<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,33,959,769" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 03 2026 03:54:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260903T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="03092026-TRY-07" position.sequence="07" ex-ref="03092026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">03.09.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">முத்தமிழறிஞர் கலைஞர்   </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">பெருந்தலைவர் காமராஜருக்கு அளித்த மரியாதை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">பேரவையில் வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு காங்கிரசுக்கு தக்க பதிலடி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup836362_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="ThangamTennara_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="ThangambwTenn_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">சென்னை, செப். 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் உடலை மெரினா கடற்­க­ரை­யில் நல்­ல­டக்­கம் செய்ய, கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. அரசு அனு­மதி மறுத்­த­தாக பேர­வை­யில் முன்­வைக்கப்­பட்ட குற்­றச் ­சாட்­டுக்கு, அவைக்­கு­றிப்பு­களை­யும் வர­லாற்று ஆதா­ரங்­க­ளை­யும் முன்­வைத்து முன்­னாள் அமைச்­ச­ரும், திருச்­சுழி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தங்­கம் தென்­ன­ரசு நேற்று முன்தினம் பேரவை­யிலேயே பதி­லடி கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குறிப்­பாக, காம­ரா­ஜர் மறைந்­த­போது அவ­ரு­டைய இல்­லத்­துக்கு உட­ன­டி­யா­கச் சென்று கலை­ஞர் மரி­யாதை செலுத்­தி­யது தொடங்கி அவ­ரது உடலை அரசு மரி­யா­தை­யு­டன் ராஜாஜி மண்­ட­பத்­தில் பொது­மக்­கள் அஞ்­ச­லிக்­காக வைக்க ஏற்­பாடு செய்­தது. பின்­னர் கிண்­டி­யில் காந்தி மண்­ட­பத்­திற்கு அருகே நினை­வி­டம் அமைக்க நட­வ­டிக்கை எடுத்­தது வரை நடந்த நிகழ்­வு­களை தங்­கம் தென்­ன­ரசு விரி­வாக எடுத்­து­ரைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நேற்று முன்­தி­னம், காங்­கி­ரஸ் சட்­ட­மன்­றக் குழுத் தலை­வர் தாரகை கத்­பர்ட், கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்த திமுக ஆட்­சிக் காலத்­தில் காம­ரா­ஜர் உடலை மெரி­னா­வில் அடக்­கம் செய்ய அனு­மதி மறுக்­கப்­பட்­டது என்ற தக­வலை பேர­வை­யில் பதிவு செய்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதற்கு நேற்று முன்தினம் பதி­ல­ளித்த தங்­கம் தென்­ன­ரசு பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வர­லாற்­றி­லும், இந்­தப் பேர­வை­யி­லும் பிழை­யான அல்­லது உண்­மைக்கு மாறான செய்­தி­கள் பதி­வா­கி­வி­டக் கூடாது என்ற அடிப்­ப­டை­யில் விளக்­கம் அளிப்­பது எனது கட­மை­யா­கும். பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் 1975ஆம் ஆண்டு அக்­டோ­பர் 2ஆம் தேதி காலை­யில் இயற்கை எய்­தி­னார். அவர் மர­ண­ம­டைந்த செய்­தி­யைக் கேள்­விப்­பட்­ட­வு­டன், அன்­றைக்கு முத­ல­மைச்­ச­ராக இருந்த தலை­வர் கலை­ஞர் உட­ன­டி­யாக அவ­ரு­டைய இல்­லத்­திற்கு விரைந்து சென்று மரி­யாதை செலுத்­தி­னார். அப்­போது அங்கே இருந்த காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர்­கள், அவ­ரு­டைய உடலை தேனாம்­பேட்­டை­யில் இருக்­கக்­கூ­டிய காங்­கி­ரஸ் மைதா­னத்­தில் அடக்­கம் செய்ய வேண்­டும் என்று விவா­தித்­துக் கொண்­டி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">முழு அரசு