<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 02 2026 03:39:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260902T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02092026-CHN-10" position.sequence="10" ex-ref="02092026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.09.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">வால்பாறையை சுற்றுலாத் தலமாக அறிவித்திடுக!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">தென்னை விவசாயிகள் அதிகம் – ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகித்திடுக! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">சட்டப்பேரவையில் வால்பாறை ஆ.குட்டி என்கிற சுதாகர் பேச்சு!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">விவ­சா­யி­களை ஊக்­கு­விக்க திட்­டங்­களை அறி­விக்க வேண்­டும்! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">குறைந்த நாட்­கள் தண்­ணீர் திறப்­பது சாகு­ப­டிக்கு உத­வாது!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">திரு.வி.க. நகர் வடக்குப் பகுதிச் செயலாளர் செ.தமிழ்வேந்தனின் தாயார்</lang>
	<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="26">செ.முருகம்மாள் முதலாமாண்டு நினைவேந்தல்!</lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கழக நிர்வாகிகள் அஞ்சலி!</lang>
	</hl9>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup852104_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="A.Sudhakar,Val_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="BWDinakaranSc_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Murugammal_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் வால்­பாறை தொகுதி கழக உறுப்­பி­னர் ஆ. குட்டி என்­கிற சுதா­கர் பேசு­கை­யில் வால்­பா­றையை சுற்­று­லாத்­த­ல­மாக அறி­வித்­திட வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் வால்­பாறை ஆ.குட்டி என்­கிற சுதா­கர் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆ. குட்டி என்­கிற சுதா­கர்: பேர­வைத் தலை­வர் அவர்­களே, வால்­பாறை தொகுதி மக்­க­ளின் குர­லாக வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இந்­தச் சட்­ட­மன்­றத்­தில் எனது அறி­முக உரையை நீண்ட நேரம் உரை­யாற்­று­வ­தற்கு வாய்ப்­ப­ளித்த தங்­க­ளுக்கு நன்­றியை வணக்­கத்­து­டன் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முறை­செய்து காப்­பாற்­றும் மன்­ன­வன் மக்­கட்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இறை­என்று வைக்­கப்படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீதி நெறி­யு­டன் அரசு நடத்தி, மக்­க­ளைக் காப்­பாற்­றும் ஆட்­சி­யா­ளன்­தான் மக்­க­ளுக்­கான தலை­வன் என அய்­யன் வள்­ளு­வர் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெண்­தாடி வேந்­தர் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா ஆகி­யோரை வணங்­கு­கி­றேன். பெரி­யா­ரின் சீட­னாய், அண்­ணா­வின் தம்­பி­யாய், தமிழ் இனத்­தின் காவ­ல­னாய், வங்­கக் கட­லோ­ரத்­தில் சந்­த­னப்­பே­ழை­யில் வீற்­றி­ருக்­கும் எங்­கள் இனத்­தின் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இருக்­கும் திசை­நோக்கி வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை எஸ்­டேட் பகு­தி­யி­லுள்ள என்னை 18 வய­தில் மாண­வ­ரணி கிளைச் செய­லா­ள­ரா­க­வும், 20 வய­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கிளைக் கழ­கச் செய­லா­ள­ரா­க­வும், 22 வய­தில் வார்டு கழ­கச் செய­லா­ள­ரா­க­வும், சுமார் 20 ஆண்­டு­கள் என்னை வால்­பாறை நகர்­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும், வால்­பாறை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் நக­ரக் கழ­கச் செய­லா­ள­ரா­க­வும் பணி­யாற்ற