<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 02 2026 03:47:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260902T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02092026-TRY-06" position.sequence="06" ex-ref="02092026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup848753_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்டசபையில் வசந்தம் கார்த்திகேயன் இடம்மாறி உட்கார்ந்தால் சத்தமிடும் சபாநாயகர், முதல்வர் விஜய் இடம்மாறி அமரும்போது மட்டும் அமைதி காப்பதா? ஆளுக்கு ஒரு சட்டமா? அனைத்து உறுப்பினர்களின் செயல்பாட்டை நிறுத்திட திட்டமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்டமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி லெட்டர்பேடில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் படம் இருந்ததாம், அக்ரிக்கு எதிரில் அமர்ந்திருந்த அவை முன்னவர் செங்கோட்டையன் திடீரென எழுந்து, “அக்ரி கிருஷ்ணமூர்த்தி கையில் வைத்திருந்த லெட்டர்பேடை நான் பார்த்தேன், அந்த லெட்டர்பேடில் இருக்கும் படத்தில் இருப்பவர் இடம்மாறி விட்டார் ஆனால் அவர் படம் மாறவில்லை” என்கிறார் செங்கோட்டையன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்தவர் லெட்டர்பேடினை எட்டிப் பார்ப்பது அடுத்தவர் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது போல, கட்டிய கணவனாக இருந்தாலும் மனைவியின் கடிதத்தையோ, நாட்குறிப்பையோ எட்டிப்பார்க்கக் கூடாது. இந்தப் பழக்கம் சீட்டாட்டத்தில் எட்டிப் பார்க்கும் கெட்ட நாயகன் வேலை. இது தொட்டில் பழக்கம் போல அமைச்சர் செங்கோட்டையனுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது சரி, படத்தைப் பற்றி தடம் மாறியவர் பேசலாமா? ஈயத்தைப் பார்த்து இளிக்கலாமா பித்தளை? ஓ.பி.எஸ் ஆவது அண்ணா பெயர் உள்ள கட்சியிலிருந்து, அண்ணா ஆரம்பித்த தாய்க் கட்சிக்குத்தான் சென்றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்தியை எதிர்ப்பதில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படுவோம் என அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்ன கட்சிக்குத்தான் சென்று இருக்கிறார் ஓ.பி.எஸ். அவர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை செயிண்ட்ஜார்ஜ் கோட்டையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் கொடியேற்றுகிறேன் என்றால் அதற்குக் காரணமான என் நண்பர் கலைஞருக்கு நான் நன்றி சொல்கிறேன் என்று சொன்னாரே எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆர். பாராட்டிய தி.மு.க. தலைவர் கலைஞரின் மகனிடம்தான் சென்று இருக்கிறார் ஓ.பி.எஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் நீங்கள் உங்கள் சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு எங்கே சென்றிருக்கிறீர்கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அன்றைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எந்த நடிகரை கொடநாட்டில் பல மணி நேரம் காக்கவைத்துக் கேவலப்படுத்தி அனுப்பி வைத்தாரோ, அந்த விஜயின் பக்கத்தில் வெட்கமில்லாமல் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் தடம்மாறும் செய்தியைத் தொடலாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க ஜா, ஜெ அணி, சமாஜ்வாடி, தமிழ்மாநிலக் காங்கிரஸ், மீண்டும் அ.தி.மு.க. என படம் மாறினாலும் ஓரளவு தடம் மாறாது சபை நடத்தும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை எதிரில் வைத்துக்கொண்டு நீங்கள் இப்படி பேசலாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேர்மையின் சிகரம் என சொல்லிக்கொள்ளும் நீங்கள், தங்களுக்கு ஒதுக்கிய நிதித்துறையை வேண்டாம் எனக் கூறிவிட்டு, வருவாய்த்துறையை வாங்கியது எதற்கு? வருவாயினைப் பெருக்கிடவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் திடீரென எழுந்து ஆஸ்டின் தி.மு.க.விற்கு மாறியதை குறை கூறுகிறார். ஆஸ்டின் அவராக - – பக்குவமாக நேர்மையை நோக்கி நகர்ந்து விசுவாசம் காட்டியிருக்கலாம். ஆனால் சொந்தக் கட்சியிலேயே கட்சிக்கட்டுப்பாட்டை மீறியவர் என அன்றைய அ.தி.மு.க.விற்கு விருப்பமில்லாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். உடன் கள்ள உறவு வைத்து அவர்களின் பேரணியை தொடக்கிவைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி தனது சொந்தக் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் அல்ல அவர். ஆஸ்டின் இருக்கும் இடத்தில் விசுவாசமாக இருப்பவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வி.சி.க.