<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,371,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 02 2026 03:42:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260902T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="02092026-MDU-05" position.sequence="05" ex-ref="02092026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">தாமி­ர­ப­ரணி ஆற்­றில் – மேலநத்தம் –</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="81">க­ருப்­பந்­து­றை இடையே உயர்­மட்டப் பாலம் அமைத்­தி­டுவீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">சட்­டப்பேர­வை­யில் பாளை­யங்­கோட்டை மு.அப்­துல் வகாப் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="adbdulbw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பாளை­யங்­கோட்­டை தொகுதி, தாமி­ர­ப­ரணி ஆற்­றில்  மேலநத்தத் திற்கும் – கருப்­பந்­­துறைக்­கும் இடையே உள்ள தரை­மட்­டப் பாலத்தை உயர்­மட்ட பால­மாக உயர்த்த வேண்­டும் என்­று சட்­டப்பேர­வை­யில் கழக உறுப்­பி­னர் மு.அப்­துல் வஹாப் பேசுகையில் குறிப்­பிட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பேரவையில் மு.அப்துல் வகாப் பேசியதாவது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பேரவை துணைத் தலை­வர் அவர்­களே, சமூக நீதிக்கு வித்­திட்ட பகுத்­த­றி­வுத் தந்தை பெரி­யார்; சமத்­து­வம் காத்­திட்ட பேர­றி­ஞர் அண்ணா; மொழி மானம், இனம் மானம், தன்­மா­னம் காத்து தமி­ழரை தலை­நி­மி­ரச் செய்த திரா­விட இயக்­கத்­தின் தன்­னி­க­ரில்லா பேர­ர­சர்; தங்­கத் தமிழ் கொண்டு, வங்­கக் கடல் தாலாட்­டும், திரா­விட வேந்­தர், முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளுக்கு முதற்­கண் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">2021 ஆம் ஆண்டு மற்­றும் 2026 ஆம் ஆண்டு ஆகிய ஆண்­டு­க­ளின் இரண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளி­லும், பாளை­யங்­கோட்டை தொகு­தி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில், களம் காண வாய்ப்­ப­ளித்த, பண்­பாட்டு பக­ல­வன், பார் போற்­றும் நல்­ல­வர், அவ­தூ­று­க­ளை­யும், துரோ­கங் 
­க­ளை­யும் பொது வாழ்க்­கை­யில் எதிர்­கொண்டு மனம் கலங்­கா­மல் மக்­க­ளுக்­கா­கப் பய­ணித்த மாமன்­னர். சினம் பொங்­கும் அள­விற்கு சிறி­யோர் தம் இழி­மொழி, பழி­மொ­ழி­க­ளைப் பொருட்­ப­டுத்­தா­மல் அலட்­சி­யப்­ப­டுத்தி, பகை நடுங்­கிட படை­க­லன் ஏந்தி, தமிழ் மக்­க­ளுக்கு, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு தன்னை அர்ப்­ப­ணித்து அரும்­பணி ஆற்றி, ஓய்­வுக்கு ஓய்வு கொடுத்த உழைப்­புச் சூரி­யன். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் என் உயி­ரி­னும், மதிப்­பிற்­கும், உயி­ரி­னுக்­கும் மேலான தலை­வர், மதிப்­பிற்­கு­ரிய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை (மேசை­யைத் தட்­டும் ஒலி) தமிழ்­நாட்­டின்  முன்­னாள் துணை முத­ல­மைச்­ச­ராக இருந்து, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு அல்­லும் பக­லும் அய­ராது பாடு­பட்டு, இன்று தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யின் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்து, சட்­ட­மன்­றத்­தில் எங்­களை வழி­ந­டத்­து­ கின்ற   உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரு­நெல்­வேலி மாவட்­டத்­தின்  முன்­னாள் பொறுப்பு அமைச்­ச­ராக இருந்து, சிறப்­பான முறை­யில் செய­லாற்றி, மாவட்ட வளர்ச்­சிக்கு நல்ல பல திட்­டங்­கள் கிடைத்­திட அரும்­பா­டு­பட்டு உத­விய சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் மதிப்­பிற்­கும் மரி­யா­தைக்­கும் உரிய   கே.