வாய்ப்­புக் கொடுத்து, 58 நபர்­கள் வாய்ப்­பி­னைக் கோரி­ய­போ­தும் இந்த எளி­ய­வனை தேர்ந்­தெ­டுத்து, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக்­கிய கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு என்ற இலட்­சிய உள்­ளம் கொண்ட மாண­வ­னாய், தமி­ழில் பூத்த மல­ராய், தமி­ழ­னம் காத்த தந்தை பெரி­யா­ரின் அவ­தா­ர­மாய், தமிழே என் மூச்சு, தமிழ் இனமே என் பேச்சு, தமி­ழுக்­காக வாழ்­வேன், வாழ்­வேன் என வாழும் வள்­ளு­வர், 8 கோடி மக்­க­ளின் எழுச்சி நாய­க­னும், எங்­கள் திரா­விட மாடல் நாய­க­ரு­மான திரு. முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என் முதல் வணக்­கம். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிங்­கத் தமி­ழ­னாய், சிரிக்­கும் நாய­க­னாய், இன்­றைய இளை­ஞர்­க­ளின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாய், எதி­ரி­க­ளின் சிம்ம சொப்­ப­ன­மாக விளங்­கும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக எங்­களை வழி­ந­டத்­தும் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்கு என் மாண்பு வணக்­கம்.  (மேசை­யைத் தட்­டும் ஒலி) எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர்,  மரி­யா­தைக்­கு­ரிய மேனாள் அமைச்­சர் அருமை ஐயா திரு. நேரு அவர்­க­ளுக்­கும், எங்­க­ளுக்­கெல்­லாம் நல்ல முறை­யில் பாடம் எடுக்­கும் கொறடா, முன்­னாள் அமைச்­சர் மரி­யா­தைக்­கு­ரிய ஐயா திரு.எ.வ. வேலு அவர்­க­ளுக்­கும், முன்­னாள் அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும், அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும், முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும், அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும் என் வால்­பாறை மக்­க­ளின் சார்­பாக வணக்­கத்­தி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனக்கு அனைத்து நேரங்­க­ளி­லும் நல்ல ஆலோ­ச­னை­க­ளைச் சொல்லி, என்னை ஊக்­கப்­ப­டுத்­திய கொங்கு மண்­ட­லத்­தின் சிங்­கம், எங்­கள் அன்பு அண்­ணன் திரு. செந்­தில்­பா­லாஜி அவர்­க­ளுக்­கும், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் அருமை அண்­ணன் திரு. தள­பதி முரு­கே­சன் அவர்­க­ளுக்­கும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் அருமை அண்­ணன் ஈஸ்­வ­ர­சாமி அவர்­க­ளுக்­கும், ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர்­கள்,  பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள், உள்­ளாட்சி மன்­றத் தலை­வர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­கள், தோழ­மைக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கும், வால்­பா­றை­யின் குரலை சட்­ட­மன்­றத்­தில் ஒலிக்­கச் செய்த, வாக்­க­ளித்த மண்­ணின் மைந்­தர்­கள் வால்­பாறை கீழ்ப்­ப­குதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், வால்­பாறை மேல்­ப­குதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளான எனது தேயி­லைத் தோட்ட சொந்­தங்­கள் அனை­வ­ருக்­கும், கல்­லூரி முன்­னாள் மாண­வர்­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் நான் நன்­றி­யைக் கூறக் கட­மைப்­பட்­டுள்­ளேன். எனக்கு அர­சி­யல் திருப்­பு­மு­னை­யைக் கொடுத்த எனது தகப்­ப­னார் காலஞ்­சென்ற ஆரோக்­கி­யம் அவர்­களை இந்­த­நே­ரத்­தில் நான் வணங்­கு­கி­றேன்.  தொடர்ந்து என்னை ஊக்­கப்­ப­டுத்­தி­வ­ரும் எனது அரு­மைத் தயார் திரு­மதி பழ­னி­யம்­மாள் அவர்­க­ளுக்­கும், எனது அன்பு மனைவி திரு­மதி உமா­ம­கேஸ்­வரி அவர்­க­ளுக்­கும், எனது அன்பு மகன் ஆகாஷ் மற்­றும் அ­க்ஷயா மற்­றும் உற்­றார், உற­வி­னர்­கள், எனது அன்பு தம்­பி­மார்­கள், நண்­பர்­கள் அனை­வ­ருக்­கும் இந்­த­நே­ரத்­தில் நான் நன்­றி­யைக் கூறிக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கோவை மாவட்­டத்­திற்கு 
