<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,65,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 03:36:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260905T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="05092026-CHN-02" position.sequence="02" ex-ref="05092026-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">முதலமைச்சர் அவையில் இருக்கும்போது மற்ற அமைச்சர்களின் பதில் எதற்கு?</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு...   </lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="35">முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">எங்கள் தயவில் நடக்கும் ஆட்சி இது!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இடத்தில் இருக்கிறீர்கள். உங்களிடம் கேள்வி கேட்கவேண்டிய இடத்­தில் நாங்­கள் இருக்­கி­றோம். உங்­க­ளி­டம் சரி­யான கேள்­வி­யைக் கேட்­டுப் பதில் வாங்­கும் கடமை எங்­க­ளு­டை­யது. அந்­தப் பொறுப்­பைத்­தான் மக்­கள் எங்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். ஆகவே, வெறும் ‘ரீல்ஸ்’ கருத்­தாக இல்­லா­மல், ‘ரீல்ஸ்’ உள்­ள­டக்­கத்­திற்­காக இல்­லா­மல், `ரோல், கேமரா, ஆக்சன்’ நிலைக்கு வரா­மல், திசை­தி­ருப்­பா­மல், சம்­பந்­தமே இல்­லா­மல் லாஜிக்கே இல்­லாத குட்­டிக் கதை­கள் சொல்­லா­மல், மக்­க­ளு­டைய கேள்­வி­க­ளுக்கு, எங்­க­ளு­டைய கேள்­வி­க­ளுக்கு முத­ல­மைச்­சர் நேர­டி­யா­கப் பதில் சொல்ல வேண்­டும் என்று பேர­வைத் தலை­வர் வாயி­லா­கக் கேட்டு கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">முத­ல­மைச்­சர் பதில் சொல்லத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">தயாரா என்­று­தான் கேட்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, காவல்­துறை சம்­பந்­தப்­பட்ட மானி­யம், நான் ஏற்­க­னவே சொன்­ன­து­போல, யார் பொறுப்­பெ­டுத்­துப் பதில் சொல்ல வேண்­டுமோ அவர்­கள் சொல்ல மாட்­டேன் என்­கி­றார்­கள். மற்ற அமைச்­சர்­கள் எல்­லாம் பதில் சொல்­கி­றார்­கள். அதை நான் மீண்­டும் பதிவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, முத­ல­மைச்­சர் எந்த நேரத்­தி­லும் தயா­ராக இருக்­கி­றார் என்று நீங்­கள்­தான் சொன்­னீர்­கள். அவர் தயா­ராக இருந்­தால், அவர் பதில் சொல்ல வேண்­டும். அதற்­கா­கத்­தான் நான் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, அமைச்­சர் அவர்­கள் பேசும்­போது, எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் சில குற்­றங்­கள் நடந்­தன, குறை­பா­டு­கள் இருந்­தன என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அதற்கு நான் இந்த நேரத்­தில் பதில் சொல்­ல­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக, டி.ஜி.பி நிய­ம­னத்­தில் எதற்­கா­கத் தாம­தம் ஏற்­பட்­டது, ஏன் பொறுப்பு டி.ஜி.பி. போட்­டி­ருந்­தீர்­கள்? என்று கேட்­டி­ருக்­கி­றார். எங்­கள் ஆட்­சி­யில் டி.ஜி.பி.யாக இருந்த திரு.சங்­கர் ஜிவால் ஐ.பி.எஸ். அவர்­கள் ஓய்வு பெற்ற பிறகு, டி.ஜி.பி நிய­ம­னத்­திற்­காக எங்­க­ளு­டைய கழக அரசு சார்­பாக, மத்­திய அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­திற்கு (UPSC) ஒரு பட்­டி­ய­லைத் தேர்வு செய்து அனுப்­பி­யி­ருந்­தோம். அப்­போது மாநில அர­சுக்­கும், யூ.பி.எஸ்.சி.க்கும், டி.ஜி.பி தேர்­வுக் குழு­வில் யார் யார் இடம் பெற வேண்­டும் என்­ப­தில் மாறு­பட்ட கருத்து இருந்­தது. தமிழ்­நாட்­டிற்­கான டி.