<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 03:52:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07092026-TRY-06" position.sequence="06" ex-ref="07092026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கடந்த 5 ஆண்டு கழக ஆட்சியில் ரூ.12.16 லட்சம் கோடி முதலீடுகள் – 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">36 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி –   தொழில் துறையில் மகத்தான சாதனை புரிந்தவர் எங்கள் தலைவர்!   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் – கழக உறுப்பினர் வந்தவாசி எஸ்.அம்பேத்குமார்  பெருமிதம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="AmbethkumarMLA_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, செப்.7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“கடந்த 5 ஆண்டு கால கழக ஆட்­சி­யில் ரூ.12.16 லட்­சம் கோடி முத­லீ­டு­கள் –  1176 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள்  மூலம், 36 லட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­கள் வழங்கி –தொழில் துறை­யில் மகத்­தான சாதனை புரிந்­த­வர் எங்­கள் தலை­வர்  முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்  அவர்­கள்” என்று சட்­டப்­பே­ர­வை­யில் – தொழில்­துறை மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு பேசிய கழக உறுப்­பி­னர் வந்­த­வாசி எஸ். அம்­பேத்­கு­மார்  பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யில் எஸ்.அம்­பேத்­கு­மார் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பகுத்­த­றிவு பக­ல­வன் தந்தை பெரி­யார், புரட்­சி­யா­ளர் அண்­ணல் அம்­பேத்­கர், பேர­றி­ஞர் அண்ணா இவர்­களை வணங்கி என் உரை­யைத் துவங்­கு­கி­றேன். நவீன தமிழ்­நாட்­டின் சிற்பி, ஒட்­டு­மொத்த தமிழ்­மக்­க­ளின் தலை­வர், நின்ற அனைத்­துத் தேர்­க­ளி­லும் வென்ற ஒரே தலை­வர் எங்­கள் முத்­த­மி­ழ­றிஞ கலை­ஞர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2020–2021ஆம் ஆண்­டில் 07 என படு­பா­தா­ளத்­தில் கிடந்த பொரு­ளா­தா­ரத்­தைத் தட்டி எழுப்­பி­ய­வர், இரவு பகல் பாராது ஓய்­வுக்கு ஓய்வு தந்து உழைத்­த­வர், இந்­திய மாநி­லங்­கள் எது­வும் அடைய முடி­யாத அள­விற்கு 11.19 என்­னும் இரட்டை இலக்க பொரு­ளா­தார வளர்ச்­சியை அடைந்த ஒரே மாநி­லம் நம் தமிழ்­நாடு என்­னும் பெரு­மையை நமக்­குப் பெற்­றுத் தந்­த­வர், இதை ஒன்­றிய அர­சின் பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கையே பாராட்­டும்­வ­கை­யில் புதிய வர­லாற்றை உரு­வாக்­கி­ய­வர், எங்­கள் திரா­விட நாய­கர் தலை­வர் அவர்­களை போற்றி வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வேக­மும், நிதா­ன­மும், வீர­மும், விவே­க­மும் மிளிர ஐயா தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளும், திரா­விட நாய­க­ரும் தள­ப­தி­யாய் எங்­களை வழி­ந­டத்­தும் எங்­கள் இளந்­த­லை­வர் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) பாசத்­திற்­கு­ரிய சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் அண்­ணன் அவர்­க­ளுக்கு வணக்­கம். திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தின் அடை­யா­ள­மாக விளங்­கு­ப­வர், என்­னைப்­போன்ற கழக நிர்­வா­கி­களை உரு­வாக்கி வரு­ப­வர், உழைப்­பால் உயர்ந்­த­வர், உழைப்­ப­வரை உயர்த்­து­ப­வர், என் உயி­ரி­னும் மேலான