<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 02 2026 03:51:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260902T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02092026-VLR-06" position.sequence="06" ex-ref="02092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup850019_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­ச­பை­யில் வசந்­தம் கார்த்­தி­கே­யன் இடம்­மாறி உட்­கார்ந்­தால் சத்­த­மி­டும் சபா­நா­ய­கர், முதல்­வர் விஜய் இடம்­மாறி அம­ரும்­போது மட்­டும் அமைதி காப்­பதா? ஆளுக்கு ஒரு சட்­டமா? அனைத்து உறுப்­பி­னர்­க­ளின் செயல்­பாட்டை நிறுத்­திட திட்­டமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில் அக்ரி கிருஷ்­ண­மூர்த்தி லெட்­டர்­பே­டில் முன்­னாள் முதல்­வர் ஓ.பி.எஸ் படம் இருந்­த­தாம், அக்­ரிக்கு எதி­ரில் அமர்ந்­தி­ருந்த அவை முன்­ன­வர் செங்­கோட்­டை­யன் திடீ­ரென எழுந்து, “அக்ரி கிருஷ்­ண­மூர்த்தி கையில் வைத்­தி­ருந்த லெட்­டர்­பேடை நான் பார்த்­தேன், அந்த லெட்­டர்­பே­டில் இருக்­கும் படத்­தில் இருப்­ப­வர் இடம்­மாறி விட்­டார் ஆனால் அவர் படம் மாற­வில்லை” என்­கி­றார் செங்­கோட்­டை­யன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்­த­வர் லெட்­டர்­பே­டினை எட்­டிப் பார்ப்­பது அடுத்­த­வர் படுக்­கை­ய­றையை எட்­டிப் பார்ப்­பது போல, கட்­டிய கண­வ­னாக இருந்­தா­லும் மனை­வி­யின் கடி­தத்­தையோ, நாட்­கு­றிப்­பையோ எட்­டிப்­பார்க்­கக் கூடாது. இந்­தப் பழக்­கம் சீட்­டாட்­டத்­தில் எட்­டிப் பார்க்­கும் கெட்ட நாய­கன் வேலை. இது தொட்­டில் பழக்­கம் போல அமைச்­சர் செங்­கோட்­டை­ய­னுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது சரி, படத்­தைப் பற்றி தடம் மாறி­ய­வர் பேச­லாமா? ஈயத்­தைப் பார்த்து இளிக்­க­லாமா பித்­தளை? ஓ.பி.எஸ் ஆவது அண்ணா பெயர் உள்ள கட்­சி­யி­லி­ருந்து, அண்ணா ஆரம்­பித்த தாய்க் கட்­சிக்­குத்­தான் சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தியை எதிர்ப்­ப­தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இரட்­டைக் குழல் துப்­பாக்­கி­யா­கச் செயல்­ப­டு­வோம் என அன்­றைய முதல்­வர் எம்.ஜி.ஆர். சொன்ன கட்­சிக்­குத்­தான் சென்று இருக்­கி­றார் ஓ.பி.எஸ். அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை செயிண்ட்­ஜார்ஜ் கோட்­டை­யில், ஆகஸ்ட் 15 சுதந்­திர தினத்­தில் கொடி­யேற்­று­கி­றேன் என்­றால் அதற்­குக் கார­ண­மான என் நண்­பர் கலை­ஞ­ருக்கு நான் நன்றி சொல்­கி­றேன் என்று சொன்­னாரே எம்.ஜி.ஆர். அந்த 
