<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,963,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 03 2026 03:51:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260903T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="03092026-TRY-04" position.sequence="04" ex-ref="03092026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="45">உள்­ளாட்­சி­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு பொறுப்பு வழங்­கி­ய­வர் தள­பதி மு.க.ஸ்டாலின்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="140">மக­ளிர் உரி­மைத் தொகை ரூ.2,500 எப்­போது வழங்­கு­வீங்க?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">சட்­டப்­பே­ர­வை­யில் மடத்­துக்­கு­ளம் இரா.ஜெய­ரா­ம­கி­ருஷ்­ணன் பேச்சு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">ஈரோடு மேற்கு மாவட்டம் – பெரிய கொடிவேரி</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">பேரூர் கழகச் செயலாளர் ஏ.ஆறுமுகம் மறைவு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jayaramakrishan_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal22._04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, செப்.3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் மடத்­துக்­கு­ளம் தொகுதி கழக உறுப்­பி­னர் இரா.ஜெய­ரா­ம­கி­ருஷ்­ணன் பேசு­கை­யில், உள்­ளாட்­சி­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு பொறுப்பு வழங்­கி­ய­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் என்­றும், மக­ளிர் 
உரி­மைத் தொகை ரூ.2,500 எப்­போது வழங்­கு­வீர்­கள் என்­றும் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் மடத்­துக்­கு­ளம் 
இரா.ஜெய­ரா­ம­கி­ருஷ்­ணன் பேசி­ய­தா­வது:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா, செம்­மொழி காவ­லர் தலை­வர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் திசையை நோக்கி வணங்­கு­கி­றேன். தமிழ்­நாட்­டில் ஒரே திட்­டத்­தில் 2 கோடியே 56 இலட்­சம் பேர் பயன்­பெ­றும் வகை­யில் ‘மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்’ என்ற திட்­டத்தை உரு­வாக்­கி­ய­வர்; இந்­தி­யத் திரு­நாட்­டுக்கே முதன்மை முதல்­வ­ராக விளங்­கி­ய­வர், கழ­கத் தலை­வர் (மேசை­யைத் தட்­டும் ஒலி) தமிழ்­நாட்டு மக்­க­ளின் பாது­காப்பு அரண் தள­பதி அவர்­களை வணங்­கு­கி­றேன். அவ­ரது வழி­யில் மக்­கள் பணி, கழ­கப் பணி செவ்­வனே ஆற்­றி­வ­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர், கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர், எதற்­கும் அஞ்­சா­த­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நான் 10 ஆண்­டு­க­ளாக ஊராட்சி மன்­றத் தலை­வ­ராக, 5 ஆண்­டு­க­ளாக ஒன்­றிய பெருந்­த­லை­வ­ராக, 3 முறை கழக சட்­ட­மன்ற வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டு­வ­தற்கு வாய்ப்பை வழங்கி நினை­வில் வாழும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளுக்­கும், கழ­கத் தலை­வர்  தள­ப­தி­யார் அவர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் அண்­ணன் கே.என்.நேரு அவர்­க­ளுக்­கும், எதிர்க்­கட் ­சிக் கொறடா எ.வ.வேலு அவர்­க­ளுக்­கும், வெற்­றிக்­குத் துணை­யாக இருந்த கழ­கத் துணைப் பொதுச் செய­லா­ளர்­கள் ஐ.பெரி­ய­சாமி அவர்­க­ளுக்­கும்,  மு.பெ. சாமி­நா­தன் அவர்­க­ளுக்­கும், மண்­ட­லப் பொறுப்­பா­ளர் அர.