<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,957,1212" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 03:34:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07092026-CBE-08" position.sequence="08" ex-ref="07092026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> கோவை </lang>
	<lang class="3" style="Headline3"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.09.2026</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">காவல் துறையின் வெற்றி எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதில் மட்டும் இல்லை;</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="37"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">எத்தனை குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்பதில்தான் அடங்கியிருக்கிறது! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேச்சு!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup862339_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="03072024CHN02_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="jawadullahbw_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்­டப் பேர­வை­யில் காவல்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் மனித நேய மக்­கள் கட்­சித் தலைவர் – முனை­வர் 
எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா பேசு­கை­யில், காவல் துறை­யின் வெற்றி எத்­தனை வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டன என்­ப­தில் மட்டும் இல்லை; எத்­தனை குற்­றங்­கள் தடுக்­கப்­பட்­டுள்­ளன என்­ப­தில்­தான் வெற்றி அடங்­கி­யி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டப் பேர­வை­யில் முனை­வர் 
எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா பேசி­ய­தா­வது:  
பேர­வைத் தலை­வர் அவர்­களே, காவல் மற்­றும் தீய­ணைப்பு துறை­க­ளி­னு­டைய மானி­யக் கோரிக்­கை­யில், மனித நேய மக்­கள் கட்­சி­யின் சார்­பாக பேசு­வ­தற்கு வாய்ப்­ப­ளித்­த­மைக்­காக முத­லில் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தக் காவல் துறை மானி­யக் கோரிக்­கைக்கு வரு­வ­தற்கு முன்பு, மாண்­பு­மிகு வரு­வாய்த் துறை அமைச்­ச­ரின் கவ­னத்­திற்கு, நான் ஏற்­கெ­னவே என்­னு­டைய நாகப்­பட்­டி­னம் தொகு­தி­யி­லுள்ள திரு­ ம­ரு­கல் ஒன்­றி­யத்­தில் 54 வரு­வாய் கிரா­மங்­கள், 39 ஊராட்­சி­கள், திட்­டச்­சேரி பேரூ­ராட்சி, 209 குக்­கி­ரா­மங்­கள் அமைந்­தி ­ருக்­கின்­றன. இந்த திரு­ம­ரு­கல் ஒன்­றி­யத்தை தனி வட்­ட­மாக அறி­விக்க வேண்­டு­மென்­கிற ஒரு கோரிக்­கையை வைத்­தி­ருக்­கி­றேன். இது­போன்ற பல கோரிக்­கை­ க­ளுக்கு இந்த அவை­யிலே பதி­ல­ளித்த நம்­மு­டைய மாண்­பு­மிகு வரு­வாய்த் துறை அமைச்­சர் அவர்­கள், மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பிற்கு பிறகு அது­கு­றித்து முடி­வெ­டுக்­கப்­ப­டும் என்று