ஜி.பி-யை நிய­மிப்­ப­தில் யூ.பி.எஸ்.சி.யினு­டைய பங்கு, அதா­வது ஒன்­றிய அர­சி­னு­டைய தலை­யீடு அதி­க­மாக இருக்­கி­றது என்று எங்­க­ளு­டைய அரசு அன்று கரு­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது மாநில உரி­மை­க­ளுக்கு எதி­ரா­னது. சட்­டம் ஒழுங்கு என்­பது மாநில அர­சி­னு­டைய கட்­டுப்­பாட்­டில் இருக்­கி­றது. மாநில அர­சுக்கு ஏற்ற அதி­கா­ரியை டி.ஜி.பி.யாக பணி­ய­மர்த்­தி­னால்­தான் அர­சோடு சேர்ந்து ஒன்­றி­ணைந்து செயல்­பட முடி­யும், சட்­டம் ஒழுங்­கைக் காப்­பாற்ற முடி­யும் என்று எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அன்று அந்த முடிவை எடுத்­தார்­கள். எங்­க­ளு­டைய கழக அரசு அதை எதிர்த்து நீதி­மன்­றத்­திற்­கும் சென்று வழக்குப் போட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">சட்­டம் – ஒழுங்கைப் பாது­காக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">எங்­கள் முதல்­வர் எடுத்த நட­வ­டிக்கை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்­கி­டையே மாநி­லத்­தில் சட்­டம் ஒழுங்கு பாதிக்­கப்­ப­டக் கூடாது என்­ப­தால், பொறுப்பு டி.ஜி.பி.-யை அன்று எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் நிய­ம­னம் செய்­தார்­கள். அவர் உடல்­நிலை சரி­யில்லை என்று விடுப்­பில் சென்­ற­தால், மூத்த ஐ.பி.எஸ் அதி­கா­ரி­யான திரு.அபய்­கு­மார் சிங் ஐ.பி.எஸ்-.ஐ, டி.ஜி.பியாக நிய­மித்­தோம். இதற்­குச் சட்­டத்­தில் இடம் இருக்­கி­றது. சட்­டத்­திற்கு உட்­பட்­டுத்­தான் எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள், இதைச் செய்­தி­ருக்­கி­றார்­கள். இதில் எந்­தச் சட்ட விரோ­த­மும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘போக்சோ’ வழக்­கு­கள் எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் அதி­க­மா­கப் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்று இங்கே ஒரு குற்­றச்­சாட்டை அமைச்­சர் அவர்­கள் வைத்­தி­ருக்­கி­றார்­. போக்சோ குற்­றங்­க­ளைத் தடுக்க, எங்­க­ளு­டைய தலை­வர் தலை­மை­யி­லான அரசு மிகக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்­சி­யில் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தில் நம்­பிக்­கையை நாங்­கள் ஏற்­ப­டுத்­தி­னோம். அத­னால் ஏற்­பட்ட விழிப்­பு­ணர்­வின் கார­ணத்­தால்­தான் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தயக்­க­மின்­றிப் புகா­ர­ளிக்க முன்­வந்­தார்­கள். அத­னால் வழக்­கு­கள் பதிவு அதி­க­மா­கி­யது. அப்­ப­டிப் பதிவுசெய்­யப்­பட்ட வழக்­கு­க­ளில் உட­னுக்­கு­டன் புலன் விசா­ரணை நடத்தி, குற்­ற­வா­ளி­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தண்­ட­னை­யும் வாங்­கிக் கொடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">ஆலோ­ச­னைக் கூட்­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக போக்சோ வழக்­கு­க­ளைக் கையாள்­வது தொடர்­பாக, அப்­போது சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை­யின் மூல­மாக, அதற்கு அமைச்­ச­ராக இருந்த என்­னு­டைய தலை­மை­யில் மூன்று சிறப்பு ஆய்­வுக் கூட்­டங்­களை நான் நடத்­தி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செப்­டம்­பர் 2023-இல் காவல்­துறை, சுகா­தா­ரத்­துறை, பள்­ளிக்­கல்­வித் துறை, சமூ­க­ந­லத்­துறை, சட்­டத்­துறை இப்­படி பல்­வேறு துறை­களை ஒருங்­கி­ணைத்து ஓர் ஆலோ­ச­னைக் கூட்­டத்தை நடத்­தி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு 
