<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 22:29:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260906T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06092026-TRY-07" position.sequence="07" ex-ref="06092026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">06.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட பல்வேறு திட்டங்களைத் தீட்டியது கழக அரசு!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="68">உளுந்தூர்பேட்டை – அதையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் ஜி.ஆர்.வசந்தவேலு பேச்சு! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame859661_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup838927_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup860395_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup838825_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="vasanthavelnew_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, செப்.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் உளுந்­தூர்­பேட்டை தொகுதி ஜி.ஆர்.வசந்­த­வேலு பேசு­கை­யில் விவசா­யி­ க­ளின் வாழ்க்கை மேம்­பட பல்­வேறு திட்­டங்­களை தீட்­டி­யது கழக அரசு என்­றும் உளுந்­தூர்­பேட்டை – அதை­யூர் அரசு மேல்­நி­லைப் பள்­ளிக்கு கூடு­தல் வகுப்­பறை கட்­ட­ப்பட வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­டப்­பே­ர­வை­யில் உளுத்­தூர்­பேட்டை கழக உறுப்­பி­னர் ஜி.ஆர்.வசந்­த­வேல் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­களை வணங்­கு­கின்­றேன். சாதா­ரண சாமா­னி­யத் தோற்­றத்­தோடு தம்­பி­மார்­களை ஒருங்­கி­ணைத்து அசா­தா­ர­ண­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய மகத்­தான தலை­வர், இந்த மாநி­லத்­திற்­குத் தமிழ்­நாடு என்று பெயர் சூட்­டிய பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளை­யும் வணங்­கு­கின்­றேன். அண்­ணா­வின் இத­யத்தை இர­வ­லா­கப் பெற்று கோடிக்­க­ணக்­கான தம்­பி­மார்­களை வழி­ந­டத்­திய நவீன தமி­ழ­கத்­தின் சிற்பி, இந்­திய ஒன்­றி­யத்­திற்கே வழி­காட்­டும் முன்­னோ­டித் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திய முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­களை வணங்­கு­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அனைத்து model–களுக்­கும் மூத்த model, முன்­மா­திரி model, திரா­விட மாடல்­தான் என மெய்ப்­பித்­துக்­காட்­டிய எங்­கள் கழ­கத்­தின் தாயு­மா­ன­வர். (மேசை­யைத் தட்­டும் ஒலி) மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், மக­ளிர், ஏழை­யெ­ளி­யோர் மாண­வர்­கள், அனை­வ­ரின் இத­யத்­தி­லும் சிம்­மா­ச­ன­மிட்டு அமர்ந்­தி­ருக்­கின்ற, விளிம்­பு­நிலை மக்­க­ளின் நம்­பிக்கை, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர், முன்­னாள் முத­ல­மைச்­சர் திரா­விட நாய­கர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்­கு­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) எங்­க­ளின் நம்­பிக்கை, இளை­யோர்­க­ளின் வழி­காட்டி, தமிழ்­நாட்­டின் உரி­மைப் போராட்­டத்­தின் ஈட்டி முனை, தமிழ்­நாடு புது­வாழ்வு பெற அநீ­திக்கு எதி­ரா­கப் போரா­டும் ஆற்­றல்­மிகு மற­வர், குர­லற்­ற­வர்­க­ளின் குர­லாய் ஒலிக்­கக்­கூ­டிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளை­யும் வணங்­கு­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் அன்­பிற்­கு­ரிய அண்­ணன் கே.