<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,68,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 03:54:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07092026-TRY-09" position.sequence="09" ex-ref="07092026-TRY-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அமைச்சரின் பொய்கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">ஐ.நா. சபை போற்றிய ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup861520_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup861471_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ந்திய பாராளுமன்றமும், மாநில சட்ட மன்றங்களும்இந்திய ஜனநாயகத்தின் தூண்கள். தமிழர்கள், இந்தியர்கள்,உலக மக்கள் நலன் பேசும் மாண்பும், சிறப்பும் மிக்க நமது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு பல வரலாற்று சிறப்புகள் உண்டு. இந்திய  விடுதலை போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக 1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகம் இங்கிலாந்து ஆட்சியாளர்களிடையே ஏற்படுத்திய மிகக் கடுமையான தாக்கத்தினால் ஆங்கில அரசு 1861 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்திய கவுன்சில் சட்டத்தின்படி (Indian Council Act) 165 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் முதன் முதலாக அன்றைய மெட்ராஸ் மாகாண ஆளுநராக இருந்து சர் வில்லியம் தாமஸ் டெனிசன் அவர்கள் தலைமையில் 18.02.1961 அன்று மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் (Madras Legislative Council) ஏற்படுத்தப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் சென்னைக்கு விரும்பி வந்து மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் மாடத்தில் அமர்ந்து சட்டமன்ற கவுன்சில் விவாத நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து பெருமையாக பாராட்டி சென்றார்கள். அந்த அளவு உலக அளவில் புகழ் பெற்றது நமது மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்தியாவில் 1919 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாண்டேகு சேம்ஸ் போர்டு சட்டம் எனப்படும் இரட்டை ஆட்சி சட்டத்தின் படி தேர்தல் மூலம்; தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்ட ஆட்சி மன்றமாக மாற்றப்பட்ட மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலிங் (மெட்ராஸ் சட்டப் பேரவை) பணிகளை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு தலைமையில் 12.01.1921 அன்று இங்கிலாந்து மன்னர் 5ம் ஜார்ஜ் – இங்கிலாந்து ராணி மேரி அவர்களின் அரசு குடும்ப பிரதிநிதியான வேல்ஸ் இளவரசர் (Duke of Connaught)  தொடங்கி வைத்தார். 1920 ஆம் ஆண்டு முதன் முதலில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அ.சுப்பராயலு ரெட்டியார் அவர்களை முதலமைச்சராக கொண்டு நீதிகட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1935 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சட்டத்தின்படி 15.07.1937 அன்று மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் அசெம்பளி  (Madras Legislative Assembly) புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முதல் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் மேல் சபையாகவும், மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் அசெம்பளி கீழ் சபையாகவும், இரண்டு சபைகளாக செயல்பட்டன. 1861 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் லெஜிஸ் லேட்டிவ் கவுன்சில் எனும் மேல்சபை 01.11.1986 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் கலைக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் அசெம்பளி தான் தமிழ்நாடு சட்டமன்றம் என்ற பெயரில்  இப்போதும் தொடர்ந்து இயங்கி வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜாகீர் உசேன், நீலம் சஞ்சீவரெட்டி, பிரனாப்முகர்ஜி,ராம்நாத் கோவிந்த் ஆகிய இந்திய குடியரசுத் தலைவர்களும,;பண்டிதர் ஜவஹர்லால் நேரு, திருமதி. இந்திராகாந்தி ஆகிய இந்திய பிரதமர்களும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை புரிந்து தமிழ்நாடு சட்டமன்ற மாடத்தின் மேல் இருக்கும் தலைவர்கள், திருவள்ளுவர் திருவுருவப் படங்களை திறந்து வைத்து பெருமை சேர்த்து உள்ளனர். இத்தனை மாண்புமிக்கது நமது தமிழ்நாடு சட்டமன்றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாடு சட்டமன்றம் பல சரித்திர புகழ்வாய்ந்த சட்டங்களை இயற்றி உள்ளது. திட்டங்களை தீட்டி உள்ளது. 