<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="39,67,956,856" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 22:16:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260906T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06092026-CBE-03" position.sequence="03" ex-ref="06092026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="4">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">உத­ய­நிதி ஸ்டாலின் பேச்­சைக் கேட்­டால் ஓட்­டம்! எடப்­பாடி பழ­னி­சாமி பேச்சு மட்­டும் இனிக்­கி­றதா?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="manushBW_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வல்­துறை மானி­யக் கோரிக்கைமீதான விவா­தத்­தின்­போது சட்­டப்­பே­ர­வை­யில் நடந்த நிகழ்­வு­கள், த.வெ.க. அரசு தி.மு.க.வைக் கண்டு  –   முக்­கி­ய­மாக எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான உத­ய­நிதி ஸ்டாலி­னைக் கண்டு – எந்த அள­வுக்­குப் பதற்­றத்­தி­லும் அச்­சத்­தி­லும் இருக்­கி­றது என்­ப­தற்­குத் தெளி­வான சான்­று­க­ளாக அமைந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உத­ய­நிதி ஸ்டாலின் இந்த அர­சின் நான்கு மாத ஆட்­சி­யில் நில­வும் சட்ட ஒழுங்கு சீர்­கே­டு­க­ளைப் பட்­டி­ய­லிட்டு, “இதற்கு முத­ல­மைச்­சர் திசை­தி­ருப்­பா­மல், தர்க்­க­மற்ற குட்­டிக்­க­தை­கள் சொல்­லா­மல், மூன்று நாட்­கள் நன்­றா­கத் தயார் செய்து கொண்டு வந்து பேச­லாம்” என்று கூறி­னார். இது­தான் த.வெ.க. அமைச்­சர்­க­ளைப்பதற்­ற­ம­டை­யச் செய்­தது. உத­ய­நிதி  தன் பேச்­சின் தொடக்­கத்­தி­லேயே “இதைத்­தானே செய்­யப்­போ­கி­றீர்­கள்?” என அவர்­களை ‘லாக்’ செய்­து­விட்­டார். தங்­க­ளின் ஒரே ஆயு­தத்­தை­யும் பிடுங்­கப் பார்க்­கி­றாரே என்ற அச்­சத்­தில், அந்த ஆயு­தத்­தையே தூக்­கிக் கொண்டு அவர்­கள் விதண்­டா­வா­தத்­தில் இறங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உத­ய­நிதி எழுப்­பிய வினாக்­க­ளுக்­குப்பதி­ல­ளிக்க வேண்­டி­ய­வர் காவல்­து­றை­யைத்தன் வசம் வைத்­துள்ள முத­ல­மைச்­சர். “திங்­கள்­கி­ழமை முத­ல­மைச்­சர் பதி­ல­ளிப்­பார்” எனச் சபா­நா­ய­கர் தெளி­ வா­கக் கூறி­விட்­டார். அப்­ப­டி­யி­ருக்க, முத­ல­மைச்­சரை நோக்கி எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு வழக்­க­மா­கப் பேசும் அமைச்சர்­கள் ஏன் குறுக்­கிட்­டுப் பேச வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“கேள்­வி­க­ளுக்­குச் சம்­பந்­தப்­பட்டஅமைச்­சர்­கள்­தான்  பதி­ல­ளிக்க  வேண்­டும்”என்ற தன் சொந்த அறி­வு­றுத்­த­லையே மீறி, சபா­நா­ய­கர் ஏன் திரும்­பத் திரும்ப ஆதவ் அர்­ஜுனா, ராஜ்­மோ­கன், நிர்­மல்­கு­மார் ஆகி­யோரை அனைத்­துக் கட்­டங்­க­ளி­லும் குறுக்­கிட அனு­ம­திக்­கி­றார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கார­ணம் பயம். உத­ய­நிதி எழுப்­பியஆழ­மான கேள்­வி­க­ளும், தமிழ்­நாட்­டிற்கேகாது­குத்தி வரும் ‘தாய்­மா­மன் அரசு’ அடைந்­தி­ருக்­கும்  தோல்­வி­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தும் மக்­கள் மன­தில் பதிந்­து­ வி­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே தனி­ந­பர் 