என்.நேரு அவர்­க­ளை­யும் வணங்­கு­கின்­றேன். கடந்த ஆட்­சி­யில் பொறுப்பு அமைச்­ச­ராக இருந்து, உழைப்­ப­வரே உயர்ந்­த­வர் என்ற உய­ரிய வழி­யில் எங்­களை நடை­போட வைத்த எங்­கள் வழி­காட்­டி­யாய் இருந்து, எங்­கள் கழ­கத்­தின் கொறடா எ.வ. வேலு அவர்­க­ளை­யும் வணங்­கு­கின்­றேன். எனது வெற்­றிக்கு உழைத்த மாவட்­டச் செய­லா­ளர் பாச­மிகு சகோ­த­ரர் திரு. வசந்­தம் க. கார்த்­தி­கே­யன் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் உளுந்­தூர்­பேட்டை தொகு­தி­யில் போட்­டி­யிட்ட எனக்கு வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்த என் தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், உணர்­வோடு உழைத்த ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், கிளைக் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், booth agent உள்­ளிட்ட அனைத்து நிலை நிர்­வா­கி­க­ளுக்­கும், கழ­கத் தொண்­டர்­க­ளுக்­கும், கூட்­ட­ணிக் கட்­சித் தோழர்­க­ளுக்­கும், தோழமை அமைப்­பு­ க­ளுக்­கும் எனது வாழ்­நாள் நன்­றியை உரித்­தாக்­கிக்­கொள்­கி­றேன். எனது வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்து. எனது வாழ்­வின் துணை­யா­க­வும் இருக்­கின்ற எனது அருமை மனைவி திரு­மதி குண­சுந்­தரி அவர்­க­ளுக்­கும், எனது வெற்­றிக்கு உழைத்த எனது மகன்­கள் மருத்­து­வர் சந்­தி­ர­போஸ், பொறி­யா­ளர் திரு. ராஜ­சே­கர், எனது அன்பு மகள் மருத்­து­வர் திரு­மதி ஸ்ரீபாக்­கியா, எனது மரு­ம­கள் மருத்­து­வர் திரு­மதி சுவேதா, எனது பேரப்­பிள்ளை வேலினி உள்­ளிட்ட எனது குடும்­பத்­தா ர்­கள். உற­வி­னர்­கள், நண்­பர்­கள் அனை­வ­ருக்­கும் இந்த நேரத்­தில் எனது நன்­றி­யைக் கூற கட­மைப்­பட்­டுள்­ளேன். நடு­நி­லை­யு­ட­னும், மாண்­பு­ட­னும் இந்த அவையை வழி­ந­டத்­தும் மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வ­ரான உங்­க­ளுக்­கும் என் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உழு­துண்டு வாழ்­வாரே வாழ்­வர்­மற்று எல்­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொழு­து­உண்டு பின்­செல் பவர்.’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்­றார் வள்­ளு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘விவ­சா­யம்­தான் நாட்­டின் முது­கெ­லும்பு’ என்­றார் மகாத்மா காந்தி. ‘விவ­சாயி சேற்­றில் கால் வைத்­தால்­தான், நாம் சோற்­றில் கை வைக்க முடி­யும்’ என்­றார் பேர­றி­ஞர் அண்ணா. கட­னிலே பிறந்து, கட­னிலே சாகின்­ற­வர்­கள்­தான் விவ­சா­யி­கள்’ என்று கூறப்­ப­டு­வ­தும் உண்டு. ‘உழு­த­வன் கணக்­குப் பார்த்­தால் உழக்­குக்­கூட மிஞ்­சாது’ என்­பது முது­மொழி. எங்­கள் நடு­நாட்டு எழுத்­தா­ளர் கண்­மணி குண­சே­க­ரன் என்­ப­வர் விவ­சா­யி­க­ளைப் பற்றி எழு­திய வரி­க­ளில் ஒரு சில வரி­க­ளைச் சுருக்­க­மா­கச் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘மல்­லாட்­டை­யில நல்ல பயிற வித்­து­டு­வாரு நன்னி பயி­ரு­தான் காண­மா­டச் சொல்­லு­வாரு; கம்­புல நல்ல கம்ப வித்­து­டு­வாரு பொட்­டுக் கம்­பத்­தான் கூழாக்க வீட்­டுக்­குக் கொடுப்­பாரு; முந்­தி­ரிக் கொட்­டை­யில நல்ல கொட்­டைய வித்­து­டு­வாரு சவ­லக் கொட்­டை­யத்­தான் பாயா­சத்­துக்­குக் கொடுப்­பாரு; நெல்­லி­லும் துவ­ரை­யி­லுங்­கூட அப்­ப­டித்­தான்; ஆனா, ராத்­தி­ரி­யில, படுக்­க­றப்­பத்­தான் அப்பா சொல்­லு­வாரு; “என்ன வித்து என்ன பண்­றது; நானும் எப்­படி எப்­ப­டியோ குடும்­பம் நடத்­திப் பாக்­கி­றேன் கட­னும் அடை­யல; கவ­ல­யும் தீரல” என்று. இது­தான் விவ­சா­யி­க­ளின் நிலை என்­றார் எழுத்­தா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என­வே­தான், விவ­சா­யக் கடன்­களை அறவே தள்­ளு­படி செய்ய வேண்­டு­மென்று இந்த நேரத்­தில் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில், விவ­சா­யி­க­ளுக்­குச் செய்த நன்­மை­க­ளில் ஒரு சில­வற்றை காலத்­தின் அருமை கருதி சுருக்­க­மா­கச் சொல்ல விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விவ­சா­யி­கள் காப்­பாற்­றப்­ப­டு­கின்ற வகை­யில், 1970–ல் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்­தான் அரசு நில உச்­ச­வ­ரம்பை 30 ஏக்­க­ரி­லி­ருந்து 15 எக்­க­ரா­கக் குறைத்­தார். இதன் கார­ண­மாக, 1 இலட்­சத்து 78 ஆயி­ரத்து 880 ஏக்­கர் உபரி நிலம் கைப்­பற்­றப்­பட்டு, 1 இலட்­சத்து 37 ஆயி­ரத்து 236 நில­மற்ற ஏழை விவ­சா­யி­க­ளுக்கு அந்த நிலத்தை வழங்­கி­ய­வர்­தான் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞரை பாராட்­டிய மணலி கந்­த­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1971–ல் இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­த­லாக குடி­யி­ருப்பு அனு­ப­வ­தா­ரர்­கள் சட்­டம் கொண்டு வந்து, குடி­யி­ருக்­கும் மனை­களை அவர்­க­ளுக்கே சொந்­த­மாக்­கித் தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். இந்­தச் சட்­டம் குறித்து முது­பெ­ரும் கம்­யூ­னிஸ்டு கட்­சித் தலை­வர் மணலி திரு. கந்­த­சாமி அவர்­கள், பல ஆண்­டு­க­ளாக இரத்­தம் சிந்­தி­யும் நாங்­கள் சாதிக்க முடி­யாத ஒன்றை ஒரு துளி மையி­னால் சாதித்­துக் காட்­டி­ய­வர்­தான் கலை­ஞர் என பாராட்­டி­யது வர­லாறு (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விவ­சா­யி­க­ளுக்­கும் இல­வச மின்­சா­ரம் தந்­த­வர் கலை­ஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1974–ல் ஒன்­றிய அரசு நெல்­லுக்கு நிர்­ண­யிக்­கும் ஆதார விலை­யு­டன், கூடு­தல் ஊக்­கத் தொகை வழங்­கும் திட்­டத்தை இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யா­கக் கொண்டு வந்­த­வர் கலை­ஞர். 1990–ல் உலக வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் வழங்­கும் திட்­டத்­தி­னைக் கொண்டு வந்து, இலட்­சக்­க­ணக்­கான விவ­சா­யி­க­ளின் குடும்­பத்­தில் வெளிச்­சத்­தைத் தந்­த­வர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1997–ல் கோலப்­பன், ஐ.ஏ.எஸ்., அவர்­கள் வழங்­கிய பரிந்­து­ரை­யின்­படி தமிழ்­நாடு ந்து வைத்­த­வர்­தான் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். 2006–ல் 22 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 739 விவ­சா­யக் குடும்­பங்­க­ளின் 30 ஆண்­டுக் கடன் சுமையை 7,000 கோடி ரூபாய் கூட்­டு­ற­வுக் கடன்­கள் முழு­வ­தை­யும் தள்­ளு­படி செய்­த­வர் கலை­ஞர் என்­பதை இந்த நேரத்­தில் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விவ­சா­யத்­திற்கு தனி பட்­ஜெட்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1 இலட்­சத்து 78 ஆயி­ரத்து 462 நில­மற்ற ஏழை விவ­சா­யி­க­ளுக்கு தலா 2 ஏக்­கர் வீதம் நிலங்­களை வழங்­கி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். அதைத் தொடர்ந்து தமிழ்­நாட்­டில் முதன்­மு­றை­யாக விவ­சா­யத்­திற்­கென தனி நிதி­நிலை அறிக்­கையை வெளி­யிட்­ட­வர் எங்­க­ளது தலை­வர் திரா­விட மாடல் நாய­கர் என்­பதை பெரு­மை­யோடு தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த 2021–2022 திரா­விட மாடல் ஆட்­சி­யில் 