மரி­யா­தை­யு­டன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அடக்­கம் செய்­யப்­பட்­டது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அப்­போது அங்­கே­வந்த கலை­ஞர், பெருந்­தலை­வர் காம­ரா­ஜர் என்­ப­வர் ஏதோ காங்­கி­ரஸ் கட்­சி­யி­னு­டைய தலை­வர் மாத்­தி­ரம் கிடை­யாது; அவர் ஒரு பெரிய தேசி­யத் தலை­வர். அவ­ருக்கு உரிய முறை­யில் நாம் அடக்­கம் செய்து, அவர் இடத்­தில் நினை­வி­டம் கட்ட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார். அதன்­படி, காம­ரா­ஜ­ரின் உடலை ராஜாஜி மண்­ட­பத்­துக்கு கொண்டு சென்று, முழு அரசு மரி­யா­தை­யு­டன் பொது­மக்­கள் அஞ்­ச­லிக்­காக வைக்க ஏற்­பாடுசெய்­த­து­டன், கிண்­டி­யில் காந்தி மண்­ட­பத்­திற்கு அருகே அவ­ரது நினை­வி­டம் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் கலை­ஞர் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதற்­கான முக்­கி­ய­மான வர­லாற்­றுச் சான்­றாக, அன்­றைய மேல­வை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் காம­ரா­ஜ­ரின் நெருங்­கிய நண்­ப­ரு­மான ராஜா­ராம் நாயுடு அவை­யில் பேசிய உரையை தங்­கம் தென்­ன­ரசு சுட்­டிக்­காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காம­ரா­சரை இழந்த துய­ரில் கழக அரசு பங்­கு­ கொண்­டது குறித்து, காம­ரா­ச­ரி­னு­டைய நெருங்­கிய நண்­ப­ரும் மேல­வை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்­த­வ­ரு­மான ராஜா­ராம் நாயுடு அப்­போது மேல­வை­யிலே பேசி­யது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காம­ரா­சர் மறைந்ததுபற்றி என்­னால் எங்கு பேசி­னா­லும் இதைச் சொல்­லா­மல் இருக்க முடி­யாது. நமது மாநில அரசை நடத்­தும் முத­ல­மைச்­சர் கலை­ஞர், கல்வி அமைச்­ச­ரும் மற்ற அமைச்­சர்­க­ளும் அங்கு வந்து, அவர்­களு­டைய சகோதரர்­களில் ஒரு­வர் இறந்­து­விட்­ட­தைப்­போல அந்த இடத்­தில் தோற்­ற­ம­ளித்­தார்­களே தவிர, மற்­றொரு கட்­சி­யி­னு­டைய தலை­வர் இறந்­தார் என்று அவர்­கள் நினைத்­த­தா­கத் தெரி­ய­வில்லை. எங்­க­ளைக் கட்­டிப்­பி­டித்து முத­ல­மைச்­சர் கலை­ஞர்­அன்று துக்­கம் தெரி­வித்­த­தும், அழு­த­தும் என்­னு­டைய உயிர் உள்ள அள­வும் மறக்க முடி­யாது. அவ்­வ­ளவு பாச உணர்ச்­சியை அவர்­கள் காட்­டி­னார்­கள். தமிழ்­நாடு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து அன்று அரசு மரி­யா­தையை நாங்­கள் எதிர்­பார்க்­கவே இல்லை. தேனாம்­பேட்டை காங்­கி­ரஸ் மைதா­னத்­தில் அவ­ரு­டைய பிரே­தத்­தைப் பார்­வைக்கு வைத்து, அங்­கேயே எரித்து நினை­வுச்­சின்­னம் கட்­டு­வது என்­று­தான் முத­லில் முடிவு செய்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிலர் ராஜாஜி ஹாலுக்­குக் கொண்டு போய் வைக்க வேண்­டும், முத­ல­மைச்­ச­ரி ­டத்­திலே கேளுங்­கள் என்று சொன்­னார்­கள். இதை எப்­ப­டிக் கேட்­பது என்று யோசித்­துக் கொண்­டி­ருந்த நேரத்­தில், அதே வினா­டி­யில் முத­ல­மைச்­சர் கலை­ஞர், காம­ரா­சர் வீட்­டுக்­குள் வந்­து­விட்­டார்­கள். வந்­த­தும் முதல் வேலை­யாக, இங்கே கூட்­டத்­தைச் சமா­ளிக்க முடி­யாது, உடனே ராஜாஜி ஹாலுக்­குக் கொண்­டு­போக வேண்­டும் என்று நாங்­கள் எதிர்­பார்க்காத அள­விற்கு ஏதோ கனவு கண்­ட­தைப்­போல சொன்­னார்­கள். எங்­கள் மனதை எப்­ப­டித் தெரிந்­து­கொண்­டார்­கள் என்றே எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. எனக்­கும், என்னு­ டைய சகாக்­கள் தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும் இதற்­கெல்­லாம் என்ன கைம்­மாறு செய்­வது என்றே புரி­ய­வில்லை. பிறகு ராஜாஜி ஹாலுக்கு வந்து எவ்­வாறு வைக்க வேண்­டும் என்று அத­னை­யெல்­லாம் சரி செய்து மேடை போட்­டுக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய நேரத்­தில், அங்­கேயே மந்­தி­ரி­சபை கூடி­யது என்ற