ரூ.20,000 கோடிக்கு திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று காலை பிற்­ப­டுத்­தப்­பட்ட துறை­யின் அமைச்­சர், அன்­புச் சகோ­த­ரர் அவர்­கள் தென்­னிந்­தி­யா­வின் மான்­செஸ்­டர் கோவை மாந­கரை முதல் மாந­க­ராக உள்­ளது என்று பெரு­மை­யு­டன் கூறி­னார்.  உண்­மை­யிலே நாங்­கள் பெரு­மைப்­ப­டு­கி­றோம்.  ஏனென்­று­கேட்­டால், திரா­வி­ட­மா­டல் நாய­க­ரின் ஆட்­சி­யில் ஐந்­தாண்­டு­க­ளில் கோவை மாவட்­டத்­திற்கு சுமார் 20,000 கோடிக்­கு­மேல் வளர்ச்­சித் திட்­டங்­கள் கொடுத்த அரசு திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அன்­றைய பொறுப்பு அமைச்­ச­ராக இருந்த அருமை அண்­ணன் செந்­தில்­பா­லாஜி அவர்­கள் கேட்­டுக்­கொண்­ட­தற்­கும், மாவட்ட கழ­கச் செய­லா­ளர்­கள் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்க, செம்­மொ­ழிப் பூங்கா, பெரி­யார் நூல­கம், தங்க நகைப் பூங்கா, ஹாக்கி மைதா­னம், ஜி.டி. நாயுடு மேம்­பா­லம், மேற்கு புற­வ­ழிச்­சாலை, IT park போன்ற திட்­டங்­க­ளெல்­லாம் திரா­விட மாடல் ஆட்­சி­யில் நடை­பெற்­றது.  அது­மட்­டு­மல்ல, விமான நிலைய விரி­வாக்­கத்­திற்கு சுமார் 1500 கோடி ரூபாய் நிதி­ய­ளித்­தது திரா­விட மாடல் ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மலை­க­ளின் இள­வ­ர­சி­யாக, 7–வது சொர்­க­மாக திக­ழும் வால்­பாறை நக­ரில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் மக­ளிர் விடி­யல் பய­ணத் திட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.  நீங்­கள் கேட்­பீர்­கள், ஏன் எல்­லாப் பகு­திக்­கும் வந்­தது தானே! புதி­ய­தாக என்ன கூறு­கி­றாய் என்று.  அப்­படி அல்ல.  வால்­பாறை பகுதி அனைத்­தும் mofussil route–களாக இருந்­தது.  Town Bus–க்கு மட்­டும்­தான் விடி­யல் பய­ணத் திட்­டம் கொண்­டு­வந்­தோம். ஆனால், முன்­னாள் அமைச்­சர் திரு. V. செந்­தில்­பா­லாஜி அவர்­க­ளி­டம் நாங்­கள் எடுத்­துச்­சொல்லி, அருமை அண்­ணன் முன்­னாள் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் திரு. எஸ்.எஸ். சிவ­சங்­கர் அவர்­க­ளி­டம் எங்­களை அழைத்­துச் சென்று, அப்­போ­தைய தமி­ழக முதல்­வர் அவர்­கள் இல்­லத்­திற்கே சென்று வால்­பாறை மற்­றும் ஊட்டி பகு­தி­க­ளுக்கு ஒரு special G.O. பிறப்­பித்து, அந்த  mofussil route–ஐ விடி­யல் பய­ணத் திட்­ட­மாக கொடுத்த அரசு, திரா­விட மாடல் அரசு.  (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வால்­பா­றை­யி­லி­ருந்து 
சேலத்­திற்கு பேருந்து வசதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல, வால்­பா­றை­யி­லி­ருந்து சேலம் பகு­திக்கு நேர­டி­யாக பேருந்து வசதி ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார்­கள். போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு ஒரு அன்­பான கோரிக்கை. வால்­பாறை பகு­தி­யி­லி­ருந்து மதுரை மற்­றும் திருச்சி பகு­திக்கு, ஏனென்­றால், வெளி­யூ­ரி­லி­ருந்து பஞ்­சம் பிழைக்க வந்த மக்­கள்­தான் அங்கு மூன்று, நான்கு தலை­மு­றை­க­ளாக வசிக்­கி­றார்­கள்.  அவர்­கள் வெளி­யூர் செல்­வ­தற்கு மதுரை மற்­றும் திருச்சி பகு­திக்கு நேர­டி­யாக செல்­வ­தற்கு பேருந்து வசதி செய்­து­தர வேண்­டு­மென்று இந்­த­நே­ரத்­தில் நான் அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாவட்­டங்­க­ளுக்­கி­டை­யே­யான புற­ந­கர்ப் பேருந்து போக்­கு­வ­ரத்­துக்­காக கிளாம்­பாக்­கத்­தில் GST சாலை­யை­யொட்டி, சுமார் 88.52 ஏக்­கர் பரப்­ப­ள­வில் இந்­தி­யா­விலே மிகப்­பெ­ரிய பேருந்து முனை­ய­மான ரூ.393.74 கோடி திட்ட மதிப்­பீட்­டில் கலை­ஞர் நூற்­றாண்டு பேருந்து முனை­யம் சென்னை பெரு­வ­ளர்ச்­சிக் குழு­மத்­தால் அமைக்­கப்­பட்டு, 30–12–2023 அன்று