<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 03:38:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260905T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="05092026-CHN-05" position.sequence="05" ex-ref="05092026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் மீனவர்களுக்கென்றே தனியே மாநாடு நடத்தப்பட்டது! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">மீனவர்களின் சமூகப் பொருளாதார பாதுகாப்புக்காக பல சீரிய திட்டங்களை நிறைவேற்றியது கழக ஆட்சி! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் பேச்சு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">குளச்சல் – தேங்காய்பட்டணம் பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்தோம்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup838927_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup860669_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup838825_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="AnithaR.Radha_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, செப்.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் 
முன்­னாள் அமைச்­சர் அனிதா இரா­தா­
கி­ருஷ்ணன் பேசு­கை­யில் பொரு­ளா­தார பாது­காப்­பினை உறுதி செய்­யும் வித­மாக முத்­தான பல சீரிய திட்­டங்­களை மீன­வர்­க­ளுக்­காக செயல்­ப­டுத்­தி­யுள்­ளது திரா­விட மாடல் ஆட்சி என்று பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் முன்­னாள் அமைச்­சர் அனிதா ஆர்.ராதா­
கி­ருஷ்­ணன் பேசி­ய­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா ஆகி­யோ­ரின் வழி­யில் நவீன தமிழ்­நாட்டை உரு­வாக்­கிய சமூக நீதிக் காவ­லர், சமத்­து­வப் பிதா­ம­கன், எங்­கள் நெஞ்­ச­மெல்­லாம் நிறைந்­தி­ருக்­கும் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரா­விட மாடல் ஆட்சி பொறுப்­பேற்று, கடந்த 5 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்டை அனைத்­துத் துறை­க­ளி­லும் முதன்மை மாநி­ல­மாக உரு­வாக்­கி­யும், ஏழை­யெ­ளிய மற்­றும் விளிம்­பு­நிலை மக்­க­ளின்  வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­தும்­வ­கை­யில் பல்­வேறு மக்­கள் நலத் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தி­யும், மாநி­லங்­க­ளின் உரி­மை­களை யாருக்­கும் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் தன்­னாட்­சிக் கொள்­கை­யில் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் வழி­யில் தமி­ழை­யும், தமிழ்­நாட்டு மக்­க­ளின் உரி­மை­க­ளை­யும் பாது­காத்து இந்­திய நாட்­டிற்கே வழி­காட்­டி­யாக முத­ல­மைச்­ச­ருக் கெல்­லாம் முத­ல­மைச்­ச­ராக இருந்து தமிழ்­நாட்டை முன்­மா­திரி மாநி­ல­மாக வழி­ந­டத்தி வந்த எங்­கள் தலை­வர் மாண்­பு­மிகு முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு எனது பணி­வான வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள் தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்­குத் துணை­யாக நின்று, அர்ப்­ப­ணிப்­பு­டன் பணி­யாற்­றிய எங்­கள்  இளைய தலை­வர், இந்த அவை­யில் எங்­க­ளை­யெல்­லாம் வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கின்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்பு சகோ­த­ரர் திரு. உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு எனது அன்பு வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள் தலை­வர் அவர்­க­ளு­டைய வழி­காட்­டு­த­லோடு தமிழ்­நாட்­டின் உரி­மைக்­காக நாடா­ளு­மன்­றத்­தில் தொடர்ந்து குரல் கொடுத்­து­வ­ரும் எங்­கள் நாடா­ளு­மன்­றக் குழு உறுப்­பி­னர் திரு­மதி கனி­மொழி கரு­ணா­நிதி, எம்.