1920 ஆம் ஆண்டு உலகில் முதன் முதலில்  மகளிருக்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கும் வகையில் பெண்களுக்கு வாக்குரிமை மற்றும் தேர்தல் உரிமையை வழங்கியதோடு உலகில் முதன் முதலில் பெண் ஒருவரை (டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி) சட்டமன்ற துணைசபாநயாகராக நியமித்து பெண்மைக்கு பெருமை சேர்த்தது சென்னை மாகாண சட்ட மன்றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும் பிராமணரல்லாதோர், பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சட்டம் (Communal G.O.), பஞ்சமர், பறையர் என்பதற்கு பதிலாக ஆதிதிராவிடர் என்றழைக்கும் சட்டம், இந்து சமய அறநிலையத்துறை சட்டம், தீண்டாமை ஒழிப்பு சட்டம், கோயில் நுழைவுச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்பு சட்டம், சுயமரியாதை திருமணம் செல்லும் சட்டம், தமிழ்நாடு பெயர்சூட்டும் சட்டம், தமிழ், ஆங்கிலம் இருமொழி சட்டம், BC, MBC, SC, ST. க்கு 69% இடஒதுக்கீடு சட்டம், குடும்ப சொத்தில் பெண்களுக்கு சமபங்கு சட்டம், அரசுபணி உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டம், விவசாயி களுக்கு இலவச மின்சாரம், பள்ளிகளில் காலை சிற்றுண்டி சட்டம் போன்ற ஏராளமான சமுதாய முன்னேற்ற சட்டங்களை  இயற்றியும், பல திட்டங்களை நிறைவேற்றியும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திய பெருமைமிக்கது நமது தமிழ்நாடு சட்டமன்றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாடு சட்டமன்றம்  இயற்றிய பல சட்டங்களை / திட்டங்களை இந்தியாவில் பல மாநில அரசுகளும் உலகில் கனடா நாடும் ஏற்று தங்கள் அரசுகள் மூலம்  நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தச் சபையால் ஏற்பட்ட சாதனைகளை உலகின் மிக உயர்ந்த ஐக்கிய நாடுகள் சபையே ஏற்று போற்றி விருது வழங்கி பாராட்டி உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமை யிலான திராவிட மாடல் அரசு ஆரம்பித்து செயல்படுத்திய காலை உணவு திட்டம், இந்தியாவில் தெலுங்கனா மாநிலத்திலும் உலகில் கனடா நாட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி திட்டம் ராஜஸ்தான் மாநிலத்திலும், மகளிர் விடியல் பயணம் திட்டம் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும், புதுமைப் பெண் திட்டம் பல மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நமது  தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றி செயல்படுத்திய பல திட்டங்கள் இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் உலக நாட்டிற்கும் வழிகாட்டியாக இருப்பது பெருமையானதாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்தனை தேசிய, உலகப் புகழ்மிக்க நமது தமிழ்நாடு சட்டமன்றம் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த சில தினங்களாக இது சட்டமன்றமா சண்டைமன்றமா என்றும், குழாய் அடி சண்டை நடக்கும் கூத்து மன்றமா என்றும் விமர்சிக்கப்படும் அளவிற்கு ஆளும் கட்சியை சேர்ந்த மாண்பில்லாத சில மந்திரிகளின் தவறான செயல்களாலும், திறமை குறைவான சில சட்டமன்ற உறுப்பினர்களாலும் தரம் தாழ்ந்து உள்ளது. இந்த  சட்டமன்றம் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி இருப்பது சட்டமன்ற மாண்புக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்ற உறுப்பினர்க ளுக்கான தகுதிகளையோ அமைச்சர்கள் சிலர் அமைச்சர் பதவிற்குரிய மாண்பையோ அறிந்து கொள்ளாமல் சபையில் வெற்றுக் கூச்சல் போட்டு தேவையின்றி வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க் கட்சியை வம்புக்கு இழுத்து வசை பாடுவது அரசியல் நாகரிக்கமற்ற தவறான செயலாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சி பகுதியில் இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள், ஒரு முன்னாள் துணை முதலமைச்சர் பல மூத்த அனுபவம் மிக்க முன்னாள் அமைச்சர்கள், நெடுங்கால சட்டமன்ற அனுபவமிக்க திறமையான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை மதித்து நடக்கவேண்டும். அவர்கள் மூலம்  நாம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் புதியவர்களுக்கு ஏற்படவேண்டும். அப்படி இல்லாமல் எதிர்க்கட்சி பகுதியில் உள்ள மாண்புமிக்கவர்களை நாவடக்கமில்லாமல் பேசும் ஆளுங்கட்சியினரால் சபையின் மாண்பு சரிகிறது தரம் குறைகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்படிப்பட்ட உலகமே போற்றிய சட்ட மன்றம் இது.