<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 04 2026 14:24:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260905T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05092026-CBE-04" position.sequence="04" ex-ref="05092026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கிற மகத்தான லட்சியத்தோடு ஆட்சி நடத்தியவர் எங்கள் தலைவர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">தீப்பெட்டி – பட்டாசுத் தொழிற்சாலைகளை</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="79">தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் ஆய்வு நடத்துவீர்! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">சட்டப்பேரவையில் கழக உறுப்பினர் சாத்தூர் அ.கடற்கரைராஜ் பேச்சு!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">கழக ஆட்சியில் குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியடைந்தன! </lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup857873_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup857818_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup857747_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Kadarkaraicol_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, செப். 5 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“தொழி­லா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் 
பாதிக்­காத வகை­யில் தீப்­பெட்டி மற்­றும் 
பட்­டாசு தொழிற்­சா­லை­களை ஆய்வு செய்ய 
வேண்­டும்” என்று சட்­டப் பேர­வை­யில் கழக உறுப்­பி­னர் சாத்­தூர் அ.கடற்­க­ரை­ராஜ் 
வலி­யு­றுத்­தி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வை­யில் அ.கடற்­க­ரை­ராஜ் அவர்­கள் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ், தமி­ழர், தமிழ்­நாடு என்­கிற அடை­யா­ளங்­க­ளை­யும், அவர்­க­ளின் வளர்ச்­சி­யை­யும் உறுதி செய்ய தன் வாழ்­நா­ளெல்­லாம் உழைத்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். நவீன தமிழ்­நாட்டை தன் தொலை­நோக்­குத் திட்­டங்­க ­ளா­லும், சட்­டங்­க­ளா­லும் செதுக்­கிய தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளுக்கு முதற்­கண் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லோ­ருக்­கும் எல்­லாம் என்­கின்ற மகத்­தான சமத்­துவ இலட்­சி­யத்­தோடு திரா­விட மாடல் ஆட்­சியை நடத்­தி­ய­வர் எங்­கள் தலை­வர்  முன்­னாள் முதல்­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) தமிழ்­நாட்­டின் மண், மொழி, மானம் காக்க தொடர்ந்து போரா­டி­ய­வர், போரா­டு­ப­வர் சமூக நலத் திட்­டங்­க­ளி­லும், பொரு­ளா­தார வளர்ச்­சி­யி­லும் தமிழ்­நாட்டை இந்­தி­யா­விற்கே முன்­னோ டி­யாக கட்­ட­மைத்­த­வர்; நாம் வாழும் நிலத்தை அங்­கு­லம், அங்­கு­ல­மாக செதுக்­கி­ய­வர்; மகத்­தான தலை­வர் அவர்­க­ளுக்கு என் முதற்­கண் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்த அடக்­கு­மு­றைக்­கும் அஞ்­சா­மல், எவ்­வ­ளவு அதி­கா­ரம் மிக்­க­வர்­கள் என்­றா­லும் அநீ­தியை அநீதி என்று சொல்­லும் துணிச்­ச­லுக்­குச் சொந்­தக்­கா­ரர். திரா­விட இயக்­கத்­தின் நம்­பிக்கை மிகு எதிர்­கா­லம், எங்­களை வழி­ந­டத்­தும் இளம் தலை­வர், சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர், (மேசை­யைத் தட்­டும் ஒலி) எனக்­காக பாடு­பட்டு வாக்கு சேக­ரித்த எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்கு என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">வாய்ப்­ப­ளித்த