<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 04 2026 03:56:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260904T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="04092026-VLR-06" position.sequence="06" ex-ref="04092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">தோழி மகளிர் விடுதிகள், பட்டாசு தொழிலாளர் பிள்ளைகளுக்கு கல்வி நிதி! தொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்டதால்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="87">முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றென்றும் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறார்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">35 இலட்சத்து 9 ஆயிரத்து 833 தொழிலாளர்களுக்கு  நலத்திட்டங்கள் கொடுத்த ஆட்சி ‘திராவிடமாடல்’ ஆட்சி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="C.V.Ganasan_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, செப். 4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சட்­டப்­பே­ர­வை­யில் தொழி­லா­ளர் மானி­யக் கோரிக்கை மீதான விவா­வத்­தில் முன்­னாள் அமைச்­சர் சி.வெ.கணே­சன் பேசு­கை­யில் தொழி­லா­ளர் பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்வு கண்­ட­தால் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­றென்­றும் மக்­கள் நெஞ்­சங்­க­ளில் நிலைத்­தி­ருக்­கி­றார் என்று பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, தங்­க­ளுக்கு எனது அன்­பான வணக்­கம். சமூக நீதிக்கு வித்­திட்ட பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­களை வணங்­கு­கி­றேன். பேர­றி­ஞர் பெருந்­தகை அறி­ஞர் அண்ணா அவர்­களை வணங்­கு­கி­றேன். பேர­வைத் தலை­வர் அவர்­களே, மே தினத்தை ஊதி­யத்­து­டன்­கூ­டிய விடு­மு­றை­யாக அறி­வித்­த­வர், நேப்­பி­யர் பூங்­கா­விற்கு மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்­டி­ய­வர், அங்கு மே தின நினை­வுச் சின்­னத்தை அமைத்துதொழி­லா­ளர்­கள் அஞ்­சலி செலுத்­தும் நிலையை உரு­வாக்­கி­ய­வர், ‘உடன் பிறப்பே’ என்ற ஒற்­றைச் சொல்­லில் ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டை­யும் தட்டி எழுப்­பிய சிற்பி, (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நவீன தமிழ்­நாட்டை உரு­வாக்­கி­ய­வர் முத்­த­மிழ் அறி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) பேர­வைத் தலை­வர் அவர்­களே, பொறுமை, நிதா­னம், சகிப்­புத் தன்மை, அய­ராத உழைப்பு, தீர்க்­க­மாக முடி­வெ­டுக்­கும் திறன், எதை­யும் தாங்­கும் இத­யம், எல்­லோ­ரி­டத்­தி­லும் அன்பு, கருணை, கடமை தவ­றாமை, எப்­போ­தும் உற்­சா­கத்­தோடு பணி­யாற்­றும் தன்மை என்ற நற்­பண்­பு­க­ளைத் தன்­னி­டத்­தே­கொண்டு திரா­விட மாடல் ஆட்­சியை கடந்த ஐந்­தாண்­டு­கள் சிறப்­பாக நடத்தி, தமிழ்­நாட்­டின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­திற்­கா­கக் கடு­மை­யாக உழைக்­கும் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மன­தா­ரப் பாராட்­டு­கி­றேன் என்று மாண்­பமை உச்ச நீதி­மன்ற நீதி­ய­ர­சர் ரமணா அவர்­க­ளால் பாராட்­டப் பெற்­ற­வர், திரா­விட மாடல் ஆட்சி நடத்­திய கழ­கத் தலை­வர், என் நெஞ்­சம் நிறைந்த ஆரு­யிர் அண்­ணன் அவர்­க­ளுக்கு எனது அன்­பான வணக்­கம். (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் நான் 41 ஆண்­டு­க­ளாக இருந்து வரு­கி­றேன். எனது அர­சி­யல் வானில் எனக்­குக் கலங்­கரை விளக்­க­மாக இருப்­ப­வர், இன்­னும் 50 ஆண்டு காலத்­திற்­குத் திரா­விட இயக்­கத்­தின் வெற்றி வர­லாற்றை எழு­த­யி­ருக்­கின்ற எங்­க­ளது ஈரோடு எரி­ம­லை­யாய் நடந்து வரும் இளை­ஞர், எங்­க­ளின் சின்­னக் கலை­ஞர், தந்­தை­யின் கட்­ட­ளை­க­ளைத் தலை­யில் ஏந்தி, தமிழ் மக்­க­ளின் நலனை மன­தில் ஏந்தி, ஏற்­றப் பொறுப்­பினை ஏற்­ற­வு­டன் செயல்­ப­டுத்தி வரும் எங்­கள் இளம் தலை­வர், என் நெஞ்­சம் நிறைந்த ஆரு­யிர் அண்­ணன், சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர், கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை (மேசை­யைத் தட்­டும் ஒலி) வணங்­கு­கி­றேன். முன்­னாள் அமைச்­சர், கழக முதன்­மைச் செய­லா­ளர் அண்­ணன்கே.என்.