1 இலட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின் இணைப்­பு­கள் வழங்­கும் திட்­டத்தை வெற்­றி­க­ர­மா­கச் செயல்­ப­டுத்­தி­னார். மேலும், அத­னைத் தொடர்ந்து, 2022–2024 வரை. கூடு­த­லாக 69,000–க்கும் அதி­க­மான விவ­சா­யி ­க­ளுக்கு மின் இணைப்­பு­கள் வழங்­கி­னார் என்­பதை பெரு­மை­யோடு இங்கே பதிவு செய்ய விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல, பட்­ட­தாரி இளை­ஞர்­களை வேளாண் தொழில்­மு­னை­வோ­ராக்­கிட, ஒரு­வ­ருக்கு 1 இலட்­சம் ரூபாய் மானி­யம் கொடுக்­கப்­பட்டு, வேளாண் பொருட்­கள் உற்­பத்­தி­யில் புதிய சகாப்­தம் படைத்த அரசு திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விவ­சா­யி­கள் பழைய மோட்­டாரை மாற்­றி­விட்டு, புதிய மோட்­டார் வாங்க பத்­தா­யி­ரம் ரூபாய் மானி­யம் வழங்­கி­ய­வர்­தான் திரா­விட மாடல் நாய­கர். அதே­போல, நான் முதல்­வன், புது­மைப் பெண், விடி­யல் பய­ணம் போன்ற பல திட்­டங்­க­ளைச் சொல்­லிக்­கொண்டே போக­லாம். காலத்­தின் அரு­மை­க­ருதி அடுத்து எனது தொகு­தி­யின் கோரிக்­கை­கள் சில­வற்றை மட்­டும் படிக்­கின்­றேன். மற்ற கோரிக்­கை­க­ளை­யும் படித்­த­தா­கக் கருதி பேரவை குறிப்­பேட்­டில் பதிவு செய்­து­கொள்­ளும்­படி பேர­வைத் தலை­வர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளது மாவட்­டம் கள்­ளக்­கு­றிச்சி. நெய்­வேலி அனல் மின் நிலை­யம், சுரங்­கம் இருக்­கின்ற பகு­திக்கு அரு­கா­மை­யில் உள்­ளது. அந்­தச் சுரங்­கத்­தின் கார­ண­மாக எங்­கள் மாவட்­டத்­தைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 20 கிரா­மங்­கள் நிலத்­த­டி­நீ­ரால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அந்­தச் சுரங்­கத்­தில் அதி­க­ளவு நீர் உறிஞ்­சப்­ப­டு­வ­தால், எங்­கள் பகு­தி­யில் இருக்­கும் நிலத்­தடி நீர் அங்கே சென்று விடு­வ­தால், இங்கே நிலத்­தடி நீர் மிக­வும் பாதிக்­கப்­பட்டு, குடி­தண்­ணீ­ரு க்­குக்­கூட மிகக் கஷ்­ட­மான ஒரு சூழ்­நி­லை ­யில் எங்­கள் மாவட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 20 கிரா­மங்­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட­லூர் மாவட்­டத்­தில் இருக்­கின்ற கிரா­மங்­க­ளும் இதே­போன்று பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், அங்கு என்ன செய்­கி­றார்­கள் என்­றால் CSR, DMF என்ற நிதி­யைப் பயன்­ப­டுத்தி அந்­தக் கிரா­மத்­திற்­கெல்­லாம் கட­லூர் மாவட்­டத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்கு மட்­டும் கொடுக்­கி­றார்­கள். ஆனால், இது­வ­ரைக்­கும் கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தில் இருக்­கின்ற இந்த 20 கிரா­மங்­க­ளுக்­கும் கொடுத்­ததே கிடை­யாது. எனவே அந்த நிதியை எங்­கள் மாவட்­டத்­தில் பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­க­ளுக்­கும் கொடுக்க வேண்­டு­மென்று நான் தங்­கள் வாயி­லா­கக் கேட்­டுக்­கொள்­கி­றேன். அதற்கு இந்த அரசு முயற்சி செய்ய வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முந்­திரி இறக்­கு­ம­தியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தடை செய்ய வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போன்று, எங்­க­ளு­டைய பகுதி முந்­திரி விவ­சா­யி­கள் நிறைந்த பகுதி. இந்த முந்­தி­ரி­கள் எல்­லாம் கடந்த தானே புயல் கார­ண­மாக மிகுந்த பாதிப்பு ஏற்­பட்­டது. அவற்­றை­யெல்­லாம் விவ­சா­யி­கள் இழந்து, மீண்­டும் அதி­லி­ருந்து மீண்டு புதி­தாக மரங்­களை வைத்து, விவ­சா­யம் செய்து வரு­கி­றார்­கள். அந்த