<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 01 2026 21:40:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260902T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02092026-VLR-04" position.sequence="04" ex-ref="02092026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">த.வெ.க. ஆட்சியில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="T.R.B.Raja_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="deepakbw_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Theerargal1_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மன்­னார்­குடி, செப். 2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா விடுத்­துள்ள சமூக வலை­த­ளப் பதிவு வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று வறண்டு கிடக்­கும் வடு­வூர் ஏரி­யைப் பார்க்­கும்­போது, அதன் நீர்ப்­பி­டிப்­புத் திறனை அதி­க­ரிக்க நான் பார்த்­துப் பார்த்­துச் செய்த பணி­கள் அனைத்­தும் மன­தில் நிழ­லா­டு­ கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதே நாளில், கடந்த ஆண்டு பசுமை எழில் கொஞ்ச, நீர் நிறைந்து, பற­வை­கள் புடை­சூழ வடு­வூர் ஏரி காட்­சி­ய­ளித்த அந்த 
ரம்­மி­ய­மான தோற்­றம் இன்­னும் கண்­முன்னே நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">டெல்­டாக்­கா­ர­ரான தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் 
ஆட்­சி­யில், மக்­க­ளின் மன­மும் இந்த மண்­ணும் குளிர்ந்­ ­திருந்­தன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் இன்று?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மன்­னார்­குடி வடு­வூர் ஏரி வறண்டு கிடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வயல்­க­ளில் விவ­சா­யம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சவ­ளக்­கா­ரன், கீழ­நா­லா­நல்­லூர், சித்­தேரி உள்­ளிட்டபல பகு­தி­க­ளில் குடிப்­பதற்­குக்­கூட போது­மான தண்­ணீர் இல்லை. பெண்­க­ளும் முதி­ய­வர்­க­ளும் குடங்­க­ளு­டன் அலைய வேண்­டியஅவ­ல­நிலை ஏற்­பட்­டுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவிரி டெல்­டா­வில் குடி­நீ­ருக்கே தட்­டுப்­பாடு என்­றால், அது வெறும் 
பரு­வ­நி­லைப் பிரச்­சி­னை­ யல்ல; நீர் மேலாண்­மை­யில் ஏற்­பட்­டுள்ள மிகப்­பெ­ரிய நிர்­வா­கத் தோல்வி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏரி­கள் வறண்­டால் விவ­சா­யம் மட்­டும் அழி­வ­தில்லை. நிலத்­தடி நீர் குறை­யும்; கால்­ந­டை­கள் பாதிக்­கப்­ப­டும்; பற­வை­கள் வில­கும்; ஒரு பகு­தி­யின் ஒட்­டு­மொத்த வாழ்­வா­தா­ரச் சூழலே சிதைந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீர் நிறைந்து செழித்­தி­ருந்த டெல்­டாவை, ஒரே ஆண்­டில் குடி­நீ­ருக்­கா­கப் போரா­டும் நிலைக்­குத் 