நேரு அவர்­க­ளுக்­கும், முன்­னாள்அமைச்­சர், எதிர்க்­கட்­சிக் கொறடா, எனது அர­சி­ய­லுக்கு எப்­போ­தும் உற்ற துணை­யாக இருக்­கின்ற அண்­ணன் எ.வ.வேலு அவர்­க­ளுக்­கும் எனது வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முன்­வ­ரி­சை­யில் அமர்ந்­தி­ருக்­கின்ற அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் எனது வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எனது வெற்­றிக்­காக எனது திட்­டக்­குடி தொகு­திக்கு இரண்டு முறை வருகை தந்து தேர்­தல் பிரச்­சா­ரம் செய்த எதிர்க்­கட்­சித் தலை­வர் அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எனது தொகு­திக்கு வருகை தந்த அண்­ணி­யார் தே.மு.தி.க. பொதுச் செய­லா­ளர் திரு­மதி பிரே­ம­லதா விஜ­ய­காந்த் அவர்­க­ளுக்­கும், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் அண்­ணன் தொல். திரு­மா­வ­ள­வன், எம்.பி. அவர்­க­ளுக்­கும் வணக்­கம். எனது வெற்­றிக்­காக உழைத்த ஒன்­றிய கழக, நகர கழக, பேரூர் கழக, கிளைக் கழ­கச் செய­லா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள், தொகு­திப் பொறுப்­பா­ளர்­கள் மற்­றும் கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­கி­கள் அனை­வ­ருக்­கும் எனது வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">திட்­டக்­குழு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்றி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நாடா­ளு­மன்­றத்­திற்கு ஒரு முறை­யும், மாவட்ட பஞ்­சா­யத்­துக் குழுத் தலை­வர் பொறுப்­பிற்கு இரண்டு முறை­யும், இந்த வர­லாற்­றுச் சிறப்பு மிக்க சட்­ட­மன்­றத்­திற்கு ஐந்து முறை­யும் எனக்கு வாக்­க­ளித்து, என்னை வெற்­றி­பெ­றச் செய்த எனது திட்­டக்­குடிவாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், பொது மக்­க­ளுக்­கும் எனது நன்­றி­யைப் பணி­வு­டன் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இத்­த­கைய வாய்ப்­பு­களை பல­முறை எனக்கு வழங்­கி­யும், தொழி­லா­ளர் நலன் மற்­றும் திறன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் பொறுப்பை எனக்கு வழங்­கிய கழ­கத் தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­க­ளுக்­கும், எதிர்க்­கட்­சித் தலை­வர் அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் மீண்­டும் மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். பத்­தி­ரிகை, ஊட­கத் துறை­யின் அனைத்து சகோ­த­ரர்­க­ளுக்­கும் அன்­பான வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கடந்த ஐந்­தாண்­டுக் காலத்­தில் தொழி­லா­ளர் நலன், தொழி­லா­ளர்­கள் பாது­காப்பு, அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளுக்­கான விரி­வான சமூ­கப் பாது­காப்­புத் திட்­டங்­கள் வழங்­கு­தல், கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரத்தை உயர்த்­து­தல், நல வாரி­யங்­களை உரு­வாக்­கு­தல், தொழில் அமை­தியை உறுதி செய்­தல், இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை உரு­வாக்­கு­தல், தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­களை நவீ­னப்­ப­டுத்­து­தல், தொழி­ல­கப் பாது­காப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்­து­தல் என பல்­வேறு சாத­னை­க­ளைப் படைத்த அர­சு­தான், திரா­விட மாடல் அரசு என்­பதை மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தொழி­லா­ளர் நலன் பாது­காக்­கப்­பட்­டது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஒரு நாட்­டி­னு­டைய பொரு­ளா­தா­ரம் உயர வேண்­டு­மென்­றால், ஓர் அர­சில், தொழி­லா­ளர்­கள் நல­னும், நல்ல அமை­தி­யான சூழ­லும் இருந்­தால்­தான், அந்த நாட்­டில், அந்த அர­சாங்­கத்­தில் தொழில் வளர்ச்சி சிறப்­பா­கப் பெரு­கும். அந்த அடிப்­ப­டை­யில், கடந்த ஐந்­தாண்­டுக் கால­மாக தமிழ்­நாடு ஒரு சிறப்­பான அமை­தி­யான மாநி­ல­மாக இருந்த கார­ணத்­தி­னா­லும், தொழி­லா­ளர்­கள் நலன் பாது­காக்­கப்­பட்ட கார­ணத்­தி­னா­லும்­தான் 11.19 சத­வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை அடைய முடிந்­தது என்று சொன்­னால், அதற்கு திரா­விட மாடல் நாய­கர் அண்­ணன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்­தான் கார­ணம் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு அமைச்­சர்­கள் அறி­விப்­பு­க­ளை­யெல்­லாம் அறி­வித்­தார்­கள். அதை­யும் நான் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தேன். ஆனால், கடந்த