விவ­சா­யத்­தி­லி­ருந்து கிடைக்­கின்ற முந்­தி­ரிக் கொட்­டை­களை விற்­ப­தற்கு கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள். கார­ணம் என்­ன­வென்­றால் முந்­தி­ரிக் கொட்­டை­களை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­கி­றார்­கள். அப்­ப­டிச் செய்­யும்­போது, இங்­கி­ருக்­கக்­கூ­டிய உள்­ளூர் முந்­தி­ரிக் கொட்­டை­களை வாங்­கு­வ­தற்கு, விலை­போ­வ­தற்கு இல்­லா­மல் இருக்­கி­றது. எனவே, அப்­படி வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதை இந்த அரசு தடை செய்ய வேண்­டு­மென்று இந்த நேரத்­தில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போன்று, எங்­கள் கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தில் இரண்டு போகம் (சம்பா போகம், குறுவை போகம்) நெல் விளை­கி­றது. ஆனால், சம்பா போகத்­தில் மட்­டும் நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளைத் திறக்­கி­றார்­கள். குறு­வைப் பரு­வத்­தி­லும் திறக்க வேண்­டு­மென்று இந்த நேரத்­திலே கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ராக­வன் வாய்க்­காலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தூர்­வாரி சீர­மைத்­தி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள் பகு­திக்கு பாசன வச­தி­யைத் தரக்­கூ­டிய ராக­வன் வாய்க்­கால் உளுந்­தூர்­பேட்டை தொகு­திக்­குட்­பட்ட விழுப்­பு­ரம் மாவட்­டத்­தி­லும், கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தி­லும் கிட்­டத்­தட்ட 58 ஏரி­களை நிரப்­பக்­கூ­டி­யது. இந்த ராக­வன் வாய்க்­காலை தூர்­வாரி சீர­மைத்­துக் கொடுக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­போன்று கிளை வாய்க்­கா­லான இருந்தை வாய்க்­கால்­க­ளை­யும், 8 கிலோ மீட்­டர் நீள­முள்ள அர­சூர் வாய்க்­கால்­க­ளை­யும் தூர்­வாரி சீர­மைத்­துத் தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தென்­பெண்­ணை­யாற்­றில் கூட்­டுக் குடி­நீர் திட்­டத்­திற்­காக சுந்­த­ரே­ச­பு­ரம் என்ற இடத்­தில் கிணறு அமைக்­கப்­பட்டு தண்­ணீர் எடுக்­கப்­பட்டு வரு­கி­றது. அந்­தத் தண்­ணீர் எங்­கள் உளுந்­தூர்­பேட்டை தொகு­தி­யின் வழி­யாக தியா­க­து­ரு­கம், கள்­ளக்­கு­றிச்சி, சின்­ன­சே­லம் போன்ற பகு­தி­க­ளுக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றது. இந்­தத் தண்­ணீர் பாதை­யில் ஜி.அரி­யூர் என்ற ஊரில் sump ஒன்று அமைக்­கப்­பட்டு, அதி­லி­ருந்து pipeline அமைத்து எங்­கள் உளுந்­தூர்­பேட்டை தொகு­திக்­குட்­பட்ட காட்­டு­எ­டை­யார் போன்ற பகு­திக்­குத் தண்­ணீர் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதையே மேலும், விரி­வாக்­கம் செய்து, தானம், மயி­லா­டும்­தாங்­கல், பல்­ல­வாடி, நரிப்­பா­ளை­யம், எறை­யூர், கொம்­ம­ச­முத்­தி­ரம், பிடா­கம் ஆகிய கிரா­மங்­க­ளுக்­குக் குடி­நீர் திட்­டத்­தின்­மூ­லம் குடி­தண்­ணீர் வழங்­கிட வேண்­டு­மென இந்த அர­சைக் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அரசு மக­ளிர் கல்­லூ­ரி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பொறி­யி­யல் கல்­லூ­ரி­யும் அமைத்­தி­டுக!