தள்­ளி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த மண்­ணின் தாக­மும்மக்­க­ளின் தவிப்­பும் ஆட்­சி­யா­ளர்­க­ளின் கண்­களுக்­குத் தெரி­ய­வில்­லையா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வடு­வூ­ருக்கு நீர் வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வயல்­க­ளுக்கு உயிர் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­க­ளுக்­குத் தடை­யற்ற குடி­நீர் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் அவர்­க­ளது அன்­பிற்­கு­ரிய காங்­கி­ரஸ் கூட்­டா­ளி­ களை அழைத்து கர்­நா­ட­கத்­தி­லி­ருந்து சட்­ட­ரீ­தி­யாக நமக்­கு­ரிய நீரை உட­ன­டி­யா­கப் பெற்­றுத் தரு­வ­தோடு, ஏரி­க­ளை­யும் வாய்க்­கால்­களை­யும் முறை­யா­கப் பரா­ம­ரித்து, டெல்டா வின் நீரா­தா­ரங்­க­ளைப் பாது­காக்க போர்க்­கால அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, செப். 2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் வாக்­கு­று­தியை நம்பி பெரும் ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் துறை­யின் மீதான மானி­யக் கோரிக்­கை­யும், அத­னைத் தொடர்ந்து வெளி­யி­டப்­பட்ட அறி­விப்­பு­க­ளும் மிகப்­பெ­ரும் ஏமாற்­றத்தை அளித்­தி­ருக்­கின்­றன என்­ப­து­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­தச் சூழ்­நி­லை­யில், இன்­றைய அறி­விப்­பு­களை நாம் இரண்டு முக்­கிய கோணங்­க­ளில் பார்க்க வேண்­டி­யுள்­ளது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, இந்த இரண்­டுமே அடிப்­ப­டை­யான உரி­மை­சார் பார்­வை­யி­லி­ருந்து உரு­வாக்­கப்­பட்­டவை அல்ல என்­ப­து­தான் எங்­க­ளு­டைய மிகப்­பெ­ரிய வருத்­தம். உரி­மை­ யி­லி­ருந்து வில­கிச் செல்­லும் இல்­லம் சார்ந்த அணு­கு­முறை ஒரு­பு­றம், 
தமி­ழக அரசு மருத்­துவ உதவி தேவைப்­ப­டு­கின்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­காக ஆங்­காங்கே இல்­லங்­களை (Homes) உரு­வாக்­கப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்வைஅவர்­க­ளு­டைய சமூ­கச் சூழ­லி­லி­ருந்து பிரித்து, தனித்­தனி இல்­லங்­க­ளுக்­குள் கொண்டு செல்­வதுஎன்­பது நவீன மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உரிமை இயக்­கம் வலி­யு­றுத்­து­கின்ற சமு­தா­யம் சார்ந்த மறு­வாழ்வு (Community Based Rehabilitation) அல்­லது சமு­தா­யம் சார்ந்த ஒருங்­கி­ணைந்த மேம்­பாடு (Community Based InclusiveDevelopment – CBID) என்ற அணு­கு­மு­றை­யோடு ஒத்­துப்­போ­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை தனி­மைப்­ப­டுத்­தும் இல்­லம் சார்ந்த அணு­கு­முறையை விட, ‘‘மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் சமூ­கத்­தில் வாழ வேண்­டும்; சமூ­ கம் அவர்­க­ளுக்­காக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டும்” என்­பதே நவீன உரி­மை­சார் அணு­கு­முறை. ஐக்­கிய நாடு­கள் சபை­யின் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் உரி­மை­கள் தொடர்­பான உடன்­படிக்கை (UNCRPD) வலி­யு­றுத்­தும்கண்­ணி­ய­மான, சம உரிமை கொண்ட,சமூ­கத்­தில் சுயா­தீ­ன­மாக வாழும் உரிமை என்ற அடிப்­ப­டைக் கொள்­கை­க­ளோடு இத்­த­கைய இல்­லம் சார்ந்த அணு­கு­மு­றை­கள் எவ்­வாறு பொருந்­து­ கின்­றன என்­ப­தை­யும் அரசு ஆழ­மாகப் பரி­சீ­லிக்க வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மருத்­துவ மாட­லைக் கடந்து செல்ல வேண்­டிய நேரம் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மறு­பு­றம், நாம் ஏற்­க­னவே கடந்து வந்­து­விட்ட மருத்­துவ மாடல் (Medical Model) மற்­றும் தானம்/தொண்டு சார்ந்த மாடல் (Charity Model) 