ஐந்­தாண்­டுக் காலத்­தில், தொழி­லா­ளர் நலத் துறை மூல­மாக தொழி­லா­ளர்­க­ளுக்கு என்­ன­வெல்­லாம் நாங்­கள் செய்­தி­ருக்­கி­றோம் என்­பதை சுருக்­க­மா­கச் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கி­றேன். பல்­வேறு தொழி­லா­ளர்­கள் இருந்­தா­லும், குறிப்­பாக பட்­டா­சுத் தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சி­னை­தான் எப்­போ­துமே பொது­வான பிரச்­சினை. அவர்­கள் ஓர்ஆபத்­தான சூழ­லில் பணி­யாற்­றக்­கூ­டிய ஒரு தொழில் அது. தமிழ்­நாட்­டில் 1,500–க்கும் அதி­க­மான பட்­டாசு ஆலை­கள் இயங்கி வரு­கின்­றன. அதில் குறிப்­பாக, விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் மட்­டும் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பட்­டாசு ஆலை­கள் இயங்கி வரு­கின்­றன. அவற்­றில் எப்­போது விபத்­து­கள் ஏற்­ப­டு­மென்­றால், மார்ச், ஏப்­ரல், மே மாதங்­க­ளில்­தான் ஏற்­ப­டும். அது வெயில் கால­மாக இருக்­கிற கார­ணத்­தால், ஆலை­க­ளில் இர­சா­ய­னங்­கள் கலக்­கப்­ப­டும்­போது ஏற்­ப­டும் உராய்­வு­தான் விபத்­து­கள் ஏற்­பட கார­ண­மாக அமைந்­து­வி­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அவ்­வாறு இர­சா­ய­னங்­களை கலப்­ப­தற்கு பெயர் mixing; வெடிக்­குள் அதை நிரப்­பு­வ­தற்­குப் பெயர் filling; அவ்­வாறு நிரப்­பிய பிறகு அதை மூடு­வ­தற்­குப் பெயர் finishing; அது முடிந்த பிறகு packing. இவ்­வாறு, mixing, filling, finishing and packing இவை­யெல்­லாம் முடிந்த பிற­கு­தான் dispatching. இந்த நிலை­க­ளில்­தான் அங்கு பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆகவே, இப்­ப­டிப்­பட்ட பணி­க­ளைச் செய்­கின்ற ஒவ்­வொரு தொழி­லா­ளி­யும், தனது உயி­ரைப் பண­யம் வைத்­துத்­தான் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த ஆலை­க­ளில் அடிக்­கடி விபத்­து­கள் ஏற்­ப­டு­கின்ற கார­ணத்­தி­னால், முத­ல­மைச்­ச­ராக இருந்த எங்­கள் அண்­ணன் தள­பதி அவர்­கள் எங்­க­ளை­யெல்­லாம் அழைத்து, ‘கணே­சன், இவ்­வாறு அடிக்­கடி விபத்­து­கள் ஏற்­ப­டும்­போது, அந்­தக் குடும்­பத்­திற்கு 4 இலட்­சம் நிதி­யு­தவி கொடுப்­ப­தால் மட்­டும் அந்­தக் குடும்­பத்­தின் கண்­ணீ­ரைத் துடைத்­து­விட முடி­யாது; ஆகவே, நீங்­க­ளெல்­லாம் அதைத் தடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’என்­றார். நான், வரு­வாய்த் துறை அமைச்­ச­ராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். இரா­மச்­சந்­தி­ரன் அவர்­கள், தொழில் துறை அமைச்­ச­ராக இருந்த தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் ஆகி­யோர் அங்கு சென்று கருத்­த­ரங்கு நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த விபத்­து­களை எப்­ப­டிக் குறைக்­க­லாம் என்­பது குறித்த கருத்­த­ரங்கு நடத்­தி­ய­போது, பல்­வேறு ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்­டன. ஆனால், நான் அந்­தக் கருத்­த­ரங்­கில் பேசி­ய­போது, ‘1,500–க்கும் மேற்­பட்ட ஆலை­கள் இருந்­தா­லும், 500–க்கும் மேற்­பட்ட ஆலை­கள் விபத்­து­களே இல்­லா­மல் இயங்­கு­கின்­றன. அந்­தத் தொழிற்­சா­லை­க­ளின் உரி­மை­யா­ளர்­களை நீங்­கள் சந்­தித்து, அவர்­கள் எவ்­வாறு ஆலை­களை நடத்­து­கி­றார்­கள் என்று கேட்­ட­றிந்து, அந்த வழி­மு­றை­க­ளு­டன் நீங்­க­ளும் நடத்த வேண்­டும்’ என்று கூறி­னேன். ஆனா­லும், முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் தள­பதி அவர்­கள், உட­ன­டி­யாக விரு­து­ந­கர் மாவட்­டத்­திற்­குச் சென்று ஆய்வு மேற்­கொள்ள வேண்­டு­மென்று முடி­வெ­டுத்து, அந்த மாவட்­டத்­திற்கு வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">பட்­டாசு தொழி­லா­ளரை சந்­தித்த மு.க.