சாத்­தூர் தொகுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மக்­க­ளுக்கு நன்றி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் மண்­ணோ­டும், மக்­க­ளோ­டும் இரண்­டற கலந்து எங்­கள் மாவட்­டத்­தின் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள், முன்­னாள் அமைச்­சர்­கள் மாண்­பு­மிகு அண்­ணாச்சி திரு. K.K.S.S.R. இரா­மச்­சந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும், முன்­னாள் அமைச்­சர் அண்­ணாச்சி திரு. தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், எங்­கள் கொறடா அவர்­க­ளுக்­கும், துணைக் கொறடா அவர்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். வர­லாற்­றுப் பெரு­மி­த­மும், தனித்­தன்­மை­யும் வாய்ந்த சிறப்­பு­மிக்க இந்­தப் பேர­வை­யில் பணி­யாற்­றும் வாய்ப்பை எனக்கு வழங்­கிய என் சாத்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் என் நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், நிர்­வா­கி­க­ளுக்­கும், என் குடும்ப நண்­பர்­கள், உற­வி­னர்­கள், என் மனைவி, மகன், மகள் உள்­ளிட்ட அனைத்து மக்­க­ளுக்­கும் ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர்­கள், நக­ரச் செய­லா­ளர், இளை­ஞ­ரணி நிர்­வா­கி­கள் உள்­ளிட்ட அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இன்­றைய மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் எனக்கு பேச வாய்ப்­ப­ளித்த  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு மீண்­டும் ஒரு­முறை நன்­றி­யைச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமூ­கத்­தில் எல்லா தரப்­பி­லும், எல்லா துறை­க­ளி­லும், எல்லா காலக்­கட்­டத்­தி­லும் ஆதிக்­கம் இருந்­துள்­ளது. தொழில் துறையை எடுத்­துக் கொண்­டால் வளர்ச்­சிக்கு பெரும் தொழில்­கள் அவ­சி­யம். அதே­ச­ம­யம், குறு, சிறுமற்­றும் நடுத்­த­ரத் தொழில்­களை அவை அழித்­து­வி­டா­மல் பாது­காப்­ப­தும் ஓர் அர­சுக்கு முக்­கி­ய­மான பணி. தொழில் துறை­யில் பெரும் தொழில்­க­ளின் ஆதிக்­கத்­தி­லி­ருந்து குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில்­க­ளைக் காப்­பது கடமை. திரா­விட முன்­னேற்­றக் கழ­கக் காலம் முழு­வ­தும் இதை அக்­க­றை­யோடு அணுகி செயல்­ப­டுத்தி வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1967 முதல் 1977 வரை­யி­லான தி.மு.க. ஆட்­சி­யில் பெரும் தொழில்­கள் வளர்ச்­சி­ய­டைந்த அள­வை­விட குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில்­க­ளின் வளர்ச்சி அடைந்த விகி­தம் அதி­கம். நில உச்­ச­வ­ரம்­புச் சட்­டத்­தின்­மூ­லம் உபரி நிலங்­களை விவ­சா­யி­க­ளுக்­குக் கொடுத்து, நில உரி­மை­கள் சமத்­து­வத்­தை­யும், அதி­கா­ரப் பர­வ­லாக்­கத்­தை­யும் உறுதி செய்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள். அதே­போல குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில்­களை உரு­வாக்கி, ஊக்­கப்­ப­டுத்தி பாது­காத்தவகை­யில் தொழில் துறை­யி­லும் அதி­கா­ரப் பர­வ­லாக்­கத்தை தலை­வர் கலை­ஞர் அவர்­கள் உறுதி செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று இந்­தி­யா­வில் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரத்­தில் மராட்­டிய மாநி­லம் முதன்­மை­யாக இருக்­க­லாம். ஆனால், அவர்­க­ளை­விட தொழிற்­சா­லை­க­ளின் எண்­ணிக்­கை­யில் தமிழ்­நா­டு­தான் முத­லில் இருக்­கி­றது. அதற்கு சிறு, குறு, நடுத்­தர தொழிற்­சா­லை­க­ளின் பங்­க­ளிப்பு மிக, மிக முக்­கி­ய­மா­னது. ஒவ்­வோர் ஆட்­சி­யி­லும் இதற்­காக பணி­யாற்றி வளர்த்­தெ­டுத்­துள்­ளோம். மிக முக்­கி­ய­மாக 2006-2011 காலக்­கட்­டத்­தில், 