விற்குக் கடந்த தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர் இருந்தும் ஏன் அமைச்சர் கொடுக்கவில்லை என்பது தவறான பேச்சு. அதிகாரம் இருக்கிறது என்பதற்காக யாரும் பேசக்கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.விற்கு மெஜாரிட்டி இல்லாததால் வி.சி.க.விற்கு அமைச்சரவையில் இடம் தருகிறேன் என்று விஜய் தந்தாரே தவிர, த.வெ.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">150 இடம் பெற்றுவிட்டு வி.சி.க.விற்கு ஆட்சியில் பங்கு தரவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க.வை விட்டுப் போன பா.ம.க. தன் அங்கீகாரத்தை இழந்தது. தி.மு.க.விடம் சேர்ந்த வி.சி.க. தனது அங்கீகாரத்தைப் பெற்றதை மறக்கக்கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த 2026 தேர்தலில் காங்கிரஸின் குடைச்சலை சமாளிக்க புதிதாக சேர்ந்த தே.மு.தி.க.விற்கு 10 இடம், காங்கிரசுக்கு மூன்று இடம் அதிகம், புதிதாக சேர்ந்த தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ., முத்தரையர் அமைப்பு என பெருகியபோது முஸ்லீம் லீக், ம.தி.மு.க., கம்யூனிஸ்களிடம் சீட்டுகளை குறைத்த தி.மு.க. 2021 தேர்தலில் தான் நின்ற தொகுதிகளில் பனிரெண்டைக் குறைத்துக் கொண்டது. ஆனால் விடுதலை சிறுத்தை களுக்கு மட்டும் இரண்டு சீட்டு அதிகம் கொடுத்தது. அதை 33 சதவீதம் அதிகம் கொடுத்தது எனலாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">2026 தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. “விஜயே ஆளட்டும், எங்களது தோழமைக் கூட்டணிக் கட்சிகள் விஜயினை ஆதரிக்கட்டும். அவரால் முடியாவிட்டால் தொல். திருமாவளவன் முதல்வர் ஆகட்டும்” என சிந்தித்த கூட்டம் தி.மு.க. கூட்டம். ரத்த உறவை அதிகாரத்துக்காக சிதைக்காதீர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தமிழின் சிற்பி சிந்தனைச்செல்வன் “நன்றி கூறுகிறோம்” என்கிற தி.மு.க.வின் புதிய அரசாணைக்கான நன்றி அறிக்கையையும், சிந்தனைச் செல்வன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையையும், கலைஞரின் நினைவு நாளில் தனது பழைய கட்டுரையைத் திருப்பி முகநூலில் போட்டு நன்றி சொன்ன பொதுச்செயலாளர் ரவிக்குமார் வாழ்த்தையும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. போட்ட தற்காலிக தலைமைச் செயலாளரை வைத்துக்கொண்டு இந்திக்குப் பந்தி விரிக்கும் த.வெ.க.வை எப்படி ஆதரிப்பது என்கிற வி.சி.க.வின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்தையும் தொண்டர்கள் ஏற்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.வை ஆதரித்தாலும், தி.மு.க.வை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்காத எழுச்சித் தமிழர் தொல். திருமாவளனை பின்பற்றுபவர்கள் தி.மு.க.வை குறை கூறமாட்டார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தேர்தலில் நான் தோற்றால் கூட பரவாயில்லை. வன்னியரசு தோற்கக் கூடாது” எனப் பிரச்சாரம் செய்த இளைய கலைஞர் உதயநிதியை எதிர்க்கக் காரணம் இல்லாமல் தூற்றவும் கூடாது. காரணம் இல்லாமல் சிரிக்கவும் கூடாது, எதிர்காலத்தில் சந்திக்கும்போது மனவேதனையுடன் கைகுலுக்கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்டமன்றத்தில் 2006-–ல் காங்கிரஸ் துணையுடன் ஆட்சியில் அமர்ந்து விட்டு காங்கிரசை திட்டலாமா என ஒரு குரல். அது மக்கள் குரலும் அல்ல. திருக்குறளும் அல்ல. விசில் குரல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே சட்டசபையில் அண்ணன் வேலுகூட 2006–-ல் காங்கிரஸ் ஆதரவு அல்லாமல் பா.ம.க.வும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தது என்றார். பா.ம.க. மட்டுமல்ல எங்களிடம் கம்யூனிஸ்டுகளும் இருந்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">163 சட்டமன்ற உறுப்பினர்கள், கலைஞர் முதல்வர் என ஓட்டுக் கேட்டு வெற்றி பெற்று சபைக்கு வந்தவர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. அப்படியா என்றால் இல்லை. தளபதி ஸ்டாலின் முதல்வர் எனச் சொன்னவர்கள் 13 பேர் ஆதரவுடன், பொய்க்கால் குதிரைபோல விஜய் ஆட்சி அமைத்தார். இரண்டையும் ஒப்பிடக்கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. ஒப்பிலா வைரம். விரைவில் தமிழக ஆட்சிக் கட்டிலில் தி.மு.க. அமரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அறிவாலயத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கணுமாம். வளர்ந்து கெட்டவன் உளறுகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இயக்கத்தின் தலைமை அலுவலகம் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. ஆதலால் கட்சித்தலைவர்களே முகப்பில் காட்சியளிப்பர். அலுவலக முகப்பில் தந்தை பெரியார் சிலை என்றால் நாங்கள் திராவிட கழகத்திலேயே இருந்திருக்கலாமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. அலுவலகத்தில் “அண்ணா” பெயர் இருக்கும், சிலை இருக்காது. அ.