சக்­க­ர­பாணி அவர்­க­ளுக்­கும், மாவட்ட கழக, ஒன்­றிய கழக, நகர கழக, மாவட்­டக் கழ­கத்­தி­னு­டைய பொறுப்­பா­ளர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வ­ர­சாமி அவர்­க­ளுக்­கும், தொகுதி மேற்­பார்­வை­யா­ளர் கோவை கரும்­புக்­கடை சாதிக் பாட்சா அவர்­க­ளுக்­கும், மாநில, மாவட்ட, ஒன்­றிய, பேரூர் கழக, கிளைக் கழக BLA to BDA, BLC உள்­ளிட்ட நிரு­வா­கி­கள், தோழ­மைக் கட்­சி­யி­னு­டைய நிரு­வா­கி­கள், எனது குடும்ப உறுப்­பி­னர்­கள், உற்­றார், உற­வி­னர்­கள், நண்­பர்­கள், பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்த மடத்­துக்­கு­ளம் சட்­ட­மன்­றத் தொகுதி வாக்­கா­ளப் பெருங்­குடி மக்­கள் உள்­ளிட்ட அத்­தனை பேருக்­கும் இந்த நேரத்­தில் நன்­றி­யைத் தெரி­விப்­ப­தோடு, இந்த அவை­யில் இருக்­கின்ற அத்­தனை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும்  பேர­வைத் தலை­வ­ரா­கிய உங்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைய தினம் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட தலைப்­பு­கள், மாற்­றுத் திற­னா­ளி­கள் நலத் துறை, மது­வி­லக்கு மற்­றும் ஆயத்­தீர்வை துறை, சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத் துறை, வேளாண்மை மற்­றும் உழ­வர் நலத் துறை­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக பல்­வேறு கருத்­து­களை எடுத்­து­வைப்­பது கட­மை­யென்று தெரி­விக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கல்­வி­ய­றிவு பெற்ற பெண்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஒரு பெண் கல்வி கற்­றால் ஒரு குடும்­பம் முன்­னே­றும்; கல்­வி­ய­றிவு பெற்ற பெண்­கள் அதி­க­ரித்­தால் ஒரு சமூ­கமே முன்­னே­றும் என்ற இலக்­கோடு எங்கோ ஒரு கிரா­மத்­தில் கூரையை விட்டு வெளி­வ­ராத பெண்­க­ளை­யும் பல்­வேறு திட்­டங்­கள், சட்­டங்­களை கொண்டு வந்து அவர்­களை கல்­வி­யின்­மூ­லம் பேருந்­தில் ஏற்றி நக­ரத்­திற்கு அரசு வேலைக்­கும், IT கம்­பெ­னி­க­ளுக்­கும் தைரி­ய­மாக வர­வ­ழைத்த இந்­தி­யா­வின் ஒரே தலை­வர், சமூ­க­நீதி காவ­லர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளைத் தொடர்ந்து (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரா­விட மாடல் நாய­கர் அண்­ணன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் என்­பதை இந்த நாடே அறி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 1973–ஆம் ஆண்டு பெண்­க­ளைக் காவல் துறை­யில் பணி­ய­மர்த்தி பெண்­க­ளுக்­குப் பெருமை சேர்த்த அரசு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய அரசு. 1989–ஆம் ஆண்டு பெண்­க­ளுக்­குச் சொத்­தில் சம உரிமை வழங்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். 1989–ஆம் ஆண்டு அர­சுப் பணி­க­ளில் பெண்­க­ளுக்கு 30 சத­வி­கித இட­ஒ­துக்­கீடு வழங்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர். அதைத் தொடர்ந்து 40 சத­வி­கி­த­மாக உயர்த்­தி­ய­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள். பெண்­கள் பொரு­ளா­தா­ரத்­தில் சொந்த கால்­க­ளில் நிற்க, 1989–ஆம் ஆண்டு மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­களை தரு­ம­பு­ரி­யில் தொடங்கி ஊக்­கப்­ப­டுத்­தி­ய­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு. 1989–ஆம் ஆண்டு மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார் திரு­மண உத­வித் திட்­டம்­மூ­லம் பெண்­க­ளின் கல்­வியை உயர்த்­தி­யது தி.மு.க. அரசு. 