எங்­கள் எதிர்க்­கட்சி  கொறடா ஐயா அவர்­களை வணங்­கு­கி­றேன். இந்­தப் பேர­வை­யின் துணைக் கொறடா அவர்­க­ளுக்­கும் என் வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தப் பேரவை மண்­ட­பத்­தில் எனக்­குத் தொடர்ந்து 2016, 2021, 2026 என மூன்­றா­வது முறை­யா­கப் பேசு­கின்ற வாய்ப்­பினை வழங்­கிய வந்­த­வாசி தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், என்­னு­டைய வெற்­றிக்­கா­கப் பாடு­பட்ட திரு­வண்­ணா­மலை வடக்கு மாவட்ட கழ­கச் செய­லா­ளர் அவர்­க­ளுக்­கும், ஆரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எங்­கள் அரு­மைக்­கு­ரிய எம்.எஸ். தர­ணி­வேந்­தன் அவர்­க­ளுக்­கும், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் என் அரு­மைக்­கு­ரிய ஐயா பெரி­ய­வர் அவர்­க­ளுக்­கும், ஒன்­றிய, நகர, பேரூர் கழக மற்­றும் கிளைக் கழக நிர்­வா­கி­கள், ஏனைய அணி அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் என் அன்­பார்ந்த வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொண்டு கூட்­ட­ணிக் கட்­சி­யின் தலை­வர்­கள், தோழர்­கள் அனை­வ­ருக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்­றி­யை­யும், வணக்­கத்­தை­யும் தெரி­வித்து என் உரையை துவங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று தொழில் துறை மானி­யக் கோரிக்­கை­யில் பேச வாய்ப்­ப­ளித்த பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும் மற்­றும் முத­ல­மைச்­சர் அவர்­கள், அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் என் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">41 சத­வி­கித பெண் தொழி­லா­ளர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு நிதி­நுட்­பக் கொள்கை 2021, தமிழ்­நாடு ஏற்­று­மதி மேம்­பாட்­டுக் கொள்கை 2021, தமிழ்­நாடு காலணி மற்­றும் தொல்­பொ­ருள் கொள்கை 2022, தமிழ்­நாடு நகர எரி­வாயு விநி­யோ­கக் கொள்கை 2023, தமிழ்­நாடு குறை­க­டத்தி மேம்­பாட்டு மின்­ன­ணு­வி­யல் கொள்கை 2024, தமிழ்­நாடு விண்­வெளி தொழில்­கொள்கை 2025 எனப் புதிய தொழில் கொள்­கை­களை உரு­வாக்கி, விரை­வான தொழில் வளர்ச்­சிக்கு வழி­வ­குத்­த­வர் எங்­கள் கழ­கத் தலை­வர், போற்­று­த­லுக்­கு­ரிய அண்­ணன் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வில் மிக அதி­க­மாக 40 ஆயி­ரம் தொழிற்­சா­லை­க­ளைக் கொண்­டது தமிழ்­நாடு. ஒட்­டு­மொத்த தொழி­லா­ளர்­க­ளின் பங்­க­ளிப்பு விகி­தம் அதி­க­முள்ள மாநி­லம் தமிழ்­நாடு. இந்­தியா முழு­வ­தி­லும் தொழிற்­சா­லை­க­ளில் பணி­பு­ரி­யும் மொத்த பெண்­க­ளில் 41 சத­வி­கித பெண் தொழி­லா­ளர்­க­ளைக் கொண்­டது தமிழ்­நாடு. மோட்­டார் வாக­னங்­கள், ஆடை­கள், தோல் மற்­றும் தோல் சார்ந்த பொருட்­க­ளின் உற்­பத்­தி­யில் முத­லி­டம் தமிழ்­நாடு. கணினி, ஒளிக்­க­ரு­வி­கள், இயந்­தி­ரங்­கள், போக்­கு­வ­ரத்து சாத­னங்­க­ளின் உற்­பத்­தி­யில் இரண்­டாம் இடம் தமிழ்­நாடு. மின்­ன­ணு­வி­யல் ஏற்­று­ம­தி­யில் 41.23 சத­வி­கித பங்­க­ளிப்­பு­டன் தமிழ்­நாடு முதன்மை மாநி­ல­மாக திகழ்­கி­றது. இந்­தப் பெரு­மை­க­ளை­யெல்­லாம் இந்த அர­சிற்­குப் பின்­பு­ல­மாக தந்­தது, எங்­க­ளு­டைய திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர், போற்­று­த­லுக்­கு­ரிய அண்­ணன் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இளை­ஞர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வேலை­வாய்ப்­பு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூடப்­பட்ட