<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,957,748" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 03 2026 04:01:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260903T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="03092026-VLR-08" position.sequence="08" ex-ref="03092026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">பொங்கல் பண்டிகைக்கு 8 முழம் வேட்டிக்கு பதில் 4 முழம் வேட்டி வழங்குவதால்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">நெசவாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பில் எஸ்.ஆஸ்டின் பேச்சு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் பெரியவர் பி.ஏ.சாமிநாதன் மனைவி</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">திருமதி. சம்பூரணம் சாமிநாதன் மறைவு! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Austinc_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, செப். 2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பொங்­கல் பண்­டி­கைக்கு  8முழம் வேட்­டிக்கு பதி­லாக 4 முழம் வேட்டி வழங்­கு­வ­தால் நெச­வா­ளர்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய பாதிப்பு ஏற்­பட்டு இருக்­கி­றது என்று சட்­டப்­பே­ர­வை­யில் கவன ஈர்ப்­பில் எஸ்.ஆஸ்­டின்பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­வை­யில் இது­கு­றித்து எஸ்.ஆஸ்­டின் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2027 ஆம் ஆண்டு பொங்­கல் பண்­டி­கைக்கு வழங்­கப்­ப­டும் விலை­யில்லா வேட்­டி–­­சேலை வழங்­கும் திட்ட த்தில் ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்டு வந்த 8 முழம் வேட்­டிக்­குப் பதி­லாக, 4 முழம் வேட்டி வழங்­கப்­ப­டும் என்ற புதிய அர­சா­ணை­யி­னால் நெச­வா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு குறித்து அர­சின் கவ­னத்தை ஈர்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அமைச்­சர் அவர்­கள் கொடுத்த அறிக்­கை­யினை முழு­மை­யா­கப் படித்­துப் பார்த்­தேன். அதா­வது, முழுப் பூச­ணிக்­காயை சோற்­றில் மறைத்­தேன் என்று செல்­வார்­கள். அதே­போல், இந்த அறிக்­கை­யில் அனைத்து விவ­ரங்­க­ளும், அனைத்து பாதிப்­பு­க­ளும் மறைக்­கப்­பட்டு, இறு­தி­யில் இரண்டு கருத்­து­களை மட்­டும் அமைச்­சர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். கைத்­தறி நெச­வா­ளர்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­பும் இல்லை, என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். பொது­மக்­க­ளி­டம் 4 முழ வேட்­டி­யாக மாற்­று­வ­தற்கு கருத்­துக் கேட்­கப்­பட்­ட­தில், பெரும்­பா­லா­ன­வர்­கள் 4 முழ வேட்­டி­யையே தேர்வு செய்­துள்­ளார்­கள் என்று இரண்டு கருத்­தோடு அமைச்­சர் அவர்­கள் இதில் முடிக்­கி­றார்­கள். மற்ற விவ­ரங்­கள் எது­வும் அதில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கஞ்­சித்­தொட்டி போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில், நெச­வா­ளர்­க­ளுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். பத்­தி­ரி­கை­க­ளில் எல்­லாம் வந்து கொண்­டி­ருக்­கி­றது. ஏற்­கெ­னவே, நேற்­றைய முன்­தி­னம் இரா­ஜ­பா­ளை­யம் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய புனல்­வேலி பகு­தி­யில், பாதிக்­கப்­பட்ட நெச­வா­ளர்­கள் குடும்­பத்­தி­ன­ரு­டன் கஞ்­சித் தொட்டி திறந்து போராட்­டம் நடத்­தி­யி­ருக்­கின்­றார்­கள். இதற்கு 4, 5 தினங்­க­ளுக்கு முன்­பாக இரா­ஜ­பா­ளை­யம் பகுதி, சேத்­தூர் பேருந்து நிலை­யம் முன்­பாக, தட்டை ஏந்தி பிச்சை எடுக்­கும் போராட்­டத்தை நடத்­தி­யி­ருக்­கின்­றார்­கள். அதே­போல், நெச­வா­ளர்­க­ளு­டைய கருத்­துக் கேட்புஎன்று சொல்­கி­ற­பொ­ழுது, எந்­த­வி­த­மான கருத்­துக் கேட்­புக் கூட்­ட­மும், எங்­கே­யும் நடந்­த­தாக நாங்­கள் பார்க்­க­வில்லை. என்­னு­டைய நாகர்­கோ­வில் சர­கம் பகு­தி­யில் அதி­க­மாக, 30–க்கும் மேற்­பட்ட நெச­வா­ளர் கூட்­டு­றவு சங்­கங்­கள் இருக்­கின்­றன. எங்­கே­யுமே கருத்து கேட்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், ஒரு சில அதி­கா­ரி­கள், ஒரு format மட்­டும் தயார் செய்து, 8 முழ வேட்­டியா 4 முழ வேட்­டியாஎன்று போட்டு, அதில் 4 முழ வேட்­டி­யில் ஒரு tick செய்து, 20, 30 பொது­மக்­க­ளி­டம் formality–க்காக கை யெ­ழுத்து வாங்­கி­ய­தாக தெரி­கி­றது. எனக்கு தெரிய வரு­கிற கருத்தை நான் சொல்­கி­ றேன். எனவே, மிகப்­பெ­ரிய பாதிப்பு இந்த பகுதி மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. உங்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கருத்து கேட்பு கூட்­டம் என்­பது ஒரு முறை­யான அறி­விப்பு கொடுத்து, அந்­தப் பய­னா­ளி­க­ளை­யும், நெச­வா­ளர் கூட்­டு­றவு சங்­கத்­தி­னு­டைய உறுப்­பி­னர்­க­ளை­யும் அழைத்து வைத்து, கருத்து கேட்டு, ஒரு இர­கத்தை புதி­தாக மாற்ற வேண்­டு­மென்று சொன்­னால், 8 முழ வேட்­டியை 4 முழ வேட்­டி­யாக மாற்ற வேண்­டு­மென்று சொன்­னால், அங்கு கருத்து கேட்டு, அதில் majority ஆக எந்­தக் கருத்து ஏற்­கப்­பட்­டதோ, அதை அவர்­கள் மாற்­ற­லாம். அது ஒரு அர­சாங்­கத்­தி­னு­டைய உரிமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கருத்­துக்­கேட்பு கூட்­டம் நடத்­த­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­ப­டிப்­பட்ட கருத்­துக் கேட்­புக் கூட்­டம் நடத்­தப்­ப­ட­வில்லை. அது­தான் என்­னு­டைய குற்­றச்­சாட்டு. இரண்­டா­வது, உங்­க­ளுக்கு எல்­லாம் தெரி­யும். இந்த அவை­யில் நீங்­கள் இருந்த காலம் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை. 