சொன்­னார்­கள். நான் சொன்­ன­தை­விட குறை­வான கிரா­மங்­கள் உள்ள பகு­தி­கள்­கூட இதே நாகப்­பட்­டி­னம் மாவட்­டத்­தில் தனி வட்­ட­மாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே, இதற்கு முன்­னு­ரிமை அளித்து, இந்த திரு­ம­ரு­கல் ஒன்­றி­யத்தை தனி வட்­ட­மாக, தாலு­கா­வாக அறி­விக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நீதி­ய­ர­சர் இரா­ஜேந்­திர சச்­சார்  அறிக்கை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2007 ஆம் ஆண்டு வெளி­யான நீதி­ய­ர­சர் இரா­ஜேந்­திர சச்­சார் அறிக்கை, காவல் துறை­யில் முஸ்­லிம்­க­ளின் எண்­ணிக்கை மிகக் குறை­வாக இருக்­கின்­றது என்று 20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சொன்­னது. இது இந்­தி­யா­வில் பல மாநி­லங்­க­ளில் உள்ள நிலை. தமிழ்­நாட்­டில் எங்­க­ளு­டைய கோரிக்­கையை ஏற்று, எங்­க­ளு­டைய கோரிக்கை என்று நான் அழுத்­தம் திருத்­த­மாக சொல்­கி­றேன். ஏனென்­றால், எங்­க­ளு­டைய கோரிக்­கையை ஏற்­று­தான் செப்­டம்­பர் மாதம், 2007-ல் முஸ்­லிம்­க­ளுக்கு கல்வி மற்­றும் வேலை­வாய்ப்­பில் அன்­றைய தமி­ழ­கத்­தி­னு­டைய முத­ல­மைச்­சர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தனி இட ஒதுக்­கீட்டை வழங்­கி­னார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதற்கு பிறகு காவல் துறை­யில் முஸ்­லிம் காவ­லர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. அதற்கு நான் நன்றி தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். அத­னால் தான் நாங்­கள் நடத்­திய, தமிழ்­நாடு முஸ்­லிம் முன்­னேற்­றக் கழ­கம் நடத்­திய நன்றி அறி­விப்பு மாநாட்­டில் பங்கு கொண்டு, தமிழ்­நாட்­டி­னு­டைய அன்­றைய முத­ல­மைச்­சர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள், அந்த நன்றி அறி­விப்பு மாநாட்­டில் பங்கு கொண்­டதே எங்­க­ளு­டைய கோரிக்­கையை ஏற்று அந்த 3.5 விழுக்­காடு இட ஒதுக்­கீடு அளிக்­கப்­பட்­டது என்­ப­தற்­கான அடை­யா­ள­மாக இருக்­கி­றது என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.	தமிழ்­நாட்­டின் காவல் துறை­யில் 2007 முதல் இது­வரை எத்­தனை முஸ்­லிம் காவல் ஆய்­வா­ளர்­கள் இருக்­கி­றார்­கள் என்­ப­தைப் பற்­றிய ஒரு வெள்ளை அறிக்­கையை இந்த அரசு தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு காலை­யில் உரை­யாற்­றிய நம்­மு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள், நீண்­ட­கால முஸ்­லிம் சிறை­வா­சி­கள் விடு­தலை குறித்து ஒரு கருத்­தைச் சொன்­னார்­கள். சென்ற திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில்­தான் நீண்­ட­கால சிறை­வா­சி­கள் 13 பேர் மட்­டு­மல்ல அதற்கு முன்­பா­கக் ஒரு 7 பேர் சேர்த்து 20 பேருக்கு மொத்­த­மாக ஒரு விடு­தலை கொடுத்த அரசு சென்ற திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே­போல furlough என்­கிற நீண்ட விடுப்பு, இது­வரை தமிழ்­நாட்­டில் எந்த அர­சுமே அமல்­ப­டுத்­த­வில்லை. முதன்­மு­த­லாக furlough என்­கிற