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, இரண்டே இரண்டு கோரிக்கை. எங்­கள் பகு­திக்கு அரசு மக­ளிர் கல்­லூ­ரி­யும், ஒரு பொறி­யி­யல் கல்­லூ­ரி­யும் வழங்­கி­டு­மாறு கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கள­ம­ரு­தூர் அரசு மேல்­நி­லைப் பள்ளி, 1500 மாண­வர்­க­ளைக் கொண்­டது. அத­னைப் பிரித்து பெண்­கள் மேல்­நி­லைப் பள்ளி உரு­வாக்­கிட வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­ போன்று, திரு­நா­வ­லூர் பெரிய மேல்­நி­லைப் பள்ளி சுமார் 1,500 மாண­வர்­க­ளைக் கொண்­டது. அதை­யும் பிரித்து பெண்­கள் மேல்­நி­லைப் பள்ளி உரு­வாக்­கிட வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­போன்று உளுந்­தூர்­பேட்டை பகுதி, செவலை ஊராட்­சி­ யில் உள்ள உயர்­நி­லைப் பள்­ளியை மேல்­நி­லைப் பள்­ளி­யாக மாற்­றித் தர கேட்­டுக் கொள்­கி­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, எனக்கு வாய்ப்­ப­ளித்த எங்­கள் கழ­கத் தலை­வ­ருக்­கும், எங்­கள் அய்யா கொறடா அவர்­க­ளுக்­கும், மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும் நன்­றி­யைச் சொல்­லிக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொகு­திக் கோரிக்­கை­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, விழுப்­பு­ரம் மாவட்­டத்­திற்கு உட்­பட்ட கீரி­மேடு ஊராட்சி, மாரி­யம்­மன் கோயில் அரு­கில் உள்ள குடி­தண்­ணீர் குளத்­தினை தூர்­வாரி புன­ர­மைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை அரு­கில் தற்­பொ­ழுது கட்­டப்­பட்டு வரும் தோலில்லா காலணி தொழிற்­சா­லை­யில் உளுந்­தூர்­பேட்டை தொகு­தி­யைச் சார்ந்த படித்த இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பில் முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தில் மாதந்­தோ­றும் நடை­பெ­றும் விவ­சா­யி­கள் குறை­கேட்பு கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளும் விவ­சா­யி­கள் பயன்­ப­டுத்­தும் வகை­யில் கழி­வறை வசதி மற்­றும் குடி­நீர் வசதி ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், உளுந்­தூர்­பேட்டை மற்­றும் திரு­நா­வ­லூர் ஊராட்சி ஒன்­றி­யங்­க­ளைச் சார்ந்த கிராம ஊராட்­சி­க­ளில் MGNREGS 2025–2026 நிதி மற்­றும் DRDA மூலம் மாவட்ட ஆட்­சி­ய­ரால் நிர்­வாக அனு­மதி வழங்­கப்­பட்டு, நிலு­வை­யில் உள்ள பணி­க­ளை­யும், இன்­னும் துவங்­கப்­ப­டா ­மல் உள்ள பணி­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும். சட்­ட­மன்ற தேர்­த­லுக்கு பின்­பும் நடை­பெற்று முடிந்த வேலை­க­ளுக்கு பில் (M–Book அனைத்­தும் எழு­தா­ம­லும், NMR ஜென்­ரேட் பண்ண முடி­யா­ம­லும் உள்­ளது. அதற்­கு­ரிய இணை­ய­த­ள­மும் முடக்­கப்­பட்­டுள் ளது. எனவே நடந்து முடிந்த வேலை­க­ளுக்கு பில் கொடுக்­க­வும், பாதி முடிந்த வேலை­களை முடிக்­க­வும், அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­குப் பிறகு உள்­ளாட்­சி­யில் எந்த ஒப்­பந்­தப் பணி­களோ, வேலை­களோ நடக்­க­வில்லை. எனவே அரசு உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி திரு­நா­வ­லூர் ஊராட்சி ஒன்­றி­யம், சேந்­த­மங்­க­லம் ஊராட்­சி­யில் 8 MVA மின்­மாற்றி மற்­றும் A.குமா­ர­மங்­க­லம் ஊராட்­சி­யில் 10 MVA மின்­மாற்றி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">புதிய அரசு மக­ளிர் கலை –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அறி­வி­யல் கல்­லூரி அமைத்­தி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகு­தி­யில் புதி­தாக ஒரு அரசு மக­ளிர் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி அமைத்­துத் தர வேண்­டும். உளுந்­தூர்­பேட்டை தொகுதி, அங்­க­னூர் ஊராட்­சி­யில் உள்ள ஊராட்சி ஒன்­றிய நடு­நி­லைப்­பள்­ளியை அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யாக தரம் உயர்த்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கூவா­கம் கிரா­மத்­தில் உள்ள