பி. அவர்­க­ளுக்­கும், என்­னைத் தொடர்ந்து ஏழா­வது முறை­யாக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்வு செய்து, இந்த அவைக்கு அனுப்பி வைத்த திரு ச்­செந்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி மக்­க­ளுக்­கும், எனது வெற்­றிக்­காக அய­ராது உழைத்த இயக்க சகோ­த­ரர்­க­ளுக்­கும், தோழ­மைக் கட்­சித் தோழர்­க­ளுக்­கும் எனது மன­மார்ந்த நன்­றி­யை­யும், வணக்­கத்­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். மேலும், இந்த மானி­யக் கோரிக்­கை­யில் பேசு­வ­தற்கு அனு­மதி வழங்­கிய தங்­க­ளுக்­கும் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பாதாள சாக்­க­டைத் திட்­டத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மறு சீர­மைப்பு செய்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்­னு­டைய தொகு­தி­யாக இருக்­கின்ற திருச்­செந்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில், திருச்­செந்­தூர் நக­ராட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரும் பாதாள சாக்­கடை குழாய்­கள் அள­வில் சிறி­ய­தாக இருப்­ப­தால், அடிக்­கடி குழாய்­க­ளில் அடைப்பு ஏற்­பட்டு, junction points வழி­யாக நிறைந்து கழி­வு­நீர் வெளி­யேறி சாலை­க­ளில் பெருக்­கெ­டுத்து ஓடு­கி­றது. இத­னால் அருள்­மிகு சுப்­பி­ர­ம­ணி­ய­ சு­வாமி திருக்­கோ­யி­லுக்கு தின ந்­தோ­றும் வந்து செல்­லும் பக்­தர்­கள் மற்­றும் பொது­மக்­கள் மிக­வும் சிர­மத்­திற்­குள்­ளா­ கின்­ற­னர். இத­னால் நோய் பர­வும் அபா­ய­மும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே, இன்­றைய திருச்­செந்­தூர் மக்­கள்­தொகை மற்­றும் திருக்­கோ­யி ­லுக்கு தினந்­தோ­றும் வந்து செல்­லும் வெளி­யூர் பக்­தர்­க­ளின் எண்­ணிக்­கை­யி­னைக் கருத்­திற்­கொண்டு, ஏற்­கெ­னவே நிறை­வேற்றி செயல்­பட்­டு­வ­ரும் பாதாள சாக்­க­டைத் திட்­டத்­தினை IIT மூலம் ஆய்வு செய்து, பாதாள சாக்­க­டைத் திட்­டத்­தினை மறு­சீ­ர­மைப்பு செய்து மேம்­ப­டுத்த வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல, திருச்­செந்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி காயல்­பட்­டி­னம் நக­ராட்­சி­யில் சுமார் 40 ஆயி­ரம் மக்­கள் வசிக்­கின்­ற­னர். சுமார் 18 ஆயி­ரம் வீடு­கள் உள்­ளன. மக்­கள்­தொ­கை­யின் அடிப்­ப­டை­யில் தற்­போது மொத்த வார்­டு­க­ளின் எண்­ணிக்கை 18 ஆக உள்­ளது. சிறு­பான்மை சமூ­கத்­தைச் சார்ந்த இஸ்­லா­மி­யப் பெரு­மக்­கள் அதி­கம் வசிக்­கின்ற பகு­தி­யாக உள்­ளது. எனவே, உயர்ந்­து­வ­ரும் மக்­கள்­தொ­கை­யின் அடிப்­ப­டை­யில் வார்டு எண்­ணிக்­கையை அதி­கப்­ப­டுத்த வேண்­டு­மென்­பது காயல்­பட்­டி­னம் மக்­க­ளின் நீண்­ட­நாள் கோரிக்­கை­யாக உள்­ளது. எனவே, அக்­கோ­ரிக்­கையை நிறை­வேற்­றும்­மு­க­மா­க­வும், நக­ராட்­சி­யில் நிர்­வாக வச­திக்­கா­க­வும் வார்டு மறு­வ­ரை­யறை செய்­யும் பணியை மேற்­கொண்டு வார்­டு­க­ளின் எண்­ணிக்­கையை கணி­ச­மாக அதி­கப்­ப­டுத்த வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய அரசு எப்­போ­தெல்­லாம் ஆட்­சிப் பொறுப்­பேற்­கின்­றதோ, அப்­போ­தெல்­லாம் மீன­வர்­க­ளு­டைய சமூக, பொரு­ளா­தார பாது­காப்­பினை உறு­தி­செய்­யும்­வி­த­மாக முத்­தான பல சீரிய திட்­டங் களை மீன­வர்­க­ளுக்­காக செயல்­ப­டுத்தி வந்­துள்­ளது என்­பதை இந்த மாமன்­றத்­தில் தெரி­விப்­ப­தில் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கி­றேன். குறிப்­பாக, சொல்­ல­வேண்­டு­மா­னால், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­யி­ லி­லி­ருந்த மீன­வர்­களை மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் சேர்க்க வேண்­டு­மென்ற மீன­வர்­க­ளின் நீண்­ட­நாள் கோரிக்­கை­யினை ஏற்று, மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் அவர்­க­ளைச் சேர்த்து மீன­வர்­க­ளின் வாழ்­வில் ஒளி­யேற்­றி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­பதை நான் இங்கே எடுத்­துச் சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மீன­வர் நல வாரி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமைத்­த­வர் கலை­ஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டி­லுள்ள அனைத்­துப் பிரிவு மீன­வர்­க­ளு­டைய சமூக, பொரு­ளா­தார பாது­காப்­பினை உறு­தி­செய்­தி­டும்­வ­கை­யில், 2007 ஆம் ஆண்­டு­தான் முதன்­மு­த­லில் மீன­வர்­க­ளுக் கென ‘மீன­வர் நல வாரி­யம்’ என்ற அமைப்­பினை அன்­றைய முதல்­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் உரு­வாக்­கி­னார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) கட­லில் மீன்­பி­டித் தொழி­லில் ஈடு­பட்­டுள்ள மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மீன்­பி­டித் தடைக் காலத்­தி­னால் பாதிக்­கப்­ப­டு­வதை அறிந்து, அவர்­க­ளு­டைய துய­ரத்­தைப் போக்­கிட, 2008 ஆம் ஆண்டு மீனவ குடும்­பங்­க­ளுக்கு மீன்­பிடி தடைக் கால நிவா­ர­ணம் வழங்­கும் திட்­டத்தை முதன்­மு­த­லில் நாட்­டிற்­குத் தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்­தான். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மண்­ணெண்­ணெ­யி­னால் இயங்­கக்­கூ­டிய இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் நாட்­டுப் பட­கு­க­ளுக்­கும், போதிய அள­வில் மானிய விலை­யில் மண்­ணெண்­ணெய் வழங்க வேண்­டு­மென்ற மீன­வர்­க­ளின் கோரிக்­கை­யினை ஏற்று, 2010 ஆம் ஆண்டு, நாட்­டுப் பட­கு­க­ளுக்கு, லிட்­டர் ஒன்­றுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலை­யில் மீன­வர்­க­ளுக்கு மண்­ணெண்­ணெய் வழங்­கும் திட்­டத்தை அறி­வித்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். இன்­றைக்கு நான் அந்த மண்­ணெண்­ணெ­யைப் பற்­றிச் சொல்ல வேண்­டு­மென்று சொன்­னால், கடந்த காலத்­தில், எங்­கள் பகு­தி­யில் இருக்­கின்ற தூத்­துக்­குடி, திரு­நெல்­வேலி, கன்­னி­யா­கு­மரி பகு­தி­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் பயன்­ப­டுத்­து­கின்ற அந்த engine–ல் மண்­ணெ ண்­ணெ­யைத் தான் பயன்­ப­டுத்­தி­னார்­கள். அவர்­கள் மண்­ணெண்­ணெ­யைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்று சொன்­னால், அப்­போது அந்த மண்­ணெண்­ணெயை அர­சும் வழங்­க­வில்லை, தனி­யா­ரும் வழங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆகவே, அவர்­கள் தொழில் செய்­வ­தற்கு அன்­றைக்­குத் திண்­டா­டிய நிலை­யில், அத­னால் ஏற்­பட்ட இடைஞ்­சல்­கள் குறித்து, தமி­ழ­கத்­தின் முத­ல­மைச்­ச­ராக இருந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய கவ­னத்­திற்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது. அன்­றைக்கு உண­வுத் துறை அமைச்­ச­ராக இருந்த மரி­யா­தைக்­கு­ரிய அண்­ணன் எ.வ. வேலு அவர்­களை உட­ன­டி­யாக டெல்­லிக்கு அனுப்பி, எந்த வகை­யி­லா­வது மானிய விலை­யில் மண்­ணெண்­ணெ­யைப் பெற்­றுத் தர வேண்­டும் என்று அன்­றைக்கு முத்­த­மி­ழ­றி­ஞர் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள் உத்­த­ர­விட்­டார்­கள். அண்­ணன் எ.வ.