முறை­யில் நீண்­ட­கால சிறை­ வா­சி­க­ளுக்கு நீண்ட விடுப்­பும் கொடுத்த அரசு திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) இன்­றைக்கு நம்­மு­டைய மாண்­பு­மிகு பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­கள் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் அப்­போது தாக்­கல் செய்­யப்­பட்ட ஒரு வழக்­கில் சொல்­லப்­பட்ட affidavit-ஐப் பற்றி குறிப்­பிட் ­டார்­கள். அந்த affidavit விலக்­கப்­பட்­ட­ தோடு மட்­டு­மல்­லா­மல், அர­சி­னு­டைய கவ­னத்­திற்கு கொண்டு செல்­லா­மல் அதை தாக்­கல் செய்­த­தற்­காக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள்­மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது என்­ப­தை­யும் நான் இந்த நேரத்­தில் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1829 ஆம் ஆண்டு லண்­டன் பெரு­ந­கர காவல் துறையை நிறு­விய Sir Robert Peel என்ன சொல்­கி­றார் என்­றால், “The police are the public and that the public are the police, the police being only members of the public who are paid to give full-time attention to duties which are incumbent on every citizen in the interests of community welfare and existence” என்று சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதா­வது, காவல் துறை­யி­னரே பொது மக்­கள். பொது மக்­களே காவல் துறை­யி­னர். பொது மக்­க­ளின் நல­னுக்­கா­க­வும், சமூ­கத்­தின் பாது­காப்­பிற்­கா­க­வும், ஒவ்­வொரு குடி­ம­க­னும் ஆற்ற வேண்­டிய கட­மை­களை முழு­நே­ர­ மா­கச் செய்­வ­தற்­காக, ஊதி­யம் பெறும் பொது மக்­க­ளின் ஒரு பிரி­வி­னரை காவல் துறை­யி­னர் என்று Sir Robert Peel குறிப்­பி­டு­கி­றார். இவர்­தான் நவீன காவல் துறை­யி­னு­டைய தந்தை என்று போற்­றப்­ப­டு­கி­றார். அவர் வகுத்த காவல் துறைக்­கான அடிப்­படை கொள்­கை­கள் சுமார் 200 ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கும் ஜன­நா­யக நாடு­க­ளுக்கு வழி­காட்­டி­யாக இருக்­கின்­றன. இந்த அடிப்­ப­டை­யில்­தான் இன்று தமிழ்­நாட்­டில் உள்ள ஒவ்­வொரு காவல் நிலை­யத்­திற்­கும் நீங்­கள் சென்­றா­லும், ஒரு வாச­கத்­தைப் பார்க்­க­லாம். பழக இனிமை, பணி­யில் நேர்மை, இதுவே நமக்­குப் பெருமை என்று குறிப்­பிட்­டுள்­ளது. எனவே, இந்த அடிப்­ப­டை­யில் காவல் துறை­யி­னு­டைய செயல்­பா­டு­கள் அமைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவல் துறை­யி­னு­டைய வெற்றி எத்­தனை வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டன என்­ப­தில் மட்­டும் இல்லை. எத்­தனை குற்­றங்­கள் தடுக்­கப்­பட்­டன. எவ்­வ­ளவு அமைதி நில­வு­கி­றது. காவல் துறை­யின்­மீது மக்­கள் எவ்­வ­ளவு நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­தில்­தான் அதன் உண்­மை­யான வெற்றி அடங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை இந்த நேரத்­தில் நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்­றேன். அதே­போல, காவல் நிலை­யம் என்­பது