ஆகி­ய­வற்­றின் தொடர்ச்­சி­யா­கத் தோன்­றும் வகை­யில் சில திட்­டங்­கள், பயிற்சி நிலை­யங்­கள் என்ற பெய­ரில் அறி­விக்­கப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு மருத்­துவ சிகிச்­சை­யும், மறு­வாழ்­வுப் பயிற்­சி­க­ளும் தேவை­யில்லை என்று நாங்­கள் கூற­வில்லை. தேவைப்­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு தர­மான மருத்­துவ சிகிச்­சை­யும், மறு­வாழ்வு சேவை­க­ளும் நிச்­ச­ய­மா­கக் கிடைக்க வேண்­டும். ஆனால் அந்த சேவை­கள் மையப்­படுத்­தப்­பட்ட சில பயிற்சி நிலை­யங்­களில் மட்­டுமே கிடைக்­கும் வகை­யில் அமை­வது போது­மா­ன­தல்ல. தமி­ழ­கம் முழு­வ­தும் மருத்­துவ சிகிச்சை, மறு­வாழ்வு, உதவி சாத­னங்­கள், உள­வி­யல் ஆத­ரவு, தொழிற்­ப­யிற்சி மற்­றும் பல்­வேறு ஆத­ர­வுச் சேவை­கள் தேவைப்­ப­டு­கின்ற ஆயி­ரக்­க­ணக்­கான மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அவர்­க­ளுக்கு அரு­கி­லேயே அந்த சேவை­கள் கிடைக்க வேண்­டும். ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி தனது கிரா­மத்­தி­ லி­ருந்து அல்­லது நக­ரின் தொலை­தூரப் பகு­தி­யி­லி­ருந்து பல கிலோ­ 
மீட்­டர்­கள் பய­ணம் செய்து ஒரு மையத்தை அடைந்து சேவை­யைப் பெற வேண்­டிய நிலை இருக்­கக் கூடாது. அரு­கா­மை­யில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள், அரசு மருத்­து­வ­ம­னை­கள்,சமூக நல அமைப்­பு­கள் மற்­றும் ஒருங்­கி­ணைந்த சேவை மையங்­கள் வழி­யாக இந்த சேவை­கள் கிடைக்க வேண்­டும். குறிப்­பாக, ‘‘விழு­து­கள்” போன்ற One Stop Centre அணு­கு­மு­றை­யின் கீழ், 
மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு தேவை­யான பல்­வேறு சேவை­களை அவர்­களு­டைய வாழ்­வி­டத்திற்கு அரு­கா­மை­யி­லேயே வழங்­கும் வகை­யில் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தால், அதை உண்­மை­யான சமு­தா­யம் சார்ந்த மறு­வாழ்­வா­க­வும், உள்­ள­டக்­கிய வளர்ச்­சி­யா­க­வும் நாம் வர­வேற்­றி­ருப்­போம். அதை­வி­டுத்து ஒன்­றி­ரண்டு இடங்­க­ளில் பயிற்சி நிலை­யங்­களைஅறி­விப்­பது, தமி­ழில் சொல்ல வேண்­டு­ மா­னால், “யானைப் பசிக்கு சோளப்­பொறி?” என்ற கேள்­வி­யைத்­தான் எழுப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் துறை எதற்­காக?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­யாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு மனி­த­ரின் உரி­மை­கள், கண்­ணி­யம், சமத்­து­வம், சுய­சார்பு, சமூ­கப் பங்­கேற்பு மற்­றும் வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கத்­தான் இந்­தத் துறை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவர்­க­ளு­டைய சிர­மங்­களை குறைப்­ப­தும், அவர்­க­ளுக்­கான தடை­களை அகற்­று­வ­தும், சம வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தும், சமூ­கத்­தின் அனைத்து தளங்­க­ளி­லும் அவர்­கள் சம­மாக பங்­கேற்­பதை உறுதி செய்­வதுமே