ஸ்டாலின்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அப்­போது நானும், அமைச்­சர் அண்­ணன் K.K.S.S.R. இரா­மச்­சந்­தி­ரன் அவர்­க­ளும், அண்­ணன் தங்­கம் தென்­ன­ரசு ஆகி­யோ­ரும் பார்த்­தோம். அனைத்து இடங்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆய்வு செய்த பிறகு, அங்கு ஒரு பெண் தொழி­லா­ளி­யைச் சந்­தித்­துப் பேசி­னார். ‘என்­னம்மா உங்­க­ளுக்கு குறை இருக்­கி­றது, என்ன வேண்­டும்’ என்று கேட்­டார். ‘ஐயா இது­வ­ரை­யி­லும், பட்­டா­சுத் தொழிற்­சா­லை­யில் நாங்­கள் உயி­ரைப் பய­ணம் வைத்து வேலை செய்து கொண்­டி­ருக்­கி­றோம். எங்­க­ளைப் பார்க்க வந்த முதல் முத­ல­மைச்­சர் நீங்­கள்­தான், அதற்­காக நான் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்’ என்று அந்த அம்­மை­யார் சொன்­னார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதைச் சொன்­ன­வு­ட­னேயே முத­ல­மைச்­சர் அவர்­கள், ஈரம் கசிந்த கண்­க­ளோடு அங்­கி­ருந்து புறப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என்ன வேண்­டு­மென்று கேட்­ட­வு­ட­னேயே, ‘ஐயா இந்­தத் தொழில் செய்­யும்­போது நாங்­கள் ஒரு­வேளை இறந்­து­விட்­டால், எங்­க­ளுக்­குப் பின்­னால் எங்­க­ளு­டைய குழந்­தை­கள் இந்­தத் தொழி­லைச் செய்­யக் கூடாது. கல்­வி­யி­லும், வேலை­வாய்ப்­பி­லும் அவர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து அவர்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும்’ என்று அந்த அம்­மை­யார் சொன்­னார்­கள். முத­ல­மைச்­சர் அங்­கி­ருந்து புறப்­பட்டு, ஓய்­வில்­லத்­திற்கு வந்­த­பி­றகு, அன்று மாலையே அரசு அதி­கா­ரி­க­ளை­யெல்­லாம் அழைத்­துப் பேசி, பட்­டா­சுத் தொழிற்­சா­லை­யில் பணி­யாற்­று­கின்ற தொழி­லா­ளர்­கள், தாயும், தந்­தை­யும் இறந்­து­விட்­டால், அந்­தக் குழந்­தை­க­ளின் கல்­விச் செலவை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்­ளும் என்ற உத்­த­ர­வைப் பிறப்­பித்த முத­ல­மைச்­சர் எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்ல, 18 வயது வரை­யில் அவர்­க­ளு­டைய பரா­ம­ரிப்­புச் செல­வை­யும் அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்­ளும் என்று உத்­த­ர­விட்டு,        அன்­றை­ய­தி­னமே அர­சாணை பிறப்­பித்து, 5 கோடி ரூபாயை அந்த மாவட்ட ஆட்­சித் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்த முத­ல­மைச்­சர் எங்­க­ளு­டைய முத­ல­ மைச்­சர் அவர்­கள் என்­பதை இந்த நேரத்­தில் நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பொது­வாக நான் ஆட்­சிப் பொறுப்­பேற்று, இப்­போது இளை­ஞர்­க­ளெல்­லாம் வந்­தி­ருப்­பது போன்று, நாங்­க­ளும் முதல் முறை­யாக அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று வந்த கார­ணத்­தி­னால், இப்­ப­டித்­தான் நாங்­க­ளும், சுறு­சு­றுப்­   பாக, துரு­து­ரு­வெ­னத்­தான் ஓடு­வோம். நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் என்னை அழைத்து, இந்­தத் தொழி­லா­ளர் துறை­யில் எந்­தெந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு நலத் திட்­டங்­கள் கொடுக்­கா­மல் இருக்­கி­றது உட­ன­டி­யாக அதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று சொன்ன கார­ணத்­தி­னால், மாநில அள­வில், மாவட்ட அள­வில், மண்­டல அள­வில் இருக்­கின்ற அதி­கா­ரி­களை எல்­லாம் அழைத்து, ஓர் ஆய்­வுக் கூட்­டம் நடத்­தி­னோம். நடத்­தும்­போது, 1 இலட்­சத்து 7 ஆயி­ரம் தொழி­லா­ளர்­க­ளுக்­குக் கல்வி, திரு­ம­ணம், விபத்து, தனி நபர் ஓய்­வூ­தி­யம், குடும்ப ஓய்­வூ­தி­யம் போன்­றவை வழங்­கப்­ப­டா­மல் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. கண்­ட­றிந்து, உட­ன­டி­யாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய தலை­மை­யில், YMCA மைதா­னத்­தில், 80 நாட்­க­ளுக்­குள்­ளாக 1 இலட்­சத்து 7ஆயி­ரம்  பேரில் 50 ஆயி­ரம் தொழி­லாளர்­க­ளுக்கு ஒரே நாளில் நலத் திட்ட உத­வி­களை வழங்­கிய அரசு அண்­ணன் தள­பதி அவர்­க­ளு­டைய  அரசு என்­பதை  நான்  தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதன்­பி­றகு, இரண்டு மாதங்­கள் கழித்து தலை­மைச் செய­ல­கத்­தில், முத­ல­மைச்­ச­ரு­டைய தலை­மை­யில், மீதம் இருக்­கின்ற 57 ஆயி­ரம் தொழி­லா­ளர்­­களுக்கு அந்த நலத் திட்ட உத­வி­க­ளை­யெல்­லாம் வழங்­கிய அர­சு­தான் எங்­க­ளு­டைய அரசு என்­பதை நான்தெரி­ வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதன்­பி­றகு, ஊட்­டி­யில், 7–2–2024 அன்று  நண்­ப­கல்  12  மணி­ய­ள­வில்   கட்­டு­மா­னப்  பணி­யின்­போது  விபத்து ஏற்­பட்டு, மண் சரிந்து, ராதா, சங்­கீதா, திரு­மதி சுதா, பாக்­கி­யம், முத்து மீனாட்சி ஆகி­யோர் மர­ண­ம­டைந்­தார்­கள். வழக்­க­மாக இது­போன்ற விபத்து நடந்­தால், எவ்­வ­ளவு நாட்­கள் கழித்­துப் பணம் கொடுப்­பார்­கள்    என்­றால், அதி­கா­ரி­களை அழைத்­துக் கேட்­டேன், எப்­போது பணம் கொடுக்­க­லாம் என்று