2006 ஆம் ஆண்டு தமிழ்­நாட்­டில் தொழிற்­சா­லை­க­ளின் எண்­ணிக்கை 21,265; 2011 ஆம் ஆண்டு 36,848. ஐந்­தாண்டு காலத்­தில் 15,583 தொழிற்­சா­லை­களை அதி­கப்­ப­டுத்தி காட்­டி­யது தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்­சி­யில் துணை முத­ல­மைச்­ச­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது, தொழில் துறை­யை­யும் பொறுப்­பில் வைத்­தி­ருந்­த­வர், எங்­கள் தலை­வர் மாண்­பு­மிகு முன்­னாள் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் என்­பதை பெரு­மை­யோடு குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வில் 
கழக ஆட்­சி­யில் 2–வது இடம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் ஆட்­சி­யில் MSME துறை­க­ளின் வளர்ச்­சிக்கு பொற்­கா­ல­மாக விளங்­கி­யது. முந்­தைய ஆட்­சி­யில் 55,230 தொழில்­மு­னை­வோர்­கள் உரு­வாக்­கப்­பட்­ட­னர். திரா­விட மாடல் ஆட்­சி­யில் 81,598 தொழில்­மு­னை­வோர்­கள் உரு­வாக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு அண்­ணல் அம்­பேத்­கர் தொழில் முன்­னோடி திட்­டம், கலை­ஞர் கைவி­னைத் திட்­டம் உள்­ளிட்ட 6 திட்­டங்­கள்­மூ­லம் 2,512 கோடி ரூபாய் மானி­யம் வழங்­கப்­பட்­டது. தமிழ்­நாட்­டில் 6-5-2021 நில­வ­ரப்­படி 3,10,610 MSME நிறு­வ­னங்­கள் பதிவு செய்­யப்­பட்டு, 33,47,447 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உரு­வாக்­கப்­பட்­டது. கழக ஆட்­சிக் காலத்­தில் 7-5-2021 முதல்   28-2-2026 வரை­யி­லான காலக்­கட்­டத்­தில் 41,18,410 MSME நிறு­வ­னங்­கள் Udyam பதிவு இணை­ய­த­ளத்­தின்­கீழ் பதிவு செய்­யப்­பட்டு, 2,97,33,721 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. பதிவு செய்­யாத MSME நிறு­வ­னங்­க­ளை­யும் கணக்­கில் எடுத்­துக்­கொண்­டால், இந்­திய அள­வில் தமிழ்­நாடு MSME துறை­யில் இரண்­டா­வது இடம் வகிக்­கும் என்­கிற மகத்­தான சாதனை படைத்­தது திரா­விட மாடல் அரசு. MSME துறைக்கு 2016-2021 ஆம் ஆண்டு வரை வழங்­கப்­பட்ட அதி­க­பட்ச ஆண்டு ஒதுக்­கீடு ரூ.543 கோடி. அதே காலக்­கட்­டத்­தில் மொத்த ஒதுக்­கீடு ரூ.2,334 கோடி­யாக மட்­டுமே இருந்­தது. எங்­கள் தலை­வர் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்­சி­யில் 2021-2025 காலக்­கட்­டத்­தில் நிதி­யொ­துக்­கீட்­டினை பன்­ம­டங்கு உயர்த்தி, அதி­க­பட்­ச­மாக ஆண்டு நிதி ஒதுக்­கீடு ரூ.1,911 கோடி­யா­க­வும், ஐந்­தாண்­டு­க­ளில் மொத்த ஒதுக்­கீடு சுமார் ரூ.6,062 கோடி­யா­க­வும் உயர்த்­தி­யது. முந்­தைய ஆட்­சி­யை­விட இது அதி­க­பட்­ச­மா­கும். ஆண்டு ஒதுக்­கீட்­டில் 352 விழுக்­காடு வளர்ச்­சி­யை­யும், மொத்த ஒதுக்­கீட்­டில் 3.45 மடங்கு உயர்த்தி ஒதுக்­கீடு செய்­தார் மாண்­பு­மிகு முன்­னாள் முத­ல­மைச்­சர் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள். ஒரு தொழில் தொடங்க, பல உரி­மை­கள் வாங்க வேண்­டிய நிலை­யுள்­ளது. அவற்­றிற்­காக, தொழில்­மு­னை­வோர்­கள் அலைந்து திரிய வேண்­டிய சூழல் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஆதி திரா­வி­டர் தொழில் முனை­வோர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்­க­ளது துய­ரத்­தைப் போக்க, எளி­தாக தொழில் தொடங்­கும் வகை­யில்   200-க்கு மேற்­பட்ட உரி­மை­களை, தொழில் நிறு­வ­னங்­கள் ஒரே இடத்­தில் பெற்­றி­டும் ஒற்றை சாளர முறை, 2.0 திட்­டம் அறி­மு­கம் செய்­யப்­பட்டு, அதன்­மூ­லம் திரா­விட மாடல் ஆட்­சி­யில் 1,03,123 மனுக்­கள் பெறப்­பட்டு, சுமார் 94,440 மனுக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யாக ஒப்­பு­தல் வழங்­கப்­பட்டு சாதனை