இந்­தத் துறை­யின் பிர­தான நோக்­க­மாக இருக்க வேண்­டும். ஆனால், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட துறை, மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக பிறக்­கா­மல் இருப்­பதை உறுதி செய்­வது, அல்­லது மாற்­றுத்­திறன் ஏற்­ப­டு­வ­தைத் தடுப்­பது போன்ற மருத்­துவ மையப்­ப­டுத்­தப்­பட்ட அணு­கு­மு­றை­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுப்­பது சரி­யான திசையா என்ற கேள்­வியை நாம் எழுப்ப வேண்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘‘ஏதோ பிறந்­து­விட்­டீர்­கள்; இனி உங்­க­ளைப் போன்­ற­வர்­கள் பிறக்­காமல் பார்த்­துக் கொள்­கி­றோம்” என்ற தொனி­யில் அர­சின் அணு­கு­முறை அமைந்­து­வி­டக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­றன் என்­பது வெறும் மருத்­து­வப் பிரச்­சினை அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் எதிர்­கொள்­ளும் பெரும்­பா­லான தடை­கள் அவர்­க­ளு­டைய உட­லில் மட்­டும் இல்லை; அவை சமூ­கத்­தி­லும், கட்­ட­மைப்­பு­க­ளி­லும், மனப்­போக்­கு­க­ளி­லும், வாய்ப்­பு­க­ளின் பற்­றாக்­கு­றை­யி­லும் இருக்­கின்­றன. எனவே, மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் துறை ‘‘மாற்­றுத்­தி­ற­னைத் தடுப்­பது” என்ற அணு­கு­மு­றையை மட்­டுமே முன்­னி­லைப்­ப­டுத்­தா­மல், ஏற்­க­னவே மாற்­றுத்­தி­ற­னு­டன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­தும் பணி­யில் கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சுகா­தா­ரத்­துறை முன்­னெ­டுக்க வேண்­டிய மருத்­து­வத் தடுப்பு நட­வ­டிக்­கை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் மக்­க­ளின் உரி­மை­கள், வாழ்­வா­தா­ரம், சமூ­கப் பாது­காப்பு,சம வாய்ப்பு மற்­றும் கண்­ணி­ய­மான வாழ்க்கை ஆகி­ய­வற்றை உறுதி செய்­வது மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் துறை­யின் முதன்­மைப் பொறுப்பு. இந்த அடிப்­படை வேறு­பாட்டை அரசு புரிந்­து­கொள்ள வேண்­டும். போரா­டிய மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் குரலை அரசு ஏன் கேட்­க­ வில்லை இத்­தனை எதிர்­பார்ப்­பு­களுக்­கி­டை­யில் இன்று எங்­களை மிக­வும் வேத­னைப்­ப­டுத்­து­வது என்­ன­வென்­றால், பல்­வேறு சங்­கங்­கள் தங்­க­ளு­டைய சக்­தியை மீறி களத்­தில் நின்­றும், அவர்­க­ளு­டைய கோரிக்­கை­கள் போது­மான அளவு கவ­னிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­து­தான். பார்­வை­யற்­றோர் சங்­கங்­க­ளாக இருக்­கட்­டும்; பல்­வேறு வகை­யான மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் சங்­கங்­க­ளாக இருக்­கட்­டும்; மாவட்­டம் தோறும் பல அமைப்­பு­ கள் அர­சின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­கா­கப் போரா­டின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஆடம்­ப­ர­மான கோரிக்கை அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘‘மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான உத­வித்­தொ­கையை உயர்த்­துங்­கள்” என்­ப­து­தான் அவர்­க­ளு­டைய முக்­கி­ய­மான கோரிக்­கை­க­ளில் ஒன்று. 