என். நேரு அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய துணைப் பொதுச் செய­லா­ளர், திரா­விட முன்­னேற்­றக் கழக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர், திரு­நெல்­வே­லி­யின் மண்­டல தேர்­தல் பொறுப்­பா­ள­ராக இருந்து, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், தேர்­த­லில் நெல்லை மாவட்­டத்­தில் வெற்றி பெறு­வ­தற்கு பணி­யாற்­றிய திரு­மதி கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­களே, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய சட்­ட­மன்­றக் கொறடா, முன்­னாள் அமைச்­சர்  எ.வ. வேலு அவர்­களே, இரண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளி­லும் பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் அளித்து, என்னை அமோக வெற்­றி­பெ­றச் செய்த பாளை­யங்­கோட்டை தொகுதி மக்­க­ளுக்­கும், குறிப்­பாக மேலப்­பா­ளை­யம் மக்­க­ளுக்­கும், எனது வெற்­றிக்கு எதை­யும் எதிர்­பா­ரா­மல் கடு­மை­யாக உழைத்த திரா­விட முன்­னேற்­றக் கழக நிர்­வா­கி­க­ளுக் ­கும், தொண்­டர்­க­ளுக்­கும், கழக உடன்­பி­றப்­பு­க­ளுக்­கும், தோழ­மைக் கட்­சி­யி­ன­ருக்­கும் இத­ய­பூர்­வ­மான நன்­றி­யைக் காணிக்­கை­யாக்­கு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">காயிதே மில்­லத் பெய­ரில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அறி­வு­சார் நூல­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இந்த மாபெ­ரும் அவை­யில் வீற்­றி­ருக்­கும் அனை­வ­ருக்­கும், அனைத்­துச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். எனது பாளை­யங்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட பகு­தி­யில் ரூ.108 கோடி­யில் கண்­ணி­ய­மிகு காயிதே மில்­லத் பெய­ரில் பிரம்­மாண்ட அறி­வு­சார் நவீன digital நூல­கம், ரூ.47 கோடி­யில் மென்­பொ­ருள் தக­வல் தொழில்­நுட்­பப் பூங்கா, ரூ.67 கோடி­யில் பொருநை அருங்­காட்­சி­ய­கம் அமைப்­ப­தற்கு வித்­திட்ட கழ­கத் தலை­வர், தள­பதி அவர்­க­ளுக்­கும், அன்­றைய தினம் தொல்­லி­யல் துறை அமைச்­ச­ராக இருந்த அண்­ணன்  தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் நன்­றி­யி­னைக் காணிக்­கை­யாக்­கு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">குல­வ­ணி­கர்­பு­ரத்­தில் ரூ.125 கோடி­யில் Y வடிவ இர­யில்வே மேம்­பா­லம், திரு­நெல்­வேலி மேற்கு புற­வ­ழிச்­சாலை விரி­வாக் ­கப் பகு­தி­க­ளுக்கு தனி­யாக திரு­ம­லை­கொ­ழுந்­து­பு­ரத்­தி­லி­ருந்து சிறப்­புக் குடி­நீர் திட்­டம், கருப்­பந்­து­றை–­­மே­ல­நத்­தம் உயர்­மட்­டப் பாலம், ரூ.42 கோடி­யில் சித்த மருத்­து­வக் கல்­லூரி இன்­னும் தொகு­திக்கு நான் கேட்­ட­தை­யெல்­லாம் கொடுத்து, ரூ.1,000 கோடிக்கு மேல் எண்­ணற்­றத் திட்­டப்­ப­ணி­களை நிறை­வேற்­றிட அள்ளி, அள்­ளித் தந்து வாரி வழங்­கிய வள்­ளல், மக்­கள் மன­தில் நிறைந்­தி­ருக்­கும் எங்­கள் தலை­வர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு இந்த நேரத்­தில் நன்­றி­யி­னைக் காணிக்­கை­யாக்­கு­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ரூ.379 கோடி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புற­வ­ழிச்­சாலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எல்­லோ­ருக்­கும் எல்­லாம் என்ற உன்­னத நோக்­கத்­தோடு ரூ.687 கோடி­யில் பாதா­ளச் சாக்­க­டைத் திட்­டம், ரூ.379 கோடி­யில் திரு­நெல்­வேலி மேற்கு புற­வ­ழிச்­சாலைஇப்­படி பல்­வேறு திட்­டங்­களை எங்­க­ளுக்கு அள்­ளித் தந்த முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்­சி­யில்மக்­க­ளுக்­கான சிறப்­புத் திட்­டங்­கள். 1 கோடியே 35 இலட்­சம் இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு மாதம் ரூ.1,000 வழங்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம், தின­சரி 58 இலட்­சம் மக­ளிர் கட்­ட­ண­மின்­றிப் பய­ணம் செய்­யும் விடி­யல் பய­ணத் திட்­டம், 20.59 இலட்­சம் பள்­ளிக் குழந்­தை­கள் பயன்­பெ­றும் காலை உண­வுத் திட்­டம், 44.52 இலட்­சம் மாணவ, மாண­வி­கள் முன்­னேற்­றத்­திற்கு நான் முதல்­வன் திட்­டம், 9.21 இலட்­சம் மாணவ, மாண­வி­கள் மாதந்­தோ­றும் ரூ.1,000 பெறும் புது­மைப் பெண் திட்­டம் மற்­றும் தமிழ்ப் புதல்­வன் திட்­டம். ரூ.3,500 கோடி­யில் 1 இலட்­சம் வீடு­கள் அளிக்­கும் கலை­ஞர் கனவு இல்­லம். 23.70 இலட்­சம் முதி­யோர் இல்­லம் தேடி உண­வுப் பொருட்­கள் வழங்­கும் தாயு­மா­ன­வர் திட்­டம், 20 இலட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி வழங்­கும் உல­கம் உங்­கள் கையில் திட்­டம். மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், இன்­னு­யிர் காப்­போம்–­­நம்­மைக் காக்­கும் 48 போன்ற திட்­டங்­களை அள்­ளித் தந்த முன்­னாள் முதல்­வர் அவர்­க­ளுக்கு நான் இந்த நேரத்­தில் நன்றி கூறு­கின்­றேன். அது­போல எங்­கள் மாவட்­டத்­திற்கு 3 SIPCOT–களும், 1 SIDCO தொழிற்­பேட்­டை­யும் அமைத்து, தொழில் வள­மிக்க மாவட்­ட­மாக, அந்த மாவட்­டத்­திற்கு அள்­ளித் தந்த அன்­றைய பொறுப்பு அமைச்­சர் அவர்­க­ளுக்­கும், எங்­க­ளின் அன்­றைய முதல்­வர் அவர்­க­ளுக்­கும் நான் நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சமூக வளர்ச்­சிக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">1,256 உயர்­தரமருத்­துவ மையங்­க­ளில் 17 சிறப்பு மருத்­து­வச் சேவை. தமிழ்­நாட்­டில் 12,525 கிராம ஊராட்­சி­க­ளுக்கு மற்­றும் 33 விளை­யாட்­டு­க­ளுக்­கான உப­க­ர­ணங்­கள் வழங்­கும் திட்­டம். கைத்­தறி நெச­வா­ளர்­க­ளுக்­குக் கட்­ட­ண­மின்றி மாதம் 300 யூனிட் மின்­சா­ரம் இல­வ­சம், விசைத்­தறி நெச­வா­ளர்­க­ளுக்­குக்கட்­ட­ண­மின்றி மாதம் 100 யூனிட் மின்­சா­ரம் இல­வ­சம், மூத்த குடி­மக்­க­ளைப் பாது­காக்க அன்­புச் சோலை திட்­டம், ஆத­ர­வற்ற குழந்­தை­க­ளைப் பாது­காக்க அன்­புக் கரங்­கள் திட்­டம், பணி­பு­ரி­யும் மக­ளிர் நலம் காக்க தோழி விடு­தி­கள். 