ஒரு சாதா­ரண அலு­வ­ல­கம் அல்ல. நீதி­யைத் தேடி வரும் ஒவ்­வொரு சாதா­ரண குடி­ம­க­னு­டைய முதல் கதவு. சட்­டம்-­­­­ஒ­ழுங்கு ஒரு சுடர் என்­றால், அதை அணை­யா­மல் காக்­கும் சிமில்­தான் காவல் துறை. காவல் துறை சட்­டம்-­­­­ஒ­ழுங்கு என்ற சுடரை மனி­த­நே­யக் கண்­ணா­டி­யிட்டு காக்க வேண்­டும். வேலியே பயிரை மேய்­வது போல, சிமிலே சுடரை அணை­ய­வி­டக் கூடாது. மனித உரி­மை­க­ளைக் காப்­ப­தில் காவல் துறை மிகப் பெரிய அள­வில் தன்­னு­டைய பங்­க­ளிப்பை அளிக்க வேண்­டு­மென்று இந்த நேரத்­தில் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவல் (உள்­துறை, மது­வி­லக்கு மற்­றும் ஆயத்­தீர்­வைத் துறை) மானி­யக் கோரிக்­கை­யி­னு­டைய கொள்கை விளக்­கக் குறிப்பை முழு­வ­து­ மா­கப் படித்­துப் பார்த்­தேன். அதில் ஒரு­சி­ல­வற்றை மட்­டும் இந்த அவை­யி­னு­டைய கவ­னத்­திற்­குக் கொண்டு வர விரும்­பு­ கின்­றேன். கொள்கை விளக்­கக் குறிப்­பில் குழந்­தை­கள் பாது­காப்பு குறித்து குறிப்­பி­ட ப்­பட்­டுள்­ளது. அதில், இந்த குழந்­தை­கள் பாது­காப்­புத் தொடர்­பாக இந்த அரசு ஒரு SOP-நிலை­யான செயல்­பாட்டு நடை­
மு­றை­கள் வகுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றது. இதற்கு ஓர் ஆலோ­ச­னை­யாக சில­வற்றை நான் இங்கே குறிப்­பிட விரும்­பு­கின்­றேன். ஏனென்­றால் நாளைய தலை­மு­றை­யி­ன­ரான குழந்­தை­க­ளு­டைய பாது­காப்பு நமது அனை­வ­ரி­னு­டைய கட­மை­யாக இருக்­கி­றது. தமிழ்­நாட்­டில் குழந்­தை ­க­ளின் பாது­காப்­பை­யும், அவர்­க­ளுக்­குச் சட்­டத்­தின்­கீழ் உரிய பாது­காப்பு மற்­றும் மறு­வாழ்­வை­யும் உறுதி செய்­வ­தில் குழந்தை நல காவல் அலு­வ­லர் அதா­வது, Child Welfare Police Officer மற்­றும் சிறப்பு இளஞ்­சி­றார் காவல் பிரிவு-Special Juvenile Police Unitஆகி­ய­வற்­றின் பங்கு மிக முக்­கி­ய­ மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குழந்­தை­யின் பரா­ம­ரிப்பு 
பாது­காப்­புச் சட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளஞ்­சி­றார் நீதி. குழந்­தை­க­ளின் பரா­ம­ரிப்பு மற்­றும் பாது­காப்­புச் சட்­டம் 2015 ஒவ்­வொரு காவல் நிலை­யத்­தி­லும் காவல் துணை ஆய்­வா­ளர் அள­வி­லான குழந்­தை­கள் நல காவல் அலு­வ­லரை நிய­மிக்­க­வும், ஒவ்­வொரு காவல் மாவட்­டத்­தி­லும் சிறப்பு இளஞ்­சி­றார் காவல் பிரிவை அமைக்­க­வும், தெளி­வான சட்ட அடிப்­ப­டை­களை வழங்­கு­கி­றது. இந்­தப் பிரிவு துணைக் காவல் கண்­கா­ணிப்­பா­ளர் பத­விக்கு குறை­யாத அலு­வ­ல­ரின் தலை­மை­யில் அந்த மாவட்­டத்­தின் குழந்­தை­கள் நல காவல் அலு­வ­லர்­க­ளை­யும், இரண்டு சமூ­கப் பணி­யா­ளர்­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்க வேண்­டும். இந்த அமைப்பு இளஞ்­சி­றார் நீதி சட்­டத்­திற்கு மட்­டு­மல்ல; POCSO சட்­டம், குழந்­தை­கள் திரு­ம­ணத் தடுப்­புச் சட்­டம், குழந்­தை­கள் மற்­றும் வள­ரி­ளம் பரு­வத் தொழி­லா­ளர்­கள் சட்­டம், மனித கடத்­தல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட பல்­வேறு சட்­டங்­க­ளின் அம­லாக்­கத்­தில் காவல் துறை­யி­னு­டைய பங்கு எப்­படி இருக்­கின்­றது என்­பதை வழி­வ­குக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது என்ன நிலை இருக்­கி­றது என்­றால், குழந்தை நலப் பணிக்கு ஒரு கூடு­தல் பொறுப்­பாக ஒரு துணை ஆய்­வா­ள­ருக்­குக் கொடுக்­கப்­ப­டு­கி­றது. அவர் நாள் முழு­வ­தும் காலை­யி­லி­ருந்து சட்­டம்-­­­­ஒ­ழுங்­குப் பிரச்­சி­னை­க­ளைப் பார்த்­து­விட்டு, மாலை­யில் இந்­தப் பணியை செய்­கி­றார். எனவே, என்­னு­டைய கோரிக்கை என்­ன­வென்­றால், குழந்தை நல காவல் அலு­வ­லர் என்­ப­தற்கு ஒரே­யொரு பணி அது குழந்­தை­க­ளு­டைய உரி­மை­களை காக்­கக்­கூ­டிய முழுப் பணி­யாக சட்­டப்­பூர்­வ­மாக அவ­ருக்கு அந்­தப் பொறுப்பை வழங்க வேண்­டும். CWPO மற்­றும் SJPU சிறப்பு சிறார் காவல் பிரிவு அலு­வ­லர்­க­ளுக்­குத் தொடர்ச்­சி­யான சிறப்­புப் பயிற்சி வழங்க வேண்­டும். அவர்­கள் ஒரு­வேளை இட­மாற்­றம் செய்­யப்­பட்­டால்­கூட, வேறு பணி­க­ளுக்கு மாற்­றப்­ப­டா­மல், இதே குழந்தை நலப் பணி­களை அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முழு­வ­தும் ஒருங்­கி­ணைந்த child friendly policing framework ஒன்று  உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்று இந்த நேரத்­தில் மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­க­ளின் வாயி­லாக இந்த அர­சைக் கேட்­டுக்­கொள்­கி­றேன். மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, இன்­னும் ஒரு முக்­கி­ய­மான செய்­தி­யை­யும் இந்த அர­சாங்­கத்­தின் கவ­னத்­திற்­குக் கொண்­டு­வர விரும்­பு­கி­றேன். History sheeters என்று சொல்­லப்­ப­டக்­கூ­டிய சரித்­திர குற்­றப் பதி­வா­ளர்­கள் குறித்த செய்தி. சென்னை உயர் நீதி­மன்­றம் இப்­போது அல்ல, பல ஆண்­டு­க­ளாக, பல வழக்­கு­க­ளில் history sheeters என்ற முறை அர­ச­மைப்­புச் சட்­டத்­தி­னு­டைய 19 (1) (iv) மற்­றும் அர­ச­மைப்­புச் சட்­டத்­தி­னு­டைய 21-வது பிரி­விற்கு எதி­ரா­னது என்று சொல்­லி­யி­ருக்­கி­றது. இரண்டு வழக்­கு­களை நான் மேற்­கோள் காட்ட வேண்­டு­மென்­றால், 2008-ல் S.Vani vs The Superintendent Of Police on 15 September, 2008 (S. Vani vs Sivganga Inspector) என்ற வழக்­கில் சரித்­திர பதி­வா­ளர்­க­ளுக்கு speaking orders இல்­லா­மல், non speaking order மூல­மாக இந்த குண்­டர் சட்­டத்தை, அதா­வது அவர்­கள்­மீது சரித்­தி­ரப் பதி­வா­ளர்­கள் ஏட்டை திறந்­த­தற்­காக அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே­போல, Sabari @ Sabarinathan @ Sabarivasan vs The Inspector Of Police on 9 January, 2019 (Sabari vs Inspector of Police, 2018)-ல் உள்ள வழக்­கில் சென்னை உயர் நீதி­மன்­றம் குற்­றப் பதி­வா­ளர் சரித்­தி­ரப் பதி­வா­ளர் ஏட்டை திறப்­ப­தற்கு அதை எப்­படி பரா­ம­ரிக்க வேண்­டும், அதை எப்­படி மூட வேண்­டும் என்­ப­தற்கு மிகத் தெளி­வான வழி­காட்­டு­ தல்­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. இந்த