­க­ளின்­படி, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய உரி­மையை எப்­ப­டிப் பாது­காக்க வேண்­டும், அவர்­களை எப்­ப­டிக் கண்­ணி­ய­மாக நாம் நடத்த வேண்­டும், பள்­ளி­க­ளில் என்ன மாதிரி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீடு உடனே போய்ச் 
சேர்­வதை உறுதி செய்ய வேண்­டும், சட்ட 
உத­வி­களை வழங்­கு­வது எப்­படி என்று வழி­காட்டு நெறி­மு­றை­கள்  உரு­வாக்­கப்­பட்­டன. ஆகவே எங்­கள் ஆட்­சி­யில் அதி­க­மான போக்சோ குற்­றங்­கள் நடந்­தன என்று 
பொத்­தாம் பொது­வா­கச் சொல்­லக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">தி.மு.க. ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­திய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">போதைப் பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொரு குற்­றச்­சாட்­டும் தொடர்ந்து வைத்­துக்­கொண்டு இருக்­கி­றீர்­கள்.  இதை ஏற்­க­னவே அவை­யில் பதிவு செய்­துள்­ளேன்.   போதைப்­பொ­ருட்­கள் ஒழிப்­பில் எங்­க­ளு­டைய அரசு சரி­யான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று கூறு­கி­றீர்­கள். நாங்­கள் போதைப்­பொ­ருள் ஒழிப்­பைச் சரி­யா­கச் செய்­ய­வில்லை என்­றால், மது­வி­லக்கு மற்­றும் கலால் துறை­யில் அதி­கா­ரி­க­ளாக அன்று செயல்­பட்ட திரு. மகேஷ்­கு­மார் அகர்­வால் ஐ.பி.எஸ். அவர்­களை 
நீங்­கள் ஏன் இன்­றைக்­குப் பதவி உயர்வு செய்து தமிழ்­நாட்­டி­னு­டைய டி.ஜி.பி.யாகப் பொறுப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள் என்ற 
கேள்­வியை வைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் போதைப்­பொ­ருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட திரு. அமல்­ராஜ் ஐ.பி.எஸ். அவர்­களை இன்­றைக்கு ஏன் பதவி உயர்வு செய்து, சென்னை மாந­கர காவல் ஆணை­ய­ராக வைத்­தி­ருக்­கி­றீர்­கள் என்ற கேள்­வி­யை­யும் இந்த அர­சி­டம் நான் வைக்­கி­றேன். (குறுக்கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கடை­சி­யாக யார் ஓடிப்­போ­னார்­கள் என்று எல்­லா­ருமே பார்த்­தி­ருப்­பார்­கள். இதை டி.வி.யில் காட்­டி­னீர்­களா என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, முத­ல­மைச்­சர் இந்த பதிலை ஒரு மணி நேரத்­திற்கு முன்பே சொல்­லி­யி­ருந்­தால் இந்­தப் பிரச்­சி­னையே வந்­தி­ருக்­காது. ’எல்­லா­ரும் அமை­தி­யாக இருங்­கள், நான் இப்­போது செல்­கி­றேன்.  நான் 3 நாளில் தயா­ராகி வரு­கி­றேன்’ என்று சொல்­லி­யி­ருக்­க­லாம்.  இதைத்­தான் நான் சொன்­னேன்; தயா­ராகி வாருங்­கள் என்­று­தான் சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">சிங்­கப்­பெண்­க­ளுக்கே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">பாது­காப்பு இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, ‘சிங்­கப்­பெண்’ படை அமைத்­து­விட்­டோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி மாவட்­டத்­தில், சிங்­கப்­பெண் சிறப்பு அதி­ர­டிப் படை­யைச் சேர்ந்த ஒரு பெண் காவ­ல­ருக்கே இந்த ஆட்­சி­யில் பாலி­யல் தொல்லை கொடுக்­கப்­பட்­டுள்­ளது.  சிங்­கப்­ பெண்­க­ளுக்கே பாது­காப்பு இல்லை.  அந்த நிலை­மை­யில்­தான் இந்த ஆட்சி சென்­று­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல், நான் துணை முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது, நான் அவைக்கே வர­வில்லை என்ற குற்­றச்­சாட்டை அமைச்­சர் அவர்­கள் இங்கு வைத்­துள்­ளார்.  