திரா­விட மாடல் நாய­கர் முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் மக்­கள் பயன்­பாட்­டிற்கு திறக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முந்­தைய ஆட்­சி­யில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்­தத் திட்­டத்­திற்கு அடிக்­கல் நாட்­டப்­பட்­டது. கொரோனா போன்ற சூழ்­நி­லை­யால் 40 சத­வி­கி­தம் பணி­கள்­தான் நடை­பெற்­றன. எஞ்­சி­யுள்ள 60 சத­வி­கி­தம் பணி­க­ளோடு சேர்த்து, புதிய பணி­க­ளான மழை­நீர் கால்­வாய் மற்­றும் பொழு­து­போக்கு அம்­சங்­க­ளு­டன்­கூ­டிய கால­நிலை பூங்கா அமைத்து கிளாம்­பாக்­கம் இர­யில் நிலை­யத்­திற்கு ரூ.20 கோடி வழங்­கி­யது. கிளாம்­பாக்­கம் இர­யில் நிலை­யம் செல்­வ­தற்கு நடை­மேடை அமைப்­பது உட்­பட 26 பணி­கள் போக்­கு­வ­ரத்­துப் பய­ணி­க­ளுக்­காக, வச­திக்­காக சுமார் ரூ.200 கோடி­யில் நீங்­கள் அறி­வித்த திட்­டம். திரா­விட மாடல் ஆட்சி தலை­வ­ராக எங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­கள் இருந்­த­போது, 393 கோடி ரூபாய் செல­வில் விமான நிலை­யத்­திற்கு நிக­ராக அனை­வ­ரும் வியந்து பார்க்­கும் வண்­ண­மாக கலை­ஞர் நூற்­றாண்டு பேருந்து நிலை­யம் மக்­க­ளுக்­காக அளிக்­கப்­பட்­டது. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மலை­க­ளின் இள­வ­ரசி வால்­பாறை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மலை­க­ளின் இள­வ­ர­சி­யா­கத் திக­ழும் வால்­பாறை சட்­ட­மன்­றத் தொகு­தியை நீங்­கள் எடுத்­துக்­கொண்­டால், அது வால்­பாறை மேல் பகு­தி­யா­க­வும், வால்­பாறை கீழ் பகு­தி­யா­க­வும் இரண்டு பகு­தி­க­ளாக உள்­ளது. வால்­பாறை மேல் பகு­தி­யில் சுமார் 50,000 வாக்­கு­கள், வால்­பாறை கீழ் பகு­தி­யில் சுமார் 1 இலட்­சத்து 50 ஆயி­ரம் வாக்­கு­கள் உள்­ளன. வால்­பா­றை­யில் சுமார் 50 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட ஏக்­க­ரில் தேயி­லைத் தொழில்­தான் மூல­தன தொழி­லாக இருந்து வரு­கி­றது. இதில் மிக வருத்­தப்­ப­டக்­கூ­டிய செய்தி என்­ன­வென்­றால், அதி­காலை 7–00 மணிக்­குத் தொழி­லா­ளர்­கள் அனை­வ­ரும் வேலைக்­குச் செல்ல வேண்­டும். கொழுந்து தாட்­சட் என்று ஒன்று உள்­ளது; காலை­யில் அதைக் கட்­டிக்­கொண்டு வேலைக்­குச் சென்று அந்­தத் தேயி­லைச் செடி­யில் கை வைத்­தார்­கள் என்­றால், அங்கு அவர்­களை வர­வேற்­பது பாம்­பா­கத்­தான் இருக்­கும். ஐயோ பாம்­பா­யிற்றே என்று திரும்பி கீழே வந்­தார்­கள் என்­றால், காலில் அட்­டைப் பூச்­சி­யாக இருக்­கும், ஐயோ அட்­டைப் பூச்சி என்று தெறித்து ஓடி­னார்­கள் என்­றால், இந்த side காட்­டு­மா­டு­க­ளின் தொல்­லை­யாக இருக்­கும். ஐயோ காட்­டு­மா­டு­கள் வந்­து­விட்­டதே என்று சொல்லி வேறு பக்­கம் சென்­றார்­கள் என்­றால், யானை­க­ளின் தொல்­லை­க­ளா­கத்­தான் இருக்­கும். இது­தான் எங்­கள் வால்­பாறை மக்­க­ளின் இன்­றைய நிலை. பேர­வைத் தலை­வர் அவர்­களே, நாங்­கள் கேட்­ப­தெல்­லாம் ஒன்றே ஒன்­று­தான். தேயி­லைத் தோட்­டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு கேர­ளா­வுக்கு இணை­யான சம்­ப­ளத்தை இந்த அரசு வழங்க முன்­வர வேண்­டு­மென்று இந்த நேரத்­தில் நான் உங்­களை அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வால்­பா­றைக்கு கல்­லூரி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2006 ஆம் ஆண்டு தன்­மா­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் பொற்­கால ஆட்­சி­யில் வால்­பாறை பகுதி மக்­கள் 12 ஆம் வகுப்பு படித்து முடித்­து­விட்டு என்ன செய்­வது என்று தெரி­யா­மல் திக்­கித் திசை­யா­டித் திரி­கின்ற வேளை­யிலே ஏழை மாண­வர்­கள் உயர்­கல்வி பெற வேண்­டும்; தேயி­லைத் தோட்­டத் தொழி­லா­ளி­யின் மகன் இனி தேயி­லைத் தோட்­டத் தொழி­லா­ளி­யாக இருக்­கக் கூடாது என்­கிற உயர்ந்த உள்­ளத்­து­டன் அன்று எங்­க­ளுக்­காக ஒரு