நடு­நி­லைப்­பள்­ளியை அரசு உயர்­நி­லைப் பள்­ளி­யாக தரம் உயர்த்­தித் தர வேண்­டும். விழுப்­பு­ரம் மாவட்­டத்­திற்கு உட்­பட்ட அர­சூர் அரசு மேல்­நி­லைப் பள்­ளிக்கு கூடு­தல் வகுப்­பறை கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, காட்டு எடை­யார் அரசு மேல்­நி­லைப்­பள்­ளிக்கு கூடு­தல் வகுப்­ப­றைக் கட்­டி­டம் கட்ட வேண்­டும். உளுந்­தூர்­பேட்டை நக­ராட்­சி­யில் இயங்­கி­வ­ரும் நூல­கத்­திற்கு விரி­வு­ப­டுத்­தப்­பட்ட புதிய நூலக கட்­ட­டம் அமைத்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, பொதுப் பணித் துறை­யின் நீர்­வ­ளப் பிரிவு துணைப் பொறி­யா­ளர் அலு­வ­ல­கத்­திற்கு புதிய கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும். உளுந்­தூர்­பேட்­டை­யில் உள்ள வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் மிக­வும் பழ­மை­யான கட்­ட­டத்­தில் இயங்கி வரு­கி­றது. புதிய வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கக் கட்­டி­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கள­ம­ரு­தூர் ஊராட்­சி­யில் தனி­யார் கட்­ட­டத்­தில் இயங்­கி­வ­ரும் காவல் நிலை­யத்­தி ற்கு புதிய காவல் நிலை­யக் கட்­ட­டம் மற்­றும் காவ­லர் குடி­யி­ருப்பு அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தைச் சார்ந்த பிடா­கம் ஊராட்­சியை பேரூ­ராட்­சி­யாக தரம் உயர்த்­திட வேண்­டும். உளுந்­தூர்­பேட்டை ஒன்­றி­யம், வீர­மங்­க­லம் to பின்­னல்­வாடி சாலையை தார்ச்­சா­லை­யாக அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, விழுப்­பு­ரம் மாவட்­டத்­திற்கு உட்­பட்ட தென்­மங்­க­லம் ஊராட்­சி­யைச் சேர்ந்த ஆதி­தி­ரா­விட மக்­கள் பயன்­பெ­றும் வகை­யில் அவர்­களை அரு­கில் உள்ள இரு­வேல்­பட்டு மேம்­ப­டுத்­தப்­பட்ட அரசு ஆரம்ப சுகா­தார நிலைய சேவை எல்­லை­யில் சேர்த்து சிகிச்சை பெற்­றுக்­கொள்ள வாய்ப்­ப­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை அரசு வட்­டார மருத்­து­வ­ம­னைக்கு தீவிர சிகிச்சை பிரி­வில் டயா­லி­சிஸ் செய்­யும் வசதி மற்­றும் MRI ஸ்கேன் எடுக்­கின்ற வசதி போன்­ற­வற்றை வழங்­கிட வேண்­டும். மேலும் இதற்­கு­ரிய மருத்­து­வர்­கள் மற்­றும் தொழில்­நுட்­பப் பணி­யா­ளர்­க­ளை­யும் வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">புற­நோ­யா­ளி­கள் பிரி­விற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தனி கட்­ட­டம் வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கூவா­கம் ஊராட்­சியை மைய­மாக வைத்­தும், நெய்­வனை ஊராட்­சியை மைய­மாக வைத்­தும் புதிய அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் அமைத்­துத் தர வேண்­டும். கள­ம­ரு­தூர் அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை மேம்­ப­டுத்­தப்­பட்ட ஆரம்ப சுகா­தார நிலை­ய­மாக தரம் உயர்த்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, திரு­நா­வ­லூர் மேம்­ப­டுத்­தப்­பட்ட அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்கு புற­நோ­யா­ளி­ கள் (O.P) பிரி­விற்கு தனி கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும். சேந்­த­மங்­க­லம், மார­னோடை, பரிக்­கல், கள­ம­ரு­தூர், நெமிலி, வேலூர், பாண்­டூர், பு.