Ford நிறு­வ­னம், 3,250 கோடி முத­லீட்­டில் வாகன என்­ஜின் உற்­பத்தி அலகை, மறை­மலை நகர் தொழிற்­சா­லை­யில் மீண்­டும் அமைக்க செய்­த­வர் எங்­கள் கழ­கத் தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள். காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், ஒர­க­டம் சிப்­காட் தொழிற்­பூங்­கா­வில் 286 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மருத்­துவ சாத­னங்­கள் பூங்கா அமைத்­த­வர் எங்­கள் கழ­கத் தலை­வர் அவர்­கள். வல்­லம் வட­கா­லில் 18 ஆயி­ரம் பெண் தொழி­லா­ளர்­கள் பாது­காப்­பு­டன் தங்­கிட 705 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் குடி­யி­ருப்­பு­களை உரு­வாக்­கி­ய­வர் எங்­கள் கழ­கத் தலை­வர், போற்­று­த­லுக்­கு­ரிய அண்­ணன் தள­பதி அவர்­கள். 2,573 கோடி ரூபாய் முத­லீட்­டில் 39 ஆயி­ரத்து 500 இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கும் தைவான் நாட்டு கால­ணி­கள் உற்­பத்­தித் தொழிற்­சா­லைக்கு அடிக்­கல் நாட்டி, தொடங்கி வைத்­த­வர் கழ­கத் தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொழிற்­பூங்­கா­வில் 4,434 கோடி ரூபாய் முத­லீட்­டில், 3 ஆயி­ரம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கும் TATA Power Solar நிறு­வ­னத்­தின் சூரிய மின்­கல உற்­பத்­தித் தொழிற்­சா­லை­யைத் தொடங்கி வைத்­த­வர் எங்­கள் கழ­கத் தலை­வர், அண்­ணன் தள­பதி அவர்­கள். திரு­வண்­ணா­மலை, உத­க­மண்­ட­லம், காரைக்­குடி, இரா­சி­பு­ரம், கரூர், புதுக்­கோட்டை, விரு­து­ந­கர் முத­லிய 11 இடங்­க­ளில் Mini TIDEL park–கள் உரு­வாக்­கப்­பட வழி­வ­குத்­த­வர் கழ­கத் தலை­வர், போற்­று­த­லுக்­கு­ரிய அண்­ணன் தள­பதி அவர்­கள். பட்­டா­பி­ரா­மில் 21 தளங்­கள் கொண்ட மாபெ­ரும் TIDEL park–வினைத் திறந்து வைத்­த­வர் கழ­கத் தலை­வர், அண்­ணன் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பட்­டி­ய­லி­னத்­த­வர், பழங்­கு­டி­யி­னர் புதிய தொழில்­கள் நிறு­வு­வ­தற்­கும், நடத்­தி­வ­ரும் தொழில் நிறு­வ­னங்­களை வளர்ப்­ப­தற்­கும், தேவை­யான நிதி­யு­த­வி­களை வழங்­கிட Annal Ambedkar Business Champions Scheme மூலம் 14 பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யி­ன­ருக்கு 21.98 கோடி ரூபாய் கட­னு­தவி வழங்­கி­ய­வர் கழ­கத் தலை­வர், அண்­ணன் தள­பதி அவர்­கள். உப்­ப­ளத் தொழி­லா­ளர்­க­ளின் நல­னைக் கருத்­தில்­கொண்டு, மழைக்­கா­லத்­தில் ஒவ்­வொரு தொழி­லா­ளர்­க­ளின் குடும்­பத்­திற்­கும் ரூபாய் 5 ஆயி­ரம் வீதம் 24.86 கோடி நிதி வழங்கி, 49,721 குடும்­பங்­க­ளுக்­குத் துணை­பு­ரிந்­த­வர் எங்­கள் கழ­கத் தலை­வர், அண்­ணன் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சாதனை படைத்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எங்­கள் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘சென்­றி­டு­வீர் எட்­டுத்­திக்­கும், கலைச் செல்­வங்­கள் யாவும் கொணர்ந்­திங்கு சேர்ப்­பீர்’ என்று பார­தி­யார் பாடி­ய­து­போல, தமிழ்­நாட்­டின் தொழில் வளம் பெருக்­கிட எங்­கள் கழ­கத் தலை­வர் அவர்­கள் அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, பிரான்ஸ், ஜப்­பான், மலே­சியா, சிங்­கப்­பூர், அரபு நாடு­கள் ஆகிய வெளி­நா­டு­க­ளுக்கு அர­சு­மு­றைப் பய­ணங்­களை மேற்­கொண்டு, முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை நடத்தி, தமிழ்­நாட்­டி­லுள்ள தொழில் வாய்ப்­பு­க­ளை­யும், திரா­விட மாடல் அரசு வழங்­கும் சலு­கை­க­ளை­யும் எடுத்­துக்­கூறி, ‘தமிழ்­நாட்­டிற்கு வாருங்­கள், புதிய தொழில்­க­ளைத் தொடங்­குங்­கள்’ என்று வேண்­டு­கோள் விடுத்­தார்­கள். அதன்­வா­யி­லாக 5 ஆண்­டு­க­ளில் 12.16 இலட்­சம் கோடி முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்டு, ஏறத்­தாழ 36 இலட்­சம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள் வழங்­கும், 1,176 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆகவே, இத்­த­கைய சாத­னைப் படைத்த தலை­வர், எங்­கள் கழ­கத் தலை­வர், போற்­று­த­லுக்­கு­ரிய தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யில் 2024, ஜன­வரி மாதம் 7, 8 ஆகிய நாட்­க­ளில் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடை­பெற்­றது. அதில் மின் வாகன உற்­பத்­தி­யில் நீண்­ட­கால அனு­ப­வம் வாய்ந்த வியட்­நாம் நாட்­டின் VinFast நிறு­வ­னம் 16 ஆயி­ரம் கோடி முத­லீட்­டில் தூத்­துக்­கு­டி­யில் மின் வாகன தொழிற்­சாலை நிறு­விட ஒப்­பந்­தம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">22.–5.–2024 அன்று அடிக்­கல் நாட்டி துவங்கி வைத்­த­வர் எங்­கள் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள். தொழிற்­சா­லை­யின் கட்­டு­மா­னப் பணி­கள் 18 மாதங்­க­ளில் முடி­வ­டைந்த நிலை­யில் 4–.8.–2025 அன்று தூத்­துக்­கு­டிக்கு நேரில் சென்று தொழிற்­சா­லை­யைத் திறந்து வைத்­த­வர் எங்­கள் கழ­கத் தலை­வர், திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2008–ஆம் ஆண்­டில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் செய்­யாறு சிப்­காட் வளா­கத்­தில் முதல் அல­கும், 2015 ஆம் ஆண்டு முன்­னாள் முத­ல­மைச்­சர் அம்­மை­யார் அவர்­கள் காலத்­தில் இரண்­டாம் அல­கும், மொத்­தம் 2,936 ஏக்­கர் பரப்­பில் அமைக்­கப்­பட்­டன. இந்த இரண்டு அல­கு­க­ளி­லும் மொத்­தம் 74 தொழிற்­சா­லை­கள் அமைக்­கப்­பட்­டன. 50 ஆயி­ரம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள் வழங்­கப்­பட்டு, அவர்­கள் குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் வச­தி­யா­க­வும், வள­மா­க­வும் வாழ்­கின்­ற­னர். செய்­யாறு சிப்­காட் நிறு­வ­னத்­தின் மூன்­றா­வது அல­கினை உரு­வாக்­கிட தமிழ்­நாடு முன்­னாள் முத­ல­மைச்­சர் அண்­ணன் எடப்­பா­டி­யார் அவர்­கள் 2019–ஆம் ஆண்­டில் நில எடுப்­புத் தொடர்­பாக விளம்­ப­ரம் ஒன்றை வெளி­யிட்டு, நட­வ­டிக்கை மேற்­கொண்­டார். நில எடுப்­புப் பணி­களை மேற்­கொள்ள ஒரு மாவட்ட வரு­வாய் அலு­வ­லர், 8 சிறப்பு வட்­டாட்­சி­யர்­கள் பணி­யில் நிய­ம­னம் செய்­யப்­பட்டு, நில எடுப்­புப் பணி­கள் தொடங்­கின. இந்­நி­லை­யில் 2021 ஆம் ஆண்டு சட்­டப் பேர­வைத் தேர்­த­லுக்­குப்­பின் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­டது. அண்­ணன் எடப்­பா­டி­யார் அவர்­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து நில எடுப்­புப் பணி­கள் எங்­கள் ஆட்­சி­யி­லும் நடை­பெற்­றது. விரி­வாக்­கத்­திற்­குத் தேவைப்­பட்ட 3,174 ஏக்­கர் நிலம், அதில் அர­சுக்கு சொந்­த­மான நிலம் 375 ஏக்­கர், தரிசு நிலம் 1,200 ஏக்­கர், குவாரி நிலம் 240 ஏக்­கர், இந்த நிலங்­க­ளில் 1,836 பட்­டா­தா­ரர்­கள். இவர்­க­ளில் ஒப்­பு­தல் அளித்த 90 சத­வி­கி­தத்­திற்­கும் மேலா­ன­வர்­கள் உரிய நிவா­ரண