வேலு அவர்­க­ளும் டெல்­லிக்­குச் சென்­றார்­கள். அன்­றைக்கு ஒன்­றிய அர­சாங்­கத்­தின் அமைச்­சர்­களை எல்­லாம் நாடி, மண்­ணெண்­ணெயை மானிய விலை­யில் தர வேண்­டு­மென்று கேட்­ட­போது, ‘நாங்­கள் மானிய விலை­யில் மண்­ணெண்­ணெ­யைத் தர மாட்­டோம், ஆனால், company–களுக்­குக் கொடுக்­கக்­கூ­டிய மண்­ணெண்­ணெயை மட்­டும் நாங்­கள் தரு­கின்­றோம் என்று சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­போது நம்­மு­டைய முத்­த­மி­ழ­றி­ ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ‘மீன­வர்­கள் நம்­மு­டைய சகோ­த­ரர்­கள், மீன­வர்­கள் தொழில் செய்­வ­தற்கு நாம் என்­னென்ன உத­வி­கள் செய்ய வேண்­டுமோ, அதை­யெல்­லாம் செய்ய வேண்­டும், எனவே நாமே அவர்­க­ளுக்­கான நிவா­ர­ணங்­களை வழங்­க­லாம்’ என்று சொன்­னார்­கள். அந்த வகை­யில், எந்த காலத்­தி­லும் லிட்­டர் ஒன்­றுக்கு 25 ரூபாய் என்ற விலை­யில்­தான் மண்­ணெண்­ணெய் வழங்­கப்­பட வேண்­டும் என்ற திட்­டத்­தைத் தந்த தலை­வர் நம்­மு­டைய முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இன்­றைக்கு 25 ரூபாய்க்­குக் கொடுக்­கின்­றோம் என்று சொன்­னால், இன்­றைக்கு வெளி market–ல் மண்­ணெண்­ணெ­யின் விலை 90 ரூபாய். ஆனால், இன்­றும் 25 ரூபாய்க்­கு­தான் அந்த மண்­ணெண்­ணெயை வழங்க வேண்­டு­மென்று ஆணை­களை வழங்­கிய வகை­யில், மீன­வர்­கள் பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­கள் என்­பதை நான் இங்கே சொல்­லிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மீன்­பி­டித்­து­றை­மு­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமைக்­கப்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீன­வர்­க­ளு­டைய எதிர்­கால நல­னைக் கருத்­தில்­கொண்டு, எங்­கள் தலை­வர் கலை­ஞர் ஆட்­சிக் காலத்­தில்­தான் 2008 ஆம் ஆண்டு, கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், குளச்­சல் பகு­தி­யி­லும், 2009 ஆம் ஆண்டு கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், தேங்­காய்ப்­பட்­டி­னம் பகு­தி­யி­லும், 2010 ஆம் ஆண்டு நாகப்­பட்­டி­னத்­தி­லும் மீன்­பி­டித் துறை­மு­கங்­கள் அமைக்­கப்­பட்டு, மீன­வர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரம் பாது­காக்­கப்­பட்­டது என்­பதை பெரு­மை­யு­டன் இந்த அவை­யில் நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, திரா­விட நாய­கர் அண்­ணன் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­ற­வு­டன், ‘மீன்­வ­ளத் துறை’ என்று இருந்த பெயரை, ‘மீன்­வ­ளம் மற்­றும் மீன­வர் நலத் துறை’ என்று மாற்­றம் செய்­தது என்­பது மீன­வர்­க­ளு­டைய நலன்­மீது எங்­கள் தலை­வர் கொண்ட அன்­பிற்­கும், அக்­க­றைக்­கும் மிகச்­சி­றந்த எடுத்­துக்­காட்­டா­கும். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் 5 ஆண்­டுக்­கால ஆட்­சி­யில், கன்­னி­யா­கு­ம­ரி­யி­லி­ருந்து திரு­வள்­ளூர் வரை, 14 மீன­வக் கிரா­மங்­க­ளி­லும் அனைத்து மீன­வர்­க­ளின் மீன்­பி­டித் தொழி­லைப் பாது­காக்­கும் வகை­யில், மீன்­பிடி இறங்கு தளங்­கள், மீன் வலை கூடங்­கள், தூண்­டில் வளை­வு­கள், அலைத் தடுப்­புச் சுவர்­கள், சிறு துறை­மு­கங்­கள் உள்­ளிட்ட அனைத்து மேம்­பாட்­டுப் பணி­க­ளை­யும் ரூ.2,261 கோடி மதிப்­பீட்­டில், இது­வரை இல்­லாத அள­விற்கு செய்­து­காட்­டி­யுள்­ளோம் என்­பதை இந்த அவை­யில் நான் பெரு­மை­யு­டன் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மீன­வர்­க­ளுக்­குத்­தான் மாநாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­வ­ரை­யில் எந்த முத­ல­மைச்­ச ­ரும் மீன­வ­ருக்­கென்று அர­சின் சார்­பாக மாநாடு நடத்­திய வர­லாறே கிடை­யாது. ஆனால், கழ­கத்­தி­னு­டைய தலை­வ­ராக இருக்­கின்ற மரி­யா­தைக்­கு­ரிய அண்­ணன் தள­பதி அவர்­கள், 2023–ல் இரா­ம­நா­த­பு­ரத்­தில் மீன­வர்­க­ளுக் கொன்று தனி மாநாட்டை நடத்­தி­னார்­கள். அந்த மாநாடு நடை­பெற்­ற­போது, மீன­வர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­யதுமட்­டு­மல்­லா­மல், 