<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,800,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 04 2026 14:27:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260905T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05092026-TRY-07" position.sequence="07" ex-ref="05092026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup840742_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup840531_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ப</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ழுத்த மட்டை விழு­வ­தும், குருத்­தோலை வளர்­வ­தும் தென்னை மரத்­திற்கு இயல்பு. விழு­வ­தைக் கண்டு தென்­னை­ம­ரம் பத­று­வ­தில்லை. புதி­தாக வளர்­வது எது என்­ப­தில்­தான் தென்னை மரத்­தின் கவ­னம் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">75 ஆண்­டு­க­ளைக் கடந்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எனும் சமு­தாய மறு­ம­லர்ச்­சிக்­கான அர­சி­யல் இயக்­கம், தேர்­தல் களத்­தில் ஏற்­ப­டும் வெற்­றி­கள்-­தோல்­வி­க­ளைக் கண்டு பத­று­வ­தில்லை.   தோல்­வி­யின்  வலி­யை­விட, இயக்­கத்­தின் வலி­மை­யில்­தான் தி.மு.க. கவ­னம் செலுத்­தும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கொள்­கைத் திரு­வி­ழா­வான முப்­பெ­ரும் விழா­வை­யொட்டி 2026ஆம் ஆண்­டுக்­கான விரு­து­களை அறி­வித்­தி­ருக்­கி­றார் கழ­கத் தலை­வர் நம் திரா­விட நாய­கர். பெரி­யார் விருது கழக விவ­சாய அணி­யின் துணைச் செய­லா­ளர் கு.செல்­லப்பா அவர்­க­ளுக்­கும், அண்ணா விருது சேலம்          மத்­திய மாவட்ட அவைத் தலை­வர் சேலம்  ஜி.கே.சுபாஷ் அவர்­க­ளுக்­கும், கலை­ஞர் விருது கழக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும்- தி.மு.க. வின் மாநி­லங்­க­ள­வைக் குழுத் தலை­வ­ரு­மான திருச்சி சிவா எம்.பி. அவர்­க­ளுக்­கும், பாவேந்­தர் விருது கழக மருத்­துவ அணித்  தலை­வ­ரா­ன-­       நா­டா­ளு­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் டாக்­டர் கனி­மொழி என்.வி.என்.சோமு அவர்­க­ளுக்­கும், பேரா­சி­ரி­யர் விருது தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்  மிசா   எஸ்.அக­மது  தம்பி  அவர்­­களுக்­கும், மு.க.ஸ்டாலின் விருது இளை­ஞ­ரணி துணைச்   செய­லா­ளர்  நா.இளை­ய­ராஜா அவர்­க­ளுக்­கும் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. விருது பெற­வி­ருக்­கிற அனை­வ­ருமே கழ­கத்­தோடு பின்­னிப் பிணைந்து தங்­கள் வாழ்வை அமைத்­துக் கொண்­ட­வர்­கள். ஒவ்­வொ­ரு­வ­ரும் கழ­கத்­தின் வளர்ச்­சிக்­காக ஆற்­றிய பணி­க­ளை -­எ­திர்­கொண்ட நெருக்­க­டி­களை முப்­பெ­ரும் விழா மேடை­யில் விரி­வாக அறி­விப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கலை­ஞர் விருது பெறு­கிற  கழக துணைப் பொதுச் செய­லா­ளர் திருச்சி சிவா எம்.பி. அவர்­கள் கல்­லூரி மாண­வ­ராக மிசா சிறை­வா­சத்தை எதிர்­கொண்­ட­வர். சென்னை மத்­திய சிறை­யில் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும், திருச்சி         மத்­திய சிறை­யில் திருச்சி சிவா அவர்­க­ளும் மிசா கைதி­க­ளாக இருந்­தார்­கள். இரு­வ­ருமே சிறை­      யி­லி­ருந்து போலீஸ் பாது­காப்­பு­டன் அவ­ர­வர் 