1975–ஆம் ஆண்டு டாக்­டர் தர்­மாம்­பாள் அம்­மை­யார் நினைவு விதவை மறு­மண உத­வித் திட்­டம் தந்­த­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">முதலமைச்சரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">காலை உணவுத் திட்டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">1989–ஆம் ஆண்டு அஞ்­சு­கம் அம்­மை­யார் நினைவு கலப்­புத் திரு­மண உத­வித் திட்­டத்­தைத் தந்­த­வர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள். 1968–ஆம் ஆண்டு டாக்­டர் முத்­து­லட்­சுமி ரெட்டி மகப்­பேறு நிதி­யு­தவி தந்­தது தி.மு.க. அரசு. அதே­போன்று, கடந்த 1996––2001 உள்­ளாட்சி அமைப்­புத் தேர்­தல்­க­ளில் பெண்­க­ளுக்கு 33 சத­வி­கித இட­ஒ­துக்­கீடு வழங்­கி­ய­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். திரு­நங்­கை­க­ளின் கல்வி மற்­றும் உரி­மை­க­ளுக்­குப் புதிய வாய்ப்­பு­கள்; மூன்­றாம் பாலின மக்­க­ளைச் சமூ­கத்­தில் அனை­வ­ரும் சமம் என்ற நோக்­கத்­தோடு ‘அர­வா­ணி­கள்’ என்ற சொல்லை, முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள், 2006–ஆம் ஆண்டு திரு­நங்கை, திரு­நம்பி என்று பெயர் மாற்­றம் செய்த ஆட்சி திமுக ஆட்சி. இந்­தி­யா­வி­லேயே முதல் முறை­யாக ‘திரு­நங்­கை­யர் நல வாரி­யம்’ 2008–ஆம் ஆண்­டில் உரு­வாக்­கி­ய­வர் சமூக நீதிக் காவ­லர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். திரு­நங்­கை­க­ளுக்கு உயர் கல்வி மற்­றும் விடு­திக் கட்­ட­ணத்தை அரசே முழு­மை­யாக ஏற்று, திரு­நங்­கை­யர் நல வாரி­யத்­திற்கு ரூ.2 கோடி நிதியை வழங்­கி­யது திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று, 2021 முதல் 2026 வரை­யி­லான ஆட்­சி­யில் அண்­ணன் தள­ப­தி­யார் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அரசு மக­ளி­ருக்­கா­கச் செய்­யாத திட்­டங்­களே இல்லை என்­ற­வ­கை­யில் பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­த­வர் எங்­க­ளு­டைய திரா­விட மாடல் நாய­கர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அந்­த­வ­கை­யில், மக­ளிர் விடி­யல் பய­ணத் திட்­டம் 2021–ஆம் ஆண்டு தொடங்கி 2026–ஆம் ஆண்டு வரை 58.61 இலட்­சம் பெண்­கள் விடி­யல் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர். இதற்கு ரூ.897.82 கோடி செல­வா­கி­யுள்­ளது. பின்­னர், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை­மூ­லம் மாதம் ஆயி­ரம் ரூபாய் வீதம் 1 கோடியே 30 இலட்­சத்து 69 ஆயி­ரத்து 831 பெண்­க­ளுக்கு வழங்­கிய அரசு திரா­விட மாடல் அரசு. பெண்­கள் சுய உத­விக் குழு, தமிழ்­நாட்­டி­லுள்ள சுமார் 4 லட்­சத்து 86 ஆயி­ரத்து 656 மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்கு ரூ.1 லட்­சத்து 21 ஆயி­ரத்து 415 கோடி வங்­கிக் கடன் இணைப்பு திரா­விட மாடல் ஆட்­சி­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது. ‘மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார் புது­மைப் பெண் உயர் கல்­வித் திட்­டத்­தின்’ மூலம் உயர் கல்வி செல்­லும் மாண­வி­க­ளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்­கப்­ப­டு­கி­றது; இதன்­மூ­லம் 5 இலட்­சத்து 29 ஆயி­ரத்து 728 மாண­வி­கள் பய­ன­டைந்­துள்­ள­னர். பணிக்­குச் செல்­லும் பெண்­கள் தங்­கு­வ­தற்கு ‘தோழி விடு­தி­கள்’ திட்­டம் தந்­தது திரா­விட மாடல் அரசு; கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் 19 விடு­தி­கள் கட்­டப்­பட்டு சுமார் 1,824 பெண்­கள் அத­னால் பய­ன­டைந்து வரு­கின்­ற­னர். ‘டாக்­டர் முத்­து­லட்­சுமி ரெட்டி மகப்­பேறு நிதி­யு­தவி திட்­டம்’ இத்­திட்­டத்­தின்­கீழ் 34.40 இலட்­சம் பெண்­க­ளுக்கு மொத்­தம் ரூ.4,042 கோடி நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று, மிகச் சிறப்­பான உன்­ன­த­மான திட்­டம். ‘முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்’. இத்­திட்­டத்­தின்­மூ­லம் கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் சுமார் 30 ஆயி­ரத்து 992 அர­சுத் தொடக்­கப் பள்­ளி­க­ளில் 15 இலட்­சம் மாண­வர்­கள் பயன்­பெ­றும்­வ­கை­யில் இத்­திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். இத்­திட்­டத்­தைப் பார்த்து அண்டை மாநி­லங்­கள் மட்­டு­மல்­லா­மல் வெளி­நாட்­டில் கனடா உள்­ளிட்ட நாடு­க­ளில்­கூட இத்­திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­றால், இத்­திட்­டத்­தின் முக்­கி­யத்­து­வத்தை சற்று சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வரவு செல­வுத் திட்ட உரை­யில் தமிழ்­நாட்­டின் பெண்­கள் அனை­வ­ரை­யும் தன் குடும்­பத்­தில் ஒரு­வ­ரா­கக் கரு­தும்  முத­ல­மைச்­சர் அவர்­கள், அப்­பெண்­க­ளின் திரு­மண நாளில் அர­சின் சார்­பாக 8 கிராம் தங்க நாண­யம் மற்­றும் ஒரு பட்­டுப் புடவை அண்­ண­னின் சீராக வழங்­கப்­ப­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதற்கு 812 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. நான் இந்த அர­சைக் கேட்க விரும்­பு­வது என்­ன­வென்­றால், மூவ­லூர் ராமா­மிர்­தம் அம்­மை­யார் நினை­வுத் திரு­மண நிதி­யு­த­வித் திட்­டம், கலை­ஞர் அவர்­க­ளால் 1989–90 ஆம் ஆண்­டில் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது பெண்­க­ளின் கல்­வி­தான் இலக்­காக இருந்­தது. அத­னால் ஐந்­தாம் வகுப்பு படிப்பை நிறுத்­திய பெண்­கள், எட்­டாம் வகுப்பு வரை படித்­த­னர். படிப்­ப­டி­யா­கக் கல்­வித் தகுதி உயர்த்­தப்­பட்டு, தாலிக்கு தங்­கம் மற்­றும் பட்­ட­தாரி பெண்­க­ளுக்­குக் கூடு­தல் உத­வித் தொகை என்று அந்­தத் திட்­டம் மாறி­யது. இத­னால் பல பெண்­கள் கல்­லூ­ரிப் படிப்பை முடித்­த­னர். அண்­ணன் சீர் திட்­டத்­திற்கு உங்­கள் தேர்­தல் அறிக்கை மற்­றும் வரவு செல­வுத் திட்­டம் இரண்­டி­லும், நீங்­கள் பெண்­க­ளின் கல்­வித் தகு­தி­யைக் குறிப்­பி­ட­வில்லை. அப்­ப­டி­யென்­றால், நீங்­கள் இந்த திட்­டம்­மூ­லம் எந்­த­வி­த­மான சமூக முன்­னேற்­றத்தை எதிர்­பார்க்­கி­றீர்­கள் என்று குறிப்­பிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தாலிக்­குத் தங்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நிதி ஒதுக்­கீடு குறைவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2020––21 ஆண்டு வரை ‘தாலிக்கு தங்­கம்’ திட்­டத்­தில் பயன்­பெற்ற குடும்­பத்­தின் ஆண்டு வரு­மா­னம் ரூ.72,000–ஆக நிர்­ண­யிக்­கப் 
­பட்­டி­ருந்­தது. தற்­போது, தமிழ்­நாட்­டின் தனி­ந­பர் வரு­மா­னம் ஆண்­டுக்கு ரூ.3.62 இலட்­ச­மாக உள்­ளது. ஆனால், உங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் அண்­ணன் சீர் திட்­டம், ஆண்­டுக்கு ஐந்து லட்­சத்­திற்­கும் குறை­வாக வரு­மா­னம் உள்ள குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­மென்று குறிப்­பிட்டு இருந்­தீர்­கள். அப்­ப­டி­யென்­றால் இத்­திட்­டத்­திற்­குத் தகு­தி­யுள்­ள­வர்­க­ளாக இருப்­ப­வர்­கள், 2020––21–ஆம் ஆண்­டில் தாலிக்கு தங்­கம் திட்­டத்­திற்கு 1.5 இலட்­சம் விண்­ணப்­பங்­கள் வந்­தது என்­றால், அண்­ணன் சீர் திட்­டத்­திற்கு 3 இலட்­சம் விண்­ணப்­பங்­கள்­கூட வர­லாம். ஆனால், ஒதுக்­கப்­பட்ட நிதி வெறும் ரூ.812 கோடி மட்­டுமே. எதன் அடிப்­ப­டை­யில் விண்­ணப்­பங்­கள் தேர்வு செய்­யப்­ப­டும் என்­றும், ஒரு சவ­ரன் தங்­கம் இன்­றைக்கு ரூ.1.19 இலட்­சம் என்ற நிலை­யில், ஒரு பட்­டுப் புடவை குறைந்­த­பட்­சம் ஐந்­தா­யி­ரம் என்று எடுத்­துக்­கொண்­டால், ஒரு பெண்­ணுக்கு ரூ.1.24 இலட்­சம் செல­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதா­வது, 1 இலட்­சம் பெண்­க­ளுக்கு இந்­தத் திட்­டத்தை வழங்­கி­னா­லும்­கூட 1,244 கோடி ரூபாய் செல­வா­கும். ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் 432 கோடி ரூபாய் குறை­வாக இருக்­கி­றது. இந்­நி­லை­யில் த.வெ.க. அர­சின் தேர்­தல் வாக்­கு­று­திப்­படி, இந்­தத் திட்­டம், ஆண்டு வரு­மா­னம் குறைந்­தது 5 இலட்­சம் ரூபாய் உள்ள குடும்­பங்­க­ளுக்கு என்­றால், சுமார் 3 இலட்­சம் பெண்­கள் இதில் பயன்­பெ­று­வார்­கள் என்ற உத்­தே­சித்­தால்­கூட 3,733 கோடி ரூபாய் தேவைப்­ப­டும். அப்­போது ஒதுக்­கிய நிதி போதா­மல், backlog சேரும். அதை எப்­படி சமா­ளிப்­பீர்­கள்? அதே­போல், தங்­கத்­தின் விலை அதி­க­ரித்­தால், நிதி ஒதுக்­கீடு மேலும் உயர்த்­தப்­ப­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மக­ளிர் உரி­மைத் தொகை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ரூ.2,500 எப்­போது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும் இந்த அரசை நான் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­வது; தமிழ்­நாட்­டில் விலை­வாசி உயர்­வால் ஒவ்­வொரு குடும்­பத் தலை­வி­யும் குடும்ப பட்­ஜெட்டை சமா­ளிக்க முடி­யா­மல் தவித்து வரு­கின்­ற­னர். தற்­போ­தைய சூழ­லில் விலை­வாசி கட்­டுக்­குள் வரு­வ­தற்­கான சூழல் இல்­லா­த­து­போல தெரி­கி­றது. ஆகவே, வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை 2,500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டுமா? தி.மு.க. ஆட்­சிக்கு வந்­தி­ருந்­தால், இன்­றைக்கு நாங்­கள் ரூ.2,000/–ஐ நிச்­ச­ய­மாக வழங்­கி­யி­ருப்­போம். நீங்­கள் ரூ.2,500/– வழங்­கு­வீர்­கள் என நம்­பித்­தான் உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்­கள். அப்­ப­டி­யா­னால், நீங்­கள் எப்­போது ரூ.2,500/–ஐ வழங்­கு­வீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தலை­வர் தள­ப­தி­யார் அவர்­க­ளின் திரா­விட மாடல் ஆட்­சி­யில் கடந்த காலத்­தில் பெண்­க­ளுக்கு கர்ப்­பப்­பை­வாய் புற்­று­நோய்க்­காக HPV தடுப்­பூசி 9 வயது முதல் 14 வயது வரை­யுள்ள சிறு­மி­ய­ருக்கு செலுத்­தப்­பட்­டது. அதற்கு, 36 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்து, குறிப்­பிட்ட சில மாவட்­டங்­க­ளில் அந்­தத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­த­வர் திரா­விட மாடல் ஆட்சி நாய­கர் அவர்­கள். அத்­திட்­டத்­தைப் பற்­றிய எந்த அறி­விப்­பும் இந்த அறி­விப்­பு­க­ளில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­பது மிக­வும் வருத்­தத்­திற்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் ஐந்­தா­வது முறை முத­ல­ மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற தலை­வர் கலை­ஞர் ஆட்­சி­யில் ‘ஊனம்’ என்ற சொல் ஒரு­வ­ரின் இய­லா­மையை மட்­டுமே குறிப்­ப­தால், அவர்­க­ளி­ட­முள்ள மாற்­றுத் திறன்­களை வெளிக்­கொண்டு வர­வேண்­டும்; அவர்­க­ளின் கண்­ணி­யத்­தை­யும் உரி­மை­யை­யும் உயர்த்த வேண்­டு­மென்ற நோக்­கில், மாற்­றுத் திற­னா­ளி­கள் என்று அவர்­க­ளுக்கு பெயர் சூட்­டிய தலை­வர் கலை­ஞர் அவர்­கள், 2007 ஆம் ஆண்டு மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு நல வாரி­யம் கொண்டு வந்து, 2010 ஆம் ஆண்டு மாற்­றுத் திற­னா­ளி­கள் நலத் துறை­யாக