10 அறி­விப்­பு­க­ளை­யும் வெளி­யிட்­டார்­கள். அதில் ஒன்று, கட­லோ­ரம் வசிக்­கின்ற மீன­வர்­க­ளுக்கு அரசு மற்­றும் தொண்டு நிறு­வ­னங்­கள்­மூ­லம் வீடு­கள் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால், அவ்­வாறு கட்­டப்­பட்ட வீடு­க­ளில் பல­வற்­றுக்கு வீட்­டு­ம­னைப் பட்டா வழங்­கப்­பட்­டதா என்­றால் இல்லை. இத­னால் வீடு­க­ளைப் பழு­து­பார்க்­க­வும், வங்­கிக் கடன் பெற­வும் மீன­வர்­கள் பெரும் சிர­மத்தை எதிர்­கொண்­டி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு குறிப்­பாக சொல்ல வேண்­டு­மென்று சொன்­னால், கட­லோ­ரப் பகு­தி­யில் இருக்­கின்ற மீன­வர்­க­ ளுக்கு தொண்டு நிறு­வ­னங்­கள் மற்­றும் அர­சின் சார்­பாக வீடு­கள் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. வீடு­கள் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது என்று சொன்­னால், அது பழு­த­டைந்­தால், பழு­து­கூட பார்க்க முடி­யாது. அதை விரி­வு­ப­டுத்த வேண்­டு­மென்ற வகை­யில் அவர்­கள் திட்­ட­மிட்­டார்­கள் என்று சொன்­னால்—bank–க்­கும் போக முடி­யாது. என்ன கார­ணம் என்று சொன்­னால், அவர்­க­ளுக்கு பட்டா இல்­லாத நிலை இருந்­தது. இந்த நிலை­க­ளை­யெல்­லாம் உட­ன­டி­யாக மாற்ற வேண்­டு­மென்ற வகை­யில், அந்த மாநாடு நடை­பெ­று­கின்­ற­போது, தமி­ழ­கத்­தின் மாண்­பு­மிகு முன்­னாள் முத­ல­மைச்­ச­ராக இருந்த எங்­க­ளு­டைய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள், உட­ன­டி­யாக அவர்­க­ளுக்கு பட்டா வழங்க வேண்­டு­மென்ற வகை­யில், பட்டா வழங்­கு­வ­தற்­காக ஒரு ஆணை வழங்­கி­னார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) 8,561 வீடு­க­ளுக்கு வீட்­டு­ம­னைப் பட்டா வழங்­கப்­பட்டு, அவர்­க­ளு­டைய நீண்­ட­கால கோரிக்­கையை நிறை­வேற்­றித் தந்த அர­சு­தான் திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு என்­பதை நான் இங்கு எடுத்­துச் சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீன­வர்­கள் முன்­பெல்­லாம் நிவா­ர­ணத் தொகை பெற வேண்­டும், எந்த சலு­கை­க­ளை­யும் பெற வேண்­டு­மென்­றால், 60 வய­திற்­குட்­பட்­ட­வர்­கள்­தான் அந்த பயனை அடைய வேண்­டும் என்ற நிலை இருந்­தது. ஆனால், அந்த மாநாட்­டில் அன்­றைக்கு மீன­வர்­கள் வைத்த பல்­வேறு கோரிக்­கை­க­ளைக் கேட்டு, 60 வயது மட்­டு­மல்ல, மீன­வர்­கள் தொழில் எவ்­வ­ளவு நாட்­கள் செய்­கின்­றார்­களோ, எந்த வயது வரை செய்­கின்­றார்­களோ அது­வ­ரை­யி­லும் அவர்­கள் அந்­தப் பயனை அடைய வேண்­டும் என்­கிற வகை­யில், அதற்­கான ஆணை­களை வழங்­கி­ய­வர் யார் என்று சொன்­னால் எங்­க­ளு­டைய தலை­வ­ராக இருக்­கின்ற மரி­யா­தைக்­கு­ரிய அண்­ணன் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீன­வர்­க­ளு­டைய நீண்­ட­நாள் கோரிக்­கையை ஏற்று, மீன்­பிடி தடைக்­கால நிவா­ர­ணத் தொகையை 5 ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து 8 ஆயி­ரம் ரூபா­யா­க­வும், மீன்­பிடி குறைவு கால நிவா­ர­ ணத்­தொ­கையை 5 ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து 6 ஆயி­ர­மா­க­வும் உயர்த்தி வழங்­கி­ய­வர் எங்­கள் தலை­வர் அவர்­கள்­தான். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் உங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில், மீன்­பிடி தடைக்­கால நிவா­ர­ ணத்தை 20 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கு­வோம் என்று அறி­வித்­தீர்­கள். உங்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில், தடைக்­கால நிவா­ர­ணத்தை 20 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கு­வோம் என்று அறி­வித்­தீர்­கள். ஆனால், இன்­றைக்கு அறி­விப்பு வந்­தி­ருக்­கின்­றது, அறி­விப்பை பார்க்­கின்­ற­போது, தடைக்­கால நிவா­ர­ணத்தை, எங்­கே­யா­வது 20 ஆயி­ரம் ரூபா­யாக அறி­வித்து இருக்­கின்­றோமா, நீங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் கொடுத்த அறிக்­கையை, அறி­வித்து இருக்­கின்­றோமா என்ற கேள்­வியை நான் கேட்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். மீன­வர்­க­ளுக்கு நீங்­கள் அறி­வித்த 20 ஆயி­ரம் ரூபாயை தடைக்­கால பண­மாக வழங்க வேண்­டு­மென்ற கோரிக்­கையை நான் சபை­யில் வைக்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யில்­தான், ஆயி­ரம் நாட்­டுப் படகு மீன­வர்­க­ளுக்கு 40 சத­வி­கி­தம் மானி­யத்­தில் இயந்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டன. 45 ஆயி­ரம் மீன­வர்­க­ளுக்கு மீன்­பி­டித் தொழி­லுக்­காக கூட்­டு­றவு சங்­கங்­கள்­மூ­லம் கட­னு­தவி வழங்­கப்­பட்­டன. திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி மாவட்ட நாட்­டுப் படகு மீன­வர்­க­ ளுக்கு மண்­ணெண்­ணெய் ஆண்­டுக்கு 3 ஆயி­ரத்து 400 லிட்­ட­ரி­லி­ருந்து 3 ஆயி­ரத்து 700 லிட்­ட­ராக உயர்த்தி வழங்­கப்­பட்­டது. விசைப் படகு மீன­வர்­க­ளுக்கு மானிய விலை­யில் வழங்­கப்­ப­டும் டீசல் ஆண்­டுக்கு 19 ஆயி­ரம் லிட்­ட­ராக உயர்த்தி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாற்­றுத் தலை­வர் அவர்­களே, கட­லில் மீன் பிடிக்­கும்­போது காணா­மல்­போன மீன­வர்­க­ளி­னு­டைய குடும்­பங்­க­ளின் நிலை எப்­படி இருக்­கும் என்­பதை நினைத்­துப் பார்க்­கவே மனம் பத­று­கி­றது. அவர்­க­ளு­டைய குடும்­பம் மிக வறு­மை­யி­லும், துன்­பத்­தி­லும் ஆழ்ந்து கிடப்­பதை அறிந்து, அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் உத­வித் தொகையை நாள் ஒன்­றுக்கு, 250 ரூபா­யி­லி­ருந்து 350 ரூபா­யாக உயர்த்தி வழங்­கிய தலை­வர் எங்­க­ளு­டைய தலை­வர் என்­பதை நான் இங்கு சுட்­டிக் காட்ட கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். அது­மட்­டு­மல்­லா­மல், இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்த மீன­வர்­கள் இலங்­கை­யில் பிடி­ப­டு­கின்­ற­னர். இலங்­கை­யில் பிடி­ப­டு­ கின்ற மீன­வர்­க­ளின் குடும்­பத்­திற்கு 350 ரூபாய் மட்­டு­மல்ல, 500 ரூபாய் வழங்க வேண்­டு­மென்­கிற வகை­யில், ஆணை வழங்­கி­ய­வ­ரும் எங்­க­ளு­டைய தலை­வர்­தான் என்­பதை நான் இங்கு சுட்­டிக்­காட்ட கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம், தங்­கச்­சி­ம­டம் மீன் இறங்கு தளத்தை, மீன் பிடித் துறை­மு­க­மாக தரம் உயர்த்­த­வும், குந்­து­கால் மீன் இறங்கு தளத்தை தூண்­டில் வளை­வாக மேம்­ப­டுத்­த­வும், பாம்­பன் வடக்கு மீன­வர் கிரா­மத்­தில் தூண்­டில் வளைவு அமைக்­க­வும் உத்­த­ர­விட்ட அரசு, எங்­கள் திரா­விட மாடல் அரசு. மேலும், மீன­வர் நல மாநாட்­டில் மீன­வப் பெண்­கள் கடற்­பாசி வளர்த்து, வரு­வாய் ஈட்­டும் வகை­யில் பல்­நோக்கு கடற்­பாசி பூங்கா அமைக்க அறி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீன­வர்­கள் நல மாநாட்­டில் புதிய திட்­டங்­க­ளுக்­காக மட்­டு­மல்ல, ரூ.926 கோடி ஒதுக்­கீடு செய்து செயல்­ப­டுத்­தி­ய­வர் எங்­கள் அன்­புத் தலை­வர், எங்­கள் தள­பதி அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாண்­பு­மிகு மாற்­றுத் தலை­வர் அவர்­களே, தமிழ்­நாடு மீன்­வ­ளப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மீன­வர் சமு­தாய மாண­வர்­கள் படிப்­ப­தற்கு கடந்த காலங்­க­ளில் 5 சத­வி­கி­தம்­தான் அவர்­க­ளுக்­கான இட ஒதுக்­கீடு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இன்­றைக்கு மீன­வர்­கள் பாதிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்­குக் குறிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்று