தாக்­கு­தல்­க­ளும்  திசை­தி­ருப்­பும்  நாட­கங்­க­ளும் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உத­ய­நிதி எழுப்­பிய வினாக்­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கா­மல்,  அண்ணா   பல்­க­லைக்­க­ழக மாணவி விவ­கா­ரத்­தில் நீதி­மன்­றத் தீர்ப்பு வந்து குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­பட்ட பிறகு, சட்­டப்­பே­ர­வை­யில் அதை ஓர் அமைச்­சர்  எழுப்­பு­கி­றார்  என்­றால் இவர்­க­ளி­டம் எந்­தக் கேள்­விக்­கும் பதி­லில்லை என்­று­தானே பொருள்? எதிர்க்­கட்­சி­கள் யாரும் கேள்வி எழுப்­பி­வி­டக் கூடாது     என்­ப­தற்­கா­கவே கொள்கை விளக்­கக் குறிப்­பு­கள் படிக்க அவ­கா­சம் இன்றி, சட்­டப்­பே­ரவை கூடு­வ­தற்­குச் சில மணி நேரங்­க­ளுக்கு முன்பே தரப்­ப­டு­கின்­றன. எதிர்க்­கட்­சி­கள் பேசத் தொடங்­கி­ய­தும் அமைச்­சர்­க­ளின் பொய்­க­ளும் பித்­த­லாட்ட விதண்­டா­வா­தங்­க­ளும் தொடர்­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அமைச்­சர்­கள் தின­மும் சட்­டப்­பே­ர­வையை தி.மு.க. மீது அவ­தூறு பரப்­பு­வது என்ற ஒற்றை நோக்­கத்­திற்­காக  ‘ஹைஜாக்’ செய்­கி­றார்­கள். வேறு எந்த மக்­கள் பிரச்­சி­னை­யும் விவா­திக்­கப்­ப­டு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­சர் ஏன் அவையை விட்டு வெளி­யே­றி­னார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உத­ய­நிதி ஸ்டாலின் ஆணித்­த­ர­மாக வைத்த குற்­றச்­சாட்­டு­க­ளும் கேள்­வி­க­ளும்முத­ல­மைச்­சரை அமை­தி­யி­ழக்­கச் செய்­தன.தனக்­காக எப்­போ­தும் பேசும் அமைச்­சர்­களை வைத்­துச் சூழ்­நி­லை­யைச் சமா­ளிக்­கப் பார்த்­தார். ஆனால் அமைச்­சர்­க­ளின் திசை­தி­ருப்­பும் விதண்­டா­வா­தங்­க­ளுக்கு உத­ய­நிதி உட­னுக்­கு­டன் பதி­ல­ளித்­தார். அத்­தோடு அவர் தன் கேள்­வி­க­ளுக்கு 
முத­ல­மைச்­சர் வீட்­டிற்­குப் போய் நன்­றாக ‘பிரிப்­பேர்’ செய்து கொண்டு வந்து பதி­ல­ளிக்­கட்­டும் என்று கூறி­ய­போது, அந்த ‘பிரிப்­பேர்’ என்ற வார்த்தை சபா­நா­ய­க­ரைப் புண்­ப­டுத்­தி­விட்­டது போலும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஏனெ­னில் விஜய், ‘ஸ்க்ரிப்ட்’ இல்லாமல் எது­வும்பேச­மாட்­டார் என்­பது அனை­வ­ரும் அறிந்தரக­சி­யம். அது சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கேலிப்­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. அதைத்­தான் உத­ய­நிதி கிண்­ட­லா­கக் குறிப்­பி­டு­கி­றார் என நினைத்த சபா­நா­ய­கர், முத­ல­மைச்­ச­ருக்கு உத­வு­வ­தாக நினைத்து ‘same side goal’ ஒன்­றைப் போட்­டார். “அப்­ப­டி­யெல்­லாம் இல்லை, முத­ல­மைச்­சர் எப்­போது வேண்­டு­மா­னா­லும் பதி­ல­ளிக்­கத் தயா­ரா­கத்­தான் இருக்­கி­றார்” என்று சபா­நா­ய­கர் கூற, அதற்கு      உத­ய­நிதி, “அப்­ப­டி­யென்­றால் இப்­போதே பதி­ல­ளிக்­க­லாமே?” என்று கிடுக்­கிப்­பிடி போட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அது விஜய் அதன் அர­சி­யல் வாழ்­வில் சந்­தித்த மிகப்­பெ­ரிய நெருக்­க­டி­யாக மாறி­யது. உட­ன­டி­யாக பதி­ல­ளிக்க அவர் என்ன உத­ய­நி­தியா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எங்கே சபா­நா­ய­கர் “இப்­போது முத­ல­மைச்­சர் பதி­ல­ளிப்­பார்” என்று சொல்­லி­      வி­டு­வாரோ என அஞ்­சியோ என்­னவோ, “நான் திங்­கள்­கி­ழமை பதி­ல­ளிக்­கி­றேன், அப்­போது யாரும் ஓடி­டா­தீங்க” என்று சொல்­லி­விட்டு அவையை விட்டு வேக­மாக வெளி­யே­றி­னார் முத­ல­மைச்­சர். 