எத்தனை பெரிய சான்றோர்கள் இருந்த சபை இது. இப்போதுஆளுங்கட்சியை சேர்ந்த சிலரின் தரமற்ற செயல்களால் சபை மாண்பிழந்து விமர்சினத்திற்கு ஆளாகி வருகிறது. எந்த துறை பற்றிய விவாதம் நடந்தாலும் தவறான கருத்துக்களை பேசும் 3, 4 அமைச்சர்கள் எதிர்க்கட்சி யினரை வம்புக்கிழுப்பது சரியானது அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சபையில் குழப்பம் விளைவித்தும் ஆதாரமில்லாமல் உண்மைக்கு புறம்பானவை மாறானவற்றை திட்டமிட்டுஉள்நோக்கத்துடன் பேசியும் அந்த 3 மந்திரிகள் சட்ட  மன்றத்தில்கூச்சல் குழப்பம் விளைவித்து சபையைசண்டை களமாக மாற்றுகிறார்கள். எதற்கெடுத்தாலும் சினிமாபாடல்கள் பாடி சபையை பாட்டுக் கச்சேரியாக்குவது சரியானதல்ல. பேசும் திறமையில்லாத இவர்களின் தயாரிப்பில் கருத்து செறிவு இல்லை. கையில் சரக்கு இல்லை என்பதால் தங்களது திறமையின்மையை மறைக்க இவர்கள் அதிக கூச்சல் இடுகின்றார்கள். இதனால் ஜனநாயக மரபும் சபை நாகரீகமும் காற்றில் பறக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்டசபையில் பக்குவமில்லாத முறையில் ஆதிக்க கூச்சல் போட்டு ஆனவத்துடன் செயல்படும் பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அமைச்சரின் தி.மு.க.விரோத பேச்சும், ஆத்திரம் மூட்டும் பக்குவமில்லாத பிதற்றல்களும், கத்தி கூச்சலிட்டு உண்மைக்கு மாறான பொய்களை பேசி சபையை போர்களமாக்குவதும் மிகப்பெரிய பாதிப்பானதாகும் மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் அரசு சட்ட  மன்றத்தில்அவரது தனி மனித விரோத பகைமைகளை வெளிப் 
படுத்துவது ஆளுங்கட்சிக்கு மதிப்பு குறைவையும், ஏற்படுத்து கிறது என்பதை முதலமைச்சரும், ஆளுங்கட்சி யினரும் உணர்ந்ததாக தெரியவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">27.08.2026 அன்று கோபத்தின் உச்சிக்கே சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் சட்ட மன்றத்தில் கடமை உணர்வே இல்லாமல் கூச்சலிட்டு எதிர்க்கட்சியினர் மீது குற்றம்   சுமத்தியது  தவறு அவரது ஒவ்வொரு உண்மை யற்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் ஒன்றிய அரசு ஆவணங்களின் அடிப்படையில் இங்கு பதில் தரப்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தேசிய அளவில் தலித்கள் மீதான குற்றங்கள் 
வடமாநிலங்களில் தான் அதிகம் நடந்தன. தமிழ்நாட்டில் இல்லை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்தியாவிலேயே தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில்  தி.மு.க ஆட்சி காலத்தில் மிக அதிகமாக நடந்தன என்று தி.மு.க. மீது பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் தவறான குற்றச் 
சாட்டுக்களை திட்டமிட்டு பதிவு செய்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த 2021 முதல் 2026 வரையிலான காலக் கட்டத்தில் இந்தியாவில் தலித்கள் மீதான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அதிகம் நடைபெறவில்லை. வட மாநிலங்களில் தான் அதிகம் நடந்துள்ளன என்பதை திராவிட முன்னேற்ற கழக கொறடா எ.வ.வேலு அவர்கள் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஆதாரங்களை காட்டி சட்டமன்றத்தில்  சரியாக பதிலடி கொடுத்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">Comptroller and Auditor General of India (CAG) ஆடிட் அறிக்கையில் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் பற்றி திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற  குழு துணைத் தலைவர் கே.என்.நேரு அவர்கள் தி.மு.