எய்­தப்­பட்­டது. இந்­தி­யா­வி­லேயே எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத திட்­ட­மான ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னரை தொழில்­மு­னை­வோர்­க­ளாக உரு­வாக்­கும் அண்­ணல் அம்­பேத்­கர் தொழில் முன்­னோ­டி­கள் திட்­டம் திரா­விட மாடல் ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­டத்­தின்­கீழ் ரூ.402,56,00,000  மானி­யத்­து­டன் ரூ.746 கோடியே 53 இலட்­சம் வங்­கிக் கட­னு­தவி வழங்­கப்­பட்டு, 4,083 ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் தொழில் முன்­னோ­டி­க­ளாக உரு­வாக்­கப்­பட்­ட­னர். இத்­து­றைக்கு முது­கெ­லும்­பாக உள்­ளவை SIDCO தொழிற்­பேட்­டை­கள். ரத்­த­நா­ளங்­க­ளாக உள்ள startup நிறு­வ­னங்­கள் அவை இரண்­டி­லும் தீவிர கவ­னம் செலுத்­தி­யது திரா­விட மாடல் ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">புத்­தாக்­கத் தொழில் 
கழக ஆட்­சி­யில் முத­லி­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, கட­லூர், திரு­வண்­ணா­மலை, திருச்சி, புதுக் ­கோட்டை, திரு­வா­ரூர், சேலம், நாமக்­கல், மதுரை, திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, விழுப்­பு­ரம் ஆகிய 14 மாவட்­டங்­க­ளில் 464 கோடியே 86 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் 809.28 ஏக்­கர் பரப்­ப­ள­வில் 18 சிட்கோ தொழிற்­பேட்­டை­கள் தொடங்­கப்­பட்­டன. புதிய கண்­டு­பி­டிப்­பா­ளர்­களை, இளை­ஞர்­களைதொழில் முனை­ வோர்­க­ளாக மாற்ற கழக ஆட்­சி­யில் Startup TN என்ற திட்­டம் தொடங்­கப்­பட்­டது. எந்த அர­சி­யல் பார்­வை­யும் இல்­லா­மல், சிபா­ரி­சும் இல்­லா­மல் startup நிறு­வ­னங்­க­ளுக்­கா­கவே சேவை செய்த ஒரு­வரை கழக அரசு CEO ஆக நிய­மித்து, அதன்­வி வி­ளை­வாக அ.இ.அ.தி.மு.க. ஆட்­சி­யில் startup தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் இந்­திய அள­வில் கடைசி தர­வ­ரி­சை­யில் இருந்த தமிழ்­நாடு, அதி­லி­ருந்து முன்­னேறி மூன்­றாம் இட­மான Leader விரு­தி­னைப் பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன்­பின் தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் Startup TN நிறு­வ­னம் இந்­திய அள­வில் முத­லி­டம் பிடித்து சிறந்த செயல்­பாட்­டா­ளர் என்ற விரு­தி­னைப் பெற்­றது. ஒன்­றிய அர­சின் நிதி ஆயோக் அமைப்­பின் சிறந்த புத்­தாக்க சூழல் கொண்ட மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் தமிழ்­நாடு முதன்மை மாநி­ல­மாக இடம்­பெற்­றுள்­ளது. இன்று அதன் நிலை என்­ன­வென்று தெரி­ய­வில்லை. அந்த இயக்­கத்­தினை நம்பி தொழில் தொடங்­கிய இளை­ஞர்­கள் என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­தும் தெரி­ய­வில்லை. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) கொஞ்­சம் time கொடுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் ஆட்­சி­யில் 2025 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடத்­தப்­பட்ட உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் MSME துறை­யின்­மூ­லம் 5,068 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன்­மூ­லம் 1,21,403 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் வகை­யில் 31,201 கோடியே 76 இலட்­சம் ரூபாய் முத­லீட்­டில் 2,911 நிறு­வ­னங்­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. மீத­முள்ள ஒப்­பந்­தங்­க­ளின் நிலை என்ன என்­பதை   பேர­வைத் தலை­வர் அவர்­கள் வாயி­லாக அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசு பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து