கல்­லூ­ரி­க­ளுக்­குச் சென்று தேர்வு எழு­தி­விட்டுமீண்­டும் சிறைக்­குத் திரும்­பி­ய­வர்­கள். தலை­மை­யின்கட்­ட­ளையை ஏற்று, வாழ்­வின் வசந்­த­கா­ல­மான இள­மைப் பரு­வத்­தி­லேயே இயக்­கத்­திற்­கா­க­வும் அதன் கொள்­கைக்­கா­க­வும் சிறை­வா­சத்தை         அனு­ப­வித்த தீரர்­கள் கோட்­டம்­தான் தி.மு.கழ­கம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீதிக்­கட்­சி-­சு­ய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் காலத்­தி­லி­ருந்தே பேர­றி­ஞர் அண்­ணா­வு­டன் பய­ணித்­த­வர் என்.வி.நட­ரா­சன் அவர்­கள். தி.மு.க.வின் உரு­வாக்­கத்­தில் அண்­ணா­வுக்­குத் துணை நின்­ற­வர். 1938ஆம் ஆண்டு நடந்த முதல் இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்­தில் என்.வி.நட­ரா­ச­னின் குடும்­பம் முழு­வ­துமே பங்­கேற்­றது. அவ­ரது துணை­வி­யார் புவ­னேஸ்­வரி அம்­மை­யார் தன் இடுப்­பில் கைக்­கு­ழந்­தை­யு­டன் சிறைக்­குச் சென்­றார். அந்­தக் குழந்­தை­யின் பெயர் சோம­சுந்­த­ரம். பின்­னா­ளில், தி.மு.க தொழிற்­சங்­கத்­தில் முக்­கிய பங்­காற்றி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வெற்றி பெற்று, ஒன்­றிய பாது­காப்­புத்­துறை இணை அமைச்­ச­ரா­க­வும் இருந்த என்.வி.என்.சோமு அவர்­கள்­தான் அந்த சோம­சுந்­த­ரம். அப்­ப­டிப்­பட்ட பாரம்­ப­ரி­ய­மான கழ­கக் குடும்­பத்­தின் வழித்­தோன்­றல்­தான் முப்­பெ­ரும் விழா­வில் பாவேந்­தர் விருது பெற­வி­ருக்­கின்ற டாக்­டர்         கனி­மொழி என்.வி.என்.சோமு அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழ­கத்­தின் வளர்ச்­சிக்­காக உழைத்த மூத்த உடன்­பி­றப்­பு­க­ளான திரு.கு.செல்­லப்பா, ஜி.கே. சுபாஷ், மிசா எஸ்.அக­மது தம்பி ஆகி­யோ­ரு­டன் இளம் வய­தி­லேயே டெல்டா மாவட்­டக் கழ­கப் பணி­க­ளில் தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக்­கொண்டு திறம்­பட செயல்­பட்டு வரும் இளைய உடன்­பி­றப்­பான நா.இளை­ய­ராஜா அவர்­க­ளும் விரு­துப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றி­ருக்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மூத்­தோர், இளை­யோர், பெண்­மணி, சிறு­பான்­மை ­யி­னர், பட்­டி­யல் இனத்­த­வர் என கழ­கத்­திற்­கா­கப்பாடு­ப­டும் எல்­லாத் தரப்­பி­ன­ரை­யும் ஒருங்­கி­ணைத்து, 2026ஆம் ஆண்­டுக்­கான தி.மு.க.வின் முப்­பெ­ரும் விழா விரு­தா­ளர்­க­ளைத் தேர்வு செய்து அறி­வித்­தி­ருக்­கி­றார் திரா­விட நாய­க­ராம் நம் கழ­க த்­த­லை­வர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழக உடன்­பி­றப்­பு­க­ளின் பணி­க­ளைப் பாராட்­டும் விதத்­தி­லும், மூத்­த­வர்­க­ளின் அர்ப்­ப­ணிப்­பைக் கண்டு, இளைய உடன்­பி­றப்­பு­கள் ஆர்­வத்­து­டன் கழ­கப் பணி­யில் ஈடு­ப­ட­வும் 1985ஆம் ஆண்டு முதல் கழக முப்­பெ­ரும் விழா­வில்           விரு­து­கள் வழங்கி சிறப்­பிக்­கும் வழக்­கத்தை உரு­வாக்­கி­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். தொடக்­கத்­தில் பெரி­யார், அண்ணா, கலை­ஞர் பெயர்­க­ளில்  ஆண்­டு­தோ­றும் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. முதன்­மு­த­லில் பெரி­யார் விருது பெற்­ற­வர் தஞ்­சைப் பெரி­யார் என அழைக்­கப்­பட்ட மன்னை நாரா­ய­ண­சாமி அவர்­கள். அந்த ஆண்டு அண்ணா விருது பெற்­ற­வர் இன­மா­னப் பேரா­சி­ரி­யர் அவர்­கள். கலை­ஞர் விருது பெற்­ற­வர் கவி­ஞர் பொன்­னி­வ­ள­வன் அவர்­கள். இந்த மூன்று விரு­து­க­ளு­டன் அதன்­பி­றகு பாவேந்­தர் விருது, பேரா­சி­ரி­யர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகி­ய­வை­யும் 
