<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1069,609,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 03:47:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07092026-MDU-09" position.sequence="09" ex-ref="07092026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">கடையநல்லூர் தொகுதி – மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளால்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு முன்வருமா?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">சட்டப்பேரவையில் தி.மு.இராசேந்திரன் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="T.mu.Rajendran_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">சென்னை, செப். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">கடை­ய­நல்­லூர் தொகு­தி­யில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகு­தி­யில் வன விலங்­கு­க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுக்க அரசு முன் வருமா? என சட்­டப் பேர­வை­யில் தி.மு.இரா­ஜேந்­தி­ரன் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இது குறித்து பேர­வை­யில் நடை­பெற்ற விவா­தம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">தி.மு.இரா­சேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">கடை­ய­நல்­லூர் தொகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகு­தி­க­ளில் வன­வி­லங்­கு க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்கஅரசு முன்­வ­ருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">ஆம் எனில், எப்­போது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">அமைச்­சர் ரா.வீ.இரஞ்­சித் குமார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">விவ­சாய நிலங்­க­ளைப் பாது­காக்க கடை­ய­நல்­லூர் சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடி­வா­ரப் பகு­தி­க­ளில் வன­வி­லங்­கு­கள் விவ­சாய நிலங்­க­ளுக்­குள் வரா­மல் தடுப்­ப­தற்கு ரூபாய் 1 கோடியே 50 இலட்­சம் செல­வில் வன எல்­லை­யோ­ரம் 20 கிலோ மீட்­டர் தூரத்­திற்கு சூரிய ஆற்­ற­லில் இயங்­கும் மின்­வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">மனி­தர்­க­ளுக்­கும் காட்­டுப் பன்­றி­க­ளுக்­கும் இடையே ஏற்­ப­டும் மோதல்­களை தடுக்க திறம்­பட கையா­ளும் வகை­யில் வனப் பகு­தி­களை சுற்­றி­ யுள்ள விவ­சா­யப் பயிர்­களை காட்­டுப் பன்­றி­கள் சேதப்­ப­டுத்­து­வ­தைத் தடுப்­ப­தற்­காக விரி­வான நிலை­யான செயல்­பாட்டு நடை­மு­றை­கள் வகுக்­கப்­பட்டு, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">தி.மு.இரா­சேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">உங்­களை இரண்­டாம் சபா­நா­ய­கர்  செல்­ல­பாண்­டி­ய­னாக பார்க்­கி­றேன். அப்­ப­டி­யென்­றால், முதல் சபா­நா­ய­கர்  செல்­ல­பாண்­டி­யன் உங்­க­ளுக்­குத் தெரி­யுமா என்று கேட்­டால், நான் பயின்ற மேல­நீ­லி­த­நல்­லூ­ரில் உள்ள பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்க தேவர் கல்­லூ­ரி­யோடு அவர் தொடர்­பு­கொண்­ட­வர். அடிக்­கடி அவ­ரைச் சந்­தித்து பேசு­கிற வாய்ப்பு எனக்கு கிடைத்­தது உண்டு. அது­கு­றித்து, உரி­ய­நே­ரத்­தில் எனது உரை அமை­கி­ற­போது பதி­வு­செய்­வேன் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">கடை­ய­நல்­லூர் தொகு­தி­யில் வன­வி­லங்­கு­க­ளின் நட­மாட்­டத்­தால் வேளாண்மை பாதிக்­கப்­ப­டு­வது குறித்த எனது கேள்­விக்கு தக்க விளக்­க­ம­ளித்த  வனத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். எனது கோரிக்­கை­யு­டன்­கூ­டிய வினா என்­ன­வென்­றால், கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு எல்­லோ­ரும் பார்த்­தி­ருப்­போம். கோவை -– -பாலக்­காடு இர­யில் வழித்­த­டத்­தில், இர­யில் மோதி பல யானை­கள் இறந்­து­கி­டந்­தன. அன்­றைய முத­ல­மைச்­சர் தலை­வர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள், விரைந்து நட­வ­டிக்கை மேற்­கொண்டு கோவை-–­பா­லக்­காடு வழித்­த­டத்­தில் மனி­த-­யானை மோதல் நிக­ழா­ம­லும், இர­யில்-­யானை மோதல் நிக­ழா­ம­லும் தடுப்­ப­தற்கு 13 கிலோ மீட்­டர் தூரம், இந்­திய வனத் துறைச் சரித்­தி­ரத்­தி­லேயே முதன் ­மு­றை­யாக முழு கோபு­ரங்­களை அமைத்து, 24 மணி­நேர கண்­கா­ணிப்­பில் இயங்­கக்­கூ­டிய அதற்கு ஒரு கட்­டுப்­பாட்டு அறை­யை­யும் அமைத்­தார்­கள். இந்த மூன்­றாண்டு காலங்­க­ளில் அங்கு