கல்­லூ­ரியை வழங்­கி­னார். அந்­தக் கல்­லூ­ரி­யில் இன்று வரை சுமார் 12,500 மாண­வர்­கள் படித்­து­விட்டு, கீழ் பகு­தி­யில் வேலை செய்­கி­றார்­கள். அந்­தப் பகு­தி­யி­லுள்ள, கீழ் பகு­தி­யில் வேலை செய்­யும் குழந்­தை­கள் மறு­ப­டி­யும் வால்­பாறை பகு­திக்கு வந்து பணி செய்­வ­தற்கு வச­தி­யாக வால்­பா­றை­யில் ஒரு I.T. Park நிறு­வித் தரு­மாறு உங்­களை அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன். அது­மட்­டு­மல்­லா­மல், உயர் கல்­வித் துறை அமைச்­சர் அவர்­க­ளி­டம் அன்­பான ஒரு கோரிக்­கையை வைக்­கி­றேன்; வால்­பா­றை­யில் அறி­வி­யல் சார்ந்த படிப்­பு­கள் இல்லை. ஆகவே, B.Sc. (Botany), B.Sc. (Zoology), B.Sc. (Chemistry), B.Sc. (Physics) போன்ற அறி­வி­யல் சார்ந்த படிப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தரு­மாறு உங்­களை அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆட்­சி­யில், தேயி­லைத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் வெளி­யூர் சென்று வந்து பேருந்­து­களை விட்­டு­விட்­டால், வால்­பா­றை­யி­லேயே தங்கி அவர்­கள் மறு­நாள் estate பகு­திக்கு வேலைக்­குச் செல்­லும் வித­மாக, கழக ஆட்­சி­யில் சுமார் 2 கோடியே 50 இலட்­சம் ரூபாய் செல­வில் சிங்­கா­ர­வே­லர் இல்­லம் அமைத்­துக் கொடுத்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அரசு. கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் வால்­பாறை மக்­க­ளுக்கு சுமார் 12 கோடியே 27 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் 80 குடும்­பங்­க­ளுக்கு அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு வீடு­கள் கட்­டிக் கொடுத்­தது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை வனத் துறை சார்ந்த பகுதி. தேயி­லைத் தோட்­டத் தொழில்­கள்­தான் மிக­வும் அதி­க­மாக இருக்­கின்­றன. அந்­தத் தேயி­லைத் தோட்­டத்­தில் பணி­பு­ரி­யும் தொழி­லா­ளர்­க­ளின் நலன்கருதி, அன்­றைய திரா­விட மாடல் அரசு புதிய அரசு மருத்­து­வ­ம­னையை சுமார் 9 இலட்­சத்து 50 ஆயி­ரம் மதிப்­பீட்­டில் கட்­டிக் கொடுத்­தது. மருத்­து­வம், மருத்­து­வக் கல்வி மற்­றும் குடும்ப நலத் துறை அமைச்­சர் அவர்­க­ளி­னு­டைய அன்­பான கவ­னத்­திற்கு, மருத்­து­வ­ம­னைக்­குத் தேவை­யான அதி­ந­வீன மருத்­துவ சாத­னங்­களை நீங்­கள் கொடுத்து உதவ வேண்­டும். ஏனென்று கேட்­டீர்­க­ளென்­றால், ஐயா, தய­வு­செய்து மணி­ய­டிக்­கா­தீர்­கள். எனக்கு சாமி வந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் சத்­த­மாக நிறுத்­தி­வி­டுங்­கள் என்று சொல்­லுங்­கள், நான் நிறுத்­தி­வி­டு­கி­றேன். Bell அடித்­தால் எனக்கு சாமி வந்­து­வி­டும். (குறுக்­கீடு) உண்­மை­யைத்­தான் சொன்­னேன். பாருங்­கள், இப்­போதே ஒரு மாதி­ரி­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மருத்­து­வம், மருத்­து­வக் கல்வி மற்­றும் குடும்ப நலத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு; வால்­பா­றை­யி­லி­ருந்து கீழ்ப்­ப­குதி பொள்­ளாச்சி அரசு மருத்­து­வ­ம­னைக்கு 75 கிலோ­மீட்­டர். 40 hairpin bends இருக்­கின்­றன. அது எங்­க­ளுக்கு மிக­வும் critical. ஒரு patient கீழே வர­வேண்­டு­மென்­றால் மூன்று மணி நேரம் ஆகும். வால்­பா­றை­யில் கொஞ்­சம் அதி­ந­வீன கரு­வி­கள் மற்­றும் Ortho Doctors எங்­க­ளுக்கு வேண்­டும். அதே­போன்று, Paediatricians மிக­வும் important. இதைத் தயவு செய்து நீங்­கள் செய்து கொடுக்க வேண்­டு­மென அன்­பு­டன் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">டாப்­சி­லிப் பகு­தி­யில் கோழி­க­முத்­தி­யில் வனத்­து­றை­மூ­லம், தொல்­குடி திட்­டம்­மூ­லம், நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், பொம்­மன் மற்­றும் பெள்ளி என்ற வனத்­து­றை­யி­லுள்ள இரண்டு