கோ நகர் , வண்­ணா­ரப்­பேட்டை போன்ற பகு­தி­க­ளில் இருந்து சென்னை விமான நிலை­யத்­துக்கு மெட்ரோ வசதி உள்­ளது.ஆலந்­தூர் வழி­யாக நீல வழித்­த­டத்­தில் வரு­வோர் அங்கு இறங்கி மாற வேண்­டும். பின்­னர் அங்­கி­ருந்து நடந்தோ அல்­லது பேட்­டரி வாக­னத்­திலோ விமான முனை­யங்­க­ளுக்கு செல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­நே­ரத்­தில் பூந்­த­மல்லி- பரந்­தூர் இடையே 52.94 கி.மீக்கு 20 ரயில் நிலை­யங்­க­ளு­டன் ரூ.15,906 கோடி­யில் மெட்ரோ விரி­வாக்­கம் செய்­யப்­பட இருந்­தது. இந்­நி­லை­யில் , பரந்­தூர் கைவி­டப்­பட்­ட­தால் பூந்­த­மல்லி - சுங்­கு­வார் சத்­தி­ரம் (27.9 கி.மீ) இருங்­காட்­டுக்­கோட்டை மற்­றும் ஸ்ரீபெ­ரும்­பு­தூர் தொழிற்­பேட்டை மண்­ட­லங்­க­ளுக்­குப் பயன்­ப­டும் என்­ப­தால், இந்­தப் பகுதி வரை மெட்ரோ அமைப்­ப­தற்­கான முக்­கி­யத்­து­வம் தொடர்­கி­றது. சுங்­கு­வார் சத்­தி­ரம் - பரந்­தூர் திட்­டம் கைவி­டப்­ப­டும் அபா­யம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">டெர்­மி­னல் - 5 இடர்ப்­பா­டு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை விமான நிலை­யத்­திற்கு சொந்­த­மான 2 ஓடு­த­ளங்­க­ளுக்­கும் (Runways) நடு­வில் பயன்­பாட்­டில் இல்­லாத ‘வி’ வடிவ இடத்­தைப் பயன்­ப­டுத்­தி­னால், புதிய நிலம் தேவை­யில்லை; பல ஆயி­ரம் கோடி ரூபாய் மிச்­ச­மா­கும் என அரசு தரப்­பில் கூறப்­ப­டு­கி­றது. இந்த புதிய முனை­யம் ஓடு­த­ளங்­க­ளுக்கு நடு­வில் தனித்­தீவு போல அமை­ய­வுள்­ளது. பிர­தான நுழை­வா­யி­லில் இருந்து புறப்­ப­டும் பய­ணி­க­ளை­யும், அவர்­க­ளின் உட­மை­க­ளை­யும், அவ­சர உதவி வாக­னங்­க­ளை­யும் அங்கு கொண்டு செல்­வது சவா­லா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும் பயன்­பாட்­டில் உள்ள ஓடு­த­ளங்­க­ளைக் கடந்து செல்ல வேண்டி இருப்­ப­தால், இதற்கு நிலத்­த­டிச் சுரங்­கப்­பாதை அல்­லது பிரத்­யேக தானி­யங்கி வாகன அமைப்பு அல்­லது உயர்த்­தப்­பட்ட மேம்­பா­லம் அமைக்க வேண்­டும். ஒரு பர­ப­ரப்­பான விமான நிலை­யத்­தின் செயல்­பா­டு­களை நிறுத்­தா­மல், இவற்­றைக் கட்­டு­வது தொழில்­நுட்ப ரீதி­யாக மிக­வும் கடி­ன­மான காரி­யம் என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>