ஒவ்­வொன்­றாக இணைந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேற்கு மண்­ட­லத்­தின் கழ­கத் தள­கர்த்­தர்­க­ளில் ஒரு­வ­ரா­க­வும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும், ஒருங்­கி­ணைந்த கோவை மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரா­க­வும் சிறப்­பாக செயல்­பட்­ட­வர் புஞ்சை புளி­யம்­பட்டி சாமி­நா­தன். இரு­வண்­ணக் கரை­வேட்­டியை 1953ஆம் ஆண்­டில் முதன் முத­லில் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர் அவர்­தான். சாமி­நா­தன் வீட்­டில் அண்ணா, கலை­ஞர், பேரா­சி­ரி­யர் உள்­ளிட்ட கழ­கத்­தி­னர் பல­ரும் உண­வ­ருந்­தி­ய­வர்­கள். அவர்­க­ளுக்­குத் தன் கையால்பரி­மா­றி­ய­வர் அவ­ரது துணை­வி­யார் சம்­பூர்­ணம்சாமி­நா­தன் அவர்­கள். எமர்­ஜென்சி காலத்­தில் சாமி­நா­த­னும் கோவை கழக முன்­ன­ணி­யி­ன­ரும் மிசா சட்­டத்­தில் கைதாகி சிறைக்­குச் செல்­கி­றார்­கள். மிசா சிறை­வா­சி­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு கழ­கத்­தின் சார்­பில் மாதந்­தோ­றும் 200 ரூபாய் வழங்­கப்­பட்­டது. அப்­போது அது பெரிய தொகை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எமர்­ஜென்­சி­யில் கண­வர் சாமி­நா­தன் சிறைக்­குச் சென்ற நிலை­யி­லும், சம்­பூர்­ணம் சாமி­நா­தன் அவர்­கள் கலங்­கா­மல் கழ­கப் பணி­க­ளில் ஈடு­பட்­டார். மிசா சிறை­வா­சி­க­ளான கோவை மாவட்­டக் கழ­கத்­தி­ன­ரின் வீடு­க­ளுக்­குச் சென்று, அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு ஆறு­தல் தெரி­வித்து, கழ­கத்­தின் சார்­பில் மாதந்­தோ­றும் 200 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து வந்­தார் சம்­பூர்­ணம் அம்­மாள். கொள்­கைக் குடும்­ப­மா­கத் திகழ்ந்த சம்­பூர்­ணம் சாமி­நா­தன் அவர்­க­ளின் கழ­கப் பணி­யைப் போற்­றும் வகை­யில் முப்­பெ­ரும் விழா­வில் அவ­ருக்கு பெரி­யார் விருது அளித்­துச் சிறப்­பித்­தார் திரா­விட நாய­க­ரான கழ­கத் தலை­வர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் விருது வழங்­கிச் சிறப்­பிக்­கப்­பட்ட சம்­பூர்­ணம் சாமி­நா­தன் அவர்­கள், இந்த ஆண்­டுக்­கான விருது அறி­விப்­பு­ கள் வெளி­யான நாளில் மறை­வெய்­தி­னார். தலை­மைக் கழ­கத்­தின் விருது அறி­விப்­பும்,         அம்­மை­யா­ரின் மறை­வுக்­குத் கழ­கத் தலை­வர் தெரி­வித்த இரங்­க­லும் முர­சொ­லி­யில் ஒரே நாளில் வெளி­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முப்­பெ­ரும் விழா­வில், தலை­வர்­கள் பெய­ரி­லான விரு­து­க­ளு­டன், திறம்­ப­டக் கழ­கப் பணி­யாற்றி வரும் ஒன்­றி­ய-­ந­க­ர-­ப­கு­தி-­பே­ரூர் கழ­கச் செய­லா­ளர்­க­ளும் கழ­கத் தலை­வர் அவர்­க­ளால் மேடை­யில் சிறப்­பிக்­கப்­ப­டு­வது வழக்­க­மாக உள்­ளது. மூத்த முன்­னோ­டி­க­ளுக்கு பொற்­கிழி வழங்­கி­டும் கழ­கம், இளம் உடன்­பி­றப்­பு­களை ஊக்­கு­விக்­கும் வகை­ யி­லான பாராட்­டு­களை இளை­ஞ­ரணி வாயி­லா­கத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">   