சொன்­னால், நம்­மு­டைய மீன­வர்­கள் இலங்­கைக் கடற்­ப­டை­யால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­கள். பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார் கள் என்று சொன்­னால் கடந்த காலங்­க­ளில் பாதிக்­கப்­பட்ட மீன­வர்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள் எவ்­வ­ளவு நாள் பட­கு­க­ளெல்­லாம் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னவோ அந்­தப் பட­கு­க­ளுக்­கெல்­லாம் நிவா­ர­ணம் வழங்­கு­வ­தற்­காக நிதி­களை வழங்­கி­ய­வர் எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இலங்­கை­யில், மீன­வர்­கள் 38 பேர் இன்­றைக்கு இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் அங்கு பிடிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">269 மீன்­பிடி பட­கு­க­ளும் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் அங்கே சிறை வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது உங்­க­ளு­டைய புள்­ளி­வி­வ­ரத்­தி­லி­ருந்து பெறப்­பட்­டது. ஆனால், எங்­க­ளு­டைய தலை­வர், அந்­தப் பட­கு­க­ளை­யெல்­லாம் மீட்­ப­தற்கு ஒவ்­வொரு பட­குக்­கும் ரூ.8 இலட்­சம் வீதம் பணத்தை கொடுத்­தார்­கள். ஆனால், நீங்­கள் அறி­வித்­தி­ருப்­பது என்­ன­வென்று சொன்­னால், இந்­தப் பட­கு­க­ளை­யெல்­லாம் மீட்­ப­தற்­காக ரூ.1,86,00,000 வழங்க வேண்­டு­மென்­கின்ற வகை­யில் இன்­றைக்கு அறி­வித்­தி­ருக்­கின்­றீர்­கள் என்று சொன்­னால், எத்­தனை பட­கு­களை மீட்­ப­தற்­காக இந்­தத் தொகை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை அமைச்­சர் அவர்­கள் எடுத்­துச்­சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">269 பட­கு­கள் சிறை­பி­டிக்­கப்­ப­பட்­டுள்­ளன!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு குறிப்­பா­கச் சொல்ல வேண்­டு­மென்று சொன்­னால், 269 பட­கு­கள் அங்கே சிறை வைக்­கப்­பட்டு மாட்­டி­யி­ருக்­கி­றார்­கள். சரி, இலங்­கை­யி­லி­ருந்து பட­கு­களை மீட்­கப்­ப­டு­வ­தற்­கு­ தான் வெளி­யு­ற­வுத் துறை, பிர­த­மர் உள்­ளிட்­டோரை சந்­திப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும்; ஆனால், பக்­கத்­தில் இருக்­கிற ஆந்­திர பிர­தே­சத்­திற்கு சமீ­பத்­தில் சென்ற 7 பட­கு­கள், சமீ­பத்­தில் கூட­லூர் சென்ற 8 பட­கு­கள் அங்கே சிறை வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த காலங்­க­ளில் அப்­படி மீன­வர்­கள் செல்­கின்­றார்­கள் என்று சொன்­னால், அந்த... (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">8 பட­கு­கள் அங்கே ஆந்­தி­ரா­வில் மாட்­டி­யி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­னால், இந்­தப் பட­கு­கள் பிடிக்­கப்­பட்டு, ஏறக்­கு­றைய 80 நாட்­கள், 90 நாட்­கள் ஆகி­விட்­டன. ஆனால், இங்­கே­யி­ருக்­கின்ற ஆந்­திர பிர­தே­சத்­தில் இருக்­கிற பட­கு­களை மீட்­ப­தற்கே, இந்த அர­சால் முடி­ய­வில்­லை­யென்று சொன்­னால், இன்­றைக்கு மாண்­பு­மிகு ஆந்­திர பிர­தே­சத்­தின் முத­ல­மைச்­சர் அவர்­கள் சமீ­பத்­தில்­தான் மகா­ப­லி­பு­ரம் வந்­தார்­கள். அவ­ரி­டம் சொல்­லி­யா­வது அதனை சரி செய்­தி­ருக்­க­லாம். ஆனால், இங்­கே­யி­ருக்­கிற அதி­கா­ரி­களோ யாரும்––­க­டந்த காலங்­க­ளி­லெல்­லாம் மீன­வர்­கள் செல்­வார்­கள்; பேசு­வார்­கள்; boats வந்­து­வி­டும். ஆனால், அந்­தப் பட­கு­க­ளெல்­லாம் வரா­மல், இன்­றைக்கு மீன­வர்­க­ளெ ல்­லாம் தவிக்­கின்ற தவிப்பு, சாதா­ரண தவிப்­பல்ல. ஏறக்­கு­றைய 90 நாட்­க­ளுக்கு மேல் ஆகி­விட்­டது. இன்­றைக்கு இந்த அரசு எடுத்த நட­வ­டிக்கை குறித்து தெரி­விக்க வேண்­டு­மென்று மாண்­பு­மிகு அமைச்­ச­ரைக் கேட்­டுக்­கொள்­கி­றேன். இந்­தப் பட­கு­க­ளை­யெல்­லாம் மீட்­டுத் தர வேண்­டு­மென்று வேண்­டு­கோளை வைக்க கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தி­ருக்­கின்­றீர்­கள். 