மாற்­றி­ய­வர் செம்­மொ­ழிக் காவ­லர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அதைத் தொடர்ந்து கழ­கத்­தின் தலை­வர் அண்­ணன் தள­ப­தி­யார் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அர­சில், பல்­வேறு நலத் துறை­க­ளு­டன், மாற்­றுத் திற­னா­ளி ­கள் நலத் துறை­யை­யும் முத­ல­மைச்­ச­ரின் நேரடி கண்­கா­ணிப்­பில் தொடர்ந்து வைத்­தி­ருந்­தார்­கள் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நல வாரி­யம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட மாடல் அர­சில் அவர்­க­ளது பரா­ம­ரிப்பு உத­வித் தொகை ரூ.1,500/–லிருந்து ரூ.2,000/–ஆக உயர்த்­தப்­பட்­டது. உங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் அது ரூ.3,000/–ஆக உயர்த்­தப்­ப­டும் என்று அறி­வித்­தீர்­கள். அதை எப்­போது வழங்­கு­வீர்­கள் என்­பதை நான் அறிய விரும்­பு­கி­றேன். திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாடு மாற்­றுத் திற­னா­ளி­கள் நல வாரி­யத்­தின் மூல­மாக பல்­வேறு சீர­மைப்­பு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அந்த வகை­யில் மாற்­றுத் திற­னாளி உரி­மை­கள் திட்­டம் (TN RIGHTS project) மூல­மாக 6 ஆண்­டு­க­ளில் 1,774 கோடி ரூபாய் மதிப்­பில் தடை­யற்ற கட்­ட­மைப்பு, தொழிற்­ப­யிற்சி, வேலை­வாய்ப்பு, சுகா­தா­ரம் ஆகி­ய­வற்றை நோக்­க­மா­கக் கொண்டு, இத்­திட்­டத்­தைக் கொண்டு வந்­த­வர் அண்­ணன் தள­ப­தி­யார் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல, விழு­து­கள் (One stop social care centres). மாற்­றுத் திற­னா­ளி­கள் பல்­வேறு அலு­வ­ல­கங்­க­ளுக்­குச் சென்று வர வேண்­டிய நிலையை மாற்றி, ஒரே­யி­டத்­தில் பல்­வேறு சமூ­கப் பாது­காப்பு மற்­றும் மறு­வாழ்வு சேவை­க­ளைப் பெறும் வகை­யில், 39 இடங்­க­ளில் இத்­திட்­டத்­தைக் கொண்டு வந்­தது திரா­விட மாடல் ஆட்சி. திரா­விட மாடல் அர­சின் நான் முதல்­வன் திட்­டத்­தின்­மூ­லம் 500 மாற்­றுத் திற­னாளி பட்­ட­தா­ரி­க­ளுக்கு பொருத்­த­மான சாஃப்ட்­வே­ரு­டன் மடிக்­க­ணினி வழங்­கப்­பட்­ட­தும் திரா­விட மாடல் ஆட்­சி­யில் என்­பதை இந்த நேரத்­தில் பதிவு செய்­யக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தாயு­மா­ன­வர் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல, தாயு­மா­ன­வர் திட்­டத்­தின் மூல­மாக மாற்­றுத் திற­னா­ளி­கள் மற்­றும் 65 வய­துக்கு மேற்­பட்­டோர் நியாய விலைக் கடைக்­குச் சென்று பொருட்­கள் வாங்க முடி­யாத நிலையை மாற்றி, அவர்­க­ளின் இல்­லத்­திற்கே பொருட்­க­ளைக் கொண்டு சேர்த்த ஆட்சி திரா­விட மாடல் ஆட்சி. இதன்­மூ­லம் சுமார் 16 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் பய­ன­டைந்து கொண்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பார்­வை­யற்ற மாண­வர்­க­ளுக்கு வாசிப்­பா­ளர்­க­ளாக இருக்­கும் உத­வி­யா­ளர்­க­ளுக்கு உத­வித் தொகையை உயர்த்­தி­ய­தும் தள­பது அவர்­க­ளு­டைய அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று, சிறப்பு மேன்மை மையம் (Centre of Excellence for Persons with Autism Spectrum Disorder). சென்னை கே.