கேட்­ட­போது, ‘sir, வேக­மா­கக் கொடுத்­தால் 3 மாதங்­க­ளில் கொடுக்­க­லாம். கொஞ்­சம் அவ­கா­சம் எடுத்து கொடுத்­தால், 6 மாதங்­க­ளில் கொடுக்­க­லாம்’ என்று சொன்­னார்­கள். நான் அதைக் கேட்டு, உட­ன­டி­யாக முத­ல­மைச்­சர் அவர்­கள் என்­னைத் தொலை­பே­சி­யில் அழைத்து, உட­ன­டி­யாக நீ ஊட்டி செல்ல வேண்­டு­மென்று சொன்­னார்­கள். விமா­னம் மூல­மா­கச் சென்று, கோயம்­புத்­தூ­ரில் இறங்கி, கோயம்­புத்­தூ­ரி­லி­ருந்து, அப்­போது அங்கு பெண் ஆட்­சி­யர் இருந்­தார்­கள். அவர்­க­ளுக்கு phone செய்­தேன். ‘அம்மா நான் வந்து கொண்­டி­ருக்­கி­றேன், தாம­தப்­ப­டுத்­தக் கூடாது, உட­ன­டி­யாக அந்­தத் தொழி­லா­ளர்­க­ளுக்­கெல்­லாம் நிவா­ர­ணத் தொகை வழங்க வேண்­டும்’ என்று சொன்­னேன். இங்­கி­ருந்து சென்­ற­வு­டனே, 30 மணி நேரத்­திற்­குள்­ளாக அந்த 5 தொழி­லா­ளி­க­ளுக்­கும், நிவா­ர­ணத் தொகையை வழங்­கிய அரசு தள­ப­தி­யி­னு­டைய அரசு என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">உதா­ர­ணத்­திற்கு ஒன்­றி­ரண்டு விஷ­யங்­க­ளைச் சொல்­கி­றேன். அதே­போன்று கரூ­ரில்septic tankவேலை         செய்­யும்­போது ராஜேஷ் குமார் மற்­றும் சிவ­கு­மார் ஆகிய இரண்டு பேர் இறந்­து­விட்­டார்­கள்.  உட­ன­டி­யாக அன்­றைக்கு கரூர் மாவட்­டத்­தில் ஆட்­சி­ய­ராக இருந்த Dr. T. Prabhushankar, I.A.S. அவர்­க­ளுக்கு phone செய்­தேன். ‘Sir, இரண்டு பேர் இறந்­து­விட்­டார்­கள், உட­ன­டி­யா­கக் கொடுக்க வேண்­டும். மாதக் கணக்­கில் தாம­தப்­ப­டுத்­தக் கூடாது’ என்று சொன்­னேன். ‘Sir, அனைத்து சான்­று­க­ளும் கிடைத்­து­விட்­டால்,  உட­ன­டி­யா­கக் கொடுத்­து­வி­ட­லாம்’ என்று சொன்­னார். நான் உடனே கேட்­டேன், ‘Sir, Collector control–லில் தான் கோட்­டாட்­சி­யர், வட்­டாட்­சி­யர், வரு­வாய் ஆட்­சி­யர், VAO உள்­ளிட்ட அனை­வ­ரும் உங்­கள் control–லில் தான் இருக்­கி­றார்­கள். உட­ன­டி­யாக இதற்கு தேவை­யான அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்து உட­ன­டி­யா­கக் கொடுங்­கள். நாங்­கள் வரு­வ­தற்கு தாம­த­மா­னா­லும் கொடுத்­து­வி­டுங்­கள் என்று சொன்­னோம். அவர் அனைத்து சான்­றி­தழ்­க­ளை­யும் பெற்­றுக் கொண்டு, 30 மணி நேரத்­திற்­குள்­ளாக நிவா­ர­ணத் தொகை வழங்­கிய அரசு எங்­க­ளு­டைய அரசு என்­பதை இந்த நேரத்­தில் நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போன்று, நான் அமைச்­ச­ராக பொறுப்­பேற்­ற­வு­டனே, Foxconn நிறு­வ­னத்­தில் ஒரு போராட்­டம் நடந்­தது. முத­ல­மைச்­சர் என்னை அழைத்து ‘அந்த நிறு­வ­னத்­தில் போராட்­டம் நடக்­கி­றது உடனே செல்­லுங்­கள்’ என்று சொன்­னார். நான் இங்­கி­ருந்து அந்த நிறு­வ­னத்­திற்­குச் சென்­றேன். ஏனெ­னில் நானும் புதி­தாக அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­ற­தால், என்ன நடக்­கி­றது என்று தெரி­யாது. அங்கு சென்­ற­வு­டனே, 5 ஆயி­ரம் பெண் தொழி­லா­ளர்­கள் சாலை­யில் அமர்ந்து மறி­யல் செய்து கொண்­டி­ருந்­தார்­கள். நான் அங்கு சென்று இறங்­கி­ய­வு­டனே, அந்­தத் தொழி­லா­ளர்­க­ளு­டன் நானும் சேர்ந்து தரை­யில் உட்­கார்ந்து கொண்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சற்று நேரம் அமர்ந்த பிறகு எழுந்து, எதற்­காக நீங்­கள் போராட்­டம் செய்­கி­றீர்­கள் என்று அவர்­க­ளைக் கேட்­டேன். அவர்­கள், ‘Sir இங்கே சரி­யான விடுதி வசதி இல்லை, கழிப்­பறை வசதி இல்லை, தண்­ணீர் வசதி இல்லை, போதிய பாது­காப்பு வசதி இல்லை, உணவு தர­மாக இல்லை’ என்று சொன்­னார்­கள். உடனே அங்­கி­ருந்த Collector–ஐ அழைத்­துக் கொண்டு, அந்த இடத்­தி­ லி­ருந்த அனைத்­துத் தொழி­லா­ளர்­க­ளை­யும் அழைத்­துக்­கொண்டு, அந்த இடத்­திற்­குச் சென்று ஆய்வு செய்து பார்த்­து­ விட்டு, அவர்­களை சமா­தா­னம் செய்­தோம். அந்த வேலை நிறுத்­தம் தொடர்ந்து 2 நாட்­கள் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">மக­ளிர் தங்­கும் தோழி விடுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆனா­லும், அவர்­களை சமா­தா­னம் செய்து, அவர்­க­ளுக்கு உத­வி­செய்து, அப்­போது உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்­டிய பணி­களை எல்­லாம் நிறை­வேற்­றி­னோம். இப்­படி வேலை நிறுத்­தம் நடந்த கார­ணத்­தி­னால்­தான், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் தள­பதி அவர்­கள் பெண்­க­ளுக்­காக ‘தோழி மக­ளிர் விடுதி’ என்­னும் விடு­தி­களை, சுமார் 