100 நாட்­கள் ஆகி­யி­ருக்­கின்­றது. பல்­வேறு வாக்­கு­று­தி­கள் என்று சொன்­னா­லும், அந்த வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் நீங்­கள் நிறை­வேற்­றித் தந்து, மீன­வர்­க­ளை­யும், விவ­சாய பெரு­மக்­க­ளை­யும் காக்­கின்ற பணி­களை நீங்­கள் செய்ய வேண்­டு­மென்ற வேண்­டு­கோளை வைத்து, நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன். நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொகுதி கோரிக்­கை­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருச்­செந்­தூர் தொகுதி, காயல்­பட்­டி­ணம் நக­ராட்­சி­யின் அனைத்து பகு­தி­க­ளி­லும் மழை­நீர் வடி­கால் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருச்­செந்­தூர் தொகுதி, அருள்­மிகு சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யி ­லுக்கு வெளி வட்ட சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தொகுதி, கடற்­கரை கிரா­மங்­க­ளான வீர­பாண்­டி­யப்­பட்­டி­னம், மணப்­பாடு பகு­தி­க­ளில் மீன­வர்­கள் எளி­தில் பட­கு­களை கட­லுக்­குள் கொண்டு செல்­வ­தற்­கும், கரை திரும்­பு­வ­தற்­கும் வச­தி­யாக மணல் திட்­டு­களை அகற்­றப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தொகுதி, உடன்­குடி ஊராட்­சிக்­குட்­பட்ட குல­சே­க­ரன்­பட்­டி­னம் ஊராட்­சியை பேரூ­ராட்­சி­யாக தரம் உயர்த்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருச்­செந்­தூர் தொகுதி, காயல்­பட்­டி­ணம் நக­ராட்சி பகு­தி­யில் ஒரு அரசு ஆண்­கள் மேல்­நி­லைப் பள்­ளியை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தொகுதி, ஆறு­மு­க­நேரி பேரூ­ராட்­சி­யின் 18 வார்­டு­க­ளை­யும் ஒரே வரு­வாய் கிரா­மத்­தின் கீழ் செயல்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தொகு­திக்­குட்­பட்ட நாச­ரேத் பேரூ­ராட்­சி­யில் சூப்­பர் ஸ்பெஷா­லிட்டி மருத்­து­வ­மனை அல்­லது டைடல் பார்க் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தொகு­தி­யில், உடன்­கு­டி­யில் அரசு தொழில் நுட்ப கல்­லூரி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தொகுதி, நரி­கு­ளம், மனச்­சி­கு­ளம், அய்­ய­னார் குளம், ஊரணி, செட்­டி­யா­பத்து, வடக்­கு­ளம், சிரி­கு­ளம், குண்­டன்­கரை போன்ற குளங்­க­ளும் நிரப்ப சடை­ய­நேரி உபரி நீரை பயன்­ப­டுத்­திட நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டத்­திற்­கு­ரிய தாமி­ர­ப­ரணி ஆறு தண்­ணீரை உரிய காலத்­தில் திறந்­திட வழி­வகை செய்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தொகுதி, காயல்­பட்­டி­ணம் நக­ராட்சி பகு­தி­யில் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு பட்டா வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தேசிய நெடுஞ்­சாலை வீர­பாண்­டி­ய­ 
பட்­டி­ணத்­தில் அரசு தொழில் நுட்ப கல்­லூரி வளா­கத்­தில் நவீன விளை­யாட்டு மைதா­னம் (மினி ஸ்டேடி­யம்) அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி மாவட்­டம், திருச்­செந்­தூர் தேசிய நெடுஞ்­சாலை வீர­பாண்­டி­ய­பட்­டி­ ணம் அரசு தொழில் நுட்ப கல்­லூரி வளா­கத்­தில் தேசிய நெடுஞ்­சா­லை­யின் முகப்பு பகு­தி­யில் தமிழ்­நாடு மாநில தலைமை கூட்­டு­றவு இணை­யம் சார்­பில் மீன­வர்­க­ளுக்கு மானிய டீசல் வழங்க நிலை­யம் அமைத்­துத்  தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர்அனிதா இரா­தா­கி­ருஷ்­ணன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>