அன்­றாட வாழ்க்­கை­யின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைச் சந்­திக்­கவே போரா­டிக் கொண்­டி­ருக்­கும் கடைக்­கோடி மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் குரல் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆனால் அந்­தக் குர­லைக் கண்­டு­கொள்­ளா­மல், மேம்­போக்­கான சில அறி­விப்­பு­களை வெளி­யிட்டு கடந்து செல்­வது கடும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் “Disability Cost” யார் புரிந்­து­கொள்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒரு மாற்­றுத்­தி­ற­னா­ளி­யின் வாழ்க்கை சாதா­ரண வாழ்க்­கை­யை­விட பல மடங்கு அதி­க­மான செல­வு­களை உள்­ள­டக்­கி­யது. அவர்­க­ளு­டையகுறை­பாட்­டின் தன்மை கார­ண­மா­கவோ, சமூ­கத்­தில் நில­வும் தடை­கள் கார­ண­மா­கவோ, அன்­றாட வாழ்க்­கை­யின் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் கூடு­தல் செல­வு­க­ளை­யும், கூடு­தல் முயற்­சி 
­க­ளை­யும் அவர்­கள் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. சாதா­ரண மனி­தர் எளி­தா­கச் செய்­யக்­கூ­டிய ஒரு காரி­யத்­தைச் செய்­வ­தற்கே ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி பல மடங்கு அதி­க­மாக உழைக்கவேண்­டிய சூழ்­நிலை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இதைத்­தான் பொரு­ளா­தார 
அறி­ஞர் அமர்த்­தியா சென் போன்­ற­வர்­கள் “Disability Cost” என்ற கருத்­தின் மூலம் விளக்­கி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மாற்­றுத்­தி­ற­னா­ளி­யாக இருப்­ப­தற்­கான செலவு என்­பது மருத்­து­வச் செலவு மட்­டு­மல்ல. உதவி சாத­னங்­கள், போக்­கு­வ­ரத்து, துணை நபர்­களின் உதவி, சிகிச்சை, மறு­வாழ்வு, கல்வி, வேலை­வாய்ப்பு, அன்­றாட வாழ்க்­கைக்­கான கூடு­தல் ஆத­ரவு என பல்­வேறு செல­வு­கள் அவர்­க­ளு­டைய வாழ்க்­கை­யில் தொடர்ந்து இணைந்­து­கொண்டே இருக்­கின்­றன. அதே­நேரத்­தில், பெரும்­பான்­மை­யான 
மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் பொரு­ளா­தார ரீதி­யாக பின்­தங்­கி­ய­வர்­க­ளா­க­வும் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அன்­றாட வாழ்க்­கை­யின் அடிப்­படைத் தேவை­க­ளுக்கே போரா­டிக் கொண்­டி­ருக்­கின்ற பல மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், அரசு வழங்­கும் மாதாந்­திர உத­வித்­தொ­கையை மட்­டுமே நம்பி வாழும் சூழ்­நி­லை­யில் உள்­ள­னர். 
இந்­நி­லை­யில், குறைந்­த­பட்­சம் ரூ.500 கூடு­த­லாக உயர்த்தி வழங்­கி­யி­ருந்­தால்­கூட, கடைக்­கோடி மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் மன­தில் ஒரு நம்­பிக்கை பிறந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘‘இந்த அரசு எங்­க­ளை­யும் நினைத்­தி­ருக்­கி­றது” என்ற ஒரு உணர்வு அவர்­க­ளி­டம் உரு­வா­கி­யிருக்கும். ஆனால், அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை­கள் பல மடங்கு உயர்ந்­துள்ள நிலை­யில், அவர்­க­ளு­டைய வாழ்க்­கைச் செல­வு­கள் அதி­கரித்­துக் கொண்­டி­ருக்­கும்­போது, 
உத­வித்­தொ­கை­யில் போது­மான உயர்வு இல்­லா­மல் இருப்­பது உண்­மை­யி­லேயே வேத­னை­ய­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">எதிர்­பார்ப்பு இன்­னும் உயி­ரோடு இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்று எங்­க­ளு­டைய மன­தில் கோபத்­தை­விட வேத­னை­தான் அதி­க­மாக இருக்­கி­றது. ஏனெ­னில் இது வெறும் ஒரு பட்­ஜெட் அறி­விப்பு தொடர்­பான ஏமாற்­றம் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்­வா­தா­ரம், உரிமை, கண்­ணி­யம் மற்­றும் எதிர்­கா­லம் தொடர்­பான 