எம்.ஜி.ஆர். பாராட்­டிய தி.மு.க. தலை­வர் கலை­ஞ­ரின் மக­னி­டம்­தான் சென்று இருக்­கி­றார் ஓ.பி.எஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் நீங்­கள் உங்­கள் சட்­டைப் பையில் ஜெய­ல­லிதா படத்தை வைத்­துக்­கொண்டு எங்கே சென்­றி­ருக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அன்­றைய அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் எந்த நடி­கரை கொட­நாட்­டில் பல மணி நேரம் காக்­க­வைத்­துக் கேவ­லப்­ப­டுத்தி அனுப்பி வைத்­தாரோ, அந்த விஜ­யின் பக்­கத்­தில் வெட்­க­மில்­லா­மல் ஜெய­ல­லிதா படத்தை வைத்­துக் கொண்­டி­ருக்­கும் நீங்­கள் தடம்­மா­றும் செய்­தி­யைத் தொட­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க ஜா, ஜெ அணி, சமாஜ்­வாடி, தமிழ்­மா­நி­லக் காங்­கி­ரஸ், மீண்­டும் அ.தி.மு.க. என படம் மாறி­னா­லும் ஓர­ளவு தடம் மாறாது சபை நடத்­தும் சபா­நா­ய­கர் ஜே.சி.டி பிர­பா­கரை எதி­ரில் வைத்­துக்­கொண்டு நீங்­கள் இப்­படி பேச­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேர்­மை­யின் சிக­ரம் என சொல்­லிக்­கொள்­ளும் நீங்­கள், தங்­க­ளுக்கு ஒதுக்­கிய நிதித்­து­றையை வேண்­டாம் எனக் கூறி­விட்டு, வரு­வாய்த்­து­றையை வாங்­கி­யது எதற்கு? வரு­வா­யி­னைப் பெருக்­கி­டவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தள­வாய் சுந்­த­ரம் திடீ­ரென எழுந்து ஆஸ்­டின் தி.மு.க.விற்கு மாறி­யதை குறை கூறு­கி­றார். ஆஸ்­டின் அவ­ராக - – பக்­கு­வ­மாக நேர்­மையை நோக்கி நகர்ந்து விசு­வா­சம் காட்­டி­யி­ருக்­க­லாம். ஆனால் சொந்­தக் கட்­சி­யி­லேயே கட்­சிக்­கட்­டுப்­பாட்டை மீறி­ய­வர் என அன்­றைய அ.தி.மு.க.விற்கு விருப்­ப­மில்­லா­மல் இருந்த ஆர்.எஸ்.எஸ். உடன் கள்ள உறவு வைத்து அவர்­க­ளின் பேர­ணியை தொடக்­கி­வைத்­தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு ஆளாகி தனது சொந்­தக் கட்­சி­யை­விட்டு நீக்­கப்­பட்­ட­வர் அல்ல அவர். ஆஸ்­டின் இருக்­கும் இடத்­தில் விசு­வா­ச­மாக இருப்­ப­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வி.சி.க.விற்­குக் கடந்த தேர்­த­லில் நான்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இருந்­தும் ஏன் அமைச்­சர் கொடுக்­க­வில்லை என்­பது தவ­றான பேச்சு. அதி­கா­ரம் இருக்­கி­றது என்­ப­தற்­காக யாரும் பேசக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.விற்கு மெஜா­ரிட்டி இல்­லா­த­தால் வி.சி.க.விற்கு அமைச்­ச­ர­வை­யில் இடம் தரு­கி­றேன் என்று விஜய் தந்­தாரே தவிர, த.வெ.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">150 இடம் பெற்­று­விட்டு வி.சி.க.விற்கு ஆட்­சி­யில் பங்கு தர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க.வை விட்­டுப் போன பா.ம.க. தன் அங்­கீ­கா­ரத்தை இழந்­தது. தி.மு.க.விடம் சேர்ந்த வி.சி.க. தனது அங்­கீ­கா­ரத்­தைப் பெற்­றதை மறக்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த 2026 தேர்­த­லில் காங்­கி­ர­ஸின் குடைச்­சலை சமா­ளிக்க புதி­தாக சேர்ந்த தே.மு.தி.க.