1983 ஆம் ஆண்­டில்­தான் அன்­றைய முன்­னாள் முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். அவர்­கள் பொங்­க­லுக்­கான விலை­யில்லா வேட்டி சேலைத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். அதைக் கொண்டு வந்­த­தன் நோக்­கம் என்­ன­வென்று சொன்­னால், பய­னா­ளி­களை முன்­னி­றுத்தி அவர் கொண்டு வர­வில்லை. கைத்­தறி நெச­வா­ளர்­கள், பெடல் தறி நெச­வா­ளர்­கள் உள்­ளிட்ட நெச­வா­ளர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு இல்­லா­மல் போய் விடு­கின்­றது. ஆண்டு முழு­வ­தும் அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை உரு­வாக்­கிக் கொடுக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில்­தான், நெச­வா­ளர்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட திட்­டம்­தான் பொங்­க­லுக்­காக வழங்­கக்­கூ­டிய, இல­வச வேட்டி சேலைத் திட்­டம். அந்­தத் திட்­டத்தை தொடர்ந்து, எங்­க­ளு­டைய தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், அதற்கு பின்­னர் வந்த அ.தி.மு.க. ஆட்சி அதற்கு பின்­னர் எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­க­ளு­டைய ஆட்­சி­க­ளில் எல்­லாம் முறை­யாக நெச­வா­ ளர்­க­ளுக்கு அந்த ஆண்டு முதல் வேலை­வாய்ப்­பைக் கொடுத்து, இந்த திட்­டத்தை நாங்­கள் நடத்­திக் கொண்டு வந்­தோம். நெச­வா­ளர்­கள் இதன்­மூ­ல­மாக, வேலை­வாய்ப்­பைப் பெற்று, பயன் பெற்­றார்­கள். நெச­வா­ளர்­கள் அனை­வ­ரும் பொது­வாக, கிட்­டத்­தட்ட 50 வய­திற்கு மேற்­ பட்­ட­வர்­கள் தான் நெச­வுத் தொழில் தங்­களை ஈடு­ப­டுத்தி வரு­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">8 முழ வேட்­டிக்கு அர­சாணை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வரு­கின்ற பொங்­க­லுக்கு வழங்­கக்­கூ­டிய வேட்டி சேலையை உற்­பத்தி செய்­வது என்­பது தமிழ்­நாடு முழு­வ­தும் உற்­பத்தி செய்­ய­வில்லை. சில இடங்­க­ளில் வேலை நிறுத்­தம் செய்­கி­றார்­கள். குறிப்­பாக, நாகர்­கோ­வில் சர­கம், கட­லூர், திருச்­செங்­கோடு, சேலம் மற்­றும் காஞ்­சி­பு­ரம் இவ்­வாறு 5 சர­கத்­திற்கு உட்­பட்ட பகு­தி­க­ளில்­தான் அதி­க­மாக கைத்­த­றி­யும், பெடல் தறி­யும் வைத்து நெச­வுத் தொழில் செய்து, இந்த வேட்­டி­களை அவர்­க­ளுக்கு வழங்­கு­கின்­றார்­கள். ஆனால், இப்­போது, சமீ­பத்­தில்  வரு­கின்ற 2027 ஆம் ஆண்டு பொங்­க­லுக்கு வேட்டி சேலை வழங்க வேண்­டும். வேட்டி சேலை வழங்­கு­வ­தற்கு, எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில், கடந்த 18–2–2026 ஆம் நாளன்று 8 முழ வேட்­டியை உற்­பத்தி செய்­வ­தற்­கான உற்­பத்தி ஆணையை அர­சாங்­கம் அவர்­க­ளுக்கு வழங்­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உற்­பத்தி ஆணையை வழங்­கி­யது மட்­டு­மல்ல, அதற்­கான பாகு நூல், ஊடை நூல் 4 மாதங்­க­ளுக்­கான கூலி முன்­ப­ணத்தி­ னுடைய பங்­குத் தொகை, இவை­யெல்­லாம் அந்த சங்­கங்­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் வழங்­கப்­பட்டு, அவர்­கள் நூலை கொள்­மு­தல் செய்து, நெச­வா­ளர்­கள் தங்­க­ளு­டைய பணி­யைத் தொடங்­கி­விட்டு, கிட்­டத்­தட்ட 3, 4 மாதங்­க­ளாக பணி செய்­து—­­நா­கர்­கோ­வில் சர­கத்­தில் மட்­டும். நாகர்­கோ­வில் சர­கத்­தில்மட்­டும் கிட்­டத்­தட்ட 7 கோடி ரூபாய் மதிப்­பி­லான வேட்­டி­கள் இன்­றைக்கு தேக்க நிலை­யில் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">5 சர­கத்­தை­யும் சேர்த்­தால் கிட்­டத்­தட்ட சுமார் 50 கோடி ரூபாய் மதிப்­பி­லான வேட்­டி­கள் நெய்­யப்­பட்டு, தயார் நிலை­யில், இருப்­பில் (stock), இன்­றைக்கு இருந்­து­கொண்­டி­ருக்­கி­றது. அதை இந்த அரசு கவ­னத்­தில் கொள்­ள­வில்லை. திடீ­ரென்று இப்­போது வந்து ஒரு முடிவு எடுக்­கி­றார்­கள். 