பெருந்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் மற்ற மாநி­லங்­க­ளுக்கு சென்­ற­வண்­ணம் உள்­ளன. அவ்­வாறு, திட்­டங்­களை நீங்­கள் ரத்து செய்­து­விட்­டீர்­களா அல்­லது பெயரை மாற்­றி­யுள்­ளீர்­களா? இது­தான் இந்த அர­சின் 100 நாள் சாத­னை­யாக உள்­ளது. இத­னால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது MSME நிறு­வ­னங்­கள்­தான் என்­பதை இந்த அரசு புரிந்­து ­கொள்ள வேண்­டும். அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தா­ரக் கொள்கை, ஈரான்-­அ­மெ­ரிக்கா போர் ஆகி­ய­வற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது MSME நிறு­வ­னங்­கள்­தான். உக்­ரைன்-­ரஷ்யா போரால் நமது MSME நிறு­வ­னங்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­போது எங்­கள் தலை­வர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி, MSME நிறு­வ­னங்­களை அழைத்து பேசி அவர்­க­ளுக்கு தேவை­யான மூலப்­பொ­ருட்­களை பெற அனைத்து உத­வி­க­ளும் வழங்­கப்­பட்­டது. நாடு முழு­வ­தும் சிலிண்­டர் தட்­டுப்­பாடு ஏற்­பட்­ட­போ­து­கூட மாற்று எரி­சக்தி பயன்­ப­டுத்­தி­ய­வர்­க­ளுக்கு அனு­மதி விலக்கு, மின் கட்­டண சலுகை ஆகி­வற்றை வழங்­கி­யது திரா­விட மாடல் ஆட்­சி­யில்­தான். அதே­போல் உங்­கள் ஆட்­சி­யில் நடை­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை. MSME நிறு­வ­னங்­க­ளின் கோரிக்­கை­கள் உங்­கள் காது­க­ளில் வர­வே­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">எந்­தத்­திட்­ட­மும் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் சிறு, குறு தொழில் முனை­வோ­ருக்கு கலை­ஞர் கைவி­னைத் திட்­டம், மக­ளிர் தொழில் முனை­வோர் மேம்­பாட்­டுத் திட்­டம், தமிழ்­நாடு கடன் உத்­த­ர­வா­தத் திட்­டம், குறுங்­கு­ழும மேம்­பாட்­டுத் திட்­டம், micro clusters, பெருங்­கு­ழும மேம்­பாட்­டுத் திட்­டம், தங்க நகை மற்­றும் வெள்ளி குழு­மம், வெள்­ளிக் கொலுசு உற்­பத்தி வளா­கம், தொழி­லா­ளர் தங்­கும் விடு­தி­கள், தமிழ்­நாடு உணவு பதப்­ப­டுத்­து­தல் மற்­றும் வேளாண் ஏற்­று­மதி மேம்­பாட்­டுக் கழ­கம், அடுக்­கு­மாடி தொழில் வளா­கங்­கள், சிட்கோ தொழில்­மனை விலை குறைப்பு, ஒற்­றைச் சாளர இணை­ய­த­ளம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் record-ஐ வைத்­து­தான் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன். என்ன இருந்­ததோ அதை எடுத்­துத்­தான் நான் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன். நான் ஒன்­றும் உண்­மைக்கு மாறாக இருப்­ப­தைச் சொல்­ல­வில்லை. இதற்கு முன்பு நாங்­கள் என்ன நடந்­தது, என்ன செய்­தோம் என்ற சாத­னை­யைத்­தான் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கோவில்­பட்­டி­யில் தீப்­பெட்டி தொழிலை ஆய்வு செய்த  எங்­கள் முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒற்­றைச் சாளர இணை­ய­த­ளம் 2.0 தொழில் முனை­வோர் மேம்­பாட்­டுத் திட்­டம் என எண்­ணற்ற திட்­டங்­கள் MSME நிறு­வ­னங்­க­ளுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன. இந்த ஆட்­சி­யில் பெயர் மாற்­றத்­தைத்­த­விர, இத்­து­றைக்கு குறிப்­பி­டத்­தக்க எந்­தத் திட்­ட­மும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. நீங்­கள் கொடுத்­துள்ளபுத்­த­கத்­தி­லும் பார்த்­தோம், 