தின­மும் அவைக்கு நான் வந்­துள்­ளேன்.  வரு­கைப் பதி­வேட்டை எடுத்­துப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர் (ராஜ்மோகன்) அவர்­கள் பட்­டி­மன்­றத்­தில் இருந்து வந்­தி­ருக்­கி­றார்.  அத­னால் அவர் பேசும்­போது பட்­டி­மன்­றத்­தில் பேசு­வ­தைப்­போல பேசு­கி­றார்.  நிறையக் கருத்­து­கள், வர­லாறு பற்­றி­யெல்­லாம் பேசு­கி­றார்.  அவர் வர­லாறு எல்­லாம் எங்­க­ளுக்குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">அவர் ஓடி­ப்போய்­விட்­டார்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு வரு­டத்­துக்கு முன்பு எங்­கள் கட்சி மேடை­க­ளில், அரசு நிகழ்ச்­சி­க­ளில் எங்­கள் அரசை அதி­க­மாகப் பாராட்­டி­யது, இப்­போது இருக்­கின்ற பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர் அவர்­கள்­தான்.  அதற்­கான ஆதா­ரங்­கள் எல்­லாம் எங்­க­ளி­டம் இருக்­கின்­றன.  இப்­போது அவர் இடம் மாறிப் போன­தால், மாற்றி மாற்­றிப் பேசு­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் கேட்ட கேள்­விக்கு முத­ல­மைச்­சர் பதில் சொல்­வார் என்று நாங்­கள் எல்­லாம் எதிர்­பார்த்­துக்­கொண்டு  இருந்­தோம். முத­ல­ 
மைச்­சரே அதைத்­தான் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘திங்­கட்­கி­ழமை பதில் சொல்­கி­றேன்.  யாரும் ஓடா­மல் இருங்­கள்’ என்று சொல்­லி­ விட்டு அவர் ஓடிப்­போய்­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் சொன்ன வார்த்­தை­யைத்­தான் நான் சொன்­னேன்.  பதில் சொல்­லட்­டும்.  அதற்­கா­கத்­தான் நாங்­கள் காத்­துக்­கொண்டு இருக்­கி­றோம்.  இந்த அரசு காவல் துறை­யில் மிக­வும் 
சீர்­கெட்டுப் போயி­ருக்­கி­றது என்­பதை மீண்­டும் மீண்­டும் நாங்­கள் பதிய வைக்­கி­றோம்.  முடிந்­தால், இதற்கு தகுந்த பதில்­களை முத­ல­மைச்­ச­ரா­வது திங்­கட்­கி­ழமை கொடுப்­பார் என்று நம்­பிக்­கை­யோடு இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி துப்­பாக்­கிச் சூட்­டின்­போது நீதி­ய­ர­சர் அருணா ஜெக­தீ­சன் அவர்­கள் தலை­மை­யில், ஒரு கமிட்டி அமைக்­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று சொல்­கி­றார்.  நான் சொல்­கி­றேன், அந்தக் கமிட்டி கொடுத்த அறிக்கை உங்­கள் கையில் இருக்­கி­றது.  அந்த நட­வ­டிக்­கையை இப்­போது நீங்­கள் எடுங்­கள்.  உண்­மை­யா­கவே அர­சுக்கு தைரி­யம் இருந்­தால் நாங்­கள் எடுக்கத் தவ­றிய அந்த நட­வ­டிக்­கையை நீங்­கள் எடுங்­கள் என்று நான் சவால் விடு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அவர்­கள் பேசும்­போது சொன்­னார், துணை முத­ல­மைச்­ச­ராக நான் இருக்­கும்­போது சட்­ட­மன்­றத்­துக்கு வர­வில்லை;  என் சார்­பாக, முத­ல­மைச்­சர் பதில் சொன்­னார் என்று!  அது நடந்­தது ஒரே ஒரு நாள்.  எனக்கு உடல்­நிலை சரி­யில்லை.  மானி­யக் கோரிக்­கை­யில் நான் பதில் சொல்ல வேண்­டி­யது.  முத­ல­மைச்­சர் எழுந்து ‘‘அவர் நாளை வந்து பதில் சொல்­வார்’’ என்று சொன்­னார்.  நான் அன்­றைக்கு அவைக்கு வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இன்­றைக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் அவை­யி­லேயே இருக்­கி­றார்.  அப்­படி இருக்­கும்­போது, அவர் பதில் சொல்­லா­மல், ஏன் நீங்­க­ளெல்­லாம் பதில் சொல்­கி­றீர்­கள் என்­ப­து­தான் எங்­க­ளின் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் அவர்­கள் தயா­ராக வந்­தி­ருக்­கி­றோம், 100 நாட்­க­ளாக இதைத்­தான் தயார் செய்­தோம் என்று சொன்­னார்.  