“மற்­ற­வர்­களை ஓடா­தீங்க என்றுசொல்­லி­விட்டு இப்­போது முத­ல­மைச்­சர் ஏன் ஓடு­கி­றார்?” என உத­ய­நிதி உடனே கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கரூ­ரில் தொடங்­கிய ஓட்­டம், டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளைக் கண்டு ஓட்­டம்எனத் தொடர்ந்து, இப்­போது சட்­டப்­பே­ரவைவரை வந்­து­விட்­டது. அவ­ரால் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள முடி­வ­தில்லை; எதற்­கும்        உட­ன­டி­யா­கச் செயல்­ப­டவோ  பதி­ல­ளிக்­கவோ முடி­வ­தில்லை. நேரடி வினாக்­கள் அவ­ரைப் பதற்­ற­ம­டை­யச் செய்­கின்­றன. அர­சி­யல்       என்­பது அவ­ருக்கு எப்­போ­தும் ஒரு  ‘safe and comfort zone’ னாக இருக்க வேண்­டும் என நினைக்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மானி­யக் கோரிக்­கை­க­ளில் கேட்­கப்­ப­டும்கேள்­வி­க­ளுக்­கான பதில்­கள் அதி­கா­ரி­     க­ளால்தயார் செய்­யப்­பட்டு, சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளி­டம் ஏற்­க­னவே முழு­மை­யா­கக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கும். கடந்த காலங்­க­ளில் முத­ல­மைச்­சர்­கள் தங்­கள் துறை சார்ந்த கேள்­வி­கள் எழுப்­பப்­ப­டும்­போது உட­னுக்­கு­டன் பதி­ல­ளித்த ஏரா­ள­மான சான்­று­கள் இருக்­கின்­றன. விரும்­பி­னால் ஒரு­வர் எப்­போது வேண்­டு­மா­னா­ லும் பதி­ல­ளிக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உத­ய­நிதி ‘இன்று போய் நாளை வா’ என ராமா­யண பாணி­யில் திங்­கள்­கி­ழ­மை ­தானே பதி­ல­ளிக்­கச் சொன்­னார்? தான் ‘கார்­னர்’ செய்­யப்­ப­டு­வ­தைத் தாங்க முடி­யா­மல் முத­ல­மைச்­சர் அவை­யை­விட்டே வெளி­யே­று­கி­றார். இது­வரை எந்த முத­ல­மைச்­ச­ரும் தன் துறை சார்ந்த மானி­யக் கோரிக்கை விவா­தம் நடை­பெ­றும்­போது அவையை அவ­ம­தித்து வெளி­யே­றி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">எடப்­படி பழ­னி­சாமி பேசு­கை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">ஏன் அமைதி?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பிற்­ப­க­லில் அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி காவல்­துறை மானி­யக்   கோரிக்­கை­யில்    போதைப்­பொ­ருள் விவ­கா­ரம், பாலி­யல் குற்­றங்­கள், அதி­க­ரித்து வரும் கொலை- கொள்ளை என அர­சைப் பற்றி ஒரு மணி நேரத்­திற்கு மேல் குற்­றஞ்­சாட்­டிப் பேசி­னார். த.வெ.க. அமைச்­சர்­கள் வகுப்­ப­றை­யில் மாண­வர்­க­ளைப் போல கைகட்டி வாய்­பொத்­திப் பாடம் கேட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உத­ய­நி­தி­யி­டம் மூச்­சுக்கு முன்­னூறு முறை குறுக்­கிட்டு, “உங்­கள் ஆட்­சி­யில் இப்­படி நடக்­க­வில்­லையா?” என்று கேட்­ட­வர்­கள், எடப்­பாடி பழ­னி­சாமி பேசும்­போது கோட­நாடு கொலை-­­–கொள்ளை, பொள்­ளாச்சி பாலி­யல் கொடு­மை­கள், தூத்­துக்­குடி துப்­பாக்­கிச்­சூடு, சாத்­தான்­கு­ளம் சம்­ப­வம் பற்­றி­யெல்­லாம் ஏன் குறுக்­கிட்டு எந்­தக் கேள்­வி­யும் எழுப்­ப­வில்லை? அவர் பேசி முடிக்­கும் வரை த.