ஒன்­றும் காண­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று, நான் விரு­து­ந­கர் மாவட்­டம், சாத்­தூர் தொகு­தி­யி­லி­ருந்து புதி­ய­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு வந்­துள்­ளேன். எங்­கள் பகுதி வானம் பூமி; எந்த நீர்ப்­பா­ச­ன­மும் கிடை­யாது. விவ­சா­யப் பணி­கள் என்­பது மிக­வும் குறைந்த நாட்­கள்­தான் நடை­பெ­றும். அது­வும் மழை சரி­வர பொழி­ய­வில்லை என்­றால், அது­வும் நடக்­காது. அத­னால்­தான் எங்­கள் பகு­தியை ‘கந்­தக பூமி’ என்று சொல்­வார்­கள். எங்­கள் பகு­தி­யில் தீப்­பெட்டி மற்­றும் பட்­டா­சுத் தொழில்­தான் பிர­தா­னத் தொழி­லாக விளங்கி வரு­கி­றது. அது­வும் குறிப்­பாக சொல்­ல­வேண்­டு­மென்­றால், முத்­த­மி­ழ­ றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் பிறந்த 1924 ஆம் ஆண்­டு­தான் எங்­கள் பகு­தி­யில் தீப்­பெட்டி மற்­றும் பட்­டா­சுத் தொழில் தோன்­றி­யது.   அன்­று­மு­தல் இன்­று­வ­ரை­யி­லும் பெண்­கள் இந்­தத் தொழிலை நம்­பித்­தான் வாழ்­வா­தா­ரத்தை நடத்தி வரு­கி­றார்­கள். பெரும்­பா­லும் தீப்­பெட்­டித் தொழி­லி­லும், பட்­டா­சுத் தொழி­லி­லும் பெண்­கள்­தான் வேலை செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தற்­போது China-விலி­ருந்து cigarette lighter மற்­றும் உதி­ரிப் பாகங்­கள் வரு­கை­யி­னால் மிக­வும் நலி­வ­டைந்து இன்­றைக்கு தீப்­பெட்டி தொழிற்­சா­லை­க­ளில் தொழி­லா­ளர்­க­ளுக்கு மூன்று, நான்கு நாட்­கள்­தான் வேலை தரப்­ப­டு­கி­றது. திரா­விட மாடல் ஆட்­சி­யில் தீப்­பெட்டி தொழில் நடத்­து­ப­வர்­கள் எங்­கள்  அமைச்­சர்­கள் மூல­மாக அன்­றைய  முதல்­வ­ராக இருந்த தள­பதி  முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் எட்­ட­ய­பு­ரம் கிரா­மம், கோவில்­பட்டி factory-க்கும் நேர­டி­யாக visit செய்து, அத­னு­டைய குறை­களை நிவர்த்தி செய்து, China-விலி­ருந்து வரக்­கூ­டிய plastic cigarette lighter—நலி­வ­டைந்த தீப்­பெட்டி தொழிலை காப்­பற்­ற­வேண்­டு­மென்ற கோரிக்­கையை வலி­யு­றுத்­திக் கூறி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­னாள்  முத­ல­மைச்­சர் அவர்­கள்,  அமைச்­சர் பெரு­மக்­க­ளோடு கோவில்­பட்­டிக்­குச் சென்று தீப்­பெட்டி தொழிற்­சா­லை­யைப் பார்­வை­யிட்டு, தொழி­லா­ளர்­க­ளு­டன் கலந்­து­ரை ­யாடி, தொழில் முனை­வோர்­க­ளை­யும் சந்­தித்து, அன்­றை­ய­தி­னம் ஒன்­றிய அரசு cigarette lighterதடை­செய்ய பரிந்­து­ரைக் கடி­தம் அனுப்­பி­னார்­கள். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று பட்­டா­சுத் தொழிற்­சா­லை­க­ளில் தொடர்ந்து ஆய்­வு­கள் நடை­பெற்று வரு­கின்­றன. ஏற்­கெ­னவே suspend செய்­யப்­பட்ட பல தொழிற்­சா­லை­கள் இப்­போது revoke செய்­யப்­பட்­ட­நி­லை­யில், தொடர்ந்து நடை­பெ­றும் ஆய்­வு­க­ளின் கார­ண­மாக மீண்­டும் பல தொழிற்­சா­லை­கள் suspend செய்­யக்­கூ­டிய நிலை உரு­வா­கி­ யுள்­ளது. எனவே தொழிற்­சா­லை­கள் மற்­றும் தொழி­லா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கா­த­வ­கை­யில் ஆய்­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்தி, தேவை­யற்ற suspend-களை தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">DRO உரி­மம் பெற்ற தொழிற்­சா­லை­க­ளில் தீப்­பெட்டி திரி செய்­யும் தயா­ரிப்­புக்கு கூடு­தல் அறை வசதி செய்­து­த­ர­வேண்­டும். இதற்கு முன்பு பிற மாவட்­டங்­க­ளில் 5 rooms கொடுக்­கி­றார்­கள். எங்­கள் மாவட்­டங்­க­ளில் 2 rooms தான் கொடுக்­கி­றார்­கள். அதை 5 rooms ஆக கொடுத்­தால், வெளி­யில் வைத்து திரி செய்­வது குறை­யும். அந்­தத் தொழி­லைப் பாது­காக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கைத்­தறித் தொழிலை 