1–7–2026–ல் ஒரு புது அர­சாணை, அர­சாணை எண் 106, ஒரு அர­சா­ணையை அறி­வித்து, 8 முழ வேட்டி என்­பது 4 முழ வேட்­டி­யாக மாற்­றப்­பட்டு, புதிய ரக­மாக மாற்­றப்­பட்டு, அது சலவை செய்­யப்­பட்டு, வெள்­ளைக் நிறத்­தில் சலவை செய்­யப்­பட்டு வழங்­கப்­ப­டும் என்று ஒரு அறி­விப்பு வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அறி­விப்­பி­னால் மிகப் பெரிய பாதிப்பு அந்த தறி நெய்­யக்­கூ­டிய நெச­வா­ளி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என்ன பாதிப்பு என்று சொன்­னால் அமைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்கு போனதா என்று தெரி­ய­வில்லை. என்ன பாதிப்பு என்று சொன்­னால், இப்­போது கொடுத்­தி­ருக்­கின்ற அர­சா­ணைப்­ப­டி­யான வேட்­டி­களை ஏற்­கெ­னவே இருக்­கக்­கூ­டிய தறி­யில் உற்­பத்தி செய்ய முடி­யாது. அத­னு­டைய அளவு வித்­தி­யா­சம் 60 number நூல் இருப் ­பதை இவர்­கள் 40 number ஆக மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். 72 inch அச்சு என்­பதை, 68 inch ஆக மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். ஆக, அதை alteration செய்ய வேண்­டும், modify செய்ய வேண்­டும். அந்­தத் தறியை modify செய்­தால்­தான், இந்த அர­சா­ணைப்­ப­டி­யான வேட்­டியை அவர்­க­ளால் உற்­பத்தி செய்ய முடி­யும். ஏனென்­றால் உற்­பத்தி செய்ய முடி­ய­வில்லை. ஆக என்ன கார­ணம். யாரும், பய­னா­ளி­கள் யாரும் தாங்­க­ளாக முன்­வந்து எங்­க­ளுக்கு நான்கு முழம் வேட்­டி­யைக் கொடுங்­கள் என்று கேட்­க­வில்லை. எந்­தக் கருத்­துக் கூட்­ட­மும் நாம் நடத்­த­வில்லை. எந்த விவ­சாயி­ களுக்­கும் இதில், எந்த நெச­வா­ளர்­க­ளுக்­கும் இதில் எந்­தப் பாதிப்­பும் இல்லை. இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­ யில் 7 மாதங்­கள் கழித்து, இன்­னும் பொங்­க­லுக்கு 4 மாதங்­கள்­தான் இருக்­கின்­றன. இதற்­குள்­ளாக இத்­தனை வேட்டி, சேலை­க­ளை­யும்உற்­பத்தி செய்­தாக வேண்­டும். 7 மாதங்­கள் கழித்து ஒரு புதிய அர­சாணை வெளி­யி­டு­வ­த­னு­டைய நோக்­கம் என்ன என்­ப­து­தான் என்­னு­டைய கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அமைச்­சர் அவர்­கள் இங்கே குறிப்­பிட்­டார்­கள். தர­மான வேட்டி வழங்க வேண்­டு­மென்ற அடிப்­ப­டை­யில்­தான் இதனை மாற்­றி­யி­ருக்­கி­றோம் என்று சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான் தங்­கள் மூல­மாக அமைச்­சர் அவர்­களை கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், இந்த எட்டு முழம் வேட்­டிக்­கும், நான்குமுழம் வேட்­டிக்­கும், அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய, பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நூலின் தன்­மை­யைப் பார்க்­கின்­ற­போது, நெச­வா­ளர்­கள் என்ன சொல்­கி­றார்­கள் என்­றால், நான்கு முழம் வேட்டி அதை­விட தரம் குறை­வான வேட்டி, விலை குறை­வான மதிப்­புள்ள வேட்­டி­தான் இப்­போது அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்­கள் என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வாழ்­வா­தா­ரத்­தில் மண் அள்­ளிப் ­போ­டும் த.