3,230 திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு, 5 ஆண்­டு­க­ளில் 79 இலட்­சத்து 25 ஆயி­ரத்து 985 பேருக்கு ரூ.63 ஆயி­ரத்து 346 கோடி பயிர்க்­க­டன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு பல திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தோடு, இன்­னும் பல முன்­னோடி திட்­டங்­களை அறி­வித்து, அனைத்­துத் தரப்பு மக்­க­ளின் நல­னை­யும் உள்­ள­டக்­கிய சாதனை திட்­டங்­களை நிறை­வேற்றி, தமிழ்­நாட்­டின் சமூக மறு­ம­லர்ச்­சிக்கு பெரும் பங்­காற்றி உழைத்த எங்­கள் தலை­வ­ரின் அய­ராத முயற்­சி­யால் தமிழ்­நாடு தலை நிமிர்ந்து நிற்­கின்­றது என்­பதை உறு­தி­ப­டுத்தி NITI Aayog அறிக்கை அளித்து பாராட்­டி­யுள்­ளது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்­சி­யில், உட்­கட்­ட­மைப்­பில் இந்­தி­யா­வின் number 1 மாநி­ல­மாக இருந்த இந்த தமிழ்­நாடு இன்று கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது என்­பதை இந்த நேரத்­தில் நான் பதிவு செய்­கின்­றேன். திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் ஏற்­றம் அடைந்த தமிழ் மக்­கள், மாற்­றத்தை எண்­ணி­ய­தால் இன்று ஏமாற்­றமே மிஞ்­சி­யது. தந்­தி­ர­மா­கச் செயல்­பட்டு, நவீன தக­வல் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி, திடீ­ரென திடுக்­கிட்டு ஏமாந்த வேளை­யில், திக்­க­றி­யாது தமி­ழ­கம் நின்­று­ போ­னது. த.வெ.க. தேர்­தல் அறிக்­கை­யில் மக­ளிர் உரி­மைத் தொகை ரூ.2,500; இல­வச கேஸ் சிலிண்­டர் 6; மாநி­லம் முழு­வ­தும் மக­ளி­ருக்கு இல­வச பேருந்து பய­ணம்; வேலை­யில்லா இளை­ஞர்­க­ளுக்கு மாதம் ரூ.4,000 உத­வித் தொகை; முதி­யோர் உத­வித் தொகை ரூ.3,000; விவ­சா­யி­க­ளின் குழந்­தை­க­ளுக்கு இல­வச கல்வி; கிரா­மங்­க­ளில் வீடில்லா அனை­வ­ருக்­கும் இல­வச வீடு, இப்­ப­டி­யெல்­லாம் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்டு, இன்று எந்­தத் திட்­ட­மும் இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் இல்லை என்­பதை இந்த நேரத்­தில் நான் நினை­வு­ ப­டுத்­து­கின்­றேன். அதே­போல், தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­காக எப்­போ­தும் குரல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளும், கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளும், என்­றென்­றும் சிறு­பான்­மை­யின இஸ்­லா­மி­யர்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­கக் குரல் கொடுத்து, அவர்­க­ளுக்கு உறு­து­ணை­யா­க­வும், பாது­காப்பு அர­ணா­க­வும் இருந்து வந்­துள்­ள­னர். ஒன்­றிய பா.ஜ.க.அரசு இஸ்­லா­மி­ யர்­க­ளுக்கு எதி­ராக குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்­தைக் கொண்டு வந்­த­போது, கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள், தலை­ந­கர் சென்­னை­யில் தோழ­மைக் கட்­சித் தலை­வர்­க­ளை­யெல்­லாம் அழைத்து, அவ­ரு­ டைய தலை­மை­யில் இலட்­சம் பேரை திரட்டி, பேர­ணி­யா­கச் சென்று அந்த எதிர்ப்­பினை பதிவு செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சி.ஏ.ஏ. சட்­டத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அனு­ம­தி­யில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அதைக்­கண்டு அன்­றைய ஒன்­றிய அரசு பின்­வாங்­கி­யது. அந்­தச் சட்­டத்தை நிறுத்­தி­யது. அது­மட்­டு­மல்ல, 2021 ஆம் ஆண்டு ஆட்­சிக் பொறுப்­பிற்கு வந்­த­பி­ற­கும், அந்­தச் சட்­டத்தை நாங்­கள் தமி­ழ­கத்­திலே அமல்­ப­டுத்த மாட்­டோம், CAA, NRC போன்ற திட்­டத்தை அமல்­ப­டுத்த மாட்­டோம் என்ற தீர்­மா­னத்­தை­யும் சட்­ட­மன்­றத்­தில் நிறை­வேற்­றி­ய­வர் அன்­றைய  முத­ல­மைச்­ச­ராக இருந்த  முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் என்­பதை இந்த மன்­றத்­திலே பதிவு செய்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">முத்­த­லாக் உள்­ளிட்ட மத்­திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த அனைத்­துத் திட்­டங்­க­ளுக்­கும் அன்­றைய  முதல்­வர் அவர்­கள் கடு­மை­யான எதிர்ப்பை பதிவு செய்­த­தோடு, சட்­டப்­பூர்­வ­மான போராட் ­டங்­க­ளை­யும் முன்­னெ­டுத்து, தீர்­மா­னங்­க­ளை­யும் நிறை­வேற்றி, அதைப் பதி­வும் செய்­தார்­கள் என்­பதை நான் இந்­த­நே­ரத்­தில் நினை­வு­ப­டுத்­து­கின்­றேன். அது­போல், அன்­றை­ய­தி­னம் ஒன்­றிய பா.ஜ.க. அரசு இஸ்­லா­மி­யர்­க­ளால் தானம் செய்­யப்­பட்ட (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) வஃக்ப் சொத்­து­களை அப­க­ரிக்­க­வேண்­டும், அதைக் கொள்­ளை­ய­டிக்க வேண்­டு­மென்­கின்ற ஒரு தவ­றான நோக்­கத்­தோடு, அந்த வஃக்ப் திருத்­தச் சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் நள்­ளி­ரவு 2 மணி­ய­ள­வில் அன்­றைக்கு இயற்­றி­னார்­கள். நாள் கணக்­கு­கூட இல்லை, அன்று காலை 9 மணிக்கு இந்த அவை­யில் இதே இடத்­தில்  முதல்­வர் அவர்­கள் இருந்­தார்­கள். 9–30 மணி­ய­ள­வில் அந்­தச் சட்­டத்தை தமிழ்­நாட்­டில் நான் அமல்­ப­டுத்­த­ வி­ட­ மாட்­டேன் என்று அந்­தத் தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்­த­வர் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் என்­பதை இந்த நேரத்­தில் பதிவு செய்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இப்­படி எந்­தெந்தநேரங்­க­ளில் எல்­லாம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆபத்து வந்­ததோ, அந்த நேரத்­தில் எல்­லாம் முதன்­மை­யாக இருந்­த­வர் அன்­றைய  முத­ல­மைச்­சர் என்­பதை நான் இந்­த­நே­ரத்­தில் பகிர்ந்­து­கொள்­கி­றேன். ஆட்­சி­யி­லும் பங்கு, அமைச்­ச­ர­வை­யி­லும் பங்கு போன்ற அர­சி­யல் அதி­கா­ரப் பங்­கீ­டு­கள் கிடைத்­த­வு­டன், புரி­யா­மல் சிலர் வர­லாற்­றை­யும், சமீ­ப­கா­ல­மாக,.  வரு­கி­றேன். அத­னால் அவர்­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் என்­னு­டைய கருத்­து­களை பதிவு செய்­கின்­றேன். இஸ்­லா­மிய சகோ­த­ரர்­கள் கோரிக்கை வைக்­கும் முன்பே தமிழ்­நாடு ஹஜ் இல்­லம் நட்­சத்­திர ஓட்­டல் அந்­தஸ்த்­துக்கு equal ஆக airport பக்­கத்­தில் ஆலந்­தூ­ரில் கிட்­டத்­தட்டரூ.40 கோடி செல­வில் அன்­றை­ய­தி­னம் அடிக்­கல் நாட்­டப்­பட்டு, இன்­றைக்கு கட்­டு­மா­னம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பதை இந்த அவை­யிலே பதிவு செய்­கி­றேன். அன்­றை­ய­தி­னம் அதற்கு வித்­திட்­ட­வர் அடிக்­கல் நாட்­டி­ய­வர்  முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் என்­பதை இந்த அவை­யிலே நான் பதிவு செய்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அவ­ரு­டன் சம­கா­லத்­தில் அர­சி­யல் பய­ணத்தை தொடங்­கிய தலை­வர்­கள் பல்­வேறு மாநி­லங்­க­ளின்  முத­ல­மைச்­சர்­க­ளாக இருக்­கட்­டும், இப்­போது மாண­வர்­க­ளுக்­கா­கப் போராடி ஒன்­றிய அர­சாங்­கத்தை ஆட்­டம் காண­வைத்த CJP தலை­வர்­கள் வரை அவ­ரு­டைய ஆட்­சி­யைப் பாராட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­பதை இந்த அவை­யிலே நான் பதிவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அது­போல், operation என்று சொன்­னார்­கள். இன்­றைய ஆட்சி மாற்­றம் வேண்­டு­மென்று சொல்லி, operation என்று தேர்­தல் பிரச்­சா­ரத்­திலே பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளைச் சொல்லி, ஆட்­சிக்கு வந்­தார்­கள். இன்­றைக்கு operation செய்து  நடந்து கொண்­டி­ருக்­கி­றது.  