யானைப் பாகன்­கள் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்க, சுமார் ரூ.15 கோடி செல­வில் யானைப் பாகர்­க­ளுக்­காக தமி­ழ­கத்­தில் இல்­லா­தது, மற்ற மாநி­லங்­க­ளி­லும் இல்­லா­தது. யானைப் பாகன்­கள் குடி­யி­ருக்க நவீ­னக் குடி­யி­ருப்­பு­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யில் சுமார் ரூ.15 கோடி செல­வில் டாப்­சி­லிப் பகு­தி­யில் கட்­டப்­பட்­டுள்­ளன. மலை­வாழ் மக்­க­ளுக்கு அர­சின் சார்­பாக முறை­யா­கப் பட்டா வழங்கி அமைத்­துக் கொடுத்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். பல்­நோக்கு சிறு­தா­னிய மற்­றும் மலைப் பயிர்­கள் விற்­கும் இட­மாக அவர்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளும் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி படிக்க வச­தி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உயர் கல்வி படிக்க வச­தி­யான அனைத்து நலன்­க­ளை­யும் திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு செய்து கொடுத்­துள்­ளது. குறிப்­பாக, இது முக்­கி­ய­மான விஷ­யம். வால்­பாறை முழு­வ­தும் estate பகுதி. பேர­வைத் தலை­வர் அவர்­களே, கொஞ்­சம் பாருங்­கள்; உங்­க­ளைத்­தான் பார்க்­கி­றேன். வால்­பாறை முழு­வ­தும் estate பகுதி. கடந்த 20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு நாம் பார்த்­தோம் என்­றால், சாலை­களே இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">Tourism வந்­த­வர்­க­ளுக்கு எல்­லாம் தெரி­யும். சாலை­களே இருக்­காது. கடந்த ஆட்­சி­யில் சுமார் ரூ.40 கோடி மதிப்­பீட்­டில் நக­ராட்­சி­மூ­லம் அனைத்து சாலை­க­ளை­யும் தார்ச் சாலை­க­ளாக மாற்­றி­ய­மைத்­துக் கொடுத்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய அரசு. அது­போன்று, கீழ்ப்­ப­குதி ‘கம்­மா­ளர் கூட்­டுக் குடி­நீர் திட்­டம்’ ரூ.6 கோடி செல­வில் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. அங்­க­லக்­கு­றிச்சி ஊராட்சி ரூ. 2 கோடி 85 இலட்­சம் செல­வில் திட்­டங்­கள் வகுத்­துக் கொடுத்­தது திரா­விட மாடல் அரசு. வால்­பாறை எம்.ஜி.ஆர். நகர், முடீஸ், சோலை­யாறு ஆகிய இடங்­க­ளில் ரூ. 1 கோடியே 12 இலட்­சம் செல­வில் குடி­யி­ருப்­பு­கள் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பழங்­கு­டி­யின மக்­க­ளின் நலன் கருதி ஆனை­ம­லைப் பகு­தி­யில் சேத்­து­ம­டை­யி­லுள்ள சர்க்­கார்­பதி வரை சுமார் ரூ.3.5 கோடி செல­வில் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்­காக புதி­தா­கச் சாலை அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பா­றை­யி­லுள்ள தேயி­லைத் தோட்­டத் தொழி­லா­ளி­கள் அனை­வ­ரும் திரு­நெல்­வேலி, மதுரை, சேலம் போன்ற பகு­தி­க­ளி­லி­ருந்து பிழைப்­புக்­காக வால்­பாறை வந்­த­வர்­கள். இரண்டு, மூன்று தலை­மு­றை­க­ளாக அதே இடத்­தில் வசிக்­கின்­றார்­கள். ஐயா, எங்­க­ளுக்கு என்ன ஒரு பிரச்­சினை என்­றால், அவர்­க­ளுக்­குச் சொந்த நிலம், வீடு போன்­றவை இது­வரை இல்லை. அவர்­கள் retired ஆகி போன பிறகு, 60 வய­தில் retired ஆகி போன பிறகு கீழ்ப்­ப­கு­தி­யில் வீடு எது­வு­மில்லை. அவர்­கள் வாங்­கு­கின்ற சம்­ப­ளம் சாப்­பாட்­டிற்கே சரி­யாக உள்­ளது. அதில் பார்த்­தீர்­கள் என்­றால் யானைத் தொல்­லை­கள், உண்­மை­யா­கச் சொல்­கி­றேன்; கடந்த 20 ஆண்­டு­க­ளில் இது­வரை 23 உயிர்­கள், யானை­யா­லும், சிறுத்­தை­யா­லும், காட்டு மாடு­க­ள­லா­லும், அடி­பட்டு, மிதி­பட்டு அந்­தக் கஷ்­டத்­தில் நாங்­கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம். நாங்­கள் கேட்­ப­தெல்­லாம் இந்த அரசு ஒரு 3 சென்ட் இடம் கொடுத்து அந்­தப் பகுதிமக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை தயவு கூர்ந்து பெருக்­கித் தரு­வீர்­களா என்ற கேள்­வியை இந்த நேரத்­தில் வைக்ககட­மைப்­பட்­டுள்­ளேன். 