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தியா­கத் தழும்­பு­க­ளால் உரு­வான இயக்­கம்­தான் தி.மு.கழ­கம். ஆண்­டாண்­டு­கா­ல­மாக பரப்­பப்­ப­டும் அவ­தூ­று­களை எதிர்­கொண்டு முறி­ய­டித்து, தமிழ்ச் சமு­தா­யத்­தின் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­ப­டு­கிற மக்­கள் இயக்­கம் இது. தி.மு.க.வின் பய­ணத்­தில் கலை­ஞ­ரின் மூத்த பிள்­ளை­யான முர­சொ­லி­யின் பங்கு மகத்­தா­னது. இன்­ற­ள­வும் அது தொடர்­கி­றது. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்,  முர­சொலி மாறன் ஆகி­யோ­ரைத் தொடர்ந்துமுர­சொ­லி­யின் ஆசி­ரி­யர் பொறுப்­பேற்று, கொள்கைமுர­சத்­தைத் தொடர்ந்­த­வர்  முர­சொலி செல்­வம் அவர்­கள். கழ­கத் தலை­வ­ருக்கு உறவு முறை­யில் மாமா என்­றா­லும் அண்­ண­னாக, தோழ­னாக  இருந்து அர­சி­ய­லில் வழி­ந­டத்­தி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கக் கொள்­கை­க­ளைத் திறம்­பட வெளிப்­ப­டுத்­தும் படைப்­பா­ளி­க­ளைத் தொடர்ந்துஊக்­கு­வித்து, அவர்­க­ளின் படைப்­பு­களை முர­சொ­லி­யில் வெளி­யிட்டு வந்த முர­சொலி செல்­வம் அவர்­கள் இரண்­டாண்­டு­க­ளுக்கு முன் மறைந்த நிலை­யில், முர­சொலி அறக்­கட்­டளை சார்­பில்முர­சொலி செல்­வம் அவர்­க­ளின் பெய­ரால் முப்­பெ­ரும்விழா­வில் விருது வழங்­கப்­பட்டு வரு­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முர­சொலி செல்­வம் பெய­ரி­லான முதல் விருது, கடந்த ஆண்டு மூத்த பத்­தி­ரி­கை­யா­ள­ரும்-­தி­ரா­விட இயக்­கம் உரு­வாக்­கிய மாற்­றங்­கள் தொடர்­பாக ஆங்­கி­லத்­தில் பல கட்­டு­ரை­கள் எழு­தி­ய­வ­ரு­மான ஏ.எஸ்.பன்­னீர்­செல்­வன் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இந்த ஆண்­டுக்­கான விருது, கலை­ஞர் தொலைக்­காட்­சி­யின் செய்தி ஆசி­ரி­ய­ரும், திரா­விட இயக்­கம் மீதான அவ­தூ­று­களை ஆணித்­த­ர­மான வாதங்­க­ளால் தவி­டு­பொ­டி­யாக்­கும் எழுத்­தா­ள­ரு­மான தோழர் ப.திரு­மா­வே­லன் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அடிக்­கடி சொன்­னது போல, இயக்­கத்­தின் மூத்த முன்­னோ­டி­கள் பழுத்த மட்­டை­கள். தென்னை மரத்­தி­லி­ருந்து மட்­டை­கள் விழுந்­தா­லும், அவை இருந்த இடம், தழும்­பு­கள் போல மரத்­தில் நிலைத்­தி­ருக்­கும். தென்னை மரத்­தில் ஏறு­ப­வர்­க­ளுக்கு அவை 
படி­கள் போல உத­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கம் எந்­நா­ளும் காய்த்­துக் குலுங்கி, அனை­வ­ருக்­கும் பயன் தரும் தென்னை மரம் போன்­றது. இளை­ய­த­லை­முறை உய­ரச் செல்­வ­தற்கு, விருது பெற்ற மூத்­த­வர்­க­ளின் அனு­ப­வ­மும் அர்ப்­ப­ணிப்­பும் தென்னை மரத்­தில், மட்­டை­கள் உதிர்ந்த இடத்­தில் உள்ள தழும்­பு­கள் போல நிலைத்­தி­ருக்­கும்.  இளம்  குருத்­தோ­லை­கள்    காலந்­தோ­றும் வள­ரும். அதை உணர்ந்தே, திரா­விட அர­சி­யல் பேரி­யக்­க­மான தி.மு.கழ­கத்­திற்­குத் தேவை­யான மறு­சீ­ர­மைப்பை மேற்­கொண்­டி­ருக்­கி­றார் திரா­விட நாய­கர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>