எனது சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட கோரிக்­கை­கள். அதா­வது தீவி­ர­வா­தி­கள் என்று உண்­மைக்கு மாறான குற்­றச்­சாட் ­டிற்கு ஆளாகி, அதிக இஸ்­லா­மிய சகோ­த­ரர்­கள் சிறைச்­சா­லை­யில் இருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">விடு­தலை செய்­ய­வேண்­டு­மென்று இந்த நேரத்­தில் கேட்­டுக்­கொள்­கின்­றேன். என் தொகு­தி­யான மேலப்­பா­ளைத்­தைச் சேர்ந்­த­ வர்­கள் 4 நபர்­கள் இருக்­கின்­றார்­கள். தமிழ்­நாட்­டில் கிட்­டத்­தட்ட 23, 24 நபர்­கள் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளு­டைய நியா­ய­மான கோரிக்­கை­களை நீங்­கள் பரி­சீ­லித்து, அவர்­களை விடு­தலை செய்­ய­வேண்­டும். அது­போல் அவர்­க­ளுக்கு furlough என்று சொல்லி, 60 நாட்­கள் விடுப்பு கொடுக்­கி­றார்­கள். அதை­யும் உங்­க­ளு­டைய  அமைச்­சர் மூல­மாக செய்­ய­வேண்­டும். அது­போல் என்­னு­டைய தொகு­தி­யில் ஒரு ‘Y’ பாலம் முன்­னாள்  முத­ல­மைச்­சர் அவர்­கள் ரூ.125 கோடி என்று அறி­வித்து, அதற்கு நில­எ­டுப்பு போன்ற ஆயத்­தப் பணி­கள் எல்­லாம் முடிந்­து­ விட்­டன. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) அந்­தத் திட்­டத்­தை­யும் நீங்­கள் நிறை­வேற்­றித்­தர வேண்­டு­ மென்று கேட்­டுக்­கொண்டு, எனது உரையை நிறைவு செய்­கி­றேன். நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்த அவை­யில் கருத்­து­க­ளைப் பதிவு செய்­வ­தற்கு, என்னை இவ்­வ­ளவு நேரம் பேசு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்த  பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், அனைத்து மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்து, விடை பெறு­கி­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தொகு­திக் கோரிக்­கை­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரு­நெல்­வேலி மாந­க­ராட்சி, திரு­ம­லை­கொ­ழுந்­து­பு­ரத்­தில் குடி­நீர் திட்­டத்­தினை முழு­மை­யாக நிறை­வேற்­றித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரு­நெல்­வேலி மாவட்ட நீதி­மன்ற வளா­கத்­தில் புதிய ஒருங்­கி­ணைந்த நீதி­மன்ற கட்­ட­டம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பாளை­யங்­கோட்டை தொகுதி, சி என் கிரா­மம்–ஶ்­ரீ­பு­ரம் இடையே இணைப்­புச் சாலை அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பாளை­யங்­கோட்டை தொகுதி, தாமி­ர­ப­ரணி ஆற்­றில் மேல­நத்­தத்­திற்­கும் கருப்­பந்­து­றைக்­கும் இடை­யே­யுள்ள தரை­மட்ட பாலத்தை உயர்­மட்ட பால­மாக அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பாளை­யங்­கோட்டை தொகுதி, மேலப்­பா­ளை­யம் ஹாமிம்­பு­ரம் மாந­க­ராட்சி ஆரம்­பப் பள்­ளியை நடு­நி­லைப் பள்­ளி­யா­க­வும், பெரு­மாள்­பு­ரம் மாந­க­ராட்சி நடு­நி­லைப் பள்­ளியை உயர்­நி­லைப் பள்­ளி­யா­க­வும் தர­மு­யர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்வாறு மு.அப்துல் வகாப் பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>