பாது­காக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று கைத்­த­றித் துறை­யில் விரு­து­ந­கர் மாவட்­டம், ராஜ­பா­ளை­யம் தாலுகா, சத்­தி­ரப்­பட்டி, சமு­சி­கா­பு­ரம், சங்­க­ர­பாண்­டி­ய­பு­ரம் ஆகிய மூன்று கிரா­மங்­க­ளில் சுமார் 120 மருத்­துவ துணி உற்­பத்தி நிறு­வ­னங்­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­தொ­ழி­லில் நேர­டி­யாக மூன்­றா­யி­ரம் தொழி­லா­ளர்­கள் மற்­றும் மறை­மு­க­மாக பத்­தா­யி­ரம் தொழி­லா­ளர்­கள் வேலை செய்து வரு­கி­றார்­கள். சுமார் 60 வரு­டங்­க­ளுக்கு முன்பு, இந்­தத் தொழில் துவங்­கப்­பட்டு, இப்­ப­குதி முழு­வ­தும் மக்­க­ளின் வாழ்­வா­தா­ர­மாக சிறப்­பாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில் கடந்த 15 ஆண்­டு­க­ளாக மாசுக் கட்­டுப்­பாட்டு வாரி­யம் வச­மி­ருந்து, கழி­வு­நீ­ரைச் சுத்­தப்­ப­டுத்தி, வெளி­யேற்ற வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்தி பல கடி­தங்­கள், பல ஆலோ­ச­னைக் கூட்­டங்­கள் நடை­பெற்­றன. இதன்­வி­ளை­வாக பல நிறு­வ­னங்­கள் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைக்க ஏற்­பாடு செய்­த­னர். இதற்­குப் பொது­மக்­கள் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். எனவே, நாங்­கள் 105 பேர் சேர்ந்து, பொது சுத்­தி­க­ரிப்பு அமைப்பு CETP (Common Effluent Treatment Plant) ஏற்­ப­டுத்த 6 ஏக்­கர் நிலம் வாங்­கி­னோம். அந்த இடத்­தில் மேற்­படி அமைப்பை ஏற்­ப­டுத்த ஆரம்ப கட்ட பணி­யைத் துவக்­கி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசே பொது சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் ஏற்­ப­டுத்த இரா­ஜ­பா­ளை­யம் தாசில்­தார் அவர்­க­ளைத் தொடர்ப்­பு­கொண்டு, நிலம் கைய­கப்­ப­டுத்த ஒத்­து­ழைக்க வேண்­டி­னோம். அதற்கு அவர்­கள் அர­சி­யார்­பட்டி பஞ்­சா­யத்து, பிள்­ளை­யார்­கு­ளம் பஞ்­சா­யத்து, சர்வே எண் 157, சுமார் 98 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டுத்த ஆய்வு கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த இடத்­தில் அரசு செல­வில் பொது சுத்­தி­க­ரிப்பு அமைப்பு CETP ஏற்­ப­டுத்த வேண்­டும். CETP அமைத்­தால் மட்­டுமே கழி­வு­நீ­ரைச் சுத்­தப்­ ப­டுத்தி, அதன்­மூ­லம் மேற்­கண்ட மூன்று கிரா­மங்­க­ளி­லுள்ள 120-க்கும் மேற்­பட்ட மருத்­து­வத்­துணி உற்­பத்தி நிறு­வ­னங்­கள் பிழை ப்­பார்­கள் என்று இந்த நேரத்­தில் கூறிக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தொகுதி கோரிக்­கை­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, அரசு மருத்­து­வ­ம­னைக்கு ஒருங்­கி­ணைந்த எக்ஸ்ரே மற்­றும் CT ஸ்கேன் வசதி, புதிய கட்­ட­டத்­து­டன் அமைத்­துத் தர 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, இரா­ஜ­பா­ளை­யம் ஊராட்சி, சத்­தி­ரப்­பட்டி கிரா­மத்­தில் ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை அரசு மருத்­து­வ­ம­னை­யாக தர­மு­யர்த்­திட வேண்­டும். சோழா­பு­ரம் துணை சுகா­தார நிலை­யத்தை ஆரம்ப சுகா­தார நிலை­ய­மாக தர­மு­யர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் ஊராட்சி, மேட்­ட­மலை கிரா­மத்­தில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் கட்­ட­டம் கட்­டித் தர வேண்­டும். புது சூரங்­குடி ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை தர­மு­யர்த்த வேண்­டும். ஓ. மேட்­டுப்­பட்டி கிரா­மத்­தில் புதிய ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, சாத்­தூர்-­நென்­மே­னி-­நா­க­லா­பு­ரம் சாலை­யில், சாத்­தூர் இர­யில்வே நிலை­யம் அரு­கில் இர­யில்வே மேம்­பா­லம் அமைத்து தர வேண்­டும். சாத்­தூர்-­சி­வ­காசி சாலயை நான்கு வழிச் சாலை­யாக மாற்­றித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, செவல்­பட்டி, சாத்­தூர், 
