<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,958,1204" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 03:56:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260905T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05092026-VLR-04" position.sequence="04" ex-ref="05092026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">பரந்தூர் முதல் மாமல்லன் நீர்த் தேக்கம் வரை... தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை நிறுத்தும் விஜய் அரசு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame858703_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858635_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M4bw_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M3bw_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17">Vijay Govt. drops DMK Govt Projects: முதல்­வர் விஜய் தலை­மை­யி­லான தவெக அரசு பொறுப்­பேற்ற பிறகு, முந்­தைய தி.மு.க. ஆட்­சி­யில் அறி­விக்­கப்­பட்ட பல்­வேறு உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­கள் கைவி­டப்­ப­டு­
வ­தும் மறு ஆய்­வுக்கு உட்­ப­டு­வ­தும் தொட­ரு­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம் ரத்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யின் 2-வது விமான நிலை­யத்தை 
காஞ்­சி­பு­ரம் மாவட்­டம் பரந்­தூ­ரில் அமைக்­கும் 
திட்­டத்தை முந்­தைய திமுக அரசு முன்­னெ­டுத்­தது. இதற்­காக பரந்­தூர் மற்­றும் அத­னைச் சுற்­றி­யுள்ள 
கிரா­மங்­க­ளில் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் பணி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விவ­சாய நிலங்­கள், குடி­யி­ருப்­பு­கள் மற்­றும் 
நீர்­நி­லை­கள் பாதிக்­கப்­ப­டும் என்று கூறி பரந்­தூர், 
ஏக­னா­பு­ரம் உள்­ளிட்ட கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் தொடர்ந்து போராட்­டம் நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தவெக தொடங்­கப்­பட்ட பிறகு விஜய் நடத்­திய முதல் மக்­கள் போராட்­ட­மும் பரந்­தூர் விமான நிலை­யத்­துக்கு எதி­ரா­ன­தாக அமைந்­தது. ஆட்­சிக்கு வந்­தால் விவ­
சா­யி­க­ளை­யும் நீர்­நி­லை­க­ளை­யும் பாதிக்­கும் வகை­யில் பரந்­தூ­ரில் விமான நிலை­யம் அமைக்­கப்­ப­டாது என்­றும் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில், பரந்­தூ­ரில் விமான நிலை­யம் அமைக்­கும் திட்­டத்தை முன்­னெ­டுக்­கப் போவ­தில்லை என்று விஜய் அரசு அறி­வித்­துள்­ளது. அதே­நே­ரத்­தில் சென்­னைக்கு 2-வது விமான நிலை­யம் அமைக்­கும் திட்­டம் முழு­மை­யா­கக் கைவி­டப்­ப­ட­வில்லை. விவ­சாய நிலங்­கள் மற்­றும் நீர்­நி­லை­ க­ளுக்கு அதிக பாதிப்பு ஏற்­ப­டாத மாற்று இடத்தை அரசு தேடி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கோயில் நிதி­யில் 46 திட்­டங்­கள் ரத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முந்­தைய திமுக ஆட்­சி­யில் கோயில் நிதி­யைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்ட 
46 கட்­டு­மா­னத் திட்­டங்­க­ளின் நிர்­வாக அனு­ம­தியை முதல்­வர் விஜய் அரசு ரத்து செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன்­படி, ரூ.115.77 கோடி மதிப்­பி­லான 29 
திரு­மண மண்­ட­பங்­கள் மற்­றும் ரூ.130.08 கோடி மதிப்­பி­லான 17 வணிக வளா­கங்­கள் என மொத்­தம் ரூ.245.85 கோடி மதிப்­பி­லான திட்­டங்­கள் ரத்து 
செய்­யப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீதி­மன்­றத் தடை­கள் மற்­றும் கோயில்­க­ளுக்கு 
ஏற்­ப­டும் நிதிச்­சுமை ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்­கொண்டு நிர்­வாக அனு­ம­தி­கள் திரும்­பப் பெறப்­பட்­ட­தாக அரசு விளக்­கம் அளித்­துள்­ளது. கோயில் நிதி இனி கோயில்­க­ளின் பரா­ம­ரிப்பு, பக்­தர்­க­ளுக்­கான வச­தி­கள் மற்­றும் பாரம்­ப­ரி­யப் பாது­காப்­புப் பணி­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">காஞ்­சி­பு­ரம் புதிய நக­ரத் திட்­டம் 
கைவி­டப்­பட்­டது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காஞ்­சி­பு­ரம் நக­ரத்­தின் திட்­ட­மி­டப்­ப­டாத வளர்ச்­சி­யைக் கட்­டுப்­ப­டுத்­த­வும், அதன் பாரம்­ப­ரிய அடை­யா­ளத்­தைப் பாது­காக்­க­வும் முந்­தைய திமுக அரசு புதிய நகர மேம்­பாட்­டுத் திட்­டத்தை அறி­வித்­தி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 2023-ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட அறி­விப்­பின்­படி, 18 வரு­வாய் கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய 62.78 சதுர கிலோ மீட்­டர் பரப்­பில் காஞ்­சி­பு­ரம் புதிய நக­ரத்தை அமைக்­கத் திட்­ட­மி ­டப்­பட்­டது. காஞ்­சி­பு­ரத்­தின் வர­லாற்று மற்­றும் பாரம்­ப­ரி­யப் பகு­தி­க­ளைப் பாது­காப்­ப­தற்­கான தனித் திட்­ட­மும் இதில் இடம்­பெற்­றி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில், காஞ்­சி­பு­ரம் புதிய நகர மேம்­பாட்­டுத் திட்­டத்­தை­யும் பாரம்­பரிய மறு­ம­லர்ச்­சித் திட்­டத்­தை­யும் கைவி­டு­வ­தற்­கான ஆணையை விஜய் அரசு வெளி­யிட்­டுள்­ளது. இது­தொ­டர்­பான அறி­விப்பு தமிழ்­நாடு அர­சி­த­ழி­லும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">குளோ­பல் ஸ்போர்ட்ஸ் சிட்டி 
பணி ஆணை ரத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை செம்­மஞ்­சே­ரி­யில் உல­கத் தரத்­தி­லான விளை­யாட்டு நக­ரத்தை அமைப்­ப­தற்­கான திட்­டத்தை முந்­தைய திமுக அரசு அறி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">80 ஏக்­க­ருக்­கும் அதி­க­மான பரப்­பில் சர்­வ­தே­சத் தரத்­தி­லான கால்­பந்து மைதா­னம், துப்­பாக்­கிச் சுடு­தல் மற்­றும் வில்­வித்தை மையங்­கள், பட­குப் போட்டி 
வச­தி­கள், சைக்­கிள் மற்­றும் ஸ்கேட்­டிங் அரங்­கு­கள், 
உள்­வி­ளை­யாட்டு அரங்­கு­கள் மற்­றும் விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான விடு­தி­கள் அமைக்­கத் திட்­ட­மி­டப் 
­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் திட்­டத்­துக்­காக RPP Infra Projects நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்ட ரூ.205.89 கோடி மதிப்­பி­லான பணி ஆணை­யைத் தமிழ்­நாடு 
விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணை­யம் தற்­போது ரத்து செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முந்­தைய திட்­டத்­தை­வி­டப் பெரிய பரப்­பில், ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் உள்­ளிட்ட சர்­வ­தே­சப் போட்­டி­களை நடத்­து­வ­தற்கு ஏற்ற வகை­யில் 