706 கோடி ரூபாய் செல­வில், (மேசை­யைத் தட்­டும்ஒலி) 18,000 பெண்­கள் தங்­கு­கின்ற வகை­யில், விடு­தி­க­ளைக் கட்­டித் தந்த அர­சாங்­கம் எங்­க­ளு­டைய அர­சாங்­கம் என்­பதை இந்த நேரத்­தில் நான் மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இப்­படி நிறைய விஷ­யங்­க­ளைச் சொல்­லிக்­கொண்டே போக முடி­யும். அத­னால் தொழி­லா­ளர்­க­ளுக்­கெல்­லாம் எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்­லா­மல் உட­னுக்­கு­டன் தீர்த்த அர­சாங்­கம் எங்­கள் அர­சாங்­கம். இப்­ப­டிப்­பட்ட அர­சாங்­கம் நடந்­த­போது, நாங்­கள் என்­னென்ன உத­வி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம் என்­பதை நான் சொல்ல விரும்­பு­கி­றேன். அதா­வது, திரு­வள்­ளூர், கிருஷ்­ண­கிரி, விழுப்­பு­ரம், இரா­ம­நா­த­பு­ரம், திருப்­பூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் 40.87 கோடி ரூபாய் செல­வில் அலு­வ­ல­கங்­கள் கட்­டிக்­கொ­டுத்­தோம். சென்னை, அண்ணா நக­ரில் தொழி­லா­ளர் நல ஆணை­ய­ரக அலு­வ­ல­கத்­தைக் கட்­டி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரா­விட மாடல் ஆட்­சி­யில் 7–5–2021 முதல் 31–10–2025 வரை­யான கால­கட்­டத்­தில், அமைப்­பு­சாரா தொழி­லா­ளர் நல வாரி­யங்­க­ளில் 35,09,833 நபர்­களை நாங்­கள் பதிவு செய்­துள்­ளோம். அவர்­க­ளுக்கு 3,134.61 கோடி ரூபாய் அள­வில் பணப் பலன்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றோம். இந்த 5 வரு­டங்­க­ளில் மட்­டும் 35 இலட்­சம் நபர்­க­ளுக்கு மேலா­கப் பதிவு செய்­தி­ருக்­கி­றோம். தலை­வர் கலை­ஞர் அவர்­கள் முதல்­வ­ராக இருந்­த­போ­து­தான், 1996 மற்­றும் 2006 ஆம் ஆண்­டு­க­ளில், 15–க்கு மேற்­பட்ட நல வாரி­யங்­களை முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் கொண்­டு­வந்­தார் என்­பதை நான் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­க­ளு­டைய தலை­வர் முதல்­வ­ராக ஆட்­சி­யில் இருந்­த­போது, உப்­ப­ளத் தொழி­லா­ளர்­கள் நல வாரி­யம், இணை­யம் சார்ந்த Gig தொழி­லா­ளர் நல வாரி­யம் ஆகி­யவை உரு­வாக்­கப்­பட்­டன. பெண்­கள் மற்­றும் திரு­நங்கை ஓட்­டு­நர்­க­ளுக்கு,  driver ஆக   இருக்­கும்  பெண்­க­ளுக்கு, auto வாங்­கு­வ­தற்கு ஒரு      இலட்­சம் ரூபாயை முதன்­மு­த­லில் மானி­ய­மா­கக் கொடுத்த அரசு, எங்­க­ளு­டைய அரசு என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத்தட்­டும் ஒலி) (மணி­ய­டிக்­கப்­பெற்­றது.)  பதிவு பெற்ற. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் விபத்­தில், பணி­யி­டத்­தில் மர­ணம் அடைந்­தால், நிவா­ர­ணத் தொகை 5 இலட்­சம் ரூபா­யி­லி­ருந்து 8 இலட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டது. கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் விபத்­தில் உயி­ரி­ழந்­தால், ஒரு இலட்­சம் ரூபா­யி­லி­ருந்து உயர்த்தி இரண்டு இலட்­ச­மா­கக் கொடுத்­தோம். உட­லு­ழைப்­புத் தொழி­லாளி இறந்­து­விட்­டால், நிவா­ர­ணத் தொகை ஒரு இலட்­சம் ரூபா­யி­லி­ருந்து ஒன்றே கால் இலட்­ச­மாக உயர்த்­தப்­பட்­டது. இது­வ­ரை­யில் இல்­லாத ஒரு திட்­ட­மாக, கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் பணி­யி­டத்­தில் விபத்­தில் இறந்­து­விட்­டால், அந்த உட­லைக் கொண்டு செல்­வ­தற்கு, அதா­வது அம­ரர் ஊர்­தியோ அல்­லது rail மூல­மா­கவோ, வெளி மாநி­லத் தொழி­லா­ளி­யாக இருந்­தால் அவ­ரு­டைய சொந்த ஊருக்­குக்  கொண்டு  செல்­வ­தற்கு, விமா­னத்­தில் கொண்டு செல்­வ­தற்கு  ஒரு இலட்­சம் ரூபாய் வழங்­கு­கின்ற              திட்­டத்தை நிறை­வேற்­றிய அர­சாங்­கம் எங்­க­ளு­டைய அர­சாங்­கம் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தொழி­லா­ளர் குழந்­தை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">படிக்க நிதி உதவி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தொழி­லா­ளர்­க­ளு­டைய குழந்­தை­கள், தேசிய அள­வில் விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் பங்கு பெற்­றால் 25,000 ரூபாய், பன்­னாட்டு அள­வில் பங்கு பெற்­றால் 30,000 ரூபாய் வழங்­கு­கின்ற திட்­டத்­தைக் கொண்­டு­வந்­தோம். அது­மட்­டு­மல்ல, கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­க­ளு­டைய குழந்­தை­கள் MBBS படிப்­ப­தாக இருந்­தால், அவர்­க­ளுக்கு 50,000 ரூபாய் வழங்­கு­கின்ற