எதிர்­பார்ப்­பு­க­ளின் ஏமாற்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘‘எங்­க­ளைப் பற்றி எங்­க­ளி­டம் கேளுங்­கள்; எங்­க­ளுக்­கான திட்­டங்­களை எங்­க­ளு­டன் இணைந்து உரு­வாக்­குங்­கள்” என்­பதே மாற்­றுத்­தி­ற­னாளி­கள் இயக்­கங்­க­ளின் நீண்­ட­கால கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">Nothing About Us Without Us ‘‘எங்­க­ளைப் பற்றி எது­வும் எங்­க­ளில்­லா­மல் இல்லை” என்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உரிமை இயக்­கத்­தின் அடிப்­படைக் கொள்கை தமி­ழ­கத்­தி­லும்  நடை­மு­றைக்கு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அர­சின் ஒவ்­வொரு திட்­ட­மும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் உண்­மை­யான தேவை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட வேண்­டும். அவர்­க­ளு­டைய குரல் கேட்­கப்­பட வேண்­டும்!.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அவர்­க­ளு­டைய அனு­ப­வம் மதிக்­கப்­பட வேண்­டும்.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அவர்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­து­வம் உறுதி செய்­யப்­பட வேண்­டும் அவர்­களு­டைய உரி­மை­கள் முன்­னி­லைப்­ ப­டுத்­தப்­பட வேண்­டும். அதுவே உண்­மை­யான உள்­ள­டக்­கிய ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்று பெரும் ஏமாற்­றத்­து­டன் இந்­தக் கருத்­து­களை நாம் பதிவு 
செய்­கி­றோம். ஆனால் எங்­க­ளு­டைய 
எதிர்­பார்ப்பு இறந்­து­வி­ட­வில்லை. மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான உரி­மைப் போராட்­டம் தொட­ரும். அவர்­க­ளு­டைய குரல் தொடர்ந்து ஒலிக்­கும். அவர்­க­ளு­டைய கோரிக்­கை­கள் தொடர்ந்து முன்­வைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அரசு தன்­னு­டைய அறி­விப்­பு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்து, கடைக்­கோடி மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்க்­கைத் துய­ரத்தை புரிந்­து­ கொண்டு, அவர்­க­ளுக்­கான சமூ­கப் பாது­காப்­பை­யும் உத­வித்­தொ­கை­யை­யும் உயர்த்தி, உரி­மை­சார் மற்­றும் உள்­ள­டக்­கிய திட்­டங்­களை நடை­முறைப்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்­கையை நாங்­கள் இன்­னும் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக 
அரசு இருந்­தி­ருக்­கு­மே­யா­னால், இந்த நேரத்­தில் பல மாற்­றுத்­தி­ற­னா­ளி­களுக்கு உத­வித்­தொ­கையை உயர்த்திவழங்கி, அவர்­க­ளு­டைய முகங்­க­ளில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆனால் இன்று அந்த மகிழ்ச்­சிக்கு பதி­லாக எங்­க­ளு­டைய மனங்­களில் குடி­கொண்­டி­ருப்­பது பெருத்த ஏமாற்­றம்…! ஏமாற்­றம்…! ஏமாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!</lang>
	</hl2>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">----------------------------</lang>
</p>
</block>
<block id="subarticle2" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">மாற்றுத்திறனாளிகளுக்குச் சொன்னது ரூ.3000 கிடைத்ததோ ஏமாற்றம்!</lang>
	</hl2>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">-----------------------------</lang>
</p>
</block>
<block id="subarticle3" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தி.மு.க. மாற்றுத்திறனாளி அணி செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் காட்டம்!</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>