விற்கு 10 இடம், காங்­கி­ர­சுக்கு மூன்று இடம் அதி­கம், புதி­தாக சேர்ந்த தமி­முன் அன்­சாரி, எஸ்.டி.பி.ஐ., முத்­த­ரை­யர் அமைப்பு என பெரு­கி­ய­போது முஸ்­லீம் லீக், ம.தி.மு.க., கம்­யூ­னிஸ்­க­ளி­டம் சீட்­டு­களை குறைத்த தி.மு.க. 2021 தேர்­த­லில் தான் நின்ற தொகு­தி­க­ளில் பனி­ரெண்­டைக் குறைத்­துக் கொண்­டது. ஆனால் விடு­தலை சிறுத்தை களுக்கு மட்­டும் இரண்டு சீட்டு அதி­கம் கொடுத்­தது. அதை 33 சத­வீ­தம் அதி­கம் கொடுத்­தது என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">2026 தேர்­தல் முடிந்­த­வு­டன் நாங்­கள் ஆட்சி அமைக்க முன்­வ­ர­வில்லை. “விஜயே ஆளட்­டும், எங்­க­ளது தோழ­மைக் கூட்­ட­ணிக் கட்­சி­கள் விஜ­யினை ஆத­ரிக்­கட்­டும். அவ­ரால் முடி­யா­விட்­டால் தொல். திருமா வள­வன் முதல்­வர் ஆகட்­டும்” என சிந்­தித்த கூட்­டம் தி.மு.க. கூட்­டம். ரத்த உறவை அதி­கா­ரத்­துக்­காக சிதைக்­கா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விடு­தலை சிறுத்­தை­க­ளின் பொதுச் செய­லா­ளர் தமி­ழின் சிற்பி சிந்­த­னைச்­செல்­வன் “நன்றி கூறு­கி­றோம்” என்­கிற தி.மு.க.வின் புதிய அர­சா­ணைக்­கான நன்றி அறிக்­கை­யை­யும், சிந்­த­னைச் செல்­வன், எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளின் பிறந்­த­நாள் வாழ்த்து அறிக்­கை­யை­யும், கலை­ஞ­ரின் நினைவு நாளில் தனது பழைய கட்­டு­ரை­யைத் திருப்பி முக­நூ­லில் போட்டு நன்றி சொன்ன பொதுச்­செ­ய­லா­ளர் ரவிக்­கு­மார் வாழ்த்­தை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. போட்ட தற்­கா­லிக தலை­மைச் செய­லா­ளரை வைத்­துக்­கொண்டு இந்­திக்­குப் பந்தி விரிக்­கும் த.வெ.க.வை எப்­படி ஆத­ரிப்­பது என்­கிற வி.சி.க.வின் முதன்­மைச் செய­லா­ளர் ஆளூர் ஷாந­வாஸ் கருத்­தை­யும் தொண்­டர்­கள் ஏற்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.வை ஆத­ரித்­தா­லும், தி.மு.க.வை கண்ணை மூடிக்­கொண்டு எதிர்க்­காத எழுச்­சித் தமி­ழர் தொல். திரு­மா­வ­ளனை பின்­பற்­று­ப­வர்­கள் தி.மு.க.வை குறை கூற­மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தேர்­த­லில் நான் தோற்­றால் கூட பர­வா­யில்லை. வன்­னி­ய­ரசு தோற்­கக் கூடாது” எனப் பிரச்­சா­ரம் செய்த இளைய கலை­ஞர் உத­ய­நி­தியை எதிர்க்­கக் கார­ணம் இல்­லா­மல் தூற்­ற­வும் கூடாது. கார­ணம் இல்­லா­மல் சிரிக்­க­வும் கூடாது, எதிர்­கா­லத்­தில் சந்­திக்­கும்­போது மன­வே­த­னை­யு­டன் கைகு­லுக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில் 2006-–ல் காங்­கி­ரஸ் துணை­யு­டன் ஆட்­சி­யில் அமர்ந்து விட்டு காங்­கி­ரசை திட்­ட­லாமா என ஒரு குரல். அது மக்­கள் குர­லும் அல்ல. திருக்­கு­ற­ளும் அல்ல. விசில் குரல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே சட்­ட­ச­பை­யில் அண்­ணன் வேலு­கூட 2006–-ல் காங்­கி­ரஸ் ஆத­ரவு அல்­லா­மல் பா.ம.க.வும் தி.மு.க.