யானை- மனித மோதல் நிக­ழ­வில்லை என்­றும், யானை-­இ­ர­யில் மோதல் நிக­ழ­வில்லை என்­றும் தக­வல்­கள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன. வனத் துறை அமைச்­சர் அவர்­கள் தமிழ்­நாடு அரசு, அந்­தத் திட்­டம் சிறப்­பாக இயங்­கு­கி­றதா என்­பதை ஆய்­வு­செய்து, இயங்­கு­கி­றது எனில் அதை முதற்­கட்­ட­மாக எங்­கள் கடை­ய­நல்­லூர் தொகு­தி­யி­லும், தென்­காசி மாவட்­டத்­தில் 80 கிலோ மீட்­டர் தூர­மி­ருக்­கின்ற மேற்கு தொடர்ச்சி மலை அடி­வா­ரப் பகு­தி­யி­லும் அமல்­ப­டுத்­து­வ­தற்கு தமிழ்­நாடு அரசு முன்­வ­ருமா என்­ப­தை­யும் கேட்­டுக்­கொள்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">காட்­டுப் பன்­றி­க­ளின் தொல்­லை­யால் விவ­சா­யம் சீர்­கு­லைந்­தி­ ருக்­கி­றது; இயற்கை இடர், விளைச்­சல் இன்மை, மழை­யின்மை, விலை­யின்மை ஆகிய நான்கு கார­ணி­கள்­தான் வேளாண்­மைக்கு இடை­யூ­றாக இருக்­கின்­றன என்று சொன்­னால், ஐந்­தா­வது கார­ணி­யாக சில ஆண்­டு­க­ளா­கக் காட்­டுப் பன்­றி­கள் வனப் பகு­தி­க­ளில் மட்­டு­மல்­லா­மல், சம­வெ­ளிப் பகு­தி­க­ளி­லும் வந்து வேளாண்­மை­யைச் சீர்­கு­லைக்­கும் அவ­லம் நேர்ந்­தி­ருக்­கி­றது. விவ­சா­யி­க­ளி­டம் கேட்­கும்­போது அவர்­கள் முன்­வைக்­கும் ஒரே கோரிக்கை, காட்­டுப் பன்­றி­களை வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்­றி­விட்­டால் அதை நாங்­களே அப்­பு­றப்­ப­டுத்­து­வோம் என்­ப­து­தான். ஆகவே, அரசு இந்த இரண்டு கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்ற, காட்­டுப் பன்­றி­களை வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு ஒன்­றிய அர­சிற்­குத் தேவை­யான அழுத்­தங்­க­ளைக் கொடுக்­குமா என்­பதை   அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">அமைச்­சர் ரா.வீ.இரஞ்­சித் குமார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் 23,188 சதுர கிலோ மீட்­டர் வனப் பகுதி உள்­ளது; சுமார் ஆயி­ரக்­க­ணக்­கான கிரா­மங்­க­ளில் வனத்­தை­யொட்­டிய விவ­சாய நிலங்­கள் உள்­ளன. இந்­தக் காட்­டுப்­பன்­றிப் பிரச்­சி­னை­யால் தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள விவ­சாய நிலங்­கள் அதி­க­மா­கப் பாதிக்­கப்­ப­டு­வது உண்­மை­தான்; அதற்கு விதி­கள் உள்­ளன. ஒரு கிலோ மீட்­டர், இரண்டு கிலோ மீட்­டர் வரை வெளியே வந்­தால் வன அலு­வ­லர்­க­ளி­டம் தெரி­வித்­தால், அவர்­கள் அதை காட்­டிற்­குள் விரட்டி அனுப்­பு­வார்­கள். மூன்று கிலோ மீட்­டர் தூரம் வெளியே வந்­தால் அதைச் சுடு­வ­தற்­கும் நம்­மு­டைய தமி­ழக அரசு வனத் துறைச் சட்­டத்­தில் இடம் இருக்­கி­றது என்­பதை இந்த அவை­யில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">தி.மு. இரா­சேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">வனத் துறை அமைச்­சர் அவர்­கள் கூறி­யது, கடந்த திரா­விட மாடல் அர­சில் தலை­வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்­கள் வழங்­கிய அந்த உத்­த­ர­வு­தான் தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கி­றது. நீங்­கள், காட்­டுப் பன்­றி­களை விலங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து-- கரடி, சிங்­கம், புலி இவை­யெல்­லாம் விலங்­கு­க­ளின் பட்­டி­ய­லில் உள்­ளன, அதை மனி­தர்­கள் அகற்ற முடி­யாது; அது­போ­லவே, வேளாண்­மையை அழிக்­கின்ற காட்­டுப் பன்­றி­க­ளும் அந்த வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லில் இருப்­ப­தால், அதை விவ­சா­யி­க­ளால் அப்­பு­றப்­ப­டுத்த முடி­யாத நெருக்­கடி உள்­ளது. ஆகவே, காட்­டுப் பன்­றி­களை வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்­றுங்­கள் என்­கிற அழுத்­தத்தை ஒன்­றிய அர­சிற்­குத் தமிழ்­நாடு அரசு கொடுத்து, அந்­தப் பட்­டி­ய­லி­லி­ருந்து எடுத்­து­விட்­டால், வேளாண்­மைக்கு இருக்­கின்ற பெரும் துயர் நீங்­கும் என்­ப­தைத் தெரி­வித்து, தமிழ்­நாடு அரசு அதற்கு ஆவன செய்­யுமா என்­ப­தைத் தங்­கள் மூல­மாக அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">அமைச்­சர் ரா.வீ.இரஞ்­சித் குமார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய தமி­ழக அரசு வனத் துறை உயர் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சித்து பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்­பதைஇந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு விவா­தம் நடை­பெற்­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>