தி.மு.க. அலுவலக இடம் ஜானகி அம்மையார் தந்தது. அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜானகி அம்மையார் சிலை இருக்காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உலகத்தலைவர்கள், தேசத்தலைவர்கள், படைப்புகள், வரலாறு அறிவாலயத்தில் உள்ளே கருவூலத்தில் உள்ளது. திராவிடர் கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் சிலை இருக்காது. ஆனால் ஆசிரியரின் அறைகளில் அண்ணா, கலைஞர் படம் இருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடிகர் பாக்யராஜ் ஒரு படத்தில் வீட்டில் தன் படத்தை டாக்டர் மாதிரி, இன்ஸ்பெக்டர் மாதிரி, அட்வகேட் மாதிரி, விமான ஓட்டி மாதிரி என பலவேடங்களில் மாற்றி வைத்திருப்பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவருக்கு என்று வழக்கறிஞர் பட்டம் இருந்தால் கருப்பு கவுனுடன் காட்சி அளிக்கலாம். அவருக்கு படிப்பில்லாததால் எல்லா வடிவ ஆடையுடனும் தோற்றமளிப்பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.வுக்கு ஒரு வரலாறு இல்லை. காட்சிக்காவது உண்டா என்றால் அதுவும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட்சிக்கு உள்ளார்ந்த தலைவர்கள் இல்லை. அதனால் காசுக்கு இரண்டு பொம்மைகள் வாங்கி வருவது போல தலைவர்களின் பொம்மைகளை வைத்து இருக்கிறாய். நாங்கள் எங்கள் கட்சித் தலைவர்களைக் கருவூலத்தில் பாடமாக வைத்திருக்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. உறுப்பினர்களை தன் கட்சியில் இடைத்தேர்தல் மூலமாக இணைத்துவிட்டு, பிறகு காங்கிரசினை கழட்டி விடும் வகையில் “விஜய் பிரதமர்” எனும் கோஷத்தை எழுப்ப இருந்த த.வெ.க.வினர் அவசரப்பட்டு முன்கூட்டியே கோஷம் எழுப்பி, காங்கிரசினருடன் வருத்தத்தில் முடிந்திருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட்சியை உளவு பார்த்ததை எடுத்துச்சொல்லியும், பட்டும் படாமல் மெல்லிய நடவடிக்கை என நடவடிக்கை எடுத்ததால் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவும் வருத்தத்தில் முடிந்திருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. தலைவருக்கு தந்த பாதுகாப்பை மட்டரகமாக திரும்ப பெற்றதற்காகவும், கம்யூனிஸ்ட்களிடம் நடந்து கொண்ட பா.ஜ.க.வின் ஊதுகுழல் நிகழ்வுக்காவும், எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவனும் தன் கண்டனத்தை தெரிவித்ததுடன், தி.மு.க.வினர் தாழ்த்தப்பட்டோருக்கு நிறைய செய்திருக்கிறார்கள் என்று சொன்னதான் மூலம் விடுதலை சிறுத்தைகளின் உறவும் வருத்தத்தில் தொடர்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆக மொத்தமுள்ள 234-–ல் ஏழு இடம் காலியான சூழலில் 227 உறுப்பினர் தமிழக சட்டமன்றத்தில் இருக்கின்றனர். முழு ஆதரவு தேவை எனில் குறைந்தபட்சம் 114 இருக்க வேண்டும். ஆனால் இருக்கும் 106 மற்றும் திருவாரூர் காமராஜுடன், முஸ்லீம் லீக் இரண்டு என 109மட்டுமே முழு ஆதரவுடன் தொடர்கிறது த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வி.சி.க.வை சமாதானப்படுத்திட எதிர்க்கட்சியின் தலைவராம் முன்னாள் முதல்வருக்கு தந்த பாதுகாப்பின் பகுதியை குறைத்ததை திரும்ப பெற்று இசட்பிரிவு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கொள்கை விளக்க குறிப்பேட்டில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் பெயரினை உடனடியாக சேர்க்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அல்லது த.வெ.க. இராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அதுவரை இதுகுறித்து சிந்திக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்குமுக்கு திக்குதாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும்” என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது உண்மைதான். எட்டு நாள் என்பது நூறு நாளில் தெரிந்துவிட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடிக்கிற ஆடிக்காற்றில் அம்மி பறக்கலாம், இமயம் பறக்காது. அறிவாலயம் காலியாகாது, தலைமைச் செயலகம்தான் காலியாகும். புரிந்து கொண்டவர்கள், புரியாதவர்களுக்கு புரியவைக்க வேண்டும். தமிழக பண்பாட்டின் நெறியை காப்பாற்ற வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்வாறு தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் த.வெ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>