தொகை­யைப் பெற்று வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எந்த வகை­யில் நியா­யம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நி­லை­யில் அர­சுக்கு எதி­ராக திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தைச் சேராத, கிருஷ்­ண­கிரி மாவட்­டம், ஓசூர் பகு­தி­யைச் சேர்ந்த அருள் ஆறு­மு­கம் என்­ப­வர் வியா­பார நோக்­கத்­தில் அப்­ப­குதி மக்­களை தூண்­டி­விட்டு போராட்­டத்­தில் ஈடு­பட செய்­தார். அதன் கார­ண­மாக அவர்­மீது அரசு சட்­டப்­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுத்­தது. ஆனால், எங்­கள் மாவட்­டத்­தின் படித்த இளை­ஞர்­கள், புதிய தொழிற்­சா­லை­கள் வர வேண்­டும், அப்­போ­து­தான் எங்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கும். நாங்­க­ளும் வாழ்க்­கை­யில் முன்­னேற வேண்­டு­மென்­றெல்­லாம் ஐந்­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் போராட்­டம் நடத்­தி­னார்­கள். இந்­நி­லை­யில் ஆட்சி மாற்­றத்­திற்­குப்­பின் எங்­கள் மாவட்­டத்­திற்கு தொழிற்­சா­லை­கள் வரக்­கூ­டாதா, செய்­யாறு சிப்­காட் தொழில் வளா­கத்­தில் மூன்­றாம் அலகு தேவை­யில்லை என போரா­டி­ய­வர்­க­ளு­டன் சேர்ந்து எங்­கள் மாவட்­டத்­தின் பொறுப்பு அமைச்­ச­ரான பொதுப் பணித்­துறை அமைச்­சர் அவர்­கள் பச்­சைத் துண்டு அணிந்­து­கொண்டு அவர்­க­ளு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்­வது இந்த ஆட்­சி­யில், எந்த வகை­யில் நியா­யம்? எங்­கள் மாவட்­டத்­திற்கு தொழிற்­சா­லை­கள் வரக்­கூ­டாதா, படித்த இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கக்­கூ­டாதா, எங்­கள் பகு­தி­யில் பொரு­ளா­தார முன்­னேற்­றம் ஏற்­ப­டக்­கூ­டாதா, இந்த அர­சின் கொள்­கை­தான் என்ன என்­பதை தெளி­வு­ப­டுத்த வேண்­டும் என இந்த அரசை கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பத்­தி­ரி­கை­யா­ளர்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அனு­ம­திக்­காத மாநாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழக வெற்­றிக் கழக அர­சின் 100 நாள் ஆட்சி சாத­னை­கள். 2026, மே 10 ஆம் தேதி முதல் 104 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்­ட­தா­க­வும், 1,02,514 கோடி முத­லீ­டு­கள் உறு­தி­மொ­ழி­க­ளைப் பெற்­றுள்­ள­தா­க­வும், 2026–2027 கொள்கை விளக்­கக் குறிப்பு பக்­கம் 33–ல் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­தப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள்­மூ­லம் எந்­தெந்த இடங்­க­ளில் எந்­தெந்த தொழிற்­சா­லை­கள் அமைக்­கப்­ப­டும், எந்­தெந்த தொழிற்­சா­லை­க­ளில் எவ்­வ­ளவு முத­லீடு செய்ய அரசு உறு­தி­ய­ளித்­துள்­ளது. 13–.8–.2026 அன்று தமிழ்­நாடு முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடை­பெற்­றது. அந்த மாநாட்­டில் தொலைக்­காட்சி நிரு­பர்­களோ, பத்­தி­ரி­கை­யா­ளர்­களோ அனு­ம­திக்­கப்­ப­டா­மல்  போல் நடை­பெற்­றி­ருக்­கி­றது. முத­லீட்­டா­ளர்­கள் யார், யார் என்­பதை பொது மக்­கள் அறி­யக்­கூ­டாதா,  என்ன என்று அறிய இந்த பொது மக்­கள். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த மேல்மா சிப்­காட் தொடர்­பாக போரா­டிய விவ­சா­யி­களை குண்­டர் சட்­டத்­தில் அடைத்­த­தாக சொன்­னார்­கள். அதில் உண்­மை­யி­லேயே பார்த்­தீர்­கள் என்­றால், 10 சென்ட் நிலம்­கூட இல்­லா­த­வர்­கள்­தான் ரோட்­டில் வந்து போரா­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விவ­சா­யி­கள் மீது அக்­கறை கொண்ட ஒரு அரசு எது என்­றால், அது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அரசு மட்­டும்­தான். விவ­சா­யி­க­ளுக்கு பொற்­கால ஆட்சி எது­வென்­றால் அது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­தான். 