பிறகு, ஆனை­ம­லைப் பகு­தி­யி­லுள்ள 
கீழ்ப்­ப­கு­தி­யில். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அரசு மருத்­து­வ­மனை விரி­வாக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அருள்­மிகு மாசா­ணி­யம்­மன் கோவில், நீங்­கள் எல்­லாம் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள், மிள­காய் அரைத்­துப் பூசி வழி­ப­டு­வது. உல­கப் பிர­சித்தி பெற்ற மாசா­ணி­யம்­மன் கோவில், யாரா­வது தப்பு செய்­தார்­கள் என்­றால் அங்கு மாட்­டிக்­கொள்­வார்­கள். அந்­தக் கோவி­லுக்கு மிகச் சிறப்­பா­கக் குட­மு­ழுக்கு விழா நடத்தி இன்­று­வரை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நேரத்­தில் அந்த அர­சுக்­கும், அந்த அமைச்­ச­ருக்­கும் அன்­பு­டன் நன்­றி­யைக் கூற கட­மைப்­பட்­டுள்­ளேன். வேட்­டைக்­கா­ரன் பகு­தி­யில் அரசு மருத்­து­வ­மனை விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஐயா, என்­னு­டைய கோரிக்­கை­கள் நிறைய இருக்­கின்­றன. இரண்டு மட்­டும் சொல்­லி­வி­டு­கி­றேன். மீத­முள்­ள­வற்­றைக் கொடுத்­து­வி­டு­கி­றேன். இரண்டு மட்­டும் சொல்­லி­வி­டு­கி­றேன். வால்­பா­றையை சுற்­று­லாத் தல­மா­கத் தயவு கூர்ந்து நீங்­கள் 
அறி­விக்க வேண்­டும்; அறி­விப்­பீர்­கள் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம். ஏனெ­னில், சுமார் 1,500 வாக­னங்­கள் daily வந்து செல்­கின்­றன. எங்­கள் பொறுப்பு அமைச்­சர் இருக்­கி­றார், அவர்­க­ளுக்­குத் தெரி­யும். Daily 1,500 வாக­னங்­கள், 1500–வுடன் 5–ஐ பெருக்­கி­னால் daily பத்­தா­யி­ரம் நபர்­க­ளுக்கு மேல் வரு­கி­றார்­கள். ஏனெ­னில், கூட­லூர், ஊட்டி, கோத்­த­கிரி, கொடைக்­கா­னல் போன்ற பகு­தி­க­ளை­விட வால்­பாறை மிக­வும் அழ­கான ஊர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அமை­தி­யான ஊர்; நல்ல மக்­கள்; தங்­க­மான மக்­கள். அத­னால் அதி­க­மாக வந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். எனவே, அதை சுற்­று­லாத்­த­ல­மாக அறி­விக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நியா­ய­வி­லைக் கடை­க­ளில் 
தேங்­காய் எண்­ணெய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை பகு­தி­யில் தென்னை விவ­சா­யி­கள் அதி­க­மாக இருப்­ப­தால், அவர்­க­ளின் நலன் கருதி, நியாய விலைக் கடை­க­ளில் பாமா­யி­லுக்­குப் பதி­லாக தேங்­காய் எண்­ணெய்யை விநி­யோ­கித்­தால், வியா­பா­ர­மும் பெரு­கும்; விவ­சா­யி­க­ளும் நன்­றாக இருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை பகு­தி­யி­லுள்ள 40 எஸ்­டேட்­டு­க­ளில் செல்­போன் டவர் இல்லை. இத­னால், ஒரு யானை வந்­து­விட்­டால், யானை வந்­து­விட்­டது என்று பொது மக்­க­ளுக்­குத் தெரி­விப்­ப­தற்­குத் தேவை­யான டவர் வச­தி­கூட இல்லை. தக­வல் தொழில்­நுட்­பத் துறை அமைச்­சர் அவர்­கள், அந்த வச­தியை உட­ன­டி­யா­கச் செய்து கொடுக்க வேண்­டு­மென்று அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன். அங்கு டவர் இல்­லா­த­தால்­தான் நான் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக முடிந்­தது. உண்மை, உண்­மை­தான். டவர் இருந்­தி­ருந்­தால் Instagram, Facebook எல்­லாம் வந்­தி­ருக்­கும். (சிரிப்பு) எங்­கள் மக்­கள் என்னை விட­மாட்­டார்­கள். ஆனை­ம­லைப் பகு­தி­யில் அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனை­ம­லைப் பகு­தி­யில் மாசா­ணி­யம்­மன் கோயில் மற்­றும் சுற்­று­லாத்­ தல­மான டாப் ஸ்லிப் செல்­லும் வழி­யில் railway crossing இருக்­கி­றது. அங்கு ஒரு மேம்­பா­லம் அமைத்­துக்­கொ­டுத்­தால், எங்­கள் மக்­கள் traffic இல்­லா­மல் அந்­தச் சுற்­று­லாத்­த­லத்­திற்­குச் செல்ல இய­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை பகு­தி­யி­லுள்ள பொதுப் பணித் துறை ஆய்வு