வகை­யில் எல்லா அமைச்­சர்­க­ளும் அங்கே வந்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அவரை எங்கே வைப்­பது என்­ப­தற்கு காந்தி மண்­ட­பத்­திற்­குப் பக்­கத்­தில் இருக்க வேண்­டும் என்று சொன்­னார்­கள். அதே கணத்­தில் முடிவு செய்­தது மாத்­தி­ர­மல்­லா­மல், அன்று இரவேமுத­ல­மைச்­சர் கலை­ஞர் அவ­ரு­டைய வண்­டி­யி­லேயே என்­னை­யும் தமிழ்­நாடு காங்­கி­ரஸ்கட்சி காரி­ய­த­ரி­சி­யை­யும் அழைத்­துக் கொண்டு, மழை பெய்து கொண்­டி­ருக்­கும்­போதே இரவு 8 மணிக்கு முத­ல­மைச்­சர் கலை­ஞர், பொதுப்­­பணித்­துறை அமைச்­ச­ரும் அந்த இடத்­திற்­குச் சென்­றோம். அவர்­களே செய்­தி­ருக்­க­லாம், 
எங்­களை அழைத்­துச் சென்­றி­ருக்க வேண்­டி­ய­தில்லை; இருந்­தா­லும் எங்­க­ளை­யும் அழைத்­துக் கொண்டு அந்த இடத்­தில், அந்த இர­வில் வெளிச்­ச­மில்லை, கார்­க­ளை­யெல்­லாம் திருப்பி நிறுத்தி விளக்­கைப்­போட்டு, இடத்­தைத் தேர்ந்­தெ­டுத்து, அன்­றி­ரவே அங்­குள்ள மரங்­க­ளை­யெல்­லாம் அகற்றி, இர­வெல்­லாம் முத­ல­மைச்­சர் அங்­கேயே தூக்­க­மில்­லா­மல் இருந்து ஏற்­பா­டு­க­ளை­யெல்­லாம் செய்­தார்­கள். இதற்­கெல்­லாம் என்ன கைம்­மாறு செய்­வது என்று எங்­க­ளுக்­குத் தெரி­யவே இல்லை. கட்­சி­யைப் பற்றி நான் எண்­ண­வில்லை. ஆனால் என்­னைப் பொறுத்­த­ வ­ரை­யில் என்­றுமே இதை மறக்க முடி­யாது. நான் உள்ள அள­வும் அதை மறக்க முடி­யாது எனக் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு ராஜா­ராம் நாயுடு சொன்­னது இன்­றைக்­கும் மேல­வை­யி­னு­டைய அவைக்­கு­றிப்­பு­க­ளிலே இருக்­கி­றது. தலை­வர் கலை­ஞரை தொடர்ந்து, தள­பதி ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த கால­கட்­டங்­க­ளி­லெல்­லாம் பெருந்­­தலை­வர் காம­ரா­ஜ­ருக்கு எவ்­வ­ளவு சிறப்பு­ களைச் செய்­தார்­கள் என்­பதை நாம் தொடர்ந்து பல்­வேறு விஷ­யங்­க­ளா­கச் சொல்­லிக்­கொண்டே இருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மெரினா கடற்­க­ரைச் சாலைக்கு காம­ரா­ஜர் பெயர் சூட்­டி­ய­தி­லி­ருந்து, இன்று அவை­யில் நாம் காணும் காம­ரா­ஜ­ரின் திரு­வு­ரு­வப் படம் வரை­யி­லும் தி.மு.­க.­வும், தலை­வர் கலை­ஞ­ரும் காம­ரா­ஜ­ருக்கு அளித்த மரி­யாதை வர­லாற்­றில் என்­றும் நிலைத்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முன்­ன­தாக மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். அவர்­கள் அந்­தப் படத்தை அவை­யில் திறந்து வைத்த அந்­தக் கால­கட்­டத்­தில்­கூட, அந்த படத்­தின் கீழ் இடம்­பெற்ற உழைப்பே உயர்வு தரும் என்ற வரி­களை எழு­தித் தந்­த­வர் தலை­வர் கலை­ஞர்­தான். காம­ரா­ஜ­ரின் உழைப்­பை­யும் பெரு­மை­யை­யும் மதித்து, அதை தலை­மு­றை­கள் நினை­வு­கூ­ரும் வகை­யில் பதிவு செய்­த­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எனவே, அன்று தொடங்கி, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் பிறந்­த­நாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்­ட­மா­கக் கொண்டு வரக்­கூ­டிய அந்த நிலை வரை, எண்­ணற்ற விஷ­யங்­களை நான் அடுக்­கிக்­கொண்டே செல்­ல­லாம். இருந்­தா­லும், நேரத்­தின் அருமை கருதி என்­றைக்­கும் பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் அவர்­க­ளுக்கு மிகுந்த மரி­யா­தை­யோடு, எல்­லாச் சிறப்பு­ களை­யும் செய்­யும் வகை­யில் செயல்­பட்­ட­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த தலை­வர் கலை­ஞ­ரும், திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சும், நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சின் முத­ல­மைச்­ச­ராக இருந்த தள­பதி மு.க. ஸ்டாலின்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்வாறு அவர் பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>