நாங்­க­ளும் உங்­கள் முத­ல­மைச்­ச­ரைத் தயார்  செய்­து­விட்டு வாருங்­கள் என்­று­தான் சொன்­னோமே தவிர, நீங்­கள்­தான் சொன்­னீர்­கள், ‘‘தயா­ராக இருக்­கி­றார்.  தயா­ரா­கி­விட்டு வரு­வார்’’  என்று சொன்­னீர்­கள்.  அதை­த்தான் நாங்­க­ளும் சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">அர­சி­யல் ஆபத்தை அறிந்து நாங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">தயா­ராக இருக்­கி­றோம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொன்று, எப்­போ­தா­வது ஆபத்து அதி­க­மாக இருக்­கும்­போது நாம் கொஞ்­சம் Prepared–ஆக (தயா­ராக) இருப்­பது நல்­லது.  எனவே, இந்த அர­சில் மிகப்­பெ­ரிய ஆபத்து இருக்­கி­றது.  எனவே, நாங்­கள் எப்­போ­தும் ப்ரீப்­பேர்­டா­கத்­தான்  (தயா­ரா­கத்­தான்) இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் அவர்­கள், தேர்­த­லுக்கு முன்பு நாங்­கள் அவ­ரைப்­பற்றி பேசி பேசித்­தான் இந்த நிலை­மைக்கு வந்­து­விட்­டோம் என்று சொன்­னார்.  உண்­மை­யைச் சொல்­லட்­டுமா, நான், எங்­கள் கழ­கத் தலை­வர், எங்­கள் முன்­ன­ணித் தலை­வர்­கள் யாரும் அவர்­க­ளைப் பற்றிப் பேசா­மல் இருந்­த­தால்­தான் அவர்­கள் இந்தப் பக்­கம் வந்­து­விட்­டார்­கள்.  ஒரு வார்த்­தைக்­ கூட அவர்­க­ளைப்­பற்றி நாங்­கள் பேசவே இல்லை.  பேசி­ய­தற்­கான ஆதா­ரம் ஏதா­வது இருந்­தால் காட்­டுங்­கள். ஏனென்­றால், ஒரு பிரச்­சா­ரக் கூட்­டத்­தில்­கூட இவர்­களைப் பற்றி நாங்­கள் பேச­வும் இல்லை.  இவர்­களை நாங்­கள் விமர்­ச­ன­மும் செய்­ய­வில்லை.  அதே­மா­திரி அவர்­கள் தலை­வர் பேச, நாங்­கள் அனு­மதி கொடுக்­க­வில்லை என்று சொல்­கி­றார்.  எங்­கெல்­லாம் சட்­டப்­பூர்­வ­மாக அனு­மதி கொடுக்க முடி­யுமோ அங்­கெல்­லாம் அனு­மதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.  அனை­வ­ருக்­கும் என்ன விதி­கள் பின்­பற்­றப்­பட்­டதோ அது­தான். தேர்­தல் விதி­முறை வந்­த­வு­டன், 
அவற்­றை­யெல்­லாம்தேர்­தல் ஆணை­யம் எடுத்­துக்­கொள்­வார்­கள்.  அவர்­கள்­தான் முடி­வெ­டுப்­பார்­கள்.  இது அரசு எடுக்­கக்­கூ­டிய முடிவு கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சில மாவட்­டங்­க­ளுக்கு எல்­லாம் சென்று, அவர்­க­ளின் தலை­வர், இப்­போது இருக்­கின்ற முத­ல­மைச்­சர் பிரச்­சா­ரம் செய்­தார்.  குறிப்­பாக கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­துக்­கெல்­லாம் சென்­றார்.  அங்கு ஒரு தொகு­தி­கூட அவர்­கள் வெற்­றி­பெ­ற­வில்லை.  இன்­னும்­சொல்­லப்­போ­னால் இது மெஜா­ரிட்டி இல்­லாத அர­சா­கத்­தான் நடந்­து கொண்டு இருக்­கி­றது.  பெரும்­பான்­மையே அவர்­க­ளுக்குக் கிடை­யாது.  எங்­கள் தய­வில் அவர்­க­ளின் ஆட்சி இன்று நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்­சர் சொன்ன எஸ்.ஓ.பிஸ் எல்­லாம் எந்த சம்­ப­வத்­துக்குப் பிறகு போடப்­பட்­டது என்று அவர்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­ப­வில்லை.  அதைப் பேச ஆரம்­பித்­தால் மீண்­டும் பெரிய விவா­த­மா­கி­வி­டும்.  நீங்­கள் சரி என்று சொன்­னால் நான் பேசு­கி­றேன்.  பேர­வைத் தலை­வர் அனு­மதி கொடுத்­தீர்­கள் என்­றால், நான் 
பேசு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு சட்­டப் பேர­வை­யில், எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>