திட்­டத்­தைக் கொண்­டு­வந்­தோம். தொழி­லா­ளர்­க­ளின் ஓய்­வூ­தி­யத்தை 1,000 ரூபா­யி­லி­ருந்து 1,200 ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டது எங்­க­ளு­டைய ஆட்­சி­ யில்­தான். அதே­போன்று, இணை­யம் சார்ந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு, Gig தொழி­லா­ளர்­கள் 2,000 நபர்­க­ளுக்கு electric scooter வாங்­கு­வ­தற்கு 20,000 ரூபாய் மானி­யம் வழங்­கப்­பட்­டது எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் என்­ப­தைத்தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­க­ளு­டைய ஆட்­சி­யில், கொத்­த­டி­மைத் தொழி­லா­ளர்­கள் மற்­றும் குழந்­தைத் தொழி­லா­ளர்­கள் ஆகி­யோர் மீட்­கப்­பட்­ட­னர் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றன். தொழி­லா­ளர்­க­ளின் குழந்­தை­கள் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிப்­ப­தற்கு 1,000 ரூபாய் வழங்­கும் திட்­டத்­தினை முதன்­மு­த­லில் அறி­மு­கப்­ப­டுத்­திய ஆட்சி எங்­க­ளு­டைய ஆட்சி. 10 ஆம் வகுப்பு பயி­லும் மாண­வர்­க­ளுக்கு 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,400 ரூபா­யாக  உயர்த்தி வழங்­கப்­பட்­டது. 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ITI, Polytechnic படிக்­கும் மாண­வர்­க­ளுக்கு 1,500 ரூபா­யி­லி­ருந்து 3,000 ரூபா­யாக உயர்த்தி   வழங்­கப்­பட்­டது.   பட்­டப்­ப­டிப்பு படிக்­கின்ற மாண­வர்­க­ளுக்கு 1,500 ரூபா­யி­லி­ருந்து 4,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அமைப்­பு­சாரா ஓட்­டு­நர்­கள் வாரி­யத்­தில் விபத்­தில் மர­ணம் அடைந்­தால், ஒரு இலட்­சம் ரூபா­யி­லி­ருந்து 2 இலட்­சம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­பட்­டது. அமைப்­பு­சாரா ஓட்­டு­நர்­கள் வாரி­யத்­தில், ஓட்­டு­நர்­கள் இயற்கை மர­ணம் அடைந்­தால் 20,000 ரூபா­யி­லி­ருந்து 50,000 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­பட்­டது. கட்­டு­மா­னத் தொழில்­க­ளில் பணி­யாற்­று­கின்ற தொழி­லா­ளர்­க­ளின் திரு­ம­ணத்­திற்­கான உத­வித்­தொ­கையை 10,000 ரூபா­யி­லி­ருந்து 20,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுத்­தி­ருக்­கி­றோம். மகப்­பேறு திட்­டத்­திற்கு 6,000 ரூபா­யி­ லி­ருந்து, . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்­லா­மல், படித்த இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தற்­காக, எங்­க­ளு­டைய முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள்—­அ­தா­வது, தனி­யார்—­அ­தா­வது, Government–ல் வேலை கொடுப்­பது என்­பது வேறு, Group I, Group II, Group III, Group IV உள்­ளிட்ட TNPSC தேர்­வு­கள்­மூ­லம் வேலை­களை நாம் கொடுக்­கி­றோம். ஆனால், அது­மட்­டு­மல்­லா­மல், தனி­யார் தொழில் நிறு­வ­னங்­க­ளு­டன் வேலை வாய்ப்பு முகாமை நடத்த வேண்­டு­மென்று, எங்­க­ளு­டைய முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்ட கார­ணத்­தி­னால், முதன்­மு­த­லில் 349 வேலை வாய்ப்பு முகாம்­களை மொத்­த­மாக நடத்தி, சற்­றே­றக்­கு­றைய 2 இலட்­சத்து 78 ஆயி­ரத்து 619 இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை பெற்­றுத் தந்­தி­ருக்­கி­றோம் என்­பதை நான் மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">50 ஆயி­ரம் நபர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு ஆணை­களை, முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­களே வழங்­கி­னார்­கள். அது எங்கு என்­றால், சென்னை, Crescent college–ல் நடை­பெற்ற விழா­வில், அந்த ஒரு வேலை­வாய்ப்பு முகா­மில் மட்­டும் கலந்து கொண்ட இளை­ஞர்­க­ளின் எண்­ணிக்கை 72 ஆயி­ரம். அந்த வேலை வாய்ப்பு முகா­மில் 7 ஆயி­ரத்து 800 நபர்­க­ளுக்கு வேலை கொடுக்­கப்­பட்­டது. அதற்­குப் பிறகு, 100–வது வேலை­வாய்ப்பு முகாம் சென்­னை­யில் இருக்­கக்­கூ­டிய The New College–ல் நடந்­தது. அதில் ஒரு இலட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ITI–ஐப் பொறுத்­த­வ­ரை­யி­லும், ஏற்­கெ­னவே, கடந்த, சுதந்­தி­ரம் சுதந்­தி­ரம் அடைந்து 75 ஆண்­டு­கள் ஆகிய இந்த நாட்­டில், மொத்­தம் இருந்த ITI–களின் எண்­ணிக்கை 91. நாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­தற்­குப் பிறகு, அந்த 5 ஆண்டு காலங்­க­ளில் கொண்டு வரப்­பட்ட