விரி­வான விளை­யாட்டு நக­ரத்தை உரு­வாக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக விஜய் அரசு தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">வளை­ய­பட்டி சிப்­காட் திட்­டம் இட­மாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாமக்­கல் மாவட்­டம் மோக­னூர் அருகே உள்ள வளை­ய­பட்­டி­யில் சிப்­காட் தொழிற்­பூங்கா அமைக்க முந்­தைய தி.மு.க. அரசு திட்­ட­மிட்­டி­ருந்­தது. இந்­தத் திட்­டத்­தால் விவ­சாய நிலங்­க­ளும் சுற்­றுச்­சூ­ழ­லும் பாதிக்­கப்­ப­டும் என்று கூறி அப்­ப­குதி விவ­சா­யி­கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில், வளை­ய­பட்­டி­யில் சிப்­காட் தொழிற்­பூங்கா அமைக்­கும் திட்­டம் கைவி­டப்­ப­டும் என்று தமி­ழக வணி­க­வரி மற்­றும் பதி­வுத்­துறை அமைச்­சர் லோகேஷ் தமிழ்ச்­செல்­வன் அறி­வித் ­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­குப் பதி­லாக நாமக்­கல் மாவட்­டத்­தி­லேயே 
லத்­து­வாடி பகு­தி­யில் புதிய சிப்­காட் தொழிற்­பூங்கா அமைக்­கப்­ப­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">ECR உயர்­மட்ட சாலை பணி­கள் நிறுத்­தி­வைப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை திரு­வான்­மி­யூ­ரி­லி­ருந்து உத்­தண்டி வரை கிழக்­குக் கடற்­கரை சாலை­யில் 13 கிலோ 
மீட்­டர் தொலை­வுக்கு உயர்­மட்ட சாலை அமைக்­கும் திட்­டத்தை முந்­தைய திமுக அரசு அறி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுமார் ரூ.2,100 கோடி மதிப்­பீட்­டில் நான்கு வழிப்­பா­தை­யாக இந்த உயர்­மட்­டச் சாலையை அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. நீலாங்­கரை, அக்­கரை உள்­ளிட்ட முக்­கி­யப் பகு­தி­க­ளில் நுழைவு மற்­றும் வெளி­யே­றும் பாதை­க­ளை­யும் அமைக்க முடிவு 
செய்­யப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. அரசு பொறுப்­பேற்ற பின்­னர் இந்­தத் 
திட்­டத்­தின் மதிப்­பீடு குறித்து கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டன. இதை­ய­டுத்து, பணி­க­ளைத் தற்­கா­லி­க­மாக 
நிறுத்­து­மாறு ஒப்­பந்­த­தா­ர­ருக்கு அறி­விப்பு வழங்­கப் ­பட்­ட­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2026–27 நிதி­யாண்­டுக்­கான நெடுஞ்­சா­லைத்­துறை கொள்கை விளக்­கக் குறிப்­பில், முந்­தைய ஆண்­டு­க­ளில் இருந்து தொட­ரும் பணி­க­ளின் பட்­டி­ய­லி­லும் இந்­தத் திட்­டம் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கைவி­டப்­ப­டு­கி­றதா மாமல்­லன் நீர்த்­தேக்­கம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யின் தெற்­குப் புற­ந­கர் பகு­தி­க­ளின் குடி­நீர்த் தேவையை பூர்த்தி செய்­வ­தற்­காக, செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் மாமல்­லன் நீர்த்­தேக்­கம் அமைக்­கும் திட்­டத்தை முந்­தைய திமுக அரசு தொடங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவ­ளம் வடி­நி­லப் பகு­தி­யில், கிழக்­குக் கடற்­க­ரைச் சாலைக்­கும் பழைய மாமல்­ல­பு­ரம் சாலைக்­கும் இடையே திருப்­போ­ரூர் மற்­றும் திருக்­க­ழுக் ­குன்­றம் வட்­டங்­களை உள்­ள­டக்­கிய பகு­தி­யில் இந்த நீர்த்­தேக்­கம் அமைக்­கத் திட்­ட­ மி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரூ.342.60 கோடி மதிப்­பி­லான இந்­தத் திட்­டத்­துக்கு அப்­போ­தைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் 2026 ஜன­வரி 19-ம் தேதி அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுமார் 5,161 ஏக்­கர் பரப்­பில் அமை­யும் இந்த நீர்த்­தேக்­கத்­தின் மொத்­தக் கொள்­ள­ளவு 1.65 டிஎம்சி. மானா­மதி தொகுப்­பைச்சேர்ந்த 69 ஏரி­க­ளி­லி­ருந்து கட­லுக்­குச் செல்­லும் உப­ரி­