க. அரசு சரியாகத்தான் செலவுகள் செய்துள்ளது என்று மிகச் சிறப்பான விளக்கங்களை சபையில் வழங்கினார். எங்களது கழக முன்னோடிகள் இருவரின் விளக்கங்கள் மூலம் உண்மை நிலை சபையில் உணர்த்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. நம் இயக்கசட்டமன்ற துணைத்தலைவர் சட்டமன்ற கொறடா அவர்களுக்கு நன்றி. எனினும் பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ஒன்றிய அரசு ஆவணங்களின் அடிப்படையில் இன்னும் கூடுதலான விளக்கங்களும், பதிலும் அளிப்பது நமது கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">National and Crime Records Bureau Reports 2025 – Statewise Statistics, Atrocities against Scheduled Cast Scheduled Tribes in India – 2025, Reports on Atrocities against SC and ST, Crime in India 2024. National Crime Records Bureau, Ministry of Home Affairs, Government of India போன்ற ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அதிகார பூர்வமான அறிக்கைகளில்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (SC)  எதிரான வன்கொடுமைகள் / குற்றங்கள் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உத்திரபிரதேச மாநிலத்திலும், பட்டியல் பழங்குடியின (ST) மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள்இந்தியாவிலேயே மிக அதிக அளவில் மத்திய பிரதேச மாநிலத்திலும் நடந்துள்ளன என மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தலித் மக்களுக்குஎதிரான குற்றங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் தமிழ்நாட்டில் நடந்துள்ளன என்று பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் கூறியது தவறானது என்று இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும்  ஒன்றிய அரசின் குற்றங்கள் பற்றிய அறிக்கையில் தாழ்த்தப்பட்ட  (SC) மக்களுக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் 14642 வன்கொடுமைகள், மத்திய பிரதேச மாநிலத்தில் 7765 குற்றங்கள், பீகார் மாநிலத்தில் 7549 குற்றங்கள், ராஜஸ்தான்  மாநிலத்தில் 7008 குற்றங்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் 3219 குற்றங்கள், ஒடிசா மாநிலத்தில் 2704 குற்றங்கள், தெலுங்கானா மாநிலத்தில் 2059 குற்றங்கள், கர்நாடகா மாநிலத்தில் 2016 குற்றங்கள், ஆந்திரபிரதேசத்தில் 1823 குற்றங்கள், தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக 1777 குற்றங்கள் நடந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (SC)எதிராக இந்தியாவில் வன்கொடுமைகள் / குற்றங்கள் அதிகம் நடந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 10வது இடத்தில் உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2024 ஆம் ஆண்டு பட்டியல் பழங்குடியின (ST) மக்கள் மீது இந்தியாவிலேயே மத்தியபிரதேச மாநிலத்தில் 3165 வன்கொடுமைகள் / குற்றங்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் 2282 குற்றங்கள், மஹாராஷ்டிரா மாநிலத்தில் 830 குற்றங்கள், தெலுங்கானா மாநிலத்தில் 658 குற்றங்கள், கர்நாடகா மாநிலத்தில் 393 குற்றங்கள், சத்திஸ்கர் மாநிலத்தில் 387 குற்றங்கள், ஆந்திர பிரதேசத்தில் 333 குற்றங்கள், குஜராத் மாநிலத்தில் 297 குற்றங்கள், மணிப்பூர் மாநிலத்தில் 289 குற்றங்கள், ஜார்கண்ட மாநிலத்தில் 260 குற்றங்கள், கேரள மாநிலத்தில் 145 வன்கொடுமைகள், பீகார் மாநிலத்தில் 113 வன்கொடுமைகள், மேற்கு வங்காள மாநிலத்தில் 87 குற்றங்கள், மற்றும் தமிழ்நாட்டில் வெறும் 55 குற்றங்கள் மட்டும் நடந்துள்ளன என ஒன்றிய அரசின் அறிக்கை கூறுகின்றது. ஒன்றிய அரசின் அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பட்டியல் பழங்குடி இன மக்களுக்கு எதிராக தேசிய அளவில் மிக அதிக வன்கொடுமைகள் / குற்றங்கள் நடந்த  மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 15 வது இடத்தில் உள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்த உண்மை தகவல்கள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரின் கருத்து உண்மைக்கு மாறானது என்றும் பொய்யானது என்றும் நிரூபிக்கப்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே போல் அகில  இந்திய அளவில் தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பீகார் ஆகிய மாநிலங்களில் தான் மிக அதிகம் நடைபெற்றுள்ளன என்று இந்திய அரசின் (2024) அறிக்கை கூடுகிறது. அந்த பட்டியலிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2023 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவிலேயே தலித்கள் மீது நடந்த வன்கொடுமைகள் தொடர்பாக உத்திரபிரதேசத்தில் 15130 வழக்குகள், ராஜஸ்தானில் 8449 வழக்குகள், மத்திய பிரதேசத்தில் 8232 வழக்குகள், பீகாரில் 7064 வழக்குகள், மகாராஷராவில்  3024 வழக்குகள், ஒடிசாவில் 2696 வழக்குகள், ஆந்திராவில் 2027 வழக்குகள், கர்நாடகத்தில் 1923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீது அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களின் தமிழ்நாடு பட்டியலில் முதலிடத்தில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கோத்ரா ரயில் தீ விபத்து – தி.