வுக்கு ஆத­ர­வாக இருந்­தது என்­றார். பா.ம.க. மட்­டு­மல்ல எங்­க­ளி­டம் கம்­யூ­னிஸ்­டு­க­ளும் இருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">163 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், கலை­ஞர் முதல்­வர் என ஓட்­டுக் கேட்டு வெற்றி பெற்று சபைக்கு வந்­த­வர்­க­ளின் ஆத­ர­வோடு ஆட்சி அமைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. அப்­ப­டியா என்­றால் இல்லை. தள­பதி ஸ்டாலின் முதல்­வர் எனச் சொன்­ன­வர்­கள் 13 பேர் ஆத­ர­வு­டன், பொய்க்­கால் குதி­ரை­போல விஜய் ஆட்சி அமைத்­தார். இரண்­டை­யும் ஒப்­பி­டக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. ஒப்­பிலா வைரம். விரை­வில் தமி­ழக ஆட்­சிக் கட்­டி­லில் தி.மு.க. அம­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அறி­வா­ல­யத்­தில் தந்தை பெரி­யார் சிலை வைக்­க­ணு­மாம். வளர்ந்து கெட்­ட­வன் உள­று­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இயக்­கத்­தின் தலைமை அலு­வ­ல­கம் தேர்­தல் கமி­ஷ­னால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்சி. ஆத­லால் கட்­சித்­த­லை­வர்­களே முகப்­பில் காட்­சி­ய­ளிப்­பர். அலு­வ­லக முகப்­பில் தந்தை பெரி­யார் சிலை என்­றால் நாங்­கள் திரா­விட கழ­கத்­தி­லேயே இருந்­தி­ருக்­க­லாமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. அலு­வ­ல­கத்­தில் “அண்ணா” பெயர் இருக்­கும், சிலை இருக்­காது. அ.தி.மு.க. அலு­வ­லக இடம் ஜானகி அம்­மை­யார் தந்­தது. அ.தி.மு.க. அலு­வ­ல­கத்­தில் ஜானகி அம்­மை­யார் சிலை இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உல­கத்­த­லை­வர்­கள், தேசத்­த­லை­வர்­கள், படைப்­பு­கள், வர­லாறு அறி­வா­ல­யத்­தில் உள்ளே கரு­வூ­லத்­தில் உள்­ளது. திரா­வி­டர் கழக அலு­வ­ல­கத்­தில் பேர­றி­ஞர் அண்ணா, கலை­ஞர் சிலை இருக்­காது. ஆனால் ஆசி­ரி­ய­ரின் அறை­க­ளில் அண்ணா, கலை­ஞர் படம் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடி­கர் பாக்­ய­ராஜ் ஒரு படத்­தில் வீட்­டில் தன் படத்தை டாக்­டர் மாதிரி, இன்ஸ்­பெக்­டர் மாதிரி, அட்­வ­கேட் மாதிரி, விமான ஓட்டி மாதிரி என பல­வே­டங்­க­ளில் மாற்றி வைத்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவ­ருக்கு என்று வழக்­க­றி­ஞர் பட்­டம் இருந்­தால் கருப்பு கவு­னு­டன் காட்சி அளிக்­க­லாம். அவ­ருக்கு படிப்­பில்­லா­த­தால் எல்லா வடிவ ஆடை­யு­ட­னும் தோற்­ற­ம­ளிப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.வுக்கு ஒரு வர­லாறு இல்லை. காட்­சிக்­கா­வது உண்டா என்­றால் அது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட்­சிக்கு உள்­ளார்ந்த தலை­வர்­கள் இல்லை. அத­னால் காசுக்கு இரண்டு பொம்­மை­கள் வாங்கி வரு­வது போல தலை­வர்­க­ளின் பொம்­மை­களை வைத்து இருக்­கி­றாய். நாங்­கள் எங்­கள் கட்­சித் தலை­வர்­க­ளைக் கரு­வூ­லத்­தில் பாட­மாக வைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க. உறுப்­பி­னர்­களை தன் கட்­சி­யில் இடைத்­தேர்­தல் மூல­மாக இணைத்­து­விட்டு, பிறகு காங்­கி­ர­சினை கழட்டி விடும் வகை­யில் “விஜய் பிர­த­மர்” எனும் கோஷத்தை எழுப்ப இருந்த த.