ITI–களின் எண்­ணிக்கை 41. கிட்­டத்­தட்ட 290 கோடி ரூபாய்க்­கு­மேல் இதற்கு ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றோம். அந்த ITI–ல் படித்த மொத்­தம்—­அ­தில் மிகப்­பெ­ரிய சிறப்பு என்­ன­வென்­றால், எங்­க­ளு­டைய முன்­னாள் முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள், Tata Technologies நிறு­வ­னத்­ து­டன் ஒரு உடன்­பாடு செய்து 2,877.43 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்து, உல­கத் தரத்­தி­லான கட்­டு­மா­னத்தை உரு­வாக்கி, தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்ல, இந்­தி­யா­வில், வெளி­நா­டு­க­ளில் வேலை செய்­யக்­கூ­டிய… ஆகவே, அவ்­வாறு சிறப்­பாக செயல்­பட்ட ஆட்சி எங்­க­ளு­டைய ஆட்சி என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொண்டு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">1,724 நாட்­க­ளில் 15,117 கோப்­பு­க­ளில் 
கையெ­ழுத்­திட்­டார் எங்­கள் முதல்­வர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நிறை­வாக ஒரு ஆட்சி பொற்­கால ஆட்சி என்­றால், அனைத்­துத் துறை­க­ளி­லும் வளர்ச்சி பெற்­றி­ருப்­பதே ஆகும். ஒரு ஆட்சி பொற்­கால ஆட்சி என்­றால், அனைத்­துத் துறை­க­ளி­லும் வளர்ச்சி பெற்­றி­ருப்­பதே! திரா­விட மாடல் ஆட்சி நடத்­திய எங்­கள் தலை­வர், தள­பதி அவர்­கள், முன்­னாள் முதல்­வ­ராக இருந்த காலத்­தில் 1,724 நாட்­க­ளில் 15,117 அரசு கோப்­பு­க­ளில் கையொப்­ப­மிட்டு இருக்­கி­றார்­கள் என்ற மகிழ்ச்­சி­யான செய்­தியை நான் தெரி­விக்க விரும்­பு­கி­றேன். 8,685 அரசு நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டி­ருக்­கி­றார். 173 முறை மாவட்­டங்­க­ளுக்கு சுற்­றுப் பய­ணம் செய்து அர­சுப் பணி­களை செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். இவ்­வாறு மக்­க­ளுக்­காக அய­ராது உழைத்த எங்­க­ளு­டைய முன்­னாள் முதல்­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளு­டைய பணி­கள், மக்­கள் நெஞ்­சங்­க­ளில் என்­றும் நிலைத்­தி­ருக்­கும் என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொண்டு, உங்­கள் அனை­வ­ருக்­கும் நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அந்த மாவட்­டத்­தில்­தான் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பட்­டா­சுத் தொழிற்­சா­லை­கள் இருக்­கின்­றன. நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் K.K.S.S.R. இரா­மச்­சந்­தி­ரன் அவர்­க­ளும், நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளும் மிகத் தெளி­வா­கச் சொன்­னார்­கள், அவர்­க­ளுக்­கும் தெரி­யும். இப்­போ­தி­ருக்­கிற அமைச்­சர்­க­ளைப்­போல நாங்­க­ளும் ஆய்வு செய்து நூற்­றுக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களை suspend செய்துவைத்­தி­ருந்­தோம். அவை இயங்­காத வகை­யில் suspend செய்து வைத்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய அண்­ணன் அவர்­கள் அந்த மாவட்­டத்­தைச் சார்ந்­த­வர் என்­ப­தால், அப்­போது அங்கு இருக்­கக்­கூ­டிய association–ஐச் சேர்ந்­த­வர்­க­ளெல்­லாம் சென்று அவரை நேர­டி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னார்­கள். அப்­போது அந்த association–ஐச் சேர்ந்­த­வர்­கள் சொன்­னார்­கள், கணே­சன், Labour Department Minister ஆக இருக்­கும்­போது கால­தா­ம­த­மில்­லா­மல்வேக­மாக வேலை­கள் நடை­பெ­று­கின்­றன என்று அந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">association–ல் இருப்­ப­வர்­களே வந்து நேர­டி­யா­கப் பாராட்­டி­விட்­டுச் சென்­றார்­கள் என்­பதை இந்த அவைக்கு நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தர­வு­க­ளெல்­லாம் இல்­லை­யென்று சொன்­னார்­கள். ஒரே ஒரு விஷ­யத்தை மட்­டும் சொல்­லிக்­கொள்­கி­றேன். தர­வு­க­ளெல்­லாம் இல்­லை­யென்று சொன்­னார்­கள். தர­வு­கள் இல்­லா­மல் எப்­படி 35 இலட்­சத்து 9 ஆயி­ரத்து 833 தொழி­லா­ளர்­க­ளுக்குநலத் திட்­டங்­க­ளைக் கொடுக்க முடி­யும்? 3 ஆயி­ரத்து 134 கோடி ரூபாய் நலத் திட்­டங்­கள் எவை அழிந்­து­போ­னா­லும், அந்­தத் தர­வு­கள் எப்­போ­தும் அந்த அலு­வ­ல­கத்­தில் இருக்­கும் என்­பதை அமைச்­சர் அவர்­க­ளுக்­குத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் 
சி.வெ.கணே­சன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>