மு.க. கண்டனம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">27.08.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசிய பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் கோத்ரா நிகழ்வின் போது தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தவறான குற்றச்சாட்டை கூறினார்.  அமைச்சரின் குற்றச்சாட்டு பொய்யானது. 27.02.2002 அன்று நடந்த கோத்ரா ரயில் தீ விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சட்டமன்றத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் பேசியது தவறு. கோத்ரா நிகழ்ச்சியில் இந்துக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். தமிழக அமைச்சரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி இரண்டு தினங்களுக்கு முன்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நரேந்திர மோடி அவர்கள்  குஜராத் மாநிலத்தில் முதமைச்சராக இருந்த போது 27.02.2002 அன்று காலை 8 மணியளில் குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தி லுள்ள கோத்ரா ரயில்  நிலையத்தில் சபர்மதி விரைவு ரயிலில் S–6 பெட்டி திடீரென தீ பிடித்து எரிந்தது. அதில் இருந்த 57 பயணிகள் தீயில் வெந்து உடல் கருகி உயிரிழந்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த கோத்ரா ரயில் தீ விபத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில்  பல பகுதிகளில் பெரும் கலவரம் நடந்தது. அந்த பெரிய கலவரத்தில் 790 முஸ்லீம்கள், 252 இந்துக்கள் மற்றும் பலர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 2548 பேர் தாக்கப்பட்டனர். 919 பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். 606 சிறு குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து அனாதைகள் ஆகின. இந்த அவல நிகழ்வுகள் இந்தியாவையே உலுக்கியது. கோத்ரா ரயில் தீ விபத்து நடந்த காலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல கட்சிகளுடன தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுகவும் சேர்ந்து மத்திய ஆட்சியிலும் பங்கேற்று இருந்தது.  எனினும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோத்ரா ரயில் தீ விபத்து ஏற்பட்ட மறுநாள் 28.02.2002 அன்று தி.மு.க தலைவர் கண்டன அறிக்கை வெளியிட்டார். அந்த கண்டன அறிக்கையில் ‘கரசேவைக்கு சென்று விட்டு திரும்பிய பயணிகள் ரயில் வண்டியில் வைத்து கொளுத்தப் பட்டு அவர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தது கண்டிக்கத் தக்கது. தகவல் கிடைத்தவுடன் காவல் துறை முன்னெச் 
சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த ஆபத்தை தடுத்திருக்கலாம். உயிரிழப்பிற்கும், கலவரத்திற்கும் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வகுப்பு வாத பூசலற்ற சமூக நல்லிணகத்தையும் மதபூசலுக்கு இடம் தராத மதநல்லிணகத்தையும்வலுப் படுத்த வேண்டும். இந்த பிரச்சனையில் சிறுபான்மையினமக்கள், பெரும்பான்மையின மக்கள் என்றெல்லாம் பகுத்து பார்ப்பதை விட எல்லோரம் இந்திய மக்கள் தான் என்ற அடிப்படையில் மதவெறியில்  வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும்  சமூக விரோதிகள் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதில் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விபத்தையும், கலவரத்தையும் தடுத்திருக்க வேண்டும். இப்போது துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் செய்திடவேண்டும். இந்த கோத்ரா கோர ரயில் தீ விபத்து போல் இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதவாறு ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்திய திருநாட்டின் நலன், பாதுகாப்பு, ஒருமைப்பாடு பெரியதென கருதி மக்கள் அரசுடன் ஒத்துழைக்க முன் வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தனது கண்டனத்தையும், மதங்களை தாண்டிய மனித நேயத்தையும், நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">24.03.2002 அன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில் குஜராத் கோத்ரா ரயில் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு கண்டிக்கதக்கது. இனி இது போல் நடக்காமல் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோத்ரா ரயில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி பேசி பாராளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையில் தி.