மாம்­பாக்­கம், மதி­ய­னூர், மட்­டிகை, ஈஸ்­வ­ர­கண்­ட­நல்­லூர், கள்­ளக்­கு­றிச்சி ஆகிய ஊராட்­சி­க­ளில் உள்ள கிராம துணை சுகா­தார நிலை­யத்­திற்கு புதிய கட்­ட­டம் கட்­டித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, விழுப்­பு­ரம் மாவட்­டம், திரு­வெண்­ணெய் நல்­லூர் ஊராட்சி ஒன்­றி­யம், அரும்­பட்டு கிரா­மத்­தில் கட்­டப்­பட்­டுள்ள சமத்­து­வ­பு­ரம் குடி­யி­ருப்­பில் குடி­யி­ருக்­கும் மக்­க­ளுக்கு வழங்­கிய 5 சென்ட் வீட்டு மனை பட்­டாவை கணக்­கில் ஏற்ற முடி­யாத நிலை உள்­ளது. எனவே, அரசு அதை வரு­வாய்க் கணக்­கில் பதி­வு­செய்து, பட்டா வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மேல்­நிலை நீர்த்­தேக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொட்­டி­கள் அமைத்­தி­டு­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, திரு­நா­வ­லூர் ஒன்­றி­யம், ஆத்­தூர் ஊராட்சி ஆதி­தி­ரா­வி­டர் பகு­தி­யில் குடி­நீர் பற்­றாக்­குறை உள்­ள­தால், புதி­ய­தாக ஒரு மோட்­டார் பம்ப் செட்­டு­டன் ஆழ்­துளை கிணறு மற்­றும் மேல்­நிலை நீர்த்­தேக்க தொட்டி அமைத்­துத்­தர வேண்­டும். வேலூர் ஊராட்­சி­யில், வேலூர் கிரா­மத்­திற்கு 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும். ஆத்­தூர் ஊராட்­சி­யில் பிள்­ளை­யார் 
குப்­பத்­தில் 1,00,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கள­ம­ரு­தூர் ஊராட்சி, கள­ம­ரு­தூர் இஸ்­லா­மி­யர் குடி­யி­ருப்பு பகு­தி­யில் 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும். கிள்­ள­னூர் கிரா­மத்­தில் 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, ஆத­னூர் ஊராட்சி, கிளப்­பா­ளை­யம் கிரா­மத்­தில் 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும். விழுப்­பு­ரம் மாவட்­டத்­திற்கு உட்­பட்ட T.குளத்­தூர் ஊராட்சி, பூசா­ரிப்­பா­ளை­யம் கிரா­மத்­தில் 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, ஆமூர் ஊராட்சி, துலங்­கம்­பட்டு கிரா­மத்­தில் 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மின் மோட்­டா­ரு­டன்­கூ­டிய ஆழ்­து­ளைக் கிணறு மற்­றும் மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும். ஆனத்­தூர் ஊராட்சி, தொட்­டு­மேடு கிரா­மத்­தில் 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மின் மோட்­டா­ரு­டன்­கூ­டிய ஆழ்­து­ளைக் கிணறு மற்­றும் மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, ஆனத்­தூர் ஊராட்சி, ஆட்­டுக்­கா­ரன் திட்டு பகு­தி­யில் 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி மற்­றும் ஆழ்­து­ளைக் கிணறு அமைத்­திட வேண்­டும். திரு­ வெண்­ணெய்­நல்­லூர் ஊராட்சி ஒன்­றி­யம், மேல் தனி­யா­ளம்­பட்டு ஆதி­தி­ரா­வி­டர் பகு­திக்­குச் செல்­லும் சாலையை தார்ச்­சா­லை­யாக அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கீரி­மேடு ஊராட்சி, மணல்­மே­டு–­­அ­ரும்­பட்டு சாலையை தார்ச்­சா­லை­யாக அமைத்­துத் தர வேண்­டும். நெடு­மா­னூர் ஊராட்சி, புத்­த­மங்­க­லம் முதல் நெடு­மா­னூர் வரை செல்­லும் ஊராட்சி ஒன்­றிய சாலையை தார்ச்­சா­லை­யாக அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, பு.மலை­ய­னூர் கிரா­மத்­திற்கு 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும். கர­டிப்­பாக்­கம் ஊராட்சி, கர­டிப்­பாக்­கம் ஆதி­தி­ரா­வி­டர் பகு­தி­யில் புதிய அங்­கன்­வாடி கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, சித்­தா­னங்­கூர் ஊராட்­சி­யில் பழை­ய­பட்­ட­ணம், மாமாந்­தூர் ஆகி­ய­வற்றை ஒரு ஊராட்­சி­யா­க­வும், சித்­தா­னங்­கூர். குயி­லா­பா­ளை­யம், சித்­தா­னங்­கூர் ஆதி­தி­ரா­வி­டர் பகுதி ஆகி­ய­வற்றை ஒரு ஊராட்­சி­யா­க­வும் பிரித்து, இரண்டு ஊராட்­சி ­க­ளாக அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>