1989–ல், இல­வச மின்­சா­ரத் திட்­டம். விவ­சா­யி­க­ளுக்­கான மின்­சா­ரம் ஒரு பைசா குறைக்க வேண்­டு­மென்று போரா­டி­ய­போது, ஒட்­டன்­சத்­தி­ரத்­தில் நாரா­ய­ண­சாமி நாயுடு என்­ப­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். பிறகு 1989–ல் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் அவர்­கள் ஆட்­சிக்கு வந்­த­போ­து­தான். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்று மின்­சா­ரக் கட்­ட­ணத்­தில் ஒரு பைசா குறைக்க வேண்­டு­மென்று விவ­சா­யி­கள் போரா­டி­னார்­கள். ஆனால், 1989 ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சிக்கு வந்த பிற­கு­தான், இனி ஒரு பைசா கூட செலுத்­தத் தேவை­யில்லை என்­றார். அவ்­வாறு ஆணை பிறப்­பித்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன்­பி­றகு 2006–2011 அனைத்து விவ­சா­யி­க­ளுக்­கும், அது ஏழை விவ­சாயி, சிறு விவ­சாயி, குறு விவ­சாயி,  அ.தி.மு.க. விவ­சாயி, தி.மு.க. விவ­சாயி, பா.ம.க. விவ­சாயி, எந்த விவ­சாயி என்ற பார­பட்­சம் இல்­லா­மல் 7,000 கோடி ரூபாய் கடன் தள்­ளு­படி செய்த தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர்.  அது­மட்­டு­மல்ல, 2021–2025–ஆம் ஆண்­டில் எங்­கள் கழ­கத் தலை­வ­ரான அண்­ணன் தள­பதி அவர்­கள், போற்­று­த­லுக்­கு­ரிய அண்­ணன் திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் அவர்­கள், மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் 2,50,000 விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆந்­தி­ராவை நோக்கி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தொழிற்­சா­லை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, இந்­தி­யா­வி­லேயே, எந்த மாநி­லத்­தி­லும் இல்லை, முதன்­மு­த­லாக விவ­சா­யி­க­ளுக்கு வேளாண்மை பட்­ஜெட் போட்ட தலை­வர் கழ­கத் தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள்.  ஆகவே, விவ­சா­யி­க­ளைப் பற்றி, நிறைந்த அக்­க­றை­கொண்ட அரசு . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்­றைய தினம் நமது முத­ல­மைச்­சர் அவர்­கள், பரந்­தூர் விமான நிலை­யத்தை கைவி­டப்­போ­வ­தாக அறி­வித்­தார்.   அதில் உள்ளே போக விரும்­ப­வில்லை.  ஆனால், அரு­கி­லுள்ள ஆந்­திர மாநில முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆந்­தி­ரா­வில் உற்­பத்­தி­யா­கும் பொருட்­களை ஏற்­று­மதி செய்­திட வேண்­டு­மென்­ப­தற்­காக விமான நிலை­யங்­களை பிரம்­மாண்ட அள­வில் கட்­டி­யுள்­ளார்­கள்.  ஏற்­று­மதி பெருகி, பொரு­ளா­தார வளர்ச்­சி­யும் அங்கே நடை­பெ­று­கி­றது.  அத­னால் தமிழ்­நாட்­டி­லி­ருந்து பல தொழிற்­சா­லை­கள் ஏற்­கெ­னவே ஆந்­தி­ராவை நோக்கி சென்று கொண்­டி­ருக்­கின்­றன. மேலும், பல தொழிற்­சா­லை­களை தமிழ்­நாடு இழந்­து­வி­டா­மல் இருக்க, நீங்­கள் அறி­வித்­து­விட்­ட­தால் பிடி­வா­தம் காட்­டா­மல் பரந்­தூர் விமான நிலை­யத்தை கைவி­டும் திட்­டத்தை மீண்­டும் மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, தொழில் துறை­யைப் பொறுத்­த­மட்­டில், இன்­னும் இந்த அரசு செயல்­ப­டவே ஆரம்­பிக்­க­வில்லை என்றே தோன்­று­கி­றது. அத­னால், reel செயல்­பா­டு­க­ளில் மட்­டுமே நின்­று­வி­டா­மல், real செயல்­பா­டு­க­ளில் இந்த அரசு இறங்க வேண்­டு­மென்­ப­தைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­க­ளது மாவட்ட பொறுப்பு அமைச்­சர் இருக்­கி­றார்.  