வெ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆகவே, தரம் குறை­வான வேட்­டியை, கூலி­யை­யும் குறை­வா­கக் கொடுத்து வாங்­கு­வ­தற்கு என்ன கார­ணம்? அது­தான் என்­னு­டைய கேள்வி. இரண்­டா­வ­தாக, தேக்­க­ம­டைந்த­ வற்­றை­யெல்­லாம் நாங்­கள் வாங்­கிக்­கொள்­கி­றோம் என்று அவர் சொன்­னார். ஏழு மாதங்­கள் கடந்­து­விட்­டது; இன்­னும் சுமார் 4 மாதங்­களே இருக்­கின்­றன. என்­னு­டைய கேள்வி என்­ன­வென்­றால், இந்த அர­சா­ணையை தற்­கா­லி­க­மாக நீங்­கள் இரத்து செய்­யுங்­கள். இரத்து செய்­து­விட்டு, ஏற்­கெ­னவே உற்­பத்­தி­யாணைகொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். 4 மாதங்­கள் வேலை ஆட்­கள் இருக்­கி­றார்­கள். மீண்­டும் ஓர் உற்­பத்­தி­யாணை கொடுத்து, இந்த எட்டு முழம் வேட்­டியை இந்த ஆண்­டிற்­கா­வது நடை­மு­றைப்­ப­டுத்­துங்­கள். தேக்­க­ம­டைந்த வேட்­டி­கள் அனைத்­தை­யும் நீங்­கள் வாங்க­ வில்­லை­யென்று சொன்­னால், அன்­றாட கூலி­க­ளான அவர்­கள் வட்­டிக்கு பணம் வாங்கி, நூல் வாங்கி, நெய்து இன்­றைக்கு வைத்­தி­ருக்­கி­றார்­கள். ஒரு நாளை க்கு ரூ.250, ரூ.300 தான் அவர்­க­ளுக்கு கூலி கிடைக்­கின்­றது. இதுவே, இன்­றைக்கு அவர்­க­ளுக்­குக் கேள்­விக்­கு­றி­யா­கின்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நோக்­கமே சிதைந்து­ போய்­வி­டும். எந்த நோக்­கத்­திற்­காக இந்­தத் திட்­டத்தை அன்­றைக்கு உரு­வாக்­கி­னார்­களோ, கைத்­தறி நெச­வா­ ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தில் மண் அள்ளி போ டக்­கூ­டிய அள­வில் இந்­தத் திட்­டம் சிதைந்து போய்­வி­டும். எனவே, இந்த ஆண்டு நீங்­கள் மறு­ப­ரி­சீ­லனை செய்து,இந்த அர­சா­ணையை இரத்து செய்­தால், இந்த ஓராண்டு மட்­டும் கொண்டு வந்­தால், உங்­க­ளுக்கு easy ஆக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு எஸ்.ஆஸ்­டின் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, செப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒருங்­கி­ணைந்த கோவை மாவட்ட முன்­னாள் செய­லா­ள­ரும், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் நினை­வில் வாழும் பெரி­ய­வர் பி.ஏ.சாமி­நா­தன் அவர்­க­ளின் மனை­வி­யும்,  புன்­செய்ப் புளி­யம்­பட்டி முன்­னாள் நகர் மன்­றத் தலை­வர் பி.எஸ்.அன்பு அவர்­க­ளின் தாயா­ரு­மான திரு­மதி சம்­பூ­ர­ணம் சாமி­நா­தன் அவர்­கள் நேற்று முன்தினம் (1.9.2026 – செவ்­வாய்க்கிழமை) மாலை இயற்­கை­யெய்­தி­னார் என்­ப­தினை அறி­விக்க வருந்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செய்­தி­ய­றிந்­த­தும் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தமது ஆழ்ந்த இரங்­கலை அன்­னா­ரின் குடும்­பத்­தா­ருக்கு தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>