மு.க கண்டனம் தெரிவித்தது. கோத்ரா ரயில் தீ விபத்து குறித்து தி.மு.க.தலைவர் கலைஞர் அவர்களும், தி.மு.க.வும் இவ்வளவு எதிர் வினைகள் ஆற்றி உள்ள தகவல்கள்  எதுவும் தெரியாமல் மாநில பொதுத் பணித்துறை அமைச்சர் சட்ட மன்றத்தில் தவறாக பேசியது கண்டத்துக்குரியது ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">27.08.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் முந்தைய 
தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளின் பெயர்களில் இருந்து காலனி என்ற சொல்லை நீக்கினார் அதனால் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கேட்டார் தலைவர்  முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலா திராவிட மாடல் அரசு 29.04.2025 அன்று காலனி என்ற சொல்லை அரசு ஏடுகளிலிருந்தும் பயன்பாட்டிலிருந்தும் நீக்கி அரசாணை வெளியிட்டது. காலனி எனும் சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசைச் சொல்லாகவும், பயன்படுத்துவதால் அரசு ஆவணங்களிலும் பொதுப் பயன்பாட்டிலும் காலனி எனும் சொல் நீக்கப்படுகிறது என முன்னாள் முதலமைச்சர் சார்பாக அரசு அறிவித்ததை தொடர்ந்து ஆதிதிராவிடர் காலனி, அரிஜன காலனி, பரையர் தெரு, சக்கிலியர் தெரு, போன்ற சாதி அடையாளம் மற்றும் சாதி ஆதிக்கத்தின் அடையாளமாக இருந்த பெயர்கள் மாற்றப்பட்டன. 2025 ல் மாநகராட்சிகள், நகராட்சிகளில் 1132 இடங்களில் காலனி மற்றும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் சமூக மேன்மை ஏற்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2023–2024 நிதி நில அறிக்கையில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்மூலம் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற பணிகள் நடைபெற்றன. 2023–2024ல் 1690 பணிகளுக்கு ரூ.200/– கோடி செலவிடப்பட்டது. 2024–25ல் ரூ.230/– கோடி செலவில் 1966 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2025–2026 ல் ரூ. 280/– கோடி ஒதுக்கப்பட்டது.  இதனால் அரசு துறைகள் மூலம் பல வளர்ச்சி பணிகள் நடைபெற்றன. காலனி எனும் பெயர் மாற்றம் அம் மக்களுக்கும் அப்பகுதிகளுக்கும் வளர்ச்சியும் ஏற்றமும் சேர்த்தது. இந்த பெயர் மாற்றத்தை அரசியல் கட்சித் தலைவர்ளும் சமூக ஆர்வலர்களும் பெரிதும் வரவேற்றன. இந்த நல்ல திட்டம் பல நன்மைகள் தந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்றிய அரசின் தணிக்கை (CAG)அறிக்கையின் முன்பகுதியில் தமிழ்நாடு அரசின் வரவு செலவு விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து தான் வரவு செலவை செய்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை பல திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்குத் தொகையினை மத்திய அரசு வழங்காததால் மாநில அரசின் வருமானம் குறைந்தது. நீதிமன்ற தடைகள் மற்றும் நிர்வாக தடைகள் காரணமாக சில திட்ட செயல்பாடுகளில்  ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்து தமிழ்நாடு அரசு தன் பங்களிப்பையும் கடமைகளையும் ஆற்றியது.  இந்த தகவல் அறிக்கையின் பிற்பகுதியிலும், பத்திரக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தணிக்கை அறிக்கை தமிழ்நாடு அரசின் மீது குற்றங்கள் கூறவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">27.08.2026 அன்று தமிழக சட்ட மன்றத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் திமுக ஆட்சி பற்றி கூறிய கருத்துகளில் உண்மை இல்லை என்றும் அவை பொய்யானவை என்றும் ஒன்றிய அரசின் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்படுகிறது. கற்பனை குற்றச்சாட்டுகளால் காலத்தின் கொடையான எங்கள் அன்புத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது பெயரையோ, புகழையோ இவரால் மட்டும் அல்ல எவராலும் குறைக்க முடியாது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="11">தலைவர் புகழ் வாழ்க!!
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>