வந்­த­வாசி சட்­ட­மன்­றத் தொகுதி, ஒரு வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க சட்­ட­மன்­றத் தொகுதி, வந்­த­வாசி அரசு தாலுகா மருத்­து­வ­மனை, ஒருங்­கி­ணைந்த வட ஆற்­காடு மாவட்­ட­மாக இருக்­கும்­போது ஆரம்­பிக்­கப்­பட்ட ஒரு மருத்­து­வ­மனை.  வந்­த­வாசி தற்­போது விபத்து அதி­கம் நிக­ழக்­கூ­டிய ஒரு பகு­தி­யாக மாறிக்­கொண்­டி­ருக்­கி­றது.  ஆகவே, அந்த தாலுகா மருத்­து­வ­ம­னையை ஒரு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யாக தரம் உயர்த்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெர­ண­மல்­லூரை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புதிய வட்­ட­மாக்­குக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, வந்­த­வாசி சுற்று by–pass சாலை சேத்­துப்­பட்­டு–­திண்­டி­வ­னம் by–pass சாலை நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. சேத்­துப்­பட்­டு–­செய்­யாறு by–pass சாலை நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­போது மேல்­ம­ரு­வத்­தூர்–­காஞ்­சி­பு­ரம், காஞ்­சி­பு­ரம்–­செய்­யாறு புதிய புற­வ­ழிச்­சா­லையை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, பெர­ண­மல்­லூர் ஒன்­றி­யம், ஏந்­தல் கிரா­மத்­தில் 40 ஏக்­கர் பரப்­ப­ள­வில் கடந்த கால திரா­வி­ட­மா­டல் முத­ல­மைச்­சர்,போற்­று­த­லுக்­கு­ரிய அண்­ணன் தள­பதி ஒரு SIDCO தொழிற்­பேட்டை ஒன்றை ஆரம்­பிப்­­பதாக அர­சாணை வெளி­யிட்­டார்­கள். அதை­யும் தொடங்­கிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்­லா­மல், வர இருக்­கின்ற காலக்­கட்­டத்­தில் வந்­த­வா­சியை அடுத்த பெர­ண­மல்­லூ­ரில் ஒரு புதிய வட்­டம், 2006–2011 சட்­ட­மன்­றம் வரை அது பெர­ண­மல்­லூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யாக இயங்­கிக் கொண்­டி­ருந்­தது.  பிறகு தொகுதி மறு­சீ­ர­மைப்­பில் பெர­ண­மல்­லூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் 60 சத­வி­கி­தம் வந்­த­வாசி சட்­ட­மன்ற தொகு­தி­யி­லும், 40 சத­வி­கி­தம் போளூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லும் சேர்க்­கப்­பட்டு விட்­டது.  ஆகவே, பெர­ண­மல்­லூ­ரைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு, ஒரு புதிய வட்­டம், அந்த கோட்­ட­மா­க­வும் சேர்த்து நீங்­கள் அமைத்­துத் தர வேண்­டு­மென்று நமது வரு­வாய்த் துறை அமைச்­சர் அவர்­க­ளின் வாயி­லாக முத­ல­மைச்­ச­ரின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­கி­றேன்.  மீத­முள்ள எனது தொகு­திக் கோரிக்­கை­களை இந்த அவை­யில் படித்­த­தா­கக் கருதி, நீங்­கள் பதிவு செய்­து­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தொகுதி கோரிக்­கை­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகு­தி­யில், மருத்­து­வ­ம­னையை மாவட்ட மருத்­து­வ­ம­னை­யாக உயர்த்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, பெர­ண­மல்­லூர் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு வந்­த­வாசி, சேத்­துப்­பட்டு வட்­டத்­தைப் பிரித்து புதிய வட்­ட­மாக உரு­வாக்­கித் தர  வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகு­தி­யில், சுகந்தி ஆற்­றைத் தூர்­வாரி இரண்டு பக்­க­மும் Retaining Wall கட்டி, தேவை­யான இடங்­க­ளில்  Check Dam கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, தேசூர் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தைத் தாலுக்கா மருத்­து­வ­ம­னை­யாக உயர்த்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வண்­ணா­மலை மாவட்­டத்தை, இரண்­டா­கப் பிரிக்­கும் பட்­சத்­தில் வந்­த­வா­சி­யைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு புதிய மாவட்­ட­மாக உரு­வாக்­கித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, தேசூர் V.A.O அலு­வ­ல­கம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி கோட்­டை­யில், போர் நினை­வுச் சின்­னம் உரு­வாக்­கித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி நக­ரத்­தில், போக்­கு­வ­ரத்­திற்­கான புதிய போக்­கு­வ­ரத்­துக் காவல் நிலை­யம், புதிய உள் விளை­யாட்டு அரங்­கம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி ஒன்­றி­யம், மேல்­ம­ரு­வத்­தூர் சாலை­யில் (மரு­தாடு, கீழ்­கொ­டுங்­கா­லூர், கல்­லாங்­குத்து) 100 ஏக்­கர் பரப்­ப­ள­வில் சிப்­காட் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகு­தி­யில், கால்­நடை மருத்­து­வக் கல்­லூரி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, வெண்­குன்­றம் தவ­ள­கி­ரி­நா­தர் திருக்­கோ­யில் கிரி­வ­லப்­பாதை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, தேசூர் பேரூ­ராட்­சி­யில் ITI கல்­லூரி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வா­சி­யில், கோரைப்­பாய் நெச­வா­ளர் பூங்கா அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகு­தி­யில், வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் கட்­ட­டம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி,  பெர­ண­மல்­லூ­ரில் ஒழுங்­கு­முறை விற்­ப­னைக் கூடம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, பெர­ண­மல்­லூர், ஏந்­தல் கிரா­மத்­தில் சிட்கோ தொழிற்­பேட்டை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வா­சி­யில், மினி டைடல் பார்க் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, ஆரா­சூர் கிரா­மத்­தில் துரௌ­பதி அம்­மன் கோயில் கட்­டிக் குட­மு­ழுக்­கம் ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, பெர­ண­மல்­லூ­ரில் பேருந்து நிலை­யத்­திற்கு புதிய பணி­மனை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, தேசூர் பகு­தி­யில் பத்­தி­ரப்­ப­திவு அலு­வ­ல­கம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, தேசூர்–­கி­ளாம்­பாக்­கம் பேருந்து வழித்­த­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, நீதி­மன்ற வளா­கத்­திற்கு கூடு­தல் கட்­ட­டம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகு­தி­யில், சட்­டக் கல்­லூரி, தொழில்­நுட்­பக் கல்­லூரி கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, அர­சி­னர் கலைக்­கல்­லூ­ரி­யில் Ph.D. ஆராய்ச்சி நிலை­யம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வந்­த­வாசி தொகுதி, நல்­லூர் கிரா­மத்­தில் காவல் நிலையம்  கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு எஸ்.அம்­பேத்­கு­மார் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>