நீ­ரைத் தேக்கி, ஆண்­டுக்கு 2.25 டிஎம்சி வரை தண்­ணீ­ரைப் பயன்­படுத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன் மூலம் சோழிங்­க­நல்­லூர், மேட­வாக்­கம், பள்­ளிக்­க­ரணை, 
சிறு­சேரி, கேளம்­பாக்­கம், திருப் ­போ­ரூர் மற்­றும் மாமல்­ல­பு­ரம் உள்­ளிட்ட பகு­தி­க­ளைச் சேர்ந்த சுமார் 13 லட்­சம் மக்­க­ளுக்கு நாளொன்­றுக்கு 17 கோடி லிட்­டர் குடி­நீர் வழங்க முடி­யும் என்று தி.மு.க. அரசு தெரி­வித்­தி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், நீர்த்­தேக்­கம் அமைக்­கத் தேர்வு செய்­யப்­பட்­டுள்ள கோவ­ளம்–­நெம்­மேலி பகுதி, கடல்­நீ­ரும் நன்­னீ­ரும் கலக்­கும் முக்­கி­ய­மான கட­லோ­ரச் சதுப்பு நிலம் என்று சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்­கள் கூறு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திட்­டத்­தால் அப்­ப­கு­தி­யின் மீன்­வ­ளம், வல­சைப் 
பற­வை­க­ளின் வாழி­டம் மற்­றும் கட­லோர மீன­வக் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டும் என்று விஞ்­ஞா­னி­கள், சுற்­றுச்­சூ­ழல் அமைப்­பு­கள் மற்­றும் மீன­வர்­கள் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சோழிங்­க­நல்­லூர் மற்­றும் திருப்­போ­ரூர் பகு­தி ­க­ளில் நடை­பெற்றதேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது 
த.வெ.­க.­வும் இத்­திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிக்­கும் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தக் கூடாது என்று பல்­வேறு அமைப்­பு­கள் விஜய் அர­சுக்­குக் கோரிக்கை விடுத்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில், மாமல்­லன் நீர்த்­தேக்­கத்­துக்­கான கரை அமைக்­கும் பணி­கள் கடந்த ஒரு வார­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. திட்­டத்­தின் முதற்­கட்­டப் பணி­க­ளில் சுமார் 15 
சத­வி­கி­தம் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யில், நீர்­வ­ளத் ­துறை மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை உய­ர­தி­கா­ரி ­க­ளு­டன் அரசு ஆலோ­சனை நடத்­திய பிறகு பணி­கள் நிறுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">20 பொதுப்­பணி மற்­றும் நெடுஞ்­சாலை ஒப்­பந்­தங்­கள் மறு­டெண்­டர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முந்­தைய திமுக ஆட்­சி­யில் பொதுப்­ப­ணித்­துறை மற்­றும் நெடுஞ்­சா­லைத்­து­றை­யின் கீழ் வழங்­கப்­பட்ட பல்­வேறு ஒப்­பந்­தங்­களை விஜய் அரசு மறு­ ஆய்வு செய்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்­சி­யில் டெண்­டர் விடப்­பட்ட 20 பணி­க­ளுக்கு மறு­டெண்­டர் கோரப்­பட்­ட­தா­க­வும், புதிய டெண்­டர்­க­ளில் திட்ட மதிப்­பீ­டு­கள் 20 முதல் 36 சத­வி­கி­தம் வரை குறைந்­துள்­ள­தா­க­வும் அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா சட்­டப்­பே­ர­வை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முந்­தைய ஆட்­சி­யில் திட்ட மதிப்­பீ­டு­கள் அதி­க­ரிக்­கப்­பட்­ட­தா­கக் குற்­றம்­சாட்­டி­யுள்ள அவர், பொதுப்­பணி மற்­றும் நெடுஞ்­சா­லைத்­துறை திட்­டங்­க­ளின் தற்­போ­தைய நிலை குறித்து விரை­வில் வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­ப­டும் என்­றும் அறி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த 20 பணி­க­ளும் முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்­ட­தாக அரசு தெரி­விக்­க­வில்லை. பழைய ஒப்­பந்­தங்­கள் மறு­ஆய்வு செய்­யப்­பட்டு, குறைந்த மதிப்­பீட்­டில் மறு­டெண்­டர் கோரப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கேள்­விக்­கு­றி­யான பரந்­தூர் மெட்ரோ திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பூந்­த­மல்­லி­யி­லி­ருந்து சுங்­கு­வார்­சத்­தி­ரம் வழி­யாக பரந்­தூர் விமான நிலை­யம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க முந்­தைய அரசு திட்­ட­மிட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மொத்­தம் 53 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு 20 ரயில் நிலை­யங்­க­ளு­டன் இந்த வழித்­த­டத்தை அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டது. திட்­டத்­தின் முதல் கட்­ட­மாக பூந்­த­மல்­லி­யி­லி­ருந்து சுங்­கு­வா­ரத்­தி­ரம் வரை­யி­லான 28 கிலோ மீட்­டர் வழித்­த­டத்­துக்­கான நிலம் கைய­கப்­ப­டுத்­து­தல் மற்­றும் ஆரம்­பப் பணி­க­ளுக்கு ₹2,126 கோடி நிர்­வாக அனு­ம­தி­யும் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்­போது பரந்­தூர் விமான நிலைய இடம் 
கைவி­டப்­பட்­டுள்­ள­தால், பரந்­தூர் வரை­யி­லான மெட்ரோ ரயில் திட்­டத்­தின் எதிர்­கா­ல­மும் கேள்­விக்­குறி­யா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மெட்ரோ திட்­டம் ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக அரசு இது­வரை அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. சுங்­கு­வா­ரத்­தி­ரத்­து­டன் வழித்­த­டம் நிறுத்­தப்­ப­டுமா, புதிய விமான நிலை­யம் அமை­யும் இடத்தை நோக்கி மாற்­றப்­ப­டுமா அல்­லது புதிய வடி­வில் தயா­ரிக்­கப்­ப­டுமா என்­பது தெளி­வா­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மேலும் ஆறு புதிய நக­ரத் 
திட்­டங்­க­ளின் நிலை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரு­ம­ழிசை, மீஞ்­சூர், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு, மறை­ம­லை­ந­கர் மற்­றும் ஸ்ரீபெ­ரும்­பு­தூர் பகு­தி­க­ளில் புதியநக­ரங்­களை உரு­வாக்­கும் திட்­டங்­கள் முந்­தைய தி.மு.க. ஆட்­சி­யில் பரி­சீ­லிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆனால், விஜய் அர­சின் 2026–27 நகர்ப்­புற வளர்ச்­சித்­துறை கொள்கை விளக்­கக் குறிப்­பில் இந்­தத் திட்­டங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காஞ்­சி­பு­ரம் புதிய நக­ரத் திட்­டத்­துக்கு மட்­டுமே 
அதி­கா­ர­பூர்­வ­மான கைவி­டு­தல் ஆணை வெளி­யா­கி­யுள்­ளது. மற்ற ஆறு புதிய நக­ரத் திட்­டங் ­க­ளும் ரத்து செய்­யப்­பட்­ட­தாக அரசு இது­வரை அறி­விக்­க­வில்லை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>