கே. நகர் அரசு மாற்­றுத் திற­னா­ளி­கள் மறு­வாழ்வு மருத்­து­வ­மனை வளா­கத்­தில் இத்­திட்­டத்தை 25 கோடி ரூபாய் மதிப்­பில் கொண்டு வந்­த­வர் அண்­ணன் தள­ப­தி­யார் அவர்­கள். ஆட்­டி­சம் குறை­பாடு கொண்ட ஒவ்­வொரு குழந்­தைக்­கும் சிறப்­புக் கல்வி, கண் பார்வை அள­வீடு, கேட்­டல் மற்­றும் பேச்­சுப் பயிற்சி, இயன்­முறை சிகிச்சை, செயல்­முறை சிகிச்சை, உள­வி­யல் சேவை வழங்­கு­வது இத்­திட்­டத்­தின் சிறப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடந்த ஆட்­சிக் காலத்­தில், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் நிய­மன உறுப்­பி­னர்­க­ளாக மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு பொறுப்­பு­களை வழங்­கி­ய­வர் அண்­ணன் தள­பதி என்­பதை இந்த நேரத்­தில் பதிவு செய்­வ­தில் பெரு­மை­கொள்­கி­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று, மழை மற்­றும் வெள்ள பாதிப்பு ஏற்­டும் நேரங்­க­ளில் மாற்­றுத் திற­னா­ளி­கள் அலு­வ­லங்­கள் சென்­று­வர வாக­னங்­க­ளில் ஏறி, இறங்க மிக­வும் அவ­திக்­குள்­ளா­கின்­ற­னர். எனவே, அனைத்து மாற்­றுத் திற­னாளி அரசு ஊழி­யர்­க­ளுக்கு 12 நாள் CL உடன் 15 நாள்  சிறப்பு விடுப்பு மொத்­த­மாக 27 நாட்­கள் தற்­செ­யல் விடுப்­பாக மாற்றி வழங்­கிட இந்த அரசு முன்­வ­ருமா என்­பதை அறிய விரும்­பு­கி­றேன். அதே­போன்று, மாற்­றுத் திற­னா­ளி­கள் அர­சுப் பணி­யா­ளர்­க­ளாக ஓய்வு வயதை 65 வய­தாக உயர்த்த இந்த அரசு முன்­வ­ருமா என்­ப­தை­யும், அதே­போன்று நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டுவாரி­யத்­தின்­மூ­லம் கட்­டப்­ப­டும் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­க­ளில் மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு முற்­றி­லும் இல­வ­ச­மாக வீடு­க­ளைத் தரை­த­ளத்­தில் ஒதுக்­கீடு செய்ய இந்த அரசு முன்­வ­ருமா என்­ப­தை­யும் அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மது­வி­லக்கு மற்­றும் ஆயத்­தீர்­வைத் துறை: தமிழ்­நாட்­டில் 2021ஆம் ஆண்டு அண்­ணன் தள­ப­தி­யார் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்சி பொறுப்­பேற்­ற­போது சுமார் 5,329 டாஸ்­மாக் சில்­லறை மது­பா­னக் கடை­கள் இயங்கி வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் வாக்­கு­று­திப்­படி படிப்­ப­டி­யாக மது­வி­லக்கை அமல்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக மாநி­லம் முழு­வ­தும் 500 டாஸ்­மாக் கடை­கள் ஒரே நேரத்­தில் நிரந்­த­ர­மாக மூடப் 
­பட்­டன. மூடப்­பட்ட கடை­கள் தவிர, எஞ்­சி­யுள்ள கடை­க­ளின் எண்­ணிக்கை 4,765 ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடந்த திரா­விட மாடல் ஆட்­சிக் காலத்­தில், மாநி­லத்­தில் போதைப்­பொ­ருட்­க­ளின் பயன்­பாடு மற்­றும் சட்­ட­வி­ரோ­தக் கடத்­த­லைக் கட்­டுப்­ப­டுத்த பல சட்­டப்­பூர்வ மற்­றும் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அவற்­றில் முக்­கி­ய­மா­ன­வை–­போ­தை­யில்லா தமிழ்­நாடு இயக்­கம்–Drug Free Tamil Nadu campaign 2022 ஆம் ஆண்டு “போதை­யில்லா தமிழ்­நாடு” என்ற விழிப்­ப­ணர்வு இயக்­கம்தொடங்­கப்­பட்­டது. பள்­ளி­கள் மற்­றும் கல்­லூ­ரி­க­ளில் இலட்­சக்­க­ணக்­கான மாண­வர்­கள் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ராக உறு­தி­மொழி ஏற்­கும் இயக்­கங்­கள் நடத்­தப்­பட்­டன. சிறப்பு அம­லாக்­கப் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டது. போதைப் ­பொ­ருள் தடுப்­புப் பிரி­வான NIB மற்­றும் மது­வி­லக்கு அம­லாக்­கப் பிரிவை (PEW) ஒன்­றி­ணைத்து Enforc ement Bureau–CID என்ற தனிப்­பி­ரிவு உரு­வாக்­கப்­பட்­டது. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) அதே­போல, போதைப் ­பொ­ருள் விற்­ப­னை ­யா­ளர்­கள் மற்­றும் கடத்­தல்­கா­ரர்­க­ளின் வங்கி கணக்­கு­கள் மற்­றும் சொத்­துக்­கள் முடக்­க ப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">போதைப்­பொ­ருள் கடத்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">குண்­டர் சட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">போதைப்­பொ­ருள் கடத்­த­லில் ஈடு­ப­டு­வோர்­மீது குண்­டர் சட்­டத்­தின்­கீழ் வழக்­குப் பதிவு செய்து கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன. கஞ்சா மற்­றும் பிற போதைப்­பொ­ருட்­களை மாநில எல்லை வழி­யா­கக் கடத்தி வரு­வ­தைத் தடுக்க அண்டை மாநில அதி­கா­ரி­க­ளு­டன் இணைந்து கண்­கா­ணிப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. அதே­போன்று, பள்ளி மற்­றும் கல்­லூரி வளா­கங்­க­ளின் போதைப்­பொ­ருட்­க­ளைத் தடுக்­கும்­வண்­ணம் ‘போதை எதிர்ப்பு மன்­றங்­கள்’–Anti–drug club மற்­றும் விழிப்­பு­ணர்­வுத் திட்­டங்­கள் அமைக்­கப்­பட்­டன என்­ப­தை­யும் இந்த நேரத்­தில் பதிவு செய்­வ­தில் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று, கடந்த ஆட்­சிக் காலத்­தில் மது விற்­பனை என்­பது ஆண்­டுக்கு 45 ஆயி­ரம் கோடி ரூபாய் என்று average ஆக இருந்­தது. ஆனால், த.வெ.க. ஆட்­சி­யின் முதல் 100 நாட்­க­ளில் கிடைத்த வரு­மா­னம் சுமார் ரூ.11,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே, த.வெ.க. ஆட்­சி­யில் தற்­போது 717 மதுக்­க­டை­கள் மூடப்­பட்­டள்­ள­தாக அறி­வித்­துள்­ளீர்­கள். ஆனால், மது விற்­ப­னை ­மூ­லம் வரு­வாய் குறை­ய­வில்லை. விற்­பனை குறை­யா­த­போது வரு­மா­னத்­திற்­காக ஏதே­னும் புதிய செயல் திட்­டத்தை செயல்­ப­டுத்­தி­யுள்­ளீர்­களா என்­பதை அவை­யில் உங்­க­ளைக் கேட்க விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மடத்­துக்­கு­ளம் அம­ரா­வதி கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை 1960–ஆம் ஆண்டு அரவை துவங்­கப்­பட்­டது. திண்­டுக்­கல், திருப்­பூர், கோவை ஆகிய மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய கரும்பு விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ர­மாக உள்ள ஆலை, பழ­மை­யான இயந்­தி­ரங்­க­ளால் 2023 ஜூலை மாதம் முதல் இயங்­கா­மல் உள்­ளது. இங்­குள்ள எரி­சா­ராய உற்­பத்தி ஆலை மட்­டும் பிற கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­க­ளி­லி­ருந்து மூலப்­பொ­ருட் ­க­ளைக் கொண்டு வந்து spirit மற்­றும் ethanol தயா­ரிக்­கும் பணி­கள் மட்­டும் நடை­பெற்று வரு­கி­றது.  இந்த ஆலையை நம்பி நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும் 10 ஆயி­ரம் குடும்­பங்­கள் இருக்­கின்­ற­னர். பழ­மை­வாய்ந்த இயந்­தி­ரத்தை சீர­மைக்­கும் பொருட்டு,  முன்­னாள் முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் 2025 செப்­டம்­பர் 9–ஆம் தேதி 11 பேர் கொண்ட வல்­லு­நர் குழுவை அமைத்­தார்­கள். வல்­லு­நர் குழு ஆலையை புன­ர­மைப்பு செய்து மீண்­டும் இயக்­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களை ஆராய்ந்து விரி­வான திட்டஅறிக்­கை­யில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு இரா.ஜெய­ரா­ம­ கி­ருஷ்­ணன் 
பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈரோடு, செப். 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஈரோடு மேற்கு மாவட்­டம், கோபி­செட்­டி­பா­ளை­யம் சட்­ட­மன்­றத் தொகுதி, டி.என்.பாளை­யம் தெற்கு ஒன்­றி­யம், பெரி­ய­கொ­டி­வேரி பேரூர் கழக செய­லா­ளர் ஏ.ஆறு­மு­கம் (வயது 54) அவர்­கள் 01.09.2026 –செவ்­வாய்க்­கி­ழமை அன்று இரவு மார­டைப்பு கார­ண­மாக இயற்கை எய்­தி­னார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்னாரை இழுந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும்  மாவட்டக் கழகத்தினருக்கும் எனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>