வெ.க.வினர் அவ­ச­ரப்­பட்டு முன்­கூட்­டியே கோஷம் எழுப்பி, காங்­கி­ர­சி­ன­ரு­டன் வருத்­தத்­தில் முடிந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட்­சியை உளவு பார்த்­ததை எடுத்­துச்­சொல்­லி­யும், பட்­டும் படா­மல் மெல்­லிய நட­வ­டிக்கை என நட­வ­டிக்கை எடுத்­த­தால் கம்­யூ­னிஸ்ட்­டு­க­ளின் ஆத­ர­வும் வருத்­தத்­தில் முடிந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. தலை­வ­ருக்கு தந்த பாது­காப்பை மட்­ட­ர­க­மாக திரும்ப பெற்­ற­தற்­கா­க­வும், கம்­யூ­னிஸ்ட்­க­ளி­டம் நடந்து கொண்ட பா.ஜ.க.வின் ஊது­கு­ழல் நிகழ்­வுக்­கா­வும், எழுச்­சித்­த­மி­ழர் தொல். திரு­மா­வ­ள­வ­னும் தன் கண்­ட­னத்தை தெரி­வித்­த­து­டன், தி.மு.க.வினர் தாழ்த்­தப்­பட்­டோ­ருக்கு நிறைய செய்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­ன­தான் மூலம் விடு­தலை சிறுத்­தை­க­ளின் உற­வும் வருத்­தத்­தில் தொடர்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆக மொத்­த­முள்ள 234-–ல் ஏழு இடம் காலி­யான சூழ­லில் 227 உறுப்­பி­னர் தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் இருக்­கின்­ற­னர். முழு ஆத­ரவு தேவை எனில் குறைந்­த­பட்­சம் 114 இருக்க வேண்­டும். ஆனால் இருக்­கும் 106 மற்­றும் திரு­வா­ரூர் காம­ரா­ஜு­டன், முஸ்­லீம் லீக் இரண்டு என 109 மட்­டுமே முழு ஆத­ர­வு­டன் தொடர்­கி­றது த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வி.சி.க.வை சமா­தா­னப்­ப­டுத்­திட முன்­னாள் முதல்­வ­ருக்கு தந்த பாது­காப்­பின் பகு­தியை குறைத்­ததை திரும்ப பெற்று இசட்­பி­ரிவு பாது­காப்பு கொடுக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க. இரா­ஜி­னாமா செய்­து­விட்டு தேர்­தலை சந்­திக்க வேண்­டும். அது­வரை இது­கு­றித்து சிந்­திக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“கெட்­டிக்­கா­ரி­யின் பொய்­யும் புரட்­டும் டக்­கு­முக்கு திக்­கு­தா­ளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும்” என்று கவி­ஞர் கண்­ண­தா­சன் சொன்­னது உண்­மை­தான். எட்டு நாள் என்­பது நூறு நாளில் தெரிந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடிக்­கிற ஆடிக்­காற்­றில் அம்மி பறக்­க­லாம், இம­யம் பறக்­காது. அறி­வா­ல­யம் காலி­யா­காது, தலை­மைச் செய­ல­கம்­தான் காலி­யா­கும். புரிந்து கொண்­ட­வர்­கள், புரி­யா­த­வர்­க­ளுக்கு புரி­ய­வைக்க வேண்­டும். தமி­ழக பண்­பாட்­டின் நெறியை காப்­பாற்ற வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>