வெ.க. தரப்­பில் ஏன் இந்த மயான அமைதி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கார­ணம், த.வெ.க.விற்­குக் கூட்­ட­ணி ­யில் காங்­கி­ர­ஸோடு பிர­த­மர் வேட்­பா­ளர் விவ­கா­ரத்­தில் மோதல்­க­ளும், இடது சாரிக் கட்­சி­க­ளோடு இட­து­சாரி மாண­வர்­க­ளைக் கண்­கா­ணிப்­பது, கம்­யூ­னிஸ்­டு­க­ளைக் கணக்­கெ­டுப்­பது போன்ற விவ­கா­ரங்­க­ளில் உர­சல்­க­ளும் தொடங்­கி­விட்­டன. இந்­தக் கட்­சி­க­ளு­ட­னான கூட்­டணி முறிந்­து ­விட்­டால் அ.தி.மு.க.வின் ஆத­ரவை நாட­லாம் என்­ப­தற்­கா­கத்­தான் எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் இந்த நல்­லெண்ண அமை­தி­யைக் கடைப்­பி­டிக்­கி­றார்­கள். அ.தி.மு.க.வை உடைக்­கும் முயற்­சி­கள் தோல்­வி­ய­டைந்­த­தால், ‘ஒரி­ஜி­னல்’ அ.தி.மு.க.வி­டமே துண்டு போட்டு வைக்­க­லாம் என்­ப­து­தான் திட்­டம். பா.ம.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்சௌமியா அன்­பு­மணி அர­சின் மீது  குற்­றச்­சாட்­டு­களை வைக்­கும்­போது கூட அமைதி  காத்து  பவ்­ய­மாக  அமர்ந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘தி.மு.க. வெறுப்பு’ என்ற ஒரே கொள்கை, ஆட்­சி­யைக் காப்­பாற்ற யாரு­டன் வேண்­டு­மா­னா­லும் கூட்டு வைக்­க­லாம் என்ற பச்சை சந்­தர்ப்­ப­வா­தம் – இவை இரண்­டைத் தவிர த.வெ.க.விற்கு வேறு எந்­தக் கொள்­கை­யும் இல்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">திங்­கள்­கி­ழமை என்ன நடக்­கும்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புதி­தாக ஒன்­றும் நடக்­காது. எதிர்க்­கட்­சித்தலை­வர் எழுப்­பிய எந்­தக் கேள்­விக்­கும் பொறுப்­பான பதில் வராது. எதிா்த்­தாக்­கு­ தல்­கள், தனி­ந­பர் தாக்­கு­தல்­கள், பஞ்ச் 
டய­லாக்­கு­கள்,  அவ­தூ­று­கள்  நிரம்­பிய  ஒரு ‘solo performance’ மட்­டுமே நடக்­கும். எதிர்க்­கட்­சி­கள் குறுக்­கி­டச் சபா­நா­ய­கர் அனு­ம­திக்க மாட்­டார். ஒரு பதற்­ற­மான சூழலை உரு­வாக்கி, எதிர்க்­கட்­சி­கள்  வெளி­யேற வேண்­டிய அல்­லது வெளி­யேற்­றப்­பட வேண்­டிய சூழல்  உரு­வாக்­கப்­ப­ட­லாம். பிறகு ‘ரீல்’க்­கான solo performance தொட­ரும். இது­தான் மோடி­யின் பாணி. எதிர்க்­கட்­சி­கள் எந்­தக் கேள்­வி ­கேட்­டா­லும் ‘உங்­கள் ஆட்­சிக் காலத்­தில் அப்­படி நடக்­க­வில்­லையா? சீனா – பாகிஸ்­தான் போரில் என்ன நடந்­தது தெரி­யுமா?’’ என்று பா.ஜ.க. கேட்­ப­து­போ­லத்­தான் இவர்­கள் பதில்­கள் அனைத்­தும் கடந்த காலத்­தி­லேயே இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எத்­தனை முறை­தான் ஒரே நாட­கத்­தைப்பார்ப்­பது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஸ்கிரிப்ட்டை  மாத்­துங்க  சார்... 
போர­டிக்­குது!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>