மாளிகை, பழை­ய­கா­லக் கட்­ட­ட­மாக உள்­ளது. அந்­தக் கட்­ட­டத்­தைப் புதுப்­பித்­துத் தரு­மாறு அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன். மீதி­யுள்ள கோரிக்­கை­களை இந்த அவை­யில் படித்­த­தா­கப் பதிவு செய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நல்ல வாய்ப்­பைக் கொடுத்த பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், என்னை இந்த இடத்­தில் அமர்த்­திய வால்­பாறை தொகு­தி­யி­லுள்ள அனைத்துமக்­க­ளுக்­கும், கழ­கத்­தின் தலை­வர் 8 கோடி மக்­க­ளின் எழுச்சி நாய­கன் தள­ப­தி­யார் அவர்­க­ளுக்­கும் நன்­றி­யைக் கூறி இப்­பொ­ழுது விடை­பெ­று­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொகு­திக் கோரிக்­கை­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை தொகுதி, ஆனை­ம­லை­யில் உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அலு­வ­ல­கத்­திற்கு சுற்­றுச் சுவர் மற்­றும் பேவர் பிளாக் வசதி ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும். கோட்­டூர் பேரூ­ராட்சி பகு­தி­யில் சின்­னார்­பதி தொடக்­கப் பள்­ளிக்கு சுற்­றுச் சுவர் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒடை­ய­கு­ளம், குப்­புச்­சி­பு­தூர் பகு­தி­யில் 5 கி.மீ. நீளத்­திற்கு வடி­கால் அமைத்­துத் தர வேண்­டும். ஆனை­மலை மாசா­ணி­யம்­மன் கோயில் அருகே நவீ­ன­ம­ய­மான பேருந்து நிலைய வசதி செய்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை தொகுதி, ஆனை­மலை ஒடை­ய­கு­ளம் பகு­தி­யில் அறி­வொளி நகர் ஆதி திரா­வி­டர் குடி­யி­ருப்பு மக்­க­ளுக்கு சமு­தா­ய­ந­லக் கூடம் அமைத்­துத் தர வேண்­டும். ஒடை­ய­கு­ளம் ராமச்­சந்­தி­ரா­பு­ரத்­தில் சமு­தாய நலக் கூடம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை பகு­தி­யில் சுற்­றுலா பய­ணி­கள் வாக­னங்­கள் நிறுத்­து­வ­தற்கு வச­தி­கள் செய்து தர வேண்­டும். வால்­பாறை தொகு­தி­யில் தக­வல் தொழில்­நுட்­பப் பூங்கா அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை தொகுதி, பெத்­த­நா­யக்­க­னூர் ஊராட்­சி­யில், கெங்­கம்­பா­ளை­யம் பகு­தி­யில் நியாய விலைக் கடை அமைத்­துத் தர வேண்­டும். வால்­பாறை தொகு­தி­யில் நட­மா­டும் ரேசன் கடை அமைத்­துத் தர வேண்­டும். வால்­பாறை 9 செட்­டில்­மென்ட் பகு­தி­யில் மலை­வாழ் மக்­கள் வாழும் பகு­தி­யில் வனத் துறை சாலை வசதி செய்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வால்­பாறை பகு­தி­யி­லுள்ள சேடல் டேம் பகுதி மக்­க­ளுக்கு பட்டா வழங்­கிட வேண்­டும். வால்­பாறை தொகுதி, ரேசன் கடை­களை கண்­டெ­யி­னர் கடை­க­ளாக மாற்றவேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு ஆ. குட்டி என்­கிற சுதா­கர் பேசி­னார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 2 –</lang>
	</hl2>

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, வியா­சர்­பாடி, எம்.எம்.கார்­டன் எண் 81–ல் வசித்த கழக முன்­னோடி நினை­வில் வாழும் அ. செல்­லப்­பன் அவர்­க­ளின் துணை­வி­யா­ரும், திரு.வி.க. நகர் வடக்­குப் பகு­திச் செய­லா­ளர்  செ. தமிழ்­வேந்­த­னின் தாயா­ரு­மான செ. முரு­கம்­மாள் அவர்­க­ளின் முத­லா­ மாண்டு நினை­வேந்­தல் நிகழ்ச்சி இன்று (2.9.2026–புதன்கிழமை), மாலை­யும் நாளை (3.9.2026 – வியா­ழக்­கி­ழமை) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை­யி­லும் வியா­சர் ­பாடி, எம்.எம்.கார்­ட­னில் உள்ள அன்­னா­ரது இல்­லத்­தில் நடை­­பெ­று­கி­றது.</lang>
	</hl2>

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­நி­கழ்­வில் கழக நிர்­வா­கி­கள், தோழர்­கள், உற­வி­னர்­கள், நண்­பர்­கள் கலந்து கொண்டு அன்­னா­ரது திரு­வு­ரு­வப் படத்­திற்கு அஞ்­சலி செலுத்­து­கின்­ற­னர்.</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>