திரு­வேங்­க­ட­பு­ரம், சங்­க­ரன்­கோ­யில், ஆலங்­கு­ளம், கீழான்­ம­றை­நாடு ஆகிய ஊர்­க­ளுக்கு தரை­பா­லத்தை உயர்­மட்ட பால­மாக மாற்­றித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, குகன்­பா­றை­யில் இருந்து கீழான்­ம­றை­நாடு செல்­லும் சாலை­யி­லுள்ள தரைப் பாலத்தை உயர்­மட்ட பால­மாக மாற்­றி­ய­மைக்க வேண்­டும். மேற்­கண்ட சாலை­யும், செவல்­பட்டி கிரா­மத்­தில் PSR கல்­லூரி செல்­லும் சாலை­யும் சந்­திக்­கும் இடத்தை மேம்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சாத்­தூர் –தாயில்­பட்டி                                  சாலையை சீர­மைத்­துத் தாரீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, குகன்­பாறை, கிரா­மத்­தில் அமைந்­துள்ள தரை­பா­லத்தை உயர்­மட்ட பால­மாக மாற்­றித் தர வேண்­டும். சின்­ன­கொல்­லப்­பட்­டி­யி­லி­ருந்து அய்­யம்­பட்டி செல்­லும் சாலையை அக­லப்­ப­டுத்­தித் தர வேண்­டும். 	சாத்­தூ­ரில் இருந்து தாயில்­பட்டி செல்­லும் சாலையை சீர­மைத்து விரி­வாக்­கம் செய்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, ஒத்­தை­யால் மற்­றும் தூங்­கா­ரெட்­டி­பட்டி ஆகிய கிரா­மங்­க­ளி­லுள்ள வளைவு பகு­தியை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, வெம்­பக்­கோட்டை ஊராட்சி ஒன்­றி­யம், சல்­வார்­பட்டி ஊராட்­சி­யில் இற­வார்­பட்­டி­யி­லி­ருந்து அச்­சங்­கு­ளம் செல்­லும் வழி­யில் தார்ச்­சாலை அமைத்து தர வேண்­டும். வைப்­பாற்­றில் பாலம் அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, வெம்­பக்­கோட்­டை­யில் தீக்­காய பிரி­வு­டன்­கூ­டிய அரசு மருத்­து­வ­மனை அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, வெம்­பக்­கோட்டை, வைப்­பாற்­றி­லுள்ள முள்­செ­டி­களை தூரோடு அகற்ற வேண்­டும். வெம்­பக்­கோட்டை பகு­திக்கு பேருந்து நிலை­யம் அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, வேண்­டான்­கு­ளம் கண்­மா­யி­லுள்ள கரு­வேல மரங்­களை அகற்றி தூர்­வா­ரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, படந்­தால் ஊராட்­சி­யி­லி­ருந்து சாத்­தூர் நகர் பகுதி வரை வாறு­கால் அமைத்து தர வேண்­டும். ஆலங்­கு­ளம் அரசு சிமெண்ட் தொழிற்­சாலை இயங்­கிட நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, சாத்­தூர் நக­ரில் புதி­தாக அமை­யும் பேருந்து நிலை­யம் கட்­டு­வ­தற்கு நிதி ஒதுக்­கீடு செய்­திட வேண்­டும். நந்­த­வ­ணப்­பட்டி தெரு­வில் நடை­மேடை அமைப்­ப­தற்கு தொகையை ஒதுக்­கீடு செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் நக­ராட்­சி­யில் புதிய காய்­கறி மார்க்­கெட் கடை­கள் கட்­டு­வ­தற்கு நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விரு­து­ந­கர் மாவட்­டம், சிவ­காசி வட்­டம், வெம்­பக்­கோட்டை ஒன்­றி­யம், தாயில்­பட்டி ஊராட்­சிக்­குட்­பட்ட கோட்­டை­யூர் பெரிய கண்­மா­யைத் தூர்­வாரி சீர­மைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, சாத்­தூர் கோட்­டத்­திற்­குத் துணை பண்­டக சாலை அமைத்­துத் தர வேண்­டும். வாரிய வாக­னம் பொருட்­கள் மின் கம்­பங்­கள் ஏற்றி இறக்­கு­வ­தற்கு லாரி வசதி ஏற்­ப­டுத்தி தர வேண்­டும். சாத்­தூர் கோட்­டம் செயற்­பொ­றி­யா­ள­ரின் அலு­வ­லக பயன்­பாட்­டிற்கு கார் வசதி செய்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாத்­தூர் தொகுதி, துணை மின் நிலை­யத்­திற்கு இரண்­டு­வழி மின்­பாதை அமைத்து தர வேண்­டும். செயற்­பொ­றி­யா­ளர் அவர்­க­ளுக்­குப் புதிய கட்­ட­டம் அமைத்துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக உறுப்­பி­னர் அ.கடற்­க­ரை­ராஜ் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>