சரித்­தி­ரப் பதி­வா­ளர்­கள் என்­பது விடு­த­லைப் பெற்ற இந்­தி­யா­வில் உரு­வாக்­கப்­பட்ட நடை­முறை அல்ல. ஆங்­கி­லேய காலக்­கட்­டத்­தில் அவர்­க­ளுக்கு எதி­ரான சில சமூ­கங்­களை, குற்­றம் செய்­யக்­கூ­டிய சமூ­கம் என்று வர்­ணித்து அவர்­க­ளுக்கு எதி­ரா­கக் கொண்டு வரப்­பட்­ட­து­தான் சரித்­தி­ரப் பதி­வா­ளர் முறை. நம்­மு­டைய விடு­த­லைப் பெற்ற இந்­தி­யா­வி­னு­டைய அர­ச­மைப்­புச் சட்­டத்­திற்கு எதி­ராக இருக்­கக்­கூ­டிய history sheeters சரித்­திர பதி­வா­ளர்­க­ளுக்­கான அந்­தச் சட்­டம் நமது சட்­டப் புத்­த­கத்­தில் இருக்­கக் கூடாது, தமிழ்­நாட்­டில் இருக்­கக் கூடாது. அதை ஒழிப்­ப­தற்கு இந்த அரசு முன்­வர வேண்­டு­மென்று நான் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2011-ல் நான் இந்த அவை­யில் இரா­ம­நா­த­பு­ரம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது, காவல் மானி­யக் கோரிக்­கை­யிலே நான் பேசி­ய­போது, காவல் நிலை­யங்­க­ளில் CCTV camera-க்கள் பொருத்­தப்­பட வேண்­டு­மென்று ஒரு கோரிக்கை வைத்­தேன். அன்­றைய முத­ல­மைச்­சர் அம்­மை­யார் அவர்­கள் அதற்கு உத்­த­ர­விட்­டார்­கள். சென்ற திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்­சி­யில் அந்த CCTV camera-க்கள் மிகச் சிறப்­பான முறை­யில் இயங்­கக்­கூ­டி­ய­வ­கை­யில் அது மேலும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது, த.வெ.க. அர­சுக்கு நான் வைக்­கக்­கூ­டிய கோரிக்கை என்­ன­வென்­றால், காவல் நிலை­யங்­க­ளில் மட்­டு­மல்ல, சில வழக்­கு­க­ளில் குறிப்­பாக, பட்­டி­ய­லின மக்­கள், பட்­டி­ய­லின பழங்­கு­டி­யி­னர்­கள் தொடர்­பான வழக்­கு­க­ளி­லும், அதே­போன்று உயர் நீதி­மன்­றம் சில வழக்­கு­க­ளில் துணை காவல் கண்­கா­ணிப்­பா­ளர் அந்த வழக்கை விசா­ரிக்க வேண்­டும் என்று சொல்­லக்­கூ­டிய வழக்­கு­க­ளும், துணை காவல் கண்­கா­ணிப்­பா­ளர் அலு­வ­ல­கத்­தி­லும் நடை­பெ­று­கி­றது. எனவே, காவல் நிலை­யத்தை தாண்டி, DSP அலு­வ­ல­கங்­க­ளில் துணைக் கண்­கா­ணிப்­பா­ளர் அலு­வ­ல­கத்­தி­லும் இந்த CCTV camera அமைக்க இந்த அரசு ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, தமிழ்­நாட்­டில் இயங்­கக்­கூ­டிய CBI, NIA, Narcotics Control Bureau இந்த அலு­வ­ல­கங்­க­ளி­லும், அவர்­கள் என்ன செய்­கி­றார்­கள் என்­ப­தற்கு இந்த CCTV camera-க்களை பொருத்­து­வ­தற்கு இந்த அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று இந்த நேரத்­தில் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அருணா ஜெக­தீ­சன் ஆணை­யம் : விவா­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அவை­யிலே அருணா ஜெக­தீ­சன் ஆணை­யம் குறித்த விவா­தங்­கள் எல்­லாம் நடை­பெற்­றது.  2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, நாச­கர ஸ்டெர்­லைட் ஆலைக்குஎதி­ராக தூத்­துக்­கு­டி­யில் காவல் துறை நடத்­திய துப்­பாக்கி சூடு, தமிழ்­நாடு காவல் துறை வர­லாற்­றில் ஒரு கருப்பு நாள் என்று சொன்­னால் அது மிகை­யா­காது.  அதற்­கா­கத்­தான் சென்ற ஆட்­சி­யில் நீதி­ய­ர­சர் அருணா ஜெக­தீ­சன் அவர்­கள் தலை­மை­யி­லான விசா­ரணை ஆணை­யம் அமைக்­கப்­பட்­டது. அந்த விசா­ரணை ஆணை­யம் 21 காவல் அதி­கா­ரி­களை, நான் சொல்­வது சாதா­ரண Constable அல்­லது ஒரு SI அல்ல. உயர் நிலை­யில் இருக்­கக்­கூ­டிய 21 அதி­கா­ரி­களை பெயர் குறிப்­பிட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக கொலை வழக்கு உள்­ளிட்ட குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று சொன்­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிறகு உயர் நீதி­மன்­றத்­தில் CBI-க்கு அந்த வழக்கு மாற்­றப்­பட்­டது. CBI விசா­ர­ணை­யி­லும்­கூட எந்­த­வி­த­மான முன்­னெ­டுப்­பும் இல்லை. நான் இந்த அர­சைக் கேட்­டுக்­கொள்­வது என்­ன ­வென்­றால், நீதி­ய­ர­சர் அருணா ஜெக­தீ­சன் அளித்த அந்த அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் த.வெ.க. அரசு ஒரு Special Investigation Team (SIT) அமைத்து, (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) அந்த SIT அடிப்­ப­டை­யில் இதற்கு நீதி காண வேண்­டும். குற்­றம் செய்த ஒரு காவல் துறை அதி­கா­ரி­யும்­கூட சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து தப்­ப­வி­டக் கூடாது என்று இந்­த­நே­ரத்­தில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, 2011 முதல் 2014 வரை கூடங்­கு­ளம் அணு­மின் நிலை­யத்­திற்கு எதி­ராக மக்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­காக நடை­பெற்ற அந்­தப் போராட்­டம். அந்­தப் போராட்­டத்­தில் 249 வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டன. அதில் பல வழக்­கு­களை, majority of the. . . அதி­க­மான வழக்­கு­களை சென்ற ஆட்­சி­யில் அந்த வழக்­கு­கள் எல்­லாம், திரும்­பப்­பெ­றப்­பட்­டன. ஆனால், 53 வழக்­கு­கள் மட்­டும் 14 ஆண்­டு­க­ளாக இன்­னும் நிலு­வை­யி­லேயே இருக்­கின்­றது. இத­னால், கன்­னி­யா­கு­மரி உள்­ளிட்ட பகு­தி­க­ளில், அதா­வது, வெளி­நாடு செல்ல வேண்­டும் போன்ற விஷ­யங்­க­ளுக்­காக வேண்டி கட­வுச் சீட்டு பெற முடி­யாத ஒரு நிலை இருக்­கின்­றது. எனவே, இதை­யும் இந்த அரசு சரி­செய்ய வேண்­டு­மென்று இந்­த­நே­ரத்­தில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் சார்ந்­தி­ருக்­கிற நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், இன்­றைக்கு நீங்­கள் பார்த்­தீர்­க­ளென்­றால், ஒரு பக்­கம் வேளாங்­கண்­ணி­யில் புனித ஆரோக்­கிய மாதா ஆல­யம் இருக்­கின்­றது. நாகூ­ரில் தர்கா இருக்­கின்­றது. அதே­போல, சிக்­க­லில் சிங்­கா­ர­வே­லர் ஆல­யம் இருக்­கின்­றது. இங்கு நிறைய பக்­தர்­கள் பல்­வேறு மதங்­க­ளைச் சார்ந்­த­வர்­கள் வரு­கி­றார்­கள். இந்த ஆல­யங்­க­ளில் திரு­வி­ழாக்­கள் நடக்­கும்­போது தமிழ்­நாட்­டில் குறிப்­பாக, 10-க்கும் மேற்­பட்ட மாவட்­டங்­க­ளி­லி­ருந்து காவல் அதி­கா­ரி­கள், காவ­லர்­கள் பாது­காப்­புப் பணிக்­காக வரு­கி­றார்­கள். அவர்­களை தற்­கா­லிக இடங்­க­ளில்­தான் தங்க வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். அதே­மா­திரி, நாகப்­பட்­டி­னம் பேரி­டர்­க­ளுக்கு அதி­க­மாகஉள்­ளா­கக்­கூ­டிய ஒரு மாவட்­டம். எனவே, காவ­லர்­கள், தீய­ணைப்பு வீரர்­கள் இவர்­கள் தங்­கு­வ­தற்­காக தமி­ழக அர­சின் சார்­பாக நாகப்­பட்­டி­னத்­தில் அவர்­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­கள் இந்த அரசு ஏற்­பாடு செய்ய வேண்­டு­மென்று சொல்லி, என்­னு­டைய தொகு­திக் கோரிக்­கை­களை இந்த அவை­யில் பேசி­ய­தாக நீங்­கள் பதிவு செய்ய வேண்­டும். அதை எழுத்­துப்­பூர்­வ­மாக உங்­க­ளி­டம் தரு­கி­றேன் என்று சொல்லி, இந்த வாய்ப்­புத் தந்­த­மைக்­காக மீண்­டும் நன்றி தெரி­வித்து, விடை­பெ­று­கி­றேன். நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தொகு­திக் கோரிக்­கை­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் தொகுதி, திருக் ­கண்­ண ­பு­ரம் காவல் நிலை­யத்­திற்கு சொந்த கட்­ட­டம் மற்­றும் காவ­லர் குடி­யி­ருப்பு கட்­டித் தரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் தொகுதி, திட்­டச்­சேரி, நாகூர், வெளிப்­பா­ளை­யம் காவல் நிலை­யங்­க­ளுக்கு புதிய காவ­லர் குடி­யி­ருப்­புக் கட்­டித் தரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட காவ­லர்­க­ளுக்கு பய­ணப்­படி வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாக­னம் தரப்­ப­டாத ஆய்­வா­ளர் மற்­றும் உதவி ஆய்­வா­ளர் நிலை­யில் இருப்­போ­ருக்கு பெட்­ரோல் படி வழங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலிப் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், தீய­ணைப்­புத் துறை­யில் உள்ள காலிப் பணி­யி­டங்­களை நிரப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­ப­டும் வீரர்­கள்தங்­கு­வ­தற்கு தங்­கும் விடுதி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், தீய­ணைப்பு நிலை­யங்­க­ளுக்கு மரம் அறுக்­கும் இயந்­தி­ரங்­கள் அதிக அள­வில் வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், வெள்­ளம் சூழ்ந்த பகு­தி­க­ளி­லி­ருந்து மக்­களை மீட்க சிறிய அள­வி­லான ரப்­பர் பட­கு­கள் வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவல் துறை­யி­ன­ருக்கு நிக­ரான ஊதி­யம் தீய­ணைப்­புப் படை வீரர்­க­ளுக்­கும் வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம், தீய­ணைப்பு நிலை­யத்­தில் புதிய குடி­யி­ருப்பு கட்­டித் தரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாகப்­பட்­டி­னம் தொகுதி, திரு­ம­ரு­கல் தீய­ணைப்பு நிலை­யத்­திற்கு அனைத்து வச­தி­க­ளு­டன்­கூ­டிய புதிய சொந்­தக் கட்­ட­டம் கட்­டித் தரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பாம்­பு­கள் பிடிப